கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .


vidhai2virutcham-விதை2விருட்சம்

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால். . .

நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை

View original post 52 more words

நோய்களும், நோய்தீர்க்கும் மூலிகைகளும்


vidhai2virutcham-விதை2விருட்சம்

மூலிகை:                  நோய்

1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச் சுருக்கு, தாது பலவீனம்

3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினி சம், இருமலில் ரத்த கசிவு

4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸி னோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

8. வல்லாரை: ஞாபக சக்தி அதி

View original post 240 more words

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)


vidhai2virutcham-விதை2விருட்சம்

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் 

View original post 187 more words

​நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்:


நவக்கிரகங்கள் …!!!

​​
நவக்கிரகங்களும் எளிய பரிகாரங்களும்:

சூரிய பகவான் :

பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடம் இருந்து பெற்று பித்ரு தேவதைகளின் மூலம் மறைந்த நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியபகவானாவார். தினமும் நீராடியவுடன் கிழக்கு திக்கை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் நீரில் நின்று சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு உகந்தது.

சந்திர பகவான் :

சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் உயர்கிறது. சுக்கிலபட்சம் என்ற வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறையில் மனிதனின் அறிவுத் திறமை குறைகிறது. (இதனால் தான் நல்ல காரியத்தை வளர்பிறையில் துவங்குகிறார்கள்) திங்கட்கிழமையில் உபவாசம் இருந்து ஏதாவது கோவில் ஒன்றில் மாலையில் தீபம் ஏற்றுவது சந்திரதோஷ பரிகாரமாகும்.

அங்காரகன் :

உறுதியான உள்ளம், பகைவரை கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை தருபவர் செவ்வாய் என்கின்ற அங்காரகன். பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்பர். ஆனால் இதை மட்டுமே வைத்து தோஷம் என்று கூறுவது தவறாகும். மற்ற கிரகங்களின் நிலையை ஆராய்ந்தே இதை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய் தோஷம் சிலருக்கு 60 வயதுக்கு மேல்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தீர ஆராய்ந்தே செவ்வாய் தோஷத்தை தீர்மானிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து, ஏதாவது கோவிலில் தீபம் ஏற்றுதல் எளிய பரிகாரமாகும்.

புதன் பகவான் :

வாக்கு வன்மை, பேச்சினாலே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப்புலமை தருவது புதனே. புதன் தோஷத்தால் கல்வித்தடை ஏற்படும். புதன்கிழமை உபவாசமிருந்து கோவில் ஒன்றில் தீபம் ஏற்றுவது, புதன்கிழமையில் ஏழைக் குழந்தைகளுக்கு ஆடை, புத்தகம், உணவு வழங்குவது எளிய பரிகாரமாகும்.

குரு பகவான் :

விவாகத்திற்கும், குழந்தை பாக்கியத்திற்கும் குரு பலன் அவசியம். வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் திருக்கோவில் ஒன்றில் நெய்தீபம் ஏற்றுவதாலும், வியாழன் அன்று பெரியவர்கள், துறவிகள், சாதுக்களை வணங்கி ஆசி பெறுதலும், குரு தோஷ பரிகாரமாகும்.

சுக்கிர பகவான் :

"சுக்கிரன் என்ற கிரகம் இல்லாவிடில் உலகமே காவி உடுக்கும்” வாழ்க்கை தரும் சுகங்களை அனுபவிப்பதற்கு, ரசிப்பு தன்மை – ரசிக்கும் மனோபாவம், கலையுள்ளம் வேண்டும். இதை அளிப்பவர் சுக்கிர பகவானே. சுக்கிரனின் தோஷத்தில் அகமிழந்து வேதனை அடைவோர் அரங்கனின்(ஸ்ரீரங்கம்)சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமை நீராடி, உபவாசம் இருந்து, ஏழை சுமங்கலிப் பெண்ணிற்கு ஆடை, ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வது எளிய பரிகாரமாகும்.

சனி பகவான் :

ஜாதகத்தில் சனிபலம் பெற்றிருந்தால் நீண்ட ஆயுளும், குறைவிலா செல்வமும் பெறுவார்கள். கொடிய விபத்திலும் ஆயுளை பாதுகாக்கும் சக்தி கொண்டவர் சனி. செய்த தவறுக்கு அந்த செயலாலே அழிவு ஏற்படுத்துபவர் சனிபகவான். வீட்டில் சனிக்கிழமை விரதமிருந்து மாலை தீபம் ஏற்றுவது, எள் கலந்த சாதம், ஏழை எளியவர்க்கு உணவு கொடுப்பது எளிய சனி தோஷப் பரிகாரமாகும்.

ராகு பகவான் :

தவறான காதலில் விழுந்து தங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளும் பெண்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அதில் ராகுவின் பங்குள்ளதை அறியலாம். இத்தகைய ஜாதகம் அமைந்த பெண்களுக்கு கூடிய வரையில் ராகுவின் ஆதிக்கம் வருவதற்குள் திருமணம் செய்துவிடுவது நல்லது. ஜாதகத்தில் புத்திரதோசம், சயன தோஷம், களத்திர தோசம், மாங்கல்ய தோசம், காலசர்ப்ப தோஷம் இருப்பவர்கள் ராகு பிரீதி செய்து கொள்வது அவசியமாகும். அருகில் உள்ள திருக்கோவில் ஒன்றில் கர்பகிரகத்தில் இடைவிடாது எரிந்து கொண்டுள்ள விளக்கில் முடிந்தபோதெல்லாம் நெய் சேர்த்து வருவது மிக எளிய பரிகாரமாகும்.

கேது பகவான் :

கேது இல்லையேல் சொர்க்கம் காலியாகும். கேது சுபமாயிருந்தால் ஆன்மீகத்தில் நாட்டமும் உலக பந்தபாசங்களில் குறைந்த நாட்டமும் ஏற்படும். பாப விமோசனத்தை அளிப்பவர் கேது. பிறவிப் பிணியறுப்பவர் கேது. கேது தோஷம் ஏற்பட்டால் சர்ம ரோகம், பில்லி சூன்ய துன்பங்கள், ஒழுக்கமற்ற பெண் சேர்க்கை ஏற்படும். காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள சித்ரகுப்தர் கோவிலில் 100 கிராம் நல்லெண்ணை தீபம் ஏற்றி மூன்று முறை வலம் வரவும்.

நவக்கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள்

சூரியன்

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தந்நோ ஸீர்ய ப்ரசோதயாத்

சந்திரன்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சோமப் ரசோதயாத்

செவ்வாய்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும ப்ரசோதயாத்

புதன்

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதஹ ப்ரசோதயாத்

குரு

ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்

சுக்கிரன்

ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ ப்ரசோதயாத்

சனி

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ ப்ரசோதயாத்

ராகு

ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது

ஓம் அம்வத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்

Sitaraman Rathinam's photo.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।



om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

குருபகவான் திருத்தலத்தின் சிறப்பம்சங்க ள்


ஆலங்குடி குரு பகவான்
தல வரலாறு,சிவ வழிபாடு,

குருபகவான் திருத்தலத்தின் சிறப்பம்சங்கள்
திருவாரூர் மாவட்டத்தில்
வலங்கைமான் வட்டத்தில்
நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்குவடக்கே7கி.மீ., தொலைவிலும்,
கும்பகோணம் மன்னார்குடி
(நீடாமங்கலம் வழி) பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ., தொலைவிலும் மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகார ஸ்தலமாகிய ஆலங்குடி
மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

ஆலங்குடி வரலாறு – குரு பகவான் தல வரலாறு:
பாற்க்கடல் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால்
ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. அத்துடன் இவ்வூருக்கு ஆலங்குடி என்ற பெயரும் ஏற்பட்டது.

சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி பிருஹஸ்பதி
அல்லது குரு பகவானை (வியாழன்) வழிபட மக்கள் தொலைவிலும் அருகிலும் இருந்து கூட்டமாக வருகின்றனர். எல்லா வருடமும் குருப் பெயர்ச்சியின் பொது துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபெற விக்ரஹத்திற்கு
மங்கள அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

முசுகந்தன் என்ற
சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன்
கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும். ஒருமுறை திருவாரூரை
ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு
எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

தல மூர்த்திகள்:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்,
காசி ஆரண்யேஸ்வரர்.
அருள்மிகு ஏலவார்குழலி அம்மை, உமையம்மை.
அருள்மிகு குரு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு கலங்காமற்
காத்த விநாயகர்.

ஆலங்குடி கோயில்மகிமைகள் :

ஆதிசங்கரர் குரு மூர்த்தியை தரிசித்து சிவஞானம் பெற்றார். இந்திரன்முதலிய அஸ்டதிக்கு பாலகர்கள்
இறைவனை வழிபட்டு தம் பெயரால்தீர்த்தமும்,
சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்க பேறு பெற்றார்கள்

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள்ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம்,
குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள்பெறுவர். வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குருஹோரை மற்றும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

குரு பகவானுக்கான நவக்ரஹ ஸ்தலமான ஆலங்குடிக்கு பக்கத்தில்
ஏனைய எட்டு நவக்கிரக ஸ்தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோயில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.

குரு பகவானுக்கு உகந்தவை:

ராசி : தனுசு, மீனம்
அதி தேவதை : வியாழன்
நிறம் : மஞ்சள்
தானியம் : கடலை
உலோகம் : தங்கம்
மலர் : முல்லை
ரத்தினம் : புஷ்பராகம்
ஸ்தல விருட்சம் : பூலைச்செடி

நன்றி
இனிய காலைவணக்கம்
வாழ்க வளமுடன் நலமுடன்

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।



om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE