நடுத்தர வர்க்கத்தினனுக்கு இங்கே ஒரு புண் ணாக்கு மதிப்பும் இல்லை..! அவன் ஒரு பிள்ளையார் எறும்பு..!


News 7னில் ஒரு clipping : MIG குரூப் முதிய மாமி ஒருவர், நீரில் முழுகி விட்ட தன் வீட்டை விட்டு, போய்க் கொண்டிருக்கிறார், அழுது அரற்றிக் கொண்டே: “என்னா கவர்மெண்டு இது..? ஒருத்தரும் உதவிக்கு வர மாட்டேங்கிறாங்க…. ஸ்லம் கிளையரன்ஸ் போர்டு ஏரியான்னா வருவேங்கிறாங்க..! நாங்கள்ளாம் மனுஷா இல்லையா..? நாங்களும்தானே ஓட்டு போடறோம்…?” (கமெண்ட்டில் வீடியோ clipping..)

அந்த மாமியின் அரற்றலில் நியாயமான காரணம் இருக்கிறது..! Mambalam, Madippaakam, Ashoknagar, Velacherry, Anna Nagar, etc போன்ற Flatகளே நிறைந்த ஏரியாக்களீல் ஆறு நாட்களாய், அதீத நீர் தேக்கம்..! கரண்ட் இல்லாததால், மோட்டர் போட்டு overhead டேங்கில் நீரேற்ற முடியாமல், தண்ணீர் இல்லாமல், பலர் கக்கூஸுக்கும் போக முடியாத பரிதாப நிலைமை…!. அவர்கள் கேட்டதெல்லாம்: Electricity, பால், குடிதண்ணீர், அவ்வளவுதான்..! கிடைக்கவில்லை..! இது போன்ற LIG, MIG குருப் மக்களை அரசாங்கம கண்டு கொள்ளவில்லை என்பதும் அவர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொண்டு, எப்படியோ நாட்களைத் தள்ளினார்கள் என்பதும் அப்பட்டமான உண்மை..!

இது போன்ற calamity நேரங்களில், மிகப் பெரிய பணக்காரர்களுக்கு, தங்கள் ‘கனெக்க்ஷன்ஸ்’ மூலமாய் உடனே உதவிகள் கிடைக்கின்றன..! போயஸ் கார்டனிலும், கோபாலபுரத்திலும், மைலாப்பூரிலும் நீர் ‘உடனே’ வடிந்தது..!
EWS குரூப் மக்களுக்கு அரசாங்கம் ஓடி ஓடி உதவி செய்கிறது..! அவர்கள்தானே ஓட்டு வங்கி..? இல்லையன்றால், ஏரியா கவுன்ஸிலரின் காலரைப் பிடித்து விடுவார்கள்..!
LIG/MIG குரூப்பினன் கதி…? ‘மயிராப் போச்சு.. விடு..!’ என்கிறார்கள் M.L.Aவும் கவுன்ஸிலரும்..!

அதிகாலை எழுந்து குடுகுடுவென்று ஆபீஸுக்கு ஓடி, இரவு 10க்கு திரும்பி என மாத முழுதும் கஷ்டப்பட்டு, ஒரு லட்சம் சம்பாதித்தாலும், Income tax, Service tax, Road tax, பெட்ரோல், படிப்பு, மருத்துவம், பால், எலக்டிரிசிட்டி பில் என எல்லாம் போக கையில் 5000 மிஞ்சும் அவனுக்கும் ஒரு EWSக்கும் என்ன பிரமாத வித்தியாசம்..? நடுத்தர வர்க்கத்தினன் என்பவன், வசதியிருப்பதைப் போல ‘நடிக்கும்’ ஒரு ஏழையே..! இதோ மழைவெள்ளத்தில் பல பொருட்கள், கார், நாசமாகி லட்சங்கள் செலவாகும்..! யாரும் தர மாட்டார்கள்..! ஏனென்றால் அவன் MIG..! எவ்வளவு அடி வாங்கினாலும் தாங்குவான்..!

இந்த கஷ்ட நாட்களில், பால் பாக்கெட்100 ரூபாய், தண்ணீர் கேன் 200 ரூபாய், etc., என்று செலவிடும் அவனிடமிருந்து வசூலித்த tax கொண்டு, தன் ஃபோட்டோவை போட்டுக் கொண்டு, நலிவுற்றோருக்கு நிவாரணம் கொடுக்கும் அரசு..! அந்த ‘நிவாரணம்’ பெற்றுக் கொண்ட அந்த ‘நலிவுற்றோன்’, அவ்வளவு மழையிலும் திறந்திருக்கும் TASMAC சென்று 200 ரூபாய் செலவிட்டு குடிப்பான்..! இதுதான் Socialism..!

இந்த நாட்டில் கவலையின்றி வாழ இரண்டே வழிகள்:
1. எப்படியாவது பெரும் பணம் சேர்த்து விட்டால், கவனிக்க வேண்டியவர்களை ‘கவனித்து’ சவுகரியமாய் வாழலாம்..! Or
2. பிச்சைக்காரனாய் இருந்து கையேந்தினால், அரசாங்கம், உன் ஓட்டுக்காக உன்னைக் கவனித்துக் கொள்ளும்..! பாக்கி எல்லாவற்றையும் அரசாங்கம் தரும்; TASMACகிற்கு மட்டும் நீ தந்தால் போதும்..!

இது இரண்டுமில்லாமல், கஷ்டப்பட்டு சம்பாதித்து, அதில் பாதியை taxes கட்டிவிட்டு, தன்மானத்தோடும், கௌரவத்தோடும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும், பல இன்னல்களிடையே எதிர்நீச்சல் போட்டு வாழும் நடுத்தர வர்க்கத்தினனுக்கு இங்கே ஒரு புண்ணாக்கு மதிப்பும் இல்லை..! அவன் ஒரு பிள்ளையார் எறும்பு..! கடிக்கத் தெரியாதவன்..!

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

One thought on “நடுத்தர வர்க்கத்தினனுக்கு இங்கே ஒரு புண் ணாக்கு மதிப்பும் இல்லை..! அவன் ஒரு பிள்ளையார் எறும்பு..!”

  1. உண்மையோ உண்மை. LIG/MIG வர்க்கம் கொடுக்கும் வரிப் பணம் வேண்டும். அவன் வோட்டும் வேண்டும். அனால் அவனுக்கு எந்த ஒரு வசதி/சௌகர்யம் வேண்டுமானாலும் அவனே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை படிப்பா, குடியிருக்க வீடா, கடன் வாங்கி கட்டிய வீடு செல்ல சாலையா, அனைத்தையும் அவனே தான் செய்து கொள்ள வேண்டும். அரசுக்கு வருமானமான வரி, அதுவும் அவனே. Income Tax, Profession Tax, Surcharge, EducationCess, Road Tax, Water Tax, Sewage Tax, Ecectricity Tax….போதும். இதன் பெயர் சோஷலிசம் எனில், அது வேண்டாம். இதன் பெயர் ஜனநாயகம் எனில், அது வேண்டாம். எனது ஓட்டை நான் NOTA வில் பதித்து விட்டு வருகிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s