உருளைக்கிழங்கு பிரியர்களே! உருளைக்கிழங் கு சாற்றின் மகத்துவத்தை படிச்சு பாருங்க…


உருளைக்கிழங்கு பிரியர்களே! உருளைக்கிழங்கு சாற்றின் மகத்துவத்தை படிச்சு பாருங்க…

மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில் உணவிற்கு என்றுமே முதல் இடம் உண்டு. உணவுகளை பல வகைகளில், பல விதங்களில், பல பெயர்களில் நாம் தயாரிக்கிறோம்.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உருளைக்கிழங்கு மலைப்பகுதிகளில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது.

உலக மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவு வகைகளுள் உருளைக்கிழங்கும் ஒன்று.

உருளைக்கிழங்கை பயன்படுத்தி மொறுமொறுப்பான சிற்றுண்டி உணவு வகைகள் பல தயாரிக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.

உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கும் சி, பி மற்றும் ஏ வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து முதலிய உயிர்ச்சத்துகளும் உருளைக்கிழங்கில் உள்ளன.

சுவையையும், எண்ணற்ற நன்மைகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டுள்ள உருளைக்கிழங்கின் ஆரோக்கிய குண நலன்களை அறிந்துள்ள மக்கள் குறைவே.

ஆகவே தான் உருளைகிழங்கின் ஆரோக்கிய நலன்களை தொகுத்து உள்ளோம்.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

* வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் உருளைக்கிழங்கு சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு சாறு குடிக்கும் போது சில நேரங்களில் வயிற்றுப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

* புதிய, புள்ளிகளற்ற, முதிர்ந்த, முளை விடுத்துள்ள உருளைக்கிழங்கினை பயன்படுத்தி சாறு தயாரிக்கும் போது அதன் சுவை அதிகம்.

* உருளைக்கிழங்கு சாற்றின் சுவையை கூட்ட, அதனுடன் சிறிதளவு கேரட் சாற்றினையும், சேஜ் (sage), நெட்டில் (nettle) மற்றும் ஸ்பைருலீனா (spirulina) முதலிய மூலிகைகளையும் சேர்க்கலாம்.

கொழுப்பின் அளவை குறைக்கும் நமது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை உருளைக்கிழங்கு சாறு அருந்துவதன் மூலம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும்.

இப்படி கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் போது நமது உடல் நலம் மேம்படும்.

Ananthanarayanan Ramaswamy's photo.

Ananthanarayanan Ramaswamy's photo.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ब्रोकोली –


ब्रोकोली –
– ब्रोकली को पका कर या फिर कच्‍चा भी खाया जा सकता है, लेकिन अगर आप इसे उबाल कर खाएंगे तो आपको ज्‍यादा फायदा होगा।
– इस हरी सब्‍जी में लोहा, प्रोटीन, कैल्‍शियम, कार्बोहाइड्रेट, क्रोमियम, विटामिन ए और सी पाया जाता है, जो सब्‍जी को पौष्टिक बनाता है। इसके अलावा इसमें फाइटोकेमिकल्स और एंटीऑक्‍सीडेंट भी होता है, जो बीमारी और बॉडी इंफेक्‍शन से लड़ने में सहायक होता है।
– ब्रोकोली विटामिन सी से भरी हुई है, जो प्रतिरक्षा प्रणाली को मज़बूत बनती है।
– ब्रोकोली क्रोमियम का बहुत अच्छी स्रोत है, जो मधुमेह पर नियंत्रण और शरीर में इंसुलिन के उत्पादन को नियंत्रित करती है।
– शोधकर्ताओं के अनुसार, ब्रोकोली में बीटा – कैरोटीन होता है जो आंखों में मोतियाबिंद और मस्‍कुलर डीजेनरेशन होने से रोकती है। – यह माना जाता है कि ब्रोकोली में यौगिक सल्‍फोरापेन होता है जो यूवी रेडियेशन के कारण होने वाले प्रभाव से त्वचा को नुकसान पहुंचाने और सूजन को कम करने में सहायक होती है।
– ब्रोकोली में कैल्शियम, फास्फोरस, मैग्नीशियम और जिंक होता है, जो हड्डियों को मजबूत बनाता है। इसलिए, यह बुजुर्गों और गर्भवती महिलाओं के लिये बहुत अच्‍छी मानी जाती है क्‍योंकि इनमें ऑस्टियोपोरोसिस होने का खतरा बहुत ज्‍यादा होता है।
– ब्रोकली शरीर को एनीमिया और एल्‍जाइमर से बचाती है क्‍योंकि इसमें बहुत ज्‍यादा आइरन और फोलेट पाया जाता है।
– ब्रोकोली को नियमित खाने से गर्भवती महिलाओं को मदद मिलती है। यह फोलेट का एक अच्छा स्रोत है जो भ्रूण में मस्तिष्क संबंधी दोषों को रोकने में मदद करती है।
– डाइट में ब्रोकली को शामिल करने से कुछ तरह के कैंसर जैसे स्‍तन कैंसर, लंग और कोलोन कैंसर के रिस्‍क को कम करती है। इसमें फाइटोकेमिकल्स होने के कारण, यह एंटी कैंसर न्‍यूट्रिशनल वेजिटेबल है।
– यह फाइबर, क्रोमियम, और पोटेशियम का अच्‍छा स्‍त्रोत है, जो कोलेस्ट्रॉल के स्तर को कम कर सकता है और रक्तचाप को भी नियंत्रित करता है।
– ब्रोकोली में कैरोटीनॉयड ल्‍यूटिन होता है जो हृदय की धमनियों को मोटा होने से रोकता है, जिससे हार्ट अटैक और अन्‍य हार्ट सबंधी बीमारियों का रिस्‍क टलता है।
– ब्रोकली खाने से न केवल स्‍वास्‍थ्‍य और पोषण मिलता है, बल्कि इस‍में लो कैलोरी होने की वजह से वजन भी कम होता है। अब आप जब भी सब्‍जियां खरीदने जाएं, तो ब्रोकली को कभी नजरअंदाज न करें।

ब्रोकोली - - ब्रोकली को पका कर या फिर कच्‍चा भी खाया जा सकता है, लेकिन अगर आप इसे उबाल कर खाएंगे तो आपको ज्‍यादा फायदा होगा। - इस हरी सब्‍जी में लोहा, प्रोटीन, कैल्‍शियम, कार्बोहाइड्रेट, क्रोमियम, विटामिन ए और सी पाया जाता है, जो सब्‍जी को पौष्टिक बनाता है। इसके अलावा इसमें फाइटोकेमिकल्स और एंटीऑक्‍सीडेंट भी होता है, जो बीमारी और बॉडी इंफेक्‍शन से लड़ने में सहायक होता है। - ब्रोकोली विटामिन सी से भरी हुई है, जो प्रतिरक्षा प्रणाली को मज़बूत बनती है। - ब्रोकोली क्रोमियम का बहुत अच्छी स्रोत है, जो मधुमेह पर नियंत्रण और शरीर में इंसुलिन के उत्पादन को नियंत्रित करती है। - शोधकर्ताओं के अनुसार, ब्रोकोली में बीटा - कैरोटीन होता है जो आंखों में मोतियाबिंद और मस्‍कुलर डीजेनरेशन होने से रोकती है। - यह माना जाता है कि ब्रोकोली में यौगिक सल्‍फोरापेन होता है जो यूवी रेडियेशन के कारण होने वाले प्रभाव से त्वचा को नुकसान पहुंचाने और सूजन को कम करने में सहायक होती है। - ब्रोकोली में कैल्शियम, फास्फोरस, मैग्नीशियम और जिंक होता है, जो हड्डियों को मजबूत बनाता है। इसलिए, यह बुजुर्गों और गर्भवती महिलाओं के लिये बहुत अच्‍छी मानी जाती है क्‍योंकि इनमें ऑस्टियोपोरोसिस होने का खतरा बहुत ज्‍यादा होता है। - ब्रोकली शरीर को एनीमिया और एल्‍जाइमर से बचाती है क्‍योंकि इसमें बहुत ज्‍यादा आइरन और फोलेट पाया जाता है। - ब्रोकोली को नियमित खाने से गर्भवती महिलाओं को मदद मिलती है। यह फोलेट का एक अच्छा स्रोत है जो भ्रूण में मस्तिष्क संबंधी दोषों को रोकने में मदद करती है। - डाइट में ब्रोकली को शामिल करने से कुछ तरह के कैंसर जैसे स्‍तन कैंसर, लंग और कोलोन कैंसर के रिस्‍क को कम करती है। इसमें फाइटोकेमिकल्स होने के कारण, यह एंटी कैंसर न्‍यूट्रिशनल वेजिटेबल है। - यह फाइबर, क्रोमियम, और पोटेशियम का अच्‍छा स्‍त्रोत है, जो कोलेस्ट्रॉल के स्तर को कम कर सकता है और रक्तचाप को भी नियंत्रित करता है। - ब्रोकोली में कैरोटीनॉयड ल्‍यूटिन होता है जो हृदय की धमनियों को मोटा होने से रोकता है, जिससे हार्ट अटैक और अन्‍य हार्ट सबंधी बीमारियों का रिस्‍क टलता है। - ब्रोकली खाने से न केवल स्‍वास्‍थ्‍य और पोषण मिलता है, बल्कि इस‍में लो कैलोरी होने की वजह से वजन भी कम होता है। अब आप जब भी सब्‍जियां खरीदने जाएं, तो ब्रोकली को कभी नजरअंदाज न करें।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம் ============= ==================


புத்தகங்களை நேசிப்போம்… வாசிப்போம்

டிகாக்ஷன் போடும் கலை!


நெட்டில் சுட்ட ஒரு காமெடி.

டிகாக்ஷன் போடும் கலை!

டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் –அந்
தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.

மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி.வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர்சொல்லிவிட்டார்.

ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப்
போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால்வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்
திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது…மனைவி காப்பிபோடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.

”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க”என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.

நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளைஎட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.

மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராகஇருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம்மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.

காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்குஇருக்க வேண்டும்.

மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால்எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடிபட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி
கணபதி ஒட்டிவைப்பதில்லை.

ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம்.எல்லாம் சைக்கோ கேஸ்.

‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப்ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும்மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.

ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவதுகலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாகசேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா…

மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்துஇருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால்சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.

மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதைஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.

எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார்அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.

நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.

சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகலஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சுமமூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படிபாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவேநுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்குகோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என்நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).

நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?

ஏதோ ஒரு ஸ்பூன்.

மிளகாய்ப் பொடி ஸ்பூனா?

அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.

துடைச்சீங்களா?

ஊம்… ஊம்…

சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.

சரியான ஞானக் கண்ணி!

காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?

மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.

நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும்ஆயி
டுட்டுது…
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு,தப்புத்தானே….

இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போகவேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.

சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான்அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான்சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலேஅம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்ககண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.

அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.

ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ்குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.

இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை
(குமாச்சியா) போட்டாயிற்று.

அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாகஇறங்குமாம்.

ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டே
ன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.

பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தர வே
ண்டியது.

பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமானகொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா,தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனைஎடுபடவில்லை.

இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான்அடுப்பேற்றி
னேன்.

இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி,தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அதுஇஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரதயுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில்கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.

அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர்இருபத்து நாலு ஆச்சே.

ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…

இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.

”இன்னுமா காப்பி போடறீங்க?”

”தோ ஆச்சு!”

”நான் வரட்டுமா?”

”வேணாம், வேணாம்” அவசரமாக அவள்
வருகையை ரத்து செய்தேன்.

முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாகமறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில்மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலைசெய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.

அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்துஅலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.

இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.

பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும்பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.

எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும்விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.

இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒருஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துஅதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.

அதற்குள் மனைவியிடமிருந்து

‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).

”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன்ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால்என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.

பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கிமனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள்,

‘தூ தூ… என்று மனைவியின்கூப்பாடு.

”அழுத்தவே இல்லியா…”
கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி,உரக்க அழைத்திருக்க மாட்டான்.

”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.

”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.

மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.

”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னுதெரியாது?”

”எதை?”

”என் தலையை!”

மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.

”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம்பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.

”எதையடி அழுத்தணும்…?”

”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் –வேலை முடிஞ்சிதுன்னு.”

நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம்தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை…

”இதனுடைய மேல் பில்ட்டர்எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சிகாப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”

”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”

”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”

”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”

”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.”

”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாகஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.

கால்மணியில் மனைவி காப்பியோடு
வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.

”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.

”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னாபொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல ஷாவனிஸம்!”v

”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பிபோடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அ ள்ளி வைப்போம்!”


“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம்!”

‘கோபமாக இருக்கும் ஒவ்வொருநிமிடமும், அறுபதுவினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடு கிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.

‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும்.
அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.

கோபம் தும்மலைப்போன்றது.

சாதிமத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும்.

சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால்கூட எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் சமர்த்துக் கோபம் ஒன்றுண்டு. ‘வரையறுக்கப் பட்ட, கட்டுக்குள் இருக்கக்கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள்.

உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக்கோபம் எழும்.

அந்தகோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப் பட்ட நிலையில் வெளிப்படும் போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.

‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா.
இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.

ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும்,
எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.

கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாக மாக பிரிக்கிறார்கள்.

ஒன்று வெளிப்படையான கோபம். `நீ எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம்.

இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என் பார்கள்.

இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம்.

இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல் வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம்.

அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும்.

இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.

எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒருகை பார்க்காமல் விடாது என்பதுதான் உண்மை.
\
சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பல வீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.

மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.

அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒருபடி மேலே போய், நோய்கள், காயங்கள்
போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும்
கோபமே என்கிறது.

கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக்கைதி களின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன.

ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும்சிறைச்சாலைக்கு வந்துவிடுகிறார்கள்.

பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு
மிச்சவாழ்க்கை யைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.

இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது.

ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம்.

இதை அவருடைய சிறை அனுபவ குறிப்புகள் பேசுகின்றன.

உறவுகளுக்கு இடையேவரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம்அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோ தான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.

கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளி யாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.

அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப்பறிப்பதும், புரமோஷனைக்கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான்.

`கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்… ’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித்திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.

மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின்கணக்குகள் எண்ணிலடங்காதவை.

கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை.

நான் செய்வதும் சொல்வதும்சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான
கோபங்கள் புறப்படுகின்றன.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை.

மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும்.

இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.

‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார்.

காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு.

இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது.

கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை.

அடுத்தடுத்த இடங்களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!

நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி.

எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை.

கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே.

நான் நினைத்தால் இக்கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த…கோபத்தைக் கட்டுப்படுத்த
பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர்.

வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…

1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள்.
எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட் டத்தின்படியும் நடக்கப் போவதில்லை.
வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.

2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள்.

‘ இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதனடிப்படை.

3.கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள்.
கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது.
அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள்.
இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ளுங்கள்.

4. கோபம் வந்தவுடன் அதை உணர் ந்து கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து
ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள்.
கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.

5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின்
சக வாசத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.

6. நமக்குப் பிடிக்காதவர்களை ப்பற்றிய சிந்தனைகளைக்
கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.

7. சிரிக்கப்பழகுங்கள்.
நகைச்சுவை நூல்களை வாசியுங்கள் . மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.

8. இப்போது கோபத்தைத் தூண் டிய இச்செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள்.
டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால்
எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.

9.இந்தச் செயல் உங்கள் மீது தி ட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள்.
பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும் .

10. மனதார மன்னியுங்கள்.
இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை
மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Fascinating Facts


It’s all true….I read it on the internet

43%20True%20Facts%20001.jpg
43%20True%20Facts%20002.jpg
43%20True%20Facts%20003.jpg
43%20True%20Facts%20004.jpg
43%20True%20Facts%20005.jpg
43%20True%20Facts%20006.jpg
43%20True%20Facts%20007.jpg
43%20True%20Facts%20008.jpg
43%20True%20Facts%20009.jpg
43%20True%20Facts%20010.jpg
43%20True%20Facts%20011.jpg
43%20True%20Facts%20012.jpg
43%20True%20Facts%20013.jpg
43%20True%20Facts%20014.jpg
43%20True%20Facts%20015.jpg
43%20True%20Facts%20016.jpg
43%20True%20Facts%20017.jpg
43%20True%20Facts%20018.jpg
43%20True%20Facts%20019.jpg
43%20True%20Facts%20020.jpg
43%20True%20Facts%20021.jpg
43%20True%20Facts%20022.jpg
43%20True%20Facts%20023.jpg
43%20True%20Facts%20024.jpg
43%20True%20Facts%20025.jpg
43%20True%20Facts%20026.jpg
43%20True%20Facts%20027.jpg
43%20True%20Facts%20028.jpg
43%20True%20Facts%20029.jpg
43%20True%20Facts%20030.jpg
43%20True%20Facts%20031.jpg
43%20True%20Facts%20032.jpg
43%20True%20Facts%20033.jpg
43%20True%20Facts%20034.jpg
43%20True%20Facts%20035.jpg
43%20True%20Facts%20036.jpg
43%20True%20Facts%20037.jpg
43%20True%20Facts%20038.jpg
43%20True%20Facts%20039.jpg
43%20True%20Facts%20040.jpg
43%20True%20Facts%20041.jpg
43%20True%20Facts%20042.jpg
43%20True%20Facts%20043.jpg


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கொலஸ்ட்ரால் எத்தனை வகை ?


கொலஸ்ட்ரால் எத்தனை வகை ?

உடலுக்கு நன்மை செய்ய கூடிய கொழுப்பு, "கொலஸ்ட்ரால்!’ ஈரல், இதை உற்பத்தி செய்கிறது. ஈரலிலிருந்து, உடலிலுள்ள செல்களுக்கு இதை கொண்டு சேர்ப்பது, "லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’ எனும் கெட்ட கொழுப்பு.

செல்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை, மீண்டும் ஈரலுக்கு எடுத்து சென்று வெளியேற்ற உதவுவது, "ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’ எனும், நல்ல கொழுப்பு."டிரைகிளிசரைடு’ என்பது, மூன்றாம் வகை கொழுப்பு. நாம் உட்கொள்ளும், கொழுப்பு மற்றும் அதிக அளவு சர்க்கரை பொருட்கள், டிரைகிளிசரைடாக மாற்றப்பட்டு, திசுக்களில் சேமித்து வைக்கப்படும். தேவைப்படும் போது, கலோரியாக மாற்றப்பட்டு, உடலுக்கு உதவும்.

இந்த டிரைகிளிசரைடு, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து, "சாச்சுரேட்டர் பேட்டி ஆசிட்’ எனும் முழுமையான கொழுப்பு, "அன்சாச்சுரேட்டட் பேட்டி ஆசிட்’ எனும் முழுமையற்ற கொழுப்பு என, இரண்டாக பிரிக்கப்படும்.

தேங்காய் எண்ணெய், முழுமையான கொழுப்பு என, ஒதுக்கினோம். ஆனால், இதற்கு, பாக்டீரியா மற்றும் எய்ட்ஸ் நோய் வைரஸ் போன்ற, தீயவற்றை அழிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான், கேரளாவில் மாரடைப்பு மிகவும் குறைவு.

விலை உயர்ந்த ஆலிவ் எண்ணெயில், நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதிலும் தீமைகள் உள்ளன. வேர்க்கடலை நல்லது. ஆனால், கடலை எண்ணெய் உடலுக்கு உகந்ததல்ல.

நல்லெண்ணெய், மிகவும் நல்ல எண்ணெய். எத்தனை தீர்க்கதரிசனத்துடன், நம் முன்னோர் இப்படியொரு பெயரிட்டிருக்கின்றனர். இதில் கணக்கிலடங்காத வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்ட்கள் பொதிந்திருக்கின்றன.

பண்டைய ஆயுர்வேத நூல்களிலும், சீன மருத்துவ நூல்களிலும், இந்த எண்ணெய், எத்தனையோ வியாதிகளுக்கு மருந்தாக வர்ணிக்கப்படுகிறது. "ரீபைன்’ செய்கிறேன் என, எண்ணெயை சிதைக்காமல், இயற்கையாக உபயோகிப்பது நல்லது.

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE