கணபதி

!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0],p=/^http:/.test(d.location)?’http’:’https’;if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=p+”://platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

” } Google+

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு.

இந்தியாவில் ஒரு சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காண்பது அபூர்வம்.

ஈடிணையற்ற தெய்வங்களான ஈசனுக்கும் பெருமாளுக்கும் எல்லா இடங்களிலும் கோவில் அமைத்துவிட முடியாது.

ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியில்லை.

ஒரு தெருக்கோடியிலோ, முச்சந்தியிலோ விநாயகரை ஸ்தாபித்துவிடலாம்.

ஏன், வீட்டிலேகூட விளக்கு மாடம் போன்ற சிறு இடத்தில் பிள்ளையார் சிலையை நிறுவி வழிபடுபவர்கள் பலர்.

பசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோகூட கையால் பிடித்து பிள்ளையாராக உருவகித்து வழிபடுகிறோம்.

கணபதிக்கு பிரியமான 21

கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ,

அறுகம்புல்,

அதிரசம்,

அப்பம்,

கொழுக்கட்டை,

பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர்.

அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5;

கர்மேந்திரியங்கள்-5;

அவற்றின் காரியங்கள் 5+5=10;

மனம்-1.

ஆக மொத்தம் 21.

விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்தி ரியங்களும் கர்மேந்திரியங் களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை.

இதை நினைவு படுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் – 21

புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

இலைகள் – 21

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.

அபிúஷ்கப் பொருட்கள் – 21

தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர். மேற்கண்ட விவரம் கணபதி பூஜா மந்திரத்தில் உள்ளது.

“பக்கரை விசித்திரமணி’ எனத் தொடங்கும்

அருணகிரிநாதர் பாடலில் விநாயகருக்கு உகந்த 21 வகை நிவேதனப் பொருட்களின் பட்டியலைக் காணலாம்.

நிவேதனப் பொருட்கள் – 21

மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினைமாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.

திதிக்குரிய கணபதி

பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்குமே அதற்குரிய கணபதிகள் உள்ளனர்.

அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறந்த பலன் தரும் என்பர்.

பிரதமை- பாலகணபதி;

துவிதியை- தருண கணபதி;

திரிதியை- பக்தி கணபதி;

சதுர்த்தி- வீர கணபதி;

பஞ்சமி- சக்தி கணபதி;

சஷ்டி- துவிஜ கணபதி;

சப்தமி- சித்தி கணபதி;

அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி;

நவமி- விக்ன கணபதி;

தசமி- க்ஷிப்ர கணபதி;

ஏகாதசி- ஹேரம்ப கணபதி;

துவாதசி- லட்சுமி கணபதி;

திரயோதசி- மகாகணபதி;

சதுர்த்தசி- விஜய கணபதி;

அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி.

அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால், நம் வாழ்வில் எதிர்ப்படும் விக்கினங்கள் விலகி சகல வளங்களும் கைகூடும்.

கணபதி துதிகள்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.’

“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.’

“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்
வெற்றிமிகுத்து வேழவனைத் தொழ புத்தி மிகுத்துவரும்
வெள்ளிக்கொம்பின் விநாயகனைத் தொழ
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.’

“திருவாக்கும் செய்கருமம் கைகூடட்டும்
செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை.’

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’

“அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம் போம்
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்து மேவும்
கணபதியை கைத்தொழுக் கால்.’

“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைச் சாய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.’

“மண்ணுலகத்தினிற் பிறவி மாசற
எண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.’

“கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபல கற்பகம் எனவினை கடிதேகும்மத்தமும் மதியமும் வைத்திடும் அரண்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிற்றனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேளே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இயமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே.’

கணபதியை வணங்காது எந்தச் செயலை செய்யத் தொடங்கினாலும் அது முழுமை அடையாது; பலன் தராது என்பது சிவபெருமான் வாக்கு.

வரம் தந்த சிவனே கணபதியை வணங்காது த்ரிபுராசுரனை வதைக்கச் சென்றதால், அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது.

இதனை அருணகிரியார்,

“முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!’

என்று பாடுகிறார்.

கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா?

காகரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினாரே!

கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீரங்கநாதர் நமக்குக் கிடைத்திருப்பாரா?

அவரது விக்ரகம் இலங்கைக்கல்லவா போயிருந்திருக்கும்.

கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார்.

அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது.

மாலைச் சந்தி கர்மங்களைச் செய்யவேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார்.

அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். அவன் திரும்பிவந்து பெற்றுக்கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர்.

அது அங்கேயே நிலைகொண்டுவிட்டது.

விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷணன்.

ஆனால் இயலவில்லை.

அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான்.

பின்னர் உண்மையறிந்து வணங்கிச் சென்றான்.

அவ்வாறு கோவில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர்.

திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர்.

அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.

இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார்.

இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம்பெற்று, அவரிடமிருந்து ஆத்மலிங் கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான்.

அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் ஆத்மலிங்கத்தைத் தர, அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர்.

அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோகர்ணம்.

அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலாம்.

பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள்.

ஆனால் விக்ன யந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதேவி சிவனையும் கணபதி யையும் நினைக்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார்.

அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது.

இதனை லலிதா ஸஹஸ்ர நாமம்,

“காமேஸ்வர முக ஆலோக
கல்பீத கணேஸ்வரா
மஹாகணேச நிர்பின்ன
விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’

என்று கூறுகிறது.

கணேச அவதாரமும் ஒரு விசித்ரம்.

பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, “யாரையும் உள்ளே விடாதே’ என்று கூறிச்சென்றாள்.

அப்போது சிவன் வர, காப்பா ளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன்.

தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, “”உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும்.

நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன்” என்றார்.

விக்னத்தை ஏற்படுத்து பவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன். ஆகவேதான் ஒரு விநாயகர் துதி,

“ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்’
என்று போற்றுகிறது.

அவரது தந்தை, தாயான சிவ- பராசக்தி வணங்கு வதால் அவரது பெயர் “ஜ்யேஷ்டராஜன்’ ஆயிற்று.

ஒருசமயம் மகாவிஷ்ணு வும் கணபதியும் விளையாடி னர். அச்சமயம், கணபதி மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை வாயில் போட் டுக் கொண்டு விட்டார்.

எவ்வாறு அதைத் திரும்பப் பெறுவது என்று யோசித்த மகாவிஷ்ணு, மேலும் விளையாடுவதுபோல், இரண்டு காதுகளையும் மாறித்தொட்டுக் கொண்டு, உட்கார்ந்து எழுந்தார்.

12 முறை இவ்வாறு செய்யவே, கணபதி மகிழ்ந்து சிரிக்க, சக்கரம் வெளிவந்ததாம்.

விஷ்ணு அதைப் பெற்றுக்கொண்டார். அதுதான் தோர்பிக் கரணம்- தோப்புக் கரணம் என்று ஆயிற்று. நாம் கணபதி முன்பு அவர் மகிழ- அருள தோப்புக் கரணம் போடுகிறோம்.

மதுரை மீனாட்சி சந்நிதியை அடையுமுன் பிராகாரத்தில் ஒரு பெரிய கணபதியைப் பார்க்கலாம்.

முக்குறுணிப் பிள்ளையார் என்று பெயர்.

கோவில் கட்டும்போது “கிடைத்த’ பிள்ளையார் என்பர்.

சிற்பி செதுக்காத பிள்ளையார் இவர்.

விநாயக சதுர்த்தி நாளில் முக்குறுணி அரிசி மாவில் பெரிய கொழுக் கட்டை செய்து இவருக்கு நிவேதிப்பர்.

கணபதி இல்லாவிட்டால் நமக்கு வியாசரின் உன்னத இதிகாசமான “மகாபாரதம்’ கிடைத் திருக்குமா என்ன? வியாசர் கூற எழுதியவர் கணபதிதானே!

தம்பி முருகனுக்கு வள்ளியை மணம் முடித்து வைத்தவரும் கணபதியல்லவா!

ஆதிசங்கரர் தனது ஷண்மதத்தின் உருவ வழி பாட்டில் “காணாபத்தியம்’ என்று கணபதி வழி பாட்டை வகுத்தார்.

புரா ணங்கள் பல எழுதிய வியாசர், கணேச புராணம் என்று தனியாக எழுத வில்லை. காரணம் என்ன? முத்கலர் என்ற மகரிஷி, திருவெண்காட்டில் கணபதி உபாசகராக இருந்து “முத்கல புராணம் அல்லது விநாயக புராணம்’ என்னும் நூலை விரிவாக எழுதியுள்ளார்.

கணபதி யின் அவதார காரணம் கஜமுகாசுரன் என்கிற அசுரனை அழிப்பதற்காக.

இறுதியில் கஜமுகாசுரன் எலி வாகனமாகி கணபதி யைத் தாங்கினான்.

கணபதியை எல்லா தெய்வங்களும் வணங்கினாலும் பிள்ளையார்பட்டி கணபதி கையில் சிவலிங்கம் இருக்கும்.

அந்த கணபதி சிவனை பூஜிக்கிறா ராம்.

கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத்கீதையில், “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யாப்ரயச்சதி’ என்று கூறுகிறார்.

“இலையோ, பூவோ, பழமோ, நீரோ யார் ஒருவன் பக்தியுடன் அளிக்கிறானோ அதனை மகிழ்வுடன் ஏற்று வரமளிப்பேன்’ என்று சொல்கிறார்.

அந்த துதி கணபதிக்கும் மிகப் பொருந்தும்.

Facebook

if(typeof(networkedblogs)==”undefined”){networkedblogs = {};networkedblogs.blogId=1267163;networkedblogs.shortName=”my-page-my-blog”;} !function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));http://www.facebook.com/pages/Khariharan/115524648579725

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

Ranjani Geethalaya(Regd.) (Registered under Societies Registration Act XXI of 1860. Regn No S/28043 of 1995) A society for promotion of traditional values through,  Music, Dance, Art , Culture, Education and Social service. REGD OFFICE A-73 Inderpuri, New Delhi-110012, INDIA Email: ranjanigeethalaya@gmail.com  web: http://ranjanigeethalaya.webs.com (M)9868369793 all donations/contributions may be sent to Ranjani Geethalaya ( Regd) A/c no 3063000100374737, Punjab National Bank, ER 14, Inder Puri, New Delhi-110012, MICR CODE 110024135  IFSC CODE PUNB00306300

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_GB/all.js#xfbml=1&appId=283013265118296”; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));

power by BLOGSPOT-PING

DlvrWidget({ width:300, items:5, widgetbg:’FFFFFF’, widgetborder:’CCCCCC’, titlecolor:’CCCCCC’, containerbg:’F9F9F9′, containerborder:’CCCCCC’, linkcolor:’86D8D5′, textcolor:’45240D’ }).render();