இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத் தெரியவில்லை!


Sage of Kanchi

Periyava_reading_book_pencil_BN

ஒரு நாள் பெரியவா தரையில் சயனித்துக் கொண்டிருந்தார். நானும் என் மனைவியும் அவர் பாதாரவிந்தத்தின் அடியில் உட்கார்ந்திருந்தோம்.

”ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் தெரியுமா?” என்று கேட்டார்.

”நாயன்மார்களில் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்”

பின்னர் அதே முற்றத்தில் ஸ்ரீபெரியவா திருவடிகளின் சமீபத்தில் நாங்கள் இருவரும் தரையில் படுத்து உறங்கினோம்.

ஆழ்ந்த நித்திரை.

”ஏய் யாராடா அங்கே”! என்ற பெரியவா குரல் கேட்டு விழித்து எழுந்தோம். உடனே அவள் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் கற்பூரத்தை தாம்பாளத்தில் வைத்து ஏற்றினாள். ஸ்ரீபெரியவா எழுந்து உட்கார்ந்தார். கற்பூர தீப ஒளியில் அவருடைய விஸ்வரூப தரிசனம் கிடைக்கப்
பெற்றோம்!

இதே கைங்கர்யத்தை என் மனைவி நாங்கள் எத்தனை நாட்கள் மடத்தில் தங்கினாலும்,ப்ரதி தினமும்,பெரியவாளுக்கு கற்பூர ஹாரத்தி எடுத்து சேவிப்பது வழக்கம். இருளின் மத்தியில் கற்பூர சேவையில் பெரியவா விஸ்வரூப தரிசனம் எங்களுக்கு எப்போதும் கிடைத்து வந்தது. பெரியவா சயனித்ததும் அவர் பாதகமலத்தின் அடியில் நாங்கள் தம்பதிகளாக சயனிக்கும் பாக்யமும் தவறாமல் கிடைத்தது. அவர் அனுக்ரஹத்தினால் அந்த பாக்யமும், ஸ்வதந்திரமும் எங்களுக்கு ப்ராப்தமானபடியால் மடத்தில் உள்ள  எல்லாரும் எங்களை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார்கள்.

ஸ்ரீபெரியவாள் யதியாகவும், பீடாதிபதியாகவும் ,ஜகத் குருவாகவும் ஆனபடியால், சாமான்ய க்ரஹஸ்தனான எங்களுக்கு தம்பதிகளாக நெருங்கி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பில்லை.

அடியேனுக்கு வேத அத்யயனம், வித்வாம்சம், பாண்டித்யம் போன்ற எந்த யோக்யதையோ, மடத்துக்கு அளவு கடந்த திரவிய சகாயம் செய்யக் கூடிய தனிகனாகவோ இல்லாத போதும், ஸ்ரீபெரியவாள் அத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவராயிருந்தும், நான் சிஷ்டாத்வைதனாயிருந்தும், அடியனை பத்னி சஹிதம் அவர் திருவடிச் சாயையில் இருத்தி வைத்துக் கொண்டது தெய்வ சங்கல்பம் அன்றி வேறில்லை.!

View original post 168 more words

Advertisements

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s