காயத்ரி மந்திரம்: காயத்ரி என்பதற்கு தன்ன ை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்


காயத்ரி மந்திரம்
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ -எவர்
ந -நம்முடைய
தியோ -புத்தியை
தத் -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத் -தூண்டுகிறாரோ
தேவஸ்ய -ஒளிமிக்கவராக
ஸவிது -உலகைப் படைத்த
வரேண்யம் -மிகவும் உயர்ந்ததான
பர்கோ -சக்தியை
தீமஹி -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்

email_open_log_pic.php?mid=a51190fG5af31bdb4bc2G8e20d4dG96Gab97


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காய்கறிகளைச் சமைக்கும் முறை!


காய்கறிகளைச் சமைக்கும் முறை!

• காய்கறிகளை வாங்கியவுடன் உபயோகிக்க வேண்டும்.

• காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்குவது நல்லது.

• காய்கறிகளை நறுக்கியதும் தண்ணீரில் ஊறவைக்கக் கூடாது. இதனால் வைட்டமின் சத்து குறைகிறது
.
• காய்கறிகளை அதிகமான நீரில் வேகவைக்கவும் கூடாது
.
• காய்கறிகளை வேகவைக்கும் போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

• காய்கறிகளை குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கலாம்.

• நீரை முதலில் கொதிக்க வைத்து பிறகு கொதிநீரில் காய்கறிகளை வேக வைக்கவேண்டும்.

• சமைக்கும்போது சோடா மாவு சேர்ப்பதால் வைட்டமின் "பி’ அழிக்கப்படும்.

• காய்கறிகளை குளிர்ச்சியான ஈரப்பசை உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

• ஒருமுறை சமைத்த காய்கறிகளை மறுபடியும் சூடாக்கக் கூடாது.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அட அப்படியா!


அட அப்படியா!

(என்ன? யார்? எங்கே? எப்போது? நூலிலிருந்து)

உலகப் புகழ்பெற்ற நயாகரா அருவியின் நுழைவு வாயிலில் தமிழில் வரவேற்பு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது. அதன் முகப்பு வாயிலில் "கற்க கசடற’ என்ற திருக்குறள் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் "சைக்போட்ரான்’ என்னும் நவீன கருவி மூலம் பிளாட்டினத்தை தங்கமாக மாற்றியுள்ளார்கள்.

(ஆதாரம்: புதிய கண்டுபிடிப்புகள்)

உலகின் முதல் பொதுவான நீட்டல் அளவையை இன்று இந்தியாவில் உள்ள பூ விற்பவர்கள் மட்டுமே பின்பற்றுகின்றனர். முழங்கை மூட்டிலிருந்து நடுவிரல் நுனி வரை உள்ள நீளமே ஒரு முழம். எகிப்தியர்களும், பாபிலோனியர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இப்படித்தான் நீளத்தைக் கையினால் முழம்போட்டு அளந்தனர்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கொத்தமல்லி−தோசை


கொத்தமல்லி−தோசை

ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி

தேவையானவை:

கொத்தமல்லி – 1 கட்டு
கோதுமை மாவு – 50 கிராம்
மைதா மாவு – 50 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையானது.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொத்தமல்லியை ஆய்ந்து பொடியாக நறுக்கி வதக்கி அரைக்க வேண்டும். கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய்ப்பொடி, தக்காளிச்சாறு, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த கொத்தமல்லி விழுதைச் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டுக் கரைக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, காய்ந்ததும் கரைத்த மாவை ஊற்றி மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர் – குரு


டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர் – குரு

1986ல் நடந்த நிகழ்ச்சி. சந்திரமெளளி என்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் கைங்கர்யம் செய்து வந்தார். சந்திரமௌளியின் மாமா ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்தவர். கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்தாலும் மடத்திலும் பெரியவாளிடத்திலும் ஈடுபாடு இல்லாதவர். அவரது குடும்பத்தினரும் அப்படியே.

வேலூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவரது மாப்பிள்ளைக்கு திடீரென்று சிறு நீரகத்தில் கோளாறு. வேலூரில் பரிசோதனை செய்த டாக்டர் கையை விரித்துவிட்டார்.

MAHA PERIYAVAஅன்றிரவு மிகவும் துக்கத்துடன் இருந்த அந்த கேப்டனின் பெண் சொப்பனத்தில் ஸ்ரீ பெரியவாள் தோன்றி உன் மாங்கல்யத்தைத் தருகிறாயா? என்று கேட்டார்கள்.

விடிந்தவுடன், அப்போது உடனடியாக ஒரு மஞ்சள் கயிறு கூட இல்லாத நிலையில் ஒரு சணற் கயிற்றில் மஞ்சளைக் கோர்த்து அணிந்து கொண்டு, மாங்கல்யத்தைப் பெரியவாளுக்காக எடுத்து வைத்துவிட்டாள்.

பின் மௌளியிடம் போனில் விஷயத்தைச் சொன்னார்கள். மௌளி அவர்களை உடனே வந்து பெரியவாளை தரிசனம் செய்யச் சொன்னார். ஆனால், அவர்களுக்குப் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் காஞ்சி மடத்திற்கு வர முடிந்தது.

உள்ளே படுத்துக் கொண்டிருந்த பெரியவாள் மௌளியிடம், ”யாராவது தரிசனத்திற்கு வந்திருக்கிறார்களா” என்று வினவினார்கள்.

மௌளி, பெரியவாளுக்குச் சிரமம் வேண்டாம்; வெளியில் வரும்போது தரிசனம் கொடுக்கலாம் என்று சொன்னார்.

அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் தம்பதிகளை உள்ளேயே அழைத்து வரும்படி உத்திரவிட்டார்கள்.

அவர்கள் உள்ளே வந்ததும் மௌளியின் மாமா பெண்ணைப் பார்த்து, ”அதைக் கொண்டு வந்திருக்கிறாயா? தா, தா ..” என்று கேட்டு மாங்கல்யத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

பின்பு பக்கத்திலிருந்த பாலுவிடம் ஒரு பழம் கொண்டுவரச் சொன்னார்கள்.

அவர் சாத்துக்குடி கொண்டு வந்ததும், இந்த புளிப்புப் பழம் வேண்டாம்; வேறு நல்ல பழம் கொண்டுவா என்றார்கள்.

ஒரு நல்ல ஆப்பிள் வந்தது. அதை நகத்தால் கிள்ளிக் கொண்டே வெகு நேரம் கேப்டனின் மாப்பிள்ளையையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாமிகள் அந்த ஆப்பிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ”உனக்கு ஒன்றுமில்லை, போ” என்று கூறினார்கள்.

வேலூர் சென்றவுடன் மாப்பிள்ளையை மறுபடியும் பரிசோதனை செய்த, சிறுநீரக சிறப்பு மருத்துவருக்கு ஒரே ஆச்சரியம்.

கிட்னி இரண்டும் ஒரு குறையுமில்லாமல் நன்றாக வேலை செய்தன.

என்ன நடந்தது? என்று கேட்டு விவரம் அறிந்தவுடன் அந்த டாக்டர்,

”Oh, HE is GOD; HE can do anything”என்று வியப்புடன் சொன்னார்.

20 வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை (2006) எந்தத் தொந்திரவும் இல்லாமல் இருக்கிறார்.

முன்பு பெரியவாள் என்றாலே உதாசீனமாக, அலட்சிய பாவத்துடன் இருந்த அவர்கள் வீட்டில் இப்போது பெரியவாள் படங்களைத் தவிர வேறு ஒரு படமும் கிடையாது!परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உணவுக்கும் மருந்துக்கும் அதிக வேற்றுமை இ ல்லை’


உணவுக்கும் மருந்துக்கும் அதிக வேற்றுமை இல்லை’ என்கிறது ஒரு சீனப் பழமொழி. உணவு கட்டுப்பாடு குறையும்போது மருந்தை நாட வேண்டி உள்ளது. மருந்தைக் குறைப்பதற்கு, உணவைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

அதுவும் நீரிழிவு நோயைப் பொறுத்தவரை உணவுதான் அதற்கான சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோய் மருத்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

1.உணவும் உடற்பயிற்சியும் மனஉறுதியும்

2.உணவும் உடற்பயிற்சியும் மாத்திரையும் மனஉறுதியும்

3.உணவும் உடற்பயிற்சியும் ஊசியும் மனஉறுதியும்

எப்படிச் சமாளிப்பது?

இந்த மூன்றிலுமே உணவுக்குத்தான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது என்று சொன்னால், அதில் தவறில்லை.

உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.

நீரிழிவு நோய் தோன்றலாம் என்ற ஐயம் அல்லது தோன்றிவிடும் என்ற பயம் உள்ள காலத்தில் அல்லது மிகக் குறைவான தாக்கத்தையே நோய் ஏற்படுத்தி இருக்கும். அந்த ஆரம்பக் கட்டத்தில் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியுமே போதும் என்பது மருத்துவர்களின் கருத்து.

அதன்பிறகு நீரிழிவு நோய் கட்டுப்பாடு சற்று அதிகம் தேவைப்பட்டால், மாத்திரை உட்கொண்டு அக்கறையோடு உணவு கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.

கட்டுப்பாடில்லாவிட்டால்

சில சமயம் இந்த நிலையிலும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வராது அதிகரித்துவந்தால் அல்லது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை நோயாளி சரியாகப் பின்பற்ற இயலாதவராக இருந்தால் இன்சுலின் ஊசி எடுத்துக்கொள்வது அவசியம். ஏனென்றால், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் கால்கள், சிறுநீரகம், அதைச் சார்ந்த உறுப்புகளையும், இதயம், கண், மூளை, நரம்பு போன்ற உடலுறுப்புகளையும் பாதித்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ரத்த ஓட்டம் பெருமளவில் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோய் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களை முன்பே பார்த்துவிட்டோம். அதன் கொடுமையைக் குறைக்கக்கூடிய உணவு கட்டுப்பாட்டைப் பற்றி பார்ப்போம்.

உணவு கட்டுப்பாட்டின் அவசியம்

உணவைக் கட்டுப்படுத்துவது என்பது அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. அதன் தரத்தை, வகையைக் கட்டுப்படுத்துவதே ஆகும். பொதுவாக எல்லாருக்கும் சமச்சீரான உணவு (Balanced diet) தேவை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். இதைப் போலவே நீரிழிவு நோயாளிகளுக்கும் எனத் தனியாகச் சமச்சீரான உணவு உண்டு. அதில் சிறிய அளவு மாற்றமே இருக்கும். மாவுச்சத்து மிகுந்த கார்போஹைட்ரேட்டின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டு, அதை ஈடுகட்டும் விதத்தில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த காய்கறிகளும் இனிப்புக் குறைவான பழங்களும் இடம்பெறும்.

எதைக் குறைப்பது, எதைக் கூட்டுவது என்ற கேள்வி எழும்போது:

அரிசி போன்ற தானியங்களைக் குறைத்துப் பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் உணவு திட்டத்தில் மூன்று வகையான உணவுப் பொருள்கள், மூன்று விதமான அட்டவணையில் அடங்கியுள்ளன. அவை அளவோடு எடுத்துக்கொள்ளக் கூடியது, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடியது, அறவே ஒதுக்கக் கூடியது ஆகியவை.

அளவோடு எடுத்துக்கொள்ளக் கூடியவை:

தானியங்கள் – அரிசி, கோதுமை, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு,

பருப்பு – பட்டாணி, பருப்பு வகைகள், எள், குறிப்பிட்ட பழவகைகள்.

அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடியவை:

கீரை வகைகள், குறிப்பாக முருங்கை, வெந்தயக்கீரை, வல்லாரைக் கீரை, காய்கறிகள் (வாழைக்காய் தவிர), எலுமிச்சம் பழம், வாழைத்தண்டு.

அறவே தவிர்க்க வேண்டியவை:

கிழங்குகள் (நிலத்தின் அடியில் விளையும் இஞ்சி, மஞ்சள், வெங்காயம், பூண்டு, முள்ளங்கி தவிர), உறையும் தன்மையுள்ள எண்ணெய் வகைகள், நெய், வெண்ணெய், பாலாடை கட்டி, பாலேடு, சர்க்கரை, வெல்லம், தேன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகள், தேங்காய், இளநீர், குளிர்பானங்கள், சத்துமாவு, பானங்கள், பூஸ்ட், ராகிமால்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஓவல்டின், உலர்ந்த பழ வகைகள், மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், சப்போட்டா, திராட்சை போன்ற இனிப்பு மிகுந்த பழங்கள், ஐஸ்கிரீம், பீட்ஸா போன்ற பேக்கரி தயாரிப்புகள், இனிப்பு சேர்த்த பிஸ்கட், ஜாம், ஜெல்லி, சாஸ், மது வகைகள், சிகரெட், இனிப்பு சேர்த்த காபி, டீ போன்ற பானங்கள் (சர்க்கரை இல்லாமல் காபி, டீ, பால் போன்றவற்றை ஒரு நாளைக்கு 3 வேளையாக மொத்தம் 500 மி.லி. அருந்தலாம்).

சாப்பிடக் கூடாதவற்றை விளக்கமாகச் சொன்னதற்குக் காரணம் அவற்றை ஒதுக்கிவிட்டால், மற்றவை சாப்பிடக் கூடியவை என்பதால்தான்!

ஆதாரம்:

எஸ். புனிதவல்லி எழுதிய

‘நீரிழிவு- நோய்-காரணம்-நிவாரணம்-உணவு முறைகள்-

நீரிழிவை வெல்ல முடியும்

tamil.thehindu.com

நீரிழிவு நோயைப் பொறுத்தவரை உணவுதான் அதற்கான சிகிச்சையில் பெரும்பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோய் மருத்…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE