செவ்வாழை அருமருந்தாகும்.


செவ்வாழை…!!!

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது

வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

டிசம்பர் 10: ராஜாஜி என்று அழைக்கப்படும் ரா ஜகோபாலாச்சாரியார் பிறந்த தினத்தையொட்டி சி றப்பு பகிர்வு.


டிசம்பர் 10: ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினத்தையொட்டி சிறப்பு பகிர்வு..

இளம்வயதிலேயே கிட்டப்பார்வையால் கண்ணாடி போட்ட அவருக்கு பள்ளிக்காலத்தில் நண்பர்கள் வெகு குறைவாகவே இருந்தனர். அரசுப்பள்ளியில் படித்து முடித்த பின்னர் மெட்ரிகுலேசன் தேர்வில் சாதித்துக்காட்டினார் அவர். பின்னர் சட்டம் படித்து முடித்த பின்னர் சேலத்தில் பிரபல வழக்கறிஞர் ஆனார் அவர். அப்பொழுதே ஆயிரம் ரூபாய் ஒரு வழக்குக்கு வாங்குகிற அளவுக்கு வருமானம்
உடையவராக இருந்தார் அவர். 1917 இல் சேலம் நகராட்சி தலைவர் ஆனார் அவர். சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் ஆறு மணிநேரம் தினமும் உழைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார் ராஜாஜி.
1909-ஆம் ஆண்டு மகாகவி பாரதியாருடன் பழகும் வாய்ப்பு ராஜாஜிக்குக் கிடைத்தது. நாட்டு விடுதலைக்கான போராட்டம் குறித்து இருவரும் பல சந்திப்புகளில் விவாதித்தனர். இது பற்றி காந்தியடிகளையும் சந்தித்து ராஜாஜி பேசினார். சென்னையில் இருந்த ராஜாஜியின் வீட்டில்தான் மகாகவி பாரதியார் முதன்முறையாக காந்தியடிகளைச் சந்தித்தார்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஈர்க்க பல்லாயிரம் ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வக்கீல் தொழிலை துறந்தார் அவர். உப்பு சத்தியாகிரகத்தை தமிழ்நாட்டில் முன்னின்று நடத்தினார் அவர்.
1937 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றபின்னர் முதல்வர் ஆனார் அவர். மது விலக்கை சேலத்தில் முதன் முதலில் அமல்படுத்தினார் ராஜாஜி. பின்னர் கடப்பா,சித்தூர்,வட ஆற்காடு மாவட்டங்களில் மதுவிலக்கை விரிவுபடுத்தினார் ராஜாஜி. அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை சரிசெய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக விற்பனை வரியைக்கொண்டு வந்தார் அவர். ஆலய பிரவேசத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியப்படுத்தினார் விவசாயிகளின் கடன் சுமையை
குறைக்கவும் சட்டமியற்றினார்.

அடுத்து ஹிந்தி மொழியை 125 பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்புகளில் கொண்டு வந்தார். இந்தியாவின் அரசியல் மற்றும் வணிகத்தை செலுத்த ஹிந்தி அவசியம் என்று ராஜாஜி நினைத்தார். "குழந்தைகளுக்கு பாலூட்டும் பொழுது தாய் பலவந்தம் செய்தாலும் பரவாயில்லை. தமிழ்மொழி கால் போன்றது ; ஹிந்தி வண்டி மாதிரி ,ஆங்கிலம் ரயில் மாதிரி !" என்று விளக்கம் தந்தார் அவர். நாவலர்

சோமசுந்தர பாரதியார் தலைமையில் திருச்சியில் ஹிந்தி எதிர்ப்புக்குழு உருவானது. பெரியார் ,"ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று பித்தலாட்டம் பேசுகிறார். இங்கே தமிழ் எங்கே இருக்கிறது ?" என்று முழங்கினார். அண்ணா,பெரியார் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தார்கள். தாளமுத்து, நடராசன் எனும் இருவர் சிறையில் மரணம் அடைந்தார்கள். ஹிந்தி திணிப்புக்கு எதிராக சிறை சென்றவர்களை ,"அற்ப கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் !" என்று அழைத்தார் ராஜாஜி . இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேய அரசு ஈடுபடுவதை கண்டித்து காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியதால் ஹிந்து திணிப்பு அதோடு நின்று போனது.

ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார். போர்க்காலத்தில் ஆங்கிலேயருக்கு உதவ வேண்டும் என்று சொன்னார் அவர். பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வந்தார். 1951 ல் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கம்யூனிஸ்ட்கள் அதிக இடங்களில் வென்றிருந்தார்கள். ராஜாஜியை அழைத்தார்கள். காமன் வீல் கட்சி,தொழிலாளர் கட்சி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்தார் அவர். ராஜாஜி தன் வாழ்நாளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவதை பெரும்பாலும் தவிர்த்தே வந்திருக்கிறார்.

பதவிக்கு வந்ததும் போட்ட முதல் உத்தவரவு கைதிகளுக்கு மோர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தான். குலக்கல்வி முறையை அடுத்து கொண்டுவந்தார் அவர். ஐந்து பாடவேளைகள் என்பதை மூன்று பாடவேளைகள் என்று குறைத்தார் ராஜாஜி. ஷிப்ட் முறையில் ஒரே நாளில் இரண்டு பிரிவாக வகுப்புகள் நடக்கும். காலையில் பள்ளியில் படித்துவிட்டு மதியம் போய் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் பிள்ளைகள் உதவவேண்டும் என்று ராஜாஜி சொன்னார். அது சாதியத்தை காப்பாற்றவும், வலுப்படுத்தவும் செய்யும் என்று எதிர்த்தார்கள். பெரியார் ,"ராஜாஜி கிராமத்து பையனுக்கு கல்வி வேண்டாம் என்று சொல்கிறாரா ? மூன்றே பாடவேளைகள் என்பதால் மிச்ச நேரத்தில் அவன் கழுதை மேய்த்துக்கொண்டும், முடி வெட்டிக்கொண்டும், துணி துவைத்துக்கொண்டும்
இருக்க வேண்டுமா ?" என்று பொங்கினார். தொழிற்கல்வித்திட்டம் குலக்கல்வி என்று அழைக்கப்பட்டது.

ராஜாஜி அமைச்சரவையை கலந்து ஆலோசிக்காமல் இப்படி முடிவை எடுத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. "ராமானுஜர்,சங்கரர் முதலானோர் மற்றவரை கேட்டுவிட்டா தங்களின் தத்துவங்களை வெளியிட்டார்கள் ? இது நிர்வாக ரீதியான முடிவு " என்றார் ராஜாஜி. ஆனாலும்,ஆசிரியர்கள் ஆறு பாடவேளைகள் பாடமெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அவர்களுக்கு எந்த சம்பள
உயர்வையும் ராஜாஜி வழங்கவில்லை. அவர்களை கலந்தாலோசிக்கவும் இல்லை. பருலேகர் கமிட்டி அமைத்து ஆய்வு செய்து தான் செய்தது சரியென்று சொன்னார் ராஜாஜி. அவரின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து பதவி விலகினார் அவர்.

அவருக்கு பின்னர் காமராஜர் தமிழகத்தின் முதல்வர் ஆனார்.
ராஜாஜியின் வாழ்க்கையில் இருந்த நேர்மை சிலிர்க்க வைப்பது. கவர்னர் ஜெனரல், முதல்வர், கவர்னர், உள்துறை அமைச்சர் என்று எண்ணற்ற பதவிகளை வகித்த அவர் வாழ்ந்தது ஐம்பது ரூபாய் வாடகை வீட்டில் தான். கவர்னர் ஜெனரல் மாளிகையை விட்டு வெளியேறிய பொழுது வந்த பரிசுப்பொருட்களை எல்லாம் பீரோக்களில் அடுக்கி கொடுத்துவிட்டு கையில் தன்னுடைய கைத்தடியோடு மட்டும் வெளியேறியவர் அவர்.
தனக்கு எது சரியென்று படுகிறதோ அதன்படியே இயங்குவார் அவர். சத்தியமூர்த்தியின் சிஷ்யர் என்று காமராஜரை எதிர்த்தார் இவர். அண்ணாவுடன் கூட்டணி போட்டு அவரின் தோல்விக்கு அடிகோலினார். பின்னர் அதே காமராஜருடன் இணைந்தார். கம்யூனிஸ்ட்கள் முதல் எதிரி என்றவர் அவர்களோடும் கூட்டணி வைத்தார். இவை சுய லாபத்துக்காக என்று சொல்ல முடியாது. அவரின் சுய சிந்தனைக்கு எது சரியோ அப்படி இயங்கினார் அவர். அமெரிக்கா சென்றிருந்த பொழுது கென்னடியை சந்தித்து அணு ஆயுதங்கள் வேண்டாம் என்று அற்புதமாக எடுத்துரைத்து விட்டு வந்தார் ராஜாஜி.

சுதந்திரா கட்சியை ஆரம்பித்து தொழிலதிபர்களுக்கு தன்னுடைய ஆதரவைக்காட்டிய அவர் மேடைகளில் யாரேனும் பேசிக்கொண்டு இருக்கிற பொழுது ஒரு காதில் கைவைத்துக்கொண்டு விடுவார். அவருக்கு இன்னொரு காது கேட்காது. இரண்டு காதுகளும் இப்படி கேட்காத சமயத்தில் அந்த இதழுக்கு என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசிப்பார் அவர். சக்ரவர்த்தி திருமகன், வியாசர் விருந்து ஆகிய நூல்களை எழுதிய அவர் மதபீடங்களின் தலைவர்களை சந்தித்தது இல்லை. கோயில்களுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்தார். அவரின் கீழே வங்கத்தில் மதக்கலவரங்கள் பெருமளவில் நின்றன. ராஜாஜியின் மதச்சார்பின்மை அவரை படேல் ‘அரை முஸ்லீம் !’ என்று குறிக்கிற அளவுக்கு இருந்தது. அந்த குணமே அவரை ஜனாதிபதி ஆகவிடாமல் தடுத்தது. குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் மரணமடைந்து இருந்த சூழலிலும் ,"குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா !" என்று பாடல் எழுதினார் அவர். டாக்டர் ராஜாஜி என்றொரு கூட்டத்தில் அழைத்த பொழுது ,"எனக்கென்று பெயர் இருக்கிறது. எதற்கு இந்த பட்டங்கள் எல்லாம் ?" என்று கடிந்து கொண்டார் அவர்.

நேருவின் அமைச்சரவையில் இருந்த ராஜாஜி நேருவின் கம்யூனிஸ்ட்கள் மீதான பாசத்தை கண்டித்தார். தெலங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நேரு குறைத்ததை ஏற்க மறுத்தார் ராஜாஜி. நேருவின் சோவியத்துடன் நட்பு என்கிற கொள்கையையும் குறை சொன்னார். சீனா ஆபத்தானது என்று முன்கூட்டியே எச்சரித்தார். இந்தியாவின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எதிரி ஹிந்து மகா சபை என்றார் நேரு. கம்யூனிஸ்ட்கள் என்றார் ராஜாஜி. காங்கிரஸ் கட்சியைவிட்டு நீங்கி சுதந்திரா கட்சியை துவங்கினார்.
ராஜாஜியிடம் எல்லையில்லா நாகரீகம் இருந்தது. நேருவுடன் முரண்பட்டு தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் நேரு இறந்த பிறகு அவருக்கு இப்படி புகழ் மாலை சூட்டினார் அவர் ,"என்னைவிட 11 ஆண்டு இளையவர். 11 மடங்கு நாட்டுக்கு முக்கியமானவர். மக்களுக்கு என்னை விட 11,000 மடங்கு பிரியமானவர் நேரு. அவரின் பிரிவால் மிக சிறந்த நண்பரை இழந்துவிட்டேன் !" என்று பதிவு
செய்தார்.

பெரியாருக்கும் அவருக்கும் இருந்த நட்பு நெருக்கமானது.ராஜாஜியை வாழ்நாள் முழுக்க அரசியல் ரீதியாக பெரியார் எதிர்த்தாலும் மணியம்மையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் அது குறித்து ராஜாஜியிடமே ஆலோசனை கேட்டார். ஒருமுறை ஒரு விஷயத்தில் இப்படி செய்யலாமா என்று பெரியாரிடம் கேட்ட பொழுது வேறொரு யோசனையை சொன்னார் பெரியார். "மக்கள் என்ன நினைப்பார்கள் ?" என்று கேட்டார் ராஜாஜி. "மக்கள் யாரு ? ஒண்ணு நீங்க இல்லை நானு ஆச்சாரியாரே !" என்று சொன்னார் பெரியார். ராஜாஜி தள்ளாடும் வயதில் தமிழக முதல்வர் கலைஞர்

மதுவிலக்கை நீக்க முடிவு செய்த பொழுது கொட்டும் மழையில் அவரை சந்தித்து அவரின் கைபிடித்து அதை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவர் இறந்த பொழுது அவரின் வாழ்நாள் நண்பர் பெரியார் கதறி கதறி அழுதார்.

பூ.கொ.சரவணன்

Timeline Photos

ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு http://bit.ly/1B4UIV9परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க வ ிரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடு றேன் (அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங ்க..).


புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன் (அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 25 ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும் டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே அது எப்படிங்க?

5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?

6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே…,ன்னு வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன் அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?

10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?

11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க…, எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.

12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?

13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம பஸ் போய்டும், கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.

14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?

15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு…, ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க..

சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடத்திட்டு. பொண்டாட்டிகள்கிட்ட புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு பதிவை மனசாட்சி இல்லாம போட்டீங்களே எப்படிங்க?परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்


இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.

இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம்.

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறதுपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பிரண்டை


பிரண்டை

நாங்கள் அறிந்த மூலிகை செடிகளை நீங்களும் அறிந்து கொண்டால் தான் நாம் மூலிகை செடிகளை காப்பாற்ற முடியும் .

மூலிகை என்பது நம் முன்னோர்கள் உணவாக எடுத்துகொண்டதால்தான் இன்றும் இளைமையோடு ஆரோகியாமாக இருக்கிறார்கள் .

சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள். இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையலாக செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.

வாயுத் தொல்லை மட்டுப்படும். மேலும் சுவையின்மையைப் போக்கி பசியைத் தூண்டும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும், 1 தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் மாறி, மூல நோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

வாயு சம்பந்தப்பட்டநோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் நன்கு செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின் மீது கட்டியும், பிரண்டையை துவையலாகச் செய்து சாப்பிட்டும் வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். உடைந்த எலும்புகள் விரைவில் இணைந்து எலும்புகள் பலம்பெறும்.

இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வது தடைபடும . இத்தகைய நோய்க்கு பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும்.

பெண்களுக்கு சூதக வலியின்போது ஏற்படும் முதுகு வலி, இடுப்புவலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

புற்று நோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும்.

பிரண்டை துவையல்

பிரண்டை – ஒரு பிடி
வெங்காயம் – பாதி
காய்ந்த மிளகாய் – 2 அ 3
தனியா – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 3 அ 4 பல்
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – வதக்க
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தாளிக்க

* பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி

சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.

* வதங்கியதும்,ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.

* பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.

* சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.

நன்றி தினகரன்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

“பெரியவாளின் துயரம்” (பிறர் கஷ்டத்தைக் கண ்டு உருகுகின்ற மனம்)


"பெரியவாளின் துயரம்"
(பிறர் கஷ்டத்தைக் கண்டு உருகுகின்ற மனம்)

சென்ற வார போஸ்டின் "உருகுகின்ற மனமுடைய
ஒரு பெரியவாள் அவதாரம் பண்ணப்போகிறார்"
முந்தைய பகுதி.-இப்போது

சொன்னவர்-வி.ஸ்வாமிநாத ஆத்ரேயன்
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(சில பாராக்கள் நெட்டில் காபி செய்தேன்)
.
( சென்னையில்"1964 இல்லாட்டா 1965 ல) ஒரு நாள், காலேல மெட்ராஸ் கதீட்ரல் ரோடுல மியூஸிக் அகாடமி வழியா பெரியவா கூண்டுவண்டிய பிடிச்சிண்டு, அதுக்குப் பின்னால நடந்து வந்துண்டிருந்தா.அவர்களுடன் கூட பி.ஜி.பால் அண்கோ நீலகண்டய்யர்,ஸ்ரீமடம் சிவராமய்யர்,பாணாம்பட்டு கண்ணன்,ஸ்ரீகண்டன்,ராயபுரம் பாலு,மற்றும் நான்)

. கோபாலபுரம் முனைக்கு வந்ததும் என்னை கூப்ட்டு "அதோ! அங்க பின்னால பொட்டிக்கடை வாஸல்ல குடுமி வெச்சுண்டு, வாயால புகை விட்டுண்டிருக்கான்…. பாரு!…. அவன்ட்ட போய் "பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமா?..ன்னு கேட்டுண்டு வா" ன்னார்.

நான் ஓடினேன். அந்த ஆஸாமி கடைவாசல்ல தொங்கிண்டு இருந்த நெருப்பு கயத்துல பீடி பத்த வெச்சுண்டு இருந்தான். அவனை பாக்கவே ரொம்ப அருவருப்பா இருந்தது. மெதுவா அவன் பக்கத்ல போய்,

"ஏன்யா! ஒனக்கு பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமா?"ன்னு கேட்டதும்,

அவன் பத்த வெச்ச பீடியை மடமடன்னு ஒதறிட்டு, அப்டியே பதறி போனான் !

"யார் நீங்க? எதுக்கு கேட்கறேள்?"

"ஆச்சார்ய ஸ்வாமிகள் கேட்டுண்டு வரச்சொன்னா"

"ஆச்சார்ய ஸ்வாமிகள்?…..என்னது? பெரியவாளா!………எங்கே?"

"அதோ…………" என்று காட்டினேன் நான்.

அவ்வளவுதான்! அவன் குதிகால் பிடரில அடிக்க, எதிர்புறமா ஓடியே போய்ட்டான் !

பெரியவாட்ட போய் "கேட்டேன். பதிலே சொல்லாம போய்ட்டான்"ன்னு சொன்னேன்.

பெரியவா ஒண்ணுமே பேசலை.

முகாமுக்கு போனோம். வரிசையா நெறையப்பேர் தர்ஶனத்துக்கு வந்தா.

எல்லாரும் ஒருவழியா தர்சனம் பண்ணியானதும், பெரியவா எழுந்து உள்ளே போக அடி எடுத்து வெச்சா……..

அப்போ அவன் வந்தான் !

நெத்தில பட்டை விபூதி, ஒடம்பு முழுக்க அலங்கோலமா விபூதி, இடுப்புல துண்டை வரிஞ்சு கட்டிண்டு, நீள நெடுக நமஸ்காரம் பண்ணினான்.

பெரியவா உட்க்கார்ந்துட்டா. எங்கிட்ட "இவன் யார்?" ன்னு கேட்டா.

"கொஞ்ச நேரம் முன்னாடி, பரவாக்கரை ஸ்ரௌதிகளை தெரியுமான்னு இவனைத்தான் பெரியவா கேட்டுண்டு வர சொன்னேள் "

"ஆமா….நான் பரவாக்கரை ஸ்ரௌதிகள் பேரன். ப்ரணதார்த்தின்னு பேரு"

அவன் முடிக்கலை, பெரியவா சொன்னா..
..
"ப்ரணதார்த்தின்னு சொல்லாதே! அது ஸ்வாமி பேரு. அதைக் கெடுக்காதே! ஒண்ணு….. ப்ரணதார்த்திஹரன்னு சொல்லு. இல்லேன்னா, ஹரன்னு சொல்லு. நமஸ்காரம் பண்றவாளோட பீடையெல்லாம் போக்கிடுவார் ஸ்வாமி. அதுதான் பேர். வெறும்ன ப்ரணதார்த்தின்னா பீடைன்னு அர்த்தம்"

"இப்பிடித்தான் எல்லாரும் கூப்பிடுவா! அதே பழக்கமாயிடுத்து"

"அதுனாலதான் இப்பிடி இருக்கே! நீ அத்யயனம் பண்ணினியோ?"

"தாத்தா எனக்கு ஸாமம் எல்லாம் கத்து குடுத்தா"

"ஒரு ஸாமம் சொல்லு"ன்னு சொல்லி, எல்லாரும் ப்ரஸித்தமா சொல்ற ஸாமத்தை சொன்னா பெரியவா.

ரெண்டு மூணு வாக்யம் சொன்னான். குரல் நன்னா கணீர்..ன்னு இருந்தது.

"மேல மறந்து போச்சு"

"ஒனக்கு அண்ணா, தம்பி யாராவது இருக்காளா?"

"ரெண்டு பேர் அண்ணா! அவா இங்க்லீஷ் படிப்பு படிச்சு எங்கேயோ வேலைல இருக்கா. நான் நன்னா சொல்றேன்னு தாத்தா எனக்கு ஸாம வேதம் சொல்லி குடுத்தா……….எனக்கு அது பிடிக்கலை. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்"

"இப்போ என்ன பண்றே?"

"போலீஸ்காராளுக்கு உதவி பண்ணறேன்"

"போலீஸ்காராளுக்கு நீ உதவி பண்றியா? அது என்ன உதவி?"
"கோர்ட்டுக்கெல்லாம் அழைச்சுண்டு போவா! சாட்சி சொல்லச் சொல்லுவா, அதுக்கு படி குடுப்பா"

"ஒனக்கு இந்த புகை பழக்கம் எப்படி வந்துது?"

"அவாகூட போறப்போ, கட்டுகட்டா பீடி வாங்குவா. ரெண்டு மூணு எனக்கும் குடுப்பா"

"கோர்ட்டுல நீ பாத்ததைத்தானே சொல்லுவே?"

"நான் ஒண்…ணையும் பாத்ததில்லே, அவா இப்டி இப்டி சொல்லுன்னு சொல்லிக் குடுப்பா, அதை அப்படியே சொல்லுவேன்"

"வக்கீல்கள்ளாம் உன்னை தாறுமாறா கேள்வி கேட்பாளே?"

"ஆமாம்….கட்டாயம்! அதுக்குத்தான் போலீஸ்காரா என்னை கொலை நடந்த இடத்துக்கே அழைச்சுண்டு போய்…. இந்த இடத்தில், இப்படிக் கொலை நடந்தது. நீ இங்க நின்னு பாத்துண்டு இருந்தே, கூட்டமா இருந்தது, வேடிக்கை பார்த்தே….கொலைகாரன் கிழக்கு பக்கமா ஓடினான், அவன் கையில அரிவாள் இருந்தது, அதுல ரத்தம் கொட்டித்து…… இப்டில்லாம் சொல்லி கொடுப்பா! பல கேஸ்ல ஸாக்ஷி சொல்லியிருக்கேனா ! நல்ல பழக்கம். வக்கீல் எப்பிடி கேட்டாலும் கெட்டிக்காரத்தனமா பதில் சொல்லிடுவேன். ரெண்டு மூணு தடவை உளறிட்டேன், அதுக்காக போலீஸ்காரா செமையா என்னை அடிச்சுட்டா!"

"கோர்ட்டுக்கு போறப்போ சட்டையெல்லாம் போட்டுண்டு போவியோ?"

"இல்ல, இல்ல! போலீஸ்காரா விடமாட்டா ! பட்டை பட்டையா விபூதி போடணும். பூணூலை நன்னா ஸோப்பு போட்டு வெளுத்துக்கணும். இடுப்புல துண்டை கட்டிண்டு வரணும்னு நிர்பந்தப்படுத்துவா"

"இந்த மாதிரியெல்லாம் சாட்சி சொல்றது பாவமில்லயா?"

"பாவந்தான், நன்னா தெரியறது. எனக்கு வேற வழியில்லையே!"

"அப்டியா? நா….ஒரு வழி காட்டறேன், செய்வியா?"
[அதமனுக்கும் வழி காட்டும் ஜகத்குரு]

"சொல்லுங்கோ"

"மைலாப்பூர்ல கபாலீஸ்வரன் கோவில் இருக்கு. தெனோமும் ஸாயரக்ஷை அங்க போய், மேல கோபுர வாஸலை நன்னா பெருக்கி, ஜலம் தெளிச்சுட்டு வா! ஒனக்கு தெனொமும் பத்து ரூவா பணம் தரச் சொல்றேன். மத்யான்னம் சாப்பாடும் போடச் சொல்றேன்"
[1965ல் பத்துரூபாய் எவ்வளவு பெரிய தொகை!!]

"கோவில் உண்டைக்கட்டில்லாம் எனக்கு ஒத்து வராது"

"கோவில் ப்ரஸாதம் வேண்டாம். வாரத்ல ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் ஆத்துல சாப்பாடு போட சொல்றேன். ராத்ரி, அந்த பத்து ரூவால சாப்டுக்கோ!"

"அதெல்லாம் சரியா வராது"

"அவசரப்படாதே! ரெண்டு நாளைக்கு மடத்துல இரு.

சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையை பாரு. பூஜை ஆனாவிட்டு, உடனேயே உனக்கு சாப்பாடு போட சொல்றேன். யோசிச்சு பதில் சொல்லு"

"இன்னிக்கு அது முடியாது. எழும்பூர் கோர்ட்ல பெரிய கேஸ் ஒண்ணு இருக்கு! சாட்சி சொல்ல போகாட்டா, முதுகெலும்பை முறிச்சுடுவா! நான் போறேன்" ன்னு போயே போய்விட்டான் !

பெரியவா அவன் காம்பவுண்ட் தாண்டி போறவரைக்கும், அவனையே பாத்துண்டு இருந்தார்.

நானும் நீலகண்டய்யரும் பெரியவாளோட உள்ள போனோம்
.
ஐயர்வாள் சொன்னார்….

"பெரியவா இவ்ளோவ் சொல்லியும், அவன் கேக்கலியே!…"

"அவன் இருக்கட்டும். போலீஸ்காரா பொய் சாட்சின்னு… ஒரு தொழிலையே ஜனங்களுக்கு கத்துக் குடுத்துட்டாளே !…"

"போலீஸ்காரா என்ன பண்ணுவா? பட்டப்பகல்ல பல பேர் பாக்க, கொலை நடந்திருக்கு! இன்னார்தான் பண்ணினான்னு நன்னாத் தெரியறது. ஆனா, கோர்ட்ல சாட்சி சொல்றதுக்கு யார் போவா? அவா அவாளுக்கு அவா அவா ஜோலி! சாட்சி சொல்றேன்னு போனாக்க, வக்கீல்கள் தாறுமாறா கேள்வி கேட்டு அவாளை அலைக்கழிக்க விட்டுடுவா. அப்றம் அதுலேர்ந்து தப்பிக்கவும் முடியாது. அதுனால நேர்ல பாத்தவா சாட்சி சொல்ல மாட்டா! கோர்ட்ல குத்தவாளியே குத்தத்தை ஒப்புத்துண்டாக்கூட, சாட்சி இல்லாட்டா, கேஸ் நிரூபணம் ஆகலேன்னு கேஸை தள்ளுபடி பண்ணிடுவா. போலீஸ்காரா சரியா கேஸை நடத்தலேன்னு வேற புகார் கெளம்பும். அதுனால வேற வழி இல்லாம, சாட்சியை ஜோடிக்க வேண்டியிருக்கு…."

பெரியவா;

"கொலை…ஒரு அந்யாயம்; கொலையைப் பாத்தவா சாட்சி சொல்லாதது, அடுத்த அநியாயம்; பாக்காதவா, பொய் சாட்சி சொல்றது மூணாவது அநியாயம்….இத்தனை அநியாயத்தையும் நியாயப்படுத்தறாப்போல நீ வாதம் பண்ற!…"

"பெரியவா க்ஷமிக்கணும்….லோகத்ல நடக்கறதை சொன்னேன்.."

"இதுல இன்னொரு வேதனை…. இத்தனை அக்ரமமும் ப்ராஹ்மண ரூபத்ல! ப்ராஹ்மணன் பொய் சாட்சி சொன்னாக்கூட, அதை ஸத்யம்னு கோர்ட்ல நம்புவான்னு போலீஸ்க்கு நம்பிக்கை இருக்கே. அதெல்லாம் போட்டும்….இந்த ஸ்ரௌதிகள் பேரன் இப்பிடி இருக்கானே!"

"பெரியவா சொல்றதை காதுலேயே வாங்க மாட்டேங்கறானே?.."

"அவன் என்ன செய்வான்? கோர்டுக்கு போகாட்டா…போலீஸ்காரா அடிப்பாங்கறானே ?"

"பெரியவா ரொம்ப க்லேஸப் படறாப்போல இருக்கு….நாங்கள்ளாம் என்ன செய்ய முடியும்?.."

"ஸந்யாஸி ஸுகதுக்கங்களுக்கு மனஸ்ல எடம் கொடுக்கப்படாதுன்னு சாஸ்த்ரம் இருக்கு. தெரியுமோ?"ன்னு கேட்டுண்டே ஸ்நானம் பண்ண போனார்.

மத்யானம் மூணு மணி இருக்கும். நான் பூஜைக்கட்டு பக்கத்ல இருந்த வராண்டால படுத்துண்டிருந்தேன்.

"ராமா!…"

பூஜைக்கட்டுல ஸகல கைங்கர்யமும் பண்ணிண்டிருந்த மேலூர் ராமசந்த்ரய்யர் கூப்ட்டார். ரொம்ப ஆசாரம் ஜாஸ்தி. ஒரு சின்னத் தப்புகூட நேர்ந்துடாதபடி, அப்டி கவனிச்சு கவனிச்சு கைங்கர்யம் பண்ணுவார். அவரைக் கண்டா அங்க இருக்கற எல்லாருக்கும் ஸிம்ஹ ஸொப்பனம்!

"இன்னிக் காலம்பற பெரியவா சவாரியிலே நீ கூட வந்தாயோ?…"

"வந்தேனே!.."

"அப்போ என்ன நடந்தது?.."

"ஒண்ணுமில்லியே "

"ஏதோ நடந்திருக்கு! பெரியவா இன்னிக்கி பூஜையே பண்ணலே…"

"அப்டியா! ஒருவேளை…அது வந்து"…..ன்னு மெதுவா பரவாக்கரை ஸ்ரௌதிகள் பேரனோட கதையை சொன்னேன்.

நான் அவர் தலைல அடிச்சுண்டு நகர்ந்து போய்ட்டார்!

கொஞ்ச நேரத்தில் பெரியவா கொட்டாய் பக்கம் போனா..
..நமஸ்காரம் பண்ணினேன்.

"மேலூர் மாமா என்ன சொன்னார்? அவர் இன்னிக்கி சாப்பிடலையாமே? விஜாரிச்சியோ?…"

"பெரியவா பூஜை பண்ணாததால, பிக்ஷையும் பண்ணல; பெரியவா பிக்ஷை பண்ணாம, மேலூர் மாமா சாப்ட மாட்டாரே"

என்னோட கண்ணுலேர்ந்து ஜலம் வந்துது…..

"என்னவோ சொல்லணும்னு நெனைக்கறே! சொல்லிடேன்…."

"பெரியவாட்ட என்ன சொல்ல முடியும்? ஸ்ரீதர ஐயர்வாள் ஸ்லோகம் ஒண்ணு நெனவுக்கு வருது"

(போன வாரம் இதன் தொடர்ச்சி போஸ்ட் பண்ணினேன்)परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

இளைஞர் அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு ம ணி நேரம் உயிருடன் இருந்த காட்சி இடம்பெறும் ஈ ட்டன் அலைவ்


அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர் நிகழ்ச்சி: 41 லட்சம் பேர் கண்டுகளிப்பு

அமெரிக்காவில் பால் ரொசோலி என்பவர் இயற்கை மீது ஈடுபாடு கொண்டவர். சாகச பிரியரான இவர் டிஸ்கவரி சேனலுக்காக ஒரு அபாயகரமான சாகச நிகழ்வில் பங்கேற்க முடிவு செய்தார். இதுதொடர்பாக சமூக வளைதளங்களில் அவர் கூறுகையில் ‘அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்’ என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இளைஞர் அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த காட்சி இடம்பெறும் ஈட்டன் அலைவ் என்ற அந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் டிஸ்கவரி சேனலில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பட்டது. 30 லட்சம் பேர் வரை பார்ப்பார்கள் என்று டிஸ்கவரி எதிர்பார்த்திருந்த நிலையில், 41 லட்சம் பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர்.

முதலில் அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி, டிசம்பர் 10 ஆம் தேதி பின்லாந்து, டென்மார்க், போலந்து, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், அதன் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE