மார்கழியின் சிறப்பு;

மார்கழியின் சிறப்பு;

மார்கழி மாத சிறப்புகள்

நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆகவே தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலத்திற்கு(தை மாதம்) முந்திய மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம். தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.

எல்லோரும் நினைப்பது போல மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சிவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.

தட்சாயண காலத்தின் கடைசி மாதம் மார்கழி, ருதுவில் இது ஹேமந்த ருது. தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. வேத ஞானத்தின் மணி முடியாகத் திகழும் ஸ்ரீமத் பகவத் கீதையில் “மாஸானாம் மார்கசீர்ஷோ அஹம்” அதாவது “மாதங்களில் நான் மார்கழி” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார். இம்மாதத்தில் தான் பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ஜ”னனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றது. சிவ பெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை என்னும் ஆதிரை தரிசனம் அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த நடராஜப் பெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளிகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் இன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.

பல சைவத்தலங்களில் இவ்விழா பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்றும், முப்பத்து முக்கோடி ஏகாதசியென்றும் போற்றப்படுகின்றது. பல வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அத்யயனோற்சவம் நடைபெறுகின்றது.

மார்கழி மாத சிறப்புகள்

 நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆகவே தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலத்திற்கு(தை மாதம்) முந்திய மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம். தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.

எல்லோரும் நினைப்பது போல மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சிவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.

தட்சாயண காலத்தின் கடைசி மாதம் மார்கழி, ருதுவில் இது ஹேமந்த ருது. தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. வேத ஞானத்தின் மணி முடியாகத் திகழும் ஸ்ரீமத் பகவத் கீதையில் "மாஸானாம் மார்கசீர்ஷோ அஹம்" அதாவது "மாதங்களில் நான் மார்கழி" என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார். இம்மாதத்தில் தான் பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ஜ"னனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றது. சிவ பெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை என்னும் ஆதிரை தரிசனம் அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த நடராஜப் பெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளிகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் இன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.
பல சைவத்தலங்களில் இவ்விழா பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்றும், முப்பத்து முக்கோடி ஏகாதசியென்றும் போற்றப்படுகின்றது. பல வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அத்யயனோற்சவம் நடைபெறுகின்றது.

Narendra Modi speech at Trichy

Subject: [TamilBJP] திருச்சியில் நரேந்திர மோதி உரை: ஒரு பார்வை
Live Video here
திரு. நரேந்திர மோதி திருச்சியில் உரையாற்றி முடித்து விட்டார். சம்பிரதாயமாக தமிழில் ஆரம்பித்து, பிறகு ஹிந்தியில் மிக உணர்ச்சிகரமாக பேசினார். நடுவில் சில பகுதிகள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தன. இயல்பாகவே மிகச் சிறந்த பேச்சாளர் மோதி. இந்த உரையும் அதற்கு விதிவிலக்கல்ல. தமிழக பாஜக தலைவர் ஹெச்.ராஜா நன்றாகவே மொழியாக்கம் செய்தார். ஆனால் மோதியின் குரலில் இருந்த உணர்ச்சிகள், ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ராஜாவின் மென்குரல் பேச்சில் கொஞ்சம் நீர்த்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.
 
தொடக்கத்தில் இன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியான நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரண்டு நிமிடம் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்த படியே மௌனம் அனுஷ்டிக்கக் கோரினார் மோதி.  பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்,  அலைபாயும், கூச்சல் போடும் கூட்டத்தை அமைதிப் படுத்தி தன் நிலைக்குக் கொண்டு வந்து பேச்சில் கவனம் குவிக்கவும் இது உதவியது. பேசப் போகிற விஷயம் கைதட்டலுக்கானது மட்டுமல்ல, கவனத்திற்கானது என்று அறிவிப்பது போலிருந்தது இது.
 
modi_trichy”கம்பனும் வள்ளுவனும் பாரதியும் பிறந்த தமிழ் மண்ணிற்கு வருகை தருவதை மதிப்புக்குரிய விஷயமாகக் கருதுகிறேன். தமிழ் மக்களிடம் மூன்று நல்ல குணங்கள் உண்டு – கடும் உழைப்பு, சிரத்தை, ராஜகம்பீரம் & விசுவாசம் (royal & loyal). தமிழகத்தின் பொருட்கள் தேசிய, உலக சந்தைகளில் தரம் வாய்ந்தவையாக உள்ளன. தமிழ் மக்களின் உழைப்பினால் தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது, தமிழ் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த மொழி” – இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டுக்கும் மக்களுக்கும் புகழாரம் சூட்டித் தனது உரையைத் தொடங்கினார்.
 
அடுத்து, குஜராத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவுகளை, ஒற்றுமைகளைப் பட்டியலிட்டார். ”இரண்டும் கடற்கரைகள் கொண்ட மாநிலங்கள். பருத்தியை அதிகமாக விளைவிக்கிறது குஜராத், அதைப் பெருமளவு நுகர்ந்து ஆடையாக நெய்கிறது தமிழகம். குஜராத்தி காந்தியின் மனசாட்சியாக தமிழகத்தின் ராஜாஜி இருந்தார்.  தமிழ் மக்கள் குஜராத்திற்குப் புலம்பெயர்ந்து அதன் வளர்ச்சிக்கு உதவுவது போலவே, சௌராஷ்டிரர்களான குஜராத்திகள் தமிழ்நாட்டில் பல காலமாக இருக்கிறார்கள்.  பாலில் சர்க்கரை கலந்தது போன்ற இனிய உறவு அது. இங்கு சென்னையில் குஜராத்திகள் அதிகமாக வசிக்கும் சௌகார்பேட்டை போல  குஜராத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மணிநகர். எனது சட்டசபைத் தொகுதி அது. அங்குள்ள தமிழர்கள் தான் தொடர்ந்து வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்” என்று  நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
 
இது ஒரு சாதாரண அரசியல்வாதி பேசும் பேச்சல்ல. இந்த தேசத்தின் மீது, மண்ணின் மீது, காலகாலமாக இருந்து வரும் அதன் சமூக, கலாசார பந்தங்களின் மீது ஆழமான பிடிப்பும், அன்பும் கொண்ட ஒருவரின் பேச்சு. எண்ணமும், செயலும் எல்லாம் இந்த தேசத்தை ஒற்றுமைப் படுத்துவதற்காகவே, இந்த தேசமக்களின் நல்வாழ்விற்காகவே இயங்கும் ஒரு தேசபக்தனின் பேச்சு. எத்தனை உரை எழுத்தாளர்களை வைத்துக் கொண்டாலும் காங்கிரசின் முட்டாள் இளவரனிடம் இருந்தோ, அல்லது மற்ற  சுயநல அரசியல்வியாதிகளின் வாயிலிருந்தோ இப்படி ஒரு பேச்சு சுட்டுப் போட்டாலும் வராது.
 
குஜராத்தின் மீனவர்களை பாகிஸ்தான் பிடித்துச் சென்று சித்ரவதை செய்வதையும், தமிழக மீனவர்களை இலங்கை அதே போன்று செய்வதையும் குறித்து அடுத்துப் பேசினார்.. இந்த நாடுகள் இப்படித் துளிர்த்துப் போய் விட்டதற்கு இடையே உள்ள கடல் நீர் காரணமல்ல,  தில்லியில் உள்ள பலவீனமான அரசும் அதன் கொள்கைகளுமே காரணம்.  இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கொல்கிறது. பாகிஸ்தானிய ராணுவம் நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறது.. பயங்கரவாதம் அபபவியான பொதுமக்களைக் கொல்கிறது, பூடான், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் கூட இந்தியாவை மதிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணமான அந்த பலவீனமான அரசை அகற்ற வேண்டும் – என்று முழங்கினார்.
 
அமெரிக்கா தனது மண்ணில் அநியாயமாக உளவறிந்து வருவதை அறிந்து, அந்த நாட்டுடனான ராஜரீக தொடர்புகள் அனைத்தையும் பிரேசில் துண்டிக்கிறது. தனது நாட்டின் தேசதுரோகியான ஸ்னோடன் என்பவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்ததால், தனது ரஷ்யப் பயணத்தையே அமெரிக்க அதிபர் ஒபாமா ரத்து செய்தார். இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றோம்? நமது பிரதமரோ பயங்கரச் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட தொடர்ந்து பாகிஸ்தானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார், அதன் அரசியல் தலைவர்களூடன் உட்கார்ந்து சிக்கன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்..  இந்த செயலை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.  இல்லை என்று பெரும் எதிரொலி வந்தது.
 
அடுத்து, காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ள பொருளாதார சீரழிவு குறித்து பேசினார்.
 
narendra-modi-trichy-295“இதே நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகள் நீடித்தால் இப்போது நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் சாலையோரங்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப் படுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதை சுட்டிக்  காட்டினார். ”அரசின் தவறான கொள்கைகளால் தொழில்கள் அழிகின்றன.  பெரும் வணிக முதலைகளுக்கு உதவும் அரசு, சிறிய தொழில் முனைவர்கள் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் போனால் அவர்களது பெயர்களை செய்தித் தாளில் விள்ம்பரப் படுத்தி அவர்களை அவமதித்து தற்கொலை வரை கொண்டு தள்ளுகிறது.  இந்தக் கொள்கைகள் மாற்றப்பட்டு  லட்சக்கணக்கான கோடிக்கணக்கான சிறீய தொழில்கள் வளர்க்கப் பட்டு அதன் மூலம் நமது இளைஞர்கள் மதிப்புக்குரிய வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் எங்களது அரசின் திட்டங்கள் இருக்கும்.
 
ஊழல் நமது பொதுவாழ்வை அழிக்கிறது. ஏழை மக்களைச் சென்று சேர வேண்டிய பணம் ஊழலில் வீணாகிறது. ஆதார் அட்டை என்ற திட்டம் குறித்த ஐயங்களை மூன்று வருடம் முன்பே நான் தெரிவித்தேன், அதே விஷயங்களை இப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்கிறது.  பண விரயம் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கும் வகையில் இந்த ஆதார் அட்டை முறைகேடுகள் உள்ளன.
 
காங்கிரசின் அரசியல் எப்போதும் மக்களைப் பிளப்பதாக, பிரிப்பதாக இருக்கீறது. சாதி, மதம், கிராம – நகர வேறுபாடு என்று பல முனைகளில் தொடர்ந்து மக்களைப் பிரித்தாளும் கொள்கைகளை காங்கிரஸ் செயல்படுத்தி வருகீறது.  காங்கிரசைக் கலைக்க வேண்டும் என்று அன்று காந்தி சொன்னதை உண்மையாக்கும் வகையில் நாம் தேசத்திற்கு காங்கிரசிடமிருந்து விடுதலை அளிக்க வேண்டும்” என்றார்.
 
”இந்த மைதானம் நிறைந்து, அதற்குப் பின்னுள்ள பாலத்தைத் தாண்டியுள்ள மைதானமும் நிறையும் அளவுக்கு இளைஞர்களின் கூட்டம் இங்கு கூடியுள்ளது. அந்த இளைஞர்களை என்னால் பார்க்க முடியவில்லை.. மைதானம் சிறியது, அதில் இடமில்லாமல் போகலாம்., ஆனால் என் இதயத்தில் எப்போதும் உங்கள் அனைவருக்கும் இடம் உண்டு.
 
தமிழக அரசியலையும் தேசிய அரசியலையும் அறிந்தவர்கள் இளைஞர்களின் இந்தக் கூட்டத்தைப் பார்த்தே இங்கு எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கீறது என்பதைக் காண முடியும், பல முறை தமிழ் நாட்டுக்கு வந்திருக்கிறேன்,. இது போன்ற ஒரு இளைஞர் பெருந்திரளை இது வரை கண்டதில்லை, இங்கு வந்த அனைவருக்கும், ஏற்பாடு செய்த இளைஞர் அணியினருக்கும் மிக மிக நன்றி.
 
நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறேன். எங்களது சக்தி அனைத்தையும் உங்களது முன்னேற்றத்திற்காக, நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். நீங்கள் எனக்கும் பாஜகவுக்கும் புதிய நம்பிக்கையையும் வலிமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். வந்தே மாதரம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
 
இறுதியில் அனைவரும் முஷ்டிகளை உயர்த்தி வந்தே மாதரம் என்று முழங்கச் செய்தது சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.
 
சிறப்பான நிகழ்ச்சி.  அருமையான உரை. தனிப்பட்ட அளவில், மோதி இன்னும் சில விஷயங்களையும் பேசியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டது குறித்து கட்டாயம் பேசப்பட்டிருக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணன் இலேசாக தன் பேச்சில் இதைச் சுட்டிக் காட்டினார்,  தமிழகத்தின் மின்சாரத் தட்டுப்பாடு,   இலங்கையில் தேர்தல் முடிந்த நிலையில் தமிழர்கள் மறுவாழ்வு குறித்த எதிர்பார்ப்புகள் ஆகிய விஷயங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார். அது போதாது. மோதியும் இந்த விஷயங்களைப் பேசியிருக்க வேண்டும்.
 
மொத்தத்தில் இது ஒரு மிக வெற்றிகரமான நிகழ்வு. மோதியின் திருச்சி விஜயம் கட்டாயம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும், மோதி பிரதமராகப் போகும் வரலாற்றுத் தருணத்தில் தமிழகமும் தனக்குரிய பங்களிப்பை நல்கும் என்றும் நம்புவோம்.
 
நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை இந்த இணைப்புகளில் காணலாம்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்”

 • ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

  அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

  அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:

  “ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?”

  துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

  குறள்: 314
  “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
  நாண நன்னயம் செய்துவிடல்”
  மு.வ உரை:
  இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
  Translation:
  To punish wrong, with kindly benefits the doers ply;
  Thus shame their souls; but pass the ill unheeded by.
  Explanation:
  The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

  ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். "அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:

"ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?"

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.குறள்: 314
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் 
நாண நன்னயம் செய்துவிடல்”
மு.வ உரை:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
Translation: 
To punish wrong, with kindly benefits the doers ply; 
Thus shame their souls; but pass the ill unheeded by.
Explanation: 
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
  ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

  அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

  அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். “அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி….” என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:

  “ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?”

  துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில் தடால் என்று விழுந்து அழுதான் அந்த இளைஞன்.

  குறள்: 314
  “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
  நாண நன்னயம் செய்துவிடல்”
  மு.வ உரை:
  இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
  Translation:
  To punish wrong, with kindly benefits the doers ply;
  Thus shame their souls; but pass the ill unheeded by.
  Explanation:
  The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

அன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்

அன்ர்ரடம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்
(ஜலகண்டத்தை போக்கிட)
ஓம் ஜலபிம்பாய வித்மஹே
நீலபுருஷாய தீமஹி
தன்னோ அம்பு ப்ரசோதயாத்

ஓம் ஜீவதேவாய வித்மஹே
கந்தர் பகளாய தீமஹி
தன்னோ ஜல ப்ரசோதயாத்

ஓம் ஜலாதிபாய வித்மஹே
தீர்த்தராஜாய தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்

நைருதி(இரவில் தனி வழி நடப்போருக்கு)

ஓம் நிசாசராய வித்மஹே
கட்க ஹஸ்தய தீமஹி
தன்னோ நைருதி ப்ரசோதயாத்

ஓம் கட்காயுதாய வித்மஹே
கோணஸ்திதாய தீமஹி
தன்னோ நிருதிப்ரசோதயாத்

இந்திரன்
( உடலின்பம் சுக்ல, சுரோனித விருத்தி மற்றும் சகல இன்பங்கள் பெற)

ஓம் தத்புரஷாய வித்மஹே
சஹஸ்ராக்ஷாய தீமஹி
தன்னோ இந்திர ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோச் இந்திர ப்ரசோதயாத்

ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ரப்ரசோதயாத்

இந்திராணி
(அழகு பெற)

ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தன்னோ இந்த்ராணி ப்ரசோதயாத்

குபேரன்
(செல்வங்கள் நிலையாக இருக்க)

ஓம் யக்ஷராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

எமன்
(துர் மரணம் நிகழாமல் இருக்க)

ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ எம ப்ரசோதயாத்

ஓம் காலரூபாய வித்மஹே
தண்டதராய தீமஹி
தன்னோ எம ப்ரசோதயாத்

அனந்தன்
(நாக தோஷம் நீங்க)

ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ அனந்த ப்ரசோதயாத்

ஓம் அனந்ததேசாய வித்மஹே
மஹாபோகாய தீமஹி
தன்னோ அனந்த ப்ரசோதயாத்

ஆதிசேஷன்
(சர்ப்ப பயம் போக்கிட)

ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ சேஷ ப்ரசோதயாத்

ஓம் சர்பராஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ வாசுகி ப்ரசோதயாத்

நாகர்
(ஸர்ப்ப தோஷம் நீங்க)

ஓம் நாகராஜாய வித்மஹே
சக்ஷுச்ரவணாய தீமஹி
தன்னோ சர்பப்ரசோதயாத்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை, கால்களில் பயங்கர வலி!

Varagooran Narayanan 5 May 14:04
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை, கால்களில் பயங்கர வலி!

By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை – 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771

நான் ஒரு மலையாளி. வயது 67. தினமும் தலைக்குச் சாதாரண தண்ணீரில்தான் குளிக்கிறேன். கடந்த 4 மாதமாக கை, கால்களில் பயங்கர வலி உள்ளது. சரியாக அசைக்கவோ, மடக்கவோ முடியவில்லை. இரவில் வலி கூடுகிறது. உடம்பு தேய்த்துக் குளிக்க கையைத் தூக்க முடியவில்லை. இந்த உபாதை தீர வழி உள்ளதா?

எம்.ருக்குமணி, தண்டையார்பேட்டை.

தண்ணீரிலுள்ள குளிர்ச்சி தலை வழியாகக் கழுத்துத் தண்டுவடப் பகுதியில் இறங்கினால், அப்பகுதியிலுள்ள வில்லைகளின் திடமான உயரமும், அதன் ஸ்திரத் தன்மையும் கலகலத்துவிடக் கூடும். அவை மெலிந்தாலோ, தன் இடம் விட்டு நெகிழ்ந்தாலோ, நரம்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, கைகளில் கடும் வலியை ஏற்படுத்தும். குளிர்ச்சியான தண்ணீரை தலையில் விட்டுக் கொண்டால், நரம்புகளிலுள்ள வாயு எனும் தோஷம் சீற்றமடையும். அதனால் தண்டுவடப் பகுதியிலுள்ள நரம்புகளில் குடிகொண்டுள்ள கண்களுக்குப் புலப்படாத வாயு சீற்றமடைந்து, உங்களுக்கு உடல் வலியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

தண்டு வடத்திலுள்ள குளிர்ச்சியை மாற்றுவதற்கு, சூடான வீர்யம் கொண்டதும், வலி நிவாரணியாகவும் செயல்படக் கூடிய நொச்சி, எருக்கு, ஆமணக்கு, கற்பூரம், கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கை போன்றவற்றின் இலைகளை ஒரு துணியில் மூட்டை கட்டி, சட்டியில் போட்டு சூடாக்கி, முதுகுத் தண்டுவடப் பகுதியில் கழுத்து முதல் கீழ் இடுப்பு வரை ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது. இதைக் காலையில் உணவுக்கு முன் செய்து கொள்வதுதான் சிறந்தது. குளியலை மாலை வேளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

மாலை வேளைகளில் கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைக் கலந்து நீராவியில் சூடாக்கி, தண்டுவடம் முழுவதும் மேலிருந்து கீழாக, இதமான பதத்தில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அதன் பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். தலைக்குக் குளிர்ந்த தண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர்க்கவும்.

“க்ரீவாவஸ்தி’ என்று ஒரு சிகிச்சைமுறையும், “கடி வஸ்தி’ என்ற ஒரு முறை வைத்தியமும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். உளுந்து மாவை கழுத்தின் தண்டுவடப் பகுதியில் வரம்பு கட்டி, அதனுள்ளே மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக ஊற்றி, சுமார் 1/2 – 3/4 மணி நேரம் ஊற வைத்து, எண்ணெய்யைப் பஞ்சால் முக்கி ஒரு பாட்டிலில் சேகரித்து, வரம்பை எடுத்துவிடும் சிகிச்சை முறையால் பல அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க இயலும். இதற்கு “க்ரீவா வஸ்தி’ என்று பெயர். இதே சிகிச்சை முறையை இடுப்புப் பகுதியில் செய்தால் அதற்கு “கடி’ வஸ்தி என்று பெயர்.

சூடான வீர்யம் கொண்ட மூலிகைத் தைலங்களில் ஒன்றை 2 -4 சொட்டுகள் மூக்கினுள் விட்டு, உறிஞ்சித் துப்பிவிடுதல் எனும் நஸ்ய சிகிச்சை முறையால், குளிர்ச்சியால் ஏற்பட்டுள்ள கழுத்து எலும்புப் பகுதியின் வலியைக் குறைக்க முடியும். இதற்குப் பிறகு, தவிடு மாவு கொண்டு சூடாக கழுத்தில் ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே.

குளிர்ந்த தரையில் படுப்பது, குளிரூட்டப்பட்ட அறையில் சில்லிட்டிருக்கும் தலையணையின் மீது கழுத்து எலும்பு படும்படி படுத்தல், குளிர்ந்த நீரைப் பருகுதல், வெயிலில் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்ததும், குளிர்ந்த பானங்களைப் பருகுதல் போன்ற செயல்களை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

குடலில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். கறிகாய்களால் தயாரிக்கப்பட்ட சூப், மிளகு ரசம், தனியா, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துப் பொடிக்கப்பட்ட பொடி சாதம், கறிகாய் கூட்டு வகையறா, மோர் புளித்தது போன்றவை சாப்பிட உகந்தவை.

ஸஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், யோகராஜ குக்குலு, குக்குலு திக்தகம் கஷாயம், ராஸ்னா ஸப்தகம், ஸப்தஸôரம் போன்ற மருந்துகளில் உகந்ததை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

Image
பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

தமிழ் மொழியிலே கூட அவருக்கிருக்கும் அறிவு முத்தமிழ்க்

காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை

கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி

என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது

சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா

சொன்னால் தெரிந்து கொள்கிறேன்!” என்றார்

“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது
இந்த எழுத்து வரக் கூடிய எந்தச் சொல்லும், அழகு,இனிமை
அவற்றைக் குறிப்பதகாவே இருக்கும். மழலை,குழல், அழகு,
குழந்தை,கழல்,நிழல்,பழம்,யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில்
உடையது ‘தமிழ்’ (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்கிறார்.உடனே
கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி
எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்!”என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
“யாமா மாநீ யாமா மா” என்ற மாற்றுமாலைப் பதிகம் மிகவும்
கடினம். அவற்றுள் ஒன்றைப் பெரியவா எடுத்து, மிகவும்
கடினமான அந்தப் பதிகத்தைப் பிரித்துப் பிரித்து மிக
எளிமைப்படுத்திப் பொருள் சொன்னார். பெரிய வித்வான்கள்
பிரமித்துப் போனார்கள்.

அதுபோல் காளமேகப் புலவர் பாடிய பாடலில் ஒன்று,
முக்கால்,அரை,கால், அரைக்கால்,இருமா,மாகாணி,ஒருமா,கீழரை
என்று குறைந்துகொண்டே வரும் அளவுகளை வைத்து
எழுதுகிறார், தெரியுமா?” என்று கேட்டு,

முக்காலுக்கு ஏகாமல் முன்னரையில் வீழாமுன்
அக்கா வரைக்கால் கண்டு அஞ்சா முன்
விக்கி இருமாமுன், மாகாணிக்கேகாமுன்
கச்சி ஒருமாவின் கீழரை இன்றோது….

என்ற பாட்டை பெரியவா எடுத்துக் காட்டுகிறார்.அதன்
பொருளையும் தனக்கே உரிய முறையில்,
“முக்கால்னா மூன்று கால்கள். வயதான் பின் இரண்டு
காலில் நடக்கத் தள்ளாடி ஒரு தடியை மூன்றாவது
காலாகப் பயன்படுத்துகிறோமே…..அந்த நிலை
வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்…நரை வருவதற்கு
முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்….
யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு முன்…..
ஊருக்கு வெளியிலுள்ள மாகாணி என்ற சுடுகாட்டுக்குப்
போகும் முன்…காஞ்சியில் ஒரு மாமரத்தின் கீழ் உள்ள
ஏகாம்பரேசுவரரை இன்றைக்கே துதிப்பாய்!”

என்று மிக அழகாக விளக்குகிறார். மேலும் “என்ன அழகு
பார்த்தேளா! ஏகாம்பரரை, அந்த ஒன்று என்ற எண்ணுக்குக்
கீழேயே கொண்டுவந்து கீழரை வரை எட்டு அளவுகளையும்
கோத்துத் துதித்திருக்கிறாரே!” என்று சொல்லிச் சொல்லி
மகிழ்ந்தார். எதையுமே இப்படி விளக்கமாகப் பொழிந்து
தள்ளியதைக் கேட்டவர்கள் பாக்யசாலிகள்.

(எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது)