#பெண்_ஒரு_மகாசக்தி…!!


எல்லா பெற்றோரும்.. தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில்.. கட்டிக் கொடுக்க வேண்டும் என்ன கனவு நியாயமான ஒன்று தான்..!!
அவளுடைய பெற்றோரும்… அப்படி தான்.. மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!
படித்த மாப்பிள்ளை.. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன்.. இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!!
இருவரும் தினமும் அலைபேசியில்.. பேசத் தொடங்கினர்..!!
திருமண நாள்.. நெருங்க,, நெருங்க.. அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!!
இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்…
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!! வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன்.. பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்க வில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப் போகிறோம்.. என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும்,, தாயையும் பார்த்தாள்.. எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!! விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள்.. கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில்.. நீர் துளி சொட்டியது..!!
அங்கே.. தங்கையின் புது துணி பரவசத்தில் "அக்கா"… என ஓடி வந்தாள்..!!
அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?"
என்றாள்..!!
பூ வாங்கினால் கூட.. சரிசமமாக.. வெட்ட சொல்லி சண்டை போடும் நான்.. இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு.. நான் செல்ல போகிறேனே.. என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள்.. அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??
அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!
அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!
அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து.. " அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!"" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன்.. நீ என் செல்லம் டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!
எச்சிலையும்,, சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு.. அம்மாவை அழைத்து விட்டு.. வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!
எங்கிருந்தோ குரல்.. "அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு.. வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!
எப்போதும் எதையாவது.. சொல்லிக் கொண்டிருக்கும்.. பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!
ஆனால் இப்போது முறைக்க தோனவில்லை.. முகம் அப்படியே அழுவது போல.. பொங்கியது.. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன்.. அதற்கு மேல் முடியவில்லை.. வீட்டிற்குள் ஓடி சென்று.. கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர்.. அவள் அம்மாவிடம் " அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன்.. உங்களை விட்டு நான் எப்படி செல்வேன்.. அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!
உடனே அப்பாவின் மனம் அழுதது.. அம்மா சமாதானம் செய்தாள்..!!
அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும்.. அப்பாவிற்கும்,, மகளுக்கும் உள்ள பாசம்.. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!
தங்கை குலுங்கி,, குலுங்கி அழுதாள்..
" அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாரு கா.."! என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு…
அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!!
ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம்.. போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ.. என்றெல்லாம்.. தெரியாது… ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும்.. அவள் செல்ல போகிறாள்.. என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!!
ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!
அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து.. வேரோடு பிடுங்கி எடுத்து.. மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா.. தான் பெண்ணின் திருமணம்..!!
அதில் துளிர்ந்த பெண்களும் உள்ளனர்…
பட்டுப் போன பெண்களும் உள்ளனர்..!!

#பெண்_ஒரு_மகாசக்தி…!!

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இறைவன் தப்புக் கணக்கு போடுவாரா?!


Facebook © 2016

News Feed

14 hrs

இறைவன் தப்புக் கணக்கு போடுவாரா?!

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.கோவிலைப் பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி.
அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார். கோவிலைவிட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத்தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது.தினமும்பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

இறைவன்இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…!
அவனுக்கு சோர்வாக இருக்காதா? என்று எண்ணியஅவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும்இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாகநான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக்கொள்கிறாயா?” என்று கள்ளம்கபடமில்லாமல் கேட்டான்.

இறைவன், எனக்கு நிற்பதில்
ஒன்றும் பிரச்னையில்லை! எனக்குப் பதிலாக
நாளை ஒரு நாள் நீ நில்! ஆனால், ஒரு முக்கிய
நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன்ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும்கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ கடவுள்சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என்மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது
என்று கூறினார். அதற்கு அந்தப் பணியாளும்
சம்மதித்தார்.

அடுத்த நாள், இறைவனைப்போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில்கருவறையில்நின்றார். இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்றுக்
கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத்
தொடங்கினார். முதலில் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும்என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரியதொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான்.
அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாகத்
தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான். இதைக்கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும்பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன்நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார்.
அப்படியே அசையாது நின்றார்.சிறிது நேரம்
கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம்உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது.அவன், என்னால் இது மட்டும் தான் உனக்கு தரமுடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா ! என்றும் போல,
என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என்
குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூடமிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடையப்
பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமேவிட்டுவிடுகிறேன்.
நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்
என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன்வேண்டினான்.சில வினாடிகள் கழித்துக் கண்களைத்திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்டபணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம்மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூடஇருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு
செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணிஅப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான். இறைவன்வேடத்தில் நின்று கொண்டிருந்த அந்தப் பணியாளரால்
தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை.
அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.சிறிது நேரம்கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்டதூரப் பயணமாக கப்பலில் அன்று அவன்செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெறவேண்டி வந்தான். இறைவனிடம்பிரார்த்தனை செய்தான்.அந்த நேரம் பார்த்து, பணப் பையைத்
தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக்கோவிலுக்கு வந்தான். அங்கு, கப்பல்
வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என்பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப்பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற,காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச்
செல்கிறார்கள்.“இறைவா என்
பணத்தை அபகரித்தவரை அடையாளம்
காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன்
இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார்.சிலையாக
நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி,
“கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவன்
தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்கமுடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை.தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்தஉண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே
செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய்,உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம்நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர். இரவு வருகிறது,
கோவில் வாசல் மூடப்படுகிறது.இறைவன் வருகிறார்,மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம்,
இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார்.“மிகவும் கடினமாக இருந்தது. உன்
வேலை எத்தனை கஷ்டம் என்பதைபுரிந்துகொண்டேன்.
ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….”
என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார். இறைவனோஇதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார். இறைவன்அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான்.
இறைவன்நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீஏன் நடந்துகொள்ளவில்லை…? என்ன நடந்தாலும்பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என்நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என்மீது நம்பிக்கை இல்லை.இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்?
செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில்சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ளசெல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக்காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான்பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளைத்தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால்அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த
ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என்
மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க
வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச்
சம்பவத்தில் கப்பல் வியாபாரியின் தவறு எதுவும்
இல்லை. இருந்தாலும் இன்றைக்கு அவன்
திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால் விபத்தைச்சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன்கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்.அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத்தற்காலிகமாகத் திருட்டுப் பட்டம் சுமக்கச்செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்தஏழைக்கு அந்த பணமுடிப்பு போய்சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாகஎண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்தசெல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்.அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்.இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம்
செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என்
எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து,உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும்பாழ்படுத்திவிட்டாய்.” என்றார்.

பணியாளன், இறைவனின்கால்களில் விழுந்து தன்தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். இப்போதுபுரிந்துகொள்! "நான் செய்யும் அனைத்திற்கும்ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும்மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின்நலம் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன்.
அவரவரது கர்மாவின் படி பலன்களைஅளிக்கிறேன்.நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க
மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றார்परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

BENEFITS OF COW GHEE


BENEFITS OF COW GHEE
According to Dr. Bhagyashree Zope of Santulan Ayurveda, fats are an integral aspect of our diet and traditional ghee is the best form of fat that your body can ask for. The only condition to making traditional ghee, she says, is that it must be made from fresh or pasteurised milk without resorting to shortcuts for this process (see box).
Apart from nourishing the eyes, hair and skin, the traditional ghee lubricates and cleanses the insides, including the intestines, tissues, joints and arteries. "This is because it doesn’t allow anything it comes in contact with to ‘stick’, thereby helping the organs in functioning smoothly," explains Dr Zope. Ghee also helps regulate digestion and promotes optimum metabolism. "In cases of blocked arteries, it helps remove the plaque deposited in arteries and facilitates its dissolution. It improves the ratio of HDL (good cholesterol) to LDL (bad cholesterol) and helps control triglycerides," says Dr Zope.
The traditional ghee, which is a more suitable cooking medium compared to oil due to the fact that ghee does not burn (smoke) easily, even helps reduce obesity. "If you take a tablespoon of ghee every night, followed by a few sips of hot water, it helps regulate bowel movements and improves digestion. Over time, this helps cut down body fat," she recommends.
That apart, Dr Zope advises her patients to take a minimum of four to five teaspoons of ghee a day. "In fact, heart patients should have about eight to 10 teaspoons of ghee every day if they want to increase their HDL and to bring down the LDL and triglycerides," she says.
Her patient Dr Manu Multani, 75-year-old former professor at the Tata Institute of Fundamental Research and a pioneer in nanomaterial science and technology, concurs. "I suffered from a massive heart attack in 1996 and my condition was deteriorating. Two years later, when cardiologists were giving up, I turned to ayurveda," he says. Along with the ayurvedic medicines, the doctors advised him ghee. The physicist says, "We completely stopped using cooking oil at home and switched to traditional ghee from the ayurveda centre."
Since 1998, Dr Multani has been pouring eight to 10 teaspoons of ghee over dal, rice, chapattis and cooked veggies daily. In the past 14 years, he claims he has consumed around 230 kgs of ghee. Even when the Versova resident travels abroad for his conferences, he carries his box of ghee along. And in all these years, the doctors haven’t seen his cholesterol levels shoot up, he says.
"In fact, I feel better than before. I can effortlessly climb two floors and walk for an hour without trouble. Besides, the devotion of my wife Ruby, it’s this ghee that has helped me remain hale and hearty," he smiles. Referring to the significance of ghee in Indian culture, Dr Multani says, "There’s a Sanskrit saying that says you must eat ghee even if you have to borrow money to buy it. There’s another adage in my mother-tongue Sindhi: Jeko kare na ma pi; so kare ghee (What your parents cannot manage for you, ghee does). In fact, before my heart problem, I would never touch ghee. Today, I consider it as nectar."
There are fats that kill and then there are those that heal. The traditional ghee, which your grandmother so lovingly churned and boiled at home, is clearly the latter.

indiatimes.com/…/34707300_1_gh…

No automatic alt text available.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தான தர்ம விஷயங்கள்


ஐந்தாம் வேதம் – பாகம் 2 J.K. SIVAN

தான தர்ம விஷயங்கள்

”பீஷ்ம பிதாமகரே , எந்த தானம் சிறந்தது. பிராமணர்களுக்கு திருப்தி அளிப்பது அவற்றில் எது? அதால் என்ன பயன் கிடைக்கும்?” என்று யுதிஷ்டிரன் கேட்டான்.

”யுதிஷ்டிரா. இந்த கேள்வியை நீ மட்டும் கேட்டாய் என்று நினைக்காதே. உனக்கு முன் நானே இதை நாரதரிடம் கேட்டிருக்கிறேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? கேள்:

”உணவு ஒன்றே அனைவரும் விரும்புவது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதார தேவை அது. அன்னதானத்துக்கு ஈடானது எதுவுமில்லை. உலகமே இயங்கும் சக்தி அதில் தான் உள்ளது. பித்ருக்களுக்கு ச்ராத்தம் என்பது கூட அவர்களுக்கு தேவையான உணவை வருஷத்துக்கு ஒருமுறையாவது பிண்டமாக அளிப்பதே. எள்ளும் நீரிலுமே மனமுவந்து அவர்கள் சந்ததியை வாழ்த்துகிறார்கள். இந்த ஒரு தானத்தில் தான் பெறுபவன் முழுதும் திருப்தி அடைய வழி உள்ளது. அவன் போதும் என்று சொல்வது இந்த ஒரு தானத்தை பெறும்போது மட்டும் தான்.

யுதிஷ்டிரா, ஒரு தரம் தேவகியும் நாரதரும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நாரதர் தானம் கொடுக்கும் சிறந்த காலங்களை விளக்கினார்.

1 கிருத்திகை அன்று நெய் பாயசம் தானம் செய்தவன் பரம சந்தோஷம் பெறுவான்.
2.ரோஹிணியில் அன்ன தானம் செய்தால் – கடன் தொல்லை தீரும்
3.மிருகசீரிஷத்தில் – கோ தானம் கன்றுக்குட்டியுடன் செய்பவன் விஷ்ணு லோகம் செல்கிறான்.
4.புனர்பூசத்தில் இனிப்பும் உணவும் தானமும் செய்பவன் சிறந்த புகழ், பெருமை, அழகை பெறுகிறான்.
5. பூசத்தில் தங்கம் ஒரு பொட்டாவது தானம் செய்பவன் தேக காந்தி பெறுகிறான்.
6. ஆயில்யத்தில் வெள்ளியில் நந்தி, (காளை உருவம்) தருபவன் பயத்திலிருந்து விடுபட்டு செல்வம் அவனிடம் சேர்கிறது.
7,மகத்தில் மண்பாத்திரத்தில் எள் தானம் செய்பவன் புத்ர சந்தான அபிவிருத்தி பெறுகிறான்.
8. உத்தரத்தில் பால் சாதம் வழங்குபவன் புண்யம் கூடுகிறது.,
9. ஹஸ்தத்தில் தானம் கொடுக்க நம்மால் முடியாது. யானை தானம் செய்ய சொல்கிறாரே .
10. சித்திரையில் வாசனை திரவியம் தானம் செய்பவன் கந்தர்வன் ஆகிறான்.
11.ஸ்வாதியில் காசு தானம் செய்பவன் இந்திரனோடு வாசம் செயகிறான்.
நாரதர் தேர் குதிரைகள் தானம் செய்ய சொல்வதைப் பற்றி நான் அதிகம் சொல்ல போவதில்லை.நம்மால் முடியாது.
12. அனுஷத்தில் வஸ்திர தானம் செய்பவன் ஸ்வர்கத்தில் நூறு யுகம் இருப்பானாம்.
13.மூலத்தில் பழங்கள், கிழங்குகள் கொடுப்பவன் பித்ருக்களின் ஆசியை பெறுகிறான்.
14 உத்தராடத்தில் பார்லி ஜலம் , நெய் ,கரும்புச்சாறு கொடுத்தவன் விண்ணுலகத்தில் வெள்ளைத் தேரில் ஏறி பயணம் செய்வானாம்.
15. ஆவணியில் போர்வை கொடுத்தவன் பசுக்கள் நிறைய பெறுவான்.

சில தான வசதிகள் எதிர்பார்ப்புகள் பற்றி மட்டுமே உதாரணமாக கொஞ்சம் மட்டுமே மேலே சொன்னேன். இன்னும் நிறைய இதுபோல் இருக்கிறது. நமக்கு கொடுக்க தான் ஒன்றும் கிடைக்கவில்லை. வெள்ளைத் ”தேரில்” தெருவில் போக முடியாது. போவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெள்ளைக் ”காரில்” (வெள்ளைக் காரன் மேல் இல்லை) ஏறிக்கொண்டு போக வேண்டுமானால் முடியலாம்.

”தானங்களை பற்றி சொல்லும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது சொல்கிறேன் கேள்” என்கிறார் பீஷ்மர்.

யமன் தன்னுடைய தூதனை கூப்பிட்டு ”கங்கை யமுனைக்கு இடையே ஒரு பிரதேசம் உள்ளது. அங்கே நிறைய ப்ராமணர்கள் வசிக்கிறார்கள். அங்கே அகஸ்தியர் வம்சத்தை சேர்ந்த சர்மின் என்ற வேதங்கள் கற்று உபதேசிக்கும் ரிஷி ஒருவர் இருக்கிறார். அவரைப் போலவே மற்றொருவரும் அதே கல்வி கேள்வி ஞானத்தோடு அருகே அதே ஊரில் வசிக்கிறார். ஆளை மாற்றி கொண்டு வந்துவிடாதே. சர்மினைக் கொண்டுவரும்போது மற்றவர்கள் போல் கயிற்றால் இழுத்துக் கொண்டு வந்து விடாதே. பவ்யமாக நமஸ்கரித்து மரியாதையோடு அழைத்து வா.அவரிடம் சில விஷயங்கள் கேட்டுவிட்டு அவரைத் திரும்ப கொண்டுவிட வேண்டும் ”

யமதூதன் எதிர்பார்த்தபடியே தவறாக மற்ற பிராமண ரிஷியை அழைத்துக் கொண்டுவந்து விட்டான். பிராமண ரிஷியை எழுந்து வணங்கி யமன் வரவேற்றான். தூதனை அழைத்தான். ”சொல்லி அனுப்பியும் தப்பாகவே செயகிறாயே. இவரை கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வா ” என்று சொன்னான்.

வந்த பிராமண ரிஷி யமனைப் பார்த்து ” யம தர்மா, எனக்கு பூலோகத்தில் வேதங்களை எல்லாம் கற்று மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் வேலை முடிந்து விட்டது. உன் கணக்குப் படி நான் இன்னும் எவ்வளவு காலம் பூமியில் இருக்கவேண்டுமோ அதை இங்கேயே கழித்து விடுகிறேனே” என்கிறார்

”ப்ராம்மணோத்தமரே, எனக்கு உங்களுக்கு எவ்வளவு காலம் அங்கே இருக்கவேண்டும் என்று தெரிந்து கொள்ள கட்டளை இல்லை. உங்கள் காலம் முடிந்த பிறகு மட்டுமே நான் அறிபவன். உங்கள் புண்ய பாப கர்மாக்களுக்கு தக்க வாறு இங்கே இடவசதி அளிப்பவன். ஆகவே உங்கள் காலம் முடிவுக்கு வரும் வரை இங்கே உங்களை அனுமதிக்க இயலாது. ஆகவே உங்களை இவன் திரும்பக் கொண்டு செல்வான். வேறு ஏதாவது கேட்கவேண்டுமானால் கேளுங்கள் ” என்றான் யமன்.

”எம தர்மா, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் மூன்று உலகிலும் உயர்வும் மேன்மையும் பெறுகிறான்?”

”எள் தானம் தான் சிறந்தது. அதனால் கிடைக்கும் மேன்மை மற்றதற்கில்லை. உயர்ந்தது. ஒவ்வொரு நாளும் எள் தானம் செய்பவன் நினைத்ததை எல்லாம் அடைவான். ஸ்ராத்தங்களில் எள்ளுக்கு மிகவும் பிரதானம். அதை தானமாக அதனால் தான் கொடுக்கிறார்கள். பிராமணர்களுக்கு எள் தானம் நிறைய கொடு. அவர்களை துளியாவது எள்ளை சாப்பிட வை. (ஸ்ராத்தங்களில் எள்ளுருண்டை அவசியம் இதனால் தான்!) விசாக பவுர்ணமி அன்று பிராமணர்களுக்கு எள் தானம் பண்ணுவது உயர்ந்தது. அதே போல் தண்ணீர், விளக்குகள் ஆகியவற்றையும் நிறைய தானம் பண்ண வேண்டும்.” என்றான் யமன்.

பண்டை காலத்தில் பிரபுக்கள், ராஜாக்கள் எல்லாம் நிறைய குளம் குட்டை, ஏரிகளை வெட்டி நீர் நிலைகளாக்கினார்கள். ஜல தானம் சுபிட்சத்தை தந்தது. ( நாம் அவற்றை தூர்த்து விட்டு விற்று காசு பண்ணுகிறோம். வீடு கட்டுகிறோம். வெள்ளத்தில் மூழ்குகிறோம் )

யம தூதன் அந்த பிராமணனை எங்கிருந்து கொண்டுவந்தானோ அங்கே விட்டுவிட்டு சர்மினை அழைத்து வருகிறான். சர்மினை வணங்கி யமன் அவனிடம் தனது சில சந்தேகங்களை நிவர்த்தி செய்துக்கொண்டு சர்மினையும் திரும்ப கொண்டு விடச்சொல்கிறான். சர்மினுக்கும் எள், தண்ணீர், விளக்கு தானங்கள் பற்றி எமன் விளக்குகிறான். சர்மின் மற்றும் அவனுக்கு பதில் தவறாக யமனை சந்தித்த பிராமண ரிஷி இருவருமே பூமிக்கு திரும்பியவுடன் நிறைய எள் , நீர், விளக்கு தானம் செய்ய எல்லோருக்கும் அறிவுரை வழங்கினார்கள்.

See Translation

Image may contain: 5 people , outdoor

LikeShow more re

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஸ்ரார்த்தம் செய்வது அஸ்வமேதயாகம் செய்வத ற்குறிய பலன் தரும்


ஸமீபத்திஉல் ஒரு ஸ்ரார்த்த்த்தில் வாத்யார் சொன்ன விஷயங்கள் ஸ்ரார்த்தம் செய்வது அஸ்வமேதயாகம் செய்வதற்குறிய பலன் தரும்.ஸ்ரத்தையுடன் செய்யவேண்டு. ஹோம்ம் செய்விக்கும் வேத விற்பன்னர் பொருள் தெரிந்தவராக இருக்கவேண்டும் 
அப்படி செய்ய்யும்போது கர்த்தா வேதம் அத்ய்யனம் செய்தவராக இல்லாத போதும் அவரே வேதம் படித்த பலன் பெறுகிறார
அதைத்தான் திருவத்யாயனம் என சொல்கிறோம்.
ஹோம்ம் யஞ்ஞம் செய்யும்போது அரக்கர்கள் வந்து அதைத்தடுப்பதுண்டு அவர்கள் சர்ப்ப வடிவமாகவும் வருவர்.
அதனால்தான் ஹோம குண்டம்(ஓள்பாசனக்கால்) சுத்தி ஒவ்வொரு திசையிலும் ஒரு சமித்தையும் இரண்டு தர்பங்களையும் கவசம் போல் அரணாக வைக்கிறோம்(தர்பையை சர்பங்கள் அண்டாது).
இரண்டு சமித்துக்களை நேராக வானத்தைப்பார்த்து கிழக்கு பகுதியில் வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு மூலையில் வைப்பதும் அவை ஈட்டிபோல் மேலிருந்து இறங்கும் அரக்கர்களை வரவிடாது.
பித்ருக்களுக்கு மூன்று விதங்களில் உணவை அளிக்கிறோம்.
1.அக்னி மூலம் சமைத்த அன்னம் மற்றும் வ்யஞ்சன்ங்களை கொண்டு சேர்க்கிறோம்.
அவற்றை இடும் இலைகளை தர்பத்தால் துடைப்பது சர்பங்களை நீக்கவே.அக்னி தன் நாக்கினால் அன்னத்தை ஸ்வாஹா செய்து பித்ருக்களுக்கு சேர்க்கிறார்.
அதில் மிஞ்சும் அன்னத்தை பித்ருவாக வரித்த ப்ராம்மணருக்கு அளித்து மீதியை பித்ரு சேஷம்(மிஞ்சிய பித்ருக்களின் அன்னம்) என வரிக்கிறோம்.
ஆனால் அக்னி த்ருப்த்தியடையவேமுடியாதவர்.எவவுளவு அன்னம் சேர்த்தாலும் முழுங்கிக்கொண்டிருப்பார்.
 ஆக பித்ருக்களுக்கு எவ்வுளவு த்ருப்தி ஆனது என தெரியாத்தால் மற்ற இருவழிகளிலும் உணவை சேர்க்கிறோம் அவை
2.ப்ராம்மணர்களுக்கு உணவளிப்பது அதில் ஒருவர் விஸ்வேதேவர் எனபவர் ஹோம்ம் நடக்கும் எல்லா இடங்களுக்கும் வருபவர் 
ஒருவர் விஷ்ணுவாக வரிக்கப்படுபவர் இன்னொறு நம் பித்ரு ரூபி.இவருக்கு அக்னியில் சேர்த்த அன்னத்தின் ஒருபகுதியை உணவில் சேர்த்து மீறும் பகுதி பித்ரு சேஷமாக வரிக்கிறோம்.
இவர்கள் உண்ணும் உணவால் நிஸ்சயம் த்ருப்தி அடைவர். 
ஆனால் மேலும் இவர்களிலும் யாரேனும் சரியான வழிமுறைகளைக்கடைப்பிடிக்கவில்லை எனில் அதனால் ஏற்படும் தோஷத்தால் பித்ரு த்ருப்தி அடையாமல் போனாலும் 
அதற்கு கீழ்க்காணும் முறையில் உணவு அளிக்கிறோம்
3.பிண்ட ப்ரதானம் அதில் 3 தலைமுறை பித்ருக்களுக்கு ஆண் மற்றும் பெண் வர்கத்தை அன்ன உருண்டையில் ஆவஹித்து 
ஆசனம் அர்க்யம் எல்லாம் சமர்ப்பித்து தில உதகம் தந்து தாகம் நீக்கி பின் ப்ரசாத்த்தை அம்சியப்பண்ணி அதையே பித்ரு சேஷமாக வரிக்கிறோம்.
ஆக பசியுடனும் தாகத்துடன் இருக்கும் பித்ருக்களுக்கு பசியாற உணவும் தாகம் நீங்க எள்ளுடன் சேர்ந்த நீரும் அளித்து த்ருப்தி செய்கிறோம் பி கு- மூதாதையர் வழிபாடு கிறுத்துவ மத்த்தில் ஆல் சோல்ஸ் டே என வழிபாடு செய்யபடுகிறது.ஆக எதுவுமே மூட நம்பிக்கை அல்ல.
நான் வாத்யார் சொன்னதைக்காதில் வாங்கிண்டு எழுதியது இதில் தவறு ஏதேனும் இருந்தால் அது என் காதின் குற்றம் தாங்கள் திருத்தலாம்

__._,_.___