இனி சான்றிதழ்களில் கெஜட் அலுவலர்களின் கை யொப்பம் தேவையில்லை : மத்திய அரசு முடிவு By dn, ப ுது தில்லி


இனி சான்றிதழ்களில் கெஜட் அலுவலர்களின் கையொப்பம் தேவையில்லை : மத்திய அரசு முடிவு
By dn, புது தில்லி

அரசு அலுவலகங்களுக்கு விண்ணப்பம் தாக்கல் செய்யும்போது அதனுடன் இணைக்கும் சான்றிதழ்கள் உண்மைமையானவை என்பதை உயர் அதிகாரிகள் சான்றளிக்கும் முறையை மாற்றி, விண்ணப்பதாரர்களே சுய சான்று அளிக்கும் முறையைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பத்துடன் அளிக்கும் சான்றிதழ்களில் அட்டெஸ்டேஷன் செய்வதற்காக கெஜட் அலுவலர்களிடம் கையெழுத்துப் பெற வேண்டி இருப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், லஞ்சம் கொடுப்பதும் அதிகரிக்கிறது.

அதன்படி இனி அரசு அலுவலகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உறுதியளிப்பு படிவங்களில், சான்றிதழ்களில் தாங்களே கையெழுத்திடலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி வரும் விண்ணப்பங்களை மத்திய அரசு துறைகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சில அமைச்சகங்கள் இதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டன. மற்ற அமைச்சகங்களும் இந்த புதிய நடைமுறையை ஏற்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தல் கடிதம் எழுதி உள்ளது.


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தத்தாத்திரேயரின் குணாதிசயங்கள் ….


தத்தாத்திரேயரின் குணாதிசயங்கள் ….

பிறந்தக் குழந்தையான தத்தாத்திரேயர் சாதாரணக் குழந்தையாக வளரவில்லை. அவர் போக்கே விசித்திரமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசமாட்டார். வயது ஆக ஆக அவர் போக்கே முற்றிலும் மாறியது. ஆனால் அவை எதுவுமே உண்மை அல்ல. அவர் வெளித் தோற்றம் வேறு. உள்ளே ஆத்மா வேறாக இருந்தது. அவர் மனித உருவில் தோன்றி இருந்த தெய்வம் அல்லவா. காலம் ஓடியது.

தத்தாத்திரேயர் மாபெரும் யோகா புருஷராக இருந்தார். வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக சுற்றித் திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை மூடியபடி இருப்பார். அவரை சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது. அவரைக் கண்ட ரிஷி முனிவர்கள் அவர் சாதாரண பிறவி அல்ல என்பதை புரிந்து கொண்டார்கள்.

மாபெரும் யோகி, ஞானி, அவதூதர் என அவரை பலரும் பலவிதமாக போற்றித் துதிக்கலாயினர். காரணம் வேதங்கள் அவருக்கு அத்துப்படி. அவர் உலக நன்மையை கருத்தில் கொண்டே அவதூதராக அவதரித்து இருந்தார் என்பது மும்மூர்த்திகளைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் நடத்தைகளைக் கண்டு அவர் மிகப் பெரிய யோக புருஷர் என்பதை உணர்ந்து கொண்ட ரிஷியும் முனிவர்களும் அவரிடம் சிஷ்யர்களாகத் துடித்தார்கள்.

தத்தாத்திரேயரோ வந்தவர் அனைவரையுமே சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டது இல்லை. பால்ய லீலைகளாக அவர் செய்து காட்டியவை ஏராளம், ஏராளம் உண்டு. அவர் செய்த யோகா சாதனைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த முனிவர்களினாளும் கூட நினைத்தும் பார்க்க முடியாதவை. வெளிப் பார்வைக்கு ஒழுங்கற்ற வாழ்கையைக் கொண்டவர் போலத் தோற்றம் தருவார். வேண்டும் என்றே இறைச்சிகளை வாயில் கடித்து உண்டவாறு அலங்கோலமாக இருப்பார்

அரைகுறை ஆடைகளுடன் காட்சியளிப்பார், மது மற்றும் கள்ளை குடித்தபடியும், விலை மாதர்களுடன் சல்லாபித்தபடியும் தோற்றம் தருவார். ஆனால் அவற்றை எல்லாம் பார்த்த ரிஷி முனிவர்கள் அவை நிஜமல்ல, கானல் நீர்தான். தத்தாத்திரேயர் வேண்டும் என்றே நம் மனத்தைக் கலைக்க அப்படி ஒரு கபட நாடகம் ஆடுகின்றார் என்று எண்ணிக் கொண்டு அவர் எத்தனை விரச காட்சியில் தோன்றினாலும் அவரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அவருடன் இருந்தார்கள். அடச் சீ…என்ன ஈனத்தனமான மனிதர் இவர் என வெறுத்து ஓடி விட்ட ரிஷி முனிவர்களும் உண்டு. பாவம் அவர்கள். ரிஷி முனிவர்களாக இருந்து என்ன பயன்….உண்மையை புரிந்து கொள்ளவில்லையே. பரப்பிரும்மமான தத்தாத்திரேயருக்கு மற்றவர்களை அப்படியெல்லாம் சோதனை செய்வதில் அலாதியான ஆனந்தம் உண்டு.

”ஓ….தத்தாத்திரேயா, அவதார புருஷா, உலகைப் படைத்துக் காத்து தீய சக்திகளை அழிக்க வந்த முமூர்த்திகளின் அவதாரமானவரே, பரப்பிரும்மமே, உனக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. வேறு எந்த தடையும் இல்லை. வெவ்வேறு ரூபங்களில் உன் ஜோதியைக் கலந்து ரூபங்களை எடுக்கிறாய். இந்த உலகத்தை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு எடுத்துச் செல்ல அத்ரி முனிவர் – அனுசூயா தம்பதியினரின் அவதார புருஷனாகப் பிறந்தவரே, உன் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதும். பாபங்கள் விலகும், தீமைகள் அழியும். நீயே மூவுலகத்துக்கும் அதிபதி…தூயவனும் நீயே…உன்னை நாங்கள் அனுதினமும் மனம் வற்றும்வரை துதித்துக் கொண்டே இருக்க எங்களுக்கு சக்தி கொடு” என அவரை வேண்டித் துதித்தார்கள்.

தத்தாத்திரேயர் எதிலும் பற்றில்லாமல் திரிவார். அதனால் அவர் மனது எந்த விதத்திலும் களங்கம் அடைந்தது இல்லை. ஜடத் தன்மையுடன் வெளியில் தெரியும் உடலுக்கும் உள்ளிருக்கும் புனித ஆத்மாவிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பார். அவர் எந்த நேரத்தில் எங்கு இருப்பார், எங்கு போவார் என எவருக்கும் புரியாத, தெரியாத புதிர் அவர். ஒருமுறைப் பார்த்தால் பிச்சைக்காரனைப் போல துணி உடுத்தி அரைகுறை ஆடைகள் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிவார். நான்கு நாய்கள் பின் தொடர, பசு மாடு பின்னால் நின்று கொண்டு இருக்க அப்படியும் காட்சி தருவார்.

இன்னொரு சமயத்திலோ ஏரிகளிலும், குளங்களிலும் முழ்கி நின்றும், சுடுகாடுகளில் உருண்டு புரண்டு கிடந்தும் நாட்கணக்கில் ஏகாந்தத்தை அனுபவித்தபடி இருப்பார். ஏரிகளில் முழ்கி பலமணி நேரம் அப்படியே கிடப்பது அவரது வாழ்கையில் சர்வ சாதாரணம். இப்படியாக அவரது வாழ்கை பல நூற்றாண்டு காலம் தொடர்ந்தது.
அவர் உலகிலேயே மிகப் பெரிய அவதாரம் என்றாலும் மனித உருவில் அவதாரம் எடுத்து இருந்ததினால் ஒரு துறவி போலவே அவதூதராகவே வாழ்ந்து கொண்டு இருந்தார் மும் மூர்த்திகளை ஒன்றடக்கி இருந்த அந்த அவதூதர். பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து கொண்டு இருந்தாலும் அவருக்கு பிடித்த இடம் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதே. உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொண்டும், புலித்தோலை உடைப் போல உடுத்திக் கொண்டும் இருப்பார். அமைதியான ஆனால் ஜொலிக்கும் முகத்தையும் கொண்டவர் அவர்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெய ர்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். ஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது... கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.. பிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான் அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு.. பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்.. அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது... தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

dinakaran daily newspaper

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது…

கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்..

பிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான் அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு..

பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே
உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன்..

அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது…

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

” Relationships means caring beyond imagination”.


A crab was once running on sea shore n was admiring its beautiful footprints..

Suddenly a huge wave splashed n washed away the footprints…

The crab said to the wave: I considered you as one of my best friends, then what made you do this?

The wave replied: A fisherman was following your footprints, that’s why I cleared it off..

" Relationships means caring beyond imagination".

GOOD MORNINGपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆற்றங்கரையோர ஆடிப்பெருக்கு! 03-08-2014


ஆற்றங்கரையோர ஆடிப்பெருக்கு! 03-08-2014

(வலையில் படித்தது)

புளிசாதத்திலிருந்து ஆறடி கூந்தல் அழகி தன் தலைக்குச் சதும்பத் தேய்த்துக் குளிக்கும் அளவிற்கு எண்ணெய் என் கையில் இறங்கியிருந்ததில் என் முகத்தை அதில் பார்த்துக்கொண்டே கேட்டேன் ”இன்னிக்கி என்ன எல்லாம் கலந்த சாதமாயிருக்கு?”

“இன்னிக்கு பதினெட்டாம் பெருக்குடா”

அம்மா சொன்னதும்தான் இன்று ஆடி பதினெட்டு என்று புத்தியில் உரைத்தது. பதினெட்டாம் பெருக்கு. பால்ய வயது ஞாபகங்கள் என் உள்ளங்கை எண்ணெய்க் கண்ணாடியில் கனாப் புகையின் நடுவே கலர்க் கலர் காட்சிகளாய் இரண்டு மூன்று ரீல்கள் ஓடியது.பதினெட்டாம் பெருக்குக்கு இரண்டு நாட்கள் முன்னரே மூலையில் கிடந்த பழைய சப்பரத்தை தூசித் தட்டி எடுத்து ஆங்காங்கே ஆப்படித்து ஆணியடித்து இன்னும் சில மராமத்துப் பணிகள் செய்துச் செப்பனிட்டுக் கொள்வோம். மத்தியான்ன நேரத்திலிருந்து காகிதக் கப்பலும், கொடிச்சப்பர அலங்காரமும் கும்பலாக உட்கார்ந்து குருவி சோப்பிற்கு லேபிள் மடிக்கும் குடிசைத் தொழில் போல நடக்கும். அந்த வருஷத்திய வாசனை தொலையாத புத்தம் புது நோட்டிலிருந்து சலவைக் காகிதக் கப்பல் செய்துவிட்ட தனவந்தர்களின் வாரிசுகளும் எங்களுடன் விளையாண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது சற்றே பெருமையாக இருக்கிறது. அந்தி வரும் நேரத்தில் கொடிச்சப்பரத்தை தரதரவென்று வீதியில் இழுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குத் துள்ளி ஓடுவோம். நாற்புரமும் கேட்கும் ”ஹோய்” என்ற ஆனந்தக் கூச்சலும் சப்பரத்தின் மரச் சக்கரம் மண்ணோடு உராயும் ஒலியும் பதினெட்டாம் பெருக்கின் பிரதான பின்னணி இசை.

பொசுபொசுவென்று மார்பு ரோமங்கள் தெரியும், தொப்புள் வரை திறந்த, பட்டன் பிய்யும் ”இறுக்கிப்பிடி” சட்டையும் தரை பெருக்கும் பெல் பாட்டமுமாய் (பிரத்யேகமாக அடியில் ஜிப் வைத்துத் தைத்தது) எதையோ தொலைத்த பாவனையில் அண்ணாக்களும், எதையோ தேடும் பாவனையில் கண்களை அலையவிட்டு ஹாஃப் ஸாரி, பாவாடை, இடுப்பில் சொருகிய வெள்ளைக் கர்ச்சீஃப் சகிதம் பதினெட்டுகளின் கூட்டமும் காவிரிக்கரையோரம் காதலுடன் நடமாடும். என்னைப் போல் ஒன்றும் தெரியாத அச்சுப்பிச்சு அரை ட்ராயர்கள் அந்த அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் இடையே ”சிறார்”விடு தூதாக இடையூறில்லாத இடையர்களாய் பணியாற்றும்.

இதமாகத் தலைகோதும் தென்றல், சலசலக்கும் ஆறு, காற்றில் தலையாட்டும் கரையோர அரசமரம், சுற்றிலும் காற்றாடி விட்டு ஓடியாடும் சின்னஞ் சிறுசுகள், மனைவியிடமிருந்து கண்ணடிக்க வைக்கும் புளிசாதம் கையில் வாங்கித் தின்ணும் கணவன், குழுமி உட்கார்ந்து அரட்டையடிக்கும் சிநேகிதங்கள், “டேய்! புதுத்தண்ணி காவு வாங்கிடும். ஜாக்கிரதை” என்று நொடிக்கொருதரம் பிள்ளைகளைப் பார்த்து அலெர்ட் செய்யும் அக்கறையான பாட்டிமார்கள் என்று அந்த பாமணியாற்றங்கரை அரசமரமிருக்கும் தேவலோகமாகக் காட்சியளிக்கும்.

தேங்காய் சாதம், புளி சாதம், எலும்பிச்சை சாதம் என்று பல வீட்டுச் சித்ரான்னங்கள் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அன்போடு அளவில்லாமல் கிடைக்கும். சுவை மிகுந்த சோத்துச் சட்டிகள் சீக்கிரம் தீர்ந்துவிடும். ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட வ.ஊ.சியின் பெருமிதத்தோடு காகிதக் கப்பல்கள் விடுவோம். நுரை பொங்க வரும் புதுப் புனலில் மிதந்து சொற்ப நேரத்திற்குள் கோரைப்புற்களால் கவிழும் கா.கப்பல்களின் அணிவகுப்பு அந்த நொடி தண்ணீரில் முளைத்த இன்ஸ்டண்ட் அல்லிப்பூக் கூட்டம் போல மிதக்கும். வயிறும் மனசும் நிறைந்து முழுத் திருப்தியடைந்த அந்தி சாய்ந்த நேரத்தில் ஒரு பக்கக் கால் கழன்ற சப்பரத்தை இழுத்துக்கொண்டு, தலை கலைந்து, சட்டை அழுக்காகி புத்துணர்வுடன் இல்லம் திரும்புவோம்.

இந்த வருஷம் பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் சொட்டுத் தண்ணீர் இல்லையாம். ஆற்றங்கரையில் துவங்கிய நாகரீகங்கள் ஆற்றங்கரையில்லாமலே முடிந்துவிடும் அபாயத்திலிருக்கிறது. ”ஆடியில அடிக்குதம்மா அதிர்ஷ்டக்காத்து”ன்னு டிவி பார்த்துக்கொண்டு பாப்கார்ன் கொரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இன்றைய இளைய சமுதாயம் இதுபோல சந்தோஷங்களை அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களுக்கும் ஆறு குளங்கள் வறண்டுபோகாமால் அனுபவிக்க வாய்ப்பிருந்தால்தானே!परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆடிப் பெருக்கு -03-08-2014


ஆடிப் பெருக்கு -03-08-2014

(ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி
சொல்லும் ஒரு நன்நாள்.)

ஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி
நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான்.
ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி என
எத்தனையோ விசேஷங்கள் இந்த ஆடி மாதத்தில்.

இன்று ஆடிப்பெருக்கு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் அம்மா எனக்கு ஆடி 18க்கு புத்தாடை கட்டாயம் வாங்கி
வைத்திருப்பார். ஆடிப்பெருக்கு அன்று வீட்டுப்பெண்ணிற்கு
புத்தாடை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வாங்கி
சில சமயம் அம்மாவே தைத்துக்கொடுப்பார். வயலட் நிற
வெல்வெட் துணியில் அடுக்கடுக்காய் இருக்கும் கவுன் ஒருமுறை
அம்மா தைத்துக்கொடுத்து அதைப் போட்டு வாஷிங் பவுடர்
நிர்மா பெண் போல் சுத்தியது கொசுவத்தி சுத்துது.

ஆடிப்பட்டம் தேடிவிதைன்னு சொல்வாங்க. ஆடிப்பெருக்கும்
அப்படித்தான். அது என்ன ஆடிப் பெருக்கு? ஆடி மாதத்தின்
18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. மழைக்காலத்தை
வரவேற்கும் ஒரு நிகழ்ச்சி. இன்று நதிக்கரை,குளக்கரைக்குச்
சென்று பூஜித்து படையல் படைத்து, நோன்புக்கயிறு
கட்டிக்கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கூட கழுத்தில்
மஞ்சள் நூல் கட்டுவது இன்று மட்டும் தான்.

இந்த நந்நாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும்
சொல்லலாம். காதோலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும்
கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
திருமணமான பெண்ணோ தன் மாங்கல்யம் நிலைத்து நிற்க பூஜை செய்வாள்.

சில இடங்களில் முளைப்பாரி எடுத்துச் சென்று நதி தீரங்களில் அல்லது
குளங்களில் கரைப்பது வழக்கம். எங்கள் புதுகையில் குளத்திற்கு ஒன்றும்
பஞ்சமே இல்லை. பல்லவன் குளம், ஐயர்குளம், ராஜாக்குளம் என
பல குளங்கள். இங்கெல்லாம் குடும்பத்துடன் மக்கள் வந்து பூஜை செய்ததைப்
பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அம்மா இன்று அன்னைக்கு பூஜை செய்து கலந்த சோறு
செய்வார். புத்தாடை அணிந்து இன்று கண்டிப்பாய் பாடம் படிக்கச் சொல்வார்.
ஏதேனும் புதிய வகுப்பில் சேர்வதாக இருந்தால் இன்றைய தினம் மிக
விசேஷம். ஆடிப்பெருக்கில் ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும்
பெருகும் என்பது ஐதீகம்.

ஆடித்தங்கம் கூடும் என நகைக்கடைக்காரர்கள் ஆரம்பித்திருக்கிறாகள்.
ஆடித்தங்கம், அட்சய திருதியைத் தங்கம், தன் த்ரேயஸ் தங்கம் என
எல்லா நாளும் தங்க நகை வாங்கிக்கொண்டிருந்தால் அம்பேல்தான்.
நல்ல மனத்தோடு இறைவனை பூஜித்து, நிவேதனம் சமர்ப்பித்து
இருப்பதுதான் பண்டிகை. ஆடித்தங்கம் கண்டிப்பாய் வாங்க வேண்டும்
என்றெல்லாம் கொள்கை வைக்காமல் ஆடி 18க்கு அம்மனுக்கு
பூஜை செய்து மாங்கல்யம் தழைக்க, மங்களவாழ்வு கூட, பிரார்த்திப்பதே சரி.

பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என்பது போல
ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி
சொல்லும் ஒரு நன்நாள்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

changing rituals or SIMPLIFYING PRACTICES


Traditional or orthodox Mathas should work to uphold traditions and ancient practices in a pure form. If they also start reform measures like deleting or changing rituals or SIMPLIFYING PRACTICES LIKE SHRADDA, then they lose their very purpose and become like any other modern ONE GURU based reformist organisations.

The ideas of rationalist, logical, scientific reformers is to STOP ANY RITUAL WHICH IS INCONVENIENT; Eat anything if convenient; Do any type of marriage as that is the IN thing! CUT THE HEAD IF THERE IS A HEADACHE! This the negative type of reform propagated by them. In the following paras I am suggesting a POSITIVE AND PRACTICAL form of reform!

Fortunately Sringeri and Kanchi Mathas and many other Madhwa and Iyengar Mathas are still upholding the traditional practices. Many traditional Mathas do encourage social service and educational and medical activities but their primary goal is upholding the traditional practices and philosophy.

The Mathas can print leaflets containing basic Sastra practices, their importance, dos and donts etc., and distribute it free to all visitors and in all gatherings of religious occasions like marriages.

Instead of changing or simplifying all the rituals and practices, they should explore ways of propagating the purer practices. They can instruct or form group of Purohits-vadyars who will not compromise on any ritual but will do as per Sastras by charging a fixed fee. They can start a service number, by calling which any house holder can get the services of a set of vadyars for the function in his house. This can be started in major cities like Chennai, Bangalore and Mumbai. The Vadyars will charge a reasonable fee as fixed by a committee and will get additional compensation from a fund which the Matha can set up exclusively for this purpose. In today’s situation such a fund can easily find many donors or sponsors. As many more students are coming out of Vedic schools who are well trained, such an effort is quite practical today.

For example they will perform Shradda only after 11 AM or so and not in the early morning. Such services may be restricted to only those Brahmins who have not entered into intercaste marriges or who have not fully given up Sandya vandana etc. No rituals will be performed in houses where dogs or cats are kept as pets as it is against the Sastras. Most people are not even aware of these Sastra rules and such restrictions will help more people to realise the value of following Sastras.

I mention Brahmins to start with and similar activities are also valid for other castes, like Pujas, Bajans and temple programs. But the Brahmin is the most degenerate specimen today and it is worth starting from him!

There is a growing awareness among the common Brahmins and also other castes in the value of performing rituals and Homas in their houses. Now is the time to start positive action to bring many more into actual practical religion. Once they start this, the learning of the philosophy part and efforts at self realisation will automatically follow with growing maturity. Even today there is a great demand from office goers in learning Vedas in their part time. Only the limited availability of teachers in convenient locations is a restriction. Even then we see many house holders have learnt basic SUKTAS, RUDRAM AND CHAMAKAM, and chant it in temples during Pradosham and other occasions.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE