விநாயகர் வகைகளும் – பலன்களும்



Anantha Narayanan's photo.

விநாயகர் வகைகளும் – பலன்களும்

பால கணபதி :

இவர் நான்கு கரங்களும், யானை முகமும் உடையவர்.
குழந்தைத் திருமேனி கொண்டவர். மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் கரும்பை தன் நான்கு கரங்களிலும் தாங்கியவர். ஐந்தாவது கையான துதிக்கையில் கொழுக்கட்டையை ஏந்தியிருப்பார். குழந்தைகளைக் காப்பவர்.

ஸ்ரீ பக்தி கணபதி :

இவர் தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பாயசப் பாத்திரத்தை தன் நான்கு கரங்களிலும் ஏந்தியிருக்கிறார். பெண்களைக் காப்பவர்.

வீர கணபதி :

பதினாறு திருக்கரங்களும், சிவந்த திருமேனியும், சற்று சிறிதே சினந்த திருமுகத்தையும் கொண்டு காணப்படுவார். வீரர்களுக்கு வெற்றி தருபவர்.

சக்தி கணபதி :

தேவியை அணைத்துக் கொண்டு இருக்கும் இவர் அஞ்சேல் என்ற அபயக்கரமும் உடையவர், குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துபவர்.

வர கணபதி :

மூன்று கண்களை உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மதுவுடன் கூடிய பாத்திரம் இவைகளைடையவர். வரங்கள் நல்குபவர்.

சித்தி கணபதி :

பக்குவமான மாம்பழம், பூங்கொத்து, கரும்புத் துண்டு, எள் உருண்டை இவற்றுடன் பரசுவையும் தமது துதிக்கையுட்பட ஐந்து கரங்களில் தாங்கியிருப்பவர். இவரை வழிபட வாழ்வில் அமைதி ஏற்படும்.

உச்சிஷ்ட கணபதி நீலோற்பலம், மாதுளம்பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஆகியவற்றைத் தரித்திருப்பார். காதலர்களுக்குப் பச்சைக் கொடி காட்டுபவர். எனவே இவரை காதல் கணபதி என்கிறார்கள்.

விக்ன கணபதி :

இவர் நிறைய ஆபரணங்களைத் தரித்து ஜொலிப்பவர். இந்த விநாயகர் பிரச்சினைகளிலிருந்து நம்மை காப்பாற்றுபவர்.

ஹேரம்ப கணபதி :

அபயம், வரதமாகிய கைகளையுடையவர். பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம் மற்றும் பழத்தைத் தாங்கியவர்.சிம்ம வாகனத்தில் ஏறியவர். யானைமுகம் ஐந்துடையவர். இவரை வழிபட வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

லட்சுமி கணபதி :

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம் மற்றும் வரதம் இவற்றை உடையவர். நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு பெருந்தேவியர்களோடு திகழ்பவர். இவர் செல்வத்தை வாரி வழங்கும் விநாயகராக வழிபடப்படுகிறார்.

நிருத்த கணபதி :

இவர் கூத்தாடும் பிள்ளையார் என்றும் சொல்லப்படுகிறார். விரல்களில் மோதிரங்கள் அணிந்த இவர், கைகளில் பாசம், அங்குசம், அதிரசம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர். கற்பக விருட்சத்தின் கீழ் நர்த்தனமாடுபவர். கலைஞர்களின் காவலன் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

ஊர்த்துவ கணபதி :

செங்கழுநீர் பூ, நெற்பயிர், தாமரை, கரும்புவில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பச்சைநிற மேனியோடு விளங்கும் தேவியை ஆலிங்கனம் செய்பவர். சகல சவுபாக்கியங்களையும் தருபவர்.

ஏகதந்த கணபதி :

பானை வயிறுடையவர். மேற் கைகளில் கோடாரி, அட்சமாலையும், கீழ்க் கைகளில் லட்டு, தந்தம் இவற்றைத் தாங்கியிருப்பவர். நல்ல குறிக்கோள்கள் உடையவர்களுக்கு நாயகனாகத் திகழ்பவர். முக்கிய திட்டமிடலின்போது இவரை வழிபட்டு செயல்களில் ஈடுபட்டால், வெற்றி உறுதி.

சிருஷ்டி கணபதி :

பாசம், அங்குசம், தந்தம் மற்றும் மாம்பழத்தை தன் கைகளில் தாங்கிய இவர் படைப்புத் தொழிலைப் புரியும் இவர் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பார். சிருஷ்டிக்கு உதவும் காரணத்தால் கர்ப்பிணிப் பெண்களின் கண்கண்ட கடவுள்.

உத்தண்ட கணபதி :

செங்கழுநீர் பூ, தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், ரத்ன கலசம், பாசம், நெற்கதிர் மற்றும் மாலை இவற்றை ஏந்திய பத்துக் கரங்களை உடையவர். தேவியால் தழுவப் பெற்றவர். அன்பைப் பொங்க வைப்பவர். இவரை பார்த்தாலே போதும் கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

ரணமோச கணபதி :

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றை கைகளில் தாங்கியவர். செந்நிறப் பட்டாடையை உடுத்தியவர். வியாதிகளைத் தீர்ப்பவர்.

துவிமுக கணபதி :

இருமுகம் கொண்டிருக்கும் இவர் ரத்தின கிரீடம் அணிந்திருப்பார். செல்வத்துக்கு அதிபதி. இவரை கண்டால் மனம் உருக வழிபடுங்கள். அவர் உங்களுக்கு பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வார்.

யோக கணபதி :

பாசம், அட்ச மாலை, யோக தண்டபம் மற்றும் கரும்பை கரங்களில் தாங்கியிருப்பார். அதிர்ஷ்டத்தைத் தருபவர். இவரை வழிபட புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

துர்கா கணபதி :

எட்டுக் கை, பெரிய மேனி, பருத்த வலது கரங்கள் நான்கிலும் அங்குசம், பாணம், அட்சமாலை மற்றும் தந்தத்தைத் தாங்கியவர். இடது கைகளிலோ பாசம், வில், கற்பக விருட்சத்தின் கொடி மற்றும் நாவற்பழத்தைப் பெற்றிருப்பவர். பெண்களைக் காப்பவர். பெண்கள் முறைப்படி இவரை வழிபட்டால் உடனே திருமணம் கை கூடும்.

சங்கடஹர கணபதி :

நான்கு கைகளை உடைய இந்த விநாயகரின் வலது கையில் அங்குசம் மற்றும் வரத முத்திரையும், இடது கையில் பாசமும் பாயச பாத்திரமும் விளங்குகின்றன. செந்தாமரைப் பீடத்தில் நின்றிருக்கும் இவர், நீல நிற ஆடையை அணிந்திருப்பார். சங்கடங்களைத் தீர்ப்பவர். சதுர்த்தி தினங்களில் இவரை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।




"To fight the darkness do not draw your sword, light a candle"
"You can’t climb the ladder of success with your hands in your pockets"


om2.gif
0001.gif
https://i1.wp.com/perlbal.hi-pi.com/blog-images/571750/gd/130789420493/Stor-Kram.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s