“வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்”


"வாழ்ந்து கெட்டவருக்கு வாழ்வளித்த மகான்"

நன்றி-பால ஹனுமான்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திப்பிராஜபுரம். அழகிய இந்த கிராமத்தின் சிறப்பு- அக்ரஹாரம். வேத பாடசாலையும் அமைந்துள்ள இந்த கிராமத்தில், வேத விற்பன்னர்கள் மற்றும் சாஸ்திர பண்டிதர்கள் ஆகியோர் வாழ்ந்தனர்.
கட்டுக் குடுமியும் கழுத்தில் ருத்திராட்சமுமாக மாணவச் சிறுவர்கள் பலர் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடுவதே அத்தனை அழகு! அது மட்டுமா? அக்ரஹார வீட்டு வாசல்களில்… காலை- மாலை இரண்டு வேளையும் காவிக் கோலங்கள் நிறைந்திருக்கும். அக்ரஹாரப் பெண்கள், தீபமேற்றி ஸ்லோகங்களைப் பாடுவர். இதே போல் திருவிசநல்லூர், திருவிடைமருதூர், கோவிந்தபுரம் ஆகியவையும் அழகு தவழும் கிராமங்கள். காஞ்சி மகா பெரியவாள் இந்த கிராமங்களை பெரிதும் நேசித்தார்.

ஒருமுறை, திப்பிராஜபுரத்தில் முகாமிட்டிருந்தார் பெரியவாள். இந்த கிராமத்து மக்கள், மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தனர். ஒரு நாள்… ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ எனும் கோஷம் முழங்க, மேனாவில் (பல்லக்கு) வீதியுலா வந்தார் காஞ்சி பெரியவாள். வழிநெடுக வாழைமரமும் மாவிலைத் தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் தோறும் வாயிலில் கோலமிட்டு, தீபமேற்றி வைத்திருந்தனர்.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மேனா நின்றது. அந்தணர்கள் வேத மந்திரங்களை முழங்கினர்; பூர்ண கும்பத்தைத் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவாள். அனைவரும் அவரை நமஸ்கரித்தனர்.

மெள்ள நகர்ந்து கொண்டிருந்தது மேனா. இந்த நிலையில்… தனவந்தர் ஒருவர், தனது வீட்டில் பரபரப்பும் பதட்டமுமாக இருந்தார். ‘பெரியவாளை தரிசிக்க வேண்டும்’ என்று எண்ணி, பூர்ண கும்பத்துக்காக பெட்டிக்குள் வைத்திருந்த வெள்ளிச் சொம்பை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாலும் ‘ஊரே கூடியிருக்கும் இந்த வேளையில் வாசலுக்கு வந்து பெரியவாளை தரிசிக்க வேண்டுமா?’ என்று சிந்தித்தபடி தவித்து மருகினார்.

பதறிப் போன தனவந்தர், கையில் வைத்திருந்த வெள்ளிச் சொம்புடன், ஓடி வந்தார். பெரியவாளை நெருங்கி பவ்யமாக நின்றார். அவரின் கையிலிருந்த சொம்பை ‘வெடுக்’கென பிடுங்கினார் பெரியவாள்.அவரது வீட்டு வாசலின் முன் நின்றது மேனா. வீட்டுக்குள் இருந்து தயக்கத்துடன் எட்டிப் பார்த்த தனவந்தரைப் பார்த்து, ‘வா இங்கே…’ என்பது போல் சைகை காட்டினார் பெரியவாள்!

தனவந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘இந்த சொம்பை அலம்பவோ, தீர்த்தம் (தண்ணீர்) நிரப்பவோ இல்லையே…’ எனும் குற்ற உணர்ச்சியில் கூனிக் குறுகி தலை கவிழ்ந்து நின்றார் தனவந்தர்.

பல்லக்கில் வைத்திருந்த குங்குமப் பிரசாதத்தை ஒரு பிடி அள்ளி எடுத்த பெரியவாள், தனவந்தரின் வெறும் வெள்ளிச் சொம்பினுள் போட்டு, அவரிடம் வழங்கி, ”க்ஷேமமா இரு” என்று ஆசிர்வதித்தார்.

உடனே பெரியவாளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார் தனவந்தர். அவரால் பேசவே முடியவில்லை. பொலபொலவென கண்ணில் நீர் பெருகிற்று. சில நிமிடங்களுக்குப் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தனவந்தர், ‘குரு மகா தெய்வமே…’ என்று பேச முற்பட்டார். ஆனால், மெல்லிய புன்னகையுடன், ‘போகலாம்’ என்பது போல் சைகை காட்டினார் மகா பெரியவாள். மேனா நகர்ந்தது.

ஊர் மக்களுக்கு ஆச்சரியம்! ‘அட… பக்தி சிரத்தையுடன் எல்லோரும் பூரணகும்பம் அளித்தபோது, அவற்றைத் தொட்டு மட்டுமே ஆசீர்வதித்த பெரியவாள், இந்த தனவந்தருக்கு மட்டும் குங்குமம் கொடுத்து ஆசீர்வதிக்கிறாரே? பரவாயில்லை… தனவந்தர் அதிர்ஷ்டசாலிதான்’ என்று பேசிக் கொண்டனர்.

உண்மைதான்! சீரும் சிறப்புமாக வாழ்ந்த தனவந்தர், சமீபத்தில் நொடித்துப் போய் விட… இதையடுத்து வெளியே வருவதும் இல்லை; எவரையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். அவமானத்தால் வீட்டிலேயே அடை பட்டுக் கிடந்தார். அதனால்தான் பெரியவாள் வீதியுலா வந்தபோதும் வெளியே வர தயங்கினார் தனவந்தர்.

இதை உணராமலா இருப்பார் பெரியவாள்? அந்த தனவந்தர் வாழ்ந்து கெட்டவர் என்பதை அறிந்தவர், வீதியுலாவின் போது அவரை அழைத்து, அவர் கையில் இருந்த சொம்பில் குங்குமத்தையும் வழங்கி அருள் புரிந்தார்.

சில மாதங்களில்… தனவந்தரின் குடும்பம் மெள்ள முன்னேறியது. படிப்படியாக செல்வம் சேர… மீண்டும் தழைத்தோங்கியது தனவந்தரின் குடும்பம். பழைய நிலையை விட இன்னும் பல படி முன்னேறினார்!

இதையறிந்த திப்பிராஜபுரம் மக்களுக்கு பெரியவாள் மீது இருந்த பக்தியும் அன்பும் பல மடங்கு அதிகரித்தது



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Face Up To Your Weaknesses


Face Up To Your Weaknesses

The Wagah border closing ‘lowering of the flags’ ceremony or The Beating Retreat ceremony is a daily military practice that the security forces of India (Border Security Force) and Pakistan (Pakistan Rangers) have jointly followed …

For every weakness, every shortcoming in you,
you have an opposing strength. Never run from your weaknesses.

Be a warrior and face them with strength.

Mold like Gold

We find ourselves getting very easily influenced with the negativity
outside.

Every incident and interaction has an impact on us, specially
the negative ones.

To get influenced is to take in lot of impurity
from outside.

This is like mixing alloy in gold and when we are
coloured with the negativity within, we are not able to get molded
easily.

We need to keep ourselves free from the negativity that comes
from situations and people.

For this we need to develop our own inner
positivity.

It is like building a strong defense system from inside to
protect a fort from being attacked.

When we are able to maintain our
own inner purity and positivity, we find ourselves becoming moldable.

DR.BK.SATYANARAYAN



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

மூட்டுக்களை முடக்கும் ஆம வாதம் – ஆயுர்வே தத்தில் தீர்வு உண்டு!


மூட்டுக்களை முடக்கும் ஆம வாதம் –

ஆயுர்வேதத்தில் தீர்வு உண்டு!

மூட்டுக்களில் தீவிரவலி மூட்டுக் களை அசைப்பது பெரும் பிரயத்தன மாகும்.

சிகிச்சை செய்யாவிட்டால் பாதிப்பு நிரந்தரமாகி விடும். மூட்டுக்கள் விறைத்து விடும்.

ஜுரம், வலியுடன், பாதிக்கப்பட்ட பகு திகள் விறைத்து விடும். அதுவும் அதிகாலையில் அதிகமிருக்கு ம்.

விரல்கள், மணிக்கட்டு, முழங்கை, முட்டி, கணுக்கால் – இவை பெரும் பாலும் பாதிக்கப்படும் உறுப்புகள்.

பொதுவான ஆயுர்வேத சிகிச்சை

இலகுவான உணவு, புலால், குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் போன்ற குளிர் ச்சி உணவுகள், மைதாவில் செய்யப் பட்ட உணவு, சீஸ், நார் ச்சத்து குறை ந்த உணவுகள் – இவற்றை தவிர்க்க வேண்டும்.

தயிர், மீன், வெல்லம், பால், உ.பருப்பு, அரிசிமாவு இவற்றையும்
குறை க்கவும்.

ஸ்வேதனா – (ஒத்தடம்), கசப்பான, கடுமையான உணவு, கழிவுப் பொருள்களை அகற்றுதல், தைல சிகிச்சை, வஸ்தி (எனிமா)

உள்ளுக்கு ஆயுர்வேத மருந்துகள்

ரஸ்நாதஷமூலா கஷாயம்
ரஸ்னபஞ்சகா
சுண்டி – கோக்சூரக்ஷ்யா
வைஸ்வாரை சூரணம்
யோக ராஜ குக்குலு
சிம்ஹநாத குக்குலு
ஸைந்தவாடி தைலம் (வஸ்தி சிகிச்சைக்கு)
க்ஷ£ர வஸ்தி (வஸ்தி சிகிச்சை க்கு)
வெளி சிகிச்சைக்கு
மணல் நிரம்பிய முடிச்சால் ஒத்தடம்
நீராவி குளியல், பாதிக்கப்பட்ட இடத்தின் மீது நீராவி செலுத்தல்

வாத – ரக்தா (Gout)

ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமா னால், மூட்டுக்களில் தேங்கி அழற்ச் சியை உண்டாக்கி வலி அதிகமிருக் கும்.

முதலில் சிறு மூட்டுகளில் வலி ஏற்படும். எரிச்சல், நிறம் மாறுதல் ஏற்படும்.

வாத சீர் குலைவினால், மூட்டுகளில் ரத்தம் தேங்கிவிடுவது காரணம் என்கிறது ஆயுர்வேதம்.

சிகிச்சை உள்ளுக்கு

குடூச்சிஸ்தவா, குக்குலு சேர்ந்த குடூச்சிஸ்தவா, கைசோரா குக்குலு.

வெளிப்பூச்சிக்கு –

பிண்ட தைலம்.
சந்தி – வாதா (Osteoarthritis)
பரவலாக காணப்படும் மூட்டுவியாதி. மூட்டின் குருத்தெலும்பு கள், மூட்டுகளின் முடிவில் உள்ள மிருதுவான வழவழப்பான லை னிங் இவற்றை பாதித்து மூட் டின் வடிவத்தையே மாற்று ம்.

மூட்டில் திரவம் சேர்ந்து, சுற்றியுள்ள தசை கள், தசை நாண்கள் எல்லாமே பழுத டைந்து வலியை உண்டாக் கும்.

சந்தி வாதத்தில் மூட்டுக்கள் உராய்வதால் நடக்கும் போது வலி ஏற்படும்.

உள் சிகிச்சை
பாலாதி தைலம்
மஹாவல தைலம்
அஸ்வகந்தாக்ய க்ருதம்
வெளி சிகிச்சை
கோலகுலத்தாடி லேபம்
பற்று போடுதல், தைல சிகிச்சை, மசாஜ், கட்டுதல் முதலியன
லகுவான உடல் பயிற்சி, நீச்சல்,
சத்தான உணவு (பால் முதலிய) வைகளை உட்கொள்ள வேண் டும்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அப்படீங்களா!


அப்படீங்களா!

சைக்கிளில் போகும்போது மழை வந்துவிட்டால் என்ன செய்வது? சைக்கிளை நிறுத்திவிட்டு மழையில் நனையாமல் எங்காவது ஒதுங்க வேண்டியதுதான் என்று சொல்வீர்கள்.

ஆனால் மழை பெய்தாலும் நனையாமல் சைக்கிளில் செல்ல ஒரு குடையை சைக்கிளுடன் இணைத்துவிட்டால்? டச்சு நிறுவனம் ஒன்று இந்த சைக்கிள் குடையை வடிவமைத்திருக்கிறது.

"நம்ம ஊரில் அடிக்கும் காற்றில் குடையைப் பிடித்துக் கொண்டு நடக்கவே முடியவில்லை. அதுவும் இப்போது வரும் குடைகள் எல்லாம் காற்றின் வேகத்தில் வானத்தைப் பார்த்து விரிந்துவிடுகின்றன. குடையை மாட்டிக் கொண்டு சைக்கிளை முதலில் ஓட்ட முடியுமா? குடை பிய்ந்து போகாதா?’ என்றெல்லாம் கேள்விகளை அடுக்குகிறீர்களா?

சைக்கிளில் இணைத்துக் கொள்ளக் கூடிய இந்தக் குடை, மணிக்கு 113 கி.மீ. வேகத்தில் காற்றடித்தாலும் தாங்குமாம்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

धन छोड़ा पर धर्म न छोड़ा…..


10613126_1495552010693350_3804638883685911110_n.jpg?oh=d486a2c82b01e083d9b3bffa02897956&oe=548A3F7C&__gda__=1417866053_51c254cc2b19d650c0dff508b7226ae1

धन छोड़ा पर धर्म न छोड़ा…..

बंगाल के माल्दा जिले के केन्दूरपुर नामक गाँव में एक नुमाई नाम का बालक था जो बाद में एक अच्छे स्वयंसेवक के रूप में प्रसिद्ध हुआ। उसे बचपन में एक बार जोरदार बुखार आ गया और पैर में चोट लग गयी। अनेकों छोटे-मोटे इलाज करने पर बुखार तो मिट गया, किंतु घाव मिटने का नाम नहीं ले रहा था।

आखिरकार थककर किसी की सलाह से उसे बड़े अस्पताल में भर्ती कर दिया गया। वह अस्पताल ईसाई मिशनरी का था, अतः वहाँ उसके घाव को भरने के साथ-साथ नुमाई में ईसाइयत के संस्कार भरने का भी प्रयास किया जाने लगा। छोटे-से घाव को भरने के लिए उसे 5-6 महीने तक अस्पताल में रखा ताकि धीरे-धीरे उसका हृदय ईसाइयत के संस्कारों से भर जाये।

लेकिन वह बालक नुमाई अपने धर्म पर अडिग रहा और बोलाः "मैं हिन्दू हूँ और हिन्दू ही रहूँगा। तुम्हारे चक्कर में आकर मैं ईसाई बनने वाला नहीं हूँ।"

अंतिम प्रयास करते हुए ईसाई मिशनरीवालों ने उसके गरीब पिता से कहाः "इसके घाव भरने में 6 हजार रूपये खर्च हो गये हैं। तुम अपने लड़के से कह दो कि वह ईसाइयत स्वीकार कर ले। अगर वह ईसाइयत स्वीकार कर लेगा तो 6 हजार रुपये माफ हो जायेंगे, नहीं तो तुम्हें वे रुपये भरने पड़ेंगे जबकि तुम तो गरीब हो। तुम्हारे पास केवल 12 बीघा जमीन है। (उस समय एक बीघा जमीन की कीमत एक हजार रुपये थी।) या तो तुम 6 बीघा जमीन दे दो जो कि तुम्हारा भरण-पोषण का एक मात्र आधार है या नुमाई को ईसाइयत स्वीकार करने के लिए राजी कर लो।"

तब पिता बोलाः "मैं धन का गरीब हूँ लेकिन धर्म का नहीं। धर्म बेचने के लिए नहीं होता। मैं 6 बीघा जमीन बेचकर भी 6 हजार रुपये तुम्हें दे दूँगा।"

उस गरीब पिता ने 6 बीघा जमीन बेचकर रुपये दे दिये, किंतु धर्म नहीं बेचा। उस बालक ने हिन्दू रहकर ही अपना पूरा जीवन ईश्वर के रास्ते लगा दिया। कितनी निष्ठा है स्वधर्म में !
कभी भी अपने धर्म का त्याग नहीं करना चाहिए वरन् अपने ही धर्म में अडिग रहकर, अपने धर्म का पालन करते हुए अपने धर्म और अपनी संस्कृति के गौरव की रक्षा करनी चाहिए। इसी में हमारा कल्याण है।



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ரசம் என்னும் சூப்பர் திரவம்


ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல் { சமையலறை }

நண்பர்களே

உங்கள் தாய் , துணைவி சமைக்கும் ரசத்தை விரும்பாதவரா நீங்கள் ?

அப்ப இதை உடனே படிங்க!

சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்க …

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும்.

இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

பாலா நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote)
தான் இந்த ரசம்.

வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.

இது, ரசத்தின் மறுவடிவமே.

ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது.

வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது.

மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன.

ஆண்மை அதிகரிக்கிறது.

அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது.

புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.

உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன.

கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன.

மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.

வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது.

கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது.

தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன.

ஆண்மைக்குறைவையும் போக்குகிறது.

மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.

ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம்.

வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

….


परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை


ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்.
1. மாருதி மஹிமை
…..ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை
……புலன்களை வென்றவர் இவர்: ‘ஜிதேந்த்ரியர்’- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.
…..அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள ‘புத்திமதாம் வரிஷ்ட’ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே ‘ஸ்டெடி’யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி ‘புத்திமதாம் வரிஷ்ட’ராயிருக்கிறார்.
1. அஞ்ஜனைச் செல்வன் ‘அஜாட்யம்’ அருளட்டும்
….. ‘அரோகதா’ என்றால் ஆரோக்யம். அதுவும் ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பனுக்கு உண்டாகிறது. அப்புறம், ஆஞ்ஜநேய ஸ்வாமியை ஸ்மரிப்பவனுக்கு உண்டாகிறது. அப்புறம், ‘அஜாட்யம்’ என்று ஒன்று போட்டிருக்கிறது. அதற்கு ‘ஜடமாக இல்லாத தன்மை’ என்று அர்த்தம்.
….. ஆனால் எட்டாவதாக இன்னொன்று, ‘அஜாட்யம்’ என்று சொல்லியிருக்கிறதே… ச்லோகத்தின் வரிசையில் இது எட்டாவது இல்லை; ஏழாவதாக வருகிறது.
….. ‘அஜாட்யம்’ – ஜடமாயில்லாமலிருப்பது என்றால் என்ன அர்த்தம்?
2. ராமகுருவின் சிஷ்ய ஹநுமார்
துளஸீதாஸ் ஏதோ கல்பனையில் எழுதினாரென்றில்லாமல் ப்ரத்யக்ஷத்திலேயே ஆஞ்ஜநேய ஸ்வாமியின் பரமாநுக்ரஹத்துக்குப் பாத்திரமானவர். அவருடைய ஜீவ்ய சரித்ரத்தைப் பார்த்தால் அதில் ஆஞ்ஜநேயரோடு அவர் நேர்முகமாகவே எவ்வளவு நெருக்கமாகப் பழகியிருக்கிறாரென்று தெரியும். அவரையே ஆஞ்ஜநேய அம்சமாகச் சொல்வதுண்டு. ஆஞ்ஜநேயர் மாதரியே அவரும் மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்தான்…..ஆகையினால் ஒருவர் ஞானம் பெற்றாரென்றால் அடுத்த கேள்வியாக வருவது, அவர் யாரிடம் ச்ரவணம் செய்தார். அதாவது அவருக்கு ஞானோபதேசம் செய்த குரு யார் என்பதுதான்…….ஞானி ஆஞ்ஜநேயருக்கு உபதேசம் செய்த ஞானாசார்யார் யார்?….ஆஞ்ஜநேயர் எப்போது ஞானோபதேசம் பெற்றாரென்றால், ராமாயணக் கதை முக்காலே மூணு வீசம் முடிந்து, ராம பட்டாபிஷேகமும் ஆன அப்புறந்தான். அதாவது அவர் ஸூர்யனிடம் உபதேசம் பெற்றுக் கொண்ட பாலப் பிராயத்திலிருந்து எத்தனையோ வருஷம் பின் தள்ளித்தான்.



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள் எச ். சீதாலட்சுமி


இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்

எச். சீதாலட்சுமி

கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.

* முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

* ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

* ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும்.

* பாதாம் எண்ணெய்யில் விட்டமின் "இ’ உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.

* தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதயநோய் வராமல் நம்மை காப்பாற்றும்.

* ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்"சி’ கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.

* சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம் வலுப்பெறும்.

* உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

மைதாவா யோசியுங்கள்!

ஏ.எஸ்.பிலால், மண்ணடி

நாம் உணவில் பயன்படுத்தும் மைதா மாவில் அதன் வெண்மை தன்மையைக் கூட்ட (BENZOYL PEROXIDE) பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இது தலைமுடியை கருமையாக்க பயன்படும் (DYE)யில் பயன்படுகிறது. அத்துடன் நீரிழிவு நோயினை அதிகப்படுத்தும் அப்ப்ர்ஷ்ஹய் எனும் ரசாயனம் வேறு கலக்கப்படுகிறது. அத்துடன் அசோடி கார்போனாமைட், குளோரின் வாயுக்கள் அடங்கும்.

மைதா உணவை உண்ணும்போது சர்க்கரையின் அளவு உடனே ஏறும், மைதா உணவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நூடுல்ஸ், பீட்சா, பிரெட், கேக், சமோசா, பாஸ்தா, கச்சோரி ஆகியவை நல வாழ்விற்கு வேட்டு வைத்துவிடும்.

பவடஉ-2 நீரிழிவு நோயை அதிகப்படுத்துவதில் அரக்கன் மைதா.

ஒரு கிராம் கார்பொஹைட்ரேட்டில் 9 கலோரி சக்தி உள்ளது. பரோட்டாவில் முழுவதும் கார்போஹைட்ரேட்ஸ் மட்டுமே உள்ளது. மைதா விலை குறைவுதான். ஆனால் அது வருங்காலத்தில் மருத்துவமனைக்கு வைக்கும் செலவோ அதிகம்



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

आज सच जानने के लिए किसी को फुर्सत नही | सीधे सादे लोगो को खूब उल्लू बनाया गया,


खुल गया – भेद – मुर्गी – पहले – आई थी,तब कोई भी कुछ नही "जानता" था,आज सच जानने के लिए किसी को फुर्सत नही |सीधे सादे लोगो को खूब उल्लू बनाया गया,आज भी बहुत से लोग – बुद्धि जीवी – बने घूम रहे है,लोगो को समझा रहे है – "अंडा" – पहले आया था |६७ साल से इस देश की प्रजा पर लादा गया "राजतंत्र" इस देश की प्रजा के लिए एक "भययुक्त रचना" के स्वरूप में बदलता जा रहा है ।उस की "उत्पत्ति अन्याय" की "आधारशीला" पर की गयी है ।"स्थानीय प्रजा" के हितों का नाश, तथा आंतरराष्ट्रिय "श्वेत प्रजा" के हितों को बढाने की दिशा में यह देश हिरन की तरह कुलांचे मारने लगा है ।’विकास’ शब्द का सही अर्थ छूपा के रख्खा है । "विकास" के नाम प्रजा को "निचोड़ा" जाता है, लेकिन ‘विकास’ का अर्थ, ‘किस के लिए विकास’ उस बात को परदे के पिछे छुपा लिया जाता है । इस देश की प्रजा पर जीतना जुल्म चंगीजखान, नादिरशाह या मुगलों ने नही किया उस से अनेक गुना जुल्म अंग्रेजों ने किया है । और अंग्रेजों के जुल्म से बढ कर जुल्म उन के बैठाए प्यादों ने किया है । उस के फल स्वरूप इ.स २०४० तक युरोपियन युनियन प्रजा का संपूर्ण स्वराज इस देश में स्थापित हो जाए तो आश्चर्य नही होना चाहीए ।गिने चुने अंग्रेजी पढे आदमी द्वारा खेती के बारे में नीतियां बनाइ जाए और देश के तमाम किसानों पर लागू करे, जैसे पशु संवर्धन विषयक नीति गिने चुने लोग द्वारा लादी जाए,बिलकुल ऐसे ही "गिने चुने" लोग इकठ्ठे हुए और नया "संविधान" बना कर देश की प्रजा के माथे पर ठोक दिया है । इस देश की संस्कृति के विरुध्ध, रीति रिवाजों के विरुध्ध, जीवन के उद्देश के विरुध्ध "संविधान" बनाने का "अधिकार" उन "अंग्रेजी पढे लिखों" को किसने दिया था ? कब दिया था ?देश का चुनाव तो — १९५२ में हुआ था, तो फिर १९४६ में – "संविधान सभा" को "नया संविधान" बनाने की "सत्ता" कैसे प्राप्त हो गयी ?अगर "संविधान सभा" का पूरा गठन ही "अन्याय" पर "आधारित" था तो फिर उस के द्वारा निर्मित संविधान भी अन्याय की आधार शिला पर नही है ? तो फिर संविधान के आधार से बनी पार्लामेन्ट और उस में पास हुए कानून में न्याय का तत्व कहां से होगा ?जब ये सवाल श्री मिनु मसानी को पूछा गया उन्हों ने इस भावार्थ में जवाब दिया । " I do not know anything about the legality of the Conrtituent Assembly, and in this connection you may refer to Mr. Seshagiri Rao at Bangalore.संविधान के प्रीएसेम्बल में लिखा है "We, the people…", ‘We’ यानी ये कोन लोग थे ?संविधान की रचना कर ने वाले २००-५०० आदमी "We, the people…" नही बन जाते । सब कुछ बमा बम चलाया है ! श्री नानी पालखीवाला से लेकर श्री सोली सोराबजी तक के महानुभावों ने इस प्रश्न का स्पर्श किया होगा या नही ? या उस का सही जवाब उन के पास होगा कि नही ?संविधान की कलमों को बारीकी से अभ्यास करोगे तो स्पष्ट दिखाई देगा कि उस में न्याय अंश से अधिक अन्याय के तत्व ज्यादा जुडे हुए है । संविधान सभा को संविधान इस देश की प्रजा के सर्वांगिय विकास के लिए बनाना था या युरोपियन प्रजा के हितों को इस देश में विकास के लिए संविधान बनाना था ?इस देश के ऋषि मुनियों के बनाये संविधान के विरुध्ध जा कर, नये संविधान में राज्यों को नही करने के कार्य राज्यों को क्यों सौंपे गये हैं ?व्यापार करने का काम राज्य का नही है, खेती करने का काम राज्य का नही है, पशुपालन का काम राज्य का नही है; फिर भी इन सभी कार्य में राज्य की दखल के कारण किसानों के, व्यापारियों के, पशुपालकों के धंधे बरबाद कर उस के साथ जुडे हजारों साल पूराने और सिध्ध हुए खेती विज्ञान, पशु विज्ञान और व्यापार कला को तोड मरोड दिया है ।संविधान की एक एक कलम (दफा) अन्याय के आधार पर रची गयी है । लोर्ड वेवेल, पॅथिक लोरेन्स, लोर्ड माउन्टबेटन, स्टेफर्ड क्रिप्रा के हाथ की कठपूतली बन कर देश के अंग्रेजी पढे लोगों ने इस देश की प्रजा पर काला कहर मचाया है, उन के समग्र जीवन को नोच डाला है ।स्वराज के सुन्दर नाम के नीचे प्रजा जीवन के तमाम पहलु को पराधिन बनाने का भोंडा नाटक -जो आंतरराष्ट्रिय रेकेट चल रहा है, उस का भांडा फोडने का कोइ उपाय सूझता है ? प्रजा को पराधिन बनती रोकने का कोइ उपाय सूझता है ?नकली स्वराज्य पाने के लिए जो प्रयास करने पडे थे उस से कहीं अधिक प्रयास सच्चा स्वराज प्राप्त करने के लिए करने होंगे । शोरगुल और कोहराम के नीचे दबा दिए सत्य की तरफ विद्वानों का ध्यान खिंचना पडेगा ।

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இன்றைய ராசி பலன் (2014.09.14)


இன்றைய ராசி பலன் (2014.09.14)

Posted On 14 Sep, 2014



மேஷம்
கவலைகள் தீரக் கந்தப் பெருமானை வழிபட வேண்டிய நாள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பண வரவு திருப்தி தரும்.

ரிஷபம்
கார்த்திகேயனை வழிபட்டு கவலைகளை போக்கிக் கொள்ள வேண்டிய நாள். கொடுக்கல் & வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள்.

மிதுனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அரசு வழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

கடகம்
நல்ல வாய்ப்புகள் நாடிவரும் நாள். பொது நல ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். தனலாபத்தால் சந்தோஷம் கிடைக்கும்.

சிம்மம்
எடுத்த காரியங்களிலெல்லாம் இனிதே வெற்றி காணும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.

கன்னி
ஆறுமுகப் பெருமான் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். பிரியமான சிலரிடம் யோசித்துப் பேசும் சூழ்நிலை உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவொன்று வந்து சேரும்.

துலாம்
யோசித்து செயல்வபடுவதன் மூலம் யோகங்களை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.

விருச்சகம்
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபடவேண்டிய நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிட்டும். பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். பயணம் பலன் தரும் விதத்தில் அமையும்.

தனுசு
சண்டை சச்சரவுகளை சாமர்த்தியமாகச் சமாளிக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ளும் எண்ணம் உருவாகும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

மகரம்
பிள்ளைகளின் பிரியம் கூடும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் உருவாகும். உத்தியோக அனுகூலம் உண்டு. வீடு கட்டும் பணிக்கு வித்திடுவீர்கள்.

கும்பம்
செயலில் வேகம் அதிகரிக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

மீனம்
மயில் வாகனனை வழிபட்டு மகிழ்ச்சி காண வேண்டிய நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

zodiac



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE