ஸௌந்தர்ய லஹரீ… அழகு வெள்ளம்…..


ஸௌந்தர்ய லஹரீ… அழகு வெள்ளம்…..

பரம்ப்ரும்ம மஹிஷியான தேவியே ஸரஸ்வதியும்,
லக்ஷ்மியும், பார்வதியும். ஜீவன் முக்தி.

கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே பத்னீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரி தனயாம்|
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹா மாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரம்ஹ மஹிஷி ||

பரப்ரமத்துடன் இணைந்த பார்வதியே! நீயே ப்ரம்மாவின்
பத்னியான ஸரஸ்வதி யான வாக்தேவதை என்றும், ஹரியின்
பத்னியான லக்ஷ்மி யாகவும் , சிவனுடைய பத்னியான பார்வதியாகவும்
வேதத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கும் மேற்பட்ட அடைவதற்கும்
அறிதற்கும் முடியாத எல்லை இல்லாத மகிமை உடையவளாக மஹா மாயை
எனப்பட்டவளாக உலகனைத்தையு ஆட்டிப் படைக்கிறாய்.
இங்கே பரமாசார்யாள் துரீயா காபித்வம் என்பதற்கு சொல் விளக்கம்
அளித்துள்ளதையும் கூற விழைகிறேன்.உன்னுடைய மஹிமையை
மனத்தால் யோஜனை பண்ணக்கூட இயலாது. ஸ்ருஷ்டி, ஸ்திதி,
ஸம் ஹாரம் என்ற மூன்று நிலைக்கும் மும்மூர்த்திகளை உண்டு பண்ணி
இந்தக் காரியங்களுக்கெல்லாம் அதிதேவதையாக இருப்பவள் தேவிதான்.
ஏறக்குறைய தூக்கத்திற்கு அதிதேவதையான பார்வதிக்கும் நாந்காவதான
காமேச்வரிக்கும் ஒன்றாகவே சொல்கிறோம். இரண்டிற்கும் மிகப்பொருத்தம்
என்று விளக்குகிறார்.

பாத தீர்த்தம் ஊமையயும் பேசவைக்கும் திறனுடையது.
வாக் ஸித்தி.

கதாகாலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தி தவ சரண நிர்ணேஜன ஜலம்|
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா காரண தயா
கதா தத்தே வாணி முக கமல தாம்பூல ரஸதாம்||

லாக்ஷாரஸப் பூச்சுடன் வரும் உன் பாத தீர்த்தத்தை ப்ரம்ம
வித்தையை நாடும் னான் எந்த நாளில் பருகப் போகிறேன்?
தயை கூர்ந்து கூறி அருள் தாயே! இயற்கையாகவே ஊமைக்கும்
கவி பாடும் சக்தியை அருளும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில்
உள்ள தாம்பூல ரஸத்திற்கு ஒப்பான நிலையை எப்போது என் வாயில்
அந்தப் பாத தீர்த்தம் சேரப்போகிறது அம்மா!
ஸஹஸ்ராரத்தில் விளங்கும் தேவியின் சரண் கமலங்களிலிருந்து
பெருகும் அம்ருத தாரையை இவ்வாறு வர்ணிக்கிறார் சங்கரர்.

இவ்விடத்தில் ஒரு சம்பவத்தை பகிந்து கொள்ள நினைக்கிறேன்
விக்னேஷ் வெங்கட கோபால க்ருஷ்ணன் என்ற நம் காஞ்சி ஃபோரம்
அங்கத்தினற்கு ஒருஅனுபவம்தஞ்சை பங்காரு காமாக்ஷி கோவிலில் ஏற்பட்டது.
அவன் இந்த 98 வது ஸ்லோகத்தை பாரயணம் செய்யும் சமயம் திடீரென
வயதான ஸுவாஸினி ஒருவர் வந்து மாத்ருகா புஷ்பமாலா சொல்லும் வழக்கம்
உண்டா என வினவ அதற்கு எனக்கு அந்த ஸ்லோகம் தெரியாது என்று
பதிலளித்துள்ளான். அந்த மாது உடனே பழைய புத்தகம் ஒன்றை அருளி
படிக்குமறு பணித்திருக்கிறார். இவன் அவர்களை அம்மா உங்கள் பெயர்
என்ன என நான் அறியலாமா என வினவ நீ எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்
சம்மதம் என்ரு கூற இவனும் காமாக்ஷி என அழைத்திருக்கிறான்.
பின்பு அவர்களைக் காண இயலவில்லை. என் அனுமானம் அவள் காமாக்ஷிதான்
என்பது. ஏனெனில் அவன் கனவில் நிறைய தடவை காமாக்ஷி வந்து அருள்
பாலித்திருக்கிறாள். அதனைப் பற்றிய ஒரு பதிவு 6 மாதம் முன்பு நான்
செய்துள்ளேன். இக்காலத்திலும் படித்த பல இளைஞர்கள் பக்தி பரவசத்தில்
ஈடுபடுவதால் தான் நாட்டில் சிறிதேனு நல்ல மழை பொழிவதோடு ஸத்
கார்யங்களும் நிகழ்கின்றன.

தேவியின் பொற்பாத கமலம் சரணம் சரணம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a comment