எளிய பாட்டி வைத்தியம்


எளிய பாட்டி வைத்தியம்:-

* கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

* நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

* பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

* படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

* நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

* நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

* இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

* மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

* கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

* வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

* கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

 

வேம்பின் மகத்துவம்


 

வேம்பின் மகத்துவம் :

சைனஸ் தொல்லைக்கு வேப்ப எண்ணெய்! இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா….

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

 

ஆசை


பகவத் கீதையின் மொத்த கருத்துகளின் சாரம் கடமை அல்லது கர்மாவை பலனை எதிர் பாராமல் செய்வது ஒன்றே. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ள 999 நாமங்களும் ராம என்கிற நாமத்துக்குள் அடக்கம். பைபிளின் சாரம் உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்பதாகும். நான்கு வேதங்களின் சாரம் பரமாத்மா மட்டுமே. இப்படி எல்லா பெரிய விஷயங்களும் ஒரு கபுறிப்பிட்ட உயர்ந்த விஷயத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. அது போல புத்தரின் போதனைகள் அனைத்திற்கும் அடிப்படையான கருத்து ஆசை என்பதே. அதாவது ஆசையை ஒழிக்க வேண்டும் என்பதே சூக்குமக் கருத்தாகும்.

உலகம் முழுவதையும் பரமாத்மாவிடம் இருந்து விலக்கி வைப்பது ஆசை என்னும் சாத்தானே. அதன் வயப்பட்ட அஞ்ஞானி அதை உற்ற நண்பனாகக் கருதி வாழ்கிறான். பிறகு அதனால் விளையும் துன்பங்கள் வலுக்கும் போது ஆசை நல்வாழ்வின் சத்ரு என்பதை உணர்கிறான். ஆனால் அந்த உணர்தல் கொஞ்ச நேரந்தான். மீண்டும் ஆசையெனும் வலையில் வீழ்ந்து மாய்கிறான். ஓட்டைச் சட்டியில் எப்படி நீரை ஊற்றி நிரப்ப முடியாதோ, அதுபோல ஆசைகளை நிரப்பி ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியாது.

எதிரி எங்கிருக்கிறான் ? எப்படி இருக்கிறான் ? என்பது தெரிந்து கொண்டால் அவனை வெல்வது எளிது. அது போல இந்த ஆசை எனும் எதிரி எங்கிருக்கிறான் ? என்று கவனித்தால் அவன் நமது மனக் கோட்டையில் வசிக்கிறான் என்பது தெரிய வரும். மனதையும், புத்தியையும், இந்திரியங்களையும் கைப்பற்றி தன் வசப்படுத்தி வைத்துக் கொண்டு ஆசை இந்த மொத்த உலகையும் ஆட்டிப் படைக்கிறது. ஆன்மாவுக்கு சேவை செய்ய அமைந்துள்ள கருவி கரணங்கள் அனைத்தும் ஆசைக்கு அடிமைப்பட்டு ஜீவனை துன்பத்தில் சிக்க வைக்கின்றன. இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவன் வசமுள்ள கருவி கரணங்களை முற்றுகையிட்டுக் கைப்பற்ற வேண்டியது மட்டுமே. அதற்கு முதலில் இந்திரியங்களை முற்றுகையிட்டுக் கைப்பற்றி விட்டால் நம் எதிரியாகிய ஆசைக்கு இருப்பிடம் இல்லாது போய் விடுகிறது. ஆத்ம சொரூபத்தை மறைப்பதால் ஆசை பாவ சொரூபமாகும். அத்தகைய ஆசையை வெல்வதே விவேகமும், வீரமும் ஆகும்.

என்றுமே ஸதூலத்தை விட சூக்கும் மேலானது. அதாவது உடலை விட இந்திரியங்கள் மேலானது. இந்திரியங்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. புத்தியினும் மேலானது ஆத்மாவாகும். அதாவது பழத்தின் மேல் தோலில் இருந்து உள்ளே போகப் போக பழத்தின் சூக்குமமான சுளையை அடைகிறோமோ, அது போல தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி என்று அனைத்தையும் வென்று உள்ளே போகப் போக ஆத்ம தரிசனம் வாய்க்கிறது. நமது பருத்த உடலை விட பொறிகள் மேலானவை. ஏனென்றால் உடலை விட பரந்த போக்கில் அவை வினை புரிகின்றன. மனம் அவற்றை விட சூக்குமமானது. அது உணர வல்லது. அதை விடப் பெரியது புத்தி. மனம் சந்தேகம் கொள்வது. புத்தியோ மெய்ப் பொருளை நிச்சயிக்கிறது. அந்த புத்திக்கும் எட்டாதது ஆத்மா. அது மிகவும் பெரியது. எனவேதான ஆசையானது மனம் முதலியவற்றைப் பற்றிக் கொண்டு ஆத்ம சொரூபத்தை மறைக்கிறது.

ஆசையானது இந்திரியங்களையும், மனதையும், புத்தியையும் பற்றி நிற்கும் போதுதான் ஜீவபோதம் வளர்கிறது. இதனால் மனிதனுக்குத் துன்பங்களே விளைகின்றன. ஆனால் மனிதனோ இதையே இன்பம் என்று எண்ணி இருந்து விடுகிறான். இறுதியில் ஒவ்வொரு இன்பமும் துன்பமாகப் பரிணமிப்பதை அறியும் போதுதான் உண்மை புலப்படுகிறது. இந்திரியங்கள், மனது, புத்தி இவையாவும் இறைவனை அடைந்திட விரும்பும் போது, அருள் தாகம் பெருகும் போது ஆசையெனும் விஷம் அடிபட்டு ஒழிகிறது. ஜீவபோதம் தேய்ந்து, பரபோதம் வளர்கிறது. பேரானந்தம் ஊற்றெடுக்கிறது. அதற்குப் பிறகு துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாம் பார்த்து விட்டோம் என்று தெரிந்தால் திருடன் எப்படி தலை தெறிக்க ஓடுவானோ, அது போல ஆசையின் சுபாவம் இன்னதென்று நமக்குத் தெரிந்து விட்டால் ஆசை ஒழிந்து போய்விடுகிறது.

 

தேன்யின் மருத்துவம் குணங்கள்! ! ! !


தேன்யின் மருத்துவம் குணங்கள்! ! ! !

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.