எத்தனை சிரமங்கள் வந்தாலும்,யார் சொன்னால ும் சரி, உங்கள் தாலியை கோவில் உண்டியலில் போட ாதீர்கள்.


எத்தனை சிரமங்கள் வந்தாலும்,யார் சொன்னாலும் சரி, உங்கள் தாலியை கோவில் உண்டியலில் போடாதீர்கள். இதுபோல் செய்வதற்கு நமக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை. திரும்ப கஷ்டம் வந்தால், மறுமறுபடியும் போட்டுக்கொண்டே இருக்க முடியுமா. யோசனை செய்து பாருங்கள். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பதால்தான், இதுபோன்ற பரிகாரங்களை சொல்ல ஆரம்பித்தார்கள். இதற்க்கு எந்த ஆதாரங்களும் இல்லை. ஆகவே திருமணத்தின்போது, கட்டிய தாலியை, எந்த காரணத்தை முன்னிட்டும், கழற்றி உண்டியலில் போடக்கூடாது .

அதேபோல்தான் ,திருமணம் ஆகவில்லை என்றால், வாழைமரத்தை வெட்டுவது. இது அதைவிட மோசமான செயலாகும். திருமணம் என்பது, ஜாதகப்பிரகாரம் ,நடக்கவேண்டிய நாளில் நடந்துவிடும். இரு தார தோஷத்தை,நாம் மாற்ற முடியாது. இதற்கும் அதற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

யோசித்துபாருங்கள். அதே வாழை மரத்தை, நாம் சுப காரியங்களுக்கு தோரணமாக நட்டு பூஜை செய்து வணங்கிகின்றோம். அந்த மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் நமக்கு உணவாக பயன்படுகிறது. உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷத்துக்கும், இதற்கும், எந்தவித சிறு துளி சம்பந்தமும் கிடையாது. இதனால், உங்கள் வர்கங்கள் பாதிக்கப்படும் என்பதை மறவாதீர்கள்.@krishnamoorthi thigarajaசாஸ்திரிகள்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கெட்டிமேளம் எதற்காக?


கெட்டிமேளம் எதற்காக?

தாலிகட்டும்போது கெட்டிமேளம், கெட்டிமேளம் என்று சொல்லுவார்கள். மேளம் மிகவும் வேகமாகப் பெரிய சத்த்துடன் அடிக்கப்படும். தாலிகட்டும்போது யாரும் தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டாலோ, ஏதாவது சொல்லிவிட்டாலோ, அல்லது தும்மினாலோ அல்லது இருமினாலோ அபசகுனமாக ஆகிவிடலாம் என்பதால் அத்தகைய சத்தங்கள் கேட்காதவகையிலேயே மேளம் கெட்டிமேளமாக உரத்து அடிக்கப்படுகின்றது. கெட்டிமேளச் சத்தத்தில் கெட்டவார்த்தைகள் கேட்காமற்போய்விடும்.

மஞ்சள் நீராடல்

மணமக்கள் திருமணச்சடங்கிற்கு முன்னர் உடல்முழுவதும் எண்ணெய் தேய்த்து மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டப்படுகின்றார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்து திருமண நாள் நெருங்க நெருங்க மாப்பிள்ளையும் பெண்ணும் அவரவர் வீடுகளில் வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். இதனால் அவர்களது உடல் அதிகமாக வெப்பமடைந்திருக்க வாய்ப்புண்டு. அத்துடன் புதிய உறவை எண்ணியெண்ணி அவர்களது மனங்களில் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியினாலும் உடல் சூடாகியிருக்கும். இந்த நிலையில் உடல் வெப்பமாக இருக்கும்போது உடலுறவுகொள்வது கூடாது. கூடாது என்பதைவிட பூரண இன்பத்தை அவர்கள் இருவரும் அனுபவிக்க முடியாமல் போய்விடும். எவ்வளவோ மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் மணமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே, முதலிரவிலேயே ஏமாற்றமோ, திருப்தியின்மையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்களது உடற்சூட்டைத் தணிக்கும்பொருட்டு நீரில் மஞசள் கலந்து குளிப்பாட்டப்படுகிறார்கள்.

இவ்வாறு குளித்தல் மிகவும் முக்கியமானது என்பதனாலேயே அந்தக்குளியலை உறுதிப்படுத்துவதற்காகவோ என்னவோ மணமகனைக் குளிப்பாட்ட மணமகளின் சகோதரன் அல்லது அவ்வுறவுமுறையான ஒருவரும், மணமகளைக் குளிப்பாட்ட மணமகனின் சகோதரி அல்லது அவ்வுறவு முறையான ஒருத்தியை அவ்வந்த வீடுகளுக்கு அனுப்பிவைப்பார்கள். இலங்கையில் இப்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் மஞ்சள்கலப்பதன் கரணம்பற்றியெல்லாம்பற்றி அறியாமல், இப்போதெல்லாம் மணமக்கள் உடுத்திருக்கும் ஆடைகளில் மஞ்சள் நீரைத் தெளித்துவிட்டுப் பிறகு வேறு ஆடைமாற்றிக்கொண்டு மணமேடைக்கு வந்துவிடுகின்றார்கள். அறிவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்ட மஞ்சளில் குளித்தலில் இருந்த அறிவியல் மறைந்துவிட்டது. மஞ்சள் மட்டும் ஒரு சமயச் சடங்கு என்கின்ற வழக்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் பழத்தை வீசிவிட்டுத் தோலைச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டால் எப்படியோ, அப்படி ஆகிவிட்டது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

திருமணத்தின்போது கற்கண்டு கொடுக்கப்படு வது எதற்காக?


திருமணத்தின்போது கற்கண்டு கொடுக்கப்படுவது எதற்காக?

திருமணத்தில் தாலிகட்டியவுடன் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இப்போதெல்லாம் கற்கண்டுக்குப் பதிலாக லட்டு வழங்கப்படுவதும் வழக்கத்தில் வந்துவிட்டது. அதாவது ஏதோ ஒரு இனிப்பு வழங்கப்படுகிறது. இது எதற்காக என்பதைப்பற்றி எந்தவித சிந்தனையுமின்றி திருமணச் சடங்குகளில் அதுவும் ஓர் அங்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. உண்மையில் திருமணச் சடங்கிலே கற்கண்டு வழங்குதல் காரணம் நிறைந்த, கருத்துப்பொதிந்த ஒருவிடயந்தான். ஆனால் அது இப்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் முறையில்தான் காரணம் மறைந்துவிட்டது. காரியம் மட்டும் கண்மூடித்தனமாகத் தொடர்கிறது.

ஒரு திருமணத்திற்கு வித்தியாசமான மனநிலைகளுடன் எத்தனையோ விதமான மனிதர்கள் வருவார்கள். அண்மைக்காலம்வரை குடும்பப்பகையாக இருந்தவர்கள் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்காக வந்திருப்பார்கள். பகைமை இன்னும் மனதில் இருக்கும். ஆனால் உறவை நினைத்தோ, சமுதாய விமர்சனங்களைத் தவிர்ப்பமற்காகவோ வந்திருப்பார்கள். மணப்பெண்ணின் முன்னைய காதலனோ அல்லது மணமகனின் காதலியோ அல்லது இருவருமோ வந்திருக்கலாம். முன்னர் திருமணம் பேசப்பட்டு முறிந்துபோன உறவினர்கள் வந்திருக்கலாம். மணப்பெண்ணில் அல்லது மணமகனில் ஆசைவைத்திருந்தவர்கள் அல்லது தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே என்ற ஏமாற்றத்தி;ல் இருப்பவர்கள் அவர்களின் பெற்றோர்கள் வந்திருக்கலாம். மற்றும், திருமணமாகாத மணமக்களின் வயதொத்தவர்கள், அவர்களிலும் வயது கூடியவர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் இங்கே வந்திருக்கலாம். நல்ல காரியங்கள் நடப்பதே பிடிக்காத சில நயவஞ்சகப் பேர்வழிகள் வந்திருக்கலாம். இவ்வாறு இன்னோரன்ன விதமானவர்கள் அந்தத் திருமணத்திற்கு வந்திருக்கலாம். தாலி கட்டப்படும்போது இப்படிப்பட்டவர்கள் முகங்களைச் சுழித்துக்கொண்டோ, வாழ்த்துவதற்குப்பதிலாக ஏதாவது சொல்லிச் சபித்துக்கொண்டோ இருப்பதற்கு இடமுண்டு. எனவே தாலிகட்டும் சமயத்தில், தாலிகட்டாத திருமணங்களில் மாலைமாற்றும்போது அல்லது திருமணத்தின் முக்கியமான நிகழ்ச்சியின்போது எல்லோரும் முகம் மலர்ந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் அதற்காக தாலிகட்டுவதற்கு முன்னால் வந்திருக்கும் எல்லோருக்கும் கற்கண்டு வழங்கப்படுகின்றது. கையால் எடுத்ததும் வாயில் போடக்கூடியவாறு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட கற்கண்டு வழங்கப்படும் கற்கண்டை வாயில் போட்டதும் வாய் இனிக்கும், முகத்தில் ஒரு மலர்ச்சிஉண்டாகும்.. யாருமே கற்கண்டை வாயில் போட்டதும் விழுங்கிவிடுவதில்லை. கற்கண்டு உடனேயே கரைந்துவிடாது எனவே வாயில் இனிப்பு கொஞ்சநேரம் நீடிக்கும். அந்த மலர்ந்த முகத்துடன் எல்லோரும் இருக்கும் நேரம் அங்கே தாலிகட்டப்பட்டுவிடும். எல்லோரும் மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்ததுபோல அந்தச் சடங்கு நிறைவேறும். இதற்காகவே கற்கண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இது தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்கப்பட வேண்டும். அப்படித்தான் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. நான் நினைக்கிறேன், எங்கோ ஒரு திருமணத்தில் கற்கண்டு கொடுக்க மறந்திருப்பார்கள். பின்னர், தாலி கட்டியபிறகு ஞாபகம் வந்திருக்கும். சரிசரி இப்போதாவது கொடுப்போம் என்று கொடுத்திருப்பார்கள். அங்கு வந்திருந்த பலரில், அதுதான் வழக்கமென்று சிலர் நினைத்திருக்கலாம். தங்கள் வீட்டுத் திருமணங்களில் அப்படியே கடைப்பிடித்திருக்கலாம். இப்போது பல இடங்களில் அதுவே வழக்கமாகிவிட்டது. கற்கண்டுக்குப் பதிலாக லட்டுப்போன்ற இனிப்புக்களை வழங்குவதில் தவறில்லை. ஆனால் எல்லா இனிப்புக்களும் கற்கண்டுபோல வாயில் நீடித்திருந்து இனிப்பதில்லை. முகமலர்ச்சியைக் கொடுப்பதுமில்லை. சில இனிப்புப் பொருட்கள் வாயில் போட்டதும் விழுங்கிவிடக்கூடியவை. சில இனிப்புக்கள் திகட்டும். சிலவற்றை எல்லோரும் சாப்பிடமாட்டார்கள். குருதியில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் சாப்பிடமாட்டார்கள் என்பது மட்டுமல்ல சிலவேளை இனிப்பைக் கண்டதுமே ஏற்கனவே முகத்தில் இயல்பாகவே இருந்த கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியும் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சிலருக்கு மற்றவர்கள் சாப்பிடுவதைப்பார்த்து கோபமோ எரிச்சலோகூட ஏற்படலாம். இது இனிப்பு விநியோகிக்கும் நோக்கத்திற்கே எதிராகிவிடும். எனவே இனிப்பு வழங்குவதாயிருந்தால் கற்கண்டே பொருத்தமானது. அதுவும் தாலிகட்டுவதற்குச் சற்று முன்பாக வழங்குதலே சரியானது, பிரயோசனமானது. அதுவே ஆன்றோர் அறிமுகப்படுத்தியது.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இந்துமதத்தின் திருமணத்தில் பதினெட்டுவக ையான சடங்குகள் கைக்கொள்ளப்பட்டுவருகின்றன. அவையாவன:


இந்துமதத்தின் திருமணத்தில் பதினெட்டுவகையான சடங்குகள் கைக்கொள்ளப்பட்டுவருகின்றன. அவையாவன:

1. கணபதி பூசை
2. நாந்தி தேவதா பூசை
3. நவக்கிரக பூசை
4. ஸ்னாதகச் சடங்கு
5. காசியாத்திரை
6. நிச்சயதார்த்தம்
7. சங்கற்பம்
8. கன்யாதானம்
9. மணமகனின் உறுதிமொழி
10. கங்கணபந்தனம்
11. சப்தபதி
12. பிரதான ஆகுதி
13. லாஜஹோமம்
14. புகுந்தவீடு புறப்படல்
15. கிருகப்பிரவேசம்
16. மூன்றிரவு பிரமச்சரியம்
17. சேஷஹோமம்
18. சாந்திமுகூர்த்தம்

இவற்றில் சிலவற்றை நடாத்துகின்ற வழமை இப்போதெல்லாம் நின்றுவிட்டது அல்லது குறைந்துவிட்டது. ஆயினும் சில சடங்குகள் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றன.

L



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

INTRODUCTION PREMIUM 2ND SITTING SEATS IN DAY-TIME TRAINS


தூர பயணம் என்பது மிகவும் கொடிய அனுபவமாகின்றது. இதில் 2 நபர்கள் சௌகரியமாக பயணம் செய்யலாம். முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்காகவாவது இந்த இருக்கைகளுக்கு 2ம் வகுப்பு பிரிமியம் இருக்கை (SECOND SITTING-PREMIUM) என்று அழைத்து, 2 நபர்களுக்கு மட்டும் கொடுக்கலாமே. ரயில்வே நிர்வாகத்திற்கு இதனால் நஷ்டம் இல்லாமல் இருக்க பயணச்சீட்டின் விலையை 30% கூட்டிக்கொள்ளலாம். விருப்பமானவர்கள் இதில் சௌகரியமாக பயணம் செய்யலாம்.
இந்த நியாயமான கோரிக்கையை நீங்களும் ஆதரித்தால் நீங்கள் செய்ய வேண்டியது :-
1. நீங்கள் ட்விட்டரில் (TWEET) இருந்தால், கீழே உள்ள அஞ்சலை காப்பி செய்து ட்வீட் (TWEET) செய்யவும்.
2. கீழே உள்ள அஞ்சலை காப்பி செய்து ‘இ’ மெயில் செய்யவும்.
3. உங்களின் நண்பர்களுக்கு, மற்ற குரூப் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
ஆயிரக்கணக்கான ட்வீட்டர் செய்திகளை/’இ’ மெயில்களை அரசு அலட்சியப்படுத்தமுடியாது. நிச்சயம் செவிசாய்ப்பார்கள் என நம்பலாம்.
Tweet Message :-
Narendra Modi @narendramodi ,
Sadananda Gowda @DVSBJP
FOR YOUR PERSONAL CONSIDERATION AND URGENT ACTION PLEASE! Pl.click onhttp://speakoutindiagoodcause.blogspot.in/2014/08/introduction-second-class-sitting.html
‘E’MAIL MESSAGE :-
To :- cabinetsy; crb; secyrb
SUBJECT : INTRODUCTION PREMIUM 2ND SITTING SEATS IN DAY-TIME TRAINS
Dear Sir,
For kind attention of Honourable Prime Minister & Railway Minister
We submit herewith our proposal to introduce premium 2nd Sitting in day-time long distance Trains.
We request the Railways to consider our proposal favourably and
allot only 2 passengers per side so that aged senior citizens, sickly passengers, heavy framed passengers and also who travel for more than 5-6 hours can travel comfortably. Railways may increase the fare for these Premium Seats by 30%, so that Railways DO
NOT incur any LOSS on this account.
For full details of our JUST proposal please click on:-http://speakoutindiagoodcause.blogspot.in/2014/08/introduction-second-class-sitting.html
With greetings and warm regards,
(________________________)



SPEAKOUTINDIA
LET US SPEAK-OUT WHEREVER WE FEEL VERY STRONGLY IN UNISON LOUDLY TO ENSURE IT IS HEARD AND ACTED UPON. A NON-POLITICAL MOVEMENT DEVOTED FOR SOCIAL CHANGE. WE WELCOME ALL…
SPEAKOUTINDIAGOODCAUSE.BLOGSPOT.COM



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

moments and animals!


Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு விடயத்தில் கவனமாயிருப்பின் அதன் வழி யில் எல்லாம் சரி வரும்.


ஒரு விடயத்தில் கவனமாயிருப்பின் அதன் வழியில் எல்லாம் சரி வரும்.

எவ்வாறாயின் சிந்தனை – வெறுப்பற்ற சிந்தனை. ஒவ்வொரு விவகாரங்களிலும் உங்கள் பொறுமையை சோதிப்பவர்களிடம் சகிப்புத்தன்மையோடு நடவுங்கள். அவர்களது தானத்தில் இருந்து ஏன் இப்படி நடக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.

அவர்களது வன்மையை உங்கள் தன்மையால் மாற்றாவிடின் யார் மாற்றுவார் என சிந்தியுங்கள்.

எத்தனையோ விடயங்களில் நட்டங்களை சந்திக்கிறோம். ஒருவரது தன்மையை மாற்ற சிறிது நட்டத்தை சந்திப்பின் கவலைப்படாதீர்.

அது ஒரு வட்டம் போல உங்கள் சகிப்புத்தன்மை அவரில் ஒரு மாற்றத்தை கொண்டுவர அவர் இன்னொருவருக்கு மாற்றத்தை ஏற்படுத்துவார்,

தொடர்ச்சியான அன்பும் விட்டுக்கொடுப்புமே இம்மானிட உய்வுக்கான வட்டத்தை தன்னலமின்றி பூர்த்தி செய்யும்.

தன்னலமற்ற பண்பை வளர்த்தல் கடினம் அதனை உருவாக்க சிறிது சிறிதாக மாற்றும் தன்னல கருத்துகளை யோசித்து கொள்ளுங்கள்.

உ+ம்: நான் இன்று இந்த வயதான பெண்மணிக்கு எனது பேரூந்து ஆசனத்தை விட்டுக் கொடுக்கிறேன். எனது தாயார் ஏறும் போதும் யாராவது விட்டுக்கொடுப்பர்.

இதற்கு அடுத்த கட்டமாக என் வாழ்வில் எனை நம்பி இருப்போருக்கு தேவையானதை செய்தேன். சமூகத்திற்கு எதை செயப்போகிறேன் என தீர்மானித்து நட்டக்கணக்கு எழுதி எதனையும் எதிர்பாராது செய்யுங்கள்.

ஒரு கட்டத்தில் உங்கள் வாழ்வின் மீது உங்களுக்கே பக்தி ஏற்படும் – நிச்சயமாக இறைவா எனை நீ நான் செய்த அல்லது எனை அறியாது செய்த பாவங்களின் பிரகாரம் தண்டிக்க இயலாது அதனை விடவும் நான் அனைவருக்கும் நன்மையே செய்தேன் என.

உங்கள் நற்காரிய கர்மங்களை தீர்மானியுங்கள், கருணையோடு இருங்கள்.
இறைவன் கருணையே உருவானவன் உங்களை காத்தருள்வான்.

சிவாய நம ஓம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

प्राकृतिक दिनचर्या


प्राकृतिक दिनचर्या
****************************
प्रकृति हमारे जीवन का अभिन्न अंग है | हमें प्राकृतिक दिनचर्या का पालन करना चाहिये क्योंकि इसी से हम अपने आपको स्वस्थ एवं निरोगी रख सकते हैं |
आज हम आपको प्राकृतिक चिकित्सा के सिद्धांतों से अवगत कराएंगे —-
१-स्नान करने से पहले १० मिनट के लिए शरीर की मालिश करनी चाहिए | यदि प्रतिदिन यह संभव न हो तो सप्ताह में एक दिन ऐसा अवश्य करें |
२- भूख लगने पर ही भोजन करना चाहिए तथा भूख से थोड़ा कम ही खाना चाहिए , इससे पाचन सम्बन्धी विकार नहीं होते हैं |
३-भोजन करने के बाद थोड़ी देर वज्रासन में अवश्य बैठना चाहिए | रात्रि के भोजन के पश्चात 10-15 मिनट अवश्य टहलना चाहिए |
४-स्वस्थ रहने के लिए प्रतिदिन अधिक से अधिक पानी पीना चाहिए | यदि हम प्रतिदिन चार – पांच तुलसी और नीम की पत्तियों का सेवन करें तो इससे शरीर में रोग नहीं होते हैं |
५-दिन में नहीं सोना चाहिए क्योंकि यह स्वास्थ्य की दृष्टि से हानिकारक होता है |
६- रात को सोने से पूर्व पैर धोकर सोने से नींद अच्छी आती है | हमेशा पश्चिम या उत्तर दिशा की ओर पैर करके ही सोना चाहिए अथवा पूर्व या दक्षिण दिशा की ओर सर करके ही सोना चाहिए | विशषकर विद्यार्धियों को पूर्व दिशा की ओर सर करके सोना चाहिए |



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

150 Muslim Families Revert to Hinduism. Welcoming Indian Muslim Brother/Sisters to their original Sanatan Dharma. JAI HIND


10301205_266499690211262_7231459810875636379_n.jpg?oh=73f502f77cf03d35a73ff29382373c39&oe=5472E09A


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின ் பாத தூசியும்… தூய பக்தி!- பக்தியின் உண்மைத ் தத்துவம்


பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்…
தூய பக்தி!- பக்தியின் உண்மைத் தத்துவம்
அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா… எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது… நம்பமுடியவில்லையே" என்றாள்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.
"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.
"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.
நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.
"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.
நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.
"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.
"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.
கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Vikatan EMagazine மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம ்!


Vikatan EMagazine
மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!

நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்….

அருகம்புல் – ரத்த சுத்தி
இளநீர் – இளமை
வாழைத்தண்டு – வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி – அல்சர்
வல்லாரை – மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் – வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி – ஜீரண சக்தி
புதினா – விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் – முடி வளர்ச்சி, அழகு
துளசி – தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் – மூட்டு வலி, வாதம்
தூதுவளை – தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி – பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் – புண்களை ஆற்றும்
அகத்தி இலை – உடல் உஷ்ணம்
ஆடாதொடா – ஆஸ்துமா, குரல் வளம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

முதலில் உலகுக்கு சொன்னவர்கள் இந்துக்கள ். உண்மை இப்படி இருக்க , வெள்ளையர்கள் வகுத்த க ல்வி முறையை படித்து விட்டு மேல்நாட்டு கண்டு பிடிப்பாளர்களை நாம் கொண்டாடுகிறோம்


வேபர் எனும் ஆய்வாளர் கிறிஸ்து பிறப்பதற்கு 3000 வருடங்களுக்கு முன்பே இந்தியர்கள் வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என சொல்கிறார்.அப்போதே சூரிய கிரகணம் ,சந்திர கிரகணத்தை துல்கியமாக கணக்கிட்டு சொல்லி இருக்கிறார்கள் .ஒரு வருடம் என்பது 365 நாட்கள் ,5மணி ,50 நிமிடம் 35 வினாடி கொண்டது என்றும் பூமி தன் அச்சில் சுழழ்கிறது என்றும் முதலில் உலகுக்கு சொன்னவர்கள் இந்துக்கள் .

உலகம் உருண்டை என முதலில் சொன்னவர் நம் இந்திய வானியல் ஆய்வாளர் ஆர்யபட்டா .அது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என சொன்னார் .உருண்டை வடிவமான பூமி ஏன் தட்டையாக நம் கண்களுக்கு தெரிகிறது என பாஸ்கரா விளக்கினார் .சித்தாந்த சிரோன்மணி எனும் பழமையான இந்திய நூல் புவி ஈர்ப்பு சக்தியை விளக்குகிறது .உண்மை இப்படி இருக்க , வெள்ளையர்கள் வகுத்த கல்வி முறையை படித்து விட்டு மேல்நாட்டு கண்டுபிடிப்பாளர்களை நாம் கொண்டாடுகிறோம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் !!


மஹா சங்கடஹர சதுர்த்தி விரதம் !!
விநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் முக்கியமானது. அதாவது… தொல்லைகள், இடையூறுகளை போக்குகின்ற நாளாகும். இது விநாயகருக்கு உகந்த நாளாகும்.
தேய்பிறை சதுர்த்தியில் இரவுப் பொழுதில் சந்திரன் பிரதானமாகிறான். இது விநாயகப்பெருமானால் சந்திரனுக்கு சாபம் நீங்கிய நாளாகும். இன்று விரதமிருந்து, விநாயகருக்கு பிடித்தமான மோதகம் (கொழுக்கட்டை) நிவேதனம் செய்து மற்றவர்களுக்கு வழங்குவது நல்லது.
அதோடு, இன்று விநாயகருக்கு விசேஷமாக பூஜை செய்வதால், அவர் மிகவும் மகிழ்ந்து எல்லா இடையூறுகளையும் நீக்கி அருள்வார். இந்த பூஜையின் நிறைவில் ரோகிணியுடன் உறை யும் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் தேய் பிறை சதுர்த்தியானது மகா சங்கடஹர சதுர்த்தி நாளாகும். எனவே விநாயகரை வழிபட மிக உகந்த நாளாகும்.
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிக்கும் மரபும் உண்டு.

இந்த விரதத்தை தொடங்கும் நாளில் சூரியன் உதிக்க 5 நாழிகைக்கு (2 மணி நேரம்) முன்னரே உறக்கத்தில் இருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து கொண்டு புண்ணிய நீராடி சிவச்சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.
அவருடைய ஓரெழுத்து, ஆறெழுத்து மத்திரங்களில் ஏதாவது ஒன்றை இதுவும் தெரியாதவர்கள் விநாயகரின் பெயரையாவது இடைவிடாது அன்று முழுவதும் ஜெபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதும் நன்று.
இரவு சந்திரோதயம் ஆன உடன் சந்திரனை பார்த்துவிட்டு, அர்க்கியம் விட்டு பிறகு பூஜையை முடித்து சாப்பிட வேண்டும். அன்று விநாயக புராணத்தை பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும்.
இந்த விரதத்தை விநாயக சதுர்த்திக்குப் பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தியில் இருந்து மகா சங்கடஹர சதுர்த்தி வரை உறுதியுடன் கடை பிடித்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:


ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10: கேசாதி - பாத வர்ணணை ( ஸ்துலம் ) || ஓம் || மனோரூபேஷு கோதண்டா பஞ்சதன்மாத்ர-ஸாயகா| நிஜருண- ப்ரபாபூர-மஜ்ஜத்-ப்ரஹமணட-மண்டலா|| ஓம் மனோரூபேஷு கோதண்டாயை நம: (10) மனமாகிய கரும்பு வில்லை உடையவள் மனம் சங்கல்பம் விகல்பம் என்ற இரண்டு செய்கைகளும் உடையது. சங்கல்பம் எண்ணத்தில் சரியானது என்று முடிவெடுக்கும் செய்முறை, விகல்பம் என்றால் எண்ணங்களுக்கிடையிலான வேறுபாட்டினை உணர்ந்தறியும் செய்முறை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான செய்முறை. மனமும் அறிவைப்போன்று நுண்ணியது. மனம் ஐந்து புலன்களினூடாக பிரதிபலிக்கும். மனம் புலன்களூடாக பெறும் பதிவுகள் மூலம் சங்கல்ப விகல்பங்களை ஏற்படுத்தி எண்ணங்களை தூண்டி இறுதியில் செயலினை செய்ய வைக்கிறது. இக்ஷு என்றால் கரும்பு என்று அர்த்தம், கோதண்ட என்றால் வில், இடது முன்னங்கையில் கரும்பாலான வில்லினை கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பாலான வில்? கரும்பினை பிழிந்து சாறு எடுத்தால் அது இனிப்பான சக்கரையினை தரும். அதுபோல் மனதினை பிழிந்து (கட்டுப்படுத்தி வழிப்படுத்தினால்) அவன் இனிப்பான பிரம்மத்தினை அறியலாம். இந்தக் கை மந்திரிணியான ராஜ சியாமளையை குறிக்கிறது. Manorupekshukodanda – The tenth name in Lalitha Sahasranamam. mana eva rupam yasya tadrsam- iksurupam kodandam yasyah sa She is possessed of the Sugarcane bow of mind This one talks about what she is holding in her lower left hand. She holds a bow which personifies the mind characterized by both Sankalpa and Vikalpa. Ikshu means sugar cane and kothandam means a bow. She is holding in her left lower arm a bow of sugar cane. Why sugarcane bow? If you crush sugarcane you get sweet and tasty juice from which sugar is manufactured. It means if you crush your mind (controlling the mind), you get the sweet reality of the Brahman. This arm is represented by Mantrini or Shyamala devi. . ஓம் பஞ்சதன்மாத்ர-ஸாயகாயை நம: (11) (சப்த ஸபர்ச ரூப, கந்த, ரச எனும்) ஐந்து தன்மாத்திரைகளை பாணங்களாக உடையவள் பஞ்ச என்றால் ஐந்து, தன்மாத்ர என்றால் சுவை, தோடு உணர்வு, பார்வை, ஓலி, மணம் ஆகியவை. இவை ஐந்தும் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம் ஆகிய ஐந்தினதும் சுஷும வெளிப்பாடாகும். லலிதை இந்த மரலம்புகளை தனது பக்தர்கள் மீது செலுத்தி மாயையின் ஐந்து அங்கங்களாக விளங்கு தன்மாத்திரைகளை வெல்கிறாள். இந்த பஞ்ச தன்மாத்ரைகள் மூலமாகவே மாயை செயற்படுகிறது. இது தேவியின் வலது முன்னங்கை, இது வாராஹி தேவியினை குறிக்கிறது.-nandri oum Panchatanmatrasayaka – Pancha Tanmatra Sayaka Panchatanmatrasayaka – The eleventh name in Lalitha Sahasranamam. Pancha Tanmatrani eva sayaka yasya saShe who is holding the arrows of the five subtle elements The five subtle elements are her five arrows, and they are rasa (taste), rupa(form), sabda (sound),p}, Rupa, Rasa, Gandha. These five flowers or arrows are described differently in various tantra sastas. Lalitha targets Her devotees with these arrows to destroy the illusion or maya as the five subtle elements are associated with maya. This is her right lower hand. Varahi devi is represented by this hand. Good Morning my Dear GOD, brothers,sisters and Friends!! Friends!! Have a great and wonderful day ahead!!! God Bless!! இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே, இறைவன் நினைவே இனிய காலை இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்* வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!! -என்றும் அன்புடன் DHANNA LAKSHMI

Dhanalakshmi Murusamy

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:

கேசாதி – பாத வர்ணணை ( ஸ்துலம் )

|| ஓம் ||

மனோரூபேஷு கோதண்டா பஞ்சதன்மாத்ர-ஸாயகா|
நிஜருண- ப்ரபாபூர-மஜ்ஜத்-ப்ரஹமணட-மண்டலா||

ஓம் மனோரூபேஷு கோதண்டாயை நம: (10)

மனமாகிய கரும்பு வில்லை உடையவள்
மனம் சங்கல்பம் விகல்பம் என்ற இரண்டு செய்கைகளும் உடையது. சங்கல்பம் எண்ணத்தில் சரியானது என்று முடிவெடுக்கும் செய்முறை, விகல்பம் என்றால் எண்ணங்களுக்கிடையிலான வேறுபாட்டினை உணர்ந்தறியும் செய்முறை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான செய்முறை. மனமும் அறிவைப்போன்று நுண்ணியது. மனம் ஐந்து புலன்களினூடாக பிரதிபலிக்கும். மனம் புலன்களூடாக பெறும் பதிவுகள் மூலம் சங்கல்ப விகல்பங்களை ஏற்படுத்தி எண்ணங்களை தூண்டி இறுதியில் செயலினை செய்ய வைக்கிறது. இக்ஷு என்றால் கரும்பு என்று அர்த்தம், கோதண்ட என்றால் வில், இடது முன்னங்கையில் கரும்பாலான வில்லினை கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பாலான வில்? கரும்பினை பிழிந்து சாறு எடுத்தால் அது இனிப்பான சக்கரையினை தரும். அதுபோல் மனதினை பிழிந்து (கட்டுப்படுத்தி வழிப்படுத்தினால்) அவன் இனிப்பான பிரம்மத்தினை அறியலாம். இந்தக் கை மந்திரிணியான ராஜ சியாமளையை குறிக்கிறது.

Manorupekshukodanda – The tenth name in
Lalitha Sahasranamam.
mana eva rupam yasya tadrsam- iksurupam kodandam yasyah sa

She is possessed of the Sugarcane bow of mind
This one talks about what she is holding in her lower left hand. She holds a bow which personifies the mind characterized by both Sankalpa and Vikalpa.
Ikshu means sugar cane and kothandam means a bow. She is holding in her left lower arm a bow of sugar cane. Why sugarcane bow? If you crush sugarcane you get sweet and tasty juice from which sugar is manufactured. It means if you crush your mind (controlling the mind), you get the sweet reality of the Brahman. This arm is represented by Mantrini or Shyamala devi. .

ஓம் பஞ்சதன்மாத்ர-ஸாயகாயை நம: (11)

(சப்த ஸபர்ச ரூப, கந்த, ரச எனும்) ஐந்து தன்மாத்திரைகளை பாணங்களாக உடையவள்
பஞ்ச என்றால் ஐந்து, தன்மாத்ர என்றால் சுவை, தோடு உணர்வு, பார்வை, ஓலி, மணம் ஆகியவை. இவை ஐந்தும் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம் ஆகிய ஐந்தினதும் சுஷும வெளிப்பாடாகும். லலிதை இந்த மரலம்புகளை தனது பக்தர்கள் மீது செலுத்தி மாயையின் ஐந்து அங்கங்களாக விளங்கு தன்மாத்திரைகளை வெல்கிறாள். இந்த பஞ்ச தன்மாத்ரைகள் மூலமாகவே மாயை செயற்படுகிறது. இது தேவியின் வலது முன்னங்கை, இது வாராஹி தேவியினை குறிக்கிறது.-nandri oum

Panchatanmatrasayaka – Pancha Tanmatra Sayaka
Panchatanmatrasayaka – The eleventh name
in Lalitha Sahasranamam.

Pancha Tanmatrani eva sayaka yasya saShe who is holding the arrows of the five subtle elements
The five subtle elements are her five arrows, and they are rasa (taste), rupa(form), sabda (sound),p}, Rupa, Rasa, Gandha. These five flowers or arrows are described differently in various tantra sastas.
Lalitha targets Her devotees with these arrows to destroy the illusion or maya as the five subtle elements are associated with maya. This is her right lower hand. Varahi devi is
represented by this hand.

Good Morning my Dear GOD, brothers,sisters and Friends!! Friends!!
Have a great and wonderful day ahead!!! God Bless!!
இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே,
இறைவன் நினைவே இனிய காலை
இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்*
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!

-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE