get status of PNR no your train reservation by sms


GET YOUR PNR STATUS

Indian Railway in collaboration with Google is now providing a 10 digit mobile number.

Just SMS your PNR number on this mobile number and instantaneously you will get your ticket’s current status along with all other journey related details.

The number is 97733-00000 .

NO need to prefix 0 or +91.

Best of all, you don’t pay a premium charge for any of this, just the price of a standard SMS.

PLEASE DON’T FORGET TO STORE THE NUMBER IN YOUR MOBILE PHONE.

WHY NOT SHARE THIS INFO WITH YOUR FRIENDS


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கர்ணனும் தருமமும் உலகமும் – தர்மன்-கிருஷ ்ணர் – உலகத்தில் தர்மம் ஒரு பார்வை :-


கர்ணனும் தருமமும் உலகமும் – தர்மன்-கிருஷ்ணர் – உலகத்தில் தர்மம் ஒரு பார்வை :-

என்ன நண்பர்களே எல்லோரும் குடியரசு தினத்தினை நன்றாக சந்தோஷமாக காலையில் 🙂 கொடிஎற்றி (அவர் அவர் பில்டிங் இல் ) அல்லது தன்னுடைய மகன் , மகள்களுடன் அவர்களின் பள்ளிக்கூடம் சென்று நமது குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி ஜாலியா இருந்திங்களா இல்லை , என்னடா இந்த ஆண்டு குடியரசு தின பொது விடுமுறை போய்விட்டது என்று மனம் வருத்தப்பட்டு , குடும்பத்துடன் வார கடைசியான ஞாயிற்று கிழமையை தூங்கியே கழிதிர்களா ??? இல்லை கர்ணன் படம் (நல்ல பிரிண்ட் ) என்னை போல குடும்பத்துடன் பார்க்க , என் குழந்தைகளை போல் கிளைமாக்ஸ் வரும் போது அப்பா அப்பா என்று கதை கேட்டு …… அட அட அதுல ஒரு சுகம் தான் … நான் என்ன பழைய காலத்திற்கு சென்று விட்டு வந்தேன். அதன் பிரதிபலிப்பு இந்த கட்டுரை.

இந்தத் தொகுப்புக்களில் உள்ளவை பல்வேறு புத்தகங்களிலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் கர்ணனைப் பற்றிய குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

அன்றாட வாழ்வில் இன்றைக்கு இந்த உலகில் தர்மம் செத்துக்கொண்டே இருக்கிறது….நம் முன்னோர்கள் சொல்லி வைத்த தர்ம நெறிகள் யாவும்,இன்று கேலிக்குரியதாகிவிட்டது..நம் புராணக்கதை நாயகர்களான ராமர்,தர்மன்,கர்ணன்…இவர்களெல்லாம் இன்று ரசிக்க கூடிய அளவில் மட்டுமே உள்ளனர்..பின்பற்றக்கூடிய வகையில் இல்லை… தர்மரின் நிலையை சொன்னால் உங்களுக்கு புரியும்…

மஹாபாரத போர் சமயம், அபிமன்யு..சக்கரவீயுகத்தில் சிக்கி மாண்டு போனான்..அவனை கொன்ற ஜயத்ரதனை கொல்ல சபதம் எடுக்கிறான் அர்ஜூனன். பாண்டவர்களுக்கு சகோதரி கிடையாது…கெளரவர்களுக்கு ஒரு சகோதரி உண்டு…அவளை மணந்தவன் தான் ஜயத்ரதன். இவனை கொல்ல அர்ஜனன் சபதம் எடுத்தவுடன், தர்மரின் நிலை தர்ம சங்கடம்….

.இந்த தர்ம சங்கடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்றால் தர்மமாகவும் இருக்க முடியாது அதர்மமாகவும் இருக்க முடியாது…நடுவில் மாட்டிக்கொள்வது…தர்மருக்கு அடிக்கடி இந்த சங்கடம் வந்தது…இதனால்தான் இந்நிலைக்கு தர்ம(ர்) சங்கடம் என்று பெயர் வந்தது…

தன் ஒரே தங்கையை விதவை ஆக்கக்கூடாது என்று நினைத்து தர்மர் கடோத்கஜன் மூலம் துரியோதனுக்கு இந்த சபதத்தை சொல்லி அனுப்பி,அவனை எப்படியாவது காப்பாற்ற சொல்லுவார்,ஏனெனில் தங்கையின் கணவன் என்பதால்…ஆனால் கடோத்கஜனோ…பெரியப்பா சொன்னதை சொல்லிவிட்டு,,பின்பு கூறினான்…நீங்கள் அவனை எங்கு ஒளித்து வைத்தாலும் உயிர் பிரிவது உறுதி என்று…
மேற்கூறிய செயல் அவரின் அப்பழுக்கற்ற தர்ம சிந்தனைக்கு ஒரு சான்று எனில்,

அதே யுத்த களம், துரோணாச்சாரியாரை வதம் செய்யும் நேரம்,, பரந்தாமன் தர்மரிடம்…தர்மா அஸ்வத்தாமன் இறந்தான் என்று சொல்லு…அப்படி சொன்னால், துரோணர் ஆயுதம் விடுப்பார்…த்ருஷ்ட்யுமன் அவரின் தலை கொய்வான் என்றார்.

தருமர்- கிருஷ்ணா பரந்தாமா நான் பொய் சொல்லமாட்டேன்

பரந்தாமன் – நீ பொய் சொல்லவேண்டாம்..அசுவத்தமா எனற யானை இறந்துவிட்டது என்று சொல்..மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

தர்மரும் அஸ்வத்தமா அதகா (இறந்துவிட்டது) (யானை) குஞ்சரகா என்ற போது. பரந்தாமன் யானை என்று சொல்லும்போது சங்கை எடுத்து ஊதி அந்த வார்த்தை கேட்க முடியாது செய்துவிடுவார்…

சொன்னது தர்மர் என்பதால் துரோணரும் அதன் சத்தியத்தை உணர்ந்து,மகன் இறந்துவிட்டான்,,இனி ஏன் வாழ வேண்டும் என நினைத்து ஆயுதம் விடுத்தார்…த்ருஷ்ட்யுமன் அவரின் தேரில் ஏறி அவரின் தலையை கொய்துவிடுவான்.

ஆனால் தர்மர் அப்படி சொன்னவுடன் அவரின் தேர் நான்கு அங்குலம் தரையில் அமுங்கிவிடும்….பூமிக்கே அதிர்ச்சி ஆகிவிட்டது..தர்மனின் நிலையோ மிக மிக சங்கடமாகிவிட்டது…அஸ்வத்தாமனுக்கு தந்தையின் மரணத்தை விட, தர்மனின் இந்த செயல் மிகவும் பாதித்துவிட்டது.

பின்பு கர்ணன் மரணம் முடிந்து பத்னெட்டு நாள் போர் ஒய்ந்து,தர்மரும் ஆட்சியில் அமர்ந்தார்.

பரந்தாமன்..தர்மா அதுதான் ஆட்சியை கைப்பற்றி அரசனாகிவிட்டாயே ..ஏன் இன்னும் மனக்கலக்கத்தோடு தென்படுகிறாய்? என்ன காரணம்..?

தர்மன்..கிருஷ்ணா, நான் பொய் சொல்லிவிட்டேன் அல்லவா..என் தேர் நான்கு அங்குலம் இறங்கிவிட்டது அல்லவா?

பரந்தாமன்- நீ எங்கே பொய் சொன்னாய்..நான் சங்கை ஊதி அல்லவா அதை செய்தேன்..

தர்மர்-தேர் அமுங்கியது நான் பொய் சொன்னதால் அல்லவா?கிருஷ்ணா நீ நினைத்திருந்தால் என்னை பொய் சொல்லாது காத்திருக்கலாம் அல்லவா?ஏன் அப்படி செய்தாய் கிருஷ்ணா?

கிருஷ்ணர்- தர்மா..இந்த உலகில் எல்லாரும் தவறு செய்வார்கள்.ஆனால் பழியை என் மீது போட்டுவிடுவார்கள்…தவறு செய்து விட்டு “ஐயோ என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்”என்பார்கள்…நல்லது எது கெட்டது எது என அறுதியிட்டு பார்க்க உங்களுக்கு எல்லாம் நான் ஆறறிவை கொடுத்தும்,தவறு செய்வது எப்படி சரியாகும்.(இது கலிகால தர்மர்களுக்கு)
தர்மா நான் அஸ்வத்தாமா என்ற யானை இறந்துவிட்டது என்று சொல்ல சொல்லும்போது உனக்கு கண்டிப்பாக தெரியும்”நான் ஏதேனும் செய்து துரோணரை வீழ்த்த செய்யும் உபாய்ம் இது என்று” உனக்கு தெரியுமா தெரியாதா?

தெரியும் கிருஷ்ணா

தெரிந்தும் நீ ஏன் அப்படிச்சொன்னாய்

ஜெயிக்க வேண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது கிருஷ்ணா என்பதுதான் உண்மை..அதனால்தான் தெரிந்தே நான் அப்படி சொன்னேன்.

தெரிந்தே நீ அப்படி சொன்னதால்தான் தேர் அமுங்கியது தர்மா!. .உனக்கு பெய்ரும் கெடக்கூடாது..அதர்மமும் ஜெயிக்கபட வேண்டும் தர்மம் காக்கப்பட வேண்டும்…நீங்களும் அரசாள வேண்டும்…எல்லாம் நடக்க வேண்டும் என்றால் நான் இப்படி சில விஷய்ங்கள் செய்துதான் ஆகவேண்டும்.இப்படி எல்லாம் இருக்க,என்னை குறை கூறுவது என்ன நியாயம்?

நண்பர்களே, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தர்மனே அக்காலத்திலே பொய் சொல்லி இருக்கிறார். பதவி ஆசை என்பது எல்லா மனிதர்களுக்கும் உண்டு என்பதை சொல்லும் ஒரு நிகழ்வு…..

இன்றோ நம்மை ஆளும் ஆளுனர்கள் எவ்வளவு பொய் சொல்கிறார்கள், எவ்வளவு அதர்மம் செய்கிறார்கள் என்பதை தெரிந்தேதான் நாம் அவர்களை பதவியில் அமர்த்துகிறோம்.

உங்களுக்கு தெரியுமா ????தானத்தில் உயர்ந்த கர்ணனைப்பற்றி பல கதைகள் கேட்டிருக்கலாம், படித்திருக்கலாம் இதோ ஒன்று:-

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன்.தானத்திற்கே பெயர்பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.

அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை.எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டு அலுத்து போனான். பிறகு சொர்க்கத்தின் தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை எனக்கு ஏன் இப்படி பசிக்கிறது என கேட்டான்.

அதற்கு சொர்க்கலோகத்தின் தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாக கொடுத்து பெரும் புகழ்பெற்றவன். ஆனால் சிந்தித்து சொல் எப்பொழுதாவது யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறாயா என கேட்டான். கர்ணனும் அன்னதானம் செய்ததாக நினைவு இல்லை.

அன்னதானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்று பசி அடங்கவில்லையா? அப்படியானால் இதற்கு என்ன தான் வழி என கேட்டான். அதற்கு தலைவன் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து கொள் பசி அடங்கி விடும் என்றான். கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.

விரலை சப்பினால் பசி அடங்குமா? என்ன இது என சந்தேகத்துடன் வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்து சப்பினான். இதனால் அவனது பசி உடனே அடங்கியது. ஒன்றும் புரியாத கர்ணன் இது எப்படி மாய மந்திரம் என கேட்க தலைவன் கூறினான்.

கர்ணா நீ பூவுலகில் வாழும்போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதான சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழிகாட்டினாய். அந்த புண்ணிய செயல் நற்செயல் உனக்கு இëப்பொழுது உதவுகிறது என கூறினான்.

இதன் மூலம் கர்ணன் மூலம் அன்னதான மகிமையை உணர்ந்தான். முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள், ஏழைகள். இவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கு மகிழ்ச்சியினையும் புண்ணியத்தையும் தரும். எனவே அளவற்ற புண்ணியம் தரும் அன்னதானம் செய்யுங்கள்.*

இருப்பவர்கள் இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு அறிவைப் புகட்டுங்கள். செல்வத்தைப் பகிர்ந்து கொண்டதனால் கர்ணன் கொடையாளி ஆனான். வாழ்க்கையைப் பகிர்நதுகொண்ட காந்தி ஒப்புயர்வற்ற தலைவர் ஆனார்.

உயிருடன் இருக்கையில் எதையும் கொடாமல், இறந்த பின்னர் தானதர்மங்கள் செய்ய எற்பாடு செய்வதெல்லாம் சுயநலமாகும். கூடுமானவரை உலக வாழ்க்கையிலே தருமம் செய்யத் தொடங்கி விடுவதே நல்ல தர்மமாகும்.

உலகத்தில் தர்மம் இன்று தலைகாணாமல் போய் கொண்டே இருக்கிறது. நாமும் அதற்குக்காரணம்…முடிந்த வரை தர்ம சிந்தனையை வளர்போம்..நமது அடுத்த தலைமுறைக்கும் சொல்லி வளர்போம்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Story: The Successful Tennis Player


A renowned Tennis Player, was stricken by HIV from a contaminated blood transfusion which he received during his heart bypass surgery.

He was a legendary player. People from all over the world were very sad to hear the news. He received millions of get well soon letters and cards from his fans all over the world. One of the letters read:

“It is very sad to know about your illness. Why did God let this happen to you?”

The Tennis Player wrote a reply to this fan saying:

“Millions of children start playing tennis. Hundreds of thousands of them learn to play proper Tennis. Tens of Thousands of them learn professional Tennis. Thousands of them go to Tennis tournaments around the world. Some 5 thousand make it to Grand Slam and around 100 make it to Wimbledon. Just 4 make it to Semi Finals and 2 to finals and only ONE wins. And I was that ONE out of millions of people around the world.

When I was holding the Wimbledon Championship Trophy I never asked God “Why Me?” So I have no right to ask God “why me?” during my times of hardship.”

Isn’t it true that a human being often forgets God during times of happiness? Whenever he achieves something in his life he attributes it to himself, his hard work and support from his family and friends and forgets to thank God. But what does the same person do when he is afflicted by a misfortune? The same person who takes credit for every achievement of his now starts blaming God for his

misfortune.

Moral: God keeps reminding people of His existence by giving them trials and afflictions, because people tend to forget God during their good times and such people only become aware of God if harm touches them. Never forget God in your good times. And if you are going through bad times, thank God even more for the times could have been worse.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எல்லோருக்கும் மரணத்தின் பின் நடப்பது என் ன?


எல்லோருக்கும் மரணத்தின் பின் நடப்பது என்ன?

சுவாரஸ்ய தகவல்.

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்?

இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் after_death_001குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார்.

மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன.

ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை.

அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குணம் அடைந்து வரும் போது நான் ஒரு செவிலியர் என்ற முறையில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு நிகழ்ச்சியை சந்தித்தேன்.

டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையில் இருந்து எழுந்து நாற்காலியில் அமரும் அளவிற்கு குணம் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் திடீரென அவர் நினைவிழந்து விழுந்தார், அவரது உடல் குளிர்ந்தது. எனது எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

நான் அவரது கைவிரல் நகங்களில் பேனா முனையினால் குத்தி வலி உணர்வை ஏற்படுத்திய போதிலும் அவரது உடல் சிறிதும் அசையவில்லை.

வெகுவேகமாக அவரது தோல் ஈரம் ஆனது, அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து இரத்த அழுத்தம் சரிந்தது. அவரது நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்ததற்கு தெளிவான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்தன.

நான் உடனடியாக அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுத்தபின், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மற்ற செவிலியர்கள் உதவியுடன் அவரது படுக்கையில் அவரை கிடத்தினோம்.

மருத்துவருக்கு தகவல் கொடுத்த பின்பு மருத்துவரும் மேலும் ஒரு மருத்துவ நிபுணரும் அங்கு வரும் வரையிலும் டாம் முற்றிலும் நினைவு இழந்த நிலையில் தான் இருந்தார். அடுத்த மூன்று மணி நேரத்திற்கு டாமிற்கு நினைவு திரும்பவில்லை.

பின்னர் நினைவு திரும்பிய டாம் நினைவிழந்து கிடந்த அந்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு நேர்ந்ததாக கூறிய அனுபவங்களை கேட்ட போது நான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன்.

அவர் மூன்று மணி நேரத்திற்குள் வேறு ஒரு உலகிற்கு பயணம் சென்று வந்ததாக தெரிவித்தார்.

முதலில் படுக்கையில் இருந்து மிதந்து எழுந்து அறையின் உச்சிக்கு சென்றதாகவும் அங்கிருந்து தனது உடல் படுக்கையின் மேல் கிடந்ததைக் கண்டதாகவும் அது ஒரு அழகான, அமைதியான, வலியில்லாத அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்த நொடியே மருத்துவமனையின் அறையில் இருந்து மறைந்து இளஞ்சிவப்பு நிற அறை ஒன்றில் நுழைந்ததாக அவர் தெரிவித்தார்.

அங்கு ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களையும் கொண்ட ஒருவரை கண்டதாகவும் அவர் அருகில் அவரது தந்தை நின்றிருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் தனது உணர்வுகளால் தனது தந்தையுடன் பேசியதாகவும் அதன் பின் ஏதோ ஒன்று அவரை தொட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். அடுத்த கணமே மருத்துவமனை அறையின் உச்சிக்கு திரும்பியதாகவும் அங்கிருந்து என்னையும் மருத்துவரையும் கண்டதாகவும் கூறினார்.

அப்போது நான் லாலிபாப் வடிவிலான ஒரு கருவியைக் கொண்டு அவரது வாய் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாக பின்னர் அவர் தெரிவித்தார். மேலும் அறையின் திரைச்சீலை அருகில் ஒரு பெண்ணை அவர் கண்டதாகவும் அப்பெண் அவரது நாடித்துடிப்பை சோதனை செய்து கொண்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

டாம் நினைவிழுந்து படுக்கையில் இருந்த அந்த தருணங்களில் நடந்ததாக கூறிய அனைத்தும் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அச்சமயத்தில் நான் ஈரமான அவரது வாய் பகுதியை துடைத்துக்கொண்டு இருந்தேன்.

திரைசீலையின் அருகில் மருத்துவ நிபுணரும் பிசியோதெரபி மருத்துவரும் நின்றிருந்தனர். இவை அனைத்தும் நடந்தேரிய அந்த நேரத்தில் ஒழுங்கற்ற கருமையான முடியும் அழகான கண்களுடனும் கூடிய அந்த ஒருவர் அவரை திரும்ப போக சொன்னதாகவும் அதன் பின் அவர் மிதந்து வந்து அவரது உடலுக்கு திரும்பியதாகவும் டாம் கூறினார்.

மேற்கண்ட இந்த அனுபவங்கள் உட்பட மேலும் பலரது மரண அனுபவங்களை செவிலியர் தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கடுக்காய் – மருத்துவ பயன்கள்


Karthikeyan Mathan

கடுக்காய் - மருத்துவ பயன்கள் கடுக்காயை மருந்தாக்குவது எப்படி? கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள் கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள். "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.' காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தென்னாட்டவருக்கு திரிபலா... திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம். உடல் வலிமை பெற... நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும். பல் நோய்கள் தீர... கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும். மூல எரிச்சல் தீர... கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்

கடுக்காய் – மருத்துவ பயன்கள் கடுக்காயை மருந்தாக்குவது எப்படி? கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள் கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள். "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.’ காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தென்னாட்டவருக்கு திரிபலா… திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம். உடல் வலிமை பெற… நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும். பல் நோய்கள் தீர… கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும். மூல எரிச்சல் தீர… கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE