RE_Bequem einen Steifen_haben!

Wir garantieren Ihnen top Vorteile:

  • rezeptfreie Bestellung
  • wir garantieren Ihnen durch internen Versand keine Zollprobleme
  • die Lieferzeit wird ab dem Zeitpunkt der Abrechnung berechnet und beträgt 48 Stunden

Wir versenden nun diskret mit DHL Versand von Bremerhaven.

Erleben Sie auch in manchen Nächten nachlassende Härte beim Sex?
Sie sind nicht allein, denn viel mehr als 6 Mill. Männer sind alleine in Deutschland betroffen.

Unsere Präparate wirken sicher auch bei Ihnen.

Kundenservice Herr David Wahl

Etwas-tatsächlich_hartes im_richtigen Augenblick

Erleben sie oft kleine Problemchen beim Eindringen?
Sie sind keine Ausnahme, denn über 4 Mill. Männer sind in Deutschland betroffen.

Wir halten unsere Versprechen:

  • wir versende auch an eine Packstation
  • garantiert rezeptfrei und unkompliziert
  • Ihre Partnerin wird vor Lust schreien

Wir versenden nun diskret mit DHL Express aus Kiel. Unsere Präparate wirken bei jedem!

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி

*********************************தினமும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து அபிராமி அம்மனை நினைத்து வழிபட்டால், வாழ்வில் அல்லல்கள் மறைந்து நல்லவை எல்லாம் உதித்தெழும்.அனைத்தும் வசமாக***********************கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.பொருள்: அன்னையே! என் தந்தையாம் சிவ பிரானின் சிந்தையில் நீங்காது நிற்பனவும், திருவிழிகளில் காட்சி தருவனவும், அழகிய பொன் மலையாம் மேருவைப் போன்று பருத்த னவும், அழுத பிள்ளையான ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பாலூட்டியதுமான திருத்தன ங்களும், அவற்றின்மேல் புரளும் முத்துமாலை யும், சிவந்த திருக்கரத்திலுள்ள கரும்பு வில், மலர் அம்புகள் ஆகியனவும், மயிலிறகின் அடி ப்பாகம் போன்ற அழகிய புன்னகையும் காட்டி, உன் முழுமையான திருக்கோலக் காட்சியை எனக்குக் காட்டியருள்க.மோட்ச சாதனம் பெற************************நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்துஅன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!பொருள்: எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக் கூடிய அரும் பொருளா யும், சிவபிரானின் திருவருள் வடிவமாயும் விளங்கும் உமையன்னையே! நான் நின்றவா றும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவா றும், தியானம் செய்வதும் உன்னைத்தான்; என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னு டைய திருவடித் தாமரையையேதான்.இல்வாழ்க்கையில் இன்பம் பெற************************************ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.பொருள்: ஆனந்த உருவமாகி, என் அறிவாகி, நிறைவான அமுதமும் போன்றவளாகி, வானம் இறுதியாயுள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை, நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது, வெண்ணிறச் சாம்பல் படர்ந்த மயானத்தைத் தாம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ்கிறது.தியானத்தில் நிலைபெற****************************கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்திபண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவாநண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்தபுண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.பொருள்: என் அன்னையே! உலகங்கள் ஏழை யும் பெற்ற தாயே! நான் அல்லும் பகலும் கருது வதெல்லாம் உன் புகழ்; கற்பதெல்லாம் உன் திருநாமம். எந்நேரமும் உள்ளமுருகப் பிரார்த் திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத் தான். நான் கலந்து கொண்டு உன்னை வணங்குவதெல்லாம், உன்னை மெய்யாக விரும்பித் தொழும் அடியவர்களின் கூட்டத்தில் தான். இவ்வளவுக்கும் காரணமாக நான் முற் பிறவிகளில் செய்த புண்ணியம்தான் ஏதோ அறியேன்.வைராக்கிய நிலை எய்த****************************பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்குமூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!பொருள்: ஈரெழுலகங்களையும் திருவருளால் ஈன்றதுடன், பாதுகாப்பவளும், சம்காரம் செய்ப வளுமான தாயே! நஞ்சினைக் கண்டத்தில் கொண்ட நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தவளே! என்றுமே மூப்பறியாத திருமாலி ன் தங்கையே! பெருந்தவத்தை உடையவளே! நான் உன்னையே தெய்வாமாக ஏற்று வழிபடு வதை தவிர இன்னொரு தெய்வத்தை வழிபட என்னால் இயலுமோ?தலைமை பெற*****************வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.பொருள்: எம் தலைவியான அபிராமி அன்னை யே! தேவர்கள், அசுரர்கள் ஆகிய இருவகையி னரும் உன்னை வழிபடுகிறார்கள். பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர். மேலான ஆனந்த வடிவினரான சிவபெருமானோ, தம் உள்ளத்தி னுள்ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவ ர், இவ்வாறெல்லாம் இருப்பதால், உலகில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு உன்குளிர்ச்சி மிக்க திருவருள் தரிசனம் தரிசிப்பவர்களுக்கு அது மிக எளிதாக இருக்கிறது.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற*****************************************தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.பொருள்: அழகிய பண்ணைப் போன்று இனிய மொழிகளைப் பேசும் நறுமணங் கமழும் திரு மேனியையுடைய யாமளையாகிய பசுங்கிளி யே! உன் பேரருளைப் பெற வேண்டுமென முற் பிறவிகளில் பலகோடி தவங்களைச் செய்தவர் கள், இவ்வுலகைக் காக்கும் அரசபோகத்தை மட்டுந்தானா பெறுவர்? யாவரும் மதிக்கும் தே வர்களுக்கேயுரிய வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் என்றும் அழிவற்ற மோட்சம் என்னும் வீட்டையும் அன்றோ பெற்று மகிழ்வர்?அபிராமி தாயே திருவடி சரணம்….

நேசமுடன் விஜயராகவன்…..

Was hartes – ohne Zoll

Sie wollen gerade starten und er wird im entscheidenden Moment nicht richtig hart? Ihnen kommt das sehr bekannt vor? Alle wissenschaftliche Tests beweisen eindeutig, dass jeder Mann, öfters Probleme im Bett hat.

  • die Lust ist eindeutig vorhanden – aber die Härte lässt nach
  • die Erektion schwächt sich regelmäßig ab, während des lustvollen Sex Erlebnis
  • auch bei gesunder Lebensweise steht er nicht wie mit18

Lizenzierte Tabletten für jeden Geschmack. Umgehend in 3 min. bestellen und in einigen Tagen das Paket im Briefkasten haben.

பேசும் தெய்வம் — நங்கநல்லூர் J K SIVAN

பேசும் தெய்வம் — நங்கநல்லூர் J K SIVAN

சத்யகாம ஜாபாலி கதை அக்ஷர லக்ஷம் என்று கேள்விப்பட்டதுண்டா? ஒவ்வொரு எழுத்துக்கும் லக்ஷம் ரூபாய் இல்லை, பொன் கொடுத்தாலும் அது ரொம்ப ரொம்ப குறைவு. அப்படிப்பட்ட அக்ஷரங்களை உபயோ கித் த மஹா புருஷர்கள் இந்த புண்ய பாரத தேசத்தில் இருந்தார்கள். நம் காலத்தில் அப்படி ஒருவர் மஹா பெரியவா. அவர் சொன்ன சில கருத்துகளை பாருங்கள். அதன் ஆழம், உண்மை பொதிந்திருப்பது புரியும்.”குரு என்பவர் தான் நம்மை நல்வழிப்படுத்து பவர். முதல் குரு அம்மா. அப்பா அப்புறம் தான் பேசத்தெரிந்த பிறகு வளர்ந்த பின் குரு. அம்மாவின் கர்ப்பத்தில் இருக்கும்போது, அவள் சாப்பிடும் ஆகாரம், நீர் மூலமாக நாம் உண்டு உயிர் வாழ்ந்து வளர்ந்து வெளிவந்தவர்கள். அவள் குணம் நமக்கும் உள்ளது. அவள் நல்வழி யில் நடந்தால் நாமும் ஆட்டோ மேட்டிக் காக automatic நல்லவர்கள். அப்புறம் வளர்ந்தபின் புராணம், இதிகாசம், கதைகள் சொல்லி, ஸ்தோத்ரம் நீதி பாடல் எல்லாம் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்திய முதல் குரு. இது தெரிந்ததால் ஆதி சங்கரர் முதலில் அம்மாவை வைத்து ”மாதா பிதா, குரு தெய்வம்” என்று வரிசைப்படுத்தினார். அம்மா தான் முதல் குருஸ்தானத்தில் இருப்பவள் என்பதற்கு இது ப்ரமாணம். அம்மாவின் பேர் சொல்லி ப்ரஹதாரண்யக உபநிஷத்தில் ஏராளமான ரிஷிகளை அடையாளம் சொல்லி இருக்கு. சாந்தோக்ய உபநிஷத்தில் ரெண்டு ரிஷியை அப்படி காட்டி இருக்கு.ஆசை ஒரு தீராத தாகம். ‘த்ருஷ்ணா ‘ என்றால் தாகம், ஆசை என இரண்டையும் குறிக்கும் சொல். . புத்தர் ஆசையை ‘த்ருஷ்ணா’ என்று சொன்னதைத்தான் ‘தன்ஹா’ ‘தன்ஹா’ என்று பாலி மொழியில் எழுதி இருக்கிறது. கிருஷ்ணனை ‘தேவகி சுதன், தேவகி புத்ரன் ‘ என சொல்வது வழக்கம். வஸுதேவர் பிள்ளை என்பதால் வாசுதேவன் என்று பெயர். 125 வயஸு ஆயுஸிலும் முதல் பாகத்தில் வஸுக்கள்தான் ப்ராணாதாரமாக இருப்பது. ஆனாலும் தம்மு டைய மாயையால், தேவகி புத்ரன் என கிருஷ்ணன் தம்மை ரிஷிக்குச் சொல்கிறார்.கிருஷ்ணாவதார வித்து எதுவோ அதை வஸு தேவர் மனஸிலே தரித்து தேவகியின் மனஸுக்கு அனுப்பி வைத்ததால் பௌதிக கர்ப்பம் இல்லா மல் மானசீக ரீதியில் தேவகி புத்திரனாக கிருஷ் ணன் அவதரித்ததாக பாகவதம் சொல்கிறது. சரீர சம்பந்தத்தால் அவர்களை அப்பா அம்மா என்று காட்டவில்லை. என்றாலும் தேவகி வாஸ்தவமாகவே கர்ப்பவதியாக இருந்து தான் கிருஷ்ணனைப் பெற்றாள் . மாத்ரு ஸ்தானம் அவளுக்கு ஞாயம். அம்மா பேரில் உபநிஷத்தில் அறிமுகமான இன்னொருத்தர் ‘ஸத்யகாம ஜாபாலர்’ என்கிற ரிஷி. அம்மாவோடேயே இளவயதில் வசித்தவர். அப்பா, சத்யகாமன் பிறக்கு முன்பே ‘போய் ‘ விட்டாரோ, அல்லது வீட்டை விட்டு ஓடிப் போனா ரோ என்னவோ? தன் வயஸொத்த பிள்ளைக ளெல்லாம் குருகுலவாஸம் பண்ணிக் கொண்டு ப்ரஹ்மசர்யம் அநுஷ்டித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சத்யகாமன் தானும் குருகுலவாசம் பண்ண விரும்பினான். அம்மாவிடம் தன் ஆசையைச் சொல்லி, குரு குலத்தில் ஆச்சார்யர் கேட்பார் என்று தனது கோத்ரம் எது வென்று கேட்கிறான் சத்யகாமன். “அப்பா, கொழந்தே எனக்கு உன் கோத்ரமும் தெரியலை, ஒண்ணும் தெரியலை! வேண்டு மானால் ஒண்ணு வேணா பண்ணு. என் பேர் ஜாபாலா. என் பிள்ளையானதுனால என் பேரை வெச்சு ஜாபாலன். ஒனக்குப் பேர் ‘ஸத்ய காமன்’னு வெச்சிருக்கு. அதனால குருகுல ஆச்சார்யர் கேட்கும்போது உள்ளதை உள்ளபடி சொல்லி உன்னை ‘ஸத்யகாம ஜாபாலன்’னு தெரிவிச்சுக்கோ” என்றாள்.ஸத்யத்தில் பற்றும், ப்ரியமும் தான் ”ஸத்ய காமம்”. அந்த தாய் மகன் நிஜம் பேச வேண்டும் என்று விரும்பி மகனிடம் இன்ன கோத்ரம் என்று பொய்யாக ஒன்றைச் சொல்லவில்லை. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. ஆச்சார்யர் ஹாரித்ரும கௌதம ரிஷியிடம் போய் ஸத்யகாமன் என்ற பேருக்கேற்ப அந்த சிறுவன் அம்மா சொன்னபடி ”நான் ஸத்யகாம ஜாபாலன் என்று பெயர் சொல்லி நமஸ்காரம் பண்ணினான். அவனிடம் கேட்டு விஷயமறிந்த குரு இவனே சிறந்த உயர் குலத்தோன் என்று சத்ய காமனுக்கு குரு உபநயனம் பண்ணி வைத்து அவரது சிஷ்யனாகச் சேர்த்துக் கொண் டார். அம்மா பேரில் வம்சம் சொல்கிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. சிஷ்யன் எப்படி ஸத்ய்ஸந்தனாக இருக்கணும், மானாபிமானம் விட்டு இருக்கணும், வித்யைக் காக தாஹம் கொண்டவனாக இருக்கணும் என்பதெல்லாமும் படிப்பினையாகிறது. அப்படிப்பட்ட, ஒருவன் விரும்பியபோது உபதேசம் தருவது குருவுக்கும் பெருமை. ”சான்றோர்க்குப் பொய்யாவிளக்கே விளக்கு’ .

Immer einen Harten

Kleine bis große Engpässe beim Sex können jeden beeinträchtigen. Auf Dauer hilft viel Bewegung und Stressabbau.
Sofort helfen effektive Mittel.

– zugelassene Produkte für jeden Geschmack
– das Haltbarkeitsdatum ist über 1 Jahr
– das Paket kommt zu Ihnen zollfrei aus Deutschland

Sichere Pillen für jeden Geldbeutel.
Sofort in 2 Minuten bestellen und in ein paar Tagen das Päckchen zu Hause haben.

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி.

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி…அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழு பேரில் ஒருவர். ஆஞ்சநேயன்”, (அஞ்சனாவின் மகன் ), ”கேசரி நந்தனா” (கேசரியின் மகன்), ”வாயுபுத்திரா” அல்லது ”பவன் புத்திரா” (வாயுதேவனின் மகன்) என அழைக்கப்படுகிறார். காதால் கேட்க கிளிக் பண்ணுங்கமாருதியை பார்க்க…Subscribe பண்ணுங்க…

.https://www.youtube.com/channel/UC_c45MUAXulFSkgI6gvJ9ig

சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. “ஹன்” என்பதற்கு “கொன்றவன்”, “மானம்” என்பதற்கு “தற்பெருமை” என்பதல், “ஹன்மான்”, என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு ஆஞ்நேயரின் தாயார் அஞ்சனாதேவிமுற்பிறவியில் பிரம்மாவின் சபையில் ஆடல் அழகியாக இருந்தார். ஒரு நாள் ஒரு முனிவர் குரங்கு போல தனது உடலை மாற்றிஆசனமிட்டுஅமர்ந்து தவத்தில் இருந்தார். குரங்கை பழங்களால் அஞ்சனாதேவிஅடித்து விளையாடினார்.கண் விழித்து முனிவராய் எழுந்து “நீ யார் மீதாவது காதல் கொண்டால், அந்த தருணமே குரங்காக மாறிவிடுவாய்” என சாபமிட்டார். தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு மன்றாடினாள் அஞ்சனாதேவி. தனக்கு குரங்கு முகம் இருந்தாலும், தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் என்றும், சிவப்பெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினாள். மனமிரங்கிய முனிவரும் அப்படியே ஆகட்டும். சிவபெருமானின் அம்சமாக மகன் பிறந்தவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என அருள்பாலித்தார். முனிவரின் சாபத்தின் பலனால், பூமியில் பிறந்து, ஒரு காட்டில் வசித்து வந்தாள். ஒருநாள் காட்டில் ஒரு அழகிய ஆடவனை கண்டு, அவன் அழகில் மயங்கி, அவன் மேல் காதல் கொண்டாள். காதல் கொண்ட அந்த தருணமே அவள் குரங்காக மாறிவிட்டாள். அவள் அருகில் வந்த அந்த ஆண், தன்னை ”கேசரி” என்றும், தான் ”குரங்குகளின் அரசன்” என்றும் கூறினான். குரங்கு தலையை கொண்ட மனிதனான அவனால் நினைத்த நேரத்தில் மனிதனாகவும், குரங்காகவும் உருமாற முடியும் என கூறினார். அந்த காட்டிலேயே ”அஞ்சனாதேவி”யும் ”கேசரி”யும் கந்தர்வ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சிவப்பெருமானை நினைத்து தவத்தில் இருந்தாள் அஞ்சனாதேவி. ஓர் நாள் சிவபெருமான் ராம ராமஎன ஜெபத்தில் இருக்கும் போதுஅங்கு வந்த பார்வதி தேவிஎன்ன தங்கள் நாமம் உயர்வானதாகஇருக்கும் போது ராம ராம என ஜெபிக்கிறீர்களே என கேட்டார். ஸ்ரீ மகாவிஷ்ணு பூமியில் ராமனாகஅவதாரம் செய்ய இருக்கிறார்.அவரின் இந்த நாமமே இனி அனைத்தைவிட புகழ் பெரும் என சொன்னார் ஈசன். ஸ்ரீ ராமருக்கு உதவி புரிய எனது ருத்ர ரூபத்தை பூமியில் பிறக்க வைக்க போகிறேன் என்றார். அதனை கேட்ட பார்வதி தாயார் தானும் அந்த அவதாரத்தில் இருக்க விரும்பி சிவபெருமானிடம் விண்ணப்பிக்க, முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான். அதனால் கோபம் கொண்ட நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார். அந்த சாபம் பலிக்கவும், ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவு செய்தார் ஈசன். உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என சொன்னவுடன்சரியென சொன்னார் சிவபெருமான். தனக்கு நல்ல குழந்தைகள் கிடைக்க வேண்டும் எனதசரதச் சக்கரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்தார். இதனால், மனம் குளிர்ந்த அக்னிதேவன், தசரதனிடம் புனிதமான பாயாசத்தை கொடுத்து இதனை சரி சமமாக உன்னுடைய தேவியருக்கு பங்கிட்டு கொடுக்க சொன்னார். தசரதனும் தன்னுடைய பட்டத்து ராணியான, கெளசல்யா ( கோசலை)விற்கும், கைகேகிக்கும் இரண்டாகப் பிரித்துக் கொடுத்தார். அவர்கள் இருவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பிரசாதத்தினை சரி பாதியாக பிரித்து, இரண்டு பங்காக சுமித்ராவுக்கு கொடுத்ததினால் அவளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது . தசரதன் அந்த பிரசாதத்தை தன் மனைவியருக்கு கொடுக்கும் போது, அதில் சிறிதளவு பிரசாதத்தை ஒரு பறவை எடுத்துச் சென்று அஞ்சனாதேவி தவம் புரிந்த இடத்தருகே விட்டு சென்றது. காற்றின் கடவுளான வாயுபகவானிடம் அந்த பிரசாதத்தை அஞ்சனாதேவியின் கைகளில் போடுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். பாயாசத்தை பார்த்த அஞ்சனா மிகுந்த சந்தோஷத்துடன் அதனை உண்டாள். அதனை உண்ணும் போது சிவபெருமானின் அருளை அஞ்சனாதேவி உணர்ந்தாள். அதன்பிறகு, குரங்கின் முகத்தை கொண்ட ஒரு மகனைமார்கழி மாத மூல நட்சத்திரத்தில்பெற்றெடுத்தார் அஞ்சனாதேவி. தன் தந்தை கேசரி மற்றும் தாய் அஞ்சனாதேவியின் சக்திகளை அவர் பெற்றார். வாயுதேவனின் மகன் என்பதால் காற்றைப்போல் மிக வேகமாக செயல்பட்டார். அனுமன் தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த பலசாலியாக விளங்கி வந்தார் . சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்தாள் தாய். ஒரு நாள் பசிக்கிறது என்று வானத்தில் அப்போது தான் உதிக்கும் சூரியனை பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார் மாருதி. தேவர்களின் தலைவனான இந்திரன் அனுமனைத் தடுத்து தனது வஜ்ராயுதத்தால் அவரது முகத்தில் தாக்கினார். அது அனுமனை அவரது தாடையில் தாக்கியது, உடைந்த தாடையுடன் அவர் இறந்து பூமியில் விழுந்து விடுகிறார். இதனால் அவரது தந்தை, வாயு (காற்று), (பிரிவு 4.65 இல் ராமாயணம் கூறுகிறது), வருத்தமடைந்து. காற்றை நிறுத்தி விடுகிறார். காற்று பற்றாக்குறை காரணமாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துன்பத்தை உருவாக்கியது. அனைவரும் இந்தப் பிரச்சினையை சிவனிடம் கொண்டுச் செல்கின்றனர். அவர் தலையிட்டு அனுமனை உயிர்ப்பிக்க, வாயு மீண்டும் அனைத்து உயிர்களுக்கும் காற்றினை அளித்தார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டதனால் அனுமானின் உடலும் அதைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கும் என சிவன் வரம் அளித்தார். மீண்டும் அவருக்கு வஜ்ராயுதத்தால் தீங்கு ஏற்படாது என இந்திரன் வரம் அளித்தார். இந்திரனுடன் சேர்ந்து மற்ற தேவர்களான அக்னிதேவனும் அனுமனுக்கு நெருப்பினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வருணன் நீரினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும், வாயு காற்றினால் எவ்வித திங்கும் ஏற்படாது எனவும், வரமளித்தனர். மும்மூர்த்திகளின் ஒருவரான பிரம்மா தேவர்,அனுமன் தன்னால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லலாம் எனவும் அவரை எவரும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வரமளித்தார். விஷ்ணு பகவானோ “கதா” என்னும் ஆயுதத்தை வழங்கினார். மிக மிக குறும்புக்காரராக இருந்தார் பால அனுமன். முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என அவரது தொல்லை சகிக்க முடியாமல் போனது. அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர். அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது. ஆஞ்நேயரின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு, அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன். சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார். கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார். ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக, வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகே வந்த போது, வருவது ஒற்றர்களோ என பயந்த சுக்ரீவன் அனுமனை யார் என பார்த்து வர அனுப்பினார். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவித்து, கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் – அனுமன் நட்பினால், அனுமனின் இதயத்தில் சீதாஇராமன் எப்போதும் குடி கொண்டார்.

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை
புண்ணியம் செய்தவர் மட்டுமே, உலகிலேயே அழகு ததும்பி வழியும், இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!
எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் *திருநல்லம்*.

🙏🏼
*புண்ணியம் செய்தவர்  மட்டுமே, உலகிலேயே அழகு ததும்பி வழியும், இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!*
உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.
சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். 
மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. 
திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.
படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.
இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.
உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.
 ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.
அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.”வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.
கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!
உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.
அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.
இது ஆறாவது சிலை.ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.
மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.
இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள். “அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 
ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம்  போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.”அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன். அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.
மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.
“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?
 கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.
“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..
சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம். ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.
அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை. 
உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!
வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.
குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.
நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.
 ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான். 
“உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.
சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.
“இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல…. “இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.
“இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.
 உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.
 பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது!  தரையை நனைத்தது. 
மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.🙏
எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர் *திருநல்லம்*.

இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும். உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.இறைவி பெயர் தேகசௌந்தரி, ஸ்தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.
☘️🌹🙏🏼🙏🏼🌹☘️

请更正收货地址

亲爱的尊敬的 客户

我们的DHL 全球货运 代理在尝试以跟踪/运单号1407465676交付您的货物时遇到错误。您需要检查DHL自助服务处理平台,

以查看导致该 包裹无法交付的详细信息并进行更正,以便可以 在 接下来的6小时内交付

点 击进入验证您的详细 信息

警告:如果您未在12小时 内未参加此套餐,我们会将其退回给您。

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

          காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

***********************

தேவதாப்ய பித்ருப்யஸ்ச மகா யோகிப்ய ஏவ 

நமஹ ஸ்வதாயைஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ

என்னை ஈன்றெடுத்த என் பெற்றோர்களுக்கும் மூதாதையருக்கும் சமர்ப்பணம்

முன்னுரை

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே

முழு முதர்க்கடுவுளான விநாயகருக்கும், பெற்றூர்களுக்கும்,,

 எனது ஆசிரியர், ஆச்சார்யார்கள், பெரியோர் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி ஸாஷ்டாங்க நமஸ்காரம்.

அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம். நான் எழுதியதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் முன்னர் ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் ஹரி. கிருஷ்ணமுர்தி ஹரிஹரன் என்பது முழுப்பெயர். இந்திய தலைநகர் புது டில்லியில் பிறந்து, வளர்ந்து மத்திய அரசாங்க அலுவலகத்தில் 36 ஆண்டுகள் வேலை பார்த்து அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறேன்.. எனக்கு நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு ஆகையால் எனது இரு செல்வங்களுக்கு புராணங்கள், இதிகாசங்கள், தெனாலி ராமன், என ஆன்மீகம், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, என சின்ன-சின்ன கதைகள் மூலம் சிறு வயது முதல் சொல்லி வந்தேன். அவர்கள் வளர்ந்ததும்  அலை பேசியில் பல மணி நேரங்கள், தொலைக்காட்சி முன் பல மணி நேரம் என்று ஓய்வு நாட்களில் நேரத்தை செலவழித்து வந்தேன்.  தாய் தந்தையர் இருந்த வரை பஜனை, பூஜை, பாடு, நாடகம், என்று வெளி நிகழ்சிகளில் ஈடுபட்டு வந்தேன். அவர்கள் போன பிறகு சென்ற 10 ஆண்டுகளாக வெளி நிகழ்ச்சிகள் குறைந்து கொண்டு வந்தது. தொடர முயற்ச்சித்தாலும் அங்கு வரும் சிலரின் சுயநலத்தனமான நடவடிக்கைகள் மனதை வருத்தின. ஆகையால் ஒதுங்கி இருத்தல் நலமென்று ஒதுங்கி விட்டேன், 

போன மாதம் காசி, பிரயாகை, கயா பயணம் பித்ரு காரியங்கள் செய்ய  சென்றோம். அங்கு பல விதமான தகவல்கள் அறிந்து கொண்டோம். இது முன்னரே தெரிந்தால் இன்னும் பயண அனுபவம் நன்றாக இருந்திருக்குமே என்று நானும் என் மனைவியும்  நினைத்தோம். அப்போது எனது மூத்த மகள் ரஞ்ஜனி , அப்பா நீங்கள் தான் சிறு வயது முதல், கதை , கவிதை என்று பள்ளியிலும், கல்லூரியிலும் , அலுவலகத்திலும் பரிசு வாங்கி இருக்கிறீர்களே நீங்கள் என் பயண கட்டுரை, சிறுகதைகள் எழுதக்கூடாது என்று கேள்வி எழுப்பினாள். அதன் பலன் தான் இந்த முயற்சி. இந்த கட்டுரையின் முதல் சில பக்கங்கள் எழுதியதும் எனது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் காண்பித்தேன். அவர்களும் படித்து விட்டு நன்றாக இருக்கிறது என்று உற்சாகப்படுத்தினார்கள். இது உங்களுக்கும் பிடிக்கும் மற்றும் உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் . 

இந்த பதிவில் எனது பயண அனுபவங்கள், அங்குள்ள மனிதர்கள் கூறிய தகவல்கள்,சில விபரங்கள், படங்கள்  கூகிளில் இருந்து மற்றும் ஏனைய,புத்தகங்கள், வரலாறுகள் , பெரியோர்கள் கூறிய கதைகள், விபரங்களிருந்து  சேகரிக்கப்பட்டவை. யாம் பெற்ற இன்பம் வையகம் பெருக என்ற கருத்தில் தான் என் எழுத்தில். தகவல்கள் சேகரிக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும்  நன்றி. இதை வடிவம் தர முயற்சித்து இருக்கிறேன். ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஓம் நம் சிவாய .

 ஸ்ரீ குரூப்யோ நமஹ்

சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை

ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||

பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் மனைவி யார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது மனைவி யாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் மனைவி யும் ) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் மனைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை  தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம்.  அந்த நாளும் வந்தது.

16 ஏப்ரல் இரவு Mandwadih சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் காசிக்கு பயணம் தொடங்கியது. 17ம தேதி திரு ரவி அவர்கள் ரயில் நிலயதிற்கு வந்து ஓட்டலுக்கு அழைத்து சென்றார். ஓட்டலில் உணவு அருந்தி சற்று களைப்பாறினோம். அன்று மதியம் 3 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம். ஒரு கோவிலுக்கு போகிறோம் என்றால் அதன் வரலாறு அறிந்து தரிசனம் செய்தல் நலம்.

துண்டி விநாயகர்

துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு
கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே

எந்த ஒரு வேலையும் தொடங்குமுன்னர் முழு முதர்க்கடௌவலான விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே

துண்டி விநாயகர்

எந்த ஒரு வேலையும் தொடங்கு முன்னர் விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே முதலில் தூண்டி விநாயகர் கோயிலுக்கு சென்றோம். விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார். செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல் போகக்கூடாது என்பது சம்பிரதாயம்.    காசிக்கு செல்பவர்கள் துண்டி விநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டி விநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் அரை குறையாகத் தான் இருக்கும். எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபட வேண்டும். இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான் பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள். 

விஸ்வநாதர், அன்னபூரணி தேவி ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், மிக குறுகலான 5 அடிக்கும் குறைவான அகலம் உள்ள சந்துக்கள்தான் உள்ளன. மேலும் கோவிலுக்குச் செல்லும் வழி எங்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஸ்வநாதர் சிலைக்கு அருகே சுமார் இருபதடி தொலைவில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே போலீஸ் மயமாகத்தான் உள்ளது. இப்படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பது மிக மிகச் சிறிய அளவில். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கோயிலினுள் இருக்கும் காசி விஸ்வநாதர் சிலை; மிகச்சிறிய சிவலிங்கம் போன்று காணப்படுகிறது. இதை வைத்துத்தான் நம் முன்னோர்கள் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்று சொன்னார்கள் போலும்

காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம்வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை:

அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் எனப்படுவர். வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்த ரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர்.. ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும் போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும் போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து கொள்கின்றனர். இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.

ஸ்கந்த புராணத்தில் காசி கண்டம் இத்தலத்தை வர்ணிக்கிறது. மும்மூர்திகளில் யார் பெரியவர் என்று கேள்வி எழுந்தவுடன் சிவன் ஒரு ஒளிப்பிழம்பாய் மாறி அடி முடியில்லாத ஸ்வரூபமாய் காட்சி அளிக்கிறார் மகாவிஷ்ணு அந்த ஓளியின் ஆரம்பம் எங்கே என்று தேட போகிறார் பிரம்மனோ முடியை நோக்கி பயணிக்கிறார் பல யுகங்கள் சென்ற போதிலும் அடியும் முடிவும் காண முடிய வில்லை பிரம்மா மேல் நோக்கி செல்லுகையில் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுகிறது பிரம்மா அதனை தான் முடியைக்கண்டதற்கு சாட்சியாக இருக்க வேண்டுகிறார் . தாழம்பூவும் ஒப்புக்கொள்கிறது . பிரம்மன் சிவனிடம் வந்து தான் முடியை கந்ததாகவும், தாழம்பூ அதற்கு சாட்சியென்றும் கூறுகிறார். அங்கு விஷ்ணு தான்  அடியை காண முடியாமல் தோற்றதாக ஒப்புக்கொள்கிறார். பொய் சொன்னதனால் சிவன் பிரம்மாவிற்கு எங்கும் வழி பாடு நடக்காது என்றும், தாழம்பூ அதற்கு சாட்சி சொன்னதால் அது சிவ பூஜைக்கு சேர்க்க கூடாது என்றும் கூறுகிறார். மகா விஷ்ணு சிவனை விஸ்வேஸ்வர ரூபமாய் தரிசனம் அளிக்க வேண்டுகிறார். சிவனும் அவர் வேண்டுகோளுக்கு  இணங்கி லிங்க ரூபமாய்  காட்சி அளிக்கிறார்.  அதைத்தான் நாம் காசி விஸ்வநாதராக இன்று காண்கின்றோம்.

சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ; முத்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; அம்மனின் சக்தி பீடம் ;ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவ ஸ்தலம்..* அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி- உத்தரப்பிரதேசம்.*

மூலவர்: *காசி விஸ்வநாதர்* அம்மன் /தாயார்: *விசாலாட்சி* தீர்த்தம்: *கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதி கங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாபி என்ற சிறு தீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.*

பழமை: *5000 வருடங்களுக்கு முன்* புராண பெயர்:*வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகா மயானம், அவிமுக்தம்* ஊர்: *காசி* தல சிறப்பு: மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆன சுயம்புநாநர்.. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டி போட்டு குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். விசுவநாதருக்குத் தங்க விமானம் – சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

காசி மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்வேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன் பிறகே சூட்டப்பட்டது. அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள்.

காசி விஸ்வநாதர் கோயில் தொன்று தொட்டு இருந்தாலும் இதனை கி பி 1194ம ஆண்டு முகமது கோரியின் படை தலைவன் குதுபுத்தின் நிர்மூலமாக்கினான். அதன் பிறகு குஜராத் மன்னர்கள் கட்டினார் இது போன்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளற்களால், கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு சின்னாபின்னப் படுத்த்தப்பட்டது அதை இந்து மன்னர்கள் மறுபடியும், மறுபடியும் ஒவ்வொரு முறையும் கட்டினர். இந்தோர அரசியான அகல்யா பாய் ஹோல்கர் காலத்தில் முகலாய மன்னர் ஔரங்கஜீப் இதனை மறுபடியும் இடித்து ஞான வாபி மசூதியை கட்டினான். ஆனால் ராணி அகல்யா பாய்  மற்றும் பண்டாக்கள் மரகத சிவ லிங்கத்தை அருகிலுள்ள கிணற்றில் போட்டு மூடி விட்டார்கள். இந்த கிணற்றையும் மசூதியையும் இன்றும் காணலாம். தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயம் 1780ஆம் ஆண்டு மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது..1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டது தற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார்

.

!காசி விஸ்வநாதர் மிகச்சிறிய சிவலிங்கம்

கோயில் தரிசனம் செய்ய கிளம்பியவுடன் மழை பெய்ய  ஆரம்பித்தது . கோயிலுக்கு மழையில் நனைந்து கொண்டே  போனோம். விஸ்வநாதர் கோயில் போகும் பொழுது அலை பேசி, குடை, போன்ற பொருள்கள் எடுத்து செல்ல கூடாது. ஆகையால் அங்கு அருகிலிருந்த கடாய் ஒன்றில் இந்த சாமான்களையும், ஹேண்ட்பேக், போன்ற பொருள்களை ஒரு லாக்கரில்  வைது விட்டு பிரசாத  பொருள்கள், மாலை,  அபிஷேகத்திற்கு பால், முதலியன வாங்கி சென்றோம். கடைக்காரர்கள் தலையில் நிறைய சாமான்களை கட்ட முயற்சிப்பார்கள்.  தேவையானவற்றை  மட்டும் வாங்கி கொள்ளுங்கள் . பாதுகாப்பு சோதனை முடிந்து கோயில் உள்ளே சென்றோம். அங்கு பண்டாக்கள் நான் தரிசனம், பூஜை செய்கிர்3என் என்று சொல்லி வருவார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம். வடநாட்டில் நாமே எல்லா பூஜையும் செய்யலாம். விநாயகர், அன்ன பூரணி,, கால பைரவர், குபேரர் என , ஒவ்வொரு கட்டத்திலும் தரிசனம் செய்து ,பாலாபிஷேகம் நமது கரங்களினால் செய்து  மாலை சார்த்தி, புஷ்ப அர்ச்சனை செய்து மகிழ்ந்தோம். வட நாடு ஞான பூமி. ஆகையால் இங்கு தீட்டு முதலானவைகள் கிடையாது. வடநாட்டில் நாமே பூஜை செய்யலாம்.  அங்கு உள்ள பண்டாக்கள் பணம் தருமாறு வற்புறுத்துவார்கள் ஆனால் செவிமடுக்காமல் தொடர்ந்து உங்கள் கவனம் பூஜையின் மீதும், பர்ஸின் மீதும் இருக்கட்டும். அங்கு கையில் சில்லறையாக பணம் எடுத்து செல்வது நன்று.  காசி விஸ்வநாதர், அன்னபூரணியை தரிசித்து உள்ளே சென்றோம் அங்கு ஞான வாபி என்னும் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் ஒரிஜினல் மரகத சிவலிங்கம் உள்ளது. கிணற்றை முழுமையாக மூடிவிட்டனர். அங்கு உள்ள பண்டாக்கள், பூசாரிகளிடம் பேச்சுக்கு மயங்க வேண்டாம் இல்லையேல் உங்களிடம் கறந்துவிடுவார்கள்.  கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இது தான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞான வாபி  என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகை..

அடுத்து காசி அன்னபூரணியின் கோயில் சென்றோம். என்ன அழகு அம்பாள் சிகப்பு நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து நின்றோம்.

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும் பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள். இந்த அன்னபூரணி கோயிலில் இன்றும் தொடர்ந்து காலை11 மணியளவில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. நாட்டுக் கோட்டை நகரத்தார் மற்றும் பல சமூக ஸ்தாபனங்கள் நிதி மற்றும் உணவு பண்டங்கள் தானமாக அளிக்கின்றனர்

.

 இமையாத வானவர் குழாத்தினுக்கும், மற்றுமொரு மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) உலகில் யாவருக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் தங்க அன்னபூரணியாக காசியில் அருளிபாலிகிறாள். சாம வேதத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காசி அன்ன பூரணி

திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்ற போதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?

காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்ன தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜ குமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார். முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார். அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினாள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.

‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.

அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளி இருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மந்திரம்:
‘ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவதி

அன்ன பூர்ணே மமாபிலிக்ஷிதமன்னம் தேஹி ஸ்வாஹா’

மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அருளை வழங்கக் கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே 
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி 
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ : 
பாந்தவ சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவநத் த்ரயம்

தாயே அன்னபூரணியே சிவனுக்கு பிரியமானவளே, பார்வதி தாயே எனக்கு ஞானமும் வைராக்கியமும் சித்திக்க அருள் புரிவாயாக. தாய் பார்வதியும், தந்தை மகேஸ்வரனும் அனைத்து சிவா பக்தர் உற்றார் உறவினராய் உலகமே என் தேசமாக அனைத்து உயிர்களும்  நல்வாழ்வு பெற்று உன் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் தாயே என்று பிரார்த்தனை செய்தோம்.  அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி,  என்றும் மீளாத இன்பத்திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி. ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப் பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள். கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள். காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும். இங்கிருந்து தரிசனம் முடிந்து போகும் பொழுது அன்ன தான் கூடம், காலி தேவி மற்றும் இதர சன்னிதிகளையும் தரிசித்து செல்லுங்கள். பிரசாதமாக கொஞ்சம் அரிசியும் , குங்குமமும்  கொடுப்பார்கள். அரிசியை உங்கள் வீட்டில்  அரிசி பானையில்  கலந்து விடவேண்டும் என்றும் உணவு தட்டுப்பாடு இருக்காது.. . அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள். லோக மாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். 

அன்னபூரணியை தரிசித்து விட்டு அன்னை விசாலாக்ஷி கோயிலுக்கு சென்றோம். காசி விசாலாக்ஷி அம்மன் சிவனின் வரவுக்காக கண் இமை சிமிட்டாமல் பல ஆண்டுகள் தவசிருந்ததாக கூறப்படுகிறது. துர்கமாசுரன் என்னும் அரக்கன் 12 ஆண்டுகள் எந்த ஒரு ஸ்த்ரீ கண் சிமிட்டாமல் தவமிருப்பாளோ அவர் கையால் மட்டுமே அழிவு என பிரம்மாவிடம் வரம் பெற்று தேவர்களையும், மனிதர்களையும், ரிஷி, முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழித்து அன்னை துர்கை என்றும், கண் சிமிட்டாமல் இருந்ததால் விசாலாக்ஷி என்றும் பெயர் பெற்றாள்.  விசாலாக்ஷி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள்.

 காசி விசாலாக்ஷி பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன்  ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது..1971-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் விசாலாக்ஷி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.[4][5] சிறிய சந்துகள் வழியே செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் ஆலயம் வந்து செல்கின்றனர் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட  கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது. விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளதுமிகவும் அழகிய கோவில். காசியில் அம்மன் விசாலாஷியாகவும்அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள். காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில் பெரும் பெருமை கொண்ட இடம்.

விசாலாஷி கோவில் தென்னாட்டு பாணியில் அமைந்துள்ளது.சுற்றிலும் சிவ-லிங்கங்கள். மூலவர் சந்நதிலேயே (மூலவர் விசாலாஷி) அம்மன் பின்புறமாக ஆதி விசாலாஷி அம்மனையும் தரிசிக்கலாம்.

     அம்மனுக்கு விளக்கு பூஜை மகாமேரு பூஜை, பிரகாரத்தில் சிவலிங்க பூஜையும் மிகவும் விசேஷம்.

.

அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. காசியில்  தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்

. காசி மாநகரத்தின் ஆலயங்களில் மேலும் சிறப்புற்றது காலபைரவர் ஆலயம். இந்த ஆலயம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவாமி சிலையும் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ”ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. ‘இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள் கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகி விடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன இக்கோயிலானது  சிவபெரூமானின்  கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். “கால்” (காலம்/காலன்) என்ற சொல்லானது “இறப்பு” மற்றும் “விதி” ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். “கால பைரவரைக்” கண்டு மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின் பகுதியில், சேத்ர பால பைரவர் சிலை உள்ளது. கால பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. காலபைரவர் காசியின் காவலராக 

அதாவது காவல் தெய்வமாக கருதப்படுகிறார். காசியில் வாழ வேண்டுமானால் இவரது  அனுமதியை   பெற வேண்டியது  அவசியமாக  கருதப்படுகிறது.

             காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்..

அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு” என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே காலபைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கிய பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். குத்து வாங்கியவர் உடனே தன்னிடம் உள்ள 50 அல்லது 100 ரூபாயை அவரிடமுள்ள தாம்பூல தட்டில் போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆச்சரியம் தான் ஆனால் உண்மை. இப்படி பல ஆச்சரியங்கள் காசி மாநகரில் இருக்கின்றன

. இங்கு தான் காசி கயிறு மந்திரித்து கொடுக்கிறார்கள். நாம் நம் குடும்பதினருக்காக நண்பர், உறவினர்களுக்காக வாங்கி செல்லலாம். கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்” என்றார். ‘ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள் கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்! .

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தில் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யம பயம் கிடையாது.  தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று  அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசி மாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள் புரிந்தார். இன்றும் காசி மாநகரம்  பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசி மாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாக்கின்றனர்.

காசி அனுமன் காட்டில் உரு பைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீ துர்க்கை கோவிலில் சண்டபைரவர் மயில் வாகனத்தில்  தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசிதாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர்  யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீ காமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,  பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத வாகனத்தில் பூத பைரவர் சிம்ம வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும்  எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வர்த்தணை நிச்சயம் உண்டு. காசி மாநகர  எல்லையை தொடும் போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி  சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு யம பயம் நீங்கி வாழ வைக்கின்றது.

அடுத்து நாம் காண இருப்பது சங்கட் மோசன் அனுமார் கோயில். இது ஒரு தொன்மையான கோயில். இங்கு தான் துளஸிதாஸர் ராம்சரித் மானஸ் எழுதியதாக .ஐதீகம்.

இந்த ஆஞ்சநேயரை தரிசித்து அடுத்ததாக சோழியம்மன் எனும் கௌடி மாதா வை தரிசிக்க சென்றோம் . தெலுங்கில் கவ்வாலம்மா என்று கூறுகின்றனர். இவர் கிராம தேவதையாய் ஆந்திர தெலுங்கானாவில் குடிகொண்டுள்ளார். சிவனின் மீது உள்ள பக்தியால் இங்கு சிவனின் அருள் பெற காசிக்கு வந்து அன்னை அன்னபூரணியின் கட்டளைப்படி சிவனின் சகோதரியாய் இங்கு அருள் பாலிக்கின்றாள். சோழியும் ஒரு ரவிக்கை துணியும் தான் படையல். “அம்மா இந்த சோழி உனக்கு காசி யாத்திரை பலன் எனக்கு” என்று இங்கு அனைவரும் பிரார்த்தனை செய்து தனது காசி யாத்திரையை முடிக்கின்றனர். இந்த அம்மனை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை முடிவுருவதில்லை.

பிறகு கங்கை கரையில்  நடக்கும் ஆரத்தியைக் சென்றோம். 

வேத மந்த்ரங்களின் உச்சரிப்பு, சங்க நாதம், தீபாராதனை, நெய்வேத்யம் என ஷோடச (16) உபசாரங்களும் செய்து தினமும் மாலையில் 7 பண்டாக்கள் கங்கை மாதாவிற்க்கு ஆரத்தி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி கங்கை கரையிலும், படகுகளிலும் அமர்ந்து ஆனந்தமாய் கண்டு களிக்கின்றனர். நிறைய வெளிநாட்டவர்களும் வருகின்றனர்

.. இந்த தெய்வீக அனுபவத்திற்கு பிறகு ஓட்டலுக்கு திரும்பினோம். கார்த்திகை தீப மன்று தேவ தீபாவளி கொண்டாடப்படும். கங்கையின் அனைத்து படித்துறைகளிலும் எண்ணற்ற அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜ்யோதியாய் மிளிரும்.

அடுத்து வைதீக முறைப்படி பித்ரு காரியங்கள் செய்தது பற்றிய விபரங்கள் எழுதுகிறேன். ஓம் நம சிவாய,

……………………………………………………………………………………………………………………………………………………………

பகுதி  2 பிரயாகை

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக்கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.

இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!. சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களைத்தான்  நமது வேத கால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் ரகசியங்களை, – பரம கருணையுடன்.
நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர்  நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும்,  மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும். பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!

மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேத வியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர். தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மன நிம்மதியுடனும், மன நிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ள போதே நற் செயல்களைச் செய்து புண்ணிய பலன்களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்க முடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இரு வகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று – நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று – நம்மை நாடி வரும் புண்ணியம்!. நாம் தேடிச்செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
1. திருத்தலங்கள் தரிசனம், 

2. புண்ணிய நதிகளில் ஸ்நானம்,

3.தினமும் செய்யும் தான, தர்மங்கள், 
4. திருக்கோயில் உழவாரப் பணிகள்,

5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல், 
6. திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல்,

 7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல், 
8. பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல்,

 9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள்.

10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்

.இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளாகும்.. அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை. இது போன்றே நம்மை நாடி வரும் புண்ணியம் :1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம், 4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம், 7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக் களைப் பூஜித்தல்.: பித்ருக்களின் கருணை அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந்தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்பு நிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப்புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்கலாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.

அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல்களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும். ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதி பூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை,  எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும். ஆதலால் தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?

திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன்னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீ சீதா தேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.

துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்ததால், பித்ருக்கள் எழுந்தருளும் போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின் போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.

கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!

கலி யுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன் பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் – கேரளம்), கோமுகம், மானஸ சரோவரம் ஆகிய ஆறு(6) பரம பவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன்னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடி வரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம். புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று  திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை. 

 அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன

 இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. 

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. 

எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்? 

 இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்:  கருச்சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.

காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம். 

ராமநாத ஸ்வாமி கோயில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.

அக்னி தீர்த்தம்

முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலை வாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், சேது, மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும். 

வேணு மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ராமநாத சுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசி யாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது வேணு லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த வேணு மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்.

இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும். 

கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போது தான் நம் காசியாத்திரை நிறைவடையும்.   இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்..

ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகையில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும்;  முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த  கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம்  கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என கூறுகின்றது.

ப்ரயாகையில் செய்ய வேண்டியது 

அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாராகஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது. இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் என சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..

1. ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தானம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.

2 ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்ர தானம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3. பார்வதி பரமேஸ்வரர்; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தானம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.

4. கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.

5. ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்.

6 ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.

7. மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர். மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8. மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன.  ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு படகு (போட்) மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்.

படகில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வார் .த்ரிவேணி ஸங்கமத்தில் படகை  நிறுத்துவார். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை. .அதற்கு முன் மனைவி தன் புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும் படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்

கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தானம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்கும சிமிழ்;, மஞ்சள் பொடி, அப்ரஹ பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து படகு மூலம் கோட்டை அருகே செல்ல வேண்டும். அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது. அதில் மனித உரு அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸர்; தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது; இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும் ;நுனி பாகம் கயாவிலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்த இலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன், பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம். 

ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறது;  சிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது. கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸம்பாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு.

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியவாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.; காசியிலிருந்து கயா 276 கிலோ மீட்டர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர்.

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தானம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது. காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழிபடுவதால் தேவ ருணம் விலகும். ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்.

திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணி தானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும். யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்… பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து .காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.

வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.

திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..

வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்யக்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும். தலைமுடி பிரிந்து விடாவண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கை கோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும் .

பிறகு இருவரும் படகில் (boat) வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பின்னி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணீரில் அடியில் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து மறுபடியும் ஸ்நானம்  படகிற்கு  வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும், சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும்.

 .
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்குமிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்…

வேணி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும் 

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும். சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தசதானம் செய்ய வேண்டும்..

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம். த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே

தஹத்வக்நிரிவேந்தனம். லோகத்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத்ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்

கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்

ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.
ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.

ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
பத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹ
வீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;

த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே

தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதாப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வமாம்

ஆல மரத்தின் வேர் அக்ஷய வடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஜடரே அகில மாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷய வடே நமஹ

த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.

ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.

வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹ
சங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீ மாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது. உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும் போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும். அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறை பொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

.
அகார வடிவில் ப்ருஹ்மா விசுவே தேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்யமானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்

இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணி தேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காப்பாற்றுவாள்.. திரிவேணி ஸ்நாந்த்திற்கு பிறகு பள்ளி கொண்ட ஆஞ்சநேயர், அக்ஷய வடம் தரிசித்து சிவா மடத்திற்கு திரும்பினோம். அங்கு ஈர உடைகள் மாற்றி தானம் செய்ய கொடுத்து விட்டோம். பிறகு ஹிரண்ய  ஸ்ராத்தம் செய்து 17 பிண்டங்கள் பித்ருக்களுக்கு அர்ப்பணித்து , பிராமண தக்ஷினை கொடுத்த பின் வேணு மாதவர் கோயில் தரிசனம் செய்ய சென்றோம். பிறகு போஜனம் செய்து காசிக்கு புறப்பட்டோம்..

அடுத்த பகுதியில் காசியில் ஹிரண்ய ஸிரார்த்தம், பிண்ட பிரதானம் முதலிய்வைகள் பற்றி பார்ப்போம் .

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பகுதி காசியில் பித்ரு கார்யம்

தேதி 19 ஏப்ரல் 2019

காலையில் குளித்து விட்டு ஹிரண்ய ஸிரார்த்தம் செய்ய ஆயத்தமானோம். ரவி சாஸ்த்ரிகள் சிவ மடத்தில் ஸிரார்தத்திற்கு உண்டான  சகல ஏற்பாட்டுடன் தயாராக இருந்தார். ஹிரண்ய ஸிரார்தம் முகவும் ஸிரத்தையாக செயத பிறகு ஹனுமான் காட்டில் படகில்  ஏறினோம். படகில் நாங்கள் நால்வரும், ஸ்ரீ ரவி சாஸ்த்ரிகலௌம் கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது  17-17 பிண்டங்களாக 5 தனி தனியாக வைக்க சொன்னார். எனது மனைவியும் , ஆனது சகோதரனின் மனைவி யும்  பிண்டம் பிடித்து வைக்க ஆரம்பித்தனர். சாஸ்த்ரிகள் மந்திர உச்சாடனத்துடன் பித்ரு பூஜையை ஆரம்பித்தார்.

அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17

தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

ஹரித்வாரம், உத்திர சரோவரம், விஷ்ணு பாதம், பஞ்ச கங்கா மற்றும் மணிகர்ணிகா என்று ஐந்து இடங்களில் கங்கையில் பஞ்ச் தீர்த்த ஸிரார்த்தம் செய்து பிண்டங்களை பிரவாகம் செய்தோம். ஏனென்றால் காசியில் காகங்கள்  பிண்டங்களை உண்பதில்லை, கங்கையில் கரைத்தோ அல்லது பசு மாட்டிற்கு அளித்தோ தான் பிண்டமிட வேண்டும். பிண்டமிட்ட பிறகு மணிகர்ணிகா காட்டில் குளித்து சிவ மடம் திரும்பினோம் . அங்கு ஸிரார்த்த காரியங்களை முடித்து கொண்டு உணவருந்தினோம். மாலை மூன்று மணியளவில் கார் மூலம் கயாவிற்கு புறப்பட்டோம்.

  • , காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரை விதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.
  • கண்டம் கூறுகிறது:-
  • , அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீ கண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீ யாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்த சேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த     யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலை முடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.
  • :-
  • மித்ர பந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடி போட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வர சௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களை விட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது. காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான் .ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசி கங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி ‘விஷ்ணு தர்மோத்தர’ புராணம் ‘சௌபரி ஸம்ஹிதை’ இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.
  • . யாத்திரை செய்யும் பொழுது இஷ்ட தேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் ‘ஹர ஹர மஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும்.   யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.
  • , ஆசமனம், தர்ப்பணம், தேவ பூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.
  • :- முதலாவது கங்கா ஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம் .இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.
  • :-
  • , கங்கா தேவியின் இதய ரூபமும் பகவானுடைய முக ரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவ ரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லையென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். ‘மணிகர்ணிகா குண்டம்’ என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே ‘மணிகர்ணிகைத் துறை’ என்று கூறுகிறோம்; அதைப் போலவே ‘தசாஸ்வமேத கட்டத்தில்’ தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற்கொப்பாகும் என்று கூறப்படுகிறது. ‘காலையில் பஞ்சகங்கா’ கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்’ ஸ்னானம் செய்வது மகத்துவம். அல்லது ‘காலையில் ‘தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் ‘மணிகர்ணிகா’ கட்டத்திலும் ஸ்னானம் செய்வது நல்லது. ‘மணிகர்ணிகா ஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரையென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்த யாத்திரை) என்றும் சொல்வார்கள் .கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை. காசீ தர்பணம்’ என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ரு தர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞான வாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச்சித்தமாகக் கூறப்படுகிறது. காசீ கண்டம் எண்பத்தி நாலாவது அத்யாயத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணை ஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னான மாத்திரத்திலேயே பாபச்சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான்.
  • முகத்தையுடைய சிவ பிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை – காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச்சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் ‘கேதார காட்’ – கௌரி குண்டத்தையும், ‘த்ரிலோசனா காட்’டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.
  • :- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.
  • போல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.
  • . ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர், ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.
  • , ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்க புராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.
  • , மத்யமேஶ்வரர், ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும்   காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.
  • ;

பகுதி 4 கயா ஸிரார்தம்

திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு  மட்டும் இல்லை………….. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள்,  பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்ற போது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

கிருதயுகத்தில், “கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால், 
“”தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால்  சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு  யோசனையைக் கூறினார். “ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்கசொன்னர். பிரும்மாவும்  திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். “இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை” என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான். 

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது. அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். “தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று  அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான். அவன் 2 வரங்கள் கேட்டான். 

1. “முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்.”

2. “இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும்  கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும்  உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம்  போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில்  பிணம் / பிணங்கள்  எரிவதும் தினமும்  நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார்  

.நாங்கள் போன போது கூட 2 – 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு….அங்கு எதற்கும் தீட்டே இல்லை.

“கயை’ என்றும் “கயா’ என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது.”இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..

ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும் . இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்த காலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 
தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். 

“சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் மாமனாரான தசரதர். “உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?” என்று சீதை தயங்கினாள்.

“சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை” என்றார் தசரதர். சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும், “உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிது நேரத்தில் ஸ்ரீராம  லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். “சீதா, சீக்கிரம் சமையல் செய்” என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள்.  ராமர் திகைப்புடன் “சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன் தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை” என்றார். 

“நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

உடனே ராமர், “சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?” என்று கேட்க, அக்ஷய வட ஆலமரம் தவிர மற்றவர்கள் ‘`நாங்கள் அறியோம்’ என்று சொல்லி விட்டன. 

கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன. 

ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு “சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்” என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. “ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்” என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார்.  ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு 

  1. பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும், 
  2. ! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின் பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றும், 
    இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும்
  3. கயா பிராமணர்கள்’ தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள் என்றும் ” என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள். 
  4. , “யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி, யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் ” என்று அருளினாள். மேலும், “கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் ” என்றும் ஆசிர்வதித்தாள். 

இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறார்கள்.ஒரு கோஸ் பரப்பளவுள்ள தலம் கயா-ஸிர் என்றும், 2 1/2 கோஸ் வரை கயா என்றும், 5 கோஸ் வரை கயா க்ஷேத்ரம் என்றும் பிரசித்தி பெற்றது.

கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ளது என்பது ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ளது. கயா பீஹார் மாநிலத்தில் உள்ளது. விஷ்ணு பாதம் இங்கு முக்கிய மான கோயில். பல்குனி நதி அருகில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி இந்தி. கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற்றுவதற்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.

ராமாநுஜ காட், கர்நாடக பவன் ஆகியவை வசதியானவை கயாவில் பல்குனி நதிக்கரை, விஷ்ணு பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ்ணு பாதம் சமீபம்) ப்ரேத சீலா, உதயகிரி, அக்ஷய வடம் முதலான இடங்களில் பிண்டப் பிரதானம் செய்யும் வழக்கம் உண்டு. கயாவில் மேலும் சில இடங்களிலும் பிண்டப் பிரதானம் செய்கிறார்கள் ஜீவன் கடைத்தேற- முக்தியடைய அனுஷ்டானங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன அதில் கயா சிரர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

வட இந்தியர்கள் முதலில் கயாவின் அருகேயுள்ள ‘புன்புன் ‘ நதிக்கரையில் நீத்தார் கடன் முடித்து பின்னர் கயாவுக்கு வருகிறார்கள். கயாவில் எந்தக் காலத்திலும் பித்ரு-சிரார்த்த்ம பிண்டதானம் செய்யலாம் என்று கயா மகாத்மியம் விளம்புகிறது. வட இந்தியர்கள் சில விரதங்கள் அநுஷ்டித்த பின்னர் கயா யாத்திரை மேற்கொள்ளுகின்றனர். பல்குநீ நதி (பித்ரு தீர்த்தம்) கயாவின் கிழக்கே ஓடுகிறது.

இதில் மழை காலத்தில் மட்டுமே நீர் ஓடுகிறது. மற்ற காலங்களில் ஊற்றுப் பெருக்கால் இது உலகூட்டுகிறது. அருகே ‘நககூட்’ மலைக்குன்று இருக்கிறது. பல்குநீ நதியில் நீராடி நதிக்கரையில் தர்பணம், பிண்டப் ப்ரதானம் செய்துவிட்டு அருகில் உள்ள விஷ்ணு பாதம் கோயிலுக்குச் செல்கிறார்கள். அந்தக் கோயிலில் எட்டு கோண பீடத்தில் பகவான் விஷ்ணுவின் சரண சின்னம் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளது.

பித்ரு சிரார்த்தத்தின் அங்கமாக சர்வ பித்ருக்களுக்கும் தாயார் தகப்பனார் உட்பட பிண்டப் பிரதானம் அளிக்கிறார்கள். (108 பிண்டங்கள்) இரண்டாவது தினம் வருடாந்திர சிரார்த்தம் போன்று அன்ன சிரார்த்தம் செய்கிறார்கள். சிலர் தொடர்ந்து ஏழு தினங்கள் சிரார்த்தம அனுஷ்டிக்கிறார்கள். அன்ன சிரார்த்தின் கடைசி அங்கமாக பிண்டப் பிரதானம், அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அக்ஷய வடம் சென்று அங்கும் செய்கிறார் கள். கயாவில் நீத்தார் கடன் செய்வதால் பல தலைமுறையினர் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். வம்சம் விருத்தியடைவதோடு சமூகமும், தேசமும் விருத்தியடைகின்றன.

முக்கிய கோயில்கள் மற்றும் தீர்த்தக் கட்டங்கள்: பல்குநி நதி, அக்ஷய வடம், விஷ்ணு பாதம் தவிர பின்வரும் தலங்கள் தரிசிக்கப்பட வேண்டியவை.

(1) ஜகந்நாத மந்திர், லக்ஷ்மீ நாராயணர் (கதாதரர்) கோயில்,

(2) முண்டப்ருஷ்டா- விஷ்ணு பாதத்திற்குத் தென்திசையில் 12 கைகளுடன் அருள் பாலிக்கும் முண்டப்ருஷ்டா தேவி.

(3) ஆதி கயா இங்குள்ள ஒரு சிலையில் பிண்டதானம் செய்கிறார்கள். இங்கு பூமி மட்டத்திற்குக்        கீழே பல மூர்த்தங்கள் உள்ளன.

(4) தௌத பாதம். இங்கும் பிண்டதானம் செய்கிறார்கள்.
(5) காக பலி: இங்கு ஒரு பழைமையான ஆலமரம் உள்ளது. இங்கு காக பலி, யம பலி ஆகிய சடங்குகள் செய்கிறார்கள். (6) பஸ்மகூட்- கோப்ரசார்:
கயையின் தெற்கு வாசலின் வைதரணி சரோவர் பக்கம் ஒரு சிறிய குன்றில் ஜனார்த்தனன் கோயில் உள்ளது. சற்று தூரத்தில் மங்களா தேவி கோயில் உள்ளது..

(7) மங்கள கௌரி கோயில்:
தெற்கு வாயிலின் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. சற்று மேலே சென்றால் அவிமுக்தேச்வரநாத் கோயில் உள்ளது. தனக்கு கொள்ளி போட, சிரார்த்தம் செய்ய சந்ததியில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த மூன்று பிண்டங்களை இங்கு அளிக்கிறார்கள்.

(8) காயத்ரி தேவி:
விஷ்ணு பாதம் கோயிலிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காயத்ரி காட் கட்டத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இதற்கு வடக்கில் அருள்மிகு லக்ஷ்மீ நாராயணர் கோயில் உள்ளது. இங்கு கயாதித்யன் என்று அழைக்கப்பட்டும் சதுர்புஜ சூரியன் மூர்த்தம் உள்ளது.

(9) ப்ரம்ம யோனி
புத்த கயா செல்லும் வழியில் கயையிலிருந்து 3 கி.மீ துரத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் ப்ரம்மாஜி கோயிலுக்குப் பகத்தில் குகை போன்ற இரு பாறைகளை உள்ளன. ‘ப்ரம்ம யோனி’, ‘மாத்ரு யோனி’ என்று அவற்றை அழைக்கிறார்கள். சிகரத்திற்குக் சற்றுக் கீழே அமைந்துள்ளது ப்ரம்ம குண்டம் புனித தீர்த்தம்.
தீர்த்தங்கள்

1. மேலே கூறிய ப்ரம்ம குண்டம் 2. சூரிய குண்ட். 3.சீதாகுண்ட் 4.உத்தரமானஸ் 5.ராம சிலா

6. பிரேத சிலா 7. வைதரணீ 8.ப்ரம்ம ஸரோவர் 9. இரண்டாவது காக பலி

10.கதாலோல் புஷ்கரணி. இங்கு பகவான் அசுரனைக் கொன்றபின்னர் ஆயுதமாகிய கதையை அங்கு வைத்ததாக ஐதிகம். அது கம்ப வடிவில் உள்ளது.

11 ஆகாச கங்கை இது ஹனுமானின் இருப்பிடம் அருகில் பாதாள கங்கையும் மேற்கில் கபில தாராவும் உள்ளன.

12. ஸரஸ்வதீ- ஸாவித்ரி குண்டம்; மேலும் கர்ம நாச புஷ்கரிணியும் உள்ளது.

13. ஸரஸ்வதி நதி கயாவிற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது. நதிக் கரையில் ஸரஸ்வதி தேவியின் கோயிலில் தரிசனம் செய்யலாம். இங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் மதங்க வாபி என்ற பெரிய கிணறு படிக்கட்டுகளுடன் உள்ளது.

14. தர்மாரண்யம். மதங்க வாபியிலிருந்து 3 1/2 கிலொ தொலைவில் இந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் பிண்டங்கள் இடப்படுகின்றன,

தர்மர் தன் தம்பி பீமசேனனுடன் தன்னுடைய தந்தைக்கு சிரார்த்தம் செய்ய இங்கு வந்த போது இங்கு தவம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. அவர்கள் இருவருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

புத்தகயா: போத கயா:

கயாவிலிருந்து புத்தகயா 11 கிலோ தொலைவில் அமைந்துள்ள தலம். இங்கு அம்ர்ந்து புத்தர் ‘திவ்ய ஞானம்’ பெற்றதாக சரித்திரம் பேசுகின்றது. அன்றிருந்த போதி மரம் தற்போது இல்லை. வேறு சிறிய அரச மரம் வளர்த்துள்ளார்கள்.. அவர் அமர்ந்த கல் மேடை பொத்த- சிம்ஹாசனம்- என்று அழைக்கப் படுகிறது. இங்கு புத்த பகவானின் பெரிய கோயிலில் அவருடைய பிரம்மா ண்டமான மூர்த்தம் உள்ளது. புத்த கயாவிற்கு சற்று தூரத்தில் ‘பக்ரௌர்’ என்ற ப்ராசீனப் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் உள்ளது. பௌத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான தலமாக கயா அமைந்துள்ளது.

கயா-சிரார்த்த நன்மைகள்

இந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் செய்யவேண்டிய முக்கியமான கடமை, காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது.அவ்வாறு செல்லும் போது காசி–பிரயாகை–கயா ஆகிய மூன்று புண்ணிய ஸ்தலங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது.

தாய் தந்தையர் மற்றும் மூதாதையருக்கு உயிருடன் இருக்கும் போது பணிவிடை செய்து சேவை செய்ய வேண்டும். அவர்கள் உலகை விட்டுப் போன பின்னர் அவர்களுக்காக சாஸ்திரம் கூறியுள்ளபடி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.பித்ருக்களிடம் நாம் காட்டும் நன்றியிலும் அவர்களுக்கு செய்யும் கடமைகளிலும் சிரத்தை இருக்க வேண்டியது முக்கியம். இதனாலேயே இதனை சிராத்தம் என்று அழைக்கிறோம்.

மனித யக்ஞம்:  மனிதனாகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவகாரியம் என்பவை.நம்முடன் வாழும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும். குறைந்தது ஒரு அதிதிக்கு உணவளிக்க வேண்டும், இது மனித யக்ஞம்.

பிரம்மயக்ஞம்: என்பது வேதம் ஓதுவதும் ஒதுவிப்பதுமே. இது மனித குல நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்யவேண்டியது.

பூத யக்ஞம் மனிதனாக இல்லாத மிருகங்கள் கூட அன்பைத் தெரிவித்து உணவு ஊட்டுவது பூத யக்ஞம்.

ஆக மனிதனாகப்பட்டவன் மனித யக்ஞம், பிரம்மயக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய கடமைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்களுக்கு திருப்தி, போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற ச்வர்க்க வாசிகளான தேவர்கள், பிண்ட தானத்தால் திருப்தியைப்பெற இயலாத நரக வாசிகள், பித்ரு லோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப்பலர் திருப்தி அடைகின்றனர். அவர்களது திருப்தியின் பலனாக சிரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம்,வம்ச விருத்தி ஆரோக்யம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை இவைகளும் கிடைக்கின்றன.

வருட சிரார்த்தம் செய்யும்போது விசுவதேவர் இலையில் அமர்ந்திருப்பவருக்கு அன்னம் பரிமார செய்து பகவான் ஜனார்த்தனர்  ஸ்ரீ ஹரி திருப்தி அடையட்டும் என்று பித்ரு தீர்த்த முறையில் தர்ப்பத்தில் விட்டு கயை சிரார்த்தம் அக்ஷய வடம் என்று கயை ஷேத்ரத்தை முமமுறை கய கய கய என்று ஸ்மரிக்கிறோம் .

அன்னையும் பிதாவும் இவ்வுலகை நீத்தபின் அவர்களிடம் நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வெளிப்படுதுதலே சிராத்தம். பெற்றோரை குறித்து சிரார்த்தம் செய்யும் பொது நமது முந்தைய மூன்று தலை முறைகளையும் நினைவுகூறுகிறோம் நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம் காரணம் கயாசுரன் பெற்ற வரம் தான்.

கயா பயணம், பிண்ட பிரதானம், பிண்டம் கொடுப்பதினால் மூதாதையருக்குப் பலன் உண்டா, இல்லையா?

பிண்ட பிரதானம் என்பது மூதாதையர்களுக்குக் கொடுக்கப்படும் உணவாகும். ஒவ்வொருவர், அவரது தந்தை மற்றும் தாய் வழியாக மூன்று தலைமுறையினரை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஏதோ மொழி மாறுவதால், எல்லாம் மாறி விடுகின்றன என்று நினைக்க வேண்டாம், உறவுகள் மாறுவதில்லை. இதைத்தவிர, மாமா-மாமி, உறவினர், குரு-குருவின் மனைவி, நண்பர் என்று எல்லோருடைய பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையில் எல்லோரையும் நினைத்துக் கொள் என்றுதான் மந்திரங்கள் சொல்கின்றன. இதில் எந்த வித்தியாசமும் பாராட்டப் படவில்லை. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒருவர் தன்னுடைய மூதாதையர்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும், அவர்களது பெயர்களை அறிந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் அவனுக்கு தன்னைப் பற்றிய நம்பிக்கை, தன்னம்பிக்கை, சுயமரியாதை முதலிய குணங்கள் வரும்.

பிண்டத்தில் உள்ளவை: பாரத பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகக் காரணிகளில் அரிசி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த உடலே பிண்டம் என்றழைக்கப் படுகிறது. நீர், நெல், அரிசி, வாழ்க்கை, பிறப்பு, இறப்பு இவையெல்லாம் பின்னிப்பிணைந்துள்ளது. “அக்ஷதை” என்பது உடையாத அரிசியால் ஆனது, அதனால் தான், அதனால் வாழ்த்துகிறோம். இவ்வாறு அரிசி பல விதங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால், அரிசியால் பிண்டம் சமைத்து, எள்ளையும் சேர்த்து படைக்கப்படுகிறது.

1.   எள் 2.   அன்னம் 3.   ஜலம் 4.   வெல்லம் 5.   தயிர் 6.   பால் 7.   தேன் 8.   நெய்

இவை எட்டும் சேர்த்துக் கலந்து பிண்டம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் விலையுயர்ந்தவை என்பது எதுவும் இல்லை. எல்லாமே எளிதாகக் கிடைக்கும் பொருள்களே. மூன்று பித்ருக்களுக்கு மூன்று என்ற வீதம் இவை தயாரிக்கப்படுகிறது. இவை பஞ்சபூதங்களுக்கே கொடுக்கப்படுகிறது. பிண்டத்தில் உள்ளது, அண்டத்தில் உள்ளது என்றெல்லாம் பேசினாலும், இதில் தான் அத்தகைய உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். இறப்பு-பிறப்பு, மறு ஜென்மம், பாவம்-புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் இவற்றை செய்கின்றனர், செய்து வருகின்றனர்.

மந்திரங்கள், கிரியைகள், செய்பவர்கள், செய்விப்பவர்கள்: பிண்டப் பிரதாணக் கிரியைகள் வேத மந்திரங்களுடன் செய்வதானால், கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என்றால், 6-8 மணி நேரம் ஆகும். மேலும் அந்தந்த வெந்த மந்திரங்கள் தெரிந்தவர்கள் இருக்க வேண்டும், செய்யும் முறைகளைத் தெரிந்திருப்பவர்கள் இருக்க வேண்டும். அத்தகையோர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், ஒழுங்காக செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆகையால், தெரிந்தவர்கள் இல்லையே என்றால், அதற்கு காரணம் நாம் தாம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். பணத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் ஆளில்லை என்ற நிலையுள்ளது. இருப்பவர்களை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்றால், அவை அந்த அளவில் தான் இருக்கும்.

1.  ஆசமனம். 2.  குரு வந்தனம். 3.  பவித்ரதாரணம். 4.  பிரணாயாமம். 5.  சங்கல்பம். 6.  கலசார்ச்சனம். 7.  இஷ்ட தேவதா வந்தனம். 8.  பிராமண வரணம். 9.  பிராமண பிரதக்ஷணம் 10. பிராமண பாதப்ரக்ஷாளனம். 11. பவித்ரதாரணம். 12. பாகப்ரோக்ஷணம். 13. தேவ பிராமணரின் ஆஸனாதி பூஜை. 14.  பித்ரு ப்ராஹ்மணரின் ஆஸனாதி பூஜை. 15. பாணி ஹோமம். 16. அன்னசுக்த படனம். 17. த்யக்தம் 18. க்ஷேத்ர மூர்த்தி ஸ்மரணம் 19. தீர்த்த தானம் – பிராமண போஜனம். 20. அபிச்ரவணசுக்தம் – உபசாரம். 21. பிண்டதானம் (1,2,3)– பூஜை. 22. பிண்ட பூஜை. 23. திருப்தி ப்ரச்னம். 24. விகிரம் – ஸவ்யம் 25.  உச்சிஸ்ட பிண்டம். 26. பிராம்மண போஜன பூர்த்தி – ஆசிர்வாதம். 27. பிண்டங்களை எடுத்து வைத்தல். 28. ஆவாஹித பித்ரு விஸர்ஜனம் 29. பிராமண பிரார்த்தனை – ஆசிர்வாதம். 30. கூர்ச்ச விஸர்ஜனம். 31. ஸமர்ப்பணம். 32. சிரார்த்தாங்க தர்ப்பணம், பூரி பிராமண போஜனம்.    

ஆகையால், இக்காலத்தில் ஒரு மணிநேரத்தில் முடித்து விடுகிறார்கள். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் காசுக்கு / கூட்டத்திற்கு ஏற்றப்படி செய்கிறார்கள். நிறைய பேர் வந்து விட்டால், எல்லோரையும் சேர்த்து உட்கார வைத்து செய்து முடித்து விடுகிறார்கள். விசயம் தெரியாதவர்களிடம் மந்திரங்களைக் குறைத்தும், சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். இங்கு செய்பவர்களையோ, செய்விப்பவர்களையோ குற்றம் கூறவில்லை. அவரவர்கள், தத்தம் விருப்பம், அவசரம் என்ற நிலைகளில் இருப்பதால், அதற்கேற்றப்படியே இவை நடக்கின்றன.

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं

இடம், பொருள், ஏவல், சுற்றுச்சூழல்கள்: முன்பெல்லாம் இத்தகைய கிரியைகள் நதிக்கரைகளில், காட்டுகளில் அல்லது நீர் நிலைகள் உள்ள இடங்களில் செய்வது வழக்கம். காசி-வாரணாஸி-பிரயாகை, கயா போன்ற இடங்களில் நீருக்குப் பஞ்சமில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட அவசர-அவசியங்களுக்காக. வசதிகளுக்காக, தேவைகளுக்காக, மடங்களிலேயோ, வேறு இடங்களிலேயோ செய்விக்கின்றனர். பிறகு வண்டியில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பிண்டங்களைப் போட்டு வந்து விடுகின்றனர். இதனால், குளிப்பதும் மாறி விடுகிறது. கயாவைப் பொறுத்த வரையில் பல்குனி நதியில் நீர் இருப்பது குறைவு, அதிலும் அந்நீர் சுத்தமாக இருக்காது. ஏனெனில், வருகின்ற எல்லோரும் அதில்தான் பிண்டங்களை இட வேண்டும், அந்நீரை எடுத்துக் குளிக்க வேண்டும் அல்லது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயம் வஷிஸ்டர், விஸ்வாமித்திரரை தான் செய்யும் சிராத்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டு தனக்கு 1008 காய்கறிகள் கொண்ட உணவை அளித்தால் வருவதாக கன்டிஷன் போட்டார். வஷிஸ்டர் திகைத்தாலும், அவரது மனைவி அருந்ததீ ஒப்புக்கொண்டார். அதன்படியே, விஸ்வாமித்திரர் வந்து விட்டார். அருந்ததீயும் சாப்பாட்டை பரிமாறினார். அதில், எட்டு வாழைக்காய், ஒரு பாகற்காய், ஒரு பிரண்டை மற்றும் ஒரு பலாக்காய்-பழம் என்று தான் இருந்தன. கோபத்துடன், விஸ்வாமித்திரர் “என்ன இது?”, என்ற கேட்டபோது, அருந்ததீ,

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं|
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते||
“காரவல்லி சதம் ப்ரோக்தம், வஜ்ரவல்லி சதத்ரயம்|பனஸ: அச்ட்சதம் ப்ரோக்தம், ச்ராத்தகாலே விதீயதே||”

என்று கணக்கு சொன்னாராம். அதாவது, பாகற்காய் = 100 காய்களுக்கு சமம்; பிரண்டை 300 காய்களுக்கு சமம்; பலா 600 காய்களுக்கு சமம்; 8 + 100 + 300 + 600 = 1008 என்று கணக்கு சொன்னாளாம். இது தமாஷுக்கா, உண்மைக்கா என்று ஆராய்ச்சி செய்தாலும், இடத்திற்கு ஏற்ப அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதனைக் காட்டுகிறது எனலாம். அது போலத்தான், இந்த கயா சிரார்த்தம் என்பனவெல்லாம்., அங்கு பிண்ட சிரார்த்தம் செய்வித்தனர்.

பிண்டங்கள்

  1. மரத்து அடியில்
  2. பித்ருக்களுக்காக விடபட்டது.

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷய வடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். 

கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

Top of Form

கீழ் கண்ட மந்திரங்களை அங்கிருந்த ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொன்னார். அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதே விட்டனர்… நிதானமாகப் படியுங்கள். நிச்சயமாக உங்கள் தாயை நினைத்து உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்….

இதில் 32 பிண்டங்கள் தாய்க்கும், 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.

        தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், கருச்சுமந்த காலத்திலிருந்து, தன்னைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்காகப் பட்ட ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் மன்னிப்பு வேண்டி ஒவ்வொரு மனிதனும் கயாவில் பிண்டங்களை அர்ப்பணிக்கிறான்.

  என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,…’ இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்து கொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 

ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தானாத் த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய

என்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்த பின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர் நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

”ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்றுக்க்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த மூன்றாவது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே. 

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ரு பீடநம் |

”அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக — ஒரு பரிசு — என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன். 

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் |

”ஏம்மா மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ” .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

6. ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்” என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |

”நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த ஏழாவது பிண்டம்..\

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த எட்டாவது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9. ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |

”நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது. நீ தான் இருந்தாயே, பார்த்து-பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச்சித்தமாக இந்த ஒன்பதாவது பிண்டம். 

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

”ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ”கடிக்காதேடா..” . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக மன்னித்து இந்த பத்தாவது பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

”வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்த வேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.” காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், பதினொன்றாவதாக எடுத்துக்கொள்.’

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த பன்னிரண்டாவது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹா கோரே மாதா சோசதி ஸந்ததம் |

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு. ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யம லோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த பதிமூன்றாவது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட், பெரிய அதிகாரி, செல்வந்தன் — நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த பதினாலாவது பிண்டம் தான் அதற்கு பிரதியுபகாரமாக நன்றிக்கடனாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ”தன்னலமற்ற” தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த பதினைந்தாவது பிண்டம் ஒன்றே. 

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த பதினாராவது பிண்டத்தை கடைசியாக ஏற்றுக்கொள் என் தாயே.

என்னை பெற்றெடுத்த தெய்வமே. என் தவறுகளை, மன்னித்து என்னை  ஆசீர்வதி. நீ இருக்கும் போது உன் அருமை தெரியாமல் உன்னை உதாசீனம் செய்தேன், கடிந்து கொண்டேன் என் சில சமயங்களில் உன்னை அவமானப்படுதியும் உள்ளேன் எனது தவறுகளை உணர்ந்து உன்னிடம் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து  மன்னிப்பு கோருகிறேன் அம்மா. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொன்னது போல் கல் மனதுடன் நான் நடந்து கொண்டேனே. நீ என்னை மன்னிக்காவிடில் எனக்கு வேறு எங்கும் மன்னிப்பே கிடையாது, அந்த ஆண்டவன் கூட என்னை மன்னிக்க மாட்டான் அம்மா. என்னை மன்னித்துவிடு அம்மா உன் பாதம் சரணடைந்தேன்

இத்தனை சிறப்பு வாய்ந்த அந்த கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்கின்ற சிராத்தம் ஆனது 101 குலத்தையும், அந்த மனிதன் சார்ந்த ஏழு கோத்திரக்காரர்களையும் கரையேற்றுகிறது என்றும் ஸ்மிருதி உரைக்கிறது. அதாவது, வருடந்தோறும் செய்து வரும் சிராத்தம் என்பதை அன்றாடம் நாம் சாப்பிடுகின்ற உணவு என்று வைத்துக்கொண்டால், கயா சிராத்தம் என்பது என்றோ ஒரு நாள் சாப்பிடுகின்ற விருந்து போஜனம் போல என்று சொல்லலாம். 
வாழ்நாளில் என்றோ ஒருநாள் விருந்து சாப்பிட்டு விட்டால் போதும், அன்றாடம் உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதுபோல, கயா சிராத்தம் ஒருமுறை செய்துவிட்டால் அடுத்து வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதும் அபத்தமே. இது முற்றிலும் தவறு மாத்திரமல்ல, இவ்வுலகை நீத்த பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறியவர்களாகவும் ஆகிவிடுவோம். வருடந்தோறும் சிராத்தம் செய்யத் தவறினால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மஹா பூதாந்தரங்கஸ்தோ மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ  தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

(எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )”

Bottom of Form

விஷ்ணுவின் பாதம் பதிந்த அந்த ஸ்தலத்தில் சிராத்தம் செய்வதால் முன்னோர்களுக்கு குறைவில்லாத அளவிற்கு திருப்தி உண்டாகிறது. கயாசுரனின் பெயரால் அந்த ஸ்தலம் கயா என்றும், பிரம்ம தேவன் யக்ஞம் செய்த அந்த ஆலமரம் அக்ஷய வடம் என்றும் பெயர் பெற்றன. வட மொழியில் ‘வடம்’ என்றால் ஆலமரம் என்றும், அக்ஷயம் என்றால் குறை வில்லாத என்றும் பொருள். 

  இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி காசியிலும் ,கடைசிப்பகுதி இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.

     நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

   இதனை அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல்காசியில் தண்டம்(சுவாமியை தண்டனிடுதல்கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செய்தல்என்பார்கள்.

சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்குமாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்தவர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

  1. , தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
    அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,
  2. , சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி
  3. ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள்  சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்
  4. , ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.
  5. , பெண், பையன். தனது மாமனார், மாமியார்; 
    தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;
  6. , இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்
  7. ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.
  8. ; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.
  9. — தர்ம தேவதைக்கும் , பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது

.ஆதலால் முன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும் உத்தேசம் ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது. காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிகமும் தேவைபடலாம். அதிகம் தேவைபடுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர். ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயாவிலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின் வருமாறு:– சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்; 

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்; 

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள்; ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களில் உள்ளது. 

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்கு கங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணு பாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,
யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.

ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும். 

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:-தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.

பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷய வட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்

மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாசி அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி–அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும். அவரவர் மனைவியே சமையல் செய்யலாம். சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்துக்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்கு தான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும். 

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்கிறது என்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது. இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும். கர்த்தா விடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்
பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.
பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.

மேற்கூறியபடி பிண்ட பிரதானம் செய்த பிறகு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பிராமணர்களுக்கு போஜனம், வஸ்த்ர தானம் செய்து உணவருந்தினோம். அங்கு சாஸ்த்ரிகளுக்கும், மற்ற அனைவர்க்கும் நன்றி கூறி மாலை 4.30 மணியளவில் காரில் காசிக்கு புறப்பட்டோம்.

……………………………………………………………………………………………………………………………………..

பகுதி 5 காசியில் கங்கா பூஜை, தம்பதி பூஜை

21.04.2019

காலையில் எழுந்துகாலைக்கடங்களை முடித்துக்கொண்டு கங்கையில் குளிக்க பிறப்பட்டோம். கங்கையில் நீராடி ஒரு சோம்பில் ஜலமெடுத்துக்கொண்டு சிவா மாதம் சென்றோம். அங்கு ரவி சாஸ்த்ரிகள் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். தம்பதி சமேதரை சங்கல்பம் செய்து கொண்டு முதலில் கங்கா பூஜையை தொடங்கினோம். மந்த்ரா விதிப்ப்ற்காரம் பூஜை செய்த பிறகு தம்பதீ பூஜை செய்ய தயாரானோம் . தம்பதி பூஜைக்காக வாங்கிய வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன.  ஸங்கல்பம் செய்து காசி விஸ்வேஸ்வர அன்னபூரணி ஸ்வரூபமாய் ஆவாகனம் செய்து தம்பதி பூஜையை ஸிரத்தையுடன் முடித்து மங்கள திறவ்யங்கள், ஸம்பாவனை, கொடுத்து நமஸ்கரித்தோம். இத்துடன் காசியில் செய்ய வேண்டிய வைதீக கர்மாக்கள் காரியங்கள் சம்பூர்ணமானதாக சாஸ்த்ரிகள் கூறினார்.

அவருக்கும் திரு ரவி அவர்களுக்கும் நன்றி கூறி நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு புறப்பட்டோம்.

நாங்கள் மாலை ரயிலில் பதிவு செய்திருந்ததால் சிற்றுண்டி அருந்தி ஆதி துர்கையம்மன் கோயில் சென்றோம்.

18-ஆம் நூற்றாண்டில் வங்க தேச (தற்போதைய மேற்க்கு வங்காளம்) மகாராணி ஒருவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது. கோயிலின் பல இடங்களில் பிரமாண்ட மணிகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. கர்ப்பகிரகத்தில் இருக்கும் துர்க்கை அம்மனின் நாக்கு வெளியில் நீட்டிய படி காளி ரூபமாக காட்சியளிக்கிறாள். இருந்தபோதும் அந்தச் சிலை உக்கிரமாக இல்லை. செந்நிற ஆடை துர்கையம்மனுக்கு உடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிலை சுயம்புவாக உருவானதென்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. 

பிறகு மானஸ் மந்திர் , தூண்டி விநாயகர் , கௌடியம்மன் கோயில் சென்றோம் . காசிக்கு வந்து பட்டு புடவை வாங்காமல் எப்டி போவது? ஆகையால் ஈ ரிக்ஷா காரரிடம்  நல்ல கடைக்கு கூட்டிசெல்ல பணிதோம் அவரும்  முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அழைத்து சென்றார். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அலசிய பிறகு சில புடவைகள் செலக்ட் பண்ணினார் எனது மனைவி யும்  எனது சகோதரனின் மனைவி யும் .

பிறகு நாங்கள் தங்கும் ஓட்டலுக்கு வந்து உணவருந்தி சிரம பரிகாரம்  செய்த பிறகு மாலையில் டெல்லி புறப்பட்டோம்.

காசியைப்பற்றி சில முக்கிய தகவல்கள்

🥀 அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் “அஸ்சங்கமேஸ்வரர்” எனப்படுகிறார்.

🥀 முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.

🥀 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

🥀 இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் *சூலடங்கேஸ்வரர்* என்ற சிவலிங்கம் உள்ளது.

🥀 இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள *ஆதிகேஸ்வரரை* வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள *பிந்துமாதவர்* மற்றும் *கங்கேஸ்வரரை* வணங்க வேண்டும்.

🥀 பஞ்ச தீர்த்தக் கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள *மணிகர்ணிகேஸ்வரர்* மற்றும் அம்பாளையும் வழிபட வேண்டும்.

🥀 காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

🥀 பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.

🥀 பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.

🥀 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.

🥀 சிவபெருமான் விரும்பி மகா மயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.

🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.

🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.

🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.

🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.

🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.

🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.

🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.

🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

தீர்த்தக் கட்டங்கள்:

🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்.

காசி , கயா, பிரயாகை பயண குறிப்புகள் தங்களுக்கு உபயோக மாக இருக்கும் என நம்புகிறேன்

ஓம் நம் சிவாய

ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி , சர்வே ஜனா சுகினோ பவந்து சமஸ்தா லோகஹ சுகினோ பவந்து

-************************************

பின்னுரை

இந்த பதிவு செய்ய உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. படங்கள், தகவல்கள், வரலாறுகள், புத்தகங்கள், வலைப்பதிவுகள், பெரியோர்கள், வைதீகர்கள்,என பல்வேறு இடங்களிலுருந்து தகவல்கள்  சேகரிக்கப்பட்டது.  நபர்கள், உறவினர்கள், உடன் பிறந்தோர் , கொடுத்த ஆதரவும், என் மகள் ரஞ்சனி, என் மனைவி யார் இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்..இந்த பதிவு பற்றிய் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

                என்னை ஈன்றெடுத்த என் பெற்றோர்களுக்கும் மூதாதையருக்கும் சமர்ப்பணம்               

  காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

***********************

தொடர்பு கொள்ள விரும்புவோர் தங்கள் மின்னஞ்சல் மூலம் k.hariharan49@gmail.com தொடர்பு கொள்ளவும்.  .

தொடர்பு கொள்ள விரும்புவோர் தங்கள் மின்னஞ்சல் மூலம் k.hariharan49@gmail.com ல தொடர்பு கொள்ளவும்

Did You Instruct United Nations To Cancel Your Payment??

Dear Sir,

How are you today?

Why have you not gotten the funds from the bank which has been delayed since years ago?

Excuse please, did you instruct UNITED NATIONS to Terminate your payment?

I mean the approved amount of $459,000.00 that was instructed by United Nations Compensation Commission (UNCC).

The United Nation has instructed for an immediate transfer to all beneficiaries who has an outstanding payment from executed contracts,and other funds to collect.

I wonder why others got their funds and you adviced that it should be cancelled and not sent to your bank account.

Also confirm to me as soon as possible, If you really need my help to assist you get those funds sent to your account without any delay or fees required whatsoever by the bank.

Cell Phone: +1 3473 827 258

WhatsAPP +1 484 810 4010

Awaiting your swift response.

Yours Faithfully,

Mr. David Campbell
Head, Corporate Banking & Public Sector
Assistant Payment Officer
For: Management.

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

          காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

***********************

தேவதாப்ய பித்ருப்யஸ்ச மகா யோகிப்ய ஏவ 

நமஹ ஸ்வதாயைஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ

என்னை ஈன்றெடுத்த என் பெற்றோர்களுக்கும் மூதாதையருக்கும் சமர்ப்பணம்

முன்னுரை

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே

முழு முதர்க்கடுவுளான விநாயகருக்கும், பெற்றூர்களுக்கும்,,

 எனது ஆசிரியர், ஆச்சார்யார்கள், பெரியோர் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி ஸாஷ்டாங்க நமஸ்காரம்.

அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம். நான் எழுதியதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் முன்னர் ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் ஹரி. கிருஷ்ணமுர்தி ஹரிஹரன் என்பது முழுப்பெயர். இந்திய தலைநகர் புது டில்லியில் பிறந்து, வளர்ந்து மத்திய அரசாங்க அலுவலகத்தில் 36 ஆண்டுகள் வேலை பார்த்து அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறேன்.. எனக்கு நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு ஆகையால் எனது இரு செல்வங்களுக்கு புராணங்கள், இதிகாசங்கள், தெனாலி ராமன், என ஆன்மீகம், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, என சின்ன-சின்ன கதைகள் மூலம் சிறு வயது முதல் சொல்லி வந்தேன். அவர்கள் வளர்ந்ததும்  அலை பேசியில் பல மணி நேரங்கள், தொலைக்காட்சி முன் பல மணி நேரம் என்று ஓய்வு நாட்களில் நேரத்தை செலவழித்து வந்தேன்.  தாய் தந்தையர் இருந்த வரை பஜனை, பூஜை, பாடு, நாடகம், என்று வெளி நிகழ்சிகளில் ஈடுபட்டு வந்தேன். அவர்கள் போன பிறகு சென்ற 10 ஆண்டுகளாக வெளி நிகழ்ச்சிகள் குறைந்து கொண்டு வந்தது. தொடர முயற்ச்சித்தாலும் அங்கு வரும் சிலரின் சுயநலத்தனமான நடவடிக்கைகள் மனதை வருத்தின. ஆகையால் ஒதுங்கி இருத்தல் நலமென்று ஒதுங்கி விட்டேன், 

போன மாதம் காசி, பிரயாகை, கயா பயணம் பித்ரு காரியங்கள் செய்ய  சென்றோம். அங்கு பல விதமான தகவல்கள் அறிந்து கொண்டோம். இது முன்னரே தெரிந்தால் இன்னும் பயண அனுபவம் நன்றாக இருந்திருக்குமே என்று நானும் என் துணைவியாரும் நினைத்தோம். அப்போது எனது மூத்த மகள் ரஞ்ஜனி , அப்பா நீங்கள் தான் சிறு வயது முதல், கதை , கவிதை என்று பள்ளியிலும், கல்லூரியிலும் , அலுவலகத்திலும் பரிசு வாங்கி இருக்கிறீர்களே நீங்கள் என் பயண கட்டுரை, சிறுகதைகள் எழுதக்கூடாது என்று கேள்வி எழுப்பினாள். அதன் பலன் தான் இந்த முயற்சி. இந்த கட்டுரையின் முதல் சில பக்கங்கள் எழுதியதும் எனது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் காண்பித்தேன். அவர்களும் படித்து விட்டு நன்றாக இருக்கிறது என்று உற்சாகப்படுத்தினார்கள். இது உங்களுக்கும் பிடிக்கும் மற்றும் உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் . 

இந்த பதிவில் எனது பயண அனுபவங்கள், அங்குள்ள மனிதர்கள் கூறிய தகவல்கள்,சில விபரங்கள், படங்கள்  கூகிளில் இருந்து மற்றும் ஏனைய,புத்தகங்கள், வரலாறுகள் , பெரியோர்கள் கூறிய கதைகள், விபரங்களிருந்து  சேகரிக்கப்பட்டவை. யாம் பெற்ற இன்பம் வையகம் பெருக என்ற கருத்தில் தான் என் எழுத்தில். தகவல்கள் சேகரிக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும்  நன்றி. இதை வடிவம் தர முயற்சித்து இருக்கிறேன். ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஓம் நம் சிவாய .

 ஸ்ரீ குரூப்யோ நமஹ்

சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை

ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||

பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் துணைவியார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது துணைவியாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் துணைவியாரும்) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் துணைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை  தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம்.  அந்த நாளும் வந்தது.

காலையில் குளித்து விட்டு ஹிரண்ய ஸிரார்த்தம் செய்ய ஆயத்தமானோம். ரவி சாஸ்த்ரிகள் சிவ மடத்தில் ஸிரார்தத்திற்கு உண்டான  சகல ஏற்பாட்டுடன் தயாராக இருந்தார். ஹிரண்ய ஸிரார்தம் முகவும் ஸிரத்தையாக செயத பிறகு ஹனுமான் காட்டில் படகில்  ஏறினோம். படகில் நாங்கள் நால்வரும், ஸ்ரீ ரவி சாஸ்த்ரிகலௌம் கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது  17-17 பிண்டங்களாக 5 தனி தனியாக வைக்க சொன்னார். எனது துணைவியாரும், ஆனது சகோதரனின் துணைவியாரும் பிண்டம் பிடித்து வைக்க ஆரம்பித்தனர். சாஸ்த்ரிகள் மந்திர உச்சாடனத்துடன் பித்ரு பூஜையை ஆரம்பித்தார்.

அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17

தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

ஹரித்வாரம், உத்திர சரோவரம், விஷ்ணு பாதம், பஞ்ச கங்கா மற்றும் மணிகர்ணிகா என்று ஐந்து இடங்களில் கங்கையில் பஞ்ச் தீர்த்த ஸிரார்த்தம் செய்து பிண்டங்களை பிரவாகம் செய்தோம். ஏனென்றால் காசியில் காகங்கள்  பிண்டங்களை உண்பதில்லை, கங்கையில் கரைத்தோ அல்லது பசு மாட்டிற்கு அளித்தோ தான் பிண்டமிட வேண்டும். பிண்டமிட்ட பிறகு மணிகர்ணிகா காட்டில் குளித்து சிவ மடம் திரும்பினோம் . அங்கு ஸிரார்த்த காரியங்களை முடித்து கொண்டு உணவருந்தினோம். மாலை மூன்று மணியளவில் கார் மூலம் கயாவிற்கு புறப்பட்டோம்.

  • , காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரை விதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.
  • கண்டம் கூறுகிறது:-
  • , அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீ கண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீ யாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்த சேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த     யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலை முடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.
  • :-
  • மித்ர பந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடி போட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வர சௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களை விட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது. காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான் .ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசி கங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி ‘விஷ்ணு தர்மோத்தர’ புராணம் ‘சௌபரி ஸம்ஹிதை’ இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.
  • . யாத்திரை செய்யும் பொழுது இஷ்ட தேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் ‘ஹர ஹர மஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும்.   யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.
  • , ஆசமனம், தர்ப்பணம், தேவ பூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.
  • :- முதலாவது கங்கா ஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம் .இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.
  • :-
  • , கங்கா தேவியின் இதய ரூபமும் பகவானுடைய முக ரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவ ரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லையென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். ‘மணிகர்ணிகா குண்டம்’ என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே ‘மணிகர்ணிகைத் துறை’ என்று கூறுகிறோம்; அதைப் போலவே ‘தசாஸ்வமேத கட்டத்தில்’ தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற்கொப்பாகும் என்று கூறப்படுகிறது. ‘காலையில் பஞ்சகங்கா’ கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்’ ஸ்னானம் செய்வது மகத்துவம். அல்லது ‘காலையில் ‘தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் ‘மணிகர்ணிகா’ கட்டத்திலும் ஸ்னானம் செய்வது நல்லது. ‘மணிகர்ணிகா ஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரையென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்த யாத்திரை) என்றும் சொல்வார்கள் .கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை. காசீ தர்பணம்’ என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ரு தர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞான வாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச்சித்தமாகக் கூறப்படுகிறது. காசீ கண்டம் எண்பத்தி நாலாவது அத்யாயத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணை ஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னான மாத்திரத்திலேயே பாபச்சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான்.
  • முகத்தையுடைய சிவ பிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை – காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச்சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் ‘கேதார காட்’ – கௌரி குண்டத்தையும், ‘த்ரிலோசனா காட்’டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.
  • :- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.
  • போல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.
  • . ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர், ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.
  • , ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்க புராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.
  • , மத்யமேஶ்வரர், ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும்   காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.
  • ;

பகுதி 4 கயா ஸிரார்தம்

திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு  மட்டும் இல்லை………….. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள்,  பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்ற போது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

கிருதயுகத்தில், “கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால், 
“”தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால்  சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு  யோசனையைக் கூறினார். “ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்கசொன்னர். பிரும்மாவும்  திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். “இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை” என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான். 

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது. 

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். “தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று  அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான். அவன் 2 வரங்கள் கேட்டான். 

1. “முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்.”

2. “இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும்  கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும்  உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம்  போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில்  பிணம் / பிணங்கள்  எரிவதும் தினமும்  நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார்  

.நாங்கள் போன போது கூட 2 – 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு….அங்கு எதற்கும் தீட்டே இல்லை.

“கயை’ என்றும் “கயா’ என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. “இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..

பிறகு மானஸ் மந்திர் , தூண்டி விநாயகர் , கௌடியம்மன் கோயில் சென்றோம் . காசிக்கு வந்து பட்டு புடவை வாங்காமல் எப்டி போவது? ஆகையால் ஈ ரிக்ஷா காரரிடம்  நல்ல கடைக்கு கூட்டிசெல்ல பணிதோம் அவரும்  முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அழைத்து சென்றார். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அலசிய பிறகு சில புடவைகள் செலக்ட் பண்ணினார் எனது துணைவியாரும் எனது சகோதரனின் துணைவியாரும்.

பிறகு நாங்கள் தங்கும் ஓட்டலுக்கு வந்து உணவருந்தி சிரம பரிகாரம்  செய்த பிறகு மாலையில் டெல்லி புறப்பட்டோம்.

காசியைப்பற்றி சில முக்கிய தகவல்கள்

🥀 அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் “அஸ்சங்கமேஸ்வரர்” எனப்படுகிறார்.

🥀 முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.

🥀 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

🥀 இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் *சூலடங்கேஸ்வரர்* என்ற சிவலிங்கம் உள்ளது.

🥀 இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள *ஆதிகேஸ்வரரை* வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள *பிந்துமாதவர்* மற்றும் *கங்கேஸ்வரரை* வணங்க வேண்டும்.

🥀 பஞ்ச தீர்த்தக் கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள *மணிகர்ணிகேஸ்வரர்* மற்றும் அம்பாளையும் வழிபட வேண்டும்.

🥀 காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

🥀 பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.

🥀 பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.

🥀 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.

🥀 சிவபெருமான் விரும்பி மகா மயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.

🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.

🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.

🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.

🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.

🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.

🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.

🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.

🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

தீர்த்தக் கட்டங்கள்:

🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்.

காசி , கயா, பிரயாகை பயண குறிப்புகள் தங்களுக்கு உபயோக மாக இருக்கும் என நம்புகிறேன்

ஓம் நம் சிவாய

ஓம் சாந்தி

———————————————————————————-************************************

பின்னுரை

இந்த பதிவு செய்ய உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. படங்கள், தகவல்கள், வரலாறுகள், புத்தகங்கள், வலைப்பதிவுகள், பெரியோர்கள், வைதீகர்கள்,என பல்வேறு இடங்களிலுருந்து தகவல்கள்  சேகரிக்கப்பட்டது.  நபர்கள், உறவினர்கள், உடன் பிறந்தோர் , கொடுத்த ஆதரவும், என் மகள் ரஞ்சனி, என் துணைவியார் இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்..இந்த பதிவு பற்றிய் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

25 Tips to Keeping a Low-Sugar Lifestyle!

Sugar is a wonderful thing for the tongue, but can be a horrible thing for our health. Excess sugar leads to obesity, diabetes, cancer and many other diseases and illnesses. Most of us realize at some point that we curb our appetite for sugar. But sugar is highly addictive, and it’s not easy beginning a lifestyle much reduced in sugar. Here are 25 golden rules to leading a low-sugar lifestyle.
healthy

1. Reduce the amount of sugar SLOWLY
Some people try to cut sugar out of their lives immediately, going cold turkey. What they forget is that sugar is an addictive substance, a VERY addictive substance. Once your body gets used to it, quitting all at once can be a horrible experience, leading to bad emotional states, anxiety and even physical symptoms such as fatigue and sweats. Studies also show that quitting sugar all at once leads to a higher risk of returning to full time consumption. It’s healthier and better to slowly decrease your intake over a couple of weeks time.

2. Consume whole foods
Whole foods don’t contain added sugar. So why not stick to fruits, vegetables and meat products in their original condition, and reap the benefits?

3. Prepare your own meals
Get out that cookbook and start cooking for yourself. That way you know exactly how much sugar is in your meal, and you get no surprises from food places that add a little sugar "for taste".

4. Become suspicious of ‘sugar free’ labels
So it doesn’t have sugar. But it DOES have artificial sweeteners that, besides increasing your risk of certain cancers, trick your body into thinking glucose is being delivered. When it fails to, you will feel hungrier, and look for something sweet again. So watch out for those "no sugar" labels.

5. "Fat-Free" is just as bad
Yes, it’s fat-free, but it usually contains added sugar or sweeteners, to make up for the lesser flavor of foods with less fat.

6. It’s time to know your labels
All foods carry labels. We know it’s no fun trying to understand them, but once you read a few you’ll see they repeat themselves, and you can easily start to identify those that have the most natural ingredients and less artificial ingredients, as well as the preparation techniques that use no added sugars or sweeteners. Compare the labels you read to labels of products you KNOW are bad for you, find what is similar and what is different to know you’ve made the right choice.

sodas

7. No sodas, no non-natural juices
Almost all of these drinks are pretty much sugar water. So if you’re serious about getting your sugar intake way down, avoid these the plague.

8. That includes diet sodas, too
As we’ve said before, artificial sweeteners will just make your body crave more sugar. Diet sodas are full of those, and will enlarge your sweet tooth. Sorry to say, diet sodas should be avoided just regular sodas.

9. Start your days with a good amount of protein
Eggs, protein shake, yogurt – try to start your day with a breakfast that contains food products such as these. They will keep your blood sugar levels normal and limit your cravings for sweets. An added benefit is that they will also help control your metabolism for the rest of your day.

10. Don’t forget your meals – no skipping
We all forgo a lunch or dinner here and there. Sometimes we’re busy, sometimes just too tired to feel eating. But it backfires, because we get more cravings for sweets this way, and we may easily turn to sugar to plug that hole.
11. Emergency snacks are an important resource
Nutrition experts such as Dr. Mark Hyman recommend having an emergency snack-pack close to you at all times. So when you get that craving, you have something immediate to reach out to, such as fresh fruit, nuts, jerky or whole foods. This way you’re not tempted to go out to the vending machine closest to you and succumb to your sweet tooth.

12. Drink, and drink a lot
It may not seem connected, but when we’re thirsty, our body increases our cravings for food and sweets. Keep yourself hydrated and those cravings will subside.

healthy

13. Choose fruits
Fresh fruits will hydrate you, supply you with much needed fiber and help you metabolize fructose, a much better way to answer the call of your sweet cravings than any processed food.

14. But even more than fruit – go for vegetables and nuts
Fruit is very healthy, but also sweet, and that sweetness will keep your addiction to sugar in existence. Limit yourself to a small amount of fruit a day (1-2) and tgo for veggies, nuts and seeds as the best types of snacks.

15. There are healthy fats around, keep them closeby
Healthy fats, those found in extra virgin olive oil, avocados, nuts and seeds, will get you to a place where you feel full, have lots of energy, and enjoy a balanced blood-sugar level.

healthy

16. Everything has a natural substitute – find it.
White sugar can be replaced with honey or molasses (keep the amounts small). These provide great flavor with a lot more nutrients, and will keep your sugar intake lower.

17. Spice up your life
Another great way of satisfying your craving for something sweet is using spices such as nutmeg, cinnamon, paprika, cardamom and many others that have a sweetness to them without adding sugar.

18. Try a week of black coffee
I know not everyone enjoys black coffee, but it just takes a little getting used to. Take a 7 day trial and drink only black coffee. Studies have shown it can reduce the risk of diabetes as well as certain types of cancer, and is a real metabolism booster. Drink it slowly and absorb the rich taste and experience. You don’t need sugar to enjoy that special aroma.

19. chocolate? Join the dark side
Dark chocolate contains A LOT less sugar than its milky counterpart, and can be very good for you..

healthy

20. Don’t do it alone
Fighting your sugar craving is so much better when you’re not doing it alone. Maybe you have a friend, a loved one or a significant other who can also use a sugar reduction? Most of us do. Pair up and give each other much needed support. Cook together and talk to each other when the cravings get really bad. It can be a huge comfort and stop you before making that craving come true.

21. Know the other names of sugar
When looking for sugar content, sometimes you may miss its other names. Names "Black strap molasses", "Agave Nectar", "Dried oat syrup" or even "Evaporated cane juice". These aren’t EXACTLY sugars, but your body still treats them the same. So be on the lookout, and keep reading those labels!

22. Never assume a product or food is devoid of sugar
You wouldn’t think there is sugar in a salad, right? Or in a sauce or meat glaze? But sometimes there are. If you’re at a restaurant, ask your waiter about sugar content. If you’re buying a product, once again – check the label. Never assume something is sugar free just because it doesn’t make sense for it to have sugar. It gets added to a surprising amount of foods.

23. The glycemic index is not the final answer
The glycemic index scale measures glucose, but not fructose. Sugars are metabolized differently and have different effects on our body, so the GI scale is not enough to judge.

healthy

24. Sleep, and sleep well
When we don’t get enough sleep (or enough quality sleep), we fall behind on our energy needs, and will often look for something to fill that energy hole – such as sugar, sugary coffee or tea etc. Get 7-8 hours of good sleep a night to avoid empowering your cravings.

25. Track your emotions
A lot of the time we reach out to that sugary goodness to compensate for a bad emotional state, and not because we’re truly hungry. Notice how you are feeling when cravings strike. Knowing is half the battle, and when you’re aware of your emotional state, you can counter that craving with something that makes you happy or brings you joy that isn’t sugary food..

__._,_.___

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।

om2.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
( hari krishnamurthy K. HARIHARAN)"” When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாவுன்னடி
யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

***********************

தேவதாப்ய பித்ருப்யஸ்ச மகா யோகிப்ய ஏவ ச

நமஹ ஸ்வதாயைஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ

என்னை ஈன்றெடுத்த என் பெற்றோர்களுக்கும் மூதாதையருக்கும் சமர்ப்பணம்

முன்னுரை

எல்லோரும் இன்புற்றிருக்கநினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே”

முழு முதர்க்கடுவுளான விநாயகருக்கும், பெற்றூர்களுக்கும்,,

எனது ஆசிரியர், ஆச்சார்யார்கள், பெரியோர் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி ஸாஷ்டாங்க நமஸ்காரம்.

அனைவருக்கும் வணக்கம், நமஸ்காரம். நான் எழுதியதை நீங்கள் படிக்க ஆரம்பிக்கும் முன்னர் ஒரு சின்ன அறிமுகம். என் பெயர் ஹரி. கிருஷ்ணமுர்தி ஹரிஹரன் என்பது முழுப்பெயர். இந்திய தலைநகர் புது டில்லியில் பிறந்து, வளர்ந்து மத்திய அரசாங்க அலுவலகத்தில் 36 ஆண்டுகள் வேலை பார்த்து அடுத்த வருடம் ஓய்வு பெறுகிறேன்.. எனக்கு நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டு ஆகையால் எனது இரு செல்வங்களுக்கு புராணங்கள், இதிகாசங்கள், தெனாலி ராமன், என ஆன்மீகம், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, என சின்ன-சின்ன கதைகள் மூலம் சிறு வயது முதல் சொல்லி வந்தேன். அவர்கள் வளர்ந்ததும் அலை பேசியில் பல மணி நேரங்கள், தொலைக்காட்சி முன் பல மணி நேரம் என்று ஓய்வு நாட்களில் நேரத்தை செலவழித்து வந்தேன். தாய் தந்தையர் இருந்த வரை பஜனை, பூஜை, பாடு, நாடகம், என்று வெளி நிகழ்சிகளில் ஈடுபட்டு வந்தேன். அவர்கள் போன பிறகு சென்ற 10 ஆண்டுகளாக வெளி நிகழ்ச்சிகள் குறைந்து கொண்டு வந்தது. தொடர முயற்ச்சித்தாலும் அங்கு வரும் சிலரின் சுயநலத்தனமான நடவடிக்கைகள் மனதை வருத்தின. ஆகையால் ஒதுங்கி இருத்தல் நலமென்று ஒதுங்கி விட்டேன்,

போன மாதம் காசி, பிரயாகை, கயா பயணம் பித்ரு காரியங்கள் செய்ய சென்றோம். அங்கு பல விதமான தகவல்கள் அறிந்து கொண்டோம். இது முன்னரே தெரிந்தால் இன்னும் பயண அனுபவம் நன்றாக இருந்திருக்குமே என்று நானும் என் துணைவியாரும் நினைத்தோம். அப்போது எனது மூத்த மகள் ரஞ்ஜனி , அப்பா நீங்கள் தான் சிறு வயது முதல், கதை , கவிதை என்று பள்ளியிலும், கல்லூரியிலும் , அலுவலகத்திலும் பரிசு வாங்கி இருக்கிறீர்களே நீங்கள் என் பயண கட்டுரை, சிறுகதைகள் எழுதக்கூடாது என்று கேள்வி எழுப்பினாள். அதன் பலன் தான் இந்த முயற்சி. இந்த கட்டுரையின் முதல் சில பக்கங்கள் எழுதியதும் எனது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் காண்பித்தேன். அவர்களும் படித்து விட்டு நன்றாக இருக்கிறது என்று உற்சாகப்படுத்தினார்கள். இது உங்களுக்கும் பிடிக்கும் மற்றும் உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவில் எனது பயண அனுபவங்கள், அங்குள்ள மனிதர்கள் கூறிய தகவல்கள்,சில விபரங்கள், படங்கள் கூகிளில் இருந்து மற்றும் ஏனைய,புத்தகங்கள், வரலாறுகள் , பெரியோர்கள் கூறிய கதைகள், விபரங்களிருந்து சேகரிக்கப்பட்டவை. யாம் பெற்ற இன்பம் வையகம் பெருக என்ற கருத்தில் தான் என் எழுத்தில். தகவல்கள் சேகரிக்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இதை வடிவம் தர முயற்சித்து இருக்கிறேன். ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

ஓம் நம் சிவாய .

*********************

ஸ்ரீ குரூப்யோ நமஹ்

சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை

ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||

பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் துணைவியார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது துணைவியாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் துணைவியாரும்) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் துணைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம். அந்த நாளும் வந்தது.

16 ஏப்ரல் இரவு Mandwadih சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் காசிக்கு பயணம் தொடங்கியது. 17ம தேதி திரு ரவி அவர்கள் ரயில் நிலயதிற்கு வந்து ஓட்டலுக்கு அழைத்து சென்றார். ஓட்டலில் உணவு அருந்தி சற்று களைப்பாறினோம். அன்று மதியம் 3 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம். ஒரு கோவிலுக்கு போகிறோம் என்றால் அதன் வரலாறு அறிந்து தரிசனம் செய்தல் நலம்.

துண்டி விநாயகர்

துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு
கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே

எந்த ஒரு வேலையும் தொடங்குமுன்னர் முழு முதர்க்கடௌவலான விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே

துண்டி விநாயகர்

எந்த ஒரு வேலையும் தொடங்கு முன்னர் விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே முதலில் தூண்டி விநாயகர் கோயிலுக்கு சென்றோம். விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார். செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல் போகக்கூடாது என்பது சம்பிரதாயம். காசிக்கு செல்பவர்கள் துண்டி விநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டி விநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் அரை குறையாகத் தான் இருக்கும். எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபட வேண்டும். இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான் பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள்.

விஸ்வநாதர், அன்னபூரணி தேவி ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், மிக குறுகலான 5 அடிக்கும் குறைவான அகலம் உள்ள சந்துக்கள்தான் உள்ளன. மேலும் கோவிலுக்குச் செல்லும் வழி எங்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஸ்வநாதர் சிலைக்கு அருகே சுமார் இருபதடி தொலைவில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே போலீஸ் மயமாகத்தான் உள்ளது. இப்படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பது மிக மிகச் சிறிய அளவில். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கோயிலினுள் இருக்கும் காசி விஸ்வநாதர் சிலை; மிகச்சிறிய சிவலிங்கம் போன்று காணப்படுகிறது. இதை வைத்துத்தான் நம் முன்னோர்கள் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்று சொன்னார்கள் போலும்

காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை:

அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் எனப்படுவர். வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்த ரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர்.. ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும் போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும் போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து கொள்கின்றனர். இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.

ஸ்கந்த புராணத்தில் காசி கண்டம் இத்தலத்தை வர்ணிக்கிறது. மும்மூர்திகளில் யார் பெரியவர் என்று கேள்வி எழுந்தவுடன் சிவன் ஒரு ஒளிப்பிழம்பாய் மாறி அடி முடியில்லாத ஸ்வரூபமாய் காட்சி அளிக்கிறார் மகாவிஷ்ணு அந்த ஓளியின் ஆரம்பம் எங்கே என்று தேட போகிறார் பிரம்மனோ முடியை நோக்கி பயணிக்கிறார் பல யுகங்கள் சென்ற போதிலும் அடியும் முடிவும் காண முடிய வில்லை பிரம்மா மேல் நோக்கி செல்லுகையில் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுகிறது பிரம்மா அதனை தான் முடியைக்கண்டதற்கு சாட்சியாக இருக்க வேண்டுகிறார் . தாழம்பூவும் ஒப்புக்கொள்கிறது . பிரம்மன் சிவனிடம் வந்து தான் முடியை கந்ததாகவும், தாழம்பூ அதற்கு சாட்சியென்றும் கூறுகிறார். அங்கு விஷ்ணு தான் அடியை காண முடியாமல் தோற்றதாக ஒப்புக்கொள்கிறார். பொய் சொன்னதனால் சிவன் பிரம்மாவிற்கு எங்கும் வழி பாடு நடக்காது என்றும், தாழம்பூ அதற்கு சாட்சி சொன்னதால் அது சிவ பூஜைக்கு சேர்க்க கூடாது என்றும் கூறுகிறார். மகா விஷ்ணு சிவனை விஸ்வேஸ்வர ரூபமாய் தரிசனம் அளிக்க வேண்டுகிறார். சிவனும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி லிங்க ரூபமாய் காட்சி அளிக்கிறார். அதைத்தான் நாம் காசி விஸ்வநாதராக இன்று காண்கின்றோம்.

சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ; முத்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; அம்மனின் சக்தி பீடம் ;ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவ ஸ்தலம்..* அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி- உத்தரப்பிரதேசம்.*

மூலவர்: *காசி விஸ்வநாதர்* அம்மன் /தாயார்: *விசாலாட்சி* தீர்த்தம்: *கங்கையில்64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதி கங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாபி என்ற சிறு தீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.*

பழமை: *5000 வருடங்களுக்கு முன்* புராண பெயர்:*வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகா மயானம், அவிமுக்தம்* ஊர்: *காசி* தல சிறப்பு: மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆன சுயம்புநாநர்.. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டி போட்டு குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். விசுவநாதருக்குத் தங்க விமானம் – சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

காசி மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்வேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன் பிறகே சூட்டப்பட்டது. அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள்.

காசி விஸ்வநாதர் கோயில் தொன்று தொட்டு இருந்தாலும் இதனை கி பி 1194ம ஆண்டு முகமது கோரியின் படை தலைவன் குதுபுத்தின் நிர்மூலமாக்கினான். அதன் பிறகு குஜராத் மன்னர்கள் கட்டினார் இது போன்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளற்களால், கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு சின்னாபின்னப் படுத்த்தப்பட்டது அதை இந்து மன்னர்கள் மறுபடியும், மறுபடியும் ஒவ்வொரு முறையும் கட்டினர். இந்தோர அரசியான அகல்யா பாய் ஹோல்கர் காலத்தில் முகலாய மன்னர் ஔரங்கஜீப் இதனை மறுபடியும் இடித்து ஞான வாபி மசூதியை கட்டினான். ஆனால் ராணி அகல்யா பாய் மற்றும் பண்டாக்கள் மரகத சிவ லிங்கத்தை அருகிலுள்ள கிணற்றில் போட்டு மூடி விட்டார்கள். இந்த கிணற்றையும் மசூதியையும் இன்றும் காணலாம். தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயம் 1780ஆம் ஆண்டு மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது..1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டதுதற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார்

.

!காசி விஸ்வநாதர் மிகச்சிறிய சிவலிங்கம் :

கோயில் தரிசனம் செய்ய கிளம்பியவுடன் மழை பெய்ய ஆரம்பித்தது . கோயிலுக்கு மழையில் நனைந்து கொண்டே போனோம். விஸ்வநாதர் கோயில் போகும் பொழுது அலை பேசி, குடை, போன்ற பொருள்கள் எடுத்து செல்ல கூடாது. ஆகையால் அங்கு அருகிலிருந்த கடாய் ஒன்றில் இந்த சாமான்களையும், ஹேண்ட்பேக், போன்ற பொருள்களை ஒரு லாக்கரில் வைது விட்டு பிரசாத பொருள்கள், மாலை, அபிஷேகத்திற்கு பால், முதலியன வாங்கி சென்றோம். கடைக்காரர்கள் தலையில் நிறைய சாமான்களை கட்ட முயற்சிப்பார்கள். தேவையானவற்றை மட்டும் வாங்கி கொள்ளுங்கள் . பாதுகாப்பு சோதனை முடிந்து கோயில் உள்ளே சென்றோம். அங்கு பண்டாக்கள் நான் தரிசனம், பூஜை செய்கிர்3என் என்று சொல்லி வருவார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம். வடநாட்டில் நாமே எல்லா பூஜையும் செய்யலாம். விநாயகர், அன்ன பூரணி,, கால பைரவர், குபேரர் என, ஒவ்வொரு கட்டத்திலும் தரிசனம் செய்து ,பாலாபிஷேகம் நமது கரங்களினால் செய்து மாலை சார்த்தி, புஷ்ப அர்ச்சனை செய்து மகிழ்ந்தோம். வட நாடு ஞான பூமி. ஆகையால் இங்கு தீட்டு முதலானவைகள் கிடையாது. வடநாட்டில் நாமே பூஜை செய்யலாம். அங்கு உள்ள பண்டாக்கள் பணம் தருமாறு வற்புறுத்துவார்கள் ஆனால் செவிமடுக்காமல் தொடர்ந்து உங்கள் கவனம் பூஜையின் மீதும், பர்ஸின் மீதும் இருக்கட்டும். அங்கு கையில் சில்லறையாக பணம் எடுத்து செல்வது நன்று. காசி விஸ்வநாதர், அன்னபூரணியை தரிசித்து உள்ளே சென்றோம் அங்கு ஞான வாபி என்னும் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் ஒரிஜினல் மரகத சிவலிங்கம் உள்ளது. கிணற்றை முழுமையாக மூடிவிட்டனர். அங்கு உள்ள பண்டாக்கள், பூசாரிகளிடம் பேச்சுக்கு மயங்க வேண்டாம் இல்லையேல் உங்களிடம் கறந்துவிடுவார்கள். கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இது தான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞான வாபி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகை..

அடுத்து காசி அன்னபூரணியின் கோயில் சென்றோம். என்ன அழகு அம்பாள் சிகப்பு நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து நின்றோம்.

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும் பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள். இந்த அன்னபூரணி கோயிலில் இன்றும் தொடர்ந்து காலை11 மணியளவில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. நாட்டுக் கோட்டை நகரத்தார் மற்றும் பல சமூக ஸ்தாபனங்கள் நிதி மற்றும் உணவு பண்டங்கள் தானமாக அளிக்கின்றனர்

.

இமையாத வானவர் குழாத்தினுக்கும், மற்றுமொரு மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) உலகில் யாவருக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் தங்க அன்னபூரணியாக காசியில் அருளிபாலிகிறாள். சாம வேதத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காசி அன்ன பூரணி

திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்ற போதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?

காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்ன தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜ குமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார். முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார். அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினாள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.

‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.

அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளி இருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மந்திரம்:
‘ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவதி

அன்ன பூர்ணே மமாபிலிக்ஷிதமன்னம் தேஹி ஸ்வாஹா’

மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அருளை வழங்கக் கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ :
பாந்தவ சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவநத் த்ரயம்

தாயே அன்னபூரணியே சிவனுக்கு பிரியமானவளே, பார்வதி தாயே எனக்கு ஞானமும் வைராக்கியமும் சித்திக்க அருள் புரிவாயாக. தாய் பார்வதியும், தந்தை மகேஸ்வரனும் அனைத்து சிவா பக்தர் உற்றார் உறவினராய் உலகமே என் தேசமாக அனைத்து உயிர்களும் நல்வாழ்வு பெற்று உன் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் தாயே என்று பிரார்த்தனை செய்தோம். அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி, என்றும் மீளாத இன்பத்திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி. ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப் பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள். கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள். காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும். இங்கிருந்து தரிசனம் முடிந்து போகும் பொழுது அன்ன தான் கூடம், காலி தேவி மற்றும் இதர சன்னிதிகளையும் தரிசித்து செல்லுங்கள். பிரசாதமாக கொஞ்சம் அரிசியும் , குங்குமமும் கொடுப்பார்கள். அரிசியை உங்கள் வீட்டில் அரிசி பானையில் கலந்து விடவேண்டும் என்றும் உணவு தட்டுப்பாடு இருக்காது.. . அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள். லோக மாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

அன்னபூரணியை தரிசித்து விட்டு அன்னை விசாலாக்ஷி கோயிலுக்கு சென்றோம். காசி விசாலாக்ஷி அம்மன் சிவனின் வரவுக்காக கண் இமை சிமிட்டாமல் பல ஆண்டுகள் தவசிருந்ததாக கூறப்படுகிறது. துர்கமாசுரன் என்னும் அரக்கன் 12 ஆண்டுகள் எந்த ஒரு ஸ்த்ரீ கண் சிமிட்டாமல் தவமிருப்பாளோ அவர் கையால் மட்டுமே அழிவு என பிரம்மாவிடம் வரம் பெற்று தேவர்களையும், மனிதர்களையும், ரிஷி, முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழித்து அன்னை துர்கை என்றும், கண் சிமிட்டாமல் இருந்ததால் விசாலாக்ஷி என்றும் பெயர் பெற்றாள். விசாலாக்ஷி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள்.

காசி விசாலாக்ஷி பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது..1971-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் விசாலாக்ஷி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.[4][5] சிறிய சந்துகள் வழியே செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் ஆலயம் வந்து செல்கின்றனர் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது. விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளது, மிகவும் அழகிய கோவில்.காசியில் அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள். காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில்பெரும் பெருமை கொண்ட இடம்.

விசாலாஷி கோவில் தென்னாட்டு பாணியில் அமைந்துள்ளது.சுற்றிலும் சிவ-லிங்கங்கள். மூலவர் சந்நதிலேயே (மூலவர் விசாலாஷி) அம்மன் பின்புறமாக ஆதி விசாலாஷி அம்மனையும் தரிசிக்கலாம்.

அம்மனுக்கு விளக்கு பூஜை மகாமேரு பூஜை, பிரகாரத்தில் சிவலிங்க பூஜையும் மிகவும் விசேஷம்.

.

அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. காசியில் தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்

. காசி மாநகரத்தின் ஆலயங்களில் மேலும் சிறப்புற்றது காலபைரவர் ஆலயம். இந்த ஆலயம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவாமி சிலையும் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ”ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. ‘இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள் கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகி விடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன இக்கோயிலானது சிவபெரூமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" (காலம்/காலன்) என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரைக்" கண்டு மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின் பகுதியில், சேத்ர பால பைரவர் சிலை உள்ளது. கால பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. காலபைரவர் காசியின் காவலராக

அதாவது காவல் தெய்வமாக கருதப்படுகிறார். காசியில் வாழ வேண்டுமானால் இவரது அனுமதியை பெற வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.

காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்..

அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு” என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே காலபைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கிய பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். குத்து வாங்கியவர் உடனே தன்னிடம் உள்ள 50 அல்லது 100 ரூபாயை அவரிடமுள்ள தாம்பூல தட்டில் போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆச்சரியம் தான் ஆனால் உண்மை. இப்படி பல ஆச்சரியங்கள் காசி மாநகரில் இருக்கின்றன

. இங்கு தான் காசி கயிறு மந்திரித்து கொடுக்கிறார்கள். நாம் நம் குடும்பதினருக்காக நண்பர், உறவினர்களுக்காக வாங்கி செல்லலாம். கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்” என்றார். ‘ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள் கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்! .

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தில் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யம பயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசி மாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள் புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசி மாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர்.

காசி அனுமன் காட்டில் உரு பைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீ துர்க்கை கோவிலில் சண்டபைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசிதாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீ காமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும், பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத வாகனத்தில் பூத பைரவர் சிம்ம வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வர்த்தணை நிச்சயம் உண்டு. காசி மாநகர எல்லையை தொடும் போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு யம பயம் நீங்கி வாழ வைக்கின்றது.

அடுத்து நாம் காண இருப்பது சங்கட் மோசன் அனுமார் கோயில். இது ஒரு தொன்மையான கோயில். இங்கு தான் துளஸிதாஸர் ராம்சரித் மானஸ் எழுதியதாக .ஐதீகம்.

இந்த ஆஞ்சநேயரை தரிசித்து அடுத்ததாக சோழியம்மன் எனும் கௌடி மாதா வை தரிசிக்க சென்றோம் . தெலுங்கில் கவ்வாலம்மா என்று கூறுகின்றனர். இவர் கிராம தேவதையாய் ஆந்திர தெலுங்கானாவில் குடிகொண்டுள்ளார். சிவனின் மீது உள்ள பக்தியால் இங்கு சிவனின் அருள் பெற காசிக்கு வந்து அன்னை அன்னபூரணியின் கட்டளைப்படி சிவனின் சகோதரியாய் இங்கு அருள் பாலிக்கின்றாள். சோழியும் ஒரு ரவிக்கை துணியும் தான் படையல். "அம்மா இந்த சோழி உனக்கு காசி யாத்திரை பலன் எனக்கு" என்று இங்கு அனைவரும் பிரார்த்தனை செய்து தனது காசி யாத்திரையை முடிக்கின்றனர். இந்த அம்மனை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை முடிவுருவதில்லை.

பிறகு கங்கை கரையில் நடக்கும் ஆரத்தியைக் சென்றோம்.

வேத மந்த்ரங்களின் உச்சரிப்பு, சங்க நாதம், தீபாராதனை, நெய்வேத்யம் என ஷோடச (16) உபசாரங்களும் செய்து தினமும் மாலையில் 7 பண்டாக்கள் கங்கை மாதாவிற்க்கு ஆரத்தி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி கங்கை கரையிலும், படகுகளிலும் அமர்ந்து ஆனந்தமாய் கண்டு களிக்கின்றனர். நிறைய வெளிநாட்டவர்களும் வருகின்றனர்

.. இந்த தெய்வீக அனுபவத்திற்கு பிறகு ஓட்டலுக்கு திரும்பினோம். கார்த்திகை தீப மன்று தேவ தீபாவளி கொண்டாடப்படும். கங்கையின் அனைத்து படித்துறைகளிலும் எண்ணற்ற அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜ்யோதியாய் மிளிரும்.

அடுத்து வைதீக முறைப்படி பித்ரு காரியங்கள் செய்தது பற்றிய விபரங்கள் எழுதுகிறேன். ஓம் நம சிவாய,

……………………………………………………………………………………………………………………………………………………………

பகுதி 2 பிரயாகை

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக்கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.

இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!. சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களைத்தான் நமது வேத கால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் ரகசியங்களை, – பரம கருணையுடன்.
நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர் நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும், மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும். பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!

மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேத வியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர். தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மன நிம்மதியுடனும், மன நிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ள போதே நற் செயல்களைச் செய்து புண்ணிய பலன்களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்க முடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இரு வகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று – நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று – நம்மை நாடி வரும் புண்ணியம்!. நாம் தேடிச்செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
1. திருத்தலங்கள் தரிசனம்,

2. புண்ணிய நதிகளில் ஸ்நானம்,

3.தினமும் செய்யும் தான, தர்மங்கள்,
4. திருக்கோயில் உழவாரப் பணிகள்,

5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல்,
6. திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல்,

7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல்,
8. பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல்,

9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள்.

10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்

.இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளாகும்.. அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை. இது போன்றே நம்மை நாடி வரும் புண்ணியம் :1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம், 4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம், 7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக் களைப் பூஜித்தல்.: பித்ருக்களின் கருணை அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந்தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்பு நிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப்புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்கலாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.

அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல்களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும். ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதி பூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை, எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும். ஆதலால் தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?

திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன்னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீ சீதா தேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.

துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்ததால், பித்ருக்கள் எழுந்தருளும் போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின் போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.

கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!

கலி யுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன் பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் – கேரளம்), கோமுகம், மானஸ சரோவரம் ஆகிய ஆறு(6) பரம பவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன்னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடி வரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம். புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவுஅதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும்பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: கருச்சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.

காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.

ராமநாத ஸ்வாமி கோயில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.

அக்னி தீர்த்தம்

முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலை வாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், சேது, மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும்.

வேணு மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ராமநாத சுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசி யாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது வேணு லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த வேணு மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்.

இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும்.

கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போது தான் நம் காசியாத்திரை நிறைவடையும். இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்..

ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகையில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும்; முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம் கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என கூறுகின்றது.

ப்ரயாகையில் செய்ய வேண்டியது

அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாராகஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது. இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் என சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..

1. ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தானம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.

2 ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்ர தானம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3. பார்வதி பரமேஸ்வரர்; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தானம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.

4. கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.

5. ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்.

6 ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.

7. மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர். மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8. மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன. ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு படகு (போட்) மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்.

படகில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வார் .த்ரிவேணி ஸங்கமத்தில் படகை நிறுத்துவார். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை. .அதற்கு முன் மனைவி தன் புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும் படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்

கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தானம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்கும சிமிழ்;, மஞ்சள் பொடி, அப்ரஹ பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து படகு மூலம் கோட்டை அருகே செல்ல வேண்டும். அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது. அதில் மனித உரு அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸர்; தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது; இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும் ;நுனி பாகம் கயாவிலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்த இலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன், பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம்.

ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறது; சிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது. கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸம்பாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு.

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியவாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.; காசியிலிருந்து கயா 276 கிலோ மீட்டர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர்.

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தானம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது. காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழிபடுவதால் தேவ ருணம் விலகும். ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்.

.
திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணி தானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும். யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்… பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து .காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.

வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.

திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..

வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்யக்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும். தலைமுடி பிரிந்து விடாவண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கை கோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும் .

பிறகு இருவரும் படகில் (boat) வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பின்னி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணீரில் அடியில் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து மறுபடியும் ஸ்நானம் படகிற்கு வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும், சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும்.

.
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்குமிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்…

வேணி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும்

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும். சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தசதானம் செய்ய வேண்டும்..

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம். த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே

தஹத்வக்நிரிவேந்தனம். லோகத்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத்ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்

கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்

ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.

ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதேபத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹவீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;

த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே

தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதாப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வமாம்

ஆல மரத்தின் வேர் அக்ஷய வடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஜடரே அகில மாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷய வடே நமஹ

த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.

ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.

வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹசங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீ மாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது. உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும் போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும். அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறை பொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.
ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

அகார வடிவில் ப்ருஹ்மா விசுவே தேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்யமானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்

இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணி தேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காப்பாற்றுவாள்.. திரிவேணி ஸ்நாந்த்திற்கு பிறகு பள்ளி கொண்ட ஆஞ்சநேயர், அக்ஷய வடம் தரிசித்து சிவா மடத்திற்கு திரும்பினோம். அங்கு ஈர உடைகள் மாற்றி தானம் செய்ய கொடுத்து விட்டோம். பிறகு ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து 17 பிண்டங்கள் பித்ருக்களுக்கு அர்ப்பணித்து , பிராமண தக்ஷினை கொடுத்த பின் வேணு மாதவர் கோயில் தரிசனம் செய்ய சென்றோம். பிறகு போஜனம் செய்து காசிக்கு புறப்பட்டோம்..

அடுத்த பகுதியில் காசியில் ஹிரண்ய ஸிரார்த்தம், பிண்ட பிரதானம் முதலிய்வைகள் பற்றி பார்ப்போம் .

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பகுதி 3 காசியில் பித்ரு கார்யம்

தேதி 19 ஏப்ரல் 2019

காலையில் குளித்து விட்டு ஹிரண்ய ஸிரார்த்தம் செய்ய ஆயத்தமானோம். ரவி சாஸ்த்ரிகள் சிவ மடத்தில் ஸிரார்தத்திற்கு உண்டான சகல ஏற்பாட்டுடன் தயாராக இருந்தார். ஹிரண்ய ஸிரார்தம் முகவும் ஸிரத்தையாக செயத பிறகு ஹனுமான் காட்டில் படகில் ஏறினோம். படகில் நாங்கள் நால்வரும், ஸ்ரீ ரவி சாஸ்த்ரிகலௌம் கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது 17-17 பிண்டங்களாக 5 தனி தனியாக வைக்க சொன்னார். எனது துணைவியாரும், ஆனது சகோதரனின் துணைவியாரும் பிண்டம் பிடித்து வைக்க ஆரம்பித்தனர். சாஸ்த்ரிகள் மந்திர உச்சாடனத்துடன் பித்ரு பூஜையை ஆரம்பித்தார்.

அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17

தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

ஹரித்வாரம், உத்திர சரோவரம், விஷ்ணு பாதம், பஞ்ச கங்கா மற்றும் மணிகர்ணிகா என்று ஐந்து இடங்களில் கங்கையில் பஞ்ச் தீர்த்த ஸிரார்த்தம் செய்து பிண்டங்களை பிரவாகம் செய்தோம். ஏனென்றால் காசியில் காகங்கள் பிண்டங்களை உண்பதில்லை, கங்கையில் கரைத்தோ அல்லது பசு மாட்டிற்கு அளித்தோ தான் பிண்டமிட வேண்டும். பிண்டமிட்ட பிறகு மணிகர்ணிகா காட்டில் குளித்து சிவ மடம் திரும்பினோம் . அங்கு ஸிரார்த்த காரியங்களை முடித்து கொண்டு உணவருந்தினோம். மாலை மூன்று மணியளவில் கார் மூலம் கயாவிற்கு புறப்பட்டோம்.

· காசியாத்திரை விதி காசீ கண்டத்தில், காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரை விதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.

· காசீ கண்டம் கூறுகிறது:-

· காசியில் ஒருநாள் கூட யாத்திரையில்லாமல் கழிக்காதே என்றும் அப்படிக் கழித்தால், அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீ கண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீ யாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்த சேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலை முடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.

· காசி ரஹஸ்யம் கூறுகிறது:-

· இஷ்ட மித்ர பந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடி போட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வர சௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களை விட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது. காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான் .ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசி கங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி ‘விஷ்ணு தர்மோத்தர’ புராணம் ‘சௌபரி ஸம்ஹிதை’ இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.

· யாத்ரிகர்கள் தினந்தோறும் நித்ய கர்மங்களை முடித்துக்கொண்டே யாத்திரைக்குச் செல்ல வேண்டும். யாத்திரை செய்யும் பொழுது இஷ்ட தேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் ‘ஹர ஹர மஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும். யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.

· யாத்திரையில் எங்கெங்கு ஸ்னானம், ஆசமனம், தர்ப்பணம், தேவ பூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.

· இவைகளில் முக்கியமானது இரண்டு யாத்திரை:- முதலாவது கங்கா ஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம் .இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.

· ஸனத் குமார ஸம்ஹிதை இதைப்பற்றிக் கூறுகிறது:-

· அதாவது, கங்கா தேவியின் இதய ரூபமும் பகவானுடைய முக ரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவ ரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லையென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். ‘மணிகர்ணிகா குண்டம்’ என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே ‘மணிகர்ணிகைத் துறை’ என்று கூறுகிறோம்; அதைப் போலவே ‘தசாஸ்வமேத கட்டத்தில்’ தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற்கொப்பாகும் என்று கூறப்படுகிறது. ‘காலையில் பஞ்சகங்கா’ கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்’ ஸ்னானம் செய்வது மகத்துவம். அல்லது ‘காலையில் ‘தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் ‘மணிகர்ணிகா’ கட்டத்திலும் ஸ்னானம் செய்வது நல்லது. ‘மணிகர்ணிகா ஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரையென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்த யாத்திரை) என்றும் சொல்வார்கள் .கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை. காசீ தர்பணம்’ என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ரு தர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞான வாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச்சித்தமாகக் கூறப்படுகிறது. காசீ கண்டம் எண்பத்தி நாலாவது அத்யாயத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணை ஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னான மாத்திரத்திலேயே பாபச்சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான்.

· யாத்திரை விதி பஞ்ச முகத்தையுடைய சிவ பிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை – காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச்சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் ‘கேதார காட்’ – கௌரி குண்டத்தையும், ‘த்ரிலோசனா காட்’டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.

· ஆயதன யாத்திரை என்னவென்றால்:- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.

· நந்தி புராணத்தில் கூறியிருப்பது போல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.

· மூன்றாவது ஆயதன யாத்திரை பற்றி லிங்கபுராணம் கூறுகிறது. ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர், ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.

· நான்காவது யாத்திரையைப்பற்றியும், ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்க புராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.

· ஐந்தாவது ஆயதன யாத்திரை என்னவென்றால் க்ருத்திவாஸேஶ்வரர், மத்யமேஶ்வரர், ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும் காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.

· ஆனால் எப்போது ஶ்ரத்தை ஏற்படுகிறதோ அப்பொழுது உடனே யாத்திரை முடிப்பது நல்லது;

பகுதி 4 கயா ஸிரார்த்தம்

திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு மட்டும் இல்லை………….. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள், பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்ற போது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் ஸ்ரார்த்தம் / திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

விஷ்ணு பாதம் கோயில்

கிருதயுகத்தில், "கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால்,
""தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால் சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு யோசனையைக் கூறினார். "ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்கசொன்னர். பிரும்மாவும் திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். "இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை" என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான்.

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது.

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். "தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான். அவன் 2 வரங்கள் கேட்டான்.

1. "முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்."

2. "இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும் கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும் உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம் போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில் பிணம் / பிணங்கள் எரிவதும் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார்

.நாங்கள் போன போது கூட 2 – 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு….அங்கு எதற்கும் தீட்டே இல்லை.

"கயை’ என்றும் "கயா’ என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. "இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..

ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும் . இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்த காலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள்.
தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர்.

"சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் மாமனாரான தசரதர். "உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?” என்று சீதை தயங்கினாள்.

"சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை” என்றார் தசரதர். சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும், "உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிது நேரத்தில் ஸ்ரீராம லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். "சீதா, சீக்கிரம் சமையல் செய்” என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன் "சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன் தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை” என்றார்.

"நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

உடனே ராமர், "சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?” என்று கேட்க, அக்ஷய வட ஆலமரம் தவிர மற்றவர்கள் ‘`நாங்கள் அறியோம்’ என்று சொல்லி விட்டன.

கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன.

ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்” என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. "ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்” என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார். ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு

1. "பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும்,

2. பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின் பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றும்,
இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும்

3. ‘கயா பிராமணர்கள்’ தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள் என்றும் " என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள்.

4. ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து , "யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி, யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் " என்று அருளினாள். மேலும், "கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் " என்றும் ஆசிர்வதித்தாள்.

இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறார்கள்.ஒரு கோஸ் பரப்பளவுள்ள தலம் கயா-ஸிர் என்றும், 2 1/2 கோஸ் வரை கயா என்றும், 5 கோஸ் வரை கயா க்ஷேத்ரம் என்றும் பிரசித்தி பெற்றது.

கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ளது என்பது ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ளது. கயா பீஹார் மாநிலத்தில் உள்ளது. விஷ்ணு பாதம் இங்கு முக்கிய மான கோயில். பல்குனி நதி அருகில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி இந்தி. கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற்றுவதற்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.

ராமாநுஜ காட், கர்நாடக பவன் ஆகியவை வசதியானவை கயாவில் பல்குனி நதிக்கரை, விஷ்ணு பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ்ணு பாதம் சமீபம்) ப்ரேத சீலா, உதயகிரி, அக்ஷய வடம் முதலான இடங்களில் பிண்டப் பிரதானம் செய்யும் வழக்கம் உண்டு. கயாவில் மேலும் சில இடங்களிலும் பிண்டப் பிரதானம் செய்கிறார்கள் ஜீவன் கடைத்தேற- முக்தியடைய அனுஷ்டானங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன அதில் கயா சிரர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

வட இந்தியர்கள் முதலில் கயாவின் அருகேயுள்ள ‘புன்புன் ‘ நதிக்கரையில் நீத்தார் கடன் முடித்து பின்னர் கயாவுக்கு வருகிறார்கள். கயாவில் எந்தக் காலத்திலும் பித்ரு-சிரார்த்த்ம பிண்டதானம் செய்யலாம் என்று கயா மகாத்மியம் விளம்புகிறது. வட இந்தியர்கள் சில விரதங்கள் அநுஷ்டித்த பின்னர் கயா யாத்திரை மேற்கொள்ளுகின்றனர். பல்குநீ நதி (பித்ரு தீர்த்தம்) கயாவின் கிழக்கே ஓடுகிறது.

இதில் மழை காலத்தில் மட்டுமே நீர் ஓடுகிறது. மற்ற காலங்களில் ஊற்றுப் பெருக்கால் இது உலகூட்டுகிறது. அருகே ‘நககூட்’ மலைக்குன்று இருக்கிறது. பல்குநீ நதியில் நீராடி நதிக்கரையில் தர்பணம், பிண்டப் ப்ரதானம் செய்துவிட்டு அருகில் உள்ள விஷ்ணு பாதம் கோயிலுக்குச் செல்கிறார்கள். அந்தக் கோயிலில் எட்டு கோண பீடத்தில் பகவான் விஷ்ணுவின் சரண சின்னம் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளது.

விஷ்ணு பாதம்

பித்ரு சிரார்த்தத்தின் அங்கமாக சர்வ பித்ருக்களுக்கும் தாயார் தகப்பனார் உட்பட பிண்டப் பிரதானம் அளிக்கிறார்கள். (108 பிண்டங்கள்) இரண்டாவது தினம் வருடாந்திர சிரார்த்தம் போன்று அன்ன சிரார்த்தம் செய்கிறார்கள். சிலர் தொடர்ந்து ஏழு தினங்கள் சிரார்த்தம அனுஷ்டிக்கிறார்கள். அன்ன சிரார்த்தின் கடைசி அங்கமாக பிண்டப் பிரதானம், அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அக்ஷய வடம் சென்று அங்கும் செய்கிறார் கள். கயாவில் நீத்தார் கடன் செய்வதால் பல தலைமுறையினர் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். வம்சம் விருத்தியடைவதோடு சமூகமும், தேசமும் விருத்தியடைகின்றன.

முக்கிய கோயில்கள் மற்றும் தீர்த்தக் கட்டங்கள்: பல்குநி நதி, அக்ஷய வடம், விஷ்ணு பாதம் தவிர பின்வரும் தலங்கள் தரிசிக்கப்பட வேண்டியவை.

(1) ஜகந்நாத மந்திர், லக்ஷ்மீ நாராயணர் (கதாதரர்) கோயில்,

(2) முண்டப்ருஷ்டா- விஷ்ணு பாதத்திற்குத் தென்திசையில் 12 கைகளுடன் அருள் பாலிக்கும் முண்டப்ருஷ்டா தேவி.

(3) ஆதி கயா இங்குள்ள ஒரு சிலையில் பிண்டதானம் செய்கிறார்கள். இங்கு பூமி மட்டத்திற்குக் கீழே பல மூர்த்தங்கள் உள்ளன.

(4) தௌத பாதம். இங்கும் பிண்டதானம் செய்கிறார்கள்.
(5) காக பலி: இங்கு ஒரு பழைமையான ஆலமரம் உள்ளது. இங்கு காக பலி, யம பலி ஆகிய சடங்குகள் செய்கிறார்கள். (6) பஸ்மகூட்- கோப்ரசார்:
கயையின் தெற்கு வாசலின் வைதரணி சரோவர் பக்கம் ஒரு சிறிய குன்றில் ஜனார்த்தனன் கோயில் உள்ளது. சற்று தூரத்தில் மங்களா தேவி கோயில் உள்ளது..

(7) மங்கள கௌரி கோயில்:
தெற்கு வாயிலின் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. சற்று மேலே சென்றால் அவிமுக்தேச்வரநாத் கோயில் உள்ளது. தனக்கு கொள்ளி போட, சிரார்த்தம் செய்ய சந்ததியில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த மூன்று பிண்டங்களை இங்கு அளிக்கிறார்கள்.

(8) காயத்ரி தேவி:
விஷ்ணு பாதம் கோயிலிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காயத்ரி காட் கட்டத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இதற்கு வடக்கில் அருள்மிகு லக்ஷ்மீ நாராயணர் கோயில் உள்ளது. இங்கு கயாதித்யன் என்று அழைக்கப்பட்டும் சதுர்புஜ சூரியன் மூர்த்தம் உள்ளது.

(9) ப்ரம்ம யோனி
புத்த கயா செல்லும் வழியில் கயையிலிருந்து 3 கி.மீ துரத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் ப்ரம்மாஜி கோயிலுக்குப் பகத்தில் குகை போன்ற இரு பாறைகளை உள்ளன. ‘ப்ரம்ம யோனி’, ‘மாத்ரு யோனி’ என்று அவற்றை அழைக்கிறார்கள். சிகரத்திற்குக் சற்றுக் கீழே அமைந்துள்ளது ப்ரம்ம குண்டம் புனித தீர்த்தம்.
தீர்த்தங்கள்

1. மேலே கூறிய ப்ரம்ம குண்டம் 2. சூரிய குண்ட். 3.சீதாகுண்ட் 4.உத்தரமானஸ் 5.ராம சிலா

6. பிரேத சிலா 7. வைதரணீ 8.ப்ரம்ம ஸரோவர் 9. இரண்டாவது காக பலி

10.கதாலோல் புஷ்கரணி. இங்கு பகவான் அசுரனைக் கொன்றபின்னர் ஆயுதமாகிய கதையை அங்கு வைத்ததாக ஐதிகம். அது கம்ப வடிவில் உள்ளது.

11 ஆகாச கங்கை இது ஹனுமானின் இருப்பிடம் அருகில் பாதாள கங்கையும் மேற்கில் கபில தாராவும் உள்ளன.

12. ஸரஸ்வதீ- ஸாவித்ரி குண்டம்; மேலும் கர்ம நாச புஷ்கரிணியும் உள்ளது.

13. ஸரஸ்வதி நதி கயாவிற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது. நதிக் கரையில் ஸரஸ்வதி தேவியின் கோயிலில் தரிசனம் செய்யலாம். இங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் மதங்க வாபி என்ற பெரிய கிணறு படிக்கட்டுகளுடன் உள்ளது.

14. தர்மாரண்யம். மதங்க வாபியிலிருந்து 3 1/2 கிலொ தொலைவில் இந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் பிண்டங்கள் இடப்படுகின்றன,

தர்மர் தன் தம்பி பீமசேனனுடன் தன்னுடைய தந்தைக்கு சிரார்த்தம் செய்ய இங்கு வந்த போது இங்கு தவம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. அவர்கள் இருவருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

புத்தகயா: போத கயா:

கயாவிலிருந்து புத்தகயா 11 கிலோ தொலைவில் அமைந்துள்ள தலம். இங்கு அம்ர்ந்து புத்தர் ‘திவ்ய ஞானம்’ பெற்றதாக சரித்திரம் பேசுகின்றது. அன்றிருந்த போதி மரம் தற்போது இல்லை. வேறு சிறிய அரச மரம் வளர்த்துள்ளார்கள்.. அவர் அமர்ந்த கல் மேடை பொத்த- சிம்ஹாசனம்- என்று அழைக்கப் படுகிறது. இங்கு புத்த பகவானின் பெரிய கோயிலில் அவருடைய பிரம்மா ண்டமான மூர்த்தம் உள்ளது. புத்த கயாவிற்கு சற்று தூரத்தில் ‘பக்ரௌர்’ என்ற ப்ராசீனப் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் உள்ளது. பௌத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான தலமாக கயா அமைந்துள்ளது.

கயா-சிரார்த்த நன்மைகள்

இந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் செய்யவேண்டிய முக்கியமான கடமை, காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது.அவ்வாறு செல்லும் போது காசி–பிரயாகை–கயா ஆகிய மூன்று புண்ணிய ஸ்தலங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது.

தாய் தந்தையர் மற்றும் மூதாதையருக்கு உயிருடன் இருக்கும் போது பணிவிடை செய்து சேவை செய்ய வேண்டும். அவர்கள் உலகை விட்டுப் போன பின்னர் அவர்களுக்காக சாஸ்திரம் கூறியுள்ளபடி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.பித்ருக்களிடம் நாம் காட்டும் நன்றியிலும் அவர்களுக்கு செய்யும் கடமைகளிலும் சிரத்தை இருக்க வேண்டியது முக்கியம். இதனாலேயே இதனை சிராத்தம் என்று அழைக்கிறோம்.

மனித யக்ஞம்: மனிதனாகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவகாரியம் என்பவை.நம்முடன் வாழும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும். குறைந்தது ஒரு அதிதிக்கு உணவளிக்க வேண்டும், இது மனித யக்ஞம்.

பிரம்மயக்ஞம்: என்பது வேதம் ஓதுவதும் ஒதுவிப்பதுமே. இது மனித குல நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்யவேண்டியது.

பூத யக்ஞம் மனிதனாக இல்லாத மிருகங்கள் கூட அன்பைத் தெரிவித்து உணவு ஊட்டுவது பூத யக்ஞம்.

ஆக மனிதனாகப்பட்டவன் மனித யக்ஞம், பிரம்மயக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய கடமைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்களுக்கு திருப்தி, போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற ச்வர்க்க வாசிகளான தேவர்கள், பிண்ட தானத்தால் திருப்தியைப்பெற இயலாத நரக வாசிகள், பித்ரு லோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப்பலர் திருப்தி அடைகின்றனர். அவர்களது திருப்தியின் பலனாக சிரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம்,வம்ச விருத்தி ஆரோக்யம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை இவைகளும் கிடைக்கின்றன.

வருட சிரார்த்தம் செய்யும்போது விசுவதேவர் இலையில் அமர்ந்திருப்பவருக்கு அன்னம் பரிமார செய்து பகவான் ஜனார்த்தனர் ஸ்ரீ ஹரி திருப்தி அடையட்டும் என்று பித்ரு தீர்த்த முறையில் தர்ப்பத்தில் விட்டு கயை சிரார்த்தம் அக்ஷய வடம் என்று கயை ஷேத்ரத்தை முமமுறை கய கய கய என்று ஸ்மரிக்கிறோம் .

அன்னையும் பிதாவும் இவ்வுலகை நீத்தபின் அவர்களிடம் நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வெளிப்படுதுதலே சிராத்தம். பெற்றோரை குறித்து சிரார்த்தம் செய்யும் பொது நமது முந்தைய மூன்று தலை முறைகளையும் நினைவுகூறுகிறோம் நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம் காரணம் கயாசுரன் பெற்ற வரம் தான்.

கயா பயணம், பிண்ட பிரதானம், பிண்டம் கொடுப்பதினால் மூதாதையருக்குப் பலன் உண்டா, இல்லையா?

பிண்ட பிரதானம் என்பது மூதாதையர்களுக்குக் கொடுக்கப்படும் உணவாகும். ஒவ்வொருவர், அவரது தந்தை மற்றும் தாய் வழியாக மூன்று தலைமுறையினரை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஏதோ மொழி மாறுவதால், எல்லாம் மாறி விடுகின்றன என்று நினைக்க வேண்டாம், உறவுகள் மாறுவதில்லை. இதைத்தவிர, மாமா-மாமி, உறவினர், குரு-குருவின் மனைவி, நண்பர் என்று எல்லோருடைய பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையில் எல்லோரையும் நினைத்துக் கொள் என்றுதான் மந்திரங்கள் சொல்கின்றன. இதில் எந்த வித்தியாசமும் பாராட்டப் படவில்லை. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒருவர் தன்னுடைய மூதாதையர்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும், அவர்களது பெயர்களை அறிந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் அவனுக்கு தன்னைப் பற்றிய நம்பிக்கை, தன்னம்பிக்கை, சுயமரியாதை முதலிய குணங்கள் வரும்.

பிண்டத்தில் உள்ளவை: பாரத பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகக் காரணிகளில் அரிசி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த உடலே பிண்டம் என்றழைக்கப் படுகிறது. நீர், நெல், அரிசி, வாழ்க்கை, பிறப்பு, இறப்பு இவையெல்லாம் பின்னிப்பிணைந்துள்ளது. “அக்ஷதை” என்பது உடையாத அரிசியால் ஆனது, அதனால் தான், அதனால் வாழ்த்துகிறோம். இவ்வாறு அரிசி பல விதங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால், அரிசியால் பிண்டம் சமைத்து, எள்ளையும் சேர்த்து படைக்கப்படுகிறது.

1. எள் 2. அன்னம் 3. ஜலம் 4. வெல்லம் 5. தயிர் 6. பால் 7. தேன் 8. நெய்

இவை எட்டும் சேர்த்துக் கலந்து பிண்டம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் விலையுயர்ந்தவை என்பது எதுவும் இல்லை. எல்லாமே எளிதாகக் கிடைக்கும் பொருள்களே. மூன்று பித்ருக்களுக்கு மூன்று என்ற வீதம் இவை தயாரிக்கப்படுகிறது. இவை பஞ்சபூதங்களுக்கே கொடுக்கப்படுகிறது. பிண்டத்தில் உள்ளது, அண்டத்தில் உள்ளது என்றெல்லாம் பேசினாலும், இதில் தான் அத்தகைய உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். இறப்பு-பிறப்பு, மறு ஜென்மம், பாவம்-புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் இவற்றை செய்கின்றனர், செய்து வருகின்றனர்.

மந்திரங்கள், கிரியைகள், செய்பவர்கள், செய்விப்பவர்கள்: பிண்டப் பிரதாணக் கிரியைகள் வேத மந்திரங்களுடன் செய்வதானால், கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என்றால், 6-8 மணி நேரம் ஆகும். மேலும் அந்தந்த வெந்த மந்திரங்கள் தெரிந்தவர்கள் இருக்க வேண்டும், செய்யும் முறைகளைத் தெரிந்திருப்பவர்கள் இருக்க வேண்டும். அத்தகையோர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், ஒழுங்காக செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆகையால், தெரிந்தவர்கள் இல்லையே என்றால், அதற்கு காரணம் நாம் தாம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். பணத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் ஆளில்லை என்ற நிலையுள்ளது. இருப்பவர்களை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்றால், அவை அந்த அளவில் தான் இருக்கும்.

1. ஆசமனம்.

2. குரு வந்தனம்.

3. பவித்ரதாரணம்.

4. பிரணாயாமம்.

5. சங்கல்பம்.

6. கலசார்ச்சனம்.

7. இஷ்ட தேவதா வந்தனம்.

8. பிராமண வரணம்.

9. பிராமண பிரதக்ஷணம்

10. பிராமண பாதப்ரக்ஷாளனம்.

11. பவித்ரதாரணம்.

12. பாகப்ரோக்ஷணம்.

13. தேவ பிராமணரின் ஆஸனாதி பூஜை.

14. பித்ரு ப்ராஹ்மணரின் ஆஸனாதி பூஜை.

15. பாணி ஹோமம்.

16. அன்னசுக்த படனம்.

17. த்யக்தம்

18. க்ஷேத்ர மூர்த்தி ஸ்மரணம்

19. தீர்த்த தானம் – பிராமண போஜனம்.

20. அபிச்ரவணசுக்தம் – உபசாரம்.

21. பிண்டதானம் (1,2,3)– பூஜை.

22. பிண்ட பூஜை.

23. திருப்தி ப்ரச்னம்.

24. விகிரம் – ஸவ்யம்

25. உச்சிஸ்ட பிண்டம்.

26. பிராம்மண போஜன பூர்த்தி – ஆசிர்வாதம்.

27. பிண்டங்களை எடுத்து வைத்தல்.

28. ஆவாஹித பித்ரு விஸர்ஜனம்

29. பிராமண பிரார்த்தனை – ஆசிர்வாதம்.

30. கூர்ச்ச விஸர்ஜனம்.

31. ஸமர்ப்பணம்.

32. சிரார்த்தாங்க தர்ப்பணம், பூரி பிராமண போஜனம்.

ஆகையால், இக்காலத்தில் ஒரு மணிநேரத்தில் முடித்து விடுகிறார்கள். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் காசுக்கு / கூட்டத்திற்கு ஏற்றப்படி செய்கிறார்கள். நிறைய பேர் வந்து விட்டால், எல்லோரையும் சேர்த்து உட்கார வைத்து செய்து முடித்து விடுகிறார்கள். விசயம் தெரியாதவர்களிடம் மந்திரங்களைக் குறைத்தும், சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். இங்கு செய்பவர்களையோ, செய்விப்பவர்களையோ குற்றம் கூறவில்லை. அவரவர்கள், தத்தம் விருப்பம், அவசரம் என்ற நிலைகளில் இருப்பதால், அதற்கேற்றப்படியே இவை நடக்கின்றன.

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं

இடம், பொருள், ஏவல், சுற்றுச்சூழல்கள்: முன்பெல்லாம் இத்தகைய கிரியைகள் நதிக்கரைகளில், காட்டுகளில் அல்லது நீர் நிலைகள் உள்ள இடங்களில் செய்வது வழக்கம். காசி-வாரணாஸி-பிரயாகை, கயா போன்ற இடங்களில் நீருக்குப் பஞ்சமில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட அவசர-அவசியங்களுக்காக. வசதிகளுக்காக, தேவைகளுக்காக, மடங்களிலேயோ, வேறு இடங்களிலேயோ செய்விக்கின்றனர். பிறகு வண்டியில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பிண்டங்களைப் போட்டு வந்து விடுகின்றனர். இதனால், குளிப்பதும் மாறி விடுகிறது. கயாவைப் பொறுத்த வரையில் பல்குனி நதியில் நீர் இருப்பது குறைவு, அதிலும் அந்நீர் சுத்தமாக இருக்காது. ஏனெனில், வருகின்ற எல்லோரும் அதில்தான் பிண்டங்களை இட வேண்டும், அந்நீரை எடுத்துக் குளிக்க வேண்டும் அல்லது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயம் வஷிஸ்டர், விஸ்வாமித்திரரை தான் செய்யும் சிராத்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டு தனக்கு 1008 காய்கறிகள் கொண்ட உணவை அளித்தால் வருவதாக கன்டிஷன் போட்டார். வஷிஸ்டர் திகைத்தாலும், அவரது மனைவி அருந்ததீ ஒப்புக்கொண்டார். அதன்படியே, விஸ்வாமித்திரர் வந்து விட்டார். அருந்ததீயும் சாப்பாட்டை பரிமாறினார். அதில், எட்டு வாழைக்காய், ஒரு பாகற்காய், ஒரு பிரண்டை மற்றும் ஒரு பலாக்காய்-பழம் என்று தான் இருந்தன. கோபத்துடன், விஸ்வாமித்திரர் “என்ன இது?”, என்ற கேட்டபோது, அருந்ததீ,

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं|
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते||
“காரவல்லி சதம் ப்ரோக்தம், வஜ்ரவல்லி சதத்ரயம்|பனஸ: அச்ட்சதம் ப்ரோக்தம், ச்ராத்தகாலே விதீயதே||”

என்று கணக்கு சொன்னாராம். அதாவது, பாகற்காய் = 100 காய்களுக்கு சமம்; பிரண்டை 300 காய்களுக்கு சமம்; பலா 600 காய்களுக்கு சமம்; 8 + 100 + 300 + 600 = 1008 என்று கணக்கு சொன்னாளாம். இது தமாஷுக்கா, உண்மைக்கா என்று ஆராய்ச்சி செய்தாலும், இடத்திற்கு ஏற்ப அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதனைக் காட்டுகிறது எனலாம். அது போலத்தான், இந்த கயா சிரார்த்தம் என்பனவெல்லாம்., அங்கு பிண்ட சிரார்த்தம் செய்வித்தனர்.

பிண்டங்கள்

1. அரச மரத்து அடியில்

2. அங்கு ஓடும் ஆறில்

3. விஷ்ணு பாதம் கோவிலில் பித்ருக்களுக்காக விடபட்டது.

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷய வடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.

கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

Top of Form

கீழ் கண்ட மந்திரங்களை அங்கிருந்த ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொன்னார். அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதே விட்டனர்… நிதானமாகப் படியுங்கள். நிச்சயமாக உங்கள் தாயை நினைத்து உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்….

இதில் 32 பிண்டங்கள் தாய்க்கும், 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.

தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், கருச்சுமந்த காலத்திலிருந்து, தன்னைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்காகப் பட்ட ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் மன்னிப்பு வேண்டி ஒவ்வொரு மனிதனும் கயாவில் பிண்டங்களை அர்ப்பணிக்கிறான்.

என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,…’ இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்து கொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தானாத் த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய

என்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்த பின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர் நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்றுக்க்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த மூன்றாவது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ரு பீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக — ஒரு பரிசு — என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்
|

”ஏம்மா மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ” .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

6. ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்” என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
”நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த ஏழாவது பிண்டம்..\

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த எட்டாவது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9. ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது. நீ தான் இருந்தாயே, பார்த்து-பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச்சித்தமாக இந்த ஒன்பதாவது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ”கடிக்காதேடா..” . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக மன்னித்து இந்த பத்தாவது பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்த வேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.” காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், பதினொன்றாவதாக எடுத்துக்கொள்.’

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த பன்னிரண்டாவது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹா கோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு. ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யம லோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த பதிமூன்றாவது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட், பெரிய அதிகாரி, செல்வந்தன் — நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த பதினாலாவது பிண்டம் தான் அதற்கு பிரதியுபகாரமாக நன்றிக்கடனாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ”தன்னலமற்ற” தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த பதினைந்தாவது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த பதினாராவது பிண்டத்தை கடைசியாக ஏற்றுக்கொள் என் தாயே.

என்னை பெற்றெடுத்த தெய்வமே. என் தவறுகளை, மன்னித்து என்னை ஆசீர்வதி. நீ இருக்கும் போது உன் அருமை தெரியாமல் உன்னை உதாசீனம் செய்தேன், கடிந்து கொண்டேன் என் சில சமயங்களில் உன்னை அவமானப்படுதியும் உள்ளேன் எனது தவறுகளை உணர்ந்து உன்னிடம் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மன்னிப்பு கோருகிறேன் அம்மா. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொன்னது போல் கல் மனதுடன் நான் நடந்து கொண்டேனே. நீ என்னை மன்னிக்காவிடில் எனக்கு வேறு எங்கும் மன்னிப்பே கிடையாது, அந்த ஆண்டவன் கூட என்னை மன்னிக்க மாட்டான் அம்மா. என்னை மன்னித்துவிடு அம்மா உன் பாதம் சரணடைந்தேன்

இத்தனை சிறப்பு வாய்ந்த அந்த கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்கின்ற சிராத்தம் ஆனது 101 குலத்தையும், அந்த மனிதன் சார்ந்த ஏழு கோத்திரக்காரர்களையும் கரையேற்றுகிறது என்றும் ஸ்மிருதி உரைக்கிறது. அதாவது, வருடந்தோறும் செய்து வரும் சிராத்தம் என்பதை அன்றாடம் நாம் சாப்பிடுகின்ற உணவு என்று வைத்துக்கொண்டால், கயா சிராத்தம் என்பது என்றோ ஒரு நாள் சாப்பிடுகின்ற விருந்து போஜனம் போல என்று சொல்லலாம்.
வாழ்நாளில் என்றோ ஒருநாள் விருந்து சாப்பிட்டு விட்டால் போதும், அன்றாடம் உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதுபோல, கயா சிராத்தம் ஒருமுறை செய்துவிட்டால் அடுத்து வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதும் அபத்தமே. இது முற்றிலும் தவறு மாத்திரமல்ல, இவ்வுலகை நீத்த பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறியவர்களாகவும் ஆகிவிடுவோம். வருடந்தோறும் சிராத்தம் செய்யத் தவறினால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மஹா பூதாந்தரங்கஸ்தோ மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

(எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன்)"

Bottom of Form

விஷ்ணுவின் பாதம் பதிந்த அந்த ஸ்தலத்தில் சிராத்தம் செய்வதால் முன்னோர்களுக்கு குறைவில்லாத அளவிற்கு திருப்தி உண்டாகிறது. கயாசுரனின் பெயரால் அந்த ஸ்தலம் கயா என்றும், பிரம்ம தேவன் யக்ஞம் செய்த அந்த ஆலமரம் அக்ஷய வடம் என்றும் பெயர் பெற்றன. வட மொழியில் ‘வடம்’ என்றால் ஆலமரம் என்றும், அக்ஷயம் என்றால் குறை வில்லாத என்றும் பொருள்.

இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி காசியிலும் ,கடைசிப்பகுதி இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.

நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

இதனைஅலகாபாத்தில்முண்டம் (முடிஎடுத்தல்) காசியில்தண்டம்(சுவாமியைதண்டனிடுதல்) கயாவில்பிண்டம் (பிண்டார்ப்பணம்செய்தல்) என்பார்கள்.

சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்குமாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்தவர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

1. தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

2. அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி

3. அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்

4. தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.

5. தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்;
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;

6. தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்

7. .ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

8. இந்த நான்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

9. நான்காவது பிண்டம் தர்ம பிண்டம் — தர்ம தேவதைக்கும் , பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது

.ஆதலால் முன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும் உத்தேசம் ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது. காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிகமும் தேவைபடலாம். அதிகம் தேவைபடுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர். ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயாவிலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின் வருமாறு:– சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்;

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்;

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள்; ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களில் உள்ளது.

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்கு கங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணு பாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,
யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.

ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும்.

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:-தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.

பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷய வட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்

.
மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாசி அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி–அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும். அவரவர் மனைவியே சமையல் செய்யலாம். சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்துக்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்கு தான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்கிறது என்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது. இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும். கர்த்தா விடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்
பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.
பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.

மேற்கூறியபடி பிண்ட பிரதானம் செய்த பிறகு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பிராமணர்களுக்கு போஜனம், வஸ்த்ர தானம் செய்து உணவருந்தினோம். அங்கு சாஸ்த்ரிகளுக்கும், மற்ற அனைவர்க்கும் நன்றி கூறி மாலை 4.30 மணியளவில் காரில் காசிக்கு புறப்பட்டோம்.

……………………………………………………………………………………………………………………………………..

பகுதி 5 காசியில் கங்கா பூஜை, தம்பதி பூஜை

21.04.2019

காலையில் எழுந்துகாலைக்கடங்களை முடித்துக்கொண்டு கங்கையில் குளிக்க பிறப்பட்டோம். கங்கையில் நீராடி ஒரு சோம்பில் ஜலமெடுத்துக்கொண்டு சிவா மாதம் சென்றோம். அங்கு ரவி சாஸ்த்ரிகள் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். தம்பதி சமேதரை சங்கல்பம் செய்து கொண்டு முதலில் கங்கா பூஜையை தொடங்கினோம். மந்த்ரா விதிப்ப்ற்காரம் பூஜை செய்த பிறகு தம்பதீ பூஜை செய்ய தயாரானோம் . தம்பதி பூஜைக்காக வாங்கிய வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன. ஸங்கல்பம் செய்து காசி விஸ்வேஸ்வர அன்னபூரணி ஸ்வரூபமாய் ஆவாகனம் செய்து தம்பதி பூஜையை ஸிரத்தையுடன் முடித்து மங்கள திறவ்யங்கள், ஸம்பாவனை, கொடுத்து நமஸ்கரித்தோம். இத்துடன் காசியில் செய்ய வேண்டிய வைதீக கர்மாக்கள் காரியங்கள் சம்பூர்ணமானதாக சாஸ்த்ரிகள் கூறினார்.

அவருக்கும் திரு ரவி அவர்களுக்கும் நன்றி கூறி நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு புறப்பட்டோம்.

நாங்கள் மாலை ரயிலில் பதிவு செய்திருந்ததால் சிற்றுண்டி அருந்தி ஆதி துர்கையம்மன் கோயில் சென்றோம்.

18-ஆம் நூற்றாண்டில் வங்க தேச (தற்போதைய மேற்க்கு வங்காளம்) மகாராணி ஒருவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது. கோயிலின் பல இடங்களில் பிரமாண்ட மணிகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. கர்ப்பகிரகத்தில் இருக்கும் துர்க்கை அம்மனின் நாக்கு வெளியில் நீட்டிய படி காளி ரூபமாக காட்சியளிக்கிறாள். இருந்தபோதும் அந்தச் சிலை உக்கிரமாக இல்லை. செந்நிற ஆடை துர்கையம்மனுக்கு உடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிலை சுயம்புவாக உருவானதென்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

பிறகு மானஸ் மந்திர் , தூண்டி விநாயகர் , கௌடியம்மன் கோயில் சென்றோம் . காசிக்கு வந்து பட்டு புடவை வாங்காமல் எப்டி போவது? ஆகையால் ஈ ரிக்ஷா காரரிடம் நல்ல கடைக்கு கூட்டிசெல்ல பணிதோம் அவரும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அழைத்து சென்றார். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அலசிய பிறகு சில புடவைகள் செலக்ட் பண்ணினார் எனது துணைவியாரும் எனது சகோதரனின் துணைவியாரும்.

பிறகு நாங்கள் தங்கும் ஓட்டலுக்கு வந்து உணவருந்தி சிரம பரிகாரம் செய்த பிறகு மாலையில் டெல்லி புறப்பட்டோம்.

காசியைப்பற்றி சில முக்கிய தகவல்கள்

🥀 அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் "அஸ்சங்கமேஸ்வரர்" எனப்படுகிறார்.

🥀 முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.

🥀 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

🥀 இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் *சூலடங்கேஸ்வரர்* என்ற சிவலிங்கம் உள்ளது.

🥀 இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள *ஆதிகேஸ்வரரை* வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள *பிந்துமாதவர்* மற்றும் *கங்கேஸ்வரரை* வணங்க வேண்டும்.

🥀 பஞ்ச தீர்த்தக் கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள *மணிகர்ணிகேஸ்வரர்* மற்றும் அம்பாளையும் வழிபட வேண்டும்.

🥀 காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

🥀 பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.

🥀 பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.

🥀 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.

🥀 சிவபெருமான் விரும்பி மகா மயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.

🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.

🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.

🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.

🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.

🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.

🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.

🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.

🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

தீர்த்தக் கட்டங்கள்:

🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்.

காசி , கயா, பிரயாகை பயண குறிப்புகள் தங்களுக்கு உபயோக மாக இருக்கும் என நம்புகிறேன்

ஓம் நம் சிவாய

ஓம் சாந்தி

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

 ஸ்ரீ குரூப்யோ நமஹ்

சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை

ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||

பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் துணைவியார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது துணைவியாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் துணைவியாரும்) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் துணைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை  தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம்.  அந்த நாளும் வந்தது.

16 ஏப்ரல் இரவு Mandwadih சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் காசிக்கு பயணம் தொடங்கியது. 17ம தேதி திரு ரவி அவர்கள் ரயில் நிலயதிற்கு வந்து ஓட்டலுக்கு அழைத்து சென்றார். ஓட்டலில் உணவு அருந்தி சற்று களைப்பாறினோம். அன்று மதியம் 3 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம். ஒரு கோவிலுக்கு போகிறோம் என்றால் அதன் வரலாறு அறிந்து தரிசனம் செய்தல் நலம்.

துண்டி விநாயகர்

துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு
கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே

எந்த ஒரு வேலையும் தொடங்குமுன்னர் முழு முதர்க்கடௌவலான விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே

துண்டி விநாயகர்

எந்த ஒரு வேலையும் தொடங்கு முன்னர் விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே முதலில் தூண்டி விநாயகர் கோயிலுக்கு சென்றோம். விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார். செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல் போகக்கூடாது என்பது சம்பிரதாயம்.    காசிக்கு செல்பவர்கள் துண்டி விநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டி விநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் அரை குறையாகத் தான் இருக்கும். எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபட வேண்டும். இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான் பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள். 

விஸ்வநாதர், அன்னபூரணி தேவி ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், மிக குறுகலான 5 அடிக்கும் குறைவான அகலம் உள்ள சந்துக்கள்தான் உள்ளன. மேலும் கோவிலுக்குச் செல்லும் வழி எங்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஸ்வநாதர் சிலைக்கு அருகே சுமார் இருபதடி தொலைவில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே போலீஸ் மயமாகத்தான் உள்ளது. இப்படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பது மிக மிகச் சிறிய அளவில். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கோயிலினுள் இருக்கும் காசி விஸ்வநாதர் சிலை; மிகச்சிறிய சிவலிங்கம் போன்று காணப்படுகிறது. இதை வைத்துத்தான் நம் முன்னோர்கள் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்று சொன்னார்கள் போலும்

காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம்வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை:

அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் எனப்படுவர். வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்த ரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர்.. ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும் போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும் போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து கொள்கின்றனர். இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.

ஸ்கந்த புராணத்தில் காசி கண்டம் இத்தலத்தை வர்ணிக்கிறது. மும்மூர்திகளில் யார் பெரியவர் என்று கேள்வி எழுந்தவுடன் சிவன் ஒரு ஒளிப்பிழம்பாய் மாறி அடி முடியில்லாத ஸ்வரூபமாய் காட்சி அளிக்கிறார் மகாவிஷ்ணு அந்த ஓளியின் ஆரம்பம் எங்கே என்று தேட போகிறார் பிரம்மனோ முடியை நோக்கி பயணிக்கிறார் பல யுகங்கள் சென்ற போதிலும் அடியும் முடிவும் காண முடிய வில்லை பிரம்மா மேல் நோக்கி செல்லுகையில் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுகிறது பிரம்மா அதனை தான் முடியைக்கண்டதற்கு சாட்சியாக இருக்க வேண்டுகிறார் . தாழம்பூவும் ஒப்புக்கொள்கிறது . பிரம்மன் சிவனிடம் வந்து தான் முடியை கந்ததாகவும், தாழம்பூ அதற்கு சாட்சியென்றும் கூறுகிறார். அங்கு விஷ்ணு தான்  அடியை காண முடியாமல் தோற்றதாக ஒப்புக்கொள்கிறார். பொய் சொன்னதனால் சிவன் பிரம்மாவிற்கு எங்கும் வழி பாடு நடக்காது என்றும், தாழம்பூ அதற்கு சாட்சி சொன்னதால் அது சிவ பூஜைக்கு சேர்க்க கூடாது என்றும் கூறுகிறார். மகா விஷ்ணு சிவனை விஸ்வேஸ்வர ரூபமாய் தரிசனம் அளிக்க வேண்டுகிறார். சிவனும் அவர் வேண்டுகோளுக்கு  இணங்கி லிங்க ரூபமாய்  காட்சி அளிக்கிறார்.  அதைத்தான் நாம் காசி விஸ்வநாதராக இன்று காண்கின்றோம்.

சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ; முத்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; அம்மனின் சக்தி பீடம் ;ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவ ஸ்தலம்..* அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி- உத்தரப்பிரதேசம்.*

மூலவர்: *காசி விஸ்வநாதர்* அம்மன் /தாயார்: *விசாலாட்சி* தீர்த்தம்: *கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதி கங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாபி என்ற சிறு தீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.*

பழமை: *5000 வருடங்களுக்கு முன்* புராண பெயர்:*வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகா மயானம், அவிமுக்தம்* ஊர்: *காசி* தல சிறப்பு: மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆன சுயம்புநாநர்.. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டி போட்டு குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். விசுவநாதருக்குத் தங்க விமானம் – சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

காசி மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்வேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன் பிறகே சூட்டப்பட்டது. அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள்.

காசி விஸ்வநாதர் கோயில் தொன்று தொட்டு இருந்தாலும் இதனை கி பி 1194ம ஆண்டு முகமது கோரியின் படை தலைவன் குதுபுத்தின் நிர்மூலமாக்கினான். அதன் பிறகு குஜராத் மன்னர்கள் கட்டினார் இது போன்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளற்களால், கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு சின்னாபின்னப் படுத்த்தப்பட்டது அதை இந்து மன்னர்கள் மறுபடியும், மறுபடியும் ஒவ்வொரு முறையும் கட்டினர். இந்தோர அரசியான அகல்யா பாய் ஹோல்கர் காலத்தில் முகலாய மன்னர் ஔரங்கஜீப் இதனை மறுபடியும் இடித்து ஞான வாபி மசூதியை கட்டினான். ஆனால் ராணி அகல்யா பாய்  மற்றும் பண்டாக்கள் மரகத சிவ லிங்கத்தை அருகிலுள்ள கிணற்றில் போட்டு மூடி விட்டார்கள். இந்த கிணற்றையும் மசூதியையும் இன்றும் காணலாம். தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயம் 1780ஆம் ஆண்டு மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது..1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டதுதற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார்

.

!காசி விஸ்வநாதர் மிகச்சிறிய சிவலிங்கம்

கோயில் தரிசனம் செய்ய கிளம்பியவுடன் மழை பெய்ய  ஆரம்பித்தது . கோயிலுக்கு மழையில் நனைந்து கொண்டே  போனோம். விஸ்வநாதர் கோயில் போகும் பொழுது அலை பேசி, குடை, போன்ற பொருள்கள் எடுத்து செல்ல கூடாது. ஆகையால் அங்கு அருகிலிருந்த கடாய் ஒன்றில் இந்த சாமான்களையும், ஹேண்ட்பேக், போன்ற பொருள்களை ஒரு லாக்கரில்  வைது விட்டு பிரசாத  பொருள்கள், மாலை,  அபிஷேகத்திற்கு பால், முதலியன வாங்கி சென்றோம். கடைக்காரர்கள் தலையில் நிறைய சாமான்களை கட்ட முயற்சிப்பார்கள்.  தேவையானவற்றை  மட்டும் வாங்கி கொள்ளுங்கள் . பாதுகாப்பு சோதனை முடிந்து கோயில் உள்ளே சென்றோம். அங்கு பண்டாக்கள் நான் தரிசனம், பூஜை செய்கிர்3என் என்று சொல்லி வருவார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம். வடநாட்டில் நாமே எல்லா பூஜையும் செய்யலாம். விநாயகர், அன்ன பூரணி,, கால பைரவர், குபேரர் என , ஒவ்வொரு கட்டத்திலும் தரிசனம் செய்து ,பாலாபிஷேகம் நமது கரங்களினால் செய்து  மாலை சார்த்தி, புஷ்ப அர்ச்சனை செய்து மகிழ்ந்தோம். வட நாடு ஞான பூமி. ஆகையால் இங்கு தீட்டு முதலானவைகள் கிடையாது. வடநாட்டில் நாமே பூஜை செய்யலாம்.  அங்கு உள்ள பண்டாக்கள் பணம் தருமாறு வற்புறுத்துவார்கள் ஆனால் செவிமடுக்காமல் தொடர்ந்து உங்கள் கவனம் பூஜையின் மீதும், பர்ஸின் மீதும் இருக்கட்டும். அங்கு கையில் சில்லறையாக பணம் எடுத்து செல்வது நன்று.  காசி விஸ்வநாதர், அன்னபூரணியை தரிசித்து உள்ளே சென்றோம் அங்கு ஞான வாபி என்னும் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் ஒரிஜினல் மரகத சிவலிங்கம் உள்ளது. கிணற்றை முழுமையாக மூடிவிட்டனர். அங்கு உள்ள பண்டாக்கள், பூசாரிகளிடம் பேச்சுக்கு மயங்க வேண்டாம் இல்லையேல் உங்களிடம் கறந்துவிடுவார்கள்.  கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இது தான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞான வாபி  என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகை..

அடுத்து காசி அன்னபூரணியின் கோயில் சென்றோம். என்ன அழகு அம்பாள் சிகப்பு நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து நின்றோம்.

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும் பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள். இந்த அன்னபூரணி கோயிலில் இன்றும் தொடர்ந்து காலை11 மணியளவில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. நாட்டுக் கோட்டை நகரத்தார் மற்றும் பல சமூக ஸ்தாபனங்கள் நிதி மற்றும் உணவு பண்டங்கள் தானமாக அளிக்கின்றனர்

.

 இமையாத வானவர் குழாத்தினுக்கும், மற்றுமொரு மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) உலகில் யாவருக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் தங்க அன்னபூரணியாக காசியில் அருளிபாலிகிறாள். சாம வேதத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காசி அன்ன பூரணி

திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்ற போதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?

காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்ன தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜ குமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார். முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார். அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினாள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.

‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.

அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளி இருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மந்திரம்:
‘ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவதி

அன்ன பூர்ணே மமாபிலிக்ஷிதமன்னம் தேஹி ஸ்வாஹா’

மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அருளை வழங்கக் கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே 
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி 
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ : 
பாந்தவ சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவநத் த்ரயம்

தாயே அன்னபூரணியே சிவனுக்கு பிரியமானவளே, பார்வதி தாயே எனக்கு ஞானமும் வைராக்கியமும் சித்திக்க அருள் புரிவாயாக. தாய் பார்வதியும், தந்தை மகேஸ்வரனும் அனைத்து சிவா பக்தர் உற்றார் உறவினராய் உலகமே என் தேசமாக அனைத்து உயிர்களும்  நல்வாழ்வு பெற்று உன் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் தாயே என்று பிரார்த்தனை செய்தோம்.  அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி,  என்றும் மீளாத இன்பத்திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி. ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப் பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள். கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள். காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும். இங்கிருந்து தரிசனம் முடிந்து போகும் பொழுது அன்ன தான் கூடம், காலி தேவி மற்றும் இதர சன்னிதிகளையும் தரிசித்து செல்லுங்கள். பிரசாதமாக கொஞ்சம் அரிசியும் , குங்குமமும்  கொடுப்பார்கள். அரிசியை உங்கள் வீட்டில்  அரிசி பானையில்  கலந்து விடவேண்டும் என்றும் உணவு தட்டுப்பாடு இருக்காது.. . அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள். லோக மாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார். 

அன்னபூரணியை தரிசித்து விட்டு அன்னை விசாலாக்ஷி கோயிலுக்கு சென்றோம். காசி விசாலாக்ஷி அம்மன் சிவனின் வரவுக்காக கண் இமை சிமிட்டாமல் பல ஆண்டுகள் தவசிருந்ததாக கூறப்படுகிறது. துர்கமாசுரன் என்னும் அரக்கன் 12 ஆண்டுகள் எந்த ஒரு ஸ்த்ரீ கண் சிமிட்டாமல் தவமிருப்பாளோ அவர் கையால் மட்டுமே அழிவு என பிரம்மாவிடம் வரம் பெற்று தேவர்களையும், மனிதர்களையும், ரிஷி, முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழித்து அன்னை துர்கை என்றும், கண் சிமிட்டாமல் இருந்ததால் விசாலாக்ஷி என்றும் பெயர் பெற்றாள்.  விசாலாக்ஷி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள்.

 காசி விசாலாக்ஷி பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன்  ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது..1971-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் விசாலாக்ஷி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.[4][5] சிறிய சந்துகள் வழியே செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் ஆலயம் வந்து செல்கின்றனர் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட  கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது. விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளதுமிகவும் அழகிய கோவில். காசியில் அம்மன் விசாலாஷியாகவும்அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள். காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில் பெரும் பெருமை கொண்ட இடம்.

விசாலாஷி கோவில் தென்னாட்டு பாணியில் அமைந்துள்ளது.சுற்றிலும் சிவ-லிங்கங்கள். மூலவர் சந்நதிலேயே (மூலவர் விசாலாஷி) அம்மன் பின்புறமாக ஆதி விசாலாஷி அம்மனையும் தரிசிக்கலாம்.

     அம்மனுக்கு விளக்கு பூஜை மகாமேரு பூஜை, பிரகாரத்தில் சிவலிங்க பூஜையும் மிகவும் விசேஷம்.

.

அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. காசியில்  தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்

. காசி மாநகரத்தின் ஆலயங்களில் மேலும் சிறப்புற்றது காலபைரவர் ஆலயம். இந்த ஆலயம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவாமி சிலையும் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ”ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. ‘இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள் கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகி விடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன இக்கோயிலானது  சிவபெரூமானின்  கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். “கால்” (காலம்/காலன்) என்ற சொல்லானது “இறப்பு” மற்றும் “விதி” ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். “கால பைரவரைக்” கண்டு மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின் பகுதியில், சேத்ர பால பைரவர் சிலை உள்ளது. கால பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. காலபைரவர் காசியின் காவலராக 

அதாவது காவல் தெய்வமாக கருதப்படுகிறார். காசியில் வாழ வேண்டுமானால் இவரது  அனுமதியை   பெற வேண்டியது  அவசியமாக  கருதப்படுகிறது.

             காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்..

அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு” என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே காலபைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கிய பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். குத்து வாங்கியவர் உடனே தன்னிடம் உள்ள 50 அல்லது 100 ரூபாயை அவரிடமுள்ள தாம்பூல தட்டில் போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆச்சரியம் தான் ஆனால் உண்மை. இப்படி பல ஆச்சரியங்கள் காசி மாநகரில் இருக்கின்றன

. இங்கு தான் காசி கயிறு மந்திரித்து கொடுக்கிறார்கள். நாம் நம் குடும்பதினருக்காக நண்பர், உறவினர்களுக்காக வாங்கி செல்லலாம். கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்” என்றார். ‘ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள் கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்! .

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தில் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யம பயம் கிடையாது.  தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று  அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசி மாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள் புரிந்தார். இன்றும் காசி மாநகரம்  பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசி மாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாக்கின்றனர்.

காசி அனுமன் காட்டில் உரு பைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீ துர்க்கை கோவிலில் சண்டபைரவர் மயில் வாகனத்தில்  தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசிதாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர்  யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீ காமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,  பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத வாகனத்தில் பூத பைரவர் சிம்ம வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும்  எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வர்த்தணை நிச்சயம் உண்டு. காசி மாநகர  எல்லையை தொடும் போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி  சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு யம பயம் நீங்கி வாழ வைக்கின்றது.

அடுத்து நாம் காண இருப்பது சங்கட் மோசன் அனுமார் கோயில். இது ஒரு தொன்மையான கோயில். இங்கு தான் துளஸிதாஸர் ராம்சரித் மானஸ் எழுதியதாக .ஐதீகம்.

இந்த ஆஞ்சநேயரை தரிசித்து அடுத்ததாக சோழியம்மன் எனும் கௌடி மாதா வை தரிசிக்க சென்றோம் . தெலுங்கில் கவ்வாலம்மா என்று கூறுகின்றனர். இவர் கிராம தேவதையாய் ஆந்திர தெலுங்கானாவில் குடிகொண்டுள்ளார். சிவனின் மீது உள்ள பக்தியால் இங்கு சிவனின் அருள் பெற காசிக்கு வந்து அன்னை அன்னபூரணியின் கட்டளைப்படி சிவனின் சகோதரியாய் இங்கு அருள் பாலிக்கின்றாள். சோழியும் ஒரு ரவிக்கை துணியும் தான் படையல். “அம்மா இந்த சோழி உனக்கு காசி யாத்திரை பலன் எனக்கு” என்று இங்கு அனைவரும் பிரார்த்தனை செய்து தனது காசி யாத்திரையை முடிக்கின்றனர். இந்த அம்மனை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை முடிவுருவதில்லை.

பிறகு கங்கை கரையில்  நடக்கும் ஆரத்தியைக் சென்றோம். 

வேத மந்த்ரங்களின் உச்சரிப்பு, சங்க நாதம், தீபாராதனை, நெய்வேத்யம் என ஷோடச (16) உபசாரங்களும் செய்து தினமும் மாலையில் 7 பண்டாக்கள் கங்கை மாதாவிற்க்கு ஆரத்தி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி கங்கை கரையிலும், படகுகளிலும் அமர்ந்து ஆனந்தமாய் கண்டு களிக்கின்றனர். நிறைய வெளிநாட்டவர்களும் வருகின்றனர்

.. இந்த தெய்வீக அனுபவத்திற்கு பிறகு ஓட்டலுக்கு திரும்பினோம். கார்த்திகை தீப மன்று தேவ தீபாவளி கொண்டாடப்படும். கங்கையின் அனைத்து படித்துறைகளிலும் எண்ணற்ற அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜ்யோதியாய் மிளிரும்.

அடுத்து வைதீக முறைப்படி பித்ரு காரியங்கள் செய்தது பற்றிய விபரங்கள் எழுதுகிறேன். ஓம் நம சிவாய,

……………………………………………………………………………………………………………………………………………………………

பகுதி  2 பிரயாகை

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக்கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.

இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!. சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களைத்தான்  நமது வேத கால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் ரகசியங்களை, – பரம கருணையுடன்.
நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர்  நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும்,  மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும். பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!

மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேத வியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர். தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மன நிம்மதியுடனும், மன நிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ள போதே நற் செயல்களைச் செய்து புண்ணிய பலன்களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்க முடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இரு வகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று – நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று – நம்மை நாடி வரும் புண்ணியம்!. நாம் தேடிச்செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
1. திருத்தலங்கள் தரிசனம், 

2. புண்ணிய நதிகளில் ஸ்நானம்,

3.தினமும் செய்யும் தான, தர்மங்கள், 
4. திருக்கோயில் உழவாரப் பணிகள்,

5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல், 
6. திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல்,

 7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல், 
8. பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல்,

 9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள்.

10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்

.இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளாகும்.. அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை. இது போன்றே நம்மை நாடி வரும் புண்ணியம் :1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம், 4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம், 7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக் களைப் பூஜித்தல்.: பித்ருக்களின் கருணை அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந்தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்பு நிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப்புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்கலாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.

அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல்களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும். ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதி பூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை,  எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும். ஆதலால் தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?

திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன்னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீ சீதா தேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.

துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்ததால், பித்ருக்கள் எழுந்தருளும் போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின் போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.

கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!

கலி யுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன் பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் – கேரளம்), கோமுகம், மானஸ சரோவரம் ஆகிய ஆறு(6) பரம பவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன்னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடி வரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம். புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று  திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை. 

 அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன

 இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. 

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. 

எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்? 

 இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்:  கருச்சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.

காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம். 

ராமநாத ஸ்வாமி கோயில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.

அக்னி தீர்த்தம்

முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலை வாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், சேது, மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும். 

வேணு மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ராமநாத சுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசி யாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது வேணு லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த வேணு மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்.

இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும். 

கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போது தான் நம் காசியாத்திரை நிறைவடையும்.   இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்..

ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகையில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும்;  முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த  கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம்  கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என கூறுகின்றது.

ப்ரயாகையில் செய்ய வேண்டியது 

அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாராகஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது. இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் என சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..

1. ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தானம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.

2 ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்ர தானம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3. பார்வதி பரமேஸ்வரர்; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தானம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.

4. கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.

5. ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்.

6 ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.

7. மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர். மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8. மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன.  ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு படகு (போட்) மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்.

படகில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வார் .த்ரிவேணி ஸங்கமத்தில் படகை  நிறுத்துவார். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை. .அதற்கு முன் மனைவி தன் புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும் படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்

கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தானம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்கும சிமிழ்;, மஞ்சள் பொடி, அப்ரஹ பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து படகு மூலம் கோட்டை அருகே செல்ல வேண்டும். அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது. அதில் மனித உரு அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸர்; தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது; இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும் ;நுனி பாகம் கயாவிலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்த இலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன், பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம். 

ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறது;  சிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது. கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸம்பாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு.

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியவாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.; காசியிலிருந்து கயா 276 கிலோ மீட்டர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர்.

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தானம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது. காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழிபடுவதால் தேவ ருணம் விலகும். ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்.

திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணி தானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும். யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்… பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து .காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.

வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.

திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..

வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்யக்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும். தலைமுடி பிரிந்து விடாவண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கை கோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும் .

பிறகு இருவரும் படகில் (boat) வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பின்னி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணீரில் அடியில் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து மறுபடியும் ஸ்நானம்  படகிற்கு  வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும், சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும்.

 .
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்குமிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்…

வேணி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும் 

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும். சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தசதானம் செய்ய வேண்டும்..

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம். த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே

தஹத்வக்நிரிவேந்தனம். லோகத்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத்ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்

கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்

ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.
ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.

ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
பத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹ
வீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;

த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே

தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதாப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வமாம்

ஆல மரத்தின் வேர் அக்ஷய வடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஜடரே அகில மாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷய வடே நமஹ

த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.

ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.

வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹ
சங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீ மாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது. உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும் போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும். அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறை பொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.
ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

.
அகார வடிவில் ப்ருஹ்மா விசுவே தேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்யமானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்

இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணி தேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காப்பாற்றுவாள்.. திரிவேணி ஸ்நாந்த்திற்கு பிறகு பள்ளி கொண்ட ஆஞ்சநேயர், அக்ஷய வடம் தரிசித்து சிவா மடத்திற்கு திரும்பினோம். அங்கு ஈர உடைகள் மாற்றி தானம் செய்ய கொடுத்து விட்டோம். பிறகு ஹிரண்ய  ஸ்ராத்தம் செய்து 17 பிண்டங்கள் பித்ருக்களுக்கு அர்ப்பணித்து , பிராமண தக்ஷினை கொடுத்த பின் வேணு மாதவர் கோயில் தரிசனம் செய்ய சென்றோம். பிறகு போஜனம் செய்து காசிக்கு புறப்பட்டோம்..

அடுத்த பகுதியில் காசியில் ஹிரண்ய ஸிரார்த்தம், பிண்ட பிரதானம் முதலிய்வைகள் பற்றி பார்ப்போம் .

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

பகுதி 3  காசியில் பித்ரு கார்யம்

தேதி 19 ஏப்ரல் 2019

காலையில் குளித்து விட்டு ஹிரண்ய ஸிரார்த்தம் செய்ய ஆயத்தமானோம். ரவி சாஸ்த்ரிகள் சிவ மடத்தில் ஸிரார்தத்திற்கு உண்டான  சகல ஏற்பாட்டுடன் தயாராக இருந்தார். ஹிரண்ய ஸிரார்தம் முகவும் ஸிரத்தையாக செயத பிறகு ஹனுமான் காட்டில் படகில்  ஏறினோம். படகில் நாங்கள் நால்வரும், ஸ்ரீ ரவி சாஸ்த்ரிகலௌம் கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது  17-17 பிண்டங்களாக 5 தனி தனியாக வைக்க சொன்னார். எனது துணைவியாரும், ஆனது சகோதரனின் துணைவியாரும் பிண்டம் பிடித்து வைக்க ஆரம்பித்தனர். சாஸ்த்ரிகள் மந்திர உச்சாடனத்துடன் பித்ரு பூஜையை ஆரம்பித்தார்.

அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17

தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

ஹரித்வாரம், உத்திர சரோவரம், விஷ்ணு பாதம், பஞ்ச கங்கா மற்றும் மணிகர்ணிகா என்று ஐந்து இடங்களில் கங்கையில் பஞ்ச் தீர்த்த ஸிரார்த்தம் செய்து பிண்டங்களை பிரவாகம் செய்தோம். ஏனென்றால் காசியில் காகங்கள்  பிண்டங்களை உண்பதில்லை, கங்கையில் கரைத்தோ அல்லது பசு மாட்டிற்கு அளித்தோ தான் பிண்டமிட வேண்டும். பிண்டமிட்ட பிறகு மணிகர்ணிகா காட்டில் குளித்து சிவ மடம் திரும்பினோம் . அங்கு ஸிரார்த்த காரியங்களை முடித்து கொண்டு உணவருந்தினோம். மாலை மூன்று மணியளவில் கார் மூலம் கயாவிற்கு புறப்பட்டோம்.

  • , காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரை விதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.
  • , அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீ கண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீ யாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்த சேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த     யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலை முடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.
  • , தான் மாத்திரம் கடைத்தேறுகிறான் .ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசி கங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி ‘விஷ்ணு தர்மோத்தர’ புராணம் ‘சௌபரி ஸம்ஹிதை’ இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.
  • , காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும்.   யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.
  • , ஆசமனம், தர்ப்பணம், தேவ பூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.
  • ; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம் .இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.
  • , கங்கா தேவியின் இதய ரூபமும் பகவானுடைய முக ரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவ ரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லையென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். ‘மணிகர்ணிகா குண்டம்’ என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே ‘மணிகர்ணிகைத் துறை’ என்று கூறுகிறோம்; அதைப் போலவே ‘தசாஸ்வமேத கட்டத்தில்’ தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற்கொப்பாகும் என்று கூறப்படுகிறது. ‘காலையில் பஞ்சகங்கா’ கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்’ ஸ்னானம் செய்வது மகத்துவம். அல்லது ‘காலையில் ‘தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் ‘மணிகர்ணிகா’ கட்டத்திலும் ஸ்னானம் செய்வது நல்லது. ‘மணிகர்ணிகா ஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரையென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்த யாத்திரை) என்றும் சொல்வார்கள் .கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை. காசீ தர்பணம்’ என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ரு தர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞான வாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச்சித்தமாகக் கூறப்படுகிறது. காசீ கண்டம் எண்பத்தி நாலாவது அத்யாயத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணை ஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னான மாத்திரத்திலேயே பாபச்சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான்.
  • , ‘த்ரிலோசனா காட்’டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.
  • , விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.
  • , இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.
  • , ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.
  • , ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்க புராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.
  • , மத்யமேஶ்வரர், ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும்   காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.
  • ;

பகுதி 4 கயா ஸிரார்தம்

திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு  மட்டும் இல்லை………….. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள்,  பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்ற போது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

கிருதயுகத்தில், “கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால், 
“”தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால்  சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு  யோசனையைக் கூறினார். “ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்கசொன்னர். பிரும்மாவும்  திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். “இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை” என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான். 

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது. 

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். “தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று  அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான். அவன் 2 வரங்கள் கேட்டான். 

1. “முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்.”

2. “இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும்  கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும்  உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம்  போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில்  பிணம் / பிணங்கள்  எரிவதும் தினமும்  நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார்  

.நாங்கள் போன போது கூட 2 – 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு….அங்கு எதற்கும் தீட்டே இல்லை.

“கயை’ என்றும் “கயா’ என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. “இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..

ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும் . இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்த காலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 
தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். 

“சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் மாமனாரான தசரதர். “உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?” என்று சீதை தயங்கினாள்.

“சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை” என்றார் தசரதர். சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும், “உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிது நேரத்தில் ஸ்ரீராம  லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். “சீதா, சீக்கிரம் சமையல் செய்” என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள்.  ராமர் திகைப்புடன் “சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன் தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை” என்றார். 

“நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

உடனே ராமர், “சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?” என்று கேட்க, அக்ஷய வட ஆலமரம் தவிர மற்றவர்கள் ‘`நாங்கள் அறியோம்’ என்று சொல்லி விட்டன. 

கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன. 

ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு “சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்” என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. “ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்” என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார்.  ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு 

  1. பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும், 

  2. இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும்

  1. பித்ருக்களுக்காக விடபட்டது.

  7. , காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.
  8. ; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.
  9. , பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது

பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

———————————————————————————-

 ஸ்ரீ குரூப்யோ நமஹ

************************************

🥀 சிவபெருமான் விரும்பி மகா மயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.

🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.

🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.

🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.

🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.

🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.

🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.

🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.

🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

தீர்த்தக் கட்டங்கள்:

🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்.

காசி , கயா, பிரயாகை பயண குறிப்புகள் தங்களுக்கு உபயோக மாக இருக்கும் என நம்புகிறேன்

ஓம் நம் சிவாய

ஓம் சாந்தி

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

ஸ்ரீ குரூப்யோ நமஹ்

சித்தி விநாயகர் துணை ஸ்ரீ வேங்கடாசலபதி துணை

ஸ்ரீ கோமதி அம்மன் துணை ஸ்ரீ தர்ம சாஸ்தா துணை

காசி யாத்திரையும் பித்ரு பூஜையும்

எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||

பல நாட்களாக காசி யாத்திரை போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இதற்காக பல்வேறு யாத்திரை நிறுவனங்கள், சாஸ்த்ரிகள், நண்பர்கள் என்று விசாரித்து வந்தேன். ஒவ்வொரு இடத்திலும் தகவல்கள் வந்து குவிந்தன. என் துணைவியார் என்னத்துக்கு வீணாக கவலைபடுகிறீர்கள்? வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்று எனது மனத்தை தேற்றினார். காசியில் வசிக்கும் ஒரு தூரத்து உறவினர் ஒருவர் இத்தகைய சேவைகளை செய்து வருவதாக ஒருநாள் எனது துணைவியாருக்கு அவர் சகோதரன் தெரிவித்தார், தொலை பேசி எண்ணும் கொடுத்தார். பிறகு என்ன உடனடியாக அவரை தொடர்பு கொண்டு விபரங்கள் அறிந்தேன். நாங்கள் இருவரும் (நானும் துணைவியாரும்) போவது என தீர்மானித்தோம். நாங்கள் கூட்டு குடும்பமாக புது டில்லியில் ஒரே வீட்டில் நான்கு சகோதரரகளும் இருக்கிறோம் ஆகையால் அவர்களுடனும் கலந்து ஆலோசித்தோம். நீண்ட ஆலோசனை, பட்ஜெட், லீவு, பயணம், உடல் சௌகரியம் எல்லாம் உத்தேசித்து நாங்களும் என் தம்பி கணேஷ், அவர் துணைவியும் போவதாக தீர்மானித்தோம். பிறகு என்ன புறப்பாடு, ஏற்பாடு, கும்மாளம், கொண்டாட்டம், களேபரம் கூட்டு குடும்பமல்லவா… எல்லாமே ஒரு திருவிழா போலத்தான் எங்கள் வீட்டில். பயண ஏற்பாடுகள், ரயில் டிக்கெட் பதிவு, பணத்திற்கு ஏற்பாடு, துணி மணி, அலுவலகத்தில் லீவு, என்று ஒவ்வொன்றாய் நடக்க ஆரம்பித்தது. எங்கள் அண்ணா உடல் அசௌகரியத்தினால் வர இயலாது ஆனாலும் தேர்தல் நேரம் ஜாக்கிரதையாய் பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார். தொலைபேசி மூலம் திரு ரவி (எங்கள் உறவினர்) அவர்களை தொடர்பு கொண்டு 4 பேர் வருகிறோம் ஏப்ரல் 17 முதல் 21 தேதி வரை எங்கள் ப்ரோக்ராம் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அட்வான்ஸ் பணமும் அனுப்பி வைத்தோம். அந்த நாளும் வந்தது.

16 ஏப்ரல் இரவு Mandwadih சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் காசிக்கு பயணம் தொடங்கியது. 17ம தேதி திரு ரவி அவர்கள் ரயில் நிலயதிற்கு வந்து ஓட்டலுக்கு அழைத்து சென்றார். ஓட்டலில் உணவு அருந்தி சற்று களைப்பாறினோம். அன்று மதியம் 3 மணியளவில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு புறப்பட்டோம். ஒரு கோவிலுக்கு போகிறோம் என்றால் அதன் வரலாறு அறிந்து தரிசனம் செய்தல் நலம்.

துண்டி விநாயகர்

துண்டி விநாயகனை, மண்டு மவாவினொடு
கண்டு வணங்கிடுவோர், பண்டை வினையறுமே

எந்த ஒரு வேலையும் தொடங்குமுன்னர் முழு முதர்க்கடௌவலான விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே

துண்டி விநாயகர்

எந்த ஒரு வேலையும் தொடங்கு முன்னர் விநாயகரை தொழுது ஆரம்பித்தல் அந்த காரியம் மிக சிறப்பாக நடைபெறும் என்பது சான்றோர்கள் வாக்கு. அதன் படியே முதலில் தூண்டி விநாயகர் கோயிலுக்கு சென்றோம். விஸ்வநாதர் கோவிலுக்கு முன்பு இருந்து ஆசீர்வதிக்கிறார். சிறு கோயில். சந்து ஒன்றில் கடைகளுக்கு நடுவே விநாயகர் அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காட்சி அளிக்கிறார். செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்கிறார்கள். துண்டி மகராஜ் என்று பக்தர்கள் விநாயகரை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வழிபடுகிறார்கள். காசிக்கு வருபவர்கள் இவரிடம் உத்தரவு பெறாமல் போகக்கூடாது என்பது சம்பிரதாயம். காசிக்கு செல்பவர்கள் துண்டி விநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. இவரது உருவ அமைப்பு சற்று மாறுபட்டு இருக்கும். முடிவடையாத சிலை போல, துண்டி விநாயகர் காட்சி தருகிறார். இங்கு வந்து கருமங்களை தொலைத்து விட்டு என்னை வணங்காமல் சென்றால் உங்கள் யாத்திரையின் பலனும் அரை குறையாகத் தான் இருக்கும். எனவே காசிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இந்த விநாயகரையும் வழிபட வேண்டும். இக் கோவிலுக்கு அருகிலிருந்து தான் பக்தர்களை சோதனையிட்டு விஸ்வநாதர் சன்னதிக்கு அனுப்புகிறார்கள்.

விஸ்வநாதர், அன்னபூரணி தேவி ஆலயங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், மிக குறுகலான 5 அடிக்கும் குறைவான அகலம் உள்ள சந்துக்கள்தான் உள்ளன. மேலும் கோவிலுக்குச் செல்லும் வழி எங்கும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஸ்வநாதர் சிலைக்கு அருகே சுமார் இருபதடி தொலைவில் பார்க்கும் இடமெல்லாம் ஒரே போலீஸ் மயமாகத்தான் உள்ளது. இப்படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் இருப்பது மிக மிகச் சிறிய அளவில். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் கோயிலினுள் இருக்கும் காசி விஸ்வநாதர் சிலை; மிகச்சிறிய சிவலிங்கம் போன்று காணப்படுகிறது. இதை வைத்துத்தான் நம் முன்னோர்கள் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்று சொன்னார்கள் போலும்

காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.

ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை:

அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் எனப்படுவர். வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்த ரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர்.. ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர். சிவனை இலைகளைப் போல் நிறைய நல்ல பாம்புகளுடன் அலங்கரித்த நிழல்கள் இருக்கும் போது அவர் தலையில் கங்கை நீரை ஊற்ற வைத்தும், ஐந்து தடவை செய்யும் ஆரத்தி முக்கியமானது. பூஜை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசிக்கும் போது கோயிலின் உள்ளே நுழைய மிகவும் உற்சாகம் கொடுக்கிறது.

இக்கோயிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்போது மக்கள் அனைவரும் தலையை குனிந்து கொள்கின்றனர். இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே மரகத சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிவலிங்கம் காசியில் பிரசித்தி பெற்றது. கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. காலையிலும் மாலையிலும் விசுவநாதருக்கு பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதரால் காசி முக்கிய ஸ்தலமாக இருக்கிறது.[2] கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.

ஸ்கந்த புராணத்தில் காசி கண்டம் இத்தலத்தை வர்ணிக்கிறது. மும்மூர்திகளில் யார் பெரியவர் என்று கேள்வி எழுந்தவுடன் சிவன் ஒரு ஒளிப்பிழம்பாய் மாறி அடி முடியில்லாத ஸ்வரூபமாய் காட்சி அளிக்கிறார் மகாவிஷ்ணு அந்த ஓளியின் ஆரம்பம் எங்கே என்று தேட போகிறார் பிரம்மனோ முடியை நோக்கி பயணிக்கிறார் பல யுகங்கள் சென்ற போதிலும் அடியும் முடிவும் காண முடிய வில்லை பிரம்மா மேல் நோக்கி செல்லுகையில் ஒரு தாழம்பூ மேலிருந்து விழுகிறது பிரம்மா அதனை தான் முடியைக்கண்டதற்கு சாட்சியாக இருக்க வேண்டுகிறார் . தாழம்பூவும் ஒப்புக்கொள்கிறது . பிரம்மன் சிவனிடம் வந்து தான் முடியை கந்ததாகவும், தாழம்பூ அதற்கு சாட்சியென்றும் கூறுகிறார். அங்கு விஷ்ணு தான் அடியை காண முடியாமல் தோற்றதாக ஒப்புக்கொள்கிறார். பொய் சொன்னதனால் சிவன் பிரம்மாவிற்கு எங்கும் வழி பாடு நடக்காது என்றும், தாழம்பூ அதற்கு சாட்சி சொன்னதால் அது சிவ பூஜைக்கு சேர்க்க கூடாது என்றும் கூறுகிறார். மகா விஷ்ணு சிவனை விஸ்வேஸ்வர ரூபமாய் தரிசனம் அளிக்க வேண்டுகிறார். சிவனும் அவர் வேண்டுகோளுக்கு இணங்கி லிங்க ரூபமாய் காட்சி அளிக்கிறார். அதைத்தான் நாம் காசி விஸ்வநாதராக இன்று காண்கின்றோம்.

சிவனின் ஜோதிர்லிங்கத் தலம் ; முத்தித் தரும் தலங்கள் ஏழினுள் ஒன்று ; அம்மனின் சக்தி பீடம் ;ஈசனுக்கு பூசை நடக்கும் போது நூற்றுக்கணக்கான மணி ஓசைகளும், மேள தாளங்களும் வாசித்து மனதிற்கு மிகவும் உற்சாகம் கொடுக்கும் அதி அற்பூதம் வாய்ந்த வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய மிக பழைமையான சிவ ஸ்தலம்..* அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி- உத்தரப்பிரதேசம்.*

மூலவர்: *காசி விஸ்வநாதர்* அம்மன் /தாயார்: *விசாலாட்சி* தீர்த்தம்: *கங்கையில்64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதி கங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாபி என்ற சிறு தீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ர தீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.*

பழமை: *5000 வருடங்களுக்கு முன்* புராண பெயர்:*வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகா மயானம், அவிமுக்தம்* ஊர்: *காசி* தல சிறப்பு: மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆன சுயம்புநாநர்.. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும். மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டி போட்டு குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். விசுவநாதருக்குத் தங்க விமானம் – சுவர்ண பந்தனம், மரகத மூர்த்தி, அவரவர் விருப்பப்படி தேன், பால், தயிர், தண்ணீர், வில்வம், விபூதி கொண்டு அபிஷேகம் செய்து தொட்டுக் கும்பிட்டு வழிபடலாம். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்கா தீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

காசி மூலவர் அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்வேஸ்வர் என்றும் அழைக்கப்பட்டார். இப்போதுள்ள விஸ்வநாதர் என்ற பெயர் வேதம் கற்ற அறிஞர்களால் அதன் பிறகே சூட்டப்பட்டது. அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள்.

காசி விஸ்வநாதர் கோயில் தொன்று தொட்டு இருந்தாலும் இதனை கி பி 1194ம ஆண்டு முகமது கோரியின் படை தலைவன் குதுபுத்தின் நிர்மூலமாக்கினான். அதன் பிறகு குஜராத் மன்னர்கள் கட்டினார் இது போன்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளற்களால், கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு சின்னாபின்னப் படுத்த்தப்பட்டது அதை இந்து மன்னர்கள் மறுபடியும், மறுபடியும் ஒவ்வொரு முறையும் கட்டினர். இந்தோர அரசியான அகல்யா பாய் ஹோல்கர் காலத்தில் முகலாய மன்னர் ஔரங்கஜீப் இதனை மறுபடியும் இடித்து ஞான வாபி மசூதியை கட்டினான். ஆனால் ராணி அகல்யா பாய் மற்றும் பண்டாக்கள் மரகத சிவ லிங்கத்தை அருகிலுள்ள கிணற்றில் போட்டு மூடி விட்டார்கள். இந்த கிணற்றையும் மசூதியையும் இன்றும் காணலாம். தசாஸ்வேமேத் (காட்) நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. கோயிலின் மூலஸ்தானத்தைக் கொண்ட சிறிய ஆலயம் 1780ஆம் ஆண்டு மகாராணி அகல்யா பாய் ஹோல்கரால் கட்டப்பட்டது..1835ஆம் ஆண்டு பஞ்சாப் மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங், ஒரு டன் தங்கத்தைப் பரிசாக அளித்து இப்போதிருக்கும் தங்கக் கோபுரத்தை அமைத்தார். 1841ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த போஸ்லே குடும்பத்தினர், கருவறையின் மூன்று நுழைவாயில்களுக்கு வெள்ளிக் கவசங்களை அமைத்தனர். வடக்கு வாயிலுக்கு மட்டும் வெள்ளிக்கவசம் இல்லாமலேயே இருந்தது. அதற்கான கவசம் அண்மையில் அமைக்கப்பட்டதுதற்போது பிரதம மந்திரி மோடி ஜி அவர்கள் இதன் புராதன சிறப்புக்களை மீட்க முயற்சி செய்து வருகிறார்

.

!காசி விஸ்வநாதர் மிகச்சிறிய சிவலிங்கம் :

கோயில் தரிசனம் செய்ய கிளம்பியவுடன் மழை பெய்ய ஆரம்பித்தது . கோயிலுக்கு மழையில் நனைந்து கொண்டே போனோம். விஸ்வநாதர் கோயில் போகும் பொழுது அலை பேசி, குடை, போன்ற பொருள்கள் எடுத்து செல்ல கூடாது. ஆகையால் அங்கு அருகிலிருந்த கடாய் ஒன்றில் இந்த சாமான்களையும், ஹேண்ட்பேக், போன்ற பொருள்களை ஒரு லாக்கரில் வைது விட்டு பிரசாத பொருள்கள், மாலை, அபிஷேகத்திற்கு பால், முதலியன வாங்கி சென்றோம். கடைக்காரர்கள் தலையில் நிறைய சாமான்களை கட்ட முயற்சிப்பார்கள். தேவையானவற்றை மட்டும் வாங்கி கொள்ளுங்கள் . பாதுகாப்பு சோதனை முடிந்து கோயில் உள்ளே சென்றோம். அங்கு பண்டாக்கள் நான் தரிசனம், பூஜை செய்கிர்3என் என்று சொல்லி வருவார்கள். அவர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம். வடநாட்டில் நாமே எல்லா பூஜையும் செய்யலாம். விநாயகர், அன்ன பூரணி,, கால பைரவர், குபேரர் என, ஒவ்வொரு கட்டத்திலும் தரிசனம் செய்து ,பாலாபிஷேகம் நமது கரங்களினால் செய்து மாலை சார்த்தி, புஷ்ப அர்ச்சனை செய்து மகிழ்ந்தோம். வட நாடு ஞான பூமி. ஆகையால் இங்கு தீட்டு முதலானவைகள் கிடையாது. வடநாட்டில் நாமே பூஜை செய்யலாம். அங்கு உள்ள பண்டாக்கள் பணம் தருமாறு வற்புறுத்துவார்கள் ஆனால் செவிமடுக்காமல் தொடர்ந்து உங்கள் கவனம் பூஜையின் மீதும், பர்ஸின் மீதும் இருக்கட்டும். அங்கு கையில் சில்லறையாக பணம் எடுத்து செல்வது நன்று. காசி விஸ்வநாதர், அன்னபூரணியை தரிசித்து உள்ளே சென்றோம் அங்கு ஞான வாபி என்னும் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தான் ஒரிஜினல் மரகத சிவலிங்கம் உள்ளது. கிணற்றை முழுமையாக மூடிவிட்டனர். அங்கு உள்ள பண்டாக்கள், பூசாரிகளிடம் பேச்சுக்கு மயங்க வேண்டாம் இல்லையேல் உங்களிடம் கறந்துவிடுவார்கள். கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இது தான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞான வாபி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, ஹரித்வார், காஞ்சி, உஜ்ஜயினி (அவந்தி), துவாரகை..

அடுத்து காசி அன்னபூரணியின் கோயில் சென்றோம். என்ன அழகு அம்பாள் சிகப்பு நிற ஆடையில் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாள். அப்படியே மெய்மறந்து நின்றோம்.

வற்றாத உணவினை அளிக்கும் அட்சயப் பாத்திரத்தை ஏந்தி இருப்பதால் தான் சக்தி தேவி ‘அன்னபூரணி’ என்று போற்றப்படுகிறாள். காசியில் உருவான கடும் பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று எல்லோருக்கும் உணவளித்து வந்தாள். இந்த அன்னபூரணி கோயிலில் இன்றும் தொடர்ந்து காலை11 மணியளவில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. நாட்டுக் கோட்டை நகரத்தார் மற்றும் பல சமூக ஸ்தாபனங்கள் நிதி மற்றும் உணவு பண்டங்கள் தானமாக அளிக்கின்றனர்

.

இமையாத வானவர் குழாத்தினுக்கும், மற்றுமொரு மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) உலகில் யாவருக்கும் அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் தங்க அன்னபூரணியாக காசியில் அருளிபாலிகிறாள். சாம வேதத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காசி அன்ன பூரணி

திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் கரத்தில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. எங்கெங்கோ சிவபெருமான் பிட்சாடனராக பிச்சை பெற்ற போதும் அந்த கபாலம் அவருடைய கையை விட்டு நீங்கவே இல்லை. இறுதியில் அன்னபூரணி தமது பாத்திரத்தில் இருந்து பிச்சை இட்டதும் அவரது கரத்தில் இருந்து கபாலம் நீங்கியது.

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?

காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்ன தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜ குமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார். முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார். அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினாள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.

‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.

அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளி இருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

மந்திரம்:
‘ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவதி

அன்ன பூர்ணே மமாபிலிக்ஷிதமன்னம் தேஹி ஸ்வாஹா’

மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. அன்னபூரணியின் அட்சயப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாத அருளை வழங்கக் கூடியது. அன்னபூரணியை வணங்கும் பக்தர்கள் இந்த அட்சயப் பாத்திரத்தையும் சேர்த்தே வணங்குகிறார்கள்.

அன்னபூர்ணே சதா பூர்ணே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதி தேவி பிதா தேவோ மகேஸ்வரஹ :
பாந்தவ சிவபக்தாஸ் ச ஸ்வதேசோ புவநத் த்ரயம்

தாயே அன்னபூரணியே சிவனுக்கு பிரியமானவளே, பார்வதி தாயே எனக்கு ஞானமும் வைராக்கியமும் சித்திக்க அருள் புரிவாயாக. தாய் பார்வதியும், தந்தை மகேஸ்வரனும் அனைத்து சிவா பக்தர் உற்றார் உறவினராய் உலகமே என் தேசமாக அனைத்து உயிர்களும் நல்வாழ்வு பெற்று உன் அருளுக்கு பாத்திரமாக வேண்டும் தாயே என்று பிரார்த்தனை செய்தோம். அனைத்து உயிர்களின் களைப்பையும் நீக்கி இறுதியில் உறுதுணையாக இருந்து, வினைப் பிணிகளாகிய முடிச்சுகளை அவிழ்த்து, நம் தீவினைகளைத் திருவருட் பார்வையால் போக்கி, என்றும் மீளாத இன்பத்திருவடியை அளிக்கின்றாள் அன்னபூரணி. ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப் பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள். கேட்டதைக் கொடுக்க கூடிய கற்பக விருட்சம் போன்றது அன்னபூரணியின் கரத்தில் இருக்கும் அட்சய பாத்திரம். காசியில் வீற்றிருக்கும் அன்னை அட்சய பாத்திரம் தாங்கியிருக்கிறாள். காசிக்குப் போகும் போது, அன்னபூரணியை வழிபடும் போது, மறக்காமல் அந்த அட்சய பாத்திரத்தையும் கண் குளிரப் பார்த்து வழிபடுங்கள். உங்கள் செல்வம் அட்சயமாக வளரும். இங்கிருந்து தரிசனம் முடிந்து போகும் பொழுது அன்ன தான் கூடம், காலி தேவி மற்றும் இதர சன்னிதிகளையும் தரிசித்து செல்லுங்கள். பிரசாதமாக கொஞ்சம் அரிசியும் , குங்குமமும் கொடுப்பார்கள். அரிசியை உங்கள் வீட்டில் அரிசி பானையில் கலந்து விடவேண்டும் என்றும் உணவு தட்டுப்பாடு இருக்காது.. . அன்னபூரணி அம்பாள் கோயிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள். லோக மாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

அன்னபூரணியை தரிசித்து விட்டு அன்னை விசாலாக்ஷி கோயிலுக்கு சென்றோம். காசி விசாலாக்ஷி அம்மன் சிவனின் வரவுக்காக கண் இமை சிமிட்டாமல் பல ஆண்டுகள் தவசிருந்ததாக கூறப்படுகிறது. துர்கமாசுரன் என்னும் அரக்கன் 12 ஆண்டுகள் எந்த ஒரு ஸ்த்ரீ கண் சிமிட்டாமல் தவமிருப்பாளோ அவர் கையால் மட்டுமே அழிவு என பிரம்மாவிடம் வரம் பெற்று தேவர்களையும், மனிதர்களையும், ரிஷி, முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழித்து அன்னை துர்கை என்றும், கண் சிமிட்டாமல் இருந்ததால் விசாலாக்ஷி என்றும் பெயர் பெற்றாள். விசாலாக்ஷி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள்.

காசி விசாலாக்ஷி பெயர், மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சி காமாட்சியுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது..1971-இல் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் விசாலாக்ஷி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்தனர்.[4][5] சிறிய சந்துகள் வழியே செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் லட்சக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் ஆலயம் வந்து செல்கின்றனர் கங்கை ஆற்றின் மீர் காட் படித்துறையில் விசாலாட்சி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[1][2] 51 சக்தி பீடங்களில் இக்கோயிலும் ஒன்றாக கருதப்படுகிறது. சதி தேவியின் கண்களும், காது வளையங்களும் பூமியின் புனிதத் தலமாக வாரணாசியில் விழுந்ததாக கருதப்படுகிறது. விசாலாஷி கோவில் விஸ்வநாதர் சன்னதிக்கு சிறிது தொலைவில் ஒரு குறுகிய சந்தில் உள்ளது, மிகவும் அழகிய கோவில்.காசியில் அம்மன் விசாலாஷியாகவும், அன்னபூர்ணியாகவும் எழுந்தருளியுள்ளாள். காசி விசாலாட்சி அம்பாள் சக்தி பீடங்களில்பெரும் பெருமை கொண்ட இடம்.

விசாலாஷி கோவில் தென்னாட்டு பாணியில் அமைந்துள்ளது.சுற்றிலும் சிவ-லிங்கங்கள். மூலவர் சந்நதிலேயே (மூலவர் விசாலாஷி) அம்மன் பின்புறமாக ஆதி விசாலாஷி அம்மனையும் தரிசிக்கலாம்.

அம்மனுக்கு விளக்கு பூஜை மகாமேரு பூஜை, பிரகாரத்தில் சிவலிங்க பூஜையும் மிகவும் விசேஷம்.

.

அன்னை விசாலாட்சியின் கோயில் காசி விசுவநாதர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்குகள் தூரத்தில் அமைந்துள்ளது. காசியில் தன்னை வணங்கி வழிபட வருவோரின் கஷ்டங்களை போக்கி, வேண்டுவனவற்றை அருளும் விசாலாட்சி, கருவறை நடுவில் திருவருள் சுரக்கும் திருநோக்குடன் திருக்காட்சி அருள்கின்றாள்

. காசி மாநகரத்தின் ஆலயங்களில் மேலும் சிறப்புற்றது காலபைரவர் ஆலயம். இந்த ஆலயம் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சுவாமி சிலையும் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ”ஸ்ரீகால பைரவர் சுயம்புத் திருமேனி. ‘இவருடைய அனுமதியில்லாமல், காசியில் காற்று கூட நுழையாது; காசி மரத்து இலைகள் கூட அசையாது’ என்றொரு சொல் வழக்கு உண்டு. இவரை வணங்கினால், பஞ்சமா பாதகங்களும் விலகி விடும்; முக்தி கிடைக்கப் பெறலாம். இங்கு இவருக்கு சைவ- அசைவ உணவு ஆகிய இரண்டுமே படைக்கப்படுகின்றன இக்கோயிலானது சிவபெரூமானின் கடுமையான வடிவங்களில் ஒன்றாக, மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். "கால்" (காலம்/காலன்) என்ற சொல்லானது "இறப்பு" மற்றும் "விதி" ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். "கால பைரவரைக்" கண்டு மரணம் கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது. கால பைரவரின் சிலை உள்ளது. காலவபைரவர் விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காட்சியளிக்கிறார். அவருக்கு அருகில் அவரது வாகனமான நாய் உள்ளது. கோயிலின் பின் பகுதியில், சேத்ர பால பைரவர் சிலை உள்ளது. கால பைரவரின் வாகனமாக நாய் உள்ளது. கோவிலின் உட்புறம் உள்ள சன்னதியில வெள்ளி முகம் கொண்ட இந்த கால பைரவரின் கோயிலைக் கட்டிய காலம் சரியாக தெரியவில்லை ஆனால் கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. காலபைரவர் காசியின் காவலராக

அதாவது காவல் தெய்வமாக கருதப்படுகிறார். காசியில் வாழ வேண்டுமானால் இவரது அனுமதியை பெற வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.

காசியில் ஆட்சி செய்யும் காவல் தெய்வமான கால பைரவர்..

அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் இவரை வழிபடுவது சிறப்பு” என்கிறார் பைரவர் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் விஸ்வநாத் பாண்டே காலபைரவருக்கு எதிரே பூசாரி ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அவரிடம் செல்கிறார்கள். கீழே குனிந்து வணங்குகிறார்கள். குனிந்து வணங்கிய பின் அந்த பூசாரி குனிந்தவர் முதுகில் ஓங்கிக் குத்துகிறார். குத்து வாங்கியவர் உடனே தன்னிடம் உள்ள 50 அல்லது 100 ரூபாயை அவரிடமுள்ள தாம்பூல தட்டில் போட்டுவிட்டு செல்கிறார்கள். ஆச்சரியம் தான் ஆனால் உண்மை. இப்படி பல ஆச்சரியங்கள் காசி மாநகரில் இருக்கின்றன

. இங்கு தான் காசி கயிறு மந்திரித்து கொடுக்கிறார்கள். நாம் நம் குடும்பதினருக்காக நண்பர், உறவினர்களுக்காக வாங்கி செல்லலாம். கால பைரவர் சக்தி வாய்ந்தவர். இவரை வழிபட, எதிரிகளின் தொல்லை ஒழியும்” என்றார். ‘ஸ்ரீகால பைரவரை வணங்கு; காசி கயிற்றைக் கட்டு’ என்பார்கள். காசிக்குச் சென்று, ஸ்ரீகால பைரவரை தரிசிக்க இயலாதவர்கள் கூட, அங்கிருந்து பிரசாதமாகக் கொண்டு வரப்பட்ட காசி கயிற்றை, மனதாரப் பிரார்த்தித்துக் கட்டிக் கொண்டால், கவசமென அந்தக் கயிறு நம்மைக் காக்கும்! .

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தில் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யம பயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்த போது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசி மாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள் புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசி மாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர்.

காசி அனுமன் காட்டில் உரு பைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீ துர்க்கை கோவிலில் சண்டபைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசிதாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர் யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீ காமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும், பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத வாகனத்தில் பூத பைரவர் சிம்ம வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும் எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த்தனை கிடையாது. பைரவ வர்த்தணை நிச்சயம் உண்டு. காசி மாநகர எல்லையை தொடும் போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு யம பயம் நீங்கி வாழ வைக்கின்றது.

அடுத்து நாம் காண இருப்பது சங்கட் மோசன் அனுமார் கோயில். இது ஒரு தொன்மையான கோயில். இங்கு தான் துளஸிதாஸர் ராம்சரித் மானஸ் எழுதியதாக .ஐதீகம்.

இந்த ஆஞ்சநேயரை தரிசித்து அடுத்ததாக சோழியம்மன் எனும் கௌடி மாதா வை தரிசிக்க சென்றோம் . தெலுங்கில் கவ்வாலம்மா என்று கூறுகின்றனர். இவர் கிராம தேவதையாய் ஆந்திர தெலுங்கானாவில் குடிகொண்டுள்ளார். சிவனின் மீது உள்ள பக்தியால் இங்கு சிவனின் அருள் பெற காசிக்கு வந்து அன்னை அன்னபூரணியின் கட்டளைப்படி சிவனின் சகோதரியாய் இங்கு அருள் பாலிக்கின்றாள். சோழியும் ஒரு ரவிக்கை துணியும் தான் படையல். "அம்மா இந்த சோழி உனக்கு காசி யாத்திரை பலன் எனக்கு" என்று இங்கு அனைவரும் பிரார்த்தனை செய்து தனது காசி யாத்திரையை முடிக்கின்றனர். இந்த அம்மனை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை முடிவுருவதில்லை.

பிறகு கங்கை கரையில் நடக்கும் ஆரத்தியைக் சென்றோம்.

வேத மந்த்ரங்களின் உச்சரிப்பு, சங்க நாதம், தீபாராதனை, நெய்வேத்யம் என ஷோடச (16) உபசாரங்களும் செய்து தினமும் மாலையில் 7 பண்டாக்கள் கங்கை மாதாவிற்க்கு ஆரத்தி செய்கின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு கூடி கங்கை கரையிலும், படகுகளிலும் அமர்ந்து ஆனந்தமாய் கண்டு களிக்கின்றனர். நிறைய வெளிநாட்டவர்களும் வருகின்றனர்

.. இந்த தெய்வீக அனுபவத்திற்கு பிறகு ஓட்டலுக்கு திரும்பினோம். கார்த்திகை தீப மன்று தேவ தீபாவளி கொண்டாடப்படும். கங்கையின் அனைத்து படித்துறைகளிலும் எண்ணற்ற அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெகஜ்யோதியாய் மிளிரும்.

அடுத்து வைதீக முறைப்படி பித்ரு காரியங்கள் செய்தது பற்றிய விபரங்கள் எழுதுகிறேன். ஓம் நம சிவாய,

……………………………………………………………………………………………………………………………………………………………

பகுதி 2 பிரயாகை

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக்கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.

இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!. சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களைத்தான் நமது வேத கால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் ரகசியங்களை, – பரம கருணையுடன்.
நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர் நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும், மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும். பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!

மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேத வியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர். தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மன நிம்மதியுடனும், மன நிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ள போதே நற் செயல்களைச் செய்து புண்ணிய பலன்களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்க முடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.

மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இரு வகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று – நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று – நம்மை நாடி வரும் புண்ணியம்!. நாம் தேடிச்செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
1. திருத்தலங்கள் தரிசனம்,

2. புண்ணிய நதிகளில் ஸ்நானம்,

3.தினமும் செய்யும் தான, தர்மங்கள்,
4. திருக்கோயில் உழவாரப் பணிகள்,

5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல்,
6. திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல்,

7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல்,
8. பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல்,

9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள்.

10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்

.இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளாகும்.. அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை. இது போன்றே நம்மை நாடி வரும் புண்ணியம் :1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம், 4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம், 7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக் களைப் பூஜித்தல்.: பித்ருக்களின் கருணை அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந்தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்பு நிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப்புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்கலாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.

அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல்களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும். ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதி பூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை, எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும். ஆதலால் தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?

திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன்னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீ சீதா தேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.

துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்ததால், பித்ருக்கள் எழுந்தருளும் போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின் போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.

கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!

கலி யுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன் பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் – கேரளம்), கோமுகம், மானஸ சரோவரம் ஆகிய ஆறு(6) பரம பவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன்னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடி வரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம். புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவுஅதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும்பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: கருச்சிதைவு செய்து கொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.

காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.

ராமநாத ஸ்வாமி கோயில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.

அக்னி தீர்த்தம்

முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலை வாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், சேது, மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும்.

வேணு மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ராமநாத சுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசி யாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது வேணு லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த வேணு மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்.

இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும்.

கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போது தான் நம் காசியாத்திரை நிறைவடையும். இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்..

ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகையில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும்; முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம் கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என கூறுகின்றது.

ப்ரயாகையில் செய்ய வேண்டியது

அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாராகஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது. இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் என சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..

1. ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தானம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.

2 ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்ர தானம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3. பார்வதி பரமேஸ்வரர்; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தானம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.

4. கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.

5. ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்.

6 ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.

7. மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர். மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8. மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன. ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு படகு (போட்) மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்.

படகில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வார் .த்ரிவேணி ஸங்கமத்தில் படகை நிறுத்துவார். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை. .அதற்கு முன் மனைவி தன் புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும் படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்

கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தானம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்கும சிமிழ்;, மஞ்சள் பொடி, அப்ரஹ பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து படகு மூலம் கோட்டை அருகே செல்ல வேண்டும். அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது. அதில் மனித உரு அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸர்; தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது; இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும் ;நுனி பாகம் கயாவிலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்த இலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன், பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம்.

ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறது; சிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும். மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது. கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸம்பாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு.

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியவாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.; காசியிலிருந்து கயா 276 கிலோ மீட்டர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர்.

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தானம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது. காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழிபடுவதால் தேவ ருணம் விலகும். ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்.

.
திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணி தானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும். யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்… பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து .காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.

வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.

திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..

வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்யக்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும். தலைமுடி பிரிந்து விடாவண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கை கோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும் .

பிறகு இருவரும் படகில் (boat) வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பின்னி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணீரில் அடியில் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து மறுபடியும் ஸ்நானம் படகிற்கு வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும், சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும்.

.
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்குமிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்…

வேணி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும்

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும். சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தசதானம் செய்ய வேண்டும்..

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம். த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே

தஹத்வக்நிரிவேந்தனம். லோகத்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத்ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்

கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்

ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.

ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதேபத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹவீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;

த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே

தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதாப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வமாம்

ஆல மரத்தின் வேர் அக்ஷய வடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஜடரே அகில மாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷய வடே நமஹ

த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.

ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.

வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹசங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீ மாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது. உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும் போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும். அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறை பொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.
ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

.
அகார வடிவில் ப்ருஹ்மா விசுவே தேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்யமானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்

இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணி தேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காப்பாற்றுவாள்.. திரிவேணி ஸ்நாந்த்திற்கு பிறகு பள்ளி கொண்ட ஆஞ்சநேயர், அக்ஷய வடம் தரிசித்து சிவா மடத்திற்கு திரும்பினோம். அங்கு ஈர உடைகள் மாற்றி தானம் செய்ய கொடுத்து விட்டோம். பிறகு ஹிரண்ய ஸ்ராத்தம் செய்து 17 பிண்டங்கள் பித்ருக்களுக்கு அர்ப்பணித்து , பிராமண தக்ஷினை கொடுத்த பின் வேணு மாதவர் கோயில் தரிசனம் செய்ய சென்றோம். பிறகு போஜனம் செய்து காசிக்கு புறப்பட்டோம்..

அடுத்த பகுதியில் காசியில் ஹிரண்ய ஸிரார்த்தம், பிண்ட பிரதானம் முதலிய்வைகள் பற்றி பார்ப்போம் .

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பகுதி 3 காசியில் பித்ரு கார்யம்

தேதி 19 ஏப்ரல் 2019

காலையில் குளித்து விட்டு ஹிரண்ய ஸிரார்த்தம் செய்ய ஆயத்தமானோம். ரவி சாஸ்த்ரிகள் சிவ மடத்தில் ஸிரார்தத்திற்கு உண்டான சகல ஏற்பாட்டுடன் தயாராக இருந்தார். ஹிரண்ய ஸிரார்தம் முகவும் ஸிரத்தையாக செயத பிறகு ஹனுமான் காட்டில் படகில் ஏறினோம். படகில் நாங்கள் நால்வரும், ஸ்ரீ ரவி சாஸ்த்ரிகலௌம் கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது 17-17 பிண்டங்களாக 5 தனி தனியாக வைக்க சொன்னார். எனது துணைவியாரும், ஆனது சகோதரனின் துணைவியாரும் பிண்டம் பிடித்து வைக்க ஆரம்பித்தனர். சாஸ்த்ரிகள் மந்திர உச்சாடனத்துடன் பித்ரு பூஜையை ஆரம்பித்தார்.

அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17

தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

ஹரித்வாரம், உத்திர சரோவரம், விஷ்ணு பாதம், பஞ்ச கங்கா மற்றும் மணிகர்ணிகா என்று ஐந்து இடங்களில் கங்கையில் பஞ்ச் தீர்த்த ஸிரார்த்தம் செய்து பிண்டங்களை பிரவாகம் செய்தோம். ஏனென்றால் காசியில் காகங்கள் பிண்டங்களை உண்பதில்லை, கங்கையில் கரைத்தோ அல்லது பசு மாட்டிற்கு அளித்தோ தான் பிண்டமிட வேண்டும். பிண்டமிட்ட பிறகு மணிகர்ணிகா காட்டில் குளித்து சிவ மடம் திரும்பினோம் . அங்கு ஸிரார்த்த காரியங்களை முடித்து கொண்டு உணவருந்தினோம். மாலை மூன்று மணியளவில் கார் மூலம் கயாவிற்கு புறப்பட்டோம்.

· காசியாத்திரை விதி காசீ கண்டத்தில், காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரை விதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.

· காசீ கண்டம் கூறுகிறது:-

· காசியில் ஒருநாள் கூட யாத்திரையில்லாமல் கழிக்காதே என்றும் அப்படிக் கழித்தால், அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீ கண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீ யாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ், நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்த சேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு, தன்னுடைய கிராமத்தை விட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம், முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ, செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலை முடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.

· காசி ரஹஸ்யம் கூறுகிறது:-

· இஷ்ட மித்ர பந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடி போட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வர சௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களை விட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது. காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான் .ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசி கங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி ‘விஷ்ணு தர்மோத்தர’ புராணம் ‘சௌபரி ஸம்ஹிதை’ இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.

· யாத்ரிகர்கள் தினந்தோறும் நித்ய கர்மங்களை முடித்துக்கொண்டே யாத்திரைக்குச் செல்ல வேண்டும். யாத்திரை செய்யும் பொழுது இஷ்ட தேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் ‘ஹர ஹர மஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும். யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.

· யாத்திரையில் எங்கெங்கு ஸ்னானம், ஆசமனம், தர்ப்பணம், தேவ பூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா, விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.

· இவைகளில் முக்கியமானது இரண்டு யாத்திரை:- முதலாவது கங்கா ஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம் .இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.

· ஸனத் குமார ஸம்ஹிதை இதைப்பற்றிக் கூறுகிறது:-

· அதாவது, கங்கா தேவியின் இதய ரூபமும் பகவானுடைய முக ரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவ ரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லையென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். ‘மணிகர்ணிகா குண்டம்’ என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே ‘மணிகர்ணிகைத் துறை’ என்று கூறுகிறோம்; அதைப் போலவே ‘தசாஸ்வமேத கட்டத்தில்’ தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற்கொப்பாகும் என்று கூறப்படுகிறது. ‘காலையில் பஞ்சகங்கா’ கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்’ ஸ்னானம் செய்வது மகத்துவம். அல்லது ‘காலையில் ‘தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் ‘மணிகர்ணிகா’ கட்டத்திலும் ஸ்னானம் செய்வது நல்லது. ‘மணிகர்ணிகா ஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரையென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்த யாத்திரை) என்றும் சொல்வார்கள் .கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை. காசீ தர்பணம்’ என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை, யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு, விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ரு தர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை, மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞான வாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச்சித்தமாகக் கூறப்படுகிறது. காசீ கண்டம் எண்பத்தி நாலாவது அத்யாயத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணை ஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னான மாத்திரத்திலேயே பாபச்சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான்.

· யாத்திரை விதி பஞ்ச முகத்தையுடைய சிவ பிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை – காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச்சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் ‘கேதார காட்’ – கௌரி குண்டத்தையும், ‘த்ரிலோசனா காட்’டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.

· ஆயதன யாத்திரை என்னவென்றால்:- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.

· நந்தி புராணத்தில் கூறியிருப்பது போல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.

· மூன்றாவது ஆயதன யாத்திரை பற்றி லிங்கபுராணம் கூறுகிறது. ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர், ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.

· நான்காவது யாத்திரையைப்பற்றியும், ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்க புராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர், மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.

· ஐந்தாவது ஆயதன யாத்திரை என்னவென்றால் க்ருத்திவாஸேஶ்வரர், மத்யமேஶ்வரர், ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும் காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி, வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.

· ஆனால் எப்போது ஶ்ரத்தை ஏற்படுகிறதோ அப்பொழுது உடனே யாத்திரை முடிப்பது நல்லது;

பகுதி 4 கயா ஸிரார்தம்

திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.

கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு மட்டும் இல்லை………….. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர், துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள், பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்ற போது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!

கிருதயுகத்தில், "கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால்,
""தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால் சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு யோசனையைக் கூறினார். "ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்கசொன்னர். பிரும்மாவும் திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். "இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை" என்றான்.

உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான்.

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட, ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது.

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். "தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான். அவன் 2 வரங்கள் கேட்டான்.

1. "முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்."

2. "இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம், அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும் கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும் உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்

ஆனால் கடந்த 3 யுகங்களிலும் மற்றும் இன்று வரை, அதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம் போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில் பிணம் / பிணங்கள் எரிவதும் தினமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார்

.நாங்கள் போன போது கூட 2 – 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு….அங்கு எதற்கும் தீட்டே இல்லை.

"கயை’ என்றும் "கயா’ என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. "இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..

ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும் . இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்த காலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள்.
தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர்.

"சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் மாமனாரான தசரதர். "உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?” என்று சீதை தயங்கினாள்.

"சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை” என்றார் தசரதர். சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும், "உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிது நேரத்தில் ஸ்ரீராம லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். "சீதா, சீக்கிரம் சமையல் செய்” என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன் "சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன் தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை” என்றார்.

"நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

உடனே ராமர், "சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?” என்று கேட்க, அக்ஷய வட ஆலமரம் தவிர மற்றவர்கள் ‘`நாங்கள் அறியோம்’ என்று சொல்லி விட்டன.

கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன.

ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்” என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. "ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்” என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார். ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு

1. "பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும்,

2. பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின் பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றும்,
இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும்

3. ‘கயா பிராமணர்கள்’ தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள் என்றும் " என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள்.

4. ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து , "யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி, யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் " என்று அருளினாள். மேலும், "கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் " என்றும் ஆசிர்வதித்தாள்.

இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறார்கள்.ஒரு கோஸ் பரப்பளவுள்ள தலம் கயா-ஸிர் என்றும், 2 1/2 கோஸ் வரை கயா என்றும், 5 கோஸ் வரை கயா க்ஷேத்ரம் என்றும் பிரசித்தி பெற்றது.

கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ளது என்பது ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ளது. கயா பீஹார் மாநிலத்தில் உள்ளது. விஷ்ணு பாதம் இங்கு முக்கிய மான கோயில். பல்குனி நதி அருகில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி இந்தி. கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற்றுவதற்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.

ராமாநுஜ காட், கர்நாடக பவன் ஆகியவை வசதியானவை கயாவில் பல்குனி நதிக்கரை, விஷ்ணு பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ்ணு பாதம் சமீபம்) ப்ரேத சீலா, உதயகிரி, அக்ஷய வடம் முதலான இடங்களில் பிண்டப் பிரதானம் செய்யும் வழக்கம் உண்டு. கயாவில் மேலும் சில இடங்களிலும் பிண்டப் பிரதானம் செய்கிறார்கள் ஜீவன் கடைத்தேற- முக்தியடைய அனுஷ்டானங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன அதில் கயா சிரர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

வட இந்தியர்கள் முதலில் கயாவின் அருகேயுள்ள ‘புன்புன் ‘ நதிக்கரையில் நீத்தார் கடன் முடித்து பின்னர் கயாவுக்கு வருகிறார்கள். கயாவில் எந்தக் காலத்திலும் பித்ரு-சிரார்த்த்ம பிண்டதானம் செய்யலாம் என்று கயா மகாத்மியம் விளம்புகிறது. வட இந்தியர்கள் சில விரதங்கள் அநுஷ்டித்த பின்னர் கயா யாத்திரை மேற்கொள்ளுகின்றனர். பல்குநீ நதி (பித்ரு தீர்த்தம்) கயாவின் கிழக்கே ஓடுகிறது.

இதில் மழை காலத்தில் மட்டுமே நீர் ஓடுகிறது. மற்ற காலங்களில் ஊற்றுப் பெருக்கால் இது உலகூட்டுகிறது. அருகே ‘நககூட்’ மலைக்குன்று இருக்கிறது. பல்குநீ நதியில் நீராடி நதிக்கரையில் தர்பணம், பிண்டப் ப்ரதானம் செய்துவிட்டு அருகில் உள்ள விஷ்ணு பாதம் கோயிலுக்குச் செல்கிறார்கள். அந்தக் கோயிலில் எட்டு கோண பீடத்தில் பகவான் விஷ்ணுவின் சரண சின்னம் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளது.

பித்ரு சிரார்த்தத்தின் அங்கமாக சர்வ பித்ருக்களுக்கும் தாயார் தகப்பனார் உட்பட பிண்டப் பிரதானம் அளிக்கிறார்கள். (108 பிண்டங்கள்) இரண்டாவது தினம் வருடாந்திர சிரார்த்தம் போன்று அன்ன சிரார்த்தம் செய்கிறார்கள். சிலர் தொடர்ந்து ஏழு தினங்கள் சிரார்த்தம அனுஷ்டிக்கிறார்கள். அன்ன சிரார்த்தின் கடைசி அங்கமாக பிண்டப் பிரதானம், அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அக்ஷய வடம் சென்று அங்கும் செய்கிறார் கள். கயாவில் நீத்தார் கடன் செய்வதால் பல தலைமுறையினர் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். வம்சம் விருத்தியடைவதோடு சமூகமும், தேசமும் விருத்தியடைகின்றன.

முக்கிய கோயில்கள் மற்றும் தீர்த்தக் கட்டங்கள்: பல்குநி நதி, அக்ஷய வடம், விஷ்ணு பாதம் தவிர பின்வரும் தலங்கள் தரிசிக்கப்பட வேண்டியவை.

(1) ஜகந்நாத மந்திர், லக்ஷ்மீ நாராயணர் (கதாதரர்) கோயில்,

(2) முண்டப்ருஷ்டா- விஷ்ணு பாதத்திற்குத் தென்திசையில் 12 கைகளுடன் அருள் பாலிக்கும் முண்டப்ருஷ்டா தேவி.

(3) ஆதி கயா இங்குள்ள ஒரு சிலையில் பிண்டதானம் செய்கிறார்கள். இங்கு பூமி மட்டத்திற்குக் கீழே பல மூர்த்தங்கள் உள்ளன.

(4) தௌத பாதம். இங்கும் பிண்டதானம் செய்கிறார்கள்.
(5) காக பலி: இங்கு ஒரு பழைமையான ஆலமரம் உள்ளது. இங்கு காக பலி, யம பலி ஆகிய சடங்குகள் செய்கிறார்கள். (6) பஸ்மகூட்- கோப்ரசார்:
கயையின் தெற்கு வாசலின் வைதரணி சரோவர் பக்கம் ஒரு சிறிய குன்றில் ஜனார்த்தனன் கோயில் உள்ளது. சற்று தூரத்தில் மங்களா தேவி கோயில் உள்ளது..

(7) மங்கள கௌரி கோயில்:
தெற்கு வாயிலின் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. சற்று மேலே சென்றால் அவிமுக்தேச்வரநாத் கோயில் உள்ளது. தனக்கு கொள்ளி போட, சிரார்த்தம் செய்ய சந்ததியில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த மூன்று பிண்டங்களை இங்கு அளிக்கிறார்கள்.

(8) காயத்ரி தேவி:
விஷ்ணு பாதம் கோயிலிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காயத்ரி காட் கட்டத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இதற்கு வடக்கில் அருள்மிகு லக்ஷ்மீ நாராயணர் கோயில் உள்ளது. இங்கு கயாதித்யன் என்று அழைக்கப்பட்டும் சதுர்புஜ சூரியன் மூர்த்தம் உள்ளது.

(9) ப்ரம்ம யோனி
புத்த கயா செல்லும் வழியில் கயையிலிருந்து 3 கி.மீ துரத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் ப்ரம்மாஜி கோயிலுக்குப் பகத்தில் குகை போன்ற இரு பாறைகளை உள்ளன. ‘ப்ரம்ம யோனி’, ‘மாத்ரு யோனி’ என்று அவற்றை அழைக்கிறார்கள். சிகரத்திற்குக் சற்றுக் கீழே அமைந்துள்ளது ப்ரம்ம குண்டம் புனித தீர்த்தம்.
தீர்த்தங்கள்

1. மேலே கூறிய ப்ரம்ம குண்டம் 2. சூரிய குண்ட். 3.சீதாகுண்ட் 4.உத்தரமானஸ் 5.ராம சிலா

6. பிரேத சிலா 7. வைதரணீ 8.ப்ரம்ம ஸரோவர் 9. இரண்டாவது காக பலி

10.கதாலோல் புஷ்கரணி. இங்கு பகவான் அசுரனைக் கொன்றபின்னர் ஆயுதமாகிய கதையை அங்கு வைத்ததாக ஐதிகம். அது கம்ப வடிவில் உள்ளது.

11 ஆகாச கங்கை இது ஹனுமானின் இருப்பிடம் அருகில் பாதாள கங்கையும் மேற்கில் கபில தாராவும் உள்ளன.

12. ஸரஸ்வதீ- ஸாவித்ரி குண்டம்; மேலும் கர்ம நாச புஷ்கரிணியும் உள்ளது.

13. ஸரஸ்வதி நதி கயாவிற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது. நதிக் கரையில் ஸரஸ்வதி தேவியின் கோயிலில் தரிசனம் செய்யலாம். இங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் மதங்க வாபி என்ற பெரிய கிணறு படிக்கட்டுகளுடன் உள்ளது.

14. தர்மாரண்யம். மதங்க வாபியிலிருந்து 3 1/2 கிலொ தொலைவில் இந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் பிண்டங்கள் இடப்படுகின்றன,

தர்மர் தன் தம்பி பீமசேனனுடன் தன்னுடைய தந்தைக்கு சிரார்த்தம் செய்ய இங்கு வந்த போது இங்கு தவம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. அவர்கள் இருவருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.

புத்தகயா: போத கயா:

கயாவிலிருந்து புத்தகயா 11 கிலோ தொலைவில் அமைந்துள்ள தலம். இங்கு அம்ர்ந்து புத்தர் ‘திவ்ய ஞானம்’ பெற்றதாக சரித்திரம் பேசுகின்றது. அன்றிருந்த போதி மரம் தற்போது இல்லை. வேறு சிறிய அரச மரம் வளர்த்துள்ளார்கள்.. அவர் அமர்ந்த கல் மேடை பொத்த- சிம்ஹாசனம்- என்று அழைக்கப் படுகிறது. இங்கு புத்த பகவானின் பெரிய கோயிலில் அவருடைய பிரம்மா ண்டமான மூர்த்தம் உள்ளது. புத்த கயாவிற்கு சற்று தூரத்தில் ‘பக்ரௌர்’ என்ற ப்ராசீனப் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் உள்ளது. பௌத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான தலமாக கயா அமைந்துள்ளது.

கயா-சிரார்த்த நன்மைகள்

இந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் செய்யவேண்டிய முக்கியமான கடமை, காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது.அவ்வாறு செல்லும் போது காசி–பிரயாகை–கயா ஆகிய மூன்று புண்ணிய ஸ்தலங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது.

தாய் தந்தையர் மற்றும் மூதாதையருக்கு உயிருடன் இருக்கும் போது பணிவிடை செய்து சேவை செய்ய வேண்டும். அவர்கள் உலகை விட்டுப் போன பின்னர் அவர்களுக்காக சாஸ்திரம் கூறியுள்ளபடி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.பித்ருக்களிடம் நாம் காட்டும் நன்றியிலும் அவர்களுக்கு செய்யும் கடமைகளிலும் சிரத்தை இருக்க வேண்டியது முக்கியம். இதனாலேயே இதனை சிராத்தம் என்று அழைக்கிறோம்.

மனித யக்ஞம்: மனிதனாகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவகாரியம் என்பவை.நம்முடன் வாழும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும். குறைந்தது ஒரு அதிதிக்கு உணவளிக்க வேண்டும், இது மனித யக்ஞம்.

பிரம்மயக்ஞம்: என்பது வேதம் ஓதுவதும் ஒதுவிப்பதுமே. இது மனித குல நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்யவேண்டியது.

பூத யக்ஞம் மனிதனாக இல்லாத மிருகங்கள் கூட அன்பைத் தெரிவித்து உணவு ஊட்டுவது பூத யக்ஞம்.

ஆக மனிதனாகப்பட்டவன் மனித யக்ஞம், பிரம்மயக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம் ஆகிய கடமைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.

எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்களுக்கு திருப்தி, போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற ச்வர்க்க வாசிகளான தேவர்கள், பிண்ட தானத்தால் திருப்தியைப்பெற இயலாத நரக வாசிகள், பித்ரு லோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப்பலர் திருப்தி அடைகின்றனர். அவர்களது திருப்தியின் பலனாக சிரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம்,வம்ச விருத்தி ஆரோக்யம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை இவைகளும் கிடைக்கின்றன.

வருட சிரார்த்தம் செய்யும்போது விசுவதேவர் இலையில் அமர்ந்திருப்பவருக்கு அன்னம் பரிமார செய்து பகவான் ஜனார்த்தனர் ஸ்ரீ ஹரி திருப்தி அடையட்டும் என்று பித்ரு தீர்த்த முறையில் தர்ப்பத்தில் விட்டு கயை சிரார்த்தம் அக்ஷய வடம் என்று கயை ஷேத்ரத்தை முமமுறை கய கய கய என்று ஸ்மரிக்கிறோம் .

அன்னையும் பிதாவும் இவ்வுலகை நீத்தபின் அவர்களிடம் நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வெளிப்படுதுதலே சிராத்தம். பெற்றோரை குறித்து சிரார்த்தம் செய்யும் பொது நமது முந்தைய மூன்று தலை முறைகளையும் நினைவுகூறுகிறோம் நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம் காரணம் கயாசுரன் பெற்ற வரம் தான்.

கயா பயணம், பிண்ட பிரதானம், பிண்டம் கொடுப்பதினால் மூதாதையருக்குப் பலன் உண்டா, இல்லையா?

பிண்ட பிரதானம் என்பது மூதாதையர்களுக்குக் கொடுக்கப்படும் உணவாகும். ஒவ்வொருவர், அவரது தந்தை மற்றும் தாய் வழியாக மூன்று தலைமுறையினரை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஏதோ மொழி மாறுவதால், எல்லாம் மாறி விடுகின்றன என்று நினைக்க வேண்டாம், உறவுகள் மாறுவதில்லை. இதைத்தவிர, மாமா-மாமி, உறவினர், குரு-குருவின் மனைவி, நண்பர் என்று எல்லோருடைய பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையில் எல்லோரையும் நினைத்துக் கொள் என்றுதான் மந்திரங்கள் சொல்கின்றன. இதில் எந்த வித்தியாசமும் பாராட்டப் படவில்லை. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒருவர் தன்னுடைய மூதாதையர்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும், அவர்களது பெயர்களை அறிந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் அவனுக்கு தன்னைப் பற்றிய நம்பிக்கை, தன்னம்பிக்கை, சுயமரியாதை முதலிய குணங்கள் வரும்.

பிண்டத்தில் உள்ளவை: பாரத பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகக் காரணிகளில் அரிசி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த உடலே பிண்டம் என்றழைக்கப் படுகிறது. நீர், நெல், அரிசி, வாழ்க்கை, பிறப்பு, இறப்பு இவையெல்லாம் பின்னிப்பிணைந்துள்ளது. “அக்ஷதை” என்பது உடையாத அரிசியால் ஆனது, அதனால் தான், அதனால் வாழ்த்துகிறோம். இவ்வாறு அரிசி பல விதங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால், அரிசியால் பிண்டம் சமைத்து, எள்ளையும் சேர்த்து படைக்கப்படுகிறது.

1. எள் 2. அன்னம் 3. ஜலம் 4. வெல்லம் 5. தயிர் 6. பால் 7. தேன் 8. நெய்

இவை எட்டும் சேர்த்துக் கலந்து பிண்டம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் விலையுயர்ந்தவை என்பது எதுவும் இல்லை. எல்லாமே எளிதாகக் கிடைக்கும் பொருள்களே. மூன்று பித்ருக்களுக்கு மூன்று என்ற வீதம் இவை தயாரிக்கப்படுகிறது. இவை பஞ்சபூதங்களுக்கே கொடுக்கப்படுகிறது. பிண்டத்தில் உள்ளது, அண்டத்தில் உள்ளது என்றெல்லாம் பேசினாலும், இதில் தான் அத்தகைய உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். இறப்பு-பிறப்பு, மறு ஜென்மம், பாவம்-புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் இவற்றை செய்கின்றனர், செய்து வருகின்றனர்.

மந்திரங்கள், கிரியைகள், செய்பவர்கள், செய்விப்பவர்கள்: பிண்டப் பிரதாணக் கிரியைகள் வேத மந்திரங்களுடன் செய்வதானால், கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என்றால், 6-8 மணி நேரம் ஆகும். மேலும் அந்தந்த வெந்த மந்திரங்கள் தெரிந்தவர்கள் இருக்க வேண்டும், செய்யும் முறைகளைத் தெரிந்திருப்பவர்கள் இருக்க வேண்டும். அத்தகையோர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், ஒழுங்காக செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆகையால், தெரிந்தவர்கள் இல்லையே என்றால், அதற்கு காரணம் நாம் தாம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். பணத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் ஆளில்லை என்ற நிலையுள்ளது. இருப்பவர்களை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்றால், அவை அந்த அளவில் தான் இருக்கும்.

1. ஆசமனம்.

2. குரு வந்தனம்.

3. பவித்ரதாரணம்.

4. பிரணாயாமம்.

5. சங்கல்பம்.

6. கலசார்ச்சனம்.

7. இஷ்ட தேவதா வந்தனம்.

8. பிராமண வரணம்.

9. பிராமண பிரதக்ஷணம்

10. பிராமண பாதப்ரக்ஷாளனம்.

11. பவித்ரதாரணம்.

12. பாகப்ரோக்ஷணம்.

13. தேவ பிராமணரின் ஆஸனாதி பூஜை.

14. பித்ரு ப்ராஹ்மணரின் ஆஸனாதி பூஜை.

15. பாணி ஹோமம்.

16. அன்னசுக்த படனம்.

17. த்யக்தம்

18. க்ஷேத்ர மூர்த்தி ஸ்மரணம்

19. தீர்த்த தானம் – பிராமண போஜனம்.

20. அபிச்ரவணசுக்தம் – உபசாரம்.

21. பிண்டதானம் (1,2,3)– பூஜை.

22. பிண்ட பூஜை.

23. திருப்தி ப்ரச்னம்.

24. விகிரம் – ஸவ்யம்

25. உச்சிஸ்ட பிண்டம்.

26. பிராம்மண போஜன பூர்த்தி – ஆசிர்வாதம்.

27. பிண்டங்களை எடுத்து வைத்தல்.

28. ஆவாஹித பித்ரு விஸர்ஜனம்

29. பிராமண பிரார்த்தனை – ஆசிர்வாதம்.

30. கூர்ச்ச விஸர்ஜனம்.

31. ஸமர்ப்பணம்.

32. சிரார்த்தாங்க தர்ப்பணம், பூரி பிராமண போஜனம்.

ஆகையால், இக்காலத்தில் ஒரு மணிநேரத்தில் முடித்து விடுகிறார்கள். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் காசுக்கு / கூட்டத்திற்கு ஏற்றப்படி செய்கிறார்கள். நிறைய பேர் வந்து விட்டால், எல்லோரையும் சேர்த்து உட்கார வைத்து செய்து முடித்து விடுகிறார்கள். விசயம் தெரியாதவர்களிடம் மந்திரங்களைக் குறைத்தும், சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். இங்கு செய்பவர்களையோ, செய்விப்பவர்களையோ குற்றம் கூறவில்லை. அவரவர்கள், தத்தம் விருப்பம், அவசரம் என்ற நிலைகளில் இருப்பதால், அதற்கேற்றப்படியே இவை நடக்கின்றன.

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं

இடம், பொருள், ஏவல், சுற்றுச்சூழல்கள்: முன்பெல்லாம் இத்தகைய கிரியைகள் நதிக்கரைகளில், காட்டுகளில் அல்லது நீர் நிலைகள் உள்ள இடங்களில் செய்வது வழக்கம். காசி-வாரணாஸி-பிரயாகை, கயா போன்ற இடங்களில் நீருக்குப் பஞ்சமில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட அவசர-அவசியங்களுக்காக. வசதிகளுக்காக, தேவைகளுக்காக, மடங்களிலேயோ, வேறு இடங்களிலேயோ செய்விக்கின்றனர். பிறகு வண்டியில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பிண்டங்களைப் போட்டு வந்து விடுகின்றனர். இதனால், குளிப்பதும் மாறி விடுகிறது. கயாவைப் பொறுத்த வரையில் பல்குனி நதியில் நீர் இருப்பது குறைவு, அதிலும் அந்நீர் சுத்தமாக இருக்காது. ஏனெனில், வருகின்ற எல்லோரும் அதில்தான் பிண்டங்களை இட வேண்டும், அந்நீரை எடுத்துக் குளிக்க வேண்டும் அல்லது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயம் வஷிஸ்டர், விஸ்வாமித்திரரை தான் செய்யும் சிராத்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டு தனக்கு 1008 காய்கறிகள் கொண்ட உணவை அளித்தால் வருவதாக கன்டிஷன் போட்டார். வஷிஸ்டர் திகைத்தாலும், அவரது மனைவி அருந்ததீ ஒப்புக்கொண்டார். அதன்படியே, விஸ்வாமித்திரர் வந்து விட்டார். அருந்ததீயும் சாப்பாட்டை பரிமாறினார். அதில், எட்டு வாழைக்காய், ஒரு பாகற்காய், ஒரு பிரண்டை மற்றும் ஒரு பலாக்காய்-பழம் என்று தான் இருந்தன. கோபத்துடன், விஸ்வாமித்திரர் “என்ன இது?”, என்ற கேட்டபோது, அருந்ததீ,

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं|
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते||
“காரவல்லி சதம் ப்ரோக்தம், வஜ்ரவல்லி சதத்ரயம்|பனஸ: அச்ட்சதம் ப்ரோக்தம், ச்ராத்தகாலே விதீயதே||”

என்று கணக்கு சொன்னாராம். அதாவது, பாகற்காய் = 100 காய்களுக்கு சமம்; பிரண்டை 300 காய்களுக்கு சமம்; பலா 600 காய்களுக்கு சமம்; 8 + 100 + 300 + 600 = 1008 என்று கணக்கு சொன்னாளாம். இது தமாஷுக்கா, உண்மைக்கா என்று ஆராய்ச்சி செய்தாலும், இடத்திற்கு ஏற்ப அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதனைக் காட்டுகிறது எனலாம். அது போலத்தான், இந்த கயா சிரார்த்தம் என்பனவெல்லாம்., அங்கு பிண்ட சிரார்த்தம் செய்வித்தனர்.

பிண்டங்கள்

1. அரச மரத்து அடியில்

2. அங்கு ஓடும் ஆறில்

3. விஷ்ணு பாதம் கோவிலில் பித்ருக்களுக்காக விடபட்டது.

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷய வடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.

கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

Top of Form

கீழ் கண்ட மந்திரங்களை அங்கிருந்த ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொன்னார். அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதே விட்டனர்… நிதானமாகப் படியுங்கள். நிச்சயமாக உங்கள் தாயை நினைத்து உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்….

இதில் 32 பிண்டங்கள் தாய்க்கும், 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.

தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், கருச்சுமந்த காலத்திலிருந்து, தன்னைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்காகப் பட்ட ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் மன்னிப்பு வேண்டி ஒவ்வொரு மனிதனும் கயாவில் பிண்டங்களை அர்ப்பணிக்கிறான்.

என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,…’ இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்து கொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தானாத் த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய

என்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்த பின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர் நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்றுக்க்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த மூன்றாவது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ரு பீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக — ஒரு பரிசு — என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம்
|

”ஏம்மா மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ” .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

6. ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்” என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
”நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த ஏழாவது பிண்டம்..\

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த எட்டாவது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9. ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது. நீ தான் இருந்தாயே, பார்த்து-பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச்சித்தமாக இந்த ஒன்பதாவது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ”கடிக்காதேடா..” . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக மன்னித்து இந்த பத்தாவது பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்த வேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.” காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், பதினொன்றாவதாக எடுத்துக்கொள்.’

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த பன்னிரண்டாவது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹா கோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு. ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யம லோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த பதிமூன்றாவது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட், பெரிய அதிகாரி, செல்வந்தன் — நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த பதினாலாவது பிண்டம் தான் அதற்கு பிரதியுபகாரமாக நன்றிக்கடனாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ”தன்னலமற்ற” தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த பதினைந்தாவது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த பதினாராவது பிண்டத்தை கடைசியாக ஏற்றுக்கொள் என் தாயே.

என்னை பெற்றெடுத்த தெய்வமே. என் தவறுகளை, மன்னித்து என்னை ஆசீர்வதி. நீ இருக்கும் போது உன் அருமை தெரியாமல் உன்னை உதாசீனம் செய்தேன், கடிந்து கொண்டேன் என் சில சமயங்களில் உன்னை அவமானப்படுதியும் உள்ளேன் எனது தவறுகளை உணர்ந்து உன்னிடம் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து மன்னிப்பு கோருகிறேன் அம்மா. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொன்னது போல் கல் மனதுடன் நான் நடந்து கொண்டேனே. நீ என்னை மன்னிக்காவிடில் எனக்கு வேறு எங்கும் மன்னிப்பே கிடையாது, அந்த ஆண்டவன் கூட என்னை மன்னிக்க மாட்டான் அம்மா. என்னை மன்னித்துவிடு அம்மா உன் பாதம் சரணடைந்தேன்

இத்தனை சிறப்பு வாய்ந்த அந்த கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்கின்ற சிராத்தம் ஆனது 101 குலத்தையும், அந்த மனிதன் சார்ந்த ஏழு கோத்திரக்காரர்களையும் கரையேற்றுகிறது என்றும் ஸ்மிருதி உரைக்கிறது. அதாவது, வருடந்தோறும் செய்து வரும் சிராத்தம் என்பதை அன்றாடம் நாம் சாப்பிடுகின்ற உணவு என்று வைத்துக்கொண்டால், கயா சிராத்தம் என்பது என்றோ ஒரு நாள் சாப்பிடுகின்ற விருந்து போஜனம் போல என்று சொல்லலாம்.
வாழ்நாளில் என்றோ ஒருநாள் விருந்து சாப்பிட்டு விட்டால் போதும், அன்றாடம் உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதுபோல, கயா சிராத்தம் ஒருமுறை செய்துவிட்டால் அடுத்து வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதும் அபத்தமே. இது முற்றிலும் தவறு மாத்திரமல்ல, இவ்வுலகை நீத்த பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறியவர்களாகவும் ஆகிவிடுவோம். வருடந்தோறும் சிராத்தம் செய்யத் தவறினால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

மஹா பூதாந்தரங்கஸ்தோ மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

(எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )"

Bottom of Form

விஷ்ணுவின் பாதம் பதிந்த அந்த ஸ்தலத்தில் சிராத்தம் செய்வதால் முன்னோர்களுக்கு குறைவில்லாத அளவிற்கு திருப்தி உண்டாகிறது. கயாசுரனின் பெயரால் அந்த ஸ்தலம் கயா என்றும், பிரம்ம தேவன் யக்ஞம் செய்த அந்த ஆலமரம் அக்ஷய வடம் என்றும் பெயர் பெற்றன. வட மொழியில் ‘வடம்’ என்றால் ஆலமரம் என்றும், அக்ஷயம் என்றால் குறை வில்லாத என்றும் பொருள்.

இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி காசியிலும் ,கடைசிப்பகுதி இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.

நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.

இதனைஅலகாபாத்தில்முண்டம் (முடிஎடுத்தல்) காசியில்தண்டம்(சுவாமியைதண்டனிடுதல்) கயாவில்பிண்டம் (பிண்டார்ப்பணம்செய்தல்) என்பார்கள்.

சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்குமாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்தவர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

1. தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

2. அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி

3. அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்

4. தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி.

5. தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்;
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்;

6. தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்

7. .ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

8. இந்த நான்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள், நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

9. நான்காவது பிண்டம் தர்ம பிண்டம் — தர்ம தேவதைக்கும் , பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது

.ஆதலால் முன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும் உத்தேசம் ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது. காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிகமும் தேவைபடலாம். அதிகம் தேவைபடுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர். ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயாவிலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின் வருமாறு:– சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்; ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்;

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்;

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்; கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள்; ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களில் உள்ளது.

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்; பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்கு கங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா; மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும்.

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணு பாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,
யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி , ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.

ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்; கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா, கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள், குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும்.

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:-தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.

பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்

.
மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும், குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர், காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாசி அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி–அங்கவஸ்திரம், விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும். அவரவர் மனைவியே சமையல் செய்யலாம். சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம், கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்துக்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,. இங்கு தான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்கிறது என்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது. இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம், ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும். கர்த்தா விடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்
பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.
பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.

மேற்கூறியபடி பிண்ட பிரதானம் செய்த பிறகு நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து பிராமணர்களுக்கு போஜனம், வஸ்த்ர தானம் செய்து உணவருந்தினோம். அங்கு சாஸ்த்ரிகளுக்கும், மற்ற அனைவர்க்கும் நன்றி கூறி மாலை 4.30 மணியளவில் காரில் காசிக்கு புறப்பட்டோம்.

……………………………………………………………………………………………………………………………………..

பகுதி 5 காசியில் கங்கா பூஜை, தம்பதி பூஜை

21.04.2019

காலையில் எழுந்துகாலைக்கடங்களை முடித்துக்கொண்டு கங்கையில் குளிக்க பிறப்பட்டோம். கங்கையில் நீராடி ஒரு சோம்பில் ஜலமெடுத்துக்கொண்டு சிவா மாதம் சென்றோம். அங்கு ரவி சாஸ்த்ரிகள் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். தம்பதி சமேதரை சங்கல்பம் செய்து கொண்டு முதலில் கங்கா பூஜையை தொடங்கினோம். மந்த்ரா விதிப்ப்ற்காரம் பூஜை செய்த பிறகு தம்பதீ பூஜை செய்ய தயாரானோம் . தம்பதி பூஜைக்காக வாங்கிய வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன. ஸங்கல்பம் செய்து காசி விஸ்வேஸ்வர அன்னபூரணி ஸ்வரூபமாய் ஆவாகனம் செய்து தம்பதி பூஜையை ஸிரத்தையுடன் முடித்து மங்கள திறவ்யங்கள், ஸம்பாவனை, கொடுத்து நமஸ்கரித்தோம். இத்துடன் காசியில் செய்ய வேண்டிய வைதீக கர்மாக்கள் காரியங்கள் சம்பூர்ணமானதாக சாஸ்த்ரிகள் கூறினார்.

அவருக்கும் திரு ரவி அவர்களுக்கும் நன்றி கூறி நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு புறப்பட்டோம்.

நாங்கள் மாலை ரயிலில் பதிவு செய்திருந்ததால் சிற்றுண்டி அருந்தி ஆதி துர்கையம்மன் கோயில் சென்றோம்.

18-ஆம் நூற்றாண்டில் வங்க தேச (தற்போதைய மேற்க்கு வங்காளம்) மகாராணி ஒருவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது பனாரஸ் ராஜ குடும்பத்தினரின் ஆளுமையின் கீழ் உள்ளது. கோயிலின் பல இடங்களில் பிரமாண்ட மணிகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன. கர்ப்பகிரகத்தில் இருக்கும் துர்க்கை அம்மனின் நாக்கு வெளியில் நீட்டிய படி காளி ரூபமாக காட்சியளிக்கிறாள். இருந்தபோதும் அந்தச் சிலை உக்கிரமாக இல்லை. செந்நிற ஆடை துர்கையம்மனுக்கு உடுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிலை சுயம்புவாக உருவானதென்று கூறுகிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

பிறகு மானஸ் மந்திர் , தூண்டி விநாயகர் , கௌடியம்மன் கோயில் சென்றோம் . காசிக்கு வந்து பட்டு புடவை வாங்காமல் எப்டி போவது? ஆகையால் ஈ ரிக்ஷா காரரிடம் நல்ல கடைக்கு கூட்டிசெல்ல பணிதோம் அவரும் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அழைத்து சென்றார். கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் அலசிய பிறகு சில புடவைகள் செலக்ட் பண்ணினார் எனது துணைவியாரும் எனது சகோதரனின் துணைவியாரும்.

பிறகு நாங்கள் தங்கும் ஓட்டலுக்கு வந்து உணவருந்தி சிரம பரிகாரம் செய்த பிறகு மாலையில் டெல்லி புறப்பட்டோம்.

காசியைப்பற்றி சில முக்கிய தகவல்கள்

🥀 அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் "அஸ்சங்கமேஸ்வரர்" எனப்படுகிறார்.

🥀 முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.

🥀 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

🥀 இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் *சூலடங்கேஸ்வரர்* என்ற சிவலிங்கம் உள்ளது.

🥀 இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள *ஆதிகேஸ்வரரை* வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள *பிந்துமாதவர்* மற்றும் *கங்கேஸ்வரரை* வணங்க வேண்டும்.

🥀 பஞ்ச தீர்த்தக் கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள *மணிகர்ணிகேஸ்வரர்* மற்றும் அம்பாளையும் வழிபட வேண்டும்.

🥀 காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

🥀 பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.

🥀 பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.

🥀 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.

🥀 சிவபெருமான் விரும்பி மகா மயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.

🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.

🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.

🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.

🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.

🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.

🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.

🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.

🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.

🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.

🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.

🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.

🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.

🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.

🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.

தீர்த்தக் கட்டங்கள்:

🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்.

காசி , கயா, பிரயாகை பயண குறிப்புகள் தங்களுக்கு உபயோக மாக இருக்கும் என நம்புகிறேன்

ஓம் நம் சிவாய

ஓம் சாந்தி

காசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்

பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் , பகுதி 4 கயா ஸிரார்த்தம் 

..பகுதி 3 காசியில் பித்ரு தர்ப்பணம் 
காலையில் குளித்து விட்டு ஹிரண்ய ஸிரார்த்தம் செய்ய ஆயத்தமானோம். ரவி சாஸ்த்ரிகள் சிவ மடத்தில் ஸிரார்தத்திற்கு உண்டான  சகல ஏற்பாட்டுடன் தயாராக இருந்தார். ஹிரண்ய ஸிரார்தம் முகவும் ஸிரத்தையாக செயத பிறகு ஹனுமான் காட் டீல் படகில்  ஏறினோம். படகில் நாங்கள் நால்வரும், ஸ்ரீ ரவி சாஸ்த்ரிகலௌம் கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது  17-17 பிண்டங்களாக 5 தனி தனியாக வைக்க சொன்னார். எனது துணைவியாரும், ஆனது சகோதரனின் துணைவியாரும் பிண்டம் பிடித்து வைக்க ஆரம்பித்தனர். சாஸ்த்ரிகள் மந்திர உச்சாடனத்துடன் பித்ரு பூஜையை ஆரம்பித்தார்.அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1;தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..ஹரித்வாரம், உத்திர சரோவரம், விஷ்ணு பாதம், பஞ்ச கங்கா மற்றும் மணிகர்ணிகா என்று ஐந்து இடங்களில் கங்கையில் பஞ்ச் தீர்த்த ஸிரார்த்தம் செய்து பிண்டங்களை பிரவாகம் செய்தோம். ஏனென்றால் காசியில் காகங்கள்  பிண்டங்களை உண்பதில்லை, கங்கையில் கரைத்தோ அல்லது பசு மாட்டிற்கு அளித்தோ தான் பிண்டமிட வேண்டும். பிண்டமிட்ட பிறகு மணிகர்ணிகா காட்டில் குளித்து சிவ மடம் திரும்பினோம் . அங்கு ஸிரார்த்த காரியங்களை முடித்து கொண்டு உணவருந்தினோம். மாலி மூன்று மணியளவில் கார் மூலம் கயாவிற்கு புறப்பட்டோம்.·           காசியாத்திரை விதி காசீ கண்டத்தில், காசியில் செய்யவேண்டிய அநேக யாத்திரைகளைக் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது. அந்நிய புராணங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. காசியின் விளம்பரப் புத்தகங்களிலும் இவைகளைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் முழுமையான யாத்திரைவிதி என்று கூற முடியாது. அதனால் யாத்ரிகர்களின் ஸௌகர்யத்திற்காகச் சுருக்கமாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. அதனால் யாத்திரையை விரும்புகிற ஜனங்கள் இதைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். அந்நிய ப்ரதேசங்களிலிருந்து வருகிறவர்களுக்கு காசி யாத்திரையைப் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களுக்கு வருகின்ற வழிகாட்டிகளும் படிப்பில்லாதவர்களாகவோ, விவரம் அறியாதவர்களாகவோ பணத்திற்கு ஆசைப்பட்டவர்களாகவோ இருக்கலாம். அதனால் எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமென்றே இந்த யாத்திரைச் சுருக்கம் எழுதப்பட்டிருக்கிறது.·           காசீ கண்டம் கூறுகிறது:-·           காசியில் ஒருநாள் கூட யாத்திரையில்லாமல் கழிக்காதே என்றும் அப்படிக் கழித்தால்,அவர்களுடைய பூர்வ புருஷர்கள் வருந்துகிறார்களென்றும் காசீகண்டம் கூறுகிறது. அந்நிய ப்ரதேசங்களிலிருந்து காசீயாத்திரைக்குப் புறப்படும் முன்னால், விதிப்ப்ரகாரம் யாத்திரை செய்யவேண்டுமென்றால், தங்கள் வீடுகளில் கணேசாதி பூஜைகளை முடித்துக் கொண்டு, ஹவிஸ்,நெய் இவைகளினால் ஸ்ராத்தம் செய்து, ஸ்ராத்தசேஷமான நெய்யை ஆசமனம் பண்ணிவிட்டு,தன்னுடைய கிராமத்தைவிட்டுப் புறப்படவேண்டும். பிறகு காசியை அடைந்து உபவாஸம்,முண்டனம், ஸ்நானம், ஸ்ராத்தம், தானம் இவைகளை முடித்துக்கொண்டு, தீர்த்த    யாத்திரையைத் தொடங்க வேண்டும். யாத்திரைக்கு வாஹனங்களோ, வண்டியோ, குடையோ,செருப்போ, உபயோகப்படுத்தக் கூடாது. ஸ்த்ரீகளுக்கு முண்டனம் விதிவிலக்கு. தலீமுடியில் மூன்றங்குலம் முன்வகிட்டின் பக்கத்திலிருந்து கத்தரித்துவிட்டால் போதுமானது.·           காசி ரஹஸ்யம் கூறுகிறது:-·           இஷ்ட மித்ர பந்துக்களுக்கு தர்ப்பையைப் போட்டு முடிபோட்டு அதில் ஆவாஹனம் பண்ணி தீர்த்தாபிஷேகம் செய்வித்தால் அவர்களுக்கு எட்டில் ஒரு பங்கு பலன் (புண்ணியம்) கிடைக்கும். தனக்கு வரசௌகரியப்படாதவர்கள் கர்மானுஷ்ட ப்ராம்மணனான ஒருவரைக் காசியில் வசிப்பதற்காகப் பொருளுதவி செய்தால் அதைவிடப் புண்ணியம் ஸித்திக்கும். காசியில் வாஸம் செய்பவர்களைவிட அங்கு வசிப்பதற்காக அனுப்பியவர் அவருக்குக் கோடிப் புண்ணியம் அதிகமாகக் கிடைக்கிறது.காசியில் வாஸம் செய்கிறவன், தான் மாத்திரம் கடைத்தேறுகிறான்.ஆனால் அவனால் காசியில் வஸிக்க நேர்ந்தவர்கள் தாங்களும் கடைத்தேறித் தங்களுக்கு உதவினவனையும் கரையேற்றுகிறார்கள். இதனால் உதவினவனுக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. இது யாத்திரை விஷயத்திலும் ஒக்கும். காசிகங்கையில் உள்ள மண்ணை அந்நிய இடங்களுக்கு எடுத்துக்கொண்டு போகக் கூடாது. காசியின் மண்ணை வெளியில் எடுத்துக்கொண்டு போக விரும்புகிறவன் (ரௌரவாதி) நரகில் வீழ்கிறான். இதைப்பற்றி ‘விஷ்ணு தர்மோத்தர’ புராணம் ‘சௌபரி ஸம்ஹிதை’ இவைகளில் கூறப்பட்டிருக்கின்றன.·           யாத்ரிகர்கள் தினந்தோறும் நித்ய கர்மங்களை முடித்துக்கொண்டே யாத்திரைக்குச் செல்ல வேண்டும். யாத்திரை செய்யும் பொழுது இஷ்டதேவதையை மனதில் நினைத்துக் கொண்டு (தியானித்து) மௌனமாகச் செல்ல வேண்டும் அல்லது கூட்டமாகச் செல்ல நேர்ந்தால் ‘ஹரஹரமஹாதேவ சம்போ, காசீ விஸ்வநாத! கங்கே! என்று கோஷித்துக் கொண்டு செல்ல வேண்டும்.   யாத்திரை விதி ஏனென்றால் கோஷ்டியுடன் செல்லும் போது, பேசாமல் செல்ல முடியாது; அதனால் மந்த்ரம் மாதிரி இந்த பஜனையை உச்சரித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது காசி வழக்கம்.·           யாத்திரையில் எங்கெங்கு ஸ்னானம், ஆசமனம், தர்ப்பணம், தேவபூஜை, தானம் இவைகளை விதித்திருக்கிறதோ அவைகளைத் தங்கள் சக்திக்கு உகந்தவாறு செய்ய வேண்டும். கங்கா,விஸ்வநாதர் இவர்களுடைய யாத்திரையைப் ப்ரதி தினமும் செய்ய வேண்டும். யாத்திரையென்றால் தவறாமல் சென்று தரிசனம் செய்வதேயாகும்.·           இவைகளில் முக்கியமானது இரண்டு யாத்திரை:- முதலாவது கங்காஸ்னானம்; இரண்டாவது விஸ்வநாதர் தரிசனம்.இதை நித்ய கர்மா என்றே கூறலாம். ப்ரதி தினமும் மணிகர்ணிகையில் சென்று ஸ்னானம் செய்ய வேண்டும்; ப்ரதி தினமும், பூ, பழம், ஜலம், வில்வபத்ரம் இவைகளினால் விஸ்வநாதரைப் பூஜிக்கவேண்டும்.·           ஸனத் குமார ஸம்ஹிதை இதைப்பற்றிக் கூறுகிறது:-·           அதாவது, கங்காதேவியின் இதய ரூபமும் பகவானுடைய முகரூபமான மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்பவன் சிவரூபமாகவே! ஆகிறான். அவனுக்குப் பிறகு ஜன்மம் இல்லீ யென்று பார்வதிக்கு சிவபிரான் கூறுகிறார். ‘மணிகர்ணிகா குண்டம்’ என்பது கங்கையின் மேற்குக் கரையில் இருக்கிறது. அதிலிருந்து ஜலம் ப்ரம்மநாளத்திலிருந்து உருகி, கங்கையில் கலக்கிறது. அதையே ‘மணிகர்ணிகைத் துறை’ என்று கூறுகிறோம்; அதைப் போலவே ‘தசாஸ்வமேத கட்டத்தில்’ தர்மஹ்ரதா என்ற ஸரஸ்ஸின் தீர்த்தமும் கங்கையில் கலக்கிறது. அவைகளிரண்டும் மறைந்திருப்பதால் கங்காஸ்னானமே இவைகளில் ஸ்னானம் செய்வதற் கொப்பாகும் என்று கூறப்படுகிறது. ‘காலீயில் பஞ்சகங்கா’ கட்டத்திலும் மத்யான்னம் மணிகர்ணிகையிலும்’ ஸ்னானம் செய்வது மகத்வடைந்தது. அல்லது காலீயில் ‘தசாஸ்வமேத கட்டத்திலும் மத்யானனம் ‘மணிகர்ணிகா’ கட்டத்திலும் ஸ்னானம் செய்வது நல்லது. ‘மணிகர்ணிகாஸ்நாநத்தை ஒரு தீர்த்த யாத்திரை யென்றும், பஞ்ச கங்கையிலும், மணிகர்ணிகையிலும் ஸ்னானம் செய்வதை – இரு தீர்த்தயாத்திரையென்றும், பஞ்சகங்கா, தசாஸ்வமேதம், மணிகர்ணிகை இம்மூன்றிலும் ஸ்னானம் செய்வது மூன்று தீர்த்த யாத்திரை (த்ரிதீர்த்தயாத்திரை) என்றும் சொல்வார்கள்.கங்கையின் தீர்த்த கட்டங்களிலேயே இம்மூன்றும் மிக முக்யத்வம் வாய்ந்தவை.·           ‘காசீ தர்பணம்’ என்னும் க்ரந்தம் நான்கு தீர்த்த யாத்திரையைப்பற்றிச் சொல்கிறது. கங்கை,யமுனை, ஸரஸ்வதீ அல்லது நர்மதை இவைகள் கலந்த புண்யமயமான த்ரிலோசனா காட்டில் (ஞ்டச்ணா) இருக்கும் பிப்பிலா தீர்த்தத்தில் க்ருஹ்ய சூத்திரத்தைச் சொல்லிக் கொண்டு,விதிப்படிக்கு ஸ்னானம் செய்து பித்ருதர்ப்பணங்களை முடித்துக் கொண்டு, பஞ்ச கங்கை,மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து, அதன் பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஸ்வநாதரைப் பூஜிக்க வேண்டும். இந்த யாத்திரை பாபங்களைச் சுத்தம் செய்யும் ப்ராயச் சித்தமாகக் கூறப்படுகிறது. காசீகண்டம் எண்பத்திநாலாவது அத்யாயத்தில் பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் ஆன சரீர சுத்தியின் பொருட்டு, பஞ்சதீர்த்த யாத்திரை என்று கூறப்படுகிறது. ஸமஸ்த தீர்த்தங்களிலும் அஸி ஸங்கமமும் எல்லா தீர்த்தங்களினால் ஸேவிக்கப்படுவது – (தசாஶ்வமேதமும்) ஆகும். வருணைஸங்கமத்து ஆதிகேசவருக்குப் பக்கத்தில் பாதோதகதீர்த்தம் இருக்கிறது. ஸ்னானமாத்திரத்திலேயே பாபச் சுமைகளை நீக்கி பவித்திரமாக்கும் பஞ்சநதீ தீர்த்தம் இருக்கிறது. இந்த நான்கு தீர்த்தங்களிலும் மிகவும் உத்தமமானது மணிகர்ணிகா தீர்த்தம். இது மனம், வாக்கு காயங்களை சுத்தப்படுத்துகிறது. ஒருவன் இந்த ஐந்து தீர்த்தங்களிலும் ஸ்னானம் செய்தால் பிறகு பஞ்ச பூதங்களின் சேர்க்கையினாலான சரீரம் எடுக்க மாட்டான்.·            யாத்திரை விதி பஞ்சமுகத்தையுடைய சிவபிரானாகவே ஆவான். இந்த பஞ்சகங்கா யாத்திரை – காசியில் மிகவும் உத்தமம். பர்வ காலங்களில் படகுகளில் ஏறிச் சென்று இந்த யாத்திரையை முடித்துக் கொள்கிறார்கள். இத்துடன் ‘கேதார காட்’ – கௌரி குண்டத்தையும், ‘த்ரிலோசனா காட்’ டிலுள்ள தப்பிலா தீர்த்தத்தையும் சேர்த்துக் கொண்டால் ஸப்த – தீர்த்த – யாத்திரை ஆகிறது.·           ஆயதன யாத்திரை என்னவென்றால்:- கங்கையில் ஏதாவது ஒரு துறையில் (காட்) ஸ்னானம் செய்வது, விஸ்வேஸ்வரரைப் பூஜிப்பது, இது ஒரு ஏகாயதன யாத்திரை.·           நந்தி புராணத்தில் கூறியிருப்பதுபோல, இரண்டாவது யாத்திரையின் விதி :- மணிகர்ணிகையில் ஸ்னானம் செய்து மணிகர்ணிகேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, பிறகு ஞானவாபியில் ஸ்னானம் செய்து விஶ்வநாதரை தரிசனம் செய்து, பூஜிப்பது; இது இரண்டாவது யாத்திரை; இந்த யாத்திரை ப்ரம்ம ஸ்ரூபத்தையளிக்கிறது.·           மூன்றாவது ஆயதன யாத்திரை பற்றி லிங்கபுராணம் கூறுகிறது. ஹே! தேவி:- அவிமுக்தேஸ்வரர்,ஸீவர்லீனேஸ்வரர், மத்யமேஸ்வரர், இவர்களைத் தரிசித்துப் பாபத்தைப் போக்கிக் கொள்வது மூன்றாவது யாத்திரையாகும்.·           நான்காவது யாத்திரையைப்பற்றியும், ஐந்தாவது யாத்திரையைப் பற்றியும் கூட லிங்கபுராணத்திலும் கூறப்படுகிறது. அதாவது øஶலேச்வரர், ஸங்கமேச்வரர், ஸுவர்லீனேச்வரர்,மத்யமேச்வரர் இந்த நான்கு லிங்கங்களையும் தர்சித்தால் ஒருவன் துக்க ஸாகரமான ஸம்ஸாரத்தில் பிறக்க மாட்டான்.·           ஐந்தாவது ஆயதன யாத்திரை என்னவென்றால் க்ருத்திவாஸேஶ்வரர், மத்யமேஶ்வரர்,ஓங்காரேஶ்வரர், கபர்தீஶ்வரர், விஶ்வேஶ்வரர் இவர்களைத்தரிசிப்பது உத்தமமான பஞ்சாயதன யாத்திரையென்று அறிய வேண்டும். இவர்களோடு கேதாரேஶ்வரரையும், த்ரிலோசனரையும்   காசீ காண்டம் சேர்த்துக் கொண்டால் ஸப்தாயதன யாத்திரையாகும். அநேகம் யாத்திரைகளுக்கு திதி,வாரம், நக்ஷத்ரம் இவைகளின் கணக்கு உண்டு; இவைகளைப் பின்னால் கூறுவோம்.·           ஆனால் எப்போது ஶ்ரத்தை ஏற்படுகிறதோ அப்பொழுது உடனே யாத்திரை முடிப்பது நல்லது;பகுதி 4 கயா ஸிரார்த்தம் 

கயா சிரார்த்தம்லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யமுன மத்யமாம்|
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||
திரிஸ்தலீம் என்று சொல்லப்படுவது ப்ரயாகை, காசி, கயா ஆகிய தலங்கள்.கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறார்கள்.ஒரு கோஸ் பரப்பளவுள்ள தலம் கயா-ஸிர் என்றும், 2 1/2 கோஸ் வரை கயா என்றும், 5 கோஸ் வரை கயா க்ஷேத்ரம் என்றும் பிரசித்தி பெற்றது.கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ளது என்பது ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ளது. கயா பீஹார் மாநிலத்தில் உள்ளது. விஷ்ணு பாதம் இங்கு முக்கிய மான கோயில். பல்குனி நதி அருகில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி இந்தி. கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற்றுவதற்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். கயையில் பிண்ட தானம் செய்த பிறகு மாதா பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம் (வருடாந்திர நினைவு நாள் செய்யவேண்டியதில்லை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. இது சரியன்று. ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித்ருக்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் பெற்றுக்கொண்டு நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கிறது.கயா க்ஷேத்ரம் பாரத வர்ஷத்தின் மகிமை வாய்ந்த முக்கியமான  பித்ரு தீர்த்தம். கயை சென்று அங்கு பித்ரு சிரார்த்தம் செய்தால் பித்ருக்கள் மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அங்கு நம் பித்ருக்களுக்கு  மட்டும் இல்லை………….. தாய், தந்தை, உறவினர், வம்சத்தில் நற்கதி பெறாதவர்,துர்மரணம் எய்தவர், தனிஷ்டா பஞ்சமி இன் போது இறந்தவர்கள் , விபத்தில் இறந்தவர்கள்,  பல் முளைத்திடாத சிசுக்கள், வன விலங்குகளால் மரணமுற்றவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள்,பசி- தாகம் இவற்றால் மரித்தவர்கள், நண்பர்கள், வேலையாட்கள், வளர்ப்பு பிராணிகள், இன்னலுற்ற போது உதவியோர், நிழல் கொடுத்த மரங்கள், வழி காட்டியவர்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மொத்தத்தில் யார் வேண்டுமானாலும், இறந்த எவருக்காகவும் 
ஸ்ரார்தம் /திவசம் செய்ய ஏதுவான ஒரே தலம் கயா மட்டுமே!
இந்த ஊருக்கு இந்த பேர் வந்ததற்கு ஒரு கதையே இருக்கு. நாம் கட்டும் வீட்டுக்கு ஒரு பேர் வெச்சாலே அதுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கும் தானே?   
கிருதயுகத்தில், “கயாசுரன்’ என்றொருவன் இருந்தான். பிரும்மாவின் மானஸ புத்திரன் அவன். மிகப் பிரம்மாண்டமான உடலைப் பெற்றிருந்தான் கயன். இதுவரை எவரும் கேட்டிராத வரமொன்றை வேண்டித் தவமிருந்தான் அந்த அசுரன். அது என்ன வரம் என்றால், 
“”தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், வானவர், சாதாரண மானிடர்கள் ஆகிய அனைவரைக் காட்டிலும் எனது உடல் புனிதமாக வேண்டும். என்னைத் தொடுபவர்கள் அக்கணமே புனிதம் பெற வேண்டும்” என்று திருமாலிடம் வரம் கேட்டான் கயாசுரன். அந்த வரமும் பெற்றுவிட்டான். இதனால் என்ன ஆச்சு என்றால், பாவிகளும் தீயவர்களும் அவனைத்தொட்டு புனிதமடைந்து சொர்க்கம் சென்றார்கள். இதனால்  சொர்க்கத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. யம தருமனுக்கே வேலை இல்லாது போகுமோ என்ற நிலை! நரகம் என்ற சொல்லுக்கே இடமில்லாது போனது. சிருஷ்டியின் நியதியே குளறும்படி ஆகிவிடுமோ என்ற பயம், விண்ணவர்களுக்கு ஏற்பட்டது. எனவே, தேவர்கள் கூடி, வரம் தந்த மகாவிஷ்ணுவிடமே சென்றனர். விண்ணையும் மண்ணையும் தனது திருவடியால் அளந்த ஆற்றலுடைய பரந்தாமன், ஓரு  யோசனையைக் கூறினார். “ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தப்போகிறோம். ஏழுலகிலும் மிகவும் புனிதமான இடம் அதற்குத் தேவை! அந்தப் புனிதமான இடம் உனது உடல்தான்! அதனைத் தருவாயா?” என்று கேட்கசொன்னர். பிரும்மாவும்  திருமால் தந்த ஆலோசனைப்படி அசுரனிடம் கேட்டார். இதைக்கேட்டதும் கயாசுரன் மெய்மறந்து போனான். “இதைவிட எனக்குப் பெரிய பெருமை எப்படிக் கிட்டும்? தந்தேன் எனது உடலை” என்றான்.
உடனே, கயாசுரன் வடக்கே தலை வைத்துப் படுத்திட, அவனது உடல் மீது பிரம்மாதி தேவர்கள் வேள்வியைத் துவங்கினர். அவனிடம் அசையாமல் படுக்கும்படி வேண்டிக்கொண்டனர். வேள்வி உச்சக் கட்டத்தை எட்டும்போது, அந்த சூட்டினால் அசுரன் அசைந்தான். 

பிரம்ம தேவனின் ஆணைக்கேற்ப கயாசுரன் தலை மீது ஒரு கல்லை வைத்தான் யம தருமன். அப்போதும் அசுரன் உடல் அசைவது நிற்கவில்லை. அனைத்துத் தேவர்களின் முயற்சியும் பயனற்றுப்போக, மகாவிஷ்ணு கதாயுததாரியாக தனது வலது பாதத்தால் அசுரனின் மார்பை அழுத்திட,ஆட்டம் நின்றது; வேள்வியும் நிறைவு பெற்றது. 

அசுரனின் தியாகத்தால் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்த பெருமாள் கயாசுரனைப் பார்த்து, “உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்றார். “தனக்கு முக்தி வேண்டும் என்றுதான் கயாசூரன் வேண்டுவான் என்று  அனைவரும் எண்ணினர். ஆனால் கயாசுரனோ அத்தனைப் பேரையும் திகைக்க வைத்தான். அவன் 2 வரங்கள் கேட்டான். 
1. “முப்பத்து முக்கோடி தேவர்களும், சூரிய- சந்திர- நட்சத்திரங்கள் அனைவரும் இப்பூவுலகம் இருக்கும் வரை உருவமாகவோ, அருவமாகவோ, இங்கேயே என் உடல் கிடந்த இடத்தில், உமது பாதம் பதிந்த இடத்தில் உறைய வேண்டும்.”
2. “இங்கு வருகை தரும் மாந்தர்கள், உங்கள் பாதம் ஏற்படுத்திய தடத்தில் தம் முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து நீத்தார் கடன் நிறைவேற்றும்போது, அவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க அருள வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டினான் கயாசுரன். அவன் கேட்ட அரிய வரம்,அனைவரையும் மெய் சிலிர்க்கச் செய்தது.

3. முன்றாவதாக பெருமாளே அவனுக்கு அவன் ராக்ஷசன் என்பதால், அங்கு தரும் பிண்டங்கள் மட்டும் அவனுக்கு போறாது என்பதால் கண்டிப்பாக தினமும் பிணங்கள் வந்து எரிந்து அவனுக்கு நரமாமிசமும் தினமும்  கிடைக்கும் என்று அருளினார். ஆனால் அவ்வாறு ஒருநாள் இல்லாமல் போனாலும் அந்த அசுரனுக்கு மீண்டும்  உயிர் தர வேண்டும் என்று அவன் வேண்டினானாம். அதற்கும் பெருமாள் சம்மதித்தாராம்
ஆனால் கடந்த யுகங்களிலும் மற்றும் இன்று வரைஅதற்கு வாய்ப்பே இல்லாமல் தினமும் பிண்டம்  போடுவதும் கோவிலுக்குப்பின்னே உள்ள இடுகாட்டில்  பிணம் / பிணங்கள்  எரிவதும் தினமும்  நிகழ்ந்து கொண்டே தான் இருக்காம். வாத்தியார் சொன்னார்   

(ஆச்சரியம் தானே !….நாங்கள் போன போது கூட 2 – 3 பிணங்களை எடுத்துப் போனார்கள் இடுகாட்டுக்கு….அங்கு எதற்கும் தீட்டே இல்லையாம்   )
“கயை’ என்றும் “கயா’ என்றும் அழைக்கப்படும் அந்தப் புனிதத் தலமே, கயாசுரனின் உடலாகக் கருதப்படுகிறது. “இத்தலத்தில் 48 இடங்களில் நீத்தார் கடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று தல புராணம் உரைக்கிறது. ஆனால், தற்போது பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் (அழியாத ஆலமரம்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே திதி கொடுக்கிறார்கள்..
ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்த தினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும் . இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்த காலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 
தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். 

“சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்” என்றார் மாமனாரான தசரதர். “உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?” என்று சீதை தயங்கினாள். 
“சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை”என்றார் தசரதர். சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும்,”உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிது நேரத்தில் ஸ்ரீராம  லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர். “சீதா, சீக்கிரம் சமையல் செய்” என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள்.  ராமர் திகைப்புடன் “சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன் தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை” என்றார். 
“நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிராம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்” என்றாள். 
உடனே ராமர், “சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?” என்று கேட்க, அக்ஷய வட ஆலமரம் தவிர மற்றவர்கள் ‘`நாங்கள் அறியோம்’ என்று சொல்லி விட்டன. 
கடவுளான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன. 
ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு “சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்” என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. “ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்” என்றது அசரீரி. அதன் பின் ராமர் சமாதானமானார்.  ஆனால் கோபமே வராத சீதா அந்த சமயம் கோபப்பட்டு 
“பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும், பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின் பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றும், 
இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும்’கயா பிராமணர்கள்’ தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள் என்றும் ” என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள். ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து , “யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி, யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் ” என்று அருளினாள். மேலும், “கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் ” என்றும் ஆசிர்வதித்தாள். இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.கயையில் 64 வகையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்கிறார்கள்.ஒரு கோஸ் பரப்பளவுள்ள தலம் கயா-ஸிர் என்றும், 2 1/2 கோஸ் வரை கயா என்றும், 5 கோஸ் வரை கயா க்ஷேத்ரம் என்றும் பிரசித்தி பெற்றது.கயா க்ஷேத்திரத்தில் அனைத்துத் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ளது என்பது ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் மூன்று லோகங்களிலும் பிரசித்தமானது என்று மகாபாரத்த்தில் கூறப்பட்டுள்ளது. கயா பீஹார் மாநிலத்தில் உள்ளது. விஷ்ணு பாதம் இங்கு முக்கிய மான கோயில். பல்குனி நதி அருகில் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பேசப்படும் மொழி இந்தி. கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற்றுவதற்கும் அனைத்து வசதிகளும் உள்ளன.ராமாநுஜ காட், கர்நாடக பவன் ஆகியவை வசதியானவை கயாவில் பல்குனி நதிக்கரை, விஷ்ணு பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ்ணு பாதம் சமீபம்) ப்ரேத சீலா, உதயகிரி, அக்ஷய வடம் முதலான இடங்களில் பிண்டப் பிரதானம் செய்யும் வழக்கம் உண்டு. கயாவில் மேலும் சில இடங்களிலும் பிண்டப் பிரதானம் செய்கிறார்கள் ஜீவன் கடைத்தேற- முக்தியடைய அனுஷ்டானங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன அதில் கயா சிரர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.வட இந்தியர்கள் முதலில் கயாவின் அருகேயுள்ள ‘புன்புன் ‘ நதிக்கரையில் நீத்தார் கடன் முடித்து பின்னர் கயாவுக்கு வருகிறார்கள். கயாவில் எந்தக் காலத்திலும் பித்ரு-சிரார்த்த்ம பிண்டதானம் செய்யலாம் என்று கயா மகாத்மியம் விளம்புகிறது. வட இந்தியர்கள் சில விரதங்கள் அநுஷ்டித்த பின்னர் கயா யாத்திரை மேற்கொள்ளுகின்றனர். பல்குநீ நதி (பித்ரு தீர்த்தம்) கயாவின் கிழக்கே ஓடுகிறது.இதில் மழை காலத்தில் மட்டுமே நீர் ஓடுகிறது. மற்ற காலங்களில் ஊற்றுப் பெருக்கால் இது உலகூட்டுகிறது. அருகே ‘நககூட்’ மலைக்குன்று இருக்கிறது. பல்குநீ நதியில் நீராடி நதிக்கரையில் தர்பணம், பிண்டப் ப்ரதானம் செய்துவிட்டு அருகில் உள்ள விஷ்ணு பாதம் கோயிலுக்குச் செல்கிறார்கள். அந்தக் கோயிலில் எட்டு கோண பீடத்தில் பகவான் விஷ்ணுவின் சரண சின்னம் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளது.
பித்ரு சிரார்த்தத்தின் அங்கமாக சர்வ பித்ருக்களுக்கும் தாயார் தகப்பனார் உட்பட பிண்டப் பிரதானம் அளிக்கிறார்கள். (108 பிண்டங்கள்) இரண்டாவது தினம் வருடாந்திர சிரார்த்தம் போன்று அன்ன சிரார்த்தம் செய்கிறார்கள். சிலர் தொடர்ந்து ஏழு தினங்கள் சிரார்த்தம அனுஷ்டிக்கிறார்கள். அன்ன சிரார்த்தின் கடைசி அங்கமாக பிண்டப் பிரதானம், அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அக்ஷய வடம் சென்று அங்கும் செய்கிறார் கள். கயாவில் நீத்தார் கடன் செய்வதால் பல தலைமுறையினர் முக்தியடைகிறார்கள் என்பது ஐதீகம். வம்சம் விருத்தியடைவதோடு சமூகமும்,தேசமும் விருத்தியடைகின்றன.முக்கிய கோயில்கள் மற்றும் தீர்த்தக் கட்டங்கள்: பல்குநி நதி, அக்ஷய வடம், விஷ்ணு பாதம் தவிர பின்வரும் தலங்கள் தரிசிக்கப்பட வேண்டியவை.(1) ஜகந்நாத மந்திர், லக்ஷ்மீ நாராயணர் (கதாதரர்) கோயில்,(2) முண்டப்ருஷ்டா- விஷ்ணு பாதத்திற்குத் தென்திசையில் 12 கைகளுடன் அருள் பாலிக்கும் முண்டப்ருஷ்டா தேவி.(3) ஆதி கயா இங்குள்ள ஒரு சிலையில் பிண்டதானம் செய்கிறார்கள். இங்கு பூமி மட்டத்திற்குக் கீழே பல மூர்த்தங்கள் உள்ளன.(4) தௌத பாதம். இங்கும் பிண்டதானம் செய்கிறார்கள்.
(5) காக பலி: இங்கு ஒரு பழைமையான ஆலமரம் உள்ளது. இங்கு காக பலி, யம பலி ஆகிய சடங்குகள் செய்கிறார்கள்.(6) பஸ்மகூட்- கோப்ரசார்:
கயையின் தெற்கு வாசலின் வைதரணி சரோவர் பக்கம் ஒரு சிறிய குன்றில் ஜனார்த்தனன் கோயில் உள்ளது. சற்று தூரத்தில் மங்களா தேவி கோயில் உள்ளது..(7) மங்கள கௌரி கோயில்:
தெற்கு வாயிலின் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. சற்று மேலே சென்றால் அவிமுக்தேச்வரநாத் கோயில் உள்ளது. தனக்கு கொள்ளி போட, சிரார்த்தம் செய்ய சந்ததியில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த மூன்று பிண்டங்களை இங்கு அளிக்கிறார்கள்.(8) காயத்ரி தேவி:
விஷ்ணு பாதம் கோயிலிலிருந்து வடக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காயத்ரி காட் கட்டத்தில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இதற்கு வடக்கில் அருள்மிகு லக்ஷ்மீ நாராயணர் கோயில் உள்ளது. இங்கு கயாதித்யன் என்று அழைக்கப்பட்டும் சதுர்புஜ சூரியன் மூர்த்தம் உள்ளது.(9) ப்ரம்ம யோனி
புத்த கயா செல்லும் வழியில் கயையிலிருந்து 3 கி.மீ துரத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் ப்ரம்மாஜி கோயிலுக்குப் பகத்தில் குகை போன்ற இரு பாறைகளை உள்ளன. ‘ப்ரம்ம யோனி’, ‘மாத்ரு யோனி’என்று அவற்றை அழைக்கிறார்கள். சிகரத்திற்குக் சற்றுக் கீழே அமைந்துள்ளது ப்ரம்ம குண்டம் புனித தீர்த்தம்.
தீர்த்தங்கள்1. மேலே கூறிய ப்ரம்ம குண்டம்2. சூரிய குண்ட்.3.சீதாகுண்ட்4.உத்தரமானஸ்5.ராம சிலா6. பிரேத சிலா7. வைதரணீ8.ப்ரம்ம ஸரோவர்9. இரண்டாவது காக பலி10.கதாலோல் புஷ்கரணி. இங்கு பகவான் அசுரனைக் கொன்றபின்னர் ஆயுதமாகிய கதையை அங்கு வைத்த தாக ஐதிகம். அது கம்ப வடிவில் உள்ளது.11 ஆகாச கங்கை இது ஹனுமானின் இருப்பிடம் அருகில் பாதாள கங்கையும் மேற்கில் கபில தாராவும் உள்ளன.12. ஸரஸ்வதீ- ஸாவித்ரி குண்டம்; மேலும் கர்ம நாச புஷ்கரிணியும் உள்ளது.13. ஸரஸ்வதி நதி கயாவிற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவில் ஓடுகிறது. நதிக் கரையில் ஸரஸ்வதி தேவியின் கோயிலில் தரிசனம் செய்யலாம். இங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் மதங்க வாபி என்ற பெரிய கிணறு படிக்கட்டுகளுடன் உள்ளது.14. தர்மாரண்யம். மதங்க வாபியிலிருந்து 3 1/2 கிலொ தொலைவில் இந்த கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் பிண்டங்கள் இடப்படுகின்றன,தர்மர் தன் தம்பி பீமசேனனுடன் தன்னுடைய தந்தைக்கு சிரார்த்தம் செய்ய இங்கு வந்த போது இங்கு தவம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. அவர்கள் இருவருக்கும் இங்கு சிலைகள் உள்ளன.புத்தகயா: போத கயா:கயாவிலிருந்து புத்தகயா 11 கிலோ தொலைவில் அமைந்துள்ள தலம். இங்கு அம்ர்ந்து புத்தர் ‘திவ்ய ஞானம்’ பெற்றதாக சரித்திரம் பேசுகின்றது. அன்றிருந்த போதி மரம் தற்போது இல்லை. வேறு சிறிய அரச மரம் வளர்த்துள் ளார்கள்.. அவர் அமர்ந்த கல் மேடை பொத்த- சிம்ஹாசனம்- என்று அழைக்கப் படுகிறது. இங்கு புத்த பகவானின் பெரிய கோயிலில் அவருடைய பிரம்மா ண்டமான மூர்த்தம் உள்ளது. புத்த கயாவிற்கு சற்று தூரத்தில் ‘பக்ரௌர்’ என்ற ப்ராசீனப் பிரசித்தி பெற்ற புனிதத் தலம் உள்ளது. பௌத்தர்கள், ஜைனர்கள், இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான தலமாக கயா அமைந்துள்ளது.கயா-சிரார்த்த நன்மைகள்இந்து மதத்தை சார்ந்த ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் செய்யவேண்டிய முக்கியமான கடமை, காசிக்கு சென்று கங்கா ஸ்நானம் செய்வது.அவ்வாறு செல்லும்போது காசி–பிரயாகை–கயா ஆகிய மூன்று புண்ணிய ஸ்தலங்களிலும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது.தாய் தந்தையர் மற்றும் மூதாதையருக்கு உயிருடன் இருக்கும் போது பணிவிடை செய்து சேவை செய்ய வேண்டும். அவர்கள் உலகை விட்டுப் போன பின்னர் அவர்களுக்காக சாஸ்திரம் கூறியுள்ளபடி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும்.பித்ருக்களிடம் நாம் காட்டும் நன்றியிலும் அவர்களுக்கு செய்யும் கடமைகளிலும் சிரத்தை இருக்க வேண்டியது முக்கியம். இதனாலேயே இதனை சிராத்தம் என்று அழைக்கிறோம்.மனித யக்ஞம்:  மனிதனாகப் பிறந்த எல்லோரும் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ரு கடன், தேவகாரியம் என்பவை.நம்முடன் வாழும் மக்களுக்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும். குறைந்தது ஒரு அதிதிக்கு உணவளிக்க வேண்டும், இது மனித யக்ஞம்.பிரம்மயக்ஞம்: என்பது வேதம் ஓதுவதும் ஒதுவிப்பதுமே. இது மனித குல நன்மைக்காக அந்தணர்கள் மட்டும் செய்யவேண்டியது.பூத யக்ஞம் மனிதனாக இல்லாத மிருகங்கள் கூட அன்பைத் தெரிவித்து உணவு ஊட்டுவது பூத யக்ஞம்.ஆக மனிதனாகப்பட்டவன் மனிதயக்ஞம், பிரம்மயக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம் ஆகிய கடமைகளை கட்டாயம் செய்தாக வேண்டும்.எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்களுக்கு திருப்தி, போஜனம் எங்கு நடந்தாலும் திருப்தி அடைகின்ற ச்வர்க்கவாசிகளான தேவர்கள், பிண்டதானத்தால் திருப்தியைப்பெற இயலாத நரகவாசிகள், பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவர், காக்கைக்குப் பிண்டம் அளிப்பதால் நாம் அறிந்திராத பித்ருக்கள் எனப்பலர் திருப்தி அடைகின்றனர்.அவர்களது திருப்தியின் பலனாக சிரார்த்தம் செய்பவருக்கு நோயற்ற சந்ததி, செல்வம்,வம்சவிருத்தி ஆரோகியம், ஞானம், இம்மை, மறுமையில் மேன்மை இவைகளும் கிடைக்கின்றன.வருட சிரார்த்தம் செய்யும்போது விசுவதேவர் இலையில் அமர்ந்திருப்பவருக்கு அன்னம் பரிமார செய்து பகவான் ஜனார்த்தனர் ஸ்ரீ ஹரி திருப்தி அடையட்டும் என்று பித்ரு தீர்த்த முறையில் தர்ப்பத்தில் விட்டு கயை சிரார்த்தம் அஷ்யவடம் என்று கயை ஷேத்ரத்தை முமமுறை கய கய கய என்று ஸ்மரிக்கிறோம் .அன்னையும் பிதாவும் இவ்வுலகை நீத்தபின் அவர்களிடம் நாம் கொண்டுள்ள நன்றி உணர்வை வெளிப்படுதுதலே சிராத்தம். பெற்றோரை குறித்து சிரார்த்தம் செய்யும் பொது நமது முந்தைய மூன்று தலை முறைகளையும் நினைவு கூர்கிறோம் நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாரவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம் காரணம் கயாசுரன் பெற்ற வரம் தான்.கயா பயணம், பிண்ட பிரதானம், பிண்டம் கொடுப்பதினால் மூதாதையருக்குப் பலன் உண்டா,இல்லையா?வாரணாசி – தசஸ்வமேத காட்- சடங்குகளை செய்து வைக்கும் பண்டா பிண்ட பிரதானம் என்பது மூதாதையர்களுக்குக் கொடுக்கப்படும் உணவாகும். ஒவ்வொருவர், அவரது தந்தை மற்றும் தாய் வழியாக மூன்று தலைமுறையினரை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு ஏதோ மொழி மாறுவதால், எல்லாம் மாறி விடுகின்றன என்று நினைக்க வேண்டாம், உறவுகள் மாறுவதில்லை. இதைத்தவிர, மாமா-மாமி, உறவினர், குரு-குருவின் மனைவி, நண்பர் என்று எல்லோருடைய பெயர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையில் எல்லோரையும் நினைத்துக் கொள் என்றுதான் மந்திரங்கள் சொல்கின்றன. இதில் எந்த வித்தியாசமும் பாராட்டப் படவில்லை. இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒருவர் தன்னுடைய மூதாதையர்களை அறிந்து கொண்டிருக்க வேண்டும், அவர்களது பெயர்களை அறிந்திருக்க வேண்டும், அப்பொழுது தான் அவனுக்கு தன்னைப் பற்றிய நம்பிக்கை, தன்னம்பிக்கை, சுயமரியாதை முதலிய குணங்கள் வரும்.பிண்டத்தில் உள்ளவை: பாரத பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் நாகரிகக் காரணிகளில் அரிசி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த உடலே பிண்டம் என்றழைக்கப் படுகிறது. நீர், நெல், அரிசி,வாழ்க்கை, பிறப்பு, இறப்பு இவையெல்லாம் பின்னிப்பிணைந்துள்ளது. “அக்ஷதை” என்பது உடையாத அரிசியால் ஆனது, அதனால் தான், அதனால் வாழ்த்துகிறோம். இவ்வாறு அரிசி பலவிதங்களில் சம்பந்தப்பட்டிருப்பதால், அரிசியால் பிண்டம் சமைத்து, எள்ளையும் சேர்த்து படைக்கப்படுகிறது.

1.   எள் 2.   அன்னம் 3.   ஜலம் 4.   வெல்லம்5.   தயிர் 6.   பால் 7.   தேன் 8.   நெய்

இவை எட்டும் சேர்த்துக் கலந்து பிண்டம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் விலையுயர்ந்தவை என்பது எதுவும் இல்லை. எல்லாமே எளிதாகக் கிடைக்கும் பொருள்களே. மூன்று பித்ருக்களுக்கு மூன்று என்ற வீதம் இவை தயாரிக்கப்படுகிறது. இவை பஞ்சபூதங்களுக்கே கொடுக்கப்படுகிறது. பிண்டத்தில் உள்ளது,அண்டத்தில் உள்ளது என்றெல்லாம் பேசினாலும், இதில் தான் அத்தகைய உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம். இறப்பு-பிறப்பு, மறு ஜென்மம், பாவம்-புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ளவர்கள் இவற்றை செய்கின்றனர், செய்து வருகின்றனர்.மந்திரங்கள்கிரியைகள்செய்பவர்கள்செய்விப்பவர்கள்: பிண்டப் பிரதாணக் கிரியைகள் வேத மந்திரங்களுடன் செய்வதானால், கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் ஒழுங்காக செய்து முடிக்க வேண்டும் என்றால், 6-8 மணி நேரம் ஆகும். மேலும் அந்தந்த வெந்த மந்திரங்கள் தெரிந்தவர்கள் இருக்க வேண்டும், செய்யும் முறைகளைத் தெரிந்திருப்பவர்கள் இருக்க வேண்டும். அத்தகையோர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், ஒழுங்காக செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஆகையால், தெரிந்தவர்கள் இல்லையே என்றால், அதற்கு காரணம் நாம் தாம் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். பணத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தாலும் ஆளில்லை என்ற நிலையுள்ளது. இருப்பவர்களை வைத்து முடித்துக் கொள்ளலாம் என்றால், அவை அந்த அளவில் தான் இருக்கும்.

1.  ஆசமனம்.2.  குருவந்தனம்.3.  பவித்ரதாரணம்.4.  பிரணாயாமம்.5.  சங்கல்பம்.6.  கலசார்ச்சனம்.7.  இஷ்டதேவதா வந்தனம்.8.  பிராமண வரணம்.9.  பிராமண பிரதக்ஷணம்10. பிராமண பாதப்ரக்ஷாளனம்.11. பவித்ரதாரணம்.12. பாகப்ரோக்ஷணம்.13. தேவ பிராமணரின் ஆஸனாதி பூஜை.14.  பித்ரு ப்ராஹ்மணரின் ஆஸனாதி பூஜை.15. பாணி ஹோமம்.16. அன்னசுக்த படனம்.17. த்யக்தம்18. க்ஷேத்ர மூர்த்தி ஸ்மரணம்19. தீர்த்த தானம் – பிராமண போஜனம்.20. அபிச்ரவணசுக்தம் – உபசாரம்.21. பிண்டதானம் (1,2,3)–பூஜை.22. பிண்ட பூஜை.23. திருப்தி ப்ரச்னம்.24. விகிரம் – ஸவ்யம்25.  உச்சிஸ்ட பிண்டம்.26. பிராம்மண போஜன பூர்த்தி – ஆசிர்வாதம்.27. பிண்டங்களை எடுத்து வைத்தல்.28. ஆவாஹித பித்ரு விஸர்ஜனம்29. பிராமண பிரார்த்தனை – ஆசிர்வாதம்.30. கூர்ச்ச விஸர்ஜனம்.31. ஸமர்ப்பணம்.32. சிரார்த்தாங்க தர்ப்பணம், பூரி பிராமண போஜனம்.

ஆகையால், இக்காலத்தில் ஒரு மணிநேரத்தில் முடித்து விடுகிறார்கள். காசி, கயா, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் காசுக்கு / கூட்டத்திற்கு ஏற்றப்படி செய்கிறார்கள். நிறைய பேர் வந்து விட்டால்,எல்லோரையும் சேர்த்து உட்கார வைத்து செய்து முடித்து விடுகிறார்கள். விசயம் தெரியாதவர்களிடம் மந்திரங்களைக் குறைத்தும், சீக்கிரம் முடித்து விடுகிறார்கள். இங்கு செய்பவர்களையோ,செய்விப்பவர்களையோ குற்றம் கூறவில்லை. அவரவர்கள், தத்தம் விருப்பம், அவசரம் என்ற நிலைகளில் இருப்பதால், அதற்கேற்றப்படியே இவை நடக்கின்றன.कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयंஇடம்பொருள்ஏவல்சுற்றுச்சூழல்கள்: முன்பெல்லாம் இத்தகைய கிரியைகள் நதிக்கரைகளில்,காட்டுகளில் அல்லது நீர் நிலைகள் உள்ள இடங்களில் செய்வது வழக்கம். காசி-வாரணாஸி-பிரயாகை,கயா போன்ற இடங்களில் நீருக்குப் பஞ்சமில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட அவசர-அவசியங்களுக்காக. வசதிகளுக்காக, தேவைகளுக்காக, மடங்களிலேயோ, வேறு இடங்களிலேயோ செய்விக்கின்றனர். பிறகு வண்டியில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பிண்டங்களைப் போட்டு வந்து விடுகின்றனர். இதனால், குளிப்பதும் மாறிவிடுகிறது. கயாவைப் பிறுத்த வரையில் பல்கு நதியில் நீர் இருப்பது குறைவு, அதிலும் அந்நீர் சுத்தமாக இருக்காது. ஏனெனில், வருகின்ற எல்லோரும் அதில்தான் பிண்டங்களை இட வேண்டும், அந்நீரை எடுத்துக் குளிக்க வேண்டும் அல்லது தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயம் வசிஸ்டர், விஸ்வாமித்திரரை தான் செய்யும் சிராதத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டு தனக்கு 1008 காய்கறிகள் கொண்ட உணவை அளித்தால் வருவதாக கன்டிஷன் போட்டார். வசிஸ்டர் திகைத்தாலும், அவரது மனைவி அருந்ததீ ஒப்புக்கொண்டார். அதன்படியே, விஸ்வாமித்திரர் வந்து விட்டார். அருந்ததீயும் சாப்பாட்டை பரிமாறினார். அதில், எட்டு வாழைக்காய், ஒரு பாகற்காய், ஒரு பிரண்டை மற்றும் ஒரு பலக்காய்-பழம் என்று தான் இருந்தன. கோபத்துடன், விஸ்வாமித்திரர் “என்ன இது?”, என்ற கேட்டபோது, அருந்ததீ,

कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं|
पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते||
“காரவல்லி சதம் ப்ரோக்தம், வஜ்ரவல்லி சதத்ரயம்|பனஸ: அச்ட்சதம் ப்ரோக்தம்,ச்ராத்தகாலே விதீயதே||”

என்று கணக்கு சொன்னாராம். அதாவது, பாகற்காய் = 100 காய்களுக்கு சமம்; பிரண்டை 300 காய்களுக்கு சமம்; பலா 600 காய்களுக்கு சமம்; 8 + 100 + 300 + 600 = 1008 என்று கணக்கு சொன்னாளாம். இது தமாஷுக்கா, உண்மைக்கா என்று ஆராய்ச்சி செய்தாலும், இடத்திற்கு ஏற்ப அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதனைக் காட்டுகிறது எனலாம். அதுபோலத்தான், இந்த கயா சிரார்த்தம் என்பனவெல்லாம்., அங்கு பிண்ட சிரார்த்தம் செய்வித்தனர்.பிண்டங்கள்1.        அரசமரத்து அடியில்2.       அங்கு ஓடும் ஆறில்3.       விஷ்ணு பாதம் கோவிலில் பித்ருக்களுக்காக விடபட்டது.

விஷ்ணு பாதம்
 கீழ் கண்ட மந்திரங்களை 
அங்கிருந்த ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொன்னார்.

அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்… 

சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..♥♥♥♪♥♥♥

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம் 

பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். 

”கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 

கயை” என்ற ஊர் பீகாரில் இருக்கிறது. புத்தருக்கு ஞானம் கிடைத்த ஊரான ”புத்த கயா” இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஊராகும். இந்தக் கயை புனிதத் தலத்தில் இறந்த முன்னோர்களுக்கு பிண்டமளித்து நீத்தார் கடன் செய்வது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தப் பிண்டங்களை பல்குணி நதிக்கரையிலும், விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வடம் எனும் விழுதில்லா ஆலமரத்தின் அடியிலும் படைக்கிறார்கள். இங்கு நம் முன்னோர்களுக்கு மட்டுமல்ல; நண்பர்கள், (ஏன் நல்ல மனமிருந்தால் எதிரிகளுக்கும் கூட பிண்டம் வைக்கலாம்) உறவுகள், நாம் ப்புப் பிராணிகள், முகம் தெரியாதவர்கள், விபத்து போன்றவற்றில் மறைந்தவர்கள் என அனைவருக்கும் பிண்டம் வைக்கலாம். அக்ஷய வடத்தில் பிண்டம் வைப்பதோடு ”நீத்தார் வழிபாடு” கயையில் நிறைவடைகிறது. இதனால் நம் முன்னோர்கள் மகிழ்வதாகவும், மேலுலகம் செல்வதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் நம்பிக்கை.ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தானாத்
த்ரிபி : புத்ரஸ்ய புத்ராயஎன்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்த பின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர் நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.
இந்தப் பிண்டங்களில் பல்குனி நதியில் 17 பிண்டங்கள் வைத்து படைக்க வேண்டும். விஷ்ணு பாதத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். பிறகு இறுதியாக அக்ஷய வடத்தில் 64 பிண்டங்கள் படைக்க வேண்டும். அந்த 64 பிண்டங்களில் தாய்க்கு மட்டும் 16 பிண்டங்கள் உரித்தானவை. அந்த அளவுக்கு தாய்க்கு முக்கிய ஸ்தானம் அளிக்கப்படுகிறது. ஏன்?

நம்மைப் பத்து மாதம் சுமந்து, உதிரத்தைத் தாய்பாலாக்கி அளித்து, பெற்று வளர்த்து ஆளாக்குபவள் அன்னை. அந்த அன்னைக்கு இறந்த பின்னரும் காட்டும் நன்றிக் கடனே மேற்கண்ட 16 பிண்டப் பிரதானம். அதற்கென்று உள்ள மந்திரங்களைச் சொல்லி அந்தப் பிண்டத்தைப் படைக்கின்றனர். சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அந்த மந்திரத்தை  அதன் பொருளை பார்ப்போமா?
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே. 

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக — ஒரு பரிசு — என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன். 

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் |

”ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ” .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.”

6. ‘ பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்”என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?’

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9. ”தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம். 
.
10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ”கடிக்காதேடா..” . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

”வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.” காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.’

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா. 

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் — நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது. 

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ”தன்னலமற்ற”
தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே. 

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி,இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

மஹா பூதாந்தரங்கஸ்தோ மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ  தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )”

 கயா சிராத்தம் முக்கியத்துவம் பெறுவதற்கு புராணங்களில் பல கதைகள் உண்டு. கயாசுரன் என்ற ஒரு அசுரன் தேவ-அசுர யுத்தத்தில் தோல்வியடைந்து தனது முக்திக்கு வழிதேடினான். தனது உடம்பையே ஒரு ஸ்தலமாக்கிய அவனது வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மதேவர் அங்கே ஆலமரத்தினை உண்டாக்கி ஒரு யக்ஞம் மேற்கொண்டார். அந்த யக்ஞத்தால் திருப்தியுற்ற நாராயணன் தனது திருப்பாதத்தால் கயாசுரனுக்கு மோக்ஷத்தை அருளினார். 

விஷ்ணுவின் பாதம் பதிந்த அந்த ஸ்தலத்தில் சிராத்தம் செய்வதால் முன்னோர்களுக்கு குறைவில்லாத அளவிற்கு திருப்தி உண்டாகிறது. கயாசுரனின் பெயரால் அந்த ஸ்தலம் கயா என்றும்,பிரம்ம தேவன் யக்ஞம் செய்த அந்த ஆலமரம் அக்ஷய வடம் என்றும் பெயர் பெற்றன. வடமொழியில் ‘வடம்’ என்றால் ஆலமரம் என்றும், அக்ஷயம் என்றால் குறைவில்லாத என்றும் பொருள். 

பெரும்பாலானோரால் சொல்லப்படுகின்ற இன்னொரு கதையும் உண்டு. பெருமாள் தனது வாமன அவதாரத்தின் போது மஹாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டபோது தனது முதலாவது அடியால் பூமியை அளந்தார் என்று கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறு அவர் இந்த பூமியை அளக்க தனது முதல் அடியை வைத்த இடம் கயா என்றும் தனது பாதத்தினை அவர் அங்கு பதித்ததால் அது குறையின்றி வளர்ந்தது என்றும், அவர் பாதம் பதித்த அந்த இடமே விஷ்ணுபாதம் என்றழைக்கப்படுகின்ற கயா என்னும் புனிதத்தலம் என்றும் சொல்லப்படுகிறது. 

இத்தனை சிறப்பு வாய்ந்த அந்த கயா என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது சிராத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்கின்ற சிராத்தம் ஆனது 101குலத்தையும், அந்த மனிதன் சார்ந்த ஏழு கோத்திரக்காரர்களையும் கரையேற்றுகிறது என்றும் ஸ்மிருதி உரைக்கிறது. அதாவது, வருடந்தோறும் செய்து வரும் சிராத்தம் என்பதை அன்றாடம் நாம் சாப்பிடுகின்ற உணவு என்று வைத்துக்கொண்டால், கயா சிராத்தம் என்பது என்றோ ஒரு நாள் சாப்பிடுகின்ற விருந்து போஜனம் போல என்று சொல்லலாம். 

வாழ்நாளில் என்றோ ஒருநாள் விருந்து சாப்பிட்டு விட்டால் போதும், அன்றாடம் உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதுபோல, கயா சிராத்தம் ஒருமுறை செய்துவிட்டால் அடுத்து வருடந்தோறும் சிராத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதும் அபத்தமே. இது முற்றிலும் தவறு மாத்திரமல்ல, இவ்வுலகை நீத்த பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறியவர்களாகவும் ஆகிவிடுவோம். வருடந்தோறும் சிராத்தம் செய்யத் தவறினால் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

கயா யாத்திரை:–

சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்கு மாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்த வர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

தனது அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா; அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி; மாற்றாந்தாய்;
அன்னையின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா, அன்னையின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி,

அப்பாவின் சகோதரர்கள், சகோதரர்களின் மனைவிகள், புத்ரன்; புத்ரி; அப்பாவின் சகோதரிகள்;சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி,

அம்மாவின் சகோதரர்கள் ;சகோதரர்களின் மனைவிகள். பையன், பெண்; அம்மாவின் சகோதரிகள் ;சகோ தரிகளின் கணவர்கள், பையன்; பெண்; 

தனது சகோதரர்கள், ,சகோதரர்களின் மனைவிகள், பையன், பெண். தனது சகோதரிகள்; சகோதரிகளின் கணவர்கள்; புத்ரன்; புத்ரி. 

தனது மனைவி, பெண், பையன். தனது மாமனார், மாமியார்; 
தனது குரு; குரு பத்னி; சிஷ்யன்; யஜமானன்; சினேகிதன்; பணியாட்கள்; 

தனது வீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள், இஷ்ட ஜந்துக்கள்; தனது வம்சத்தில் தெரியாமல் விட்டுப்போன பித்ருக்கள்; இவர்களுக்கும் பிண்டம் தனிதனியே வைக்க வேண்டும்.

ராமேஸ்வரம், காசி, அலாஹா பாத்தில் 17 பிண்டங்கள் வைக்க வேண்டும். இது தனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா: அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி, அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா;அம்மாவின் அம்மா; பாட்டி; கொள்ளுபாட்டி; காருணீக பித்ருக்கள்; க்ஷேத்ர பிண்டம்-4.

இந்த நா ன்கில் மூன்று தனக்கு உதவியவர்கள்; துர் மரணம் அடைந்துள்ளோர்; வாரிசு இல்லாமல் பிண்டம் கிடைக்காதவர்கள், நரகத்தில் உழல்பவர்கள்; நமக்கு தெரிந்த, தெரியாத உறவினர்கள்,நரகங்களில் கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காக இடப்படுகிறது.

நாங்காவது பிண்டம் தர்ம பிண்டம் — தர்ம தேவதைக்கும்,பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது. 

ஆதலால் மு ன்னதாகவே அம்மாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா ,பெயர் மற்றும் அப்பாவின் சகோதரிகளின் கோத்திரம், சர்மா, பெயர் பட்டியல் தயார் செய்து கொண்டு கயா செல்ல வேண்டும்.

உத்தேசம்ஆக 64 பிண்டங்கள் கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீக பித்ருக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிண்டம் என்று வைக்கும் போது சிலருக்கு இதற்கு அதிக மும் தேவை படலாம்.அதிகம் தேவை படுபவர்கள் மட்டும் முன்னதாக தனியாக ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மாத்ரு ஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19 பிண்டங்கள். ஸ்த்ரீ ஷோடசி 19 பிண்டங்கள் சிலர் இடுவர்.ஒரே நாளில் கயா ஸிராத்தம் செய்து விட்டு செல்ல வேண்டும் என்றால் இவ்வளவு பிண்டங்கள் செய்து கார்யம் செய்து முடிக்க முடியாது.

கயா விலுள்ள புண்ணிய தலங்கள் தீர்த்தங்கள் பின்வருமாறு:– சிராத்த பாரிஜாத் என்ற புத்தகத்தில் உள்ளது. ப்ருஹ்ம குண்டம்; ப்ரேத பர்வதம்; ப்ரேத சிலா; ராம குண்டம்; ராம சிலா; உத்திர மானஸ்;ஸூர்ய குண்டம்; கனக்கல்; தக்ஷிண மானஸ்; பல்குனதி; ஜிஹ்வாலோலம்; 

ஸரஸ்வதி தீர்த்தம்; மதங்கவாபி; தர்மாரண்யம்; புத்த கயா; ப்ரஹ்ம ஸரோவர், விஷ்ணுபாதம்; ருத்திர பாதம்; ப்ருஹ்ம பாதம்; கார்த்திகேய பதம்; தக்ஷிணாக்னி பதம்; கார்ஹபத்னியாக்னிபதம் ஆவஹயாக்னிபதம்; ஸூர்ய பதம்; சந்திர பதம்; ஸப்யாக்னிபத, கணேச பதம்; ஸப்யாக்னிபதம்; 

ஆவஸ்த்யாக்னி பதம்; மாதங்க பதம்; க்ரெளஞ்சபதம்; இந்திர பதம்; அகஸ்த்ய பதம்; தெளதபதம்;கஸ்யபபதம்; கஜகர்ணம்; ராம பாதம்; ஸீதா குண்டம்; கயா சிரஸ்; கயா கூபம்; முண்டப்ருஷ்டம்; ஆதி கயா; பீம கயா; கோப்ரசார்; கதாலோலம்; வைதரணி; அக்ஷய வடம்;

17 நாட்கள்; 8 நாள். 5 நாள்; 3 நாள் ;ஒரே நாள்; ஆகிய பல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம் செய் முறைகள் பழைய புத்தகங்களி ல் உள்ளது. 

இதில் அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள் கூப கயா; மது கயா; பீம கயா; வைதரணி; கோஷ்பதம்;பல்குகங்கா நதி தீரம்; விஷ்ணுபாதம்; அக்ஷய வடம் ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.

பஞ்ச கயா சிராத்தம் செய்ய விரும்புவோர் பல்குகங்கா நதி; கயா சிரஸ்; ப்ரஹ்மசிரஸ்; ப்ரேத சிலா;மதங்க வாபி ஆகிய இடங்களில் செய்தல் வேண்டும்.5 நாட்கள் தங்கி தினம் ஒன்றாக செய்ய வேண்டும்.

ஒளபாசன அக்னியில் தான் கயா சிராத்தம் செய்ய வேண்டும். ஆதலால் மனைவியை அவசியம் அழைத்து செல்ல வேண்டும்.

கர்த்தாவின் தாய் உயிருடன் இருந்தால் அம்மா வர்கத்திற்கு வரணம், பிண்டம் இல்லை.
பெற்றோர் உயிருடன் இருப்பவர்களுக்கு கயா சிராத்தம் கிடையாது. பிள்ளை இல்லா விதவை பிள்ளை இருந்தும் வர இயலாத நிலைமையிலும் இருப்போர் ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயா சிராத்தம் செய்ய வேண்டும். 

தாய் இல்லாத, தகப்பன் மட்டும் ஜீவித்திருக்கும் கர்த்தா அம்மாவிற்கு பார்வண சிராத்தம் மட்டுமே செய்ய முடியும் கயாவில். பல்கு நதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம் சிராத்த, பிண்ட தானம் செய்ய முடியாது. ஆனால் மற்ற நதீ தீரங்களில் அப்பாவிற்கு யார் பித்ரு தேவதைகளோ அவர்களை உத்தேசித்து கர்த்தா தீர்த்த சிராத்தம் செய்யலாம்.

கயாவிற்கு பிண்ட தானம் செல்லும் வழியில் பாதியில் திரும்ப நேர்ந்தால் ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள வேண்டும்.யாத்திரை மத்தியில் தீட்டு குறுக்கிட்டால் , நிவ்ருத்தி ஆன பிறகு தொடர வேண்டும். மாத விடாய் குறுக்கிட்டால் ஐந்து நாட்கள் ஆன பிறகு தொடர வேண்டும்.

கயாவில் மங்களா கெளரி கோயில், புத்த கயா, ப்ருஹ்ம யோனி, மாத்ரு யோனி கோவில்கள்
குன்றுக்குள் மிக குறுகலான பாதைகள் உள்ளன, .ஊர்ந்து சென்று மீள இயல்வோர்கு மீண்டும் கருவடையும் கஷ்டம் இருக்காது என்று ஒரு நம்பிக்கை.

புத்த கயாவிலிருந்து மூன்று கிலோ மீட்டரில் தர்ம ராஜர் யக்யம் செய்த இடம் உள்ளது. இங்கிருந்து10 கிலோ மீட்டர் தூரத்தில் அக்ஷய வடம் உள்ளது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் விஷ்ணுபாதம் உள்ளது.

மாலை வேளையில் விஷ்ணு பாதத்தின் மேல் ஒரு வெள்ளை துணி இட்டு நகல் எடுத்து கொடுப்பார்கள். அதை உடனே எதிரில் உள்ள கடையில் கொடுத்தால் அதை அழகு படுத்தி மறு நாள் கொடுப்பர். அதை லேமினேட் செய்து ஊருக்கு எடுத்து வந்து ப்ரேம் போட்டு,

யாத்ரா ஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்து பூஜித்து பூஜை அறையில் வைத்து கொண்டு தாய் தந்தையர் சிராத்தமன்று சந்தன கட்டைக்கு பதிலாக இந்த விஷ்ணு படத்தை விஷ்ணு ப்ரதினிதியாக பயன் படுத்தலாம்.

கயாவில் தங்க வேண்டுமென்றால் பழைய வேஷ்டி, பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட், கொசு வத்தி ,ஸ்ப்ரே, மெழுகுவர்த்தி, குடிக்க தேவையான குடி தண்ணீர் கேன் , காசியிலிருந்து எடுத்து வர வேண்டும்.

கயாவில் முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம் செய்ய வேண்டும். வேதங்களில் உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும். சரீரத்தை வருத்திக்கொண்டு கர்மாக்களை செய்வதினால் பாப விமோசனம் கிடைக்க பெற வேண்டும்.

நம்பிக்கையுடன் செய்யப்படும் கார்யங்களால் தான் உலகம் உருவாகி இருக்கிறது. சிராத்தம் செய்வதால் தர்மம் நிலை நிறுத்த படுகிறது. சிராத்தம் செய்வதால் யாகம் செய்த பலன் கிடைக்கிறது. மன ஆசைகள் கிடைக்கிறது.

ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்த பலனை முழுவதுமாக பெற பெற்றோர் ஜீவித காலத்தில் அவர்கள் சொல் படி கேட்டு நடத்தல். அவர்கள் இறந்த பின் சிராத்தம் , பித்ரு போஜனம் செய்வித்தல்;கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல்ஆகிய மூன்றும் செய்தல் வேண்டும்.

கயா வில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராக த்யானம் செய்து பிண்ட ப்ரதானம், சிராத்தம் செய்பவன் தனது பரம்பரையில் நூறு தலை முறையை கரை ஏற்றி ப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்க செய்கிறான்.

பொது விதியாக சாந்திரமான படி அதிக மாதம், குரு சுக்கிர அஸ்தமன காலங்களில் க்ஷேத்ராடனம் செய்ய கூடாது என்று உளது. வைத்னாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின் படி காசி, கயா,கோதாவரிக்கு மட்டும் விதி விலக்கு உள்ளது.

கயாவில் செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்கு ஆவாஹனம் கிடையாது. அன்னியரால் பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில் அங்கு கடை பிடிக்கபடும் ஸம்ப்ரதாயங்களே முக்கியம். வெளியூர் ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோக பத்ததிகள், மடி,ஆசாரம், ஜாதிகளின் வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள்,குலங்களின் தனித்வம் ஆகிய அனைத்தும் தள்ளுபடி.

அங்குள்ள ஆசார்யன் சொல்வதை கேட்டு அதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கி மன நிறைவு பெற வேண்டும். 

சிராத்த ஆரம்பத்திலும், நடுவில், முடிவில் மூம்மூன்று தடவை பித்ரு மந்திரம் ஜபிக்க வேண்டும். பித்ரு மந்திரம்:—தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்ச ஏவச
நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.

கயா சிராத்தம் , கயாவில் குறைந்த பக்ஷம் மூன்று சிராத்தங்கள் ஒரே நாளில் செய்யபடுகிறது. தான் தங்கி இருக்கும் சாவடியில் ஒன்று. பல்கு நதி கரையில் மண்டபத்தில் இரண்டு. பல்கு நதியில் ஊற்று தோண்ட நீர் எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்து கொள்ள வேண்டும்.

பல்கு நதியில் நீராடி ஈரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தை தான் அக்ஷயவட சாயா கிரியைகளை முடித்து திரும்பும் வரை அணிந்திருக்க வேண்டும்.பல்கு நதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம், பல்கு தீர்த்த ஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம், பிறகு பல்கு தீர்த்த சிராத்தம், பிறகு பிண்ட ப்ரதானம்.

பல கர்த்தாக்களுக்கு ஒன்று சேர க்ரியைகள் நடக்கும். அந்தந்த கர்தாவிற்கு மண்டபத்திலேயே தனி தனி மண் பானைகள் அவரவர் மனைவிகள் அன்னம் தயாரிக்க வகை செய்ய படுகிறது.
அவற்றில் ஒரு பானை அன்னத்தில் பல்கு தீர்த்த சிராத்தமும், 17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும். 

மற்றொரு பானை அன்னத்தில் விஷ்ணுபாத சிராத்தத்திற்கும் , 64 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும்.அன்னம் தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்து கர்த்தாக்கள் சிராத்தம் செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கி வரும் படிகள் மிக செங்குத்தாக இருப்பதால் கவனம் தேவை.

பல்கு நதி 17 பிண்ட ப்ரதானம் முடிந்த வுடன் பிண்டங்களை பல்கு நதி நீரில் கரைக்க வேண்டும்.பசு மாட்டிற்கு வைப்பது இரண்டாம் பக்ஷம். இங்கேயே விஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம் , 64 பிண்டம் வைத்து பிண்ட ப்ரதானம் செய்து இந்த 64 பிண்டங்களை எடுத்து சென்று விஷ்ணு பாதத்தில் கொட்டி வணங்க வேண்டும். தர்பணங்கள் இல்லை.

அவரவர் தங்கி இருக்கும் இடங்களுக்கு இந்த 64 பிண்டங்களுடன் திரும்பி சென்று, அங்கே தாக சாந்தி செய்து கொண்டு அக்ஷய வட கயா சிராத்தம் பார்வண முறைப்படி ஹோமத்துடன் செய்ய வேண்டும்,குறைந்தது 5 கயா வாலி அந்தணர்களை வரித்து போஜனம் செய்து வைக்க படுகிறது. இதற்காகத்தான் கயா வருகிறோம். அப்பா வர்கம், அம்மா வர்கம், அம்மாவின் அப்பா அம்மா வர்க்கம். விசுவேதேவர்,காருண்ய பித்ரு என ஐந்து பேர்.

இந்த கயா வாலீ அந்தணர்களுக்கு ஒவ்வொருவற்கும் குறைந்த பக்ஷமாக வேஷ்டி–அங்கவஸ்திரம்,விசிறி, ஆஸனம், தீர்த்த பாத்திரம் ,தக்ஷிணை தர வேண்டும், உங்கள் ஊரிலிருந்து இவைகளை வாங்கி கொண்டு வந்து கொடுக்க வேண்டும். மிக சிறந்த தேன், நெய் உங்கள் ஊரிலிருந்து வாங்கி வந்து இங்கு இவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

ஒரு சாவடியில் ஒரே சமயத்தில் பல கர்த்தாக்கள் சிராத்தம் செய்தாலும் அவரவர்களுக்கு தனி தனியே சிராத்த சமையல் செய்யப்பட வேண்டும்.அவரவர் மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்தி தனியாக ஏற்பாடு செய்தும் செய்யலாம்.

கர்த்தாவின் மனைவியே அன்னம், பாயஸம், பரிமார வேண்டும். ஆபோசனம், உத்திராபோஜனம்,கர்த்தாவின் மனைவியே போட வேண்டும்.

பித்ரு போஜனம் முடிந்த உடன் கயா வாலிகட்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு , நைவேத்திய பக்ஷணங்கள், 64 பிண்டங்கள் எடுத்து க்கொண்டு அக்ஷய வட சாயாவிற்கு செல்ல வேண்டும்,.இங்குதான் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும். 

அக்ஷய வட சாயாவில் ஒரு ப்ராஹ்மண போஜனம் செய்தால் ஒரு கோடி ப்ராஹ்மண போஜனம் செய்த பலன் உண்டு. முன்னோர்களுக்கு ப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறது எங்கிறது கயா மாஹாத்மியம் எனும் புத்தகம்.

பித்ரு போஜனம் சாப்பிட்ட ஒருவர் அக்ஷய வட சாயாவிற்கு வருவார். அவரிடம் த்ருப்தி கேட்டு பெற வேண்டும். ஒரு இலை, ஒரு காய்,ஒரு பழம் ஆகியவற்றை ஆயுட் காலம் முடியும் வரை பயன்படுத்த மாட்டோம் என கர்த்தாவும், அவரது மனைவியும் ஸங்கல்பம் 

செய்து கொள்ள வேண்டும். இந்த இலை, காய், பழத்தினை கார்த்திகை மாதத்தில் உங்கள் ஊரில் நிறைய தானமாக வழங்க வேண்டும். இந்த காய் ,இலை, பழத்தினை இவர்கள் இறந்த பிறகு வருடா வருடம் வரும் சிராத்தத்தில் உபயோக படுத்த கூடாது.இவர்கள் விடும் காய்,பழம் ப்ரத்யாப்தீக சிராத்தத்தில் உபயோக படுத்த கூடியதாக இருக்க வேண்டும்.

கயாவில் சிராத்தம் செய்து வைத்த வாத்யாருக்கு அக்ஷய வட சாயாவிலேயே வஸ்த்ர தானம்,ஸம்பாவனை போன்றவற்றை கொடுக்க வேண்டும்.கர்த்தாவிடும் காய், பழம் வாங்கி கயா வாத்யாருக்கு கொடுக்க வேண்டும். அல்லது இதற்குண்டான பணம் தர வேண்டும்.

பிறகு கர்த்தா தான் தங்குமிடம் வந்து சாப்பிட வேண்டும். நிச்சயம் 3 மணிக்கு மேலாகிவிடும்.

பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.         ·      சிராத்த பாரிஜாதம் மற்றும் கயா சிராத்த பத்ததி புத்தகங்களில் தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள் இரண்டு கோத்திரங்களுக்கு மாக கீழ் வருபவர்களுக்கு தர்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கயாவில்.: இறந்த வர்களுக்கு மட்டும் தான் தர்பணம்.

பிறகு கிளம்பி காசி செல்ல வேண்டும்.🥀 அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதியில் அஸ்சங்கம கட்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து தான் காசி தலம் ஆரம்பமாகிறது. இக்கட்டத்தை காசியின் நுழைவுவாயில் என்று சொல்வர். இக்கரையில் அமைந்துள்ள சிவலிங்கம் “அஸ்சங்கமேஸ்வரர்” எனப்படுகிறார்.🥀 முதலில் அஸ்சங்கமத்தில் நீராடி சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும்.🥀 துளசி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர் இந்த கட்டத்தில் இறங்கி கங்கையில் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.🥀 இதையடுத்து தசாஸ்வமேத கட்டத்தில் நீராட வேண்டும். இங்கு பிரம்மன் பத்து அசுவமேத யாகங்களை செய்ததால் தசாஸ்வமேத கட்டம் என பெயர் பெற்றது. இந்த தீர்த்தக்கரையில் *சூலடங்கேஸ்வரர்* என்ற சிவலிங்கம் உள்ளது.🥀 இதையடுத்து வரணசங்கம கட்டத்தில் நீராடச் செல்ல வேண்டும். இங்கு வருண நதி கங்கையில் கலக்கிறது. இந்த கரையில் உள்ள *ஆதிகேஸ்வரரை* வணங்கிவிட்டு, யமுனை, சரஸ்வதி, சிரணா,தூதபாய் ஆகிய நதிகளும் கங்கையில் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி விட்டு கரையிலுள்ள *பிந்துமாதவர்* மற்றும் *கங்கேஸ்வரரை* வணங்க வேண்டும்.🥀 பஞ்ச தீர்த்தக் கட்டங்களில் ஐந்தாவதாக அமைந்துள்ள மணிகர்ணிகா கட்டத்திற்கு செல்ல வேண்டும். இங்கு நீராடி பித்ருக்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த கரையிலுள்ள *மணிகர்ணிகேஸ்வரர்* மற்றும் அம்பாளையும் வழிபட வேண்டும்.🥀 காசிக்கு செல்பவர்கள் அங்குள்ள துண்டிவிநாயகரை வணங்கினால் தான் காசி யாத்திரையின் பலன் முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.🥀 பாரத நாட்டில் குடியேறிய ஆரியர்களில் காசி என்ற பிரிவினர் இங்கே கி.மு. 1400 வாக்கில் வாழ்ந்து வந்தமையினால் இத்தலம் காசி என்ற பெயர் பெற்றது.🥀 பார்வதி தேவியின் காதிலுள்ள மிகப் பிரகாசமான குண்டலம் இங்கே விழுந்து பிரகாசித்ததால் காசி என ஆயிற்று என்றும் கூறுவர்.🥀 பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் மரகதலிங்கமாக சிவலிங்கம் பிரகாசிப்பதால் இத்தலம் காசி எனப் பெயர் பெற்றது என்பர்.🥀 சிவபெருமான் விரும்பி மகாமயானத்தருகே இருப்பதால் காசி என்றவுடனே, மோட்சம் கிடைப்பதால் இத்தலம் காசி என்றனர்.🥀 கா = தோள் சுமை, சி= பெண் சுமை. பார்வதி தேவியைத் தோளில் சுமந்து கொண்டு, சிவ பெருமான் ஹரித்வாரிலிருந்து இங்கே வந்தமையால் இத்தலம் காசி என அழைக்கப்படுகிறது என்றும் கூறுவர்.🥀 வாரணம், அசி என்ற இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் இருப்பதால் இத்தலத்திற்கு வாராணசி என்ற பெயர் ஏற்பட்டது.🥀 பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து ஒரு லிங்கம் அமைத்து வழிபட்டதால் இத்தலத்திற்கு பனாரஸ் என்ற பெயர் ஏற்பட்டது.🥀 அவி = தலைவன், முத்தன் = சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவன் சிவபெருமான். அவர் வாழுமிடம் அவிமுக்தம் என இத்தலத்திற்குச் சிறப்பாகப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.🥀 சிவபெருமான் சுடலையை விரும்பி அங்கே வாழ்பவன் ஆனதால் இத்தலத்திற்கு மகாமயானம் என்ற பெயரும் உண்டாகியது என்பர்.🥀 இறப்பவர்களுக்குச் சிவபெருமான் ராம் என்று உபதேசம் செய்து மோட்சம் வழங்குவதால் மகாமயானம் எனப்பட்டது.🥀 நம் நாட்டில் உள்ள முக்தித் தலங்கள் ஏழினுள் காசி தலையாய முக்தித் தலம் ஆகும்.🥀 காசியில் ஐந்து உபநதிகள் கங்கையில் கலக்கின்றன. காசிக் கங்கையில் நீராடினால் பாவங்கள் எல்லாம் போய் புனிதம் உண்டாகும்.🥀 லோகமாதா அன்னபூரணி காசியம்பதியில் இறைவனுக்கும் மக்களுக்கும் உணவு வழங்கி சக்தியூட்டுகின்றார்.🥀 காசியின் மகிமையை உணர்ந்த தென்னாட்டு மக்கள், *காசியில் காவாசி அவினாசி* என்று பழமொழி கூறுகின்றனர். தங்கள் ஊர்களுக்குச் சிவகாசி, தென்காசி என்றெல்லாம் பெயர் வைத்துப் பெருமைப்படுகின்றனர்.🥀 தென்னாட்டில் எல்லாச் சிவன் கோயிலிலும் காசி விசுவநாதர் லிங்கமும், காசி விசாலாட்சியும் வைத்து வழிபடுகின்றனர்.🥀 மும்மூர்த்திகளும், தேவர்களும், விசுவநாதரைப் பூஜித்த தலம் காசி ஆகும்.🥀 அனுமன், இராமேசுவரத்தில் இராமர் பூஜிக்க லிங்கம் எடுத்த தலம் காசி.🥀 கேதார்நாத் போக முடியாத ஒரு பக்தனுக்கு சிவன் கங்கைக் கரையில் காட்சி தந்தார். அந்த இடம் கேதார்நாத் காட் என்கின்றனர். அங்கே கேதார்நாத்திலிருப்பது போலவே சுயம்புவாகத் தோன்றிய ஒரு பாறையையே சிவலிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர்.🥀 விசுவாமித்திரரால் பரிசோதனைக்குட்பட்ட அரிச்சந்திர மகாராஜா, சிவபெருமான் தரிசனம் பெற்றது காசியம் பதியாகும்.🥀 சனிபகவான் தவம் செய்து, சிவபெருமான் வரத்தால் நவக்கிரகங்களில் ஒன்றானது காசியில் தான்.🥀 காசியின் கங்கைக் கரையில் நம் முன்னோர்களுக்குச் சிரார்த்தம் முதலிய வைதீகச் சடங்குகள் செய்யலாம். அதனால் நாமும் நம் முன்னோர்களும், புனிதம் அடையலாம்.
தீர்த்தக் கட்டங்கள்:
🥀 கங்கை நதியின் ஓரத்தில் ஏராளமான படித்துறைகள் உள்ளன. இதில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இத்தீர்த்தக் கட்டங்கள் அனைத்திலும் நீராடுவது மிகுந்த பலனைத் தரும். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமல்ல. எனவே, அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய படித்துறைகளில் ஒரே நாளில் நீராடி மகிழ்வது மிகவும் புனிதமானதாகும். இதற்கு *பஞ்சதீர்த்த யாத்திரை* என்று பெயராகும்

Posted 35 minutes ago by k. hariharan 0 

Add a comment

KAASHI YATHRA

Kaasi yathra பகுதி 2 பிரயாகை By Krishnamurthy Hariharan

பகுதி 2 பிரயாகை

By Krishnamurthy Hariharan

அனைவருமே இறைவனின் படைப்புகள்தான். அவ்விதம் இருந்தும், சிலர் செல்வந்தர்களாக இருக்கின்றனர். சிலர் வறுமையில் வாடுகின்றனர். சிலர் சுகத்தில் திளைக் கிறார்கள். பலர் துன்பத்தில் வாடி, வதங்குகிறார்கள். சிலர் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வியாதியில் வருந்துகின்றனர்.

இது ஏன்? மனிதனின் மனதிற்குப் புரியாத புதிர் இது!. சாதாரண மனிதனின் மனதிற்கு எட்டாத, மனித வாழ்க்கையின் சூட்சுமங்களை த்தான் நமது வேதகால மகரிஷிகள் தங்கள் ஆத்ம சக்தியினால் அறிந்து, நம் பிறவியின் இரகசியங்களை, – பரம கருணையுடன்.
நமது நன்மைக்காகவே வெளிப்படுத்தியுள்ளனர் நம் பிறவியின் நோக்கம் நல்ல காரியங்களைச் செய்து, மேலும், மேலும் நல்ல பிறவிகளை எடுத்து, அதன் பலனாக மேலும் பல புண்ணிய காரியங்களைச் செய்யும் வசதியும், மனமும் உள்ள நல்ல பிறவிகளை எடுத்து, உயரவேண்டும். இவ்விதம், தொடர்ந்து படிப்படியாக உயர் பிறவிகளை எடுத்து, மேலும் பல புண்ணிய காரியங்களச் செய்து, சிறுகச் சிறுக, இறைவனை அணுகி, இறுதியில் அவனுடன் இரண்டறக் கலந்துவிடும் முக்தி நிலையை அடைந்துவிட வேண்டும். இதுதான் நம் பிறவியின் உண்மையான நோக்கம் ஆகும்.பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! பலவகைகளிலும், மனிதப் பிறவியும் ஒரு புனித யாத்திரைதான்! ஆனால், அது ஒரு ஆபத்துகள் நிறைந்த யாத்திரை ஆகும்!!

மனித வாழ்க்கை என்பது கொடிய விலங்குகள் நிறைந்த காட்டைக் கடப்பதற்குச் சமமாகும் என்று விவரித்துள்ளார் அவதார புருஷரான ஸ்ரீ வேதவியாசர். பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை என்ற மூன்று ஆசைகளும் புனிதமான நம் பிறவியைச் சீர்குலைக்கும் கொடிய விலங்குகள் என அருளியுள்ளார் அவர். தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், சத்தியம் ஆகியவற்றின் துணையுடன் தனது வாழ்க்கை காலத்தைக் கடக்கும் விவேகமுள்ள மனிதன், தன் வயோதிக காலத்திலும் மனநிம்மதியுடனும், மனநிறைவுடனும் கவலையின்றி வாழ்கிறான். உடலில் பலமும், வாழ்வில் ஓரளவு வசதியும் உள்ளபோதே நற்செயல்களைச் செய்து புண்ணிய பலன் களைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மனிதப் பிறவியில் நமக்கு என்றும் துணையிருந்து, துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உண்மையான, அழியாத, எவராலும், எக்காலத்திலும் அழிக்கமுடியாத சொத்து நாம் செய்யும் புண்ணிய காரியங்களின் பலன்கள் மட்டுமே. புண்ணியத்தைச் செய்யாவிடினும் பாவச் செயல்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்யவேண்டிய தர்ம காரியங்களை நம் வேத கால மகரிஷிகள் இருவகை புண்ணியச் செயல்களாகப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஒன்று – நாம் தேடிச் செல்லும் புண்ணியம். மற்றொன்று – நம்மை நாடிவரும் புண்ணியம்!. நாம் தேடிச்செல்லும் புண்ணியங்கள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.
1. திருத்தலங்கள் தரிசனம்,

2. புண்ணிய நதிகளில் ஸ்நானம்,

3.தினமும் செய்யும் தான, தர்மங்கள்,
4. திருக்கோயில் உழவாரப் பணிகள்,

5. சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைத்தல்,
6. திருக்கோயில்களில் தீபம் ஏற்றுதல்,

7. பகவானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தல்,
8. பகவானுக்குத் தினமும் பூஜை செய்தல்,

9. பித்ரு (தந்தை), மாத்ரு (தாய்) பூஜைகள்.

10. அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம்.
இவையனைத்தும் நாம் செய்யவேண்டிய மிக முக்கிய கடமைகளாகும்.. அளவற்ற புண்ணியத்தை நமக்கு அளிப்பவை இவை. இது போன்றே நம்மை நாடிவரும் புண்ணியம் :1. நவராத்திரி, 2. புரட்டாசி சனிக்கிழமைகள், 3. ஏகாதசி விரதம், 4. பிரதோஷம், 5. சஷ்டி, 6. சிரவணம், 7. கிருத்திகை ஆகிய தினங்களில் உபவாசம், 8. மகாளய பட்சம் 15 நாட்கள், 9. தீபாவளி அன்று இல்லந்தோறும் எழுந்தருளும் கங்கா தீர்த்தத்தில் ஸ்நானம் (அதிகாலை 3.00 முதல் 4.00 வரை). 10. ஆண்டுத் திதி அன்று நம் இல்லத்திற்கு எழுந்தருளும் பித்ருக்களைப் பூஜித்தல்..

பித்ருக்களின் கருணை

அளவற்ற புண்ணியத்தை மிக, மிக எளிதில் நமக்குப் பெற்றுத் தருவது மறைந்த நம் முன்னோர்களை சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்றவற்றால் பூஜிப்பதாகும். அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பித்ரு பட்சம் (மகாளய பட்சம்) ஆகிய புண்ணிய காலங்களில் நாம் செய்யும் பித்ரு பூஜைகள் நம் குழந் தைகளுக்கு இப்போதே நாம் சேர்த்து வைக்கும் வைப்புநிதி (Deposit) ஆகும். பல தலைமுறைகளுக்கு இப் புண்ணிய பலன்கள் நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் பூர்வீக சொத்து என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. பித்ரு பூஜைகளினால் நாம் சேர்த்து வைக்கும் புண்ணியத்தை நம் குழந்தைகள் பூர்வீக சொத்தாக அனுபவிக்க லாம். ஆனால், அதனை அழிக்க முடியாது. இது எப்படி என்று கேட்கலாம்.

அதாவது, ஒருவர் செய்யும் புண்ணியம், அவர் செய்யும் பாவங்களால் கரைந்துவிடும். ஒரு பக்கம் புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே, மறுபக்கம் பாவச் செயல்களையும் செய்வது, அடியில்லாத பாத்திரத்தில் நீர் நிரப்ப முயற்சிப்பதைப் போலாகும். ஆனால், மறைந்த நம் மூதாதையர்களுக்குச் செய்யும் திதிபூஜைகள், தர்ப்பணம் ஆகியவற்றால் நமக்குக் கிடைக்கும் புண்ணிய பலனை, எதனாலும், எவராலும் அழிக்க முடியாது. அது, தலைமுறை தலைமுறையாக, நம் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் ஆகியோருக்கு நாம் வைத்துச் செல்லும் சாஸ்வதமான சொத்தாக நீடிக்கும்.
ஆதலால்தான், நாம் பித்ரு பூஜைகளை அவசியம் செய்து வர வேண்டும் என மகரிஷிகள் உபதேசித்துள்ளனர்.

பித்ருக்கள் ஏன் நேரில் வருவதில்லை..?

திரேதாயுகத்தின் முதல் பகுதி வரையில், பித்ருக்கள் நேரில் எழுந்தருளி நாம் செய்யும் திதி பூஜைகளை ஏற்று வந்தனர். அளவற்ற தேஜஸ்(ஒளி)ஸுடன் வரும் அவர்களை, புத்திரர்கள் தங்கள் இல்லங்களின் வாயிலில் காத்திருந்து, பாத பூஜை செய்து, வீட்டினுள் வரவேற்று, ஆசனங்கள் சமர்ப்பித்து, விசேஷ அன்னம் அளித்து, குடும்பத்தினர் அனைவரும் பித்ருக்களின் திருவடிகளில் வணங்கி, அவர்களது ஆசியைப் பெற்று, வழி அனுப்புவது வழக்கத்தில் இருந்து வந்தது.

ஸ்ரீ ராமபிரான், தன் தேவி ஸ்ரீ சீதையுடன் கயா திருத்தலத்திற்கு எழுந்தருளி, கயா சிரார்த்தம் செய்தபோது, தசரதர், ரகு மற்றும் அஜன் ஆகிய பித்ருக்கள் நேரில் வந்து, பல்குனி நதிக் கரையில் சிரார்த்தத்தை ஏற்று, ஸ்ரீராமபிரானையும், ஸ்ரீசீதாதேவியையும் ஆசீர்வதித்த நிகழ்ச்சியை கயா திருத்தல வரலாறு விவரித்துள்ளது.

துவாபர யுகத்தின் பிற்பகுதியிலிருந்து மனிதர்களின் தேஜஸ் (ஒளி), வீர்யம் (சக்தி), ஆரோக்கியம், உருவம் ஆகியவை படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்ததால், பித்ருக்கள் எழுந்தருளும்போது அவர்களின் ஒளியையும், சக்தியையும் தாங்கிக் கொள்ளும் பலம் கண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. அதனால்தான், இக்கலியுகத்தில் சிரார்த்தங்களின் போது நம் முன்னோர்கள் வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை.
கலியில் பித்ருக்கள் நேரில் வரும் புனித தலங்கள்!

கலியுகத்தில் நம் முன்னோர்கள், சிரார்த்தங்கள் மற்றும் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலங்கள் ஆகியவற்றின்போது செய்யும் தர்ப்பணம் ஆகியவற்றை வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் ஆகிய தேவர்களின் மூலம், அவர்களது அம்சமாகவே வந்து நாம் செய்யும் பூஜைகளை ஏற்று நம்மை ஆசிர்வதித்து, அதன் பின்பு அவர்களின் புண்ணிய உலகங்களுக்குச் செல்கின்றனர் என்பதைப் புராதன நூல்கள் விளக்கியுள்ளன.

மகாளய பட்சம் 15 நாட்கள் மற்றும் மகாளய அமாவாசை ஆகிய விசேஷ காலங்களிலும், கயை, குருக்ஷேத்திரம் (சூரிய குண்டம், பிரம்மசரஸ்), பதரி ஆஸ்ரமம் (பிரம்ம கபாலம்), வர்க்கலை (ஜனார்த்தனம் – கேரளம்), கோமுகம், மானஸசரோவரம் ஆகிய ஆறு(6) பரம பவித்திரமான இடங்களில் நாம் அளிக்கும் பித்ரு பூஜையையும், அன்னத்தையும் நமது முன்னோர்கள் நேரில் வந்து, ஏற்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் புண்ணிய காரியங்களைச் செய்து, அதன் பலனாக கடன், வறுமை, நோய்கள் மற்றும் இதர துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று மகிழ வேண்டும் என்பதே எங்கள் ஆசை! அதற்காகத்தான், தேடிச்செல்ல வேண்டிய புண்ணியங்களையும், நம்மை நாடிவரும் புண்ணியங்களையும் தவறாமல் ஏற்று பிறவி என்னும் ஒப்பற்ற வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டு பகவானின் பரிபூரணமான கருணையைப் பெற வேண்டுகிறோம். புண்ணியம் என்னும் ஒப்பற்ற வழியிருக்க நாம் ஏன் வருந்த வேண்டும்?

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவுஅதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும்பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.

ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்:

கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.

காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.

ராமநாத ஸ்வாமி கோயில் ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் கடலில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கைப்பிடி மணல் எடுக்க வேண்டும்.

அக்னி தீர்த்தம்

முதல் கைப்பிடி மண்ணை, `சேது மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், இரண்டாவது கைப்பிடி மண்ணை, `பிந்து மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும், மூன்றாவது கைப்பிடி மண்ணை, `வேணு மாதவ லிங்கம்’ என்ற பெயரிலும் மூன்று லிங்கங்களைச் செய்து, அந்த லிங்கங்களைத் தலைவாழை இலையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ததும், பிந்து மாதவ லிங்கம், சேது, மாதவ லிங்கம் ஆகியவற்றைக் கடலில் விட்டுவிட வேண்டும்.

சேது மாதவ லிங்கத்தைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் முதலியவற்றைக் கொடுக்க வேண்டும். கொடுத்து முடித்துவிட்டு, ராமநாத சுவாமி ஆலயத்தில் இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும். கோடி தீர்த்தத்திலிருந்து ஒரு கேனில் தீர்த்தத்தை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ராமநாதசுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசியாத்திரையை மேற்கொள்ளலாம். உடனடியாக, காசிக்குச் செல்ல முடியாவிட்டால், சேது லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் பூஜையறையில் வைத்து, தினமும் பூஜை செய்ய வேண்டும். காசிக்குப் புறப்படும்போது வேணு லிங்கத்தையும் கோடி தீர்த்தத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

காசி யாத்திரையின்போது முதலில் அலகாபாத் எனப்படும் பிரயாகைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில், நாம் கொண்டு வந்திருந்த வேணு மாதவ லிங்கத்தைக் கரைக்க வேண்டும்.

இதன் பிறகு நாம் காசிக்குச் சென்று கங்கையில் நீராடி நாம் கொண்டு வந்திருக்கும் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதரை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். பின்னர் அங்கிருக்கும் அன்னபூரணி, விசாலாட்சி ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இறுதியில் கால பைரவரை வழிபட்டு, கயாவுக்குச் செல்ல வேண்டும்.

கயாவில் நம் மூதாதையர்களுக்குச் சிராத்தங்களை முறையாகச் செய்ய வேண்டும். அதன்பிறகு, மீண்டும் காசிக்கு வந்து கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்க வேண்டும். பிறகு மீண்டும் பிரயாகை வந்து ஒரு கேனில் கங்கை தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரவேண்டும். பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமிக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டுவிட்டு வரும்போது தான் நம் காசியாத்திரை நிறைவடையும். இதன் மூலம் பித்ரு தோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சியே எப்போதும் நிறைந்திருக்கும்..

ஆத்ம ருணம் தேவ ருணம் பித்ரு ருணம் என்ற மூன்று கடன்களுடன் நாம் பிறக்கின்றோம் .இவைகளை அகற்றினால் தான் முக்தி பெறலாம். ப்ரயாகையில் ஆத்ம ருணம்;காசியில் தேவ ருணம் கயா வில் பித்ரு ருணம் அகலும்; முக்தி பெற விரும்புவோர் அவசியம் இதை செய்ய வேண்டும் இந்த கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும் பித்ருக்களையும் ஆராதிக்க வேண்டும். தீர்த்தாடனம் செய்ய வேண்டும் என யாத்ரா கல்பம் கூறுகிறது. மத்ஸ்ய புராணம் வாயு புராணம் பத்ம புராணங்களில் இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரை மிக சிறந்தது என கூறுகின்றது.

ப்ரயாகையில் செய்ய வேண்டியது

அலகாபாத்திலிருந்து 6 கிலோ மீட்டரில் உள்ளது. ப்ரயாகை; தாரா கஞ்ச் என்ற ரயில்வே ஸ்டேஷனுக்கு மிக சமீபம்.. இங்கு சிவ மடம் உள்ளது. இந்த சிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம் என்னால் இவ்வளவு தான் முடியும் என சொல்லி பணம் கொடுத்தால் அதற்கு தகுந்த மாதிரி அவர் உங்களுக்கு எல்லாம் செய்து வைக்கிறார்..

1. ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து த்ரிவேணி ஸ்நானம்/ வேணி தானம் செய்ய முதலில் யோக்கியதை உண்டாவதற்கு அநுமதி பெற வேண்டும்.

2 ஸகல பாபங்களும் அகல ப்ராஜாபத்ய க்ருச்சர தானம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு மட்டை தேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்கு கொடுக்கவும்.

3. பார்வதி பரமேஸ்வரர் ; லக்ஷ்மி நாராயணர் அருளை பெற பல தாநம் செய்ய வேண்டும். பழம் தாம்பூலம், தக்ஷிணை தர வேண்டும்.

4. கங்கா புத்ரர்களாக க்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்கு முழு தேங்காயும் தக்ஷிணையும் தந்து தீர்த்த ராஜனது பேட்டி பெற வேண்டும்.

5. ஸ்நானம் செய்த பிறகு நமது பீடை அகல நாம் உடுத்திய புதிய அல்லது பழைய வஸ்திரத்தை பண்டாவிற்கு தக்ஷிணையுடன் தானமாக தர வேண்டும்..

6 ஸேதுவிலிருந்து கொண்டுவந்த வேணி மாதவர் மணலை பூஜை செய்து ஜலத்தில் போட வேண்டும்.

7. மறு நாள் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். விசுவே தேவருக்கு ஒருவர்; அப்பா வர்க்கம் ஒருவர்; அம்மா வர்க்கம் ஒருவர்; தாயின் அப்பா வர்க்கம் ஒருவர்; தாயின் அம்மா வர்க்கம் ஒருவர்; காருண்ய பித்ருக்கள் ஒருவர். மொத்தம் 6 ப்ராமணர்கள். வரித்து விதிப்படி வேஷ்டி அளித்து தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். சிராத்தத்திற்கு முன்பே பரேஹணி தர்பணம் செய்ய வேண்டும்.17 பிண்டங்கள் வைத்து பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்;
அப்பா வழி 3; அம்மா வழி 3; தாயின் அப்பா வழி 3; தாயின் அம்மா வழி 3; காருண்ய பித்ருக்கள்-1; தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்) -4. மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம் செய்வது அவசியம்..

8. மூன்றாவது நாள்:- தம்பதீ பூஜை செய்ய வேண்டும். வேட்டி; புடவை; தக்ஷிணை; ஸெளபாக்கிய த்ரவ்யங்கள்; மெட்டி; திருமாங்கல்யம்.. தாம்பூலம் புஷ்பம்; பழம்; நலங்கு சாமான்; பால் கொடுக்கும் கிண்ணம் முதலியன
ஸங்கல்பம் செய்து முடித்துக்கொண்டு படகு (போட்) மூலம் கங்கை, யமுனை; ஸரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கை ஜலம் பிடிக்க ப்லாஸ்டிக் கேன் கொண்டு செல்ல வேண்டும்

படகில் பண்டா மந்திரம் சொல்லி இந்த மூன்று நதிகளையும் பூஜிக்க சொல்வான் .த்ரிவேணி ஸங்கமத்தில் போட்டை நிறுத்துவான். முதலில் புருஷர்கள் வபனம் செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயா சிராத்தம் முடிந்த பிறகு தான் செய்து கொள்ள வேண்டும் அது வரை வபனம் இல்லை..அதற்கு முன் மனைவி தன் புருஷனை மாதவனாக கருதி பூஜை செய்து கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் புருஷனுக்கு செய்த அபசாரங்களை மன்னிக்கும்படி கேட்க வேண்டும். அப்படியே அதை மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்
.கணவன் மனைவியின் தலை வாரி பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள் குங்குமம் அக்ஷதை அப்ரஹ பொடி,சந்தனம் காதோலை கருகமணி வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க அதை மனைவி பண்டாவிடம் கொடுக்க வேண்டும். பண்டா அதை ஜலத்தில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும் .முறத்தில் உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.

முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும். த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தாநம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி . குங்குமசிமிழ்;, மஞ்சள்பொடி, அப்ரஹ பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.

வேணி தானம் செய்த பின் தம்பதிகள் இருவரும் சேர்ந்து யமுனையில் ஸ்நானம் செய்து போட்டின் வழியாக கோட்டை அருகே செல்ல வேண்டும்.அங்கு கோட்டைக்குள் பூமிக்கு அடியே ஒரு பெரிய கோவில் உள்ளது.அதில் மனித உரு அளவில் சந்திரன்; சூரியன்; யமன்; வால்மீகி; வ்யாஸர்; துர்வாஸ ர்;தத்தாத்ரேயர் முதலிய விக்கிரஹங்களும் ஆலமரத்தின் அடியும் தெரிகிறது; இந்த ஆல மரம் அக்ஷயமானது இந்த ஆல மரத்தில் மத்ய பாகம் காசியிலும்;நுனி பாகம் கயா விலும் உள்ளது; ப்ரளய காலத்தில் இந்தஇலையின் மீது பகவான் படுத்து இருப்பார்.

இங்கிருந்து வீட்டிற்கு போகும் வழியில் பூமியில் ஹனுமார் படுத்த வண்ணம் இருக்கும் கோவிலில் சென்று பார்த்து விட்டு செல்ல வேண்டும்.. ஆனந்த பவன், பரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்த ரிஷிகள்; பார்வதி பரமேஸ்வரர்; காளி வாசுகி; ஒரு குகை இவைகள் இருக்கின்றன. காஞ்சி சங்கராசார்யார் விமான மணடபம் பார்க்க வேண்டிய ஒன்று வேணி மாதவரை இங்கு பார்க்க வேண்டும். ராமானுஜ மடம்; மத்வ மடம் பார்க்கலாம்.

ப்ரயாகையின் காவல் தெய்வம் வாஸுகி என்ற ஸர்ப்ப ராஜன். இந்த ஆலயத்தில் அம்பு படுக்கையில் பீஷ்மர் படுத்து இருப்பதையும் பார்க்கலாம்.
அலோபி மாதா சோமேச லிங்கம் பார்க்கலாம் பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்க படுகிறது; சிராத்தம் ஆனபிறகு வேணி மாதவரை அவசியம் தரிசனம் செய்ய வேண்டும்.மாதவர் கோவில் ஆதி சேஷன் கோவில் உள்ளது. கங்கை ஜலம் வேண்டியதை வாங்கி ஈய பற்று வைத்து ஊருக்கு எடுத்து செல்ல தயார் செய்து கொள்ளலாம் .கங்கையை பூஜித்து கங்கா ஸமாராதனை செய்து ஆச்சார்ய ஸபாவனை செய்து கிளம்ப வேண்டும் காசிக்கு.

தேசீய நெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்து காசிக்கு 170 கிலோ மீட்டர். உள்ளது. நடுவில் 85 கிலோ மீட்டரில் விந்தியாசல் உள்ளது. இங்கு துர்க்கா விந்தியா வாஸினி என்ற பெயருடன் அருள் பாலிக்கிறாள்.; காசியிலிருந்து கயா 276 கிலோ மீடர். ரயிலில் சென்றால் 220 கிலோ மீட்டர். கோவா சூப்பர் எக்ஸ்ப்ரஸ் ( 12358 ) 4 மணி நேரத்தில் சென்று விடலாம்..

ப்ரயாகையில் ஆண்கள் வபநம் பெண்கள் வேணி தாநம் செய்து வேணி மாதவர் உள்ளிட்ட தெய்வங்களை வழிபட வேண்டும் .இதனால் ஆத்ம ருணம் விலகுகிறது. காசியில் கங்கா ஸ்நானம் செய்து கால பைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால் அடி பெற்றுக் கொண்டு அங்கு பல தெய்வங்களை வழி படுவதால் தேவ ருணம் விலகும். ராமேஸ்வரம் ப்ரயாகை; காசி; கயா ஆகிய க்ஷேத்ரங்களில் தீர்த்த சிராத்தம் செய்து விஷ்ணு பாதத்திலும் அக்ஷய வட சாயையிலும் பிண்டங்கள் இடுவதால் பித்ரு ருணம் விலகும்.

.
திரிவேணிக்கு முதல் முறை போகும் போது மட்டும் தான் வேணி தானம். அதன் பிறகு எத்தனை முறை சென்றாலும் வேணிதானம் செய்ய வேண்டியது இல்லை.
சாஸ்திரிகள் வீட்டிலேயே ஸ்நானம் செய்து விட்டு பிள்ளையார் பூஜை மஹா ஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதி க்ருச்சர ப்ரதிநிதி தானம் செய்து விட்டு மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்து கணவனின் நல்வாழ்வு வேண்டி வேணி தானம் செய்ய அநுமதி கேட்டு பெற வேண்டும். பிறகு நதிக்கரை செல்ல வேண்டும்.யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். வேணி தானம் செய்வதனால் ஸெளபாக்கியம், செல்வ செழிப்பு சந்ததி ஆயுள் விருத்தி பதியிடம் ப்ரியமும் உண்டாகும்… பரித்ராஜகோபனிஷத் எல்லா பாபங்களும் தலை முடியில் போய் தங்குகிறது. ஆதலால் முடியை சுத்தமாக எடுத்து.காணிக்கையாக அளித்து விட வேண்டும் என்கிறது.

வேணி தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.
திரிவேணி தேவிக்கு அநேக நமஸ்காரங்கள். எனக்கு எப்போதும் பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக; .என் ஸெளபாக்கியம் பெருகட்டும்;. நான் இங்கு வந்து வேணி தானம் செய்ததால் இந்த ஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும் நான் செய்த பாபங்கள் என்னை விட்டு நீங்கட்டும்..

வேணி தானம் சுக்கில பக்ஷத்தில் செய்ய வேண்டும். திதி, நக்ஷத்திரம் இரண்டும் நன்மை செய்ய க்கூடிய தினம் பார்த்து ப்ரயாகைக்கு சென்ற நாளன்றோ அல்லது மறு நாளோ வேணி தானம் செய்ய வேண்டும். தலைமுடி பிரிந்து விடா வண்ணம் முடிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவன் மனைவி இருவரும் கைகோர்த்து கொண்டு இருவரும் சேர்ந்து திரிவேணி சங்கம ஸ்நானம் செய்ய வேண்டும் .

பிறகு இருவரும் படகில் (boat) வந்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து மனைவி கணவனிடம் வேணி தானம் செய்ய அனுமதி வாங்கி பின்னர் கணவன் மனைவியின் தலை முடியை பின்னி விட்டு பூச்சூடி தலை முடியை இரண்டு அங்குலம் நுனியில் வெட்டி மனைவியிடம் கொடுக்க வேண்டும். மனைவி அதை ஸெளபாக்கிய த்ரவ்யங்களுடன் சேர்த்து பண்டாவிடம் தானம் செய்து விட்டு பண்டாவிடம் முடியை த்ரிவேணியில் போட சொல்லி கொடுக்க வேண்டும் முடி மிதந்து வெளியே போகாமல் தண்ணிரில் அடியின் செல்வது நல்லது. பிறகு தம்பதிகள் கை கோர்த்து மறுபடியும் ஸ்நானம்: போட்டிற்கு வந்து வேறு காய்ந்த ஆடை உடுத்தி த்ரிவேணிக்கு பூஜை செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்களுக்கும், சுமங்கலிகளுக்கும் தானம் செய்ய வேண்டும். பிறகு தம்பதியர் வீட்டுக்கு வந்து தம்பதி பூஜை செய்து சாப்பாடு போட வேண்டும். பிறகு தம்பதியர் சாப்பிட வேண்டும். .
தலை முடி நுனியை கத்தரித்து பண்டாவிற்கு தானமாக கொடுத்து அதை கங்கை, யமுனை ஸரஸ்வதி சங்கமிக்கு மிடத்தில் போடச்சொல்லி முத்தேவியற்கும் காணிக்கையாக போடுவதற்கு வேணீ தானம் எனப்பெயர்…

வேனி மாதவர் மணலை தண்ணீரில் கரைக்க வேண்டும். ஸங்கம இடத்திலிருந்து சற்று நகர்ந்து சுத்த கங்கை நீரை கேனில் பிடித்து கொள்ள வேண்டும்.

த்ரிவேணி ஸங்கமம் இடத்திலும் மற்ற இடங்களிலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் பழம் புஷ்பம் ரவிக்கை துண்டு. கண்ணாடி சீப்பு; மஞ்சள் பொடி; குங்குமம்; கண்ணாடி வளையல்;; கண்மை; மருதாணி பவுடர் தக்ஷிணை கொடுக்க வேண்டும்

வீட்டிற்கு வந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்ய வேண்டும்.
தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். 17 பிண்டங்கள் பிண்ட தானம்; தர்பணம் செய்ய வேண்டும். சிராத்தம் முடித்த பிற்கு வேணி மாதவர் கோயில் செல்ல வேண்டும். தசதானம் செய்ய வேண்டும்..

த்ரிவேணி கரையில் பூஜை செய்யும் போது அந்தந்த தேவிகளுக்கு இந்த ப்ரார்த்தனைகளும் சொல்லலாம். த்ரிவேணி சங்கமத்தில் கங்கைக்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

விஷ்ணு பாதோத்பவே தேவி மாதவ ப்ரிய தேவதே தர்சனே மம பாபம் மே

தஹத்வக்நிரிவேந்தனம். லோக த்ரயேபி தீர்த்தாணி யானி ஸந்தி ச தேவதாஹா. தத்

ஸ்வரூபா த்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்

கங்கே தேவி நமஸ்துப்யம் சிவசூடா விராஜிதே சரணத்ராண ஸம்பன்னே த்ராஹி மாம் சரணாகதம்.

யமுநாவிற்கு பூஜை செய்யும் போது இந்த ஸ்லோகம் சொல்லலாம்.

இந்த்ர நீலோத்பலாகாரே பானுகன்யே யசஸ்வினி ஸர்வ தேவஸ்துதே மாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்

ஸர்வ தீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காம வரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸே நமஸ்தே விஸ்வபூஜிதே.
ஸம்ஞ்ஞாகர்ப ஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதே விஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டே நமோ நமஹ.

ஸரஸ்வதி நதிக்கு பூஜை செய்யும்போது இதை சொல்லலாம்.

ப்ரஜாபதி முக்கோத்பூதே ப்ரணதார்தி ப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதே தேவி ஸரஸ்வதி நமோஸ்துதே
பத்மராக தலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனே பத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யை தே நமோநமஹ
வீணாவாத ரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதே கீத வீணாரவே மாதஹ பாஹிமாம் சரணாகதம்;

த்ரீவேணியில் பூஜிக்கும் போது சொல்லக்கூடிய ஸ்லோகம்

த்ரிவர்ணே த்ரியம்பிகே தேவி த்ரிவித –அக- விநாசினி த்ரி மார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணி சரணாகதம்; ஸம்சார அநல சந்தர்பம் காம க்ரோதாதி வேஷ்டிதம் பதிதம் த்வத் பாதாப்ஜே மாம் சீதளம் குரு வேணிகே

தீர்த்த ராஜே ப்ரயாகே அஸ்மின் ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதே நானா ஜன்ம க்ருதா ப்யாஸாத் பாதகாத் உத்தரஸ்வ மாம்

அரச மரத்தின் வேர் அக்ஷயவடம் காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதி மாதவஹ; க்ருத்வா முகாம்புஜே பாதெள நமோ அக்ஷயவடே நமஹ

த்வன்மீலே வஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹ த்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம் த்வாம் நமாம்யஹம்.

ஸெளவர்ணானி தலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாய தே நமஹ.

வேணி மாதவரை காணும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்;

நீல ஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷித ப்ரயாக நிலய ஸ்வாமின் வேணி மாதவ தே நமஹ
சங்க சக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜ சதுர்வர்க பலாதார வேணி மாதவ தே நமஹ; த்வத் பாத ப்ரணதம் மாம் த்வம் கமல ஸ்ரீ முகா த்ருசா உத்தரஸ்வ மஹோதார வேணீமாதவ தே நமஹ.

சனகாதி முனிவருக்கு ஆதிசேஷன் உரைத்த த்ரிவேணி தேவி ஸ்தோத்ரம் வ்யாஸர் அருளிச்செய்தது. உடல் இந்திரியங்கள். ப்ராணன் மனது, புத்தி. சித்தம் அஹங்காரம் அஞ்ஞான துகள்கள் போன்ற அனைத்தையும் தனது ப்ரகாசத்தால் ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

ஜாக்ரத் ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்று நிலைகளிலும் ப்ரகாசிக்க செய்பவளும் இவற்றின் விகாரங்களை மாற்றுபவளும் விகாரங்களை அகற்றுபவளுமாக உபனிஷத்துகளால் போற்றப்படும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஸுஷுப்தி நிலையில் அறிவு அழியும்போதும் இந்திரியங்களின் ஆளும் சக்தி குறையும் போதும் கூட என்னை நடமாட வைக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும். அனைத்து உலக விஷயங்களிலும் தினம் கட்டுண்டு கிடக்கும் எம்மோடு தாமே வந்து கலந்து அபரிமிதமான ப்ரியம் செலுத்தி ஆதரிக்கும் ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்.

மறைபொருளான விஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின் பலவிதமான வேறுபாடுகளை ப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்.

ஆரம்பத்தில் ப்ருஹ்மாவையும் மத்தியில் விஷ்ணுவையும் இறுதியில் சிவனையும் ப்ரகாசபடுத்தி காட்டும் திரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்..

அகார வடிவில் ப்ருஹ்மா விசுவேதேவ ஸ்வரூபி; மகார வடிவில் அக்னி ஸ்வரூபி;என்று தேஜஸ் ஸூத்ரம் சொல்வதை உணர்த்தும் த்ரிவேணி தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்;

சிவபெருமானின் தேகத்திலிருந்து வேறுபடாதவளும் முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும் ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீ தேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்
இந்த துதியை தினமும் காலை, மதியம் மாலை சொல்பவர்களுக்கு திரிவேணிதேவி பிரசன்னமாகி அருள் புரிவாள் என்பதில் சந்தேகம் இல்லை;

மந்திர ஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸ பகவான் செய்தது. இதை ஜபிப்பதால் திரிவேணி தேவி நம்மோடு எப்போதும் இருந்து காப்பாற்றுவாள்..

காசி யாத்திரை பகுதி 2 பிரயாகை

பகுதி 2 பிரயாகை

by K. Hariharan

Do you need loan?

Hello.

Are you in Need of a Loan? Do you need a Business Loan or do you need a Refinance Loan? Now you have an answer to you financial Problems now.

We offer Loans @ low interest 3% rate.

Interested persons should please contact Mr. Sheikh Wahab Ahmad

Position Loan Payment Officer
Cell & WhatsAPP +15593826918
Email: sheikhwahab@islamicfb.com

With the details below for more information.
Name:
Loan Amount:
Loan duration:
Country:
Phone Number

Thanks for your anticipation.

Elaine Slark