அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்


351.jpg

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று,அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர்அப்துல் கலாம்.
பல பல
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாகஇருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில்சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதிஇவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ –மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்படசெய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லிமாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகபெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ளமறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல்வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாதுஎன்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும்காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப்போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்கமாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன.பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர்அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுயசரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார்.அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும்வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர்.அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பதுஅரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவுகூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின்இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்றபாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள்கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடுசென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர்அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது,சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திபரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும்விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒருநாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம்நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடுகூட்டமாக நின்று இறைவனை தொழுததுகுறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம்கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர்தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீமுயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்றுஅடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்தவார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்.அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்குஇளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரையாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்லநாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல்கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும்இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்புவட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தைதவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும்சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்தமாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன்குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில்வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம்இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர்.அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றேசிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்தஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதிவேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்றுமுன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில்சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆகவேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால்பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வுசெய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம்ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாகதிகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிஇந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம்ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தைவாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகுஅதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்றசன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல்ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான்அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரேஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிடமாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு.எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையைவாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப்போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அதுஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர்கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தைமாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம்குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதைகொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம்குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம்இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு.தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர்தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்தபோது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறதுஎன்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகுஅதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில்இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில்தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம்அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில்அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாதசம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி,நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்டஇயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டுவந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்படபல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும்பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்தஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடைகுறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம்ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம்படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்துகுடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல்ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம்.ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்கமாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீயபழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம்எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்திசமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்திஅதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில்வெளிநாட்டு கருவிகள், பொருட்கள்பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க,முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளைஅப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர்.தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் எனஅனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம்உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர்நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றுஅப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவைமைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும்கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்கவேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பனபோன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை.இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்துபழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத்தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவைதெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள்வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும்தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனைநாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்றுஅப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழையபுத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘தலைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தைவாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர்பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும்பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்குதர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார்.இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில்அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையைவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டிபோட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம்பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார்.அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி,கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர்கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।

परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।



om2.gif
0001.gif
https://i1.wp.com/perlbal.hi-pi.com/blog-images/571750/gd/130789420493/Stor-Kram.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.
யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்

visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hariharan

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s