நேர்முகத் தேர்வு


ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி ‘பத்தடி ஆழம்.. பத்தடி அகலம் கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?’ என்பது தான்.

"கத்திக் கூப்படு போடுவேன்" என்றான் ஒருவன்..

"தத்தி தத்தி ஏறிடுவேன்" என்றான் ஒருவன். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை!!

கடைசியில் ஒருவன் கேட்டான்.

‘தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?’.

‘இல்லை’ என்றனர் தேர்வுக் குழுவினர்.

‘நான் விழுந்தது.. பகலிலா.. அல்லது இரவிலா’

‘ஏதற்குக் கேட்கிறாய்?’ -தேர்வுக்குழுவினர்.

இவன் சொன்னான் ‘பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை.. அஜாக்கிரதையானவனும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை. அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.’

அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினருக்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

டிஸ்கி : ஒரு மனிதனின் வெற்றி அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

How India’s cryogenic programme was wrecked


How India’s cryogenic programme was wrecked

Author: Rakesh Krishnan Simha

Publication: Russia & India Report

Date: December 4, 2013

URL: http://indrus.in/blogs/2013/12/04/how_indias_cryogenic_programme_was_wrecked_31365.html

India was all set to master Russian cryogenic rocket technology when the United States – in cahoots with its moles in the Indian Intelligence Bureau – set in motion a series of events that implicated India’s leading space scientists on cooked-up charges.

To understand the extent of damage caused to India’s space programme because of the ISRO spy case, one has to first look at how close India was to mastering cryogenic rocket technology.

Cryogenic rocket technology involves the use of super-cooled liquid fuels to produce massive amounts of thrust in order to lift heavy payloads into space. It will be at the heart of India’s GSLV rocket, which will carry future Indian astronauts to the moon. Without a reliable GSLV India will continue to pay heavy launch fees to foreign space agencies. Because it takes several hours to fuel up a cryogenic rocket, such a rocket cannot be used as a ballistic missile.

This leads to two questions. One, if the United States is really concerned about India developing long-range ballistic missiles, then shouldn’t it try and stop the guys at the Defence Research & Development Organisation, which makes the Agni missiles? Secondly, why would the United States want to delay the development of India’s heavy lift commercial rockets?

It doesn’t require a rocket scientist to figure that out. India is the only developing country with heavy lift ambitions and its ultra-low cost model could one day put the likes of NASA out of business. That’s an eventuality that the United States wants to delay for as long as it can.

Birth of a rocket

Author and broadcaster Brian Harvey writes in his exhaustively researched book ‘Russia in Space: The Failed Frontier’ that in the late 1980s India was looking to develop a massive rocket to launch satellites into 24-hour orbit. India first talked to Japan but nothing came off it. Hearing of these overtures, the Indians were approached first by General Dynamics Corporation, which offered an American engine. But the cost was prohibitive as was an offer shortly thereafter from Europe’s Arianespace.

“Just then a third approach came, this time from the Soviet Union, offering two engines and technology transfer for the more reasonable price of $200 million,” writes Harvey.

The Russians were offering a secret engine, the RD-56 or KVD-1, built by the Isayev Design Bureau. The KVD-1 had unsurpassed thrust and capabilities and NASA had nothing that could match the Russian engine for years. In fact, the rocket engine was originally developed as part of the Soviet manned moon landing programme as far back as 1964.

Over to Moscow

On January 18, 1991 the Indian Space Research Organisation (ISRO) inked an agreement with the Russian space agency Glavkosmos for the transfer of cryogenic technology. Following the collapse of its Soviet empire, Russia was under considerable American influence. In this backdrop, both Glavkosmos and ISRO anticipated the United States would try and stymie the deal.

So Glavkosmos and ISRO drew up Plan B – outsource the manufacture of the cryogenic engines to Kerala Hi-tech Industries Limited (KELTEC). The arrangement was designed to get around the provisions of the Missile Technology Control Regime (MTCR) – a Western cabal that aims to deny ballistic missile technology to non-Western countries, especially India.

The space czars of the two countries – Aleksey Vasin, officer-in-charge of cryogenic technology in Glavkosmos, and ISRO Chairman U.R. Rao – reckoned that if Russian cryogenic technology was passed on to ISRO via KELTEC, technically it would not be a violation of the MTCR.

Rocket row

The arrangements were denounced by American President George Bush as a violation of the MTCR. In May 1992 the United States slapped sanctions on ISRO and Glavkosmos. “India objected strongly to the American actions, pointing out that high-powered hydrogen-fuelled upper stages which took a long time to prepare were of little military value,” writes Harvey.

India also pointed out the Americans had offered them the very same technology and had made no objections throughout the years 1988-92 when the arrangements had begun.

So does that mean the Americans were trying to achieve the dual aim of crippling both the Indian and Russian space programmes? Well, here’s Glavkosmos’ version.

Glavkosmos official Nikolai Semyonov accused Washington of attempting to destroy Russia’s space industry. “When working out the contract, we used the MTCR guidelines in reaching the contract with India…what is more, Indian partners said at the start and later confirmed that they would use our technology exclusively for peaceful purposes.”

Glavkosmos Chairman Aleksandr Dunayev said both Russia and India had called for an international inspection to determine that the deal did indeed comply with the terms of the MTCR. However, the United States did not respond to the proposal, but sent a US team to Russia to examine the situation.

Clinton: Playing hardball with India

Former US President Bill Clinton and his hawkish wife Hillary Rodham Clinton are for some inexplicable reason considered friends of India. It was under President Clinton that Russia backed off its proposals to transfer technology to India and suspended its agreement, invoking force majeure (circumstances beyond its control).

Under the revised Russia-India agreement in January 1994, Moscow agreed to transfer three, later renegotiated by India to seven fully assembled KVD-1 engines, without the associated technology. The United States also inserted a humiliating clause, according to which India would “agree to use the equipment purely for peaceful purposes, not to re-export it or modernise it without Russia’s consent”. No blueprints were to be given to India.

Duma fury

The Russian Parliament, however, was in no mood to let President Boris Yeltsin bail on India. On July 21, 1993 it passed a resolution declaring that international negotiations and agreements regarding the MTCR must be ratified by the Supreme Soviet of the Russian Federation.

A day later, Glavkosmos upped the pressure on Yeltsin, saying a decision to alter the Indian contract needed a special decision of the government. “We shall not stop fulfilling our obligations under the (Indian) contract until there is a government decision to the contrary,” said Glavkosmos’ Semyonov.

Really friendly scientists

Russian scientists sympathetic to the Indian cause realised the tech transfer window was about to close, and decided to transfer the production technology to their old friends.

However, with American spies crawling all over Russia during the early 1990s, transferring such a large cargo wasn’t going to be easy. “ISRO first contacted Air India but the airline said it could not transport the equipment without customs clearance. And that was not possible without the American lobby in Russia coming to know about it,” J. Rajasekharan Nair reveals in his book, Spies From Space: The ISRO Frame-Up.

So ISRO entered into an agreement with Russia’s Ural Airlines, which was ready to take the risk for a little extra money. According to Harvey, “The appropriate documents, instruments and equipment were allegedly transferred in four shipments from Moscow to Delhi on covert flights by Ural Airlines. As a cover, they used ‘legitimate’ transhipments of Indian aircraft technology travelling the other way to Moscow for testing in Russian wind-tunnels.”

This was confirmed by cryogenic team leader Nambi Narayanan who told the Indian media he was on board the flights that transported the technology to India.

The knife turns

The United States knew further arm-twisting at the diplomatic level would not be productive, says Nair. “So the CIA was entrusted with the job of aborting the circumlocutory transfer of cryogenic rocket technology through KELTEC, and of stalling or discrediting the transportation of raw materials and spare parts to ISRO.”

Who’s working for the CIA in India?

The first hint there was a foreign hand trying to destroy – or at the very least slow down – India’s space programme surfaced in 1997 when five leading scientists – Satish Dhawan, U.R. Rao, Yashpal, Rodham Narasimha and K. Chandrasekhar – along with former Chief Election Commissioner T.N. Seshan wrote a joint letter to the government, saying the espionage charges against Nambi Narayanan and Sasi Kumaran were fabricated.

These were not ordinary people – they were public figures who clearly knew a thing or two about the inner workings of ISRO and the law and order system. And yet despite their plea, the IB tortured Nambi Narayanan to get him to implicated higher ups at ISRO. If Narayanan had cracked and acquiesced, perhaps the entire organisation would have collapsed.

It is a measure of how successful the CIA was in this spy game that its agents in the Kerala Police and Intelligence Bureau (IB) were able to have a swing at just about everyone in the cryogenic project.

For instance, the IB had Vasin of Glavkosmos interrogated at Moscow, and tried to link him to the case. “The IB implicated Ural Airlines after airing the lie that Ural had, as part of the espionage activities, transported documents from ISRO to Glavkosmos,” says Nair.

(Nair also claims because of pressure from above, his book was made to disappear from stores and was never reprinted.)

That the policemen who went after India’s top scientists and the IB men who guided them have been either cleared of all wrongdoing or remain unquestioned hints at their connections way up in the political leadership. The big question is who are these people who aided the CIA in scuttling India’s biggest space project?

This is in relation to the traitorous role played by Sanjiv Bhatt in wrecking the Indian space programme. It is the same Sanjivji who is used by Teesta Setalvad and the Congress party to create all sorts of legal problems for the Hindu organisations. And the mainstream media is happy to project this effort as legitimate.

__.

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

திருப்புகழில் சுந்தரகாண்டம்


திருப்புகழில் சுந்தரகாண்டம்

கடல் என்பது அக்கரை. நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அலைகள் ஆர்ப்பரித்து நம்மை வசீகரிக்கும். எந்த வயதுக்காரரையும் தன்னுள்ளே இழுத்து, காலையாவது நனைப்போம் என்று எண்ண வைக்கக்கூடிய அற்புத அழகை உடையது. கரையே இவ்வளவு அழகாய் இருந்தால் நடுக்கடல் எவ்வளவு நன்றாக இருக்கும், கடலின் அக்கரையும் அழகாக இருக்கும் என்று நினைத்து, சிறு வரம்பைத் தாண்டி உள்ளே போனால் என்ன ஆகும்? தன் அழகைக் காட்டி நம்மை கண நேரத்தில் உள்ளே இழுத்துக் கொண்டு, அழுத்தி விடும் அல்லவா! யாரேனும் வந்து காப்பாற்றும்வரை தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான், தப்பித் தவறி உயிரோடிருந்தால்? ஒரே பாடலில், அருணகிரிநாதர், மனிதன் எப்படி ஆசைகளை வளர்த்துக் கொண்டு பாவக் கடலுக்குள் அமிழ்கிறான் என்றும், அனுமன் நிஜத்தில் கடலை எப்படிக் கடக்கிறார் என்றும் சுவைபட எழுதியுள்ளார்.

ஆசாபாசங்கள் ஒன்றுமே இல்லாமல், கரையில் நின்றுகொண்டிருந்த ஹனுமன், துணிந்து கடலில் இறங்கி சாதனை எப்படிப் புரிந்தான்?

சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்து விட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும் தாக்குகின்றன. இனித் தெற்கு திசை ஒன்றுதான் உள்ளது, அதில் ஹனுமனை அனுப்பினால் மட்டுமே முடியும் என்று சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை உணர்ந்த ஹனுமனும் தென் திசை செல்வது என்றும், திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன் மட்டுமே வருவது என்றும் திட சித்தம் கொள்கிறான். மற்றவருடைய நன்மைக்காக தன்னையே பணயமாக வைப்பது என்பது, எத்தகைய ஒரு தியாக குணம். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் முன்னே நிற்கிறான். இந்தக் கடலை எப்படிக் கடப்போம் என்று யோசிக்கவில்லை. சீதாப் பிராட்டி தென் திசையில் இருப்பாரா என்று தெரியாது, எங்கே கிடைப்பார், ஒரு வேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி அடையாளம் கண்டு கொள்வது, தான் பார்த்தது சீதாப்பிராட்டிதான் என்று ஸ்ரீராமனுக்கு எப்படி நிரூபிப்பது? இத்தகைய எண்ணங்கள் ஹனுமனிடம் இல்லை. தான் சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் கூட இல்லை. இறை பக்தி ஒன்று மட்டுமே அவனிடம் இருந்தது. அசஞ்சலமான மனத்துடன் அந்தப் பணியை சிரமேற்கொண்டு, பெருங் கடலைத் தாண்டி இலங்கை சென்று அரக்கர்களை அழித்து, பிராட்டியைக் கண்டு, அவர் அளித்த திருவாழி மோதிரத்தைப் பெற்று வந்து, ஸ்ரீராமபிரானிடம் கொடுக்கிறான்.

அந்த ஒருகணம் இராமனது மனது எவ்வளவு நிம்மதி அடைந்திருக்கும்….! அதைக் கண்ட ஹனுமன் எல்லையில்லா சந்தோஷம் அடைந்திருப்பான் அல்லவா! பல வித எண்ணங்களிலும் உழலாமல், தன் கடமையின் மேல் கண்ணாக இருந்து, இராம பக்தியை மட்டுமே முன்னிறுத்தி இந்த சாதனையைப் புரிந்தது அஞ்சனை புத்திரன் சுந்தர புருஷன் அல்லவோ! சுந்தர காண்டத்தின் மையப் பொருளாக உள்ள இந்த த்ருஷ்டாந்தத்தை அருணகிரிநாதர் கதிர்காமத் திருப்புகழில் அருமையாக அனுபவிக்கிறார்.

உடுக்கத் துகில் வேணு நீள்பசி

அவிக்கக் கனபானம் வேணுநல்

ஒளிக்குப் புனலாடை வேணுமெய்

உறுநோயை

– என்ற திருப்புகழில்

அருட் பொற்றிரு வாழி மோதிரம்

அளித்துற்றவர் மேல் மனோகரம்

அளித்துக் கதிர்காம மேவிய

பெருமாளே …..திருப்புகழ் ….638

– என்று பாடுகிறார். இந்தத் திருப்புகழ் படித்தால், சுந்தரகாண்ட பாராயணமே செய்தது போலாகி, அது நம்மை கரையேற்றும்.

திருப்புகழில் சுந்தரகாண்டம் கடல் என்பது அக்கரை. நம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அலைகள் ஆர்ப்பரித்து நம்மை வசீகரிக்கும். எந்த வயதுக்காரரையும் தன்னுள்ளே இழுத்து, காலையாவது நனைப்போம் என்று எண்ண வைக்கக்கூடிய அற்புத அழகை உடையது. கரையே இவ்வளவு அழகாய் இருந்தால் நடுக்கடல் எவ்வளவு நன்றாக இருக்கும், கடலின் அக்கரையும் அழகாக இருக்கும் என்று நினைத்து, சிறு வரம்பைத் தாண்டி உள்ளே போனால் என்ன ஆகும்? தன் அழகைக் காட்டி நம்மை கண நேரத்தில் உள்ளே இழுத்துக் கொண்டு, அழுத்தி விடும் அல்லவா! யாரேனும் வந்து காப்பாற்றும்வரை தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான், தப்பித் தவறி உயிரோடிருந்தால்? ஒரே பாடலில், அருணகிரிநாதர், மனிதன் எப்படி ஆசைகளை வளர்த்துக் கொண்டு பாவக் கடலுக்குள் அமிழ்கிறான் என்றும், அனுமன் நிஜத்தில் கடலை எப்படிக் கடக்கிறார் என்றும் சுவைபட எழுதியுள்ளார். ஆசாபாசங்கள் ஒன்றுமே இல்லாமல், கரையில் நின்றுகொண்டிருந்த ஹனுமன், துணிந்து கடலில் இறங்கி சாதனை எப்படிப் புரிந்தான்? சீதையைத் தேடி மேற்கு, கிழக்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் சென்ற வீரர்கள் வெறும் கையுடன் வந்து விட்டனர். கவலையும் சோகமும் எல்லோரையும் தாக்குகின்றன. இனித் தெற்கு திசை ஒன்றுதான் உள்ளது, அதில் ஹனுமனை அனுப்பினால் மட்டுமே முடியும் என்று சுக்ரீவன் சொல்கிறான். இந்தக் குறிப்பை உணர்ந்த ஹனுமனும் தென் திசை செல்வது என்றும், திரும்பி வந்தால் பிராட்டியைப் பற்றிய செய்தியுடன் மட்டுமே வருவது என்றும் திட சித்தம் கொள்கிறான். மற்றவருடைய நன்மைக்காக தன்னையே பணயமாக வைப்பது என்பது, எத்தகைய ஒரு தியாக குணம். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் முன்னே நிற்கிறான். இந்தக் கடலை எப்படிக் கடப்போம் என்று யோசிக்கவில்லை. சீதாப் பிராட்டி தென் திசையில் இருப்பாரா என்று தெரியாது, எங்கே கிடைப்பார், ஒரு வேளை அவரைக் கண்டால் தன்னை எப்படி அடையாளம் கண்டு கொள்வது, தான் பார்த்தது சீதாப்பிராட்டிதான் என்று ஸ்ரீராமனுக்கு எப்படி நிரூபிப்பது? இத்தகைய எண்ணங்கள் ஹனுமனிடம் இல்லை. தான் சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணம் கூட இல்லை. இறை பக்தி ஒன்று மட்டுமே அவனிடம் இருந்தது. அசஞ்சலமான மனத்துடன் அந்தப் பணியை சிரமேற்கொண்டு, பெருங் கடலைத் தாண்டி இலங்கை சென்று அரக்கர்களை அழித்து, பிராட்டியைக் கண்டு, அவர் அளித்த திருவாழி மோதிரத்தைப் பெற்று வந்து, ஸ்ரீராமபிரானிடம் கொடுக்கிறான். அந்த ஒருகணம் இராமனது மனது எவ்வளவு நிம்மதி அடைந்திருக்கும்....! அதைக் கண்ட ஹனுமன் எல்லையில்லா சந்தோஷம் அடைந்திருப்பான் அல்லவா! பல வித எண்ணங்களிலும் உழலாமல், தன் கடமையின் மேல் கண்ணாக இருந்து, இராம பக்தியை மட்டுமே முன்னிறுத்தி இந்த சாதனையைப் புரிந்தது அஞ்சனை புத்திரன் சுந்தர புருஷன் அல்லவோ! சுந்தர காண்டத்தின் மையப் பொருளாக உள்ள இந்த த்ருஷ்டாந்தத்தை அருணகிரிநாதர் கதிர்காமத் திருப்புகழில் அருமையாக அனுபவிக்கிறார். உடுக்கத் துகில் வேணு நீள்பசி அவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் உறுநோயை - என்ற திருப்புகழில் அருட் பொற்றிரு வாழி மோதிரம் அளித்துற்றவர் மேல் மனோகரம் அளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே .....திருப்புகழ் ....638 - என்று பாடுகிறார். இந்தத் திருப்புகழ் படித்தால், சுந்தரகாண்ட பாராயணமே செய்தது போலாகி, அது நம்மை கரையேற்றும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சி ல டிப்ஸ் …


“உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சில டிப்ஸ் …

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.

கணவன் மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான்

கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர்.

குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது

அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள்.

நீங்கள் புன்னகை செய்தாலேஅடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள்.

அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள்.

இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட
நேரிடும்.

இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம்.

வாயினால் தெரிவிக்க கூடாது.

அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு

தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள்.

இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது.

மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது.

இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள்.

நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம்.

இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள்.

மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல் உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள்.

நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை
சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால்,

மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம்.

எனவே வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும்
பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதன கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும்

சண்டையை வளர்க்க கூடாது.

அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்.

….


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பசும்பால் சைவமா அல்லது அசைவமா?


பசும்பால் சைவமா அல்லது அசைவமா?

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே!

அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.

பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது.

அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும்.

ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது.

காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது.

ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம்.

துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

..

0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Happy new year. Keep smiling!


Happy new year.
Keep smiling!

This is what
SORRY

LOOKS LIKE.

This is what
Bad spelling

Looks like…

This is what
Intimacy

Looks like.

This is what
Courage

Looks like.

This is what
‘I can wait’

Looks like.

This is what
Impatience looks like.

This is what a
Helping hand

Looks like

This is what
Cold

Looks like.

This is what a
Bad mood

Looks like.

It doesn’t matter how many people you send this to.

Just remember if it made you smile . . . your friends will smile too!

Life is too short to wake up in the morning with regrets, so . . .


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க் கம் தான்


கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக் கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்கா விட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத் தையும் முழு மனதாய் கணவன் ஏற்க வேண்டும். கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் சீக்கிரமாய் வீடு திரும்ப முயற்சிக்கணும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக் கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“தன்னம்பிக்கை கதை”.


"தன்னம்பிக்கை கதை".

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான். வெறுத்துப் போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள், ”இன்றிலிருந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால் தான் உனக்கு சாப்பாடு,” என்றார்.

இளைஞன் நொந்து போய் விட்டான். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ”நீ வெளியில் போய் வா. நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன். நீ அதை அப்பாவிடம் கொடுத்து விடு” என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.

அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்த போது அவர் அதை வாங்கி, ”நீயும் உன் ரூபாயும்,” என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார். இளைஞன் அமைதியாக இருந்தான். சில நாட்கள் இப்படியே போயிற்று. ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை. சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .

ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை , ”நீயும் உன் ரூபாயும், ”என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார். இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை. மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.

தாய் வேறு வழியில்லாது, ”மகனே, இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார். நான் என்ன செய்ய முடியும்? என்று கூறி கை விரித்து விட்டார்.

இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.

அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான். அன்றும் வழக்கம் போலத் தந்தை, ”நீயும் உன் ரூபாயும், ”என்று கூறித் தூக்கி எறிந்தார்.

இளைஞனுக்கு வந்ததே கோபம்! ”அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே, என்ன நியாயம்?” என்று கேட்டான்.

தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து, அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக் கொண்டு, ”இது என் மகன் உழைப்பில் வந்த பணம், இனி அவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை” என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந் ததே! அது எப்ப‍டி?


இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜர். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக்கார மாநிலமாக முன்னி ருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக் கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜர் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவோ?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப் பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி…என்று
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!
காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)

இதில் இனொன்று கவனிக்க தக்க விஷயம் அவர் செயல் படுத்திய பெரும்பாலான மின் திட்டங்கள் சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாதவை .
காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600 மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றால் இப்போதுள்ள அரசியல் வாதிகளுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்……..


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

குட்டி கதை !!


குட்டி கதை !!

ஒரே வீட்டில் வேலை செய்யும் தம்பதிகள் ரேவதியும் முருகனும். முன்னமே வந்திருந்த முருகன் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த ரேவதியிடம்,

“ஏண்டி முதலாளியம்மா தன் மகளோட பழைய துணிகள கொடுத்ததுக்கு வேண்டாம்னு சொல்லிட்டியாமே"

“ஆமா..”, ஒரு பார்வையோடு சொன்னாள்..

“நம்ம பொண்ணுக்குனு தானே தந்தாங்க.. பாவம் அந்தம்மா சொல்லி வருத்தபட்டாங்க..”, சலித்துகொண்டே தொடர்ந்தான்.. “ஏன் வேண்டாம்ன, நம்ம பொண்ணுகூட காலேஜ் போட்டு போக துணி கேட்டா இல்ல..”

தீர்க்கமாக திரும்பி நின்று விளக்கமளித்தாள், “அவங்க பொண்னு போடற துணி உடம்பை கவ்வி அங்கங்கள எடுத்து காட்ர மாதிரி இருக்கும்.. அவங்க கார்ல போவாங்க பாதுகாப்பா இருக்கும்.. நம்ம பொண்ணு காலேஜ், ரோடு, பஸ், வண்டி னு போகும் போது நல்லாவா இருக்கும்.. நாளைக்கு எவனா எதுனா பண்ணிட்டான்னு வந்து நின்னா யாரை குத்தம் சொல்ல முடியும் சொல்லுங்க. நம்ம பொண்ணு எந்த துணி போட்டாலும் சரி, அது மரியாதையை எற்படுத்தனும், கவர்ச்சியை ஏற்படுத்தக்கூடாது!”

மெள்ளிய புன்னகையோடு தன் அமோதிப்பை காட்டினான்..


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE