வேதங்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள்!


vidhai2virutcham-விதை2விருட்சம்

கல்வி கற்க, மாணவனை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வது உபநயனம் என்று பார்த்தோம். கல்வி தந்து அறியாமையை அகற்றுப வர், குரு. ‘கு’ என்றால் அந் த காரம். இருட்டு. அறியா மை என்கிற இருட்டு. ‘ரு’ என்றால் அதை அகற்றுபவ ர். அறியாமை என்கிற இருளில் இருந்து வெளி ச்சத்துக்குக் கொண்டு வருபவர். ‘தமஸோமா ஜ்யோதிகமய’ என்கிற

View original post 776 more words

வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரிய ம்.


வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.

உணவைச் சவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.

உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.

இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.

சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?

அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.

அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.

நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஷேவிங் செய்யும் போது ஏற்படும் காயங்களை க ுணமாக்க சில எளிய வழி


தினமும் முகத்தில் ஷேவிங் செய்வதால், கவனமின்மையால் சில நேரங்களில் காயங்களை சந்திக்கின்றனர். இவ்வாறு ஏற்பட்ட காயங்களுக்கு எவ்வளவு தான் ஆன்டி-செப்டிக் லோசன் தடவினாலும், காயங்கள் குணமாவதில்லை.
ஆகவே அவ்வாறு ஷேவிங் செய்யும் போது ஏற்படும் காயங்களை குணமாக்க சில எளிய வழிகளைக் கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை மேற்கொண்டு காயங்களை குணமாக்குங்கள்.

குளிர்ந்த ஷேவிங் செய்த பின்னர், :-
முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். இதனால் ஷேவிங் செய்த பின்னர் ஏற்படும் எரிச்சல் மற்றும் காயங்களினால் ஏற்படும் வலி போன்றவற்றை உடனே தடுக்கலாம். குறிப்பாக எக்காரணம் கொண்டும் சூடான நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டாம். இல்லாவிட்டால், காயம் இன்னும் பெரிதாகிவிடும்.

கற்றாழை ஜெல்:-
ஷேவிங் செய்த பின்னர் கற்றாழை ஜெல் கொண்டு, மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் எரிச்சல், அரிப்பு, காயம் போன்றவை சரியாகும்.

ஐஸ் கட்டிகள் :-
முகத்தை ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்தாலும், ரேசர் மூலம் ஏற்பட்ட காயத்தினால் ஏற்படும் வலியில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்.

விட்ச் ஹாசில் :-
விட்ச் ஹாசில் என்னும் மூலிகையை, நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, அதனை வெட்டுக்காயம் ஏற்பட்ட இடத்தில் வைத்தால், காயம் சீக்கிரம் குணமாகும்.

ஆப்பிள் சீடர் :-
வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அந்த கலவையை ஷேவிங் செய்த பின்னர் தடவினால், காயத்தினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லி :-
ஷேவிங் செய்த பின்னர் சருமம் வறட்சி அடைவதால், ஷேவிங் செய்யும் போது ஏற்பட்ட காயத்தை இன்னும் மோசமானதாக்கும். எனவே ஷேவிங் செய்த பின்னர் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவி வேண்டும். அதிலும் பெட்ரோலியம் ஜெல்லியை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஷேவிங் லோசன் :-
ஷேவிங் செய்த பின்னர் தடவக்கூடிய ஷேவிங் லோசனை தடவினால், அதில் உள்ள ஆல்கஹால், இரத்தக்கசிவை தடுத்து, அந்த காயத்தை எளிதில் குணமாக்கும்.

ரேசரை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் :-
இதுவரை சொல்லப்பட்டவற்றை மேற்கொள்வது மட்டுமின்றி, ஷேவிங் செய்த பின்னர் ரேசரை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஷேவிங் செய்யும் போது தலைகீழாக ஷேவிங் செய்யக்கூடாது. இதனால் காயங்கள், சரும தடிப்புக்கள் போன்றவை மட்டும் தான் ஏற்படும். எனவே கவனமாக ஷேவிங் செய்யுங்கள்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ப ருப்பு வகைகள்!!!


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது.

அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.

ஆனால் சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.

மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

அந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அவற்றில் பொதுவான ஒரு ஒன்று என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான்.

இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இப்போது பருப்புக்களின் கைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

பச்சை பயறு

இந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது.

ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

சுண்டல்

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.

கடலைப் பருப்பு

கடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது.

இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு காராமணி

சிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது.

மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது.

ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும்.

இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.

குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.

தட்டை பயறு

தட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது.

அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்

உளுத்தம் பருப்பு

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.

மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.

மைசூர் பருப்பு

மைசூர் பருப்பின் சிறப்பு என்னவென்றால், அதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், அது உடலில் உள்ள பித்தக்கற்களை வெளியேற்றிவிடும்.

மேலும் ஃப்ளேவோன்ஸை அதிகம் கொண்டதால், புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும்.

அதுமட்டுமின்றி, இது உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணு குண்டு


வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல் குறையவும் இதயம் சீராகத் துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடவும்.

இரத்தம் விருத்தியாகத் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்
வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து பேக் போல் செய்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும்.
வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை
நாம் பெறலாம்

1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.
3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.”


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஒரு குட்டி செய்தி.


ஒரு குட்டி செய்தி……..

ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார். உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார். ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார். மனமுடைந்த ஜெய் சிங் மகராஜர், தன் விடுதி அறைக்கு வந்து, தன வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச்செய்தார்.

சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் பெரும் மரியாதைய்டன் நடந்தது. அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார்.

மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர். "இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர்.

இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது. மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும், குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக அவைகளை நிறுத்தி வேறு விசயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

POMEGRANATE A DAY KEEPS HEART DISEASES AWAY


“Bypass your bypass surgery”

Two things are full of benefits for the human being, lukewarm water and pomegranate.

Pomegranate is a seasonal fruit in India so we tried an experiment with dried pomegranate seeds.

We prepared a decoction boiling the fistful of dried seeds in half liter of water for 10 minutes, squeezed the seeds, strained the decoction and advised those patients suffering from painful angina to use a glass of lukewarm decoction on an empty stomach in the morning.

Amazing result was observed, the decoction of dried pomegranate seeds worked like a magic, the feelings of tightness and heaviness of chest and the pain had gone.

It encouraged us to try more experiments on all types of cardiac patients so we tried other experiments on patients who were suffering from painful angina, coronary arterial blockage, cardiac ischemia (insufficient blood flow to the heart muscle) etc., waiting for a bypass surgery. The same lukewarm decoction was used on an empty stomach in the morning. The patients experienced quick relief in all symptoms including painful condition.

In another case of coronary arterial blockage the patient started using half glass of fresh pomegranate juice every day for one year, although all symptoms were completely relieved within a week but he continued taking it for a whole year, it completely reversed the plaque build-up and unblocked his arteries to normal, the angiography report confirmed the evidence.

Thus decoction of dried pomegranate seeds, fresh pomegranate juice or eating a whole pomegranate on empty stomach in the morning proved to be a miracle cure for cardiac patients. But the lukewarm dried seeds decoction proved to be more effective compared to eating a whole pomegranate or fresh pomegranate juice.

Use of pomegranate in any way has demonstrated even more dramatic effects as blood thinner, pain killing properties for cardiac patients, lowers LDL (low-density lipoprotein or bad cholesterol) and raises the HDL (high-density lipoprotein or good cholesterol). There are more than 50 different types of heart diseases, the most common being coronary artery disease (CAD), which is the number one killer of both women and men in some countries, and there has been no medicinal cure for this disease.

Many cardiac patients have reversed their heart diseases on our advice using one glass of lukewarm decoction of pomegranate dried seeds, half glass of fresh pomegranate juice or eating a whole pomegranate on empty stomach in the morning. It was the very first real breakthrough in the history of cardiology to successfully treat the cardiac diseases by a fruit.

The more super foods to obtain the even faster results for cardiac patients which are most promising curative and protective agents like fresh raisins, quince, guava, prunes (dried plums), natural vinegar, mixture of grape fruit juice and honey in the morning (empty stomach), basil leaves, chicory leaves, powder of oregano leaves and rock salt in equal quantity (in case the patient is not hypertensive) and sesame oil as cooking oil for cardiac patients.

It is regretted to say that treating the heart patients and bypass surgery has become far more profitable business around the world which has failed to help avert life threatening heart attacks and life time cardiac complications resulting in almost paralyzed life. A regular use of pomegranate in any way ensures a healthy cardiac life, thinning your blood, dissolving the blood clots and obstruction inside the coronary arteries, maintains an optimal blood flow, supports a healthy blood pressure, prevents and reverses atherosclerosis. (Thickening of the internal lining of the blood vessels) from whatever we experienced and observed in last several years, we shall say:

“A pomegranate a day keeps the cardiologist away” you can try and see the wonder.

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE