கோலம் போடுவது எதற்காக?


கோலம் போடுவது எதற்காக?

கேள்வி

நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன், சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கம் உள்ளது.

குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே, ஏன்?

சத்குரு பதில்கள் :

கோலம் என்பது அலங்காரத்திற்காகப் போடப்படுவதில்லை.

இது ஒருவிதமான வடிவம்.

படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம்தான்.

அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம்.

இதை யந்திரம் என்றும் சொல்வோம்.

சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். யந்திரம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும்.

ஆங்கிலத்தில் மெஷின் என்று சொல்லப்படும் இயந்திரமும் பலவிதமான உருவங்கள் முறைப்படி ஒன்றிணைந்ததுதான்.

இந்தப் பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து ஒரு மகத்தான, பிரம்மாண்டமான யந்திரமாக இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தை பார்த்துவிட்டுதான் நாம் பல சிறிய அளவிலான யந்திரங்களை உருவாக்கி உள்ளோம்.

இந்தச் சூரியன், சந்திரன், இந்தப் பூமி இவற்றைப் பார்த்துத்தான் நாம் கடிகாரங்களையே உருவாக்கினோம்.

நம் உடல் கூட ஒரு யந்திரம் தான்.

இந்த உடல் என்னும் யந்திரத்தை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும், பூமியின் சக்தி சூழ்நிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணர முடியும்.

இந்த மாற்றத்தைக் கவனத்தில் வைத்து குறிப்பிட்ட பலன்கள் பெற குறிப்பிட்ட விதத்திலான யந்திரங்கள் உருவாக்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்து வந்திருக்கிறது.

நமது கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர்.

ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர்.

பல நேரங்களில் தகர உருளையில் கோலப்பொடியை போட்டு உருட்டுகின்றனர் அதிலிருந்து ஏதோ ஒரு வடிவம் வருகிறது.

ஆனால் கோலம் போடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது.

புத்த மடாலயங்களில் ஒரு கோலத்தை 10 பேர் காலையிலிருந்து மாலை வரை போடுவார்கள்.

தொடர்ந்து 3, 4 மாதங்கள் வரை அந்தக் கோலத்தை வரைவார்கள்.

அவ்வளவு விரிவான ஏற்பாடுகளோடு அந்த கோலத்தைப் போடுவார்கள்.

ஒரு கோலம் வடிவத்தைப் பொறுத்தும் அதில் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தும் வெவ்வேறு விதங்களில் செயல்படும்.

தாந்திரீக முறைப்படி பூஜை செய்யும்போது பெரிய கோலங்கள் இடப்படும்.

கேரளாவில் இதனை நாம் பார்க்க முடியும்.

எனக்கு 17 வயது இருக்கும்.

அப்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நான் அப்போது மைசூரில் இருந்தேன்.

பேயைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் எழுந்தது.

இத்தேடுதலில் பல நாட்கள் இரவு பகல் பாராமல் பேயைப் பார்ப்பதற்காக பல இடங்களுக்குச் செல்வேன்.

இதுமாதிரி பேய் தேடுதலில் நான் அலைந்து கொண்டிருந்த சமயத்தில், எனக்கு ஒருவர் அறிமுகமானார்.

தன் வீட்டில் நிறைய பாட்டில்களைக் காண்பித்து அந்த பாட்டில்களில் பேய்களை பிடித்து வைத்திருப்பதாக அவர் கூறினார்.

அந்த பாட்டில்கள் பார்ப்பதற்கு காலியாகத்தான் இருந்தன.

ஆனால் அவரோ அதில் பேய் இருக்கிறது என்று கூறுவார்.

நானும் தினமும் அவருடைய வீட்டிற்குச் செல்வேன்.

அவருக்கு தெரியாமல் ஒரு பாட்டிலாவது எடுத்து வந்துவிடலாம் என்று திட்டமிட்டுச் செல்வேன்.

ஆனால் அவரோ என்னை அந்த பாட்டில்களின் பக்கத்திலேயே நெருங்க விடமாட்டார்.

அதன்பின் ஒருநாள் புதிது புதிதாய் ஏதோ ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது.

அங்கு ஒரு கோலம் போடப்பட்டது.

அந்தக் கோலத்தின் 5 மூலைகளில் 5 முட்டைகள் வைக்கப்பட்டது.

ஏதோ செய்துவிட்டு கையைத் தட்டினார், அந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறின.

நான் அதுவரையில் அப்படி ஒரு காட்சியைக் கண்டதே இல்லை.

எனவே அப்போது எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

அந்தக் கோலம் இல்லாது போனால், அந்த மனிதர் கை தட்டிய விதத்திற்கு அந்த முட்டைகளை அவரால் உடைத்திருக்க முடியாது.

அந்தக் கோலம் இதற்கு உகந்த ஓரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது.

எனவே பலவிதமான பலன்களுக்கு பலவிதமான கோலங்களைப் போடமுடியும்.

அதில் ஒன்று மாட்டு சாணம் தெளித்து அதன்மேல் கோலம் இடுவது.

அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி இருக்கிறது.

மார்கழியில் என்ன விசேஷம்?

இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான்.

அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும் ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான்.

சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது, பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன.

இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன.

யோக முறைகளிலும் பலவிதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள்.

அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில்தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம்.

எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது.

எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும், தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அதில் ஒன்று தான் கோலம் இடுவதும்.

குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும்.

இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும்.

இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

…..
கோலம் போடுவது எதற்காக? கேள்வி நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன், சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே, ஏன்? சத்குரு பதில்கள் : கோலம் என்பது அலங்காரத்திற்காகப் போடப்படுவதில்லை. இது ஒருவிதமான வடிவம். படைப்புகள் அத்தனையும் ஒருவிதமான வடிவம்தான். அடிப்படையான வடிவம் முக்கோண வடிவம். இதை யந்திரம் என்றும் சொல்வோம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். யந்திரம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும். ஆங்கிலத்தில் மெஷின் என்று சொல்லப்படும் இயந்திரமும் பலவிதமான உருவங்கள் முறைப்படி ஒன்றிணைந்ததுதான். இந்தப் பிரபஞ்சம் கூட சூரியன், சந்திரன், பூமி என்று பலவிதமான உருவங்கள் ஒன்றிணைந்து ஒரு மகத்தான, பிரம்மாண்டமான யந்திரமாக இருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தை பார்த்துவிட்டுதான் நாம் பல சிறிய அளவிலான யந்திரங்களை உருவாக்கி உள்ளோம். இந்தச் சூரியன், சந்திரன், இந்தப் பூமி இவற்றைப் பார்த்துத்தான் நாம் கடிகாரங்களையே உருவாக்கினோம். நம் உடல் கூட ஒரு யந்திரம் தான். இந்த உடல் என்னும் யந்திரத்தை நுட்பமாக கவனித்தாலே ஒவ்வொரு காலத்திலும், நேரத்திலும், பூமியின் சக்தி சூழ்நிலை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை உணர முடியும். இந்த மாற்றத்தைக் கவனத்தில் வைத்து குறிப்பிட்ட பலன்கள் பெற குறிப்பிட்ட விதத்திலான யந்திரங்கள் உருவாக்கும் பழக்கம் நம் கலாச்சாரத்தில் இருந்து வந்திருக்கிறது. நமது கலாச்சாரத்தைப் பொருத்த வரையில் கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர். ஆனால் இப்போது இதை ஒரு அலங்கார உருவமாகப் பார்க்கின்றனர். பல நேரங்களில் தகர உருளையில் கோலப்பொடியை போட்டு உருட்டுகின்றனர் அதிலிருந்து ஏதோ ஒரு வடிவம் வருகிறது. ஆனால் கோலம் போடுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. புத்த மடாலயங்களில் ஒரு கோலத்தை 10 பேர் காலையிலிருந்து மாலை வரை போடுவார்கள். தொடர்ந்து 3, 4 மாதங்கள் வரை அந்தக் கோலத்தை வரைவார்கள். அவ்வளவு விரிவான ஏற்பாடுகளோடு அந்த கோலத்தைப் போடுவார்கள். ஒரு கோலம் வடிவத்தைப் பொறுத்தும் அதில் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்தும் வெவ்வேறு விதங்களில் செயல்படும். தாந்திரீக முறைப்படி பூஜை செய்யும்போது பெரிய கோலங்கள் இடப்படும். கேரளாவில் இதனை நாம் பார்க்க முடியும். எனக்கு 17 வயது இருக்கும். அப்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நான் அப்போது மைசூரில் இருந்தேன். பேயைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் எழுந்தது. இத்தேடுதலில் பல நாட்கள் இரவு பகல் பாராமல் பேயைப் பார்ப்பதற்காக பல இடங்களுக்குச் செல்வேன். இதுமாதிரி பேய் தேடுதலில் நான் அலைந்து கொண்டிருந்த சமயத்தில், எனக்கு ஒருவர் அறிமுகமானார். தன் வீட்டில் நிறைய பாட்டில்களைக் காண்பித்து அந்த பாட்டில்களில் பேய்களை பிடித்து வைத்திருப்பதாக அவர் கூறினார். அந்த பாட்டில்கள் பார்ப்பதற்கு காலியாகத்தான் இருந்தன. ஆனால் அவரோ அதில் பேய் இருக்கிறது என்று கூறுவார். நானும் தினமும் அவருடைய வீட்டிற்குச் செல்வேன். அவருக்கு தெரியாமல் ஒரு பாட்டிலாவது எடுத்து வந்துவிடலாம் என்று திட்டமிட்டுச் செல்வேன். ஆனால் அவரோ என்னை அந்த பாட்டில்களின் பக்கத்திலேயே நெருங்க விடமாட்டார். அதன்பின் ஒருநாள் புதிது புதிதாய் ஏதோ ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு கோலம் போடப்பட்டது. அந்தக் கோலத்தின் 5 மூலைகளில் 5 முட்டைகள் வைக்கப்பட்டது. ஏதோ செய்துவிட்டு கையைத் தட்டினார், அந்த முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறின. நான் அதுவரையில் அப்படி ஒரு காட்சியைக் கண்டதே இல்லை. எனவே அப்போது எனக்கு அது மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. அந்தக் கோலம் இல்லாது போனால், அந்த மனிதர் கை தட்டிய விதத்திற்கு அந்த முட்டைகளை அவரால் உடைத்திருக்க முடியாது. அந்தக் கோலம் இதற்கு உகந்த ஓரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது. எனவே பலவிதமான பலன்களுக்கு பலவிதமான கோலங்களைப் போடமுடியும். அதில் ஒன்று மாட்டு சாணம் தெளித்து அதன்மேல் கோலம் இடுவது. அதற்கு குறிப்பிட்ட விதமான சக்தி இருக்கிறது. மார்கழியில் என்ன விசேஷம்? இந்த மாதத்தில்தான் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறான். அதாவது டிசம்பர் முதல் மே வரை சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும் ஜுன் மாதத்திலிருந்து நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் நகர்கிறான். சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது, பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக பூமத்திய ரேகையிலிருந்து 32 டிகிரி அட்சரேகையில் (Latitude) பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்தப் பரப்பில்தான் உள்ளன. இந்த மாற்றங்கள் நிகழ்கின்றபோது அதனை பயன்படுத்திக் கொள்ள பல கருவிகள் உருவாக்கப்பட்டன. யோக முறைகளிலும் பலவிதமான பயிற்சிகள் வகுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மஹாபாரதக் கதை கேட்டிருப்பீர்கள். அதில் பீஷ்மர், தன் உடலில் அத்தனை அம்புகள் ஏறியிருந்தாலும் தன் உயிரை உத்தராயணத்தில்தான் துறக்க வேண்டும் என்று விடாமல் பிடித்து வைத்திருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். உத்தராயணத்தில் உடலை நீத்தால் முக்தி கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இதற்குக் காரணம். எனவே முக்தி நோக்கிலுள்ள மக்களுக்கு மார்கழியில் தொடங்கும் உத்தராயணம் முக்கியமானதாக இருக்கிறது. எனவே சூரியனின் போக்கில் மாற்றங்கள் நிகழும் போதும், பூமிக்கும் சூரியனுக்குமான தொடர்பில் மாற்றங்கள் ஏற்படும்போதும், தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒன்று தான் கோலம் இடுவதும். குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதன் மூலம் அந்தச் சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக் கொள்ள முடியும். இதனை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். உங்களுக்கும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நன்மையைக் கொண்டு வர முடியும். இந்த மாதத்தில் அதற்கான வாய்ப்பு மிகத் தீவிரமாக உள்ளது. .....


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

வெண் பொங்கல்”


"வெண் பொங்கல்"

பொங்கல் செய்முறை…

..3/4 கப் அரிசி , 1/4 கப் பயத்தம்பருப்பு சேர்த்து வெறும் வாணலியில் லேஸாக வறுத்துக்கோ..

குக்கரில் 4 கப் தண்ணிர் வைத்து, அது கொதித்ததும் அரிசி, பருப்பு கலவையை களைந்து போட்டு மூடி 4 அல்லது 5 சத்தம் விட்டு அணைத்து விடு…

ஒரு துண்டு இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளு… முந்திரிப் பருப்பை துண்டாக்கு..

.1/2 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் எடுத்துக்கோ…

.1/4 ஸ்பூன் மிளகைப் பொடி செய்துகொள்…

.6 டீஸ்பூன் நெய்யில் இஞ்சி வதக்கி, முந்திரி வறுத்து வடித்த பொங்கலில் கொட்டு….

மேலும் 2 ஸ்பூன் நெய்யில் மிளகு, சீரகம், மிளகுப்பொடி போட்டு பொரிந்ததும் அதையும் பொங்கலில் கொட்டு…

தேவையான உப்பு சேர்த்து கேஸில் வைத்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்கு….,

சட்னியுடன் சாப்பிட்டு எப்படி இருந்ததுனு சொல்லு… வேண்டுமானால் நெய் அதிகம் சேர்த்துக்கோ

(பின் குறிப்பு)

முந்திரியைத் தவிர, முழுமிளகு,ஜீரகம்,கறிவேப்பில்லை, இஞ்சியை நெய்யில் வதக்கி சாதம்பருப்புடன் இதைப்போட்டு, குக்கரில் வேகவைக்கணும். பொங்கல் ரெடி,.இறக்கின்ற நேரத்தில் முந்திரிப்பருப்பு சேர்க்கவும். இது தான் ஹோட்டல் டெக்னிக்!!!!!!


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஞானம்பிகா’ ஸ்பெஷல் ரெசிப்பி… ஆந்திரா பெச ரெட் தோசை


ஞானம்பிகா’ ஸ்பெஷல் ரெசிப்பி… ஆந்திரா பெசரெட் தோசை

அளிப்பவர்;ஞானாம்பிகா ஜெயராமன்

நன்றி பால ஹனுமான்.

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயறு: 1/4 கிலோ
பச்சரிசி: 1/4 டம்ளர்
பச்சை மிளகாய்: 3
பெரிய வெங்காயம்: 2
கறிவேப்பிலை: தேவையான அளவு
பெருங்காயத் தூள்: சிறிதளவு
இஞ்சி: 1 துண்டு

செய்முறை:

பச்சைப் பயறையும், பச்சரிசியையும் நன்றாக அலம்பி நைஸாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாயை விழுதாக அரைத்து இரண்டு டீ ஸ்பூன் அளவு போடவும். அதனுடன் தேவையான அளவு பெருங்காயத் தூள் மற்றும் சால்ட் போட்டு நன்றாகக் கலக்கவும். கலந்த பிறகு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றிப் பதமான சூடாகியதும் வழக்கமாக தோசை போடுகிற மாதிரி போடவும்.

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை நைசாக நறுக்கி, தோசையின் மேல் சிறிதளவு தூவவும். இப்போது ஆந்திரா பெசரெட் தோசை ரெடி.

சமபந்தி

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ… வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!

தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!

தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது!என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.

வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

यदि कोई सबसे ख़राब चीज़ है तो वो ये नूडल्स हैखाने के लिया यदि कोई सबसे ख़राब चीज़ है तो वो ये नूडल्स है यदि इसे कचरा ही कहा जाये तो गलत नहीं होगा | 7 -8 दिन मैदे को सड़ाया जाए तब नूडल तैयार होते हैं तथा इसके मसाले का स्वाद बढ़ाने के लिए इसमें सूअर ,गाय या मछली के मांस का रस उपयोग किया जाता है |
जिस देश की माताएं -बहने ताजे आटे से तैयार हज़ारों व्यंजन बनाते हों उस देश की नयी पीढ़ी को नूडल नामक कचरा खिलाकर बीमार बनाया जाये तो यह बहुत दुर्भाग्य पूर्ण है |
सभी माताओं को ये संकल्प करना चाहिए की वे कभी भी मैगी घर में नहीं लायेंगी। उसमे कोई भी पोषक तत्व नहीं होता। उसका चिपचिपा आटा आंतो से चिपक जाता है और ऑपरेशन तक की नौबत आ जाती है। ये जानते हुए भी अगर हम बच्चों की जिद के आगे घुटने टेक दें और उन्हें ये खिलाये तो ये बच्चों की सेहत के साथ खिलवाड़ है। अपने घर में ये ऐलान कर दे की ये अच्छा नहीं है ; ये घर में नहीं आयेगा।ये एक बहुत ही शुभ कार्य होगा।
खाने के लिया यदि कोई सबसे ख़राब चीज़ है तो वो ये नूडल्स है यदि इसे कचरा ही कहा जाये तो गलत नहीं होगा | 7 -8 दिन मैदे को सड़ाया जाए तब नूडल तैयार होते हैं तथा इसके मसाले का स्वाद बढ़ाने के लिए इसमें सूअर ,गाय या मछली के मांस का रस उपयोग किया जाता है | जिस देश की माताएं -बहने ताजे आटे से तैयार हज़ारों व्यंजन बनाते हों उस देश की नयी पीढ़ी को नूडल नामक कचरा खिलाकर बीमार बनाया जाये तो यह बहुत दुर्भाग्य पूर्ण है | सभी माताओं को ये संकल्प करना चाहिए की वे कभी भी मैगी घर में नहीं लायेंगी। उसमे कोई भी पोषक तत्व नहीं होता। उसका चिपचिपा आटा आंतो से चिपक जाता है और ऑपरेशन तक की नौबत आ जाती है। ये जानते हुए भी अगर हम बच्चों की जिद के आगे घुटने टेक दें और उन्हें ये खिलाये तो ये बच्चों की सेहत के साथ खिलवाड़ है। अपने घर में ये ऐलान कर दे की ये अच्छा नहीं है ; ये घर में नहीं आयेगा।ये एक बहुत ही शुभ कार्य होगा।

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“சங்கராசாரியார் எங்கே?”


"சங்கராசாரியார் எங்கே?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்.

தேனம்பாக்கத்தில் ஒரு மரத்தடியில்
உட்கார்ந்திருந்தார்கள் பெரியவாள்.
அருகில் ஒரு பக்தரும் ஒரு தொண்டரும்
இருந்தார்கள்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன்
வேகமாக வந்து, "சங்கராசாரியார் எங்கே?"
என்று (காவி உடையில் இருந்ததால்)
பெரியவாளையே கேட்டான்.

"பெரியவா, காஞ்சிபுரம் சாலைத்தெரு
மடத்தில் இருக்காள். நான் ரிடையர்
ஆகிவிட்டேன்" என்று சொன்னார்கள்.

பையன் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டான்.

எதிரே உட்கார்ந்திருந்த பக்தர்- ஸர்.சி.பி.
ராமஸ்வாமி அய்யரின் குமாரர்,சி.ஆர்
பட்டாபிராமன் அவர்கள் சொன்னார்;

"மகாப் பெரியவாளுக்கு ரிடையர்மென்ட்
என்பது கிடையாது. குரு ஸ்தானம் என்பது
சாசுவதமான போஸ்ட். குரு தியானத்தில்-
குருர் ப்ரஹ்மா,குருர் விஷ்ணு; குருர் தேவோ
மஹேஸ்வர;என்று சொல்லியிருக்கு.
பிரும்மா,விஷ்ணு,சிவனுக்கு ரிடையர்மெண்ட்
கிடையாது. பெரியவா ஜகத்குரு பெரியவாளுக்கும்
ரிடையர்மெண்ட் கிடையாது.

பெரியவாள் சிரித்துக்கொண்டே, பெரிய வக்கீலோட
குமாரன் நீ. அதனால், லா-பாயிண்ட் சொல்றே.
உன்னை மடத்துக்குப் பட்டா செய்து கொடுத்துட்டா.
அதனாலேதான் உனக்கு பட்டாபிராமன் என்றே பேர்

ஆம், பெரியவாள் சொன்னது உண்மைதான்.

காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் என்ற
கிராமத்திலிருந்த விளைநிலங்களை விற்று,
அந்தத் தொகையை, சாமவேத பாடசாலை
நடத்துவதற்காக மடத்துக்குக் காணிக்கையாகக்
கொடுத்தவர் பட்டாபிராமன்,அத்துடன் தன்
வீட்டிலிருந்த விலையுயர்ந்த நகைகளையும்
மடத்துக்கு சமர்ப்பித்தவர் அவர்


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE