அற்புதங்கள் செய்யும் அத்தி!


அற்புதங்கள் செய்யும் அத்தி!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில்அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாகபயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமைஅத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக
விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படிஇறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரைகாத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர்.
தானாக பழுத்து உதிரும் நிலையில், இவை முக்கால்பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்தபழங்களை, தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி,சிறிது கந்தகப்புகை காட்டி, பின்னர் வெய்யிலில் சிலநாட்கள் உலர்த்தி, அழுத்திச் சப்பையாகச் செய்து,நடுவே துளையிட்டு நாரில் கோர்த்துவெளியிடங்களுக்கு அனுப்புகின்றனர். இவைஅனைத்தும் சற்றேறக்குறைய ஒரே குணங்கள்கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும்அத்தியும், அத்தியைக்காட்டிலும் சீமையத்தியும்தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.
அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல்போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில்சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால்ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளைகொடுக்கலாம். சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்றதடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப்பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி,வியர்வையாகவும்,
சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலைமிருதுவாகச் செய்கிறது.
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்தஉற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்துபருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப்பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களைஇரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும்இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைகுணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்)ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின்தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால்,உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழுஅளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில்இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில்இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாகஇருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிரவைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து ,வெண் புள்ளிகள்மீது
பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானிநாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும், சபூப் பாஸ்என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

__._,_.___

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s