ஸ்படிக லிங்கத்தின் சிறப்புகள்:


ஸ்படிக லிங்கத்தின் சிறப்புகள்:

சைவ ஆகம சாஸ்திரங்களில் லிங்க வழிபாடு மிகவும் முக்கியமானது. முப்பத்திரண்டு வகையான புனிதமான பொருட்களால் லிங்கங்கள் செய்யப்படுகின்றன. அவை செய்யப்படும் பொருளுக்கேற்ப அருள் வழங்கும் தன்மையவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த முப்பத்திரண்டு வகையிலும் சேராமல் சுயம்புவாக அதாவது இயற்கையாக கிடைக்கக்கூடியதுதான் ஸ்படிக லிங்கம். அதனால் இது மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்படுகிறது. ஸ்படிகம் சிவனின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனிலிருந்து விழுந்ததாகக் கூறுவோரும் உண்டு. ஸ்படிகம் என்பது ஒரு வகை கிரிஸ்டல். தூய்மையான நிலையில் கண்ணாடி போலக் காணப்படும். இது மிகவும் குளிர்ந்த தன்மையது. அதனால் இதன் மணிகளை மாலையாகக் கோத்து பெரியவர்கள் அணிவதும் உண்டு. ஸ்படிகம் இமய மலையின் அடி ஆழத்திலும் விந்திய மலை மற்றும் சங்ககிரி மலையின் சில பகுதிகளிலும் கிடைக்கும். இது மிகவும் விலைமதிப்புள்ளது. பாரதத்தின் வடபகுதியில் இருந்த ஸ்படிகம் தென்பகுதி வந்தது சுவாரசியமான கதை. ஆதிசங்கரர் கைலாய மலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சிவபெருமான் அவருக்குக் காட்சி அளித்து, ஐந்து ஸ்படிக லிங்கங்களை அளித்து அவற்றை பூஜிக்கும் முறை பற்றியும் விளக்கமாக கூறியருளினார். அவை முக்தி லிங்கம், வர லிங்கம், மோட்ச லிங்கம், போக லிங்கம், யோகலிங்கம் எனப் பெயர் கொண்டவை. அந்தப் பஞ்ச லிங்கங்களை ஆதிசங்கரர் ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார்.

முக்தி லிங்கம் – கேதார்நாத், வரலிங்கம் – நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம் -சிருங்கேரி, யோகலிங்கம் – காஞ்சி. சிதம்பரத்தில் ஸ்படிக லிங்கம் சந்திர மவுலீஸ்வரராக வழிபடப்படுகிறது. தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் இருக்கிறது. முன்னால் இருந்த ஸ்படிக லிங்கத்தில் கீறல்கள் விழுந்ததால் அதற்குப் பதிலாக, இமயமலையிலிருந்து 6 இன்ச் உயர லிங்கம் எடுத்து வரப்பட்டு 2011-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. உற்சவ மூர்த்தி இங்கே கண்ணாடிக் கருவறையில் ருத்திராட்சப் பந்தலின் கீழ் வீற்றிருக்கிறார். இவருக்கு முன்னால் மற்றொரு சிறிய சன்னதி இருக்கிறது. இங்குதான் ஸ்படிக லிங்கம் நந்தியோடு சேர்த்து பூஜிக்கப்படுகிறது. இது பழம் பெருமை வாய்ந்தது. அதே போல ராமேஸ்வரம் கோயிலிலும் ஸ்படிக லிங்கம் உள்ளது. இது விபீஷணனால் இங்கே கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள். ராமரும் சீதையும் பூஜித்த லிங்கமாக இது கருதப்படுகிறது. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால், அதிகாலையில் அதாவது காலை 4 மணி முதல் 5 மணி வரை, இக்கோயிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் முன் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. கோயிலில் இந்த தரிசனத்திற்கென்று தனி டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இந்த வழிபாடு முடிந்ததும் கோயிலில் இருக்கும் எல்லா தீர்த்தங்களிலும் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இவை தவிர திருவெண்காடு எனப்படும் ஸ்வேதாரண்யத்திலும், நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்கம் வழிபடப்படுகிறது. இக்கோயில்கள் தவிர வேறு சில இடங்களிலும் ஸ்படிக லிங்கங்கள் உள்ளன.

வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை (நிராகார) குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற (நிர்க்குண) தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது. இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம். ஸ்படிகத்தின் ஒவ்வொறு அணுவிலும் சிவனின் குற்றமற்ற தூய்மை நிறைந்திருக்கிறது. ஸ்படிக லிங்கங்களின் மகிமை குறித்து மார்க்கண்டேய சம்ஹிதையில் விரிவாகக் கூறப்படுகிறது. சரி! இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கத்தை பயன் பெற எப்படி வழிபட வேண்டும்?

ஸ்படிக லிங்கம் என்பது பொதுவாக நீண்ட குச்சி போன்ற வடிவமும், சுமார் ஒரு இன்ச்சிலிருந்து, பத்து இன்ச் வரை உயரமும் ஆறு முகங்கள் அல்லது பட்டைகள் உடையதாகவும் இருக்கும். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது ஒரு வினாடிக்கு, 32,768 தடவை நேர்மறையாக அதிரக்கூடிய தன்மை உடையது. அதனால் தான் ஒரு ஸ்படிக லிங்க கருங்கற்களால் செய்யப்பட்ட ஆயிரம் லிங்கங்களுக்குச் சமம் என்றும், 12 லட்சம் ஸ்படிக லிங்கங்கள் ஒரு பாண லிங்கத்துக்குச் சமம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பாண லிங்கம் என்பது கண்டகி நதிக்கரையில் இயற்கையாகக் கிடைக்கும் சாளக்கிராமங்களைப் போல நர்மதை நதியில் கிடைக்கும் இயற்கையான லிங்கங்களாகும். ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.

பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.

ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? எல்லாம் தவிடுபொடியாகிவிடாதா? வீட்டில் வைத்தும் ஸ்படிக லிங்கத்தை பூஜிக்கலாம். அவ்வாறு பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும் பழச்சாறுகளாலும் தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும் சந்தோஷமும் பெருகும்.

ஸ்படிக லிங்கத்தின் மற்றொரு பெரும் சிறப்பு, இது தாந்திரீகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது என்பதாகும். மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பின்னி சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிகலிங்க வழிபாடு செய்வார்கள். அதனால் அபிசார தோஷம் (ஏவல் பில்லி சூனியங்களால் பிரச்சினை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ தங்கள் வியாபாரக் கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். முறைப்படி பூஜிப்பதால் ஸ்படிகம் தன ஆகர்ஷண சக்தி படைத்ததாக மாறுகிறது. அதனால் நல்ல லாபம் கிடைப்பதுடன் தொழிலும் மேலும் மேலும் விருத்தியடையும். மாணவர்களும் கூட ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். தொடர்ந்து இதைப் பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தாலே நல்ல ஞாபக சக்தி, விஷயங்களை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் ஆகியவை கிட்டும். இதற்கு தினமும் பூஜை செய்ய நல்ல மனத்திண்மையும் நேர் வழியில் செல்ல விருப்பமும் உண்டாகும். மொத்தத்தில் இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஸ்படிகம் நன்மையே செய்யும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சன்னியாசிகள்


சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிட்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல் பிட்சை எடுக்க வேண்டும். பிட்சை போட்டாலும், போடாவிட்டாலும், அது ருசித்தாலும், ருசிக்காவிட்டாலும் சமமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்காகவே பிட்சை உள்ளது. பிட்சை போடாத மனிதர்களை வெறுப்பது கூடாது. அவர்களையும் சமமாக நினைக்க வேண்டும். உண்மையான ஞானிக்கு சாப்பிடாமல் கூட இருக்க முடியும். அவர்களுக்கு பசி கிடையாது. ஞானிகளுக்கு நாம் உணவு அளிக்கும் பொழுது நம்முடைய பாவத்தை போடுகிறோம். ஞானிகள் தங்களுடைய புண்ணிய பலத்தை நமக்குத் தருகிறார்கள். எவ்வளவு உயர்ந்த தத்துவம் !

ஒருமுறை காஞ்சி மகா பெரியவர் ஒரு வாரம் முழுவதும் பிட்சைக்குப் போகாமல் மவுன விரதமிருந்தார். சீடர்கள் தாங்கள் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என வருந்தி பெரியவரிடம் கேட்டனர். உங்கள் யாரிடமும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. போன முறை பிட்சைக்குச் சென்ற பொழுது ஓர் அகத்தில் இட்ட கீரை மிகவும் சுவையாக இருந்தது. மறுநாளும் அதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என மனம் விரும்ப ஆரம்பித்தது. சுவையில் நாட்டம் சென்றதும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருக்கத் தீர்மானித்தேன். ஆதலால்தான் பிட்சைக்குப் போகவில்லை. இது எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை. நீங்கள் யாரும் வருந்த வேண்டாம்! என்றாராம். எப்பேர்ப்பட்ட மகான் ! இது ஞானிகளின் மனப்பக்குவத்திற்கு உதாரணம். ஆதிசங்கரர் பிட்சை கேட்ட சமயம் ஓர் ஏழைப் பெண்மணி தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை (வேறு உணவு எதுவுமே இல்லாததால்) பிட்சை இட்டதால் அவர் வீட்டில் மகாலட்சுமி பொற்காசுகளை மழையாகப் பெய்வித்தாள் என்பது வரலாறு


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

EKADASHI VRAT AND MAHIMA


EKADASHI VRAT AND MAHIMA

Ekadashi is the eleventh lunar day (tithi) of the Shukla (bright) or Krishna (dark) Paksha (fortnight). So it occurs twice a month. It occurs when the moon is lcosest to earth (Krishna Paksha) and fartherst from earth (Sukla Paksha).

The tides of the ocean and the moods of human beings are influenced by moon on Ekadashi days. During Ekadashi one should avoid eating grains. This is because grains contains water in them. Moon affects any water body. It does so in grains too, which may result in adverse health. For the same reasons pulses are strictly avoided during Ekadashi. Fasting in Sanskrit means, Upavas.
" Upavritasto Papebhayo yasto vaso Gunaha Saha"
(one should abstain from sinful activity and do service to God).

Fasting cleanses our body and hence increases our concentration to meditate on God and spiritually, we feel elevated when we meditate. So both body and the soul get maximum benefit on Ekadashi when we fast, and we move closer to God. The mind gets concentrated and collected easily on Ekadashi day.

It is said that a person who hears even a single sentence about Ekadashi Mahima on the day of Ekadashi, has his sins wiped out completely from his life. It is also said that if hears the Mahima of Ekadashi all throught the day and night on Ekadashi, then he will reach Lord Vishnu’s abode and stay there for 10 million Kalpas. Hence, there is no better way of worshipping Lord VIshnu other than observing a fast on Ekadashi day.

BENEFITS OF EKADASHI VRAT
There are 24 Ekadashis in a year. As per VISHNU PURANA fasting on Vaikunta Ekadashi is equivalent to fasting on the remaining 23 Ekadashis of the Hindu year. But, fasting on any Ekadashi is considered holier than any other religious observation.

According to scriptures, by giving charity, on a Monday, which is a full moon day, one obtains a 100,000 times punya than a charity done on an ordinary day. Similarly, one who gives charity on the day of Sankranti, obtains 400,000 times punya. But by simply by fasting on Ekadashi day, the person is not only benefitted with above results, but also gets the punya of witnessing solar or lunar eclipse in Kurukshetra. Furthermore, a devoted and a faithful soul, who observes complete fasting on Ekadashi, gets 100,000 more benefit than one who performs an Ashvamedha – yajna. A person who observes Ekadashi even just once earns 10 times more benefit than a person who gives a thousand cows in charity to a Brahman learned in Vedas. Finally, giving charity in the form of food grains to those in need is the best of all. The merit one obtains by observing a complete fast on Ekadashi cannot be measured. By feeding just one Brahmachari at hom, a person earns immeasurably Punya and obtains Vaikuntha (Lord Vishnu).

A person makes a great spiritual advancement in his life when he even unknowingly follows Ekadashi Vrat. If he completely fasts that days or eats either in mid day or in the evening, he not only gets lots of punya, but even his grave sins are washed away. So, it is a meritorious day for destroying all kinds of sims. The mind becomes spiritually inclined and one acquires a lot of wealth too. Then he attains Liberation from this world and becomes one with GOD.

OBSERVE FAST TODAY AND READ THIS AND GET ALL THE BLESSINGS OF GOD
PRANAMS


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?


உருளைக்கிழங்கு சாப்பிடலாமா?
By சுருணிமகன்

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும். உடல் மிகவும் பெருத்துவிடும் என்றெல்லாம் சொல்லி உங்களைப் பலரும் பயமுறுத்துவார்கள். இக்கூற்று உண்மைதானா என்று ஆராய்ந்து பார்த்தால் துளிகூட உண்மை இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதிலும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நம் முன்னோர்களின் உணவில் உருளைக்கிழங்கு இருந்திருக்கிறது. உலகத்தில் பஞ்சம், பசி ஏற்பட்டபோதெல்லாம், கை கொடுக்கும் தெய்வமாக இருந்து, உருளைக்கிழங்கு காப்பாற்றியிருக்கிறது. உலக அளவில் அரிசி, கோதுமைக்குப் பிறகு அதிகம் பயிரிடப்படுவது உருளைக்கிழங்குதான்!

உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது. புரதம் 1.6% உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி முதலியவையும் போதிய அளவில் உள்ளன. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளன.

உங்கள் உடலில் அதிகமாகப் புளிப்பு அமிலங்கள் சேர்ந்தால் அவைகளை இது வெளியேற்றிவிடுகிறது. நிலத்தின் அடியில் தோண்டி எடுக்கப்படும் சில கிழங்குகளை விடவா, உருளைக்கிழங்கு மோசமாகப் போய்விட்டது? இல்லை! உருளைக்கிழங்கு எளிதில் செரிக்கும் தன்மை உடையது. வயதானவர்களுக்குத் தேவையான புரதம், மாவுப் பொருள்கள், சர்க்கரை, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் போன்ற அனைத்தும் உருளைக்கிழங்கு அவியலில் கிடைத்துவிடுகிறது. உருளைக்கிழங்கைத் தோலுடன் சாப்பிட்டால்தான், சத்துக்கள் கிடைப்பதுடன் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

ஸ்வீடனிலும், பிரான்சிலும் தேசிய "டிஷ்’ ஆக உருளைக்கிழங்கு விளங்குகிறது. தாய்லாந்தில் உருளைக்கிழங்கு சாப்பிடாதவர் எவரும் இருக்க மாட்டார். இங்கிலாந்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் ஏராளமாக விற்பனையாகின்றன. "இங்கிலாந்து சிப்ஸ் கழகம்’ என்று ஒரு கழகமே இங்கிலாந்தில் உள்ளது. வறுவல் வகைகளுக்காக நியூஜெர்ஸி ராயல் என்ற உருளைக்கிழங்கு பயிர் செய்யப்படுகிறது.

பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலாதான் சிறந்த "தொட்டுக்கொள்ளும்’ உணவாகும். உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்ற கூற்றில் உண்மையே இல்லை. சில காய்களிலும், சில வகைக் கிழங்குகளிலும், சிலவகைக் கீரைகளிலும், சில வகைப் பருப்புகளிலும் வாயு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக நாம் அதைச் சாப்பிடாமல் இருக்கிறோமா? சாப்பிடுகிறோம்.

தோலுடன் உருளைக்கிழங்கைச் சாப்பிடும்போது, பூண்டு, மிளகு ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்களுக்கு வாயுப் பிரச்னையே வராது. உருளைக்கிழங்கை அளவாகச் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்யுங்கள். உங்களுடைய எடை கூடாது. தொந்தியும் வராது. உருளைக்கிழங்கு சிப்ûஸ சாப்பிட்டால் எடை கூடிவிடும். உடலும் பருத்து விடும். எனவே நீங்கள் எந்தப் பயமும் இல்லாமல் இறைவன் கொடுத்த அருட்பிரசாதமாகிய உருளைக்கிழங்கைச் சாப்பிட்டு இனிமையாக வாழுங்கள்!
தாராபுரம் சுருணிமகன்


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அதிசயத் தகவல்கள்.!


அதிசயத் தகவல்கள்.!

* இன்று அனைவரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி இருக்கிறது. அவற்றில் உள்ள சிம் அட்டைகள் பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தான் சிம் அட்டை தயாரிக்கப்படுகிறது.

* வேகமாகப் போக விரும்பினால், தனியாகப் பயணம் செய். தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச், சொல்லப்படும் வாக்கியம்.

* எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு. பின்பக்கமாகத் திரும்பி வெற்றிக் கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான்.

* இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் NOCTURNAL ENURESIS என்று குறிப்பிடுவோம். இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்.

* எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ‘ஓ’ பாஸிட்டிவ் தான்.

* மகாத்மா காந்தி பற்றி ஜன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற கருத்து இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!

* பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிதுநேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும்.

கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச்செல்லும்.

* நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம்.

* அறிஞர் ‘வால்’ என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு, பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை, செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார்.

* ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர்.

* குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும், குதிரையின் இதயம் 38 முறையும், சுண்டெலியின் இதயம் 200 முறையும், நாயின் இதயம் 118 முறையும், ஆட்டின் இதயம் 60லிருந்து 78 முறையும் யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

MUST READ… Why women in China don’t get breast cancer / it applies to men too…


Subject: : MUST READ… Why women in China don’t get breast cancer / it applies to men too…

THIS IS A WONDERFUL ARTICLE ……….. PLEASE PASS IT ON

Read this, it applies to men too


Prof Jane Plant
WHY WOMEN IN CHINA DO NOT GET BREAST CANCER
By Prof. Jane Plant, PhD, CBE

I had no alternative but to die or to try to find a cure for myself. I am a scientist – surely there was a rational explanation for this cruel illness that affects one in 12 women in the UK ?

I had suffered the loss of one breast, and undergone radiotherapy. I was now receiving painful chemotherapy, and had been seen by some of the country’s most eminent specialists. But, deep down, I felt certain I was facing death. I had a loving husband, a beautiful home and two young children to care for. I desperately wanted to live.

Fortunately, this desire drove me to unearth the facts, some of which were known only to a handful of scientists at the time.

Anyone who has come into contact with breast cancer will know that certain risk factors – such as increasing age, early onset of womanhood, late onset of menopause and a family history of breast cancer – are completely out of our control. But there are many risk factors, which we can control easily.

These "controllable" risk factors readily translate into simple changes that we can all make in our day-to-day lives to help prevent or treat breast cancer. My message is that even advanced breast cancer can be overcome because I have done it.

The first clue to understanding what was promoting my breast cancer came when my husband Peter, who was also a scientist, arrived back from working in China while I was being plugged in for a chemotherapy session.

He had brought with him cards and letters, as well as some amazing herbal suppositories, sent by my friends and science colleagues in China .

The suppositories were sent to me as a cure for breast cancer. Despite the awfulness of the situation, we both had a good belly laugh, and I remember saying that this was the treatment for breast cancer in China , then it was little wonder that Chinese women avoided getting the disease.

Those words echoed in my mind. Why didn’t Chinese women in China get breast cancer? I had collaborated once with Chinese colleagues on a study of links between soil chemistry and disease, and I remembered some of the statistics.

The disease was virtually non-existent throughout the whole country. Only one in 10,000 women in China will die from it, compared to that terrible figure of one in 12 in Britain and the even grimmer average of one in 10 across most Western countries. It is not just a matter of China being a more rural country, with less urban pollution. In highly urbanized Hong Kong , the rate rises to 34 women in every 10,000 but still puts the West to shame.

The Japanese cities of Hiroshima and Nagasaki have similar rates. And remember, both cities were attacked withnuclear weapons, so in addition to the usual pollution-related cancers, one would also expect to find some radiation-related cases, too.

The conclusion we can draw from these statistics strikes you with some force. If a Western woman were to move to industrialized, irradiated Hiroshima , she would slash her risk of contracting breast cancer by half. Obviously this is absurd. It seemed obvious to me that some lifestyle factor not related to pollution, urbanization or the environment is seriously increasing the Western woman’s chance of contracting breast cancer.

I then discovered that whatever causes the huge differences in breast cancer rates between oriental and Western countries, it isn’t genetic.

Scientific research showed that when Chinese or Japanese people move to the West, within one or two generations their rates of breast cancer approach those of their host community.

The same thing happens when oriental people adopt a completely Western lifestyle in Hong Kong . In fact, the slang name for breast cancer in China translates as ‘Rich Woman’s Disease’. This is because, in China, only the better off can afford to eat what is termed ‘ Hong Kong food’.

The Chinese describe all Western food, including everything from ice cream and chocolate bars to spaghetti and feta cheese, as "Hong Kong food", because of its availability in the former British colony and its scarcity, in the past, in mainland China .

So it made perfect sense to me that whatever was causing my breast cancer and the shockingly high incidence in this country generally, it was almost certainly something to do with our better-off, middle-class, Western lifestyle.

There is an important point for men here, too. I have observed in my research that much of the data about prostate cancer leads to similar conclusions.

According to figures from the World Health Organization, the number of men contracting prostate cancer in rural China is negligible, only 0.5 men in every 100,000. In England, Scotland and Wales , however, this figure is 70 times higher. Like breast cancer, it is a middle-class disease that primarily attacks the wealthier and higher socio-economic groups, those that can afford to eat rich foods.

I remember saying to my husband, "Come on Peter, you have just come back from China . What is it about the Chinese way of life that is so different?"

Why don’t they get breast cancer?’
We decided to utilize our joint scientific backgrounds and approach it logically.

We examined scientific data that pointed us in the general direction of fats in diets.
Researchers had discovered in the 1980s that only l4% of calories in the average Chinese diet were from fat, compared to almost 36% in the West.
But the diet I had been living on for years before I contracted breast cancer was very low in fat and high in fibre.
Besides, I knew as a scientist that fat intake in adults has not been shown to increase risk for breast cancer in most investigations that have followed large groups of women for up to a dozen years.
Then one day something rather special happened. Peter and I have worked together so closely over the years that I am not sure which one of us first said:
"The Chinese don’t eat dairy produce!" It is hard to explain to a non-scientist the sudden mental and emotional’buzz’ you get when you know you have had an important insight. It’s as if you have had a lot of pieces of a jigsaw in your mind, and suddenly, in a few seconds, they all fall into place and the whole picture is clear.

Suddenly I recalled how many Chinese people were physically unable to tolerate milk, how the Chinese people I had worked with had always said that milk was only for babies, and how one of my close friends, who is of Chinese origin, always politely turned down the cheese course at dinner parties.

I knew of no Chinese people who lived a traditional Chinese life who ever used cow or other dairy food to feed their babies. The tradition was to use a wet nurse but never, ever, dairy products.

Culturally, the Chinese find our Western preoccupation with milk and milk products very strange. I remember entertaining a large delegation of Chinese scientists shortly after the ending of the Cultural Revolution in the 1980s.

On advice from the Foreign Office, we had asked the caterer to provide a pudding that contained a lot of ice cream. After inquiring what the pudding consisted of, all of the Chinese, including their interpreter, politely but firmly refused to eat it, and they could not be persuaded to change their minds.

At the time we were all delighted and ate extra portions!

Milk, I discovered, is one of the most common causes of food allergies . Over 70% of the world’s population are unable to digest the milk sugar, lactose, which has led nutritionists to believe that this is the normal condition for adults, not some sort of deficiency. Perhaps nature is trying to tell us that we are eating the wrong food.

Before I had breast cancer for the first time, I had eaten a lot of dairy produce, such as skimmed milk, low-fat cheese and yogurt. I had used it as my main source of protein. I also ate cheap but lean minced beef, which I now realized was probably often ground-up dairy cow.

In order to cope with the chemotherapy I received for my fifth case of cancer, I had been eating organic yogurts as a way of helping my digestive tract to recover and repopulate my gut with ‘good’ bacteria.

Recently, I discovered that way back in 1989 yogurt had been implicated in ovarian cancer. Dr Daniel Cramer of Harvard University studied hundreds of women with ovarian cancer, and had them record in detail what they normally ate. Wish I’d been made aware of his findings when he had first discovered them.

Following Peter’s and my insight into the Chinese diet, I decided to give up not just yogurt but all dairy produce immediately. Cheese, butter, milk and yogurt and anything else that contained dairy produce – it went down the sink or in the rubbish.

It is surprising how many products, including commercial soups, biscuits and cakes, contain some form of dairy produce. Even many proprietary brands of margarine marketed as soya, sunflower or olive oil spreads can contain dairy produce
I therefore became an avid reader of the small print on food labels.

Up to this point, I had been steadfastly measuring the progress of my fifth cancerous lump with callipers and plotting the results. Despite all the encouraging comments and positive feedback from my doctors and nurses, my own precise observations told me the bitter truth.

My first chemotherapy sessions had produced no effect – the lump was still the same size.
Then I eliminated dairy products. Within days, the lump started to shrink
.
About two weeks after my second chemotherapy session and one week after giving up dairy produce, the lump in my neck started to itch. Then it began to soften and to reduce in size. The line on the graph, which had shown no change, was now pointing downwards as the tumour got smaller and smaller.

And, very significantly, I noted that instead of declining exponentially (a graceful curve) as cancer is meant to do, the tumour’s decrease in size was plotted on a straight line heading off the bottom of the graph, indicating a cure, not suppression (or remission) of the tumour.

One Saturday afternoon after about six weeks of excluding all dairy produce from my diet, I practised an hour of meditation then felt for what was left of the lump. I couldn’t find it. Yet I was very experienced at detecting cancerous lumps – I had discovered all five cancers on my own. I went downstairs and asked my husband to feel my neck. He could not find any trace of the lump either.

On the following Thursday I was due to be seen by my cancer specialist at Charing Cross Hospital in London . He examined me thoroughly, especially my neck where the tumour had been. He was initially bemused and then delighted as he said, "I cannot find it." None of my doctors, it appeared, had expected someone with my type and stage of cancer (which had clearly spread to the lymph system) to survive, let alone be so hale and hearty.

My specialist was as overjoyed as I was. When I first discussed my ideas with him he was understandably sceptical. But I understand that he now uses maps showing cancer mortality in China in his lectures, and recommends a non-dairy diet to his cancer patients.

I now believe that the link between dairy produce and breast cancer is similar to the link between smoking and lung cancer. I believe that identifying the link between breast cancer and dairy produce, and then developing a diet specifically targeted at maintaining the health of my breast and hormone system, cured me.

It was difficult for me, as it may be for you, to accept that a substance as ‘natural’ as milk might have such ominous health implications. But I am a living proof that it works and, starting from tomorrow, I shall reveal the secrets of my revolutionary action plan.

Extracted from Your Life in Your Hands, by Professor Jane Plant/


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE