ஜெ., விடுதலை: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள ்!


Advertisement

மாற்றம் செய்த நாள்

11மே
2015
23:42

பதிவு செய்த நாள்
மே 11,2015 23:19

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த, 919 பக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள்: சொத்துக்களின் மொத்த மதிப்பு, 37.59 கோடி ரூபாய். மொத்த வருமானம், 34.76 கோடி ரூபாய். சொத்துக்களின் மொத்த மதிப்பில் இருந்து, வருமானத்தை கழிக்கும்போது, 2.82 கோடி ரூபாய் அதிகமாக வருகிறது. இதை சதவீத கணக்கில் பார்த்தால், 8.12 சதவீதம். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், ‘வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீத அளவில் சொத்துக்கள் இருந்தால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற உரிமை உள்ளது’ என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு பிறப்பித்த சுற்றறிக்கையில், ‘வருமானத்திற்கு அதிகமான சொத்து, 20 சதவீதம் அளவிற்கு அனுமதிக்கலாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால், அதை அனுமதிக்கப்பட்ட வரம்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

gallerye_013325429_1250458.jpgnext.png

* இந்த வழக்கில், ஆடைகள் மற்றும் செருப்புகளின் மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால், அவற்றின் மதிப்பை, சொத்துக்களின் மதிப்பில் இருந்து நாங்கள் கழித்துக் கொள்ளவில்லை.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை, அரசு தரப்பு ஒன்றாக சேர்த்துள்ளது.

* கட்டுமான செலவாக, 27.79 கோடியும், திருமண செலவாக, 6.45 கோடியும் சேர்த்துள்ளது. அதன் மூலம், சொத்துக்களின் மதிப்பு, 66.44 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

* அதிகபடியாக மதிப்பிடப் பட்டுள்ள கட்டுமான செலவையும், திருமண செலவையும் நீக்கினால், சொத்துக்களின் மதிப்பு, 37.59 கோடி ரூபாய் வருகிறது.

* வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானம் மற்றும் நிறுவனங்களின் மூலம், வருமானம் என பார்த்தால், 34.76 கோடி வருகிறது. இதில் உள்ள இடைவெளி, 2.82 கோடி ரூபாய்.

* வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பை, சதவீதத்தில் கணக்கிட்டால், அது, 8.12 சதவீதம். இதை ஒப்பிடும்போது, குறைந்தபட்சமானது தான்.

* இந்த வழக்கை பொறுத்தவரை, வருமானத்திற்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் தான் இது வருகிறது. எனவே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற உரிமை உள்ளது. இவ்வழக்கில் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்படும்போது, குறைவாக பங்காற்றிய மற்றவர்களும் விடுதலை பெறுவதற்கு உரிமை உள்ளது.

* தண்டனை விதிக்கப்பட்டு அதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் போது, அரசு தரப்பின் வழக்கு உண்மையானது; சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதில், உயர் நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும்.

* மேல் முறையீடு செய்தவர்கள் உயர் நீதிமன்றத்தை திருப்திபடுத்த வேண்டியதில்லை.

* குற்றவாளிகள் மேல் முறையீடு செய்யும்போது, மேல் முறையீட்டு நீதிமன்றமானது சாட்சியத்தையும் பரிசீலிக்கலாம்.

* மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கான அதிகாரங்கள், விசாரணை நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரங்களை போன்றது தான்.

* சாட்சியங்களை பரிசீலித்த பின் தான், கீழமை நீதிமன்றத்தின் முடிவு தவறானது, முரணானது என, உயர் நீதிமன்றத்தால் கூற முடியும். எனவே, சாட்சியத்தை பரிசீலிப்பதற்கு சட்டப்பூர்வ தடை ஏதும் கிடையாது. நீதி நலன் கருதி அதை செய்ய வேண்டும்.

* இந்த வழக்கில் வருமான வரி துறையின் நடவடிக்கைகளை குறைந்தபட்ச ஆதாரமாக விசாரணை நீதிமன்றம் எடுத்துக் கொள்ளவில்லை; அதை புறக்கணித்துள்ளது.

* சாட்சியத்தை முறையாக விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை. இந்தியன் வங்கியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடன் பெற்றுள்ளனர் என்பதை தீர்ப்பில், விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தாலும், அதை வருமானமாக பரிசீலிக்கவில்லை.

* எனவே, கடன் தொகையை வருமானமாக பரிசீலிக்காமல் விசாரணை நீதிமன்றம் தவறு செய்துள்ளது.

* கட்டுமான செலவு மதிப்பிட்டதை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மறுத்தாலும், அது தொடர்பான சாட்சியங்களை பரிசீலிக்க, விசாரணை நீதிமன்றம் தவறிவிட்டது.

* சாட்சியங்களை பரிசீலிக்காமல், 20 சதவீத செலவு தொகையை மட்டும் குறைப் பதாக முடிவு எடுத்துள்ளது. அந்த, 20 சதவீத குறைப்பும் யூகத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

* திருமண செலவாக, 3 கோடி ரூபாய் என, விசாரணை நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. 3 கோடி ரூபாயை ஜெயலலிதா செலவு செய்ததாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாட்சியங்களும் இல்லை. இருந்த போதிலும், 3 கோடி ரூபாய் என, விசாரணை நீதிமன்றம் மதிப்பிட்டு உள்ளது.

* திருமண செலவாக, 3 கோடி ரூபாய் என மதிப்பிட்டு, அந்த தொகையை ஜெயலலிதா மட்டும் செலவு செய்தார் என, கூறியிருப்பது முறையானது அல்ல.

* குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சில சாட்சியங்களை, பிறழ் சாட்சியமாக கருதாமல், அவர்களை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த காரணமும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது.

* ஒரு சாட்சி, வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு வாக்குமூலங்களை அளித்தால், அந்த வாக்குமூலத்தை நம்புவது பாதுகாப்பற்றது. இந்த வழக்கின் ஒட்டுமொத்த சூழ்நிலையையும், ஆவணங்களையும் பரிசீலிக்கும்போது, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறைபாடு உள்ளது. சட்டப்படி, இது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே,

* ஜெயலலிதா, சசிகலா, திவாகரன், இளவரசி தாக்கல் செய்த அப்பீல் மனுக்கள் ஏற்கப்படுகின்றன.

* தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர், 27ம் தேதி, பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

* நான்கு பேரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்படுகின்றனர்.

* நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனுக்களின் ஒரு பகுதி ஏற்கப்படுகிறது.

* அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக, தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி குமாரசாமி உத்தரவில் கூறியுள்ளார்.

courtesy Dinamalar http://www.dinamalar.com/news_detail.asp?id=1250458



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।




"To fight the darkness do not draw your sword, light a candle"
"You can’t climb the ladder of success with your hands in your pockets"


om2.gif
0001.gif
https://i1.wp.com/perlbal.hi-pi.com/blog-images/571750/gd/130789420493/Stor-Kram.gif

h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s