மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்ப ோம்


மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்

February 15, 2015
வீர. ராஜமாணிக்கம் rss_icon16.jpg
அச்சிட அச்சிட
மாதொருபாகன் நாவல் விவகாரத்தை முகாந்திரமாக வைத்து, இந்துத்துவ இயக்கங்களையும், திருச்செங்கோட்டு மக்களையும், கவுண்டர் சமுதாய மக்களையும் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் பேசி தொடர்ந்து அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் யார்?
தீராவிட தறுதலைகள், முற்போக்கு முகமூடி அணிந்துள்ள மார்க்ஸிஸ்ட்கள், இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதமாற்ற அமைப்புகள்.
இது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். இவர்களது சதி வலையிலிருந்து மீண்டெழுந்து அவதூறு, பொய், ஆபாச பிரச்சாரங்களை முறியடிக்கும் மன வலிமையையும் , அறிவையும் மக்கள் பெற்று புதிய பாதையை அமைத்துள்ளனர். விஷமத்தனமான பிரச்சாரங்களையும், நச்சு சதி வலைகளையும் அறுத்தெறிய புதிய ஆயுதத்தை, திருநீலகண்டனாக ஆலகால விஷத்தை உண்ட அம்மை அப்பனே, அந்த ஈசனே திருச்செங்கோடு மக்களுக்கு வழங்கி இருக்கிறார்.
Tiruchengode_sivan_hill_temple
நாவல் எழுதி நஞ்சு விதைத்து ஊர் உலகம் முழுக்க பரவி அம்மக்களை வதைத்து குற்றவாளிகளாகவும், காட்டு மிராண்டிகளாகவும் சித்தரித்து கூனி குறுகி இருக்க செய்தார்கள். இந்த அப்பாவி ஊர் மக்களின் கருத்தைக் கேட்க எந்த ஊடகத்திற்கும் காதுகளோ, கண்களோ, புலன்களோ ஒப்பவில்லை. முற்போக்கு மாஃபியா கும்பல்களும், தீராவிட விஷம கும்பலின் பிரச்சாரங்களும், அன்னிய மதங்களின் நச்சு பேச்சுகளும், நிதி ஆதாரங்களும், ஊடக பலங்களும் கிளப்பிய புழுதியில் உண்மை உலகிற்கு தெரியாமல் போய் விட்டது. ஆற்றாது அழுத மக்களின் கண்ணீரை ஆற்ற இறைவன் ஒரு வழி செய்து கொடுத்திருக்கிறான். அது தான் ” ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற முயற்சி.
பொதுவாக கடினமான உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் தெய்வ பக்திக்கும் பேர் போனவர்கள் கொங்கு பகுதி மக்கள். இந்த பிரச்சினையை எப்படி அணுகலாம் என்று கூடி பேசி, ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். பிரிவினைவாத, வகுப்புவாத, அடிப்படைவாத அமைப்புகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, அவதூறாகவும், ஆபாசமாகவும், கோவிலையும், கோவிலுக்கு வரும் பெண்களையும் அவமானப்படுத்தும் விதமாக எழுதப் பட்ட புனைவைக் கண்டு மனம் வெதும்பிய அந்த மக்கள், தங்களது எதிர்ப்புப் போராட்டில் ஒரு கட்டத்திலும் அகிம்சையைக் கைவிடவில்லை. இந்த தேசத்தின் பாரம்பரிய முறைப்படி உண்ணா நோன்பு இருந்தார்கள். காவல் துறையில் அரசியல் சாசன சட்டம் அனுமதிக்கும் படி சென்று புகார் அளித்தார்கள். இதற்கு ஒரு மறுப்பு செய்தி வெளியிடுங்கள் என்று கோரினார்கர். புனைவை உண்மையான வரலாறு என்று சொல்லி வாங்கிய கூலிக்கு மாரடிக்க வேண்டாம் என்றும், பொய்யை, புனை சுருட்டை உண்மை நிகழ்ந்த வரலாறு என்று புளுகுவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும் கோரினார்கள். எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கோரினார். தன் ஆபாச செய்கைக்காக தன் புத்தகத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாகவும் அறிவித்தார்.
ஆனால் இதை முன் வைத்து திருச்செங்கோட்டு இறைவனையும், கோவிலையும் கேவலப்படுத்தவும், தேர் திருவிழாவை தடுத்து நிறுத்தி சிதைக்கவும் அந்நிய கைக்கூலிகளிடம் பணம் பெற்றுக்கொண்ட சதி கும்பல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வை கருத்து சுதந்திரத்திற்கே ஏற்பட்ட கேடு என்றும், இந்திய அரசுக்கும் மக்களுக்கு இடப்பட்ட சவால் என்றும் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டனர். முற்போக்கு மாஃபியாக்களின் பிரச்சார பீரங்கிகள் திக்கெட்டும் முழங்கின. கருணாநிதி ஐயோ கொல்றாங்களே என்ற நாடகத்தை எப்படி அரங்கேற்றினாரோ, அதற்கு 100 மடங்கு மேலாக இந்த கும்பலின் ஆர்கெஸ்ட்ராக்களும், ஊடக விபச்சார நிறுவனங்களும் அவதூறுகளை அள்ளி அள்ளி அப்பாவி மக்கள் மீது வீசினார்கள்.
thiruchengode_arthanareeswarar_picமுற்போக்கு முகாம்களை சேர்ந்த இழிபிறவிகள், “திருவிழாவிற்கு போய் திருச்செங்கோட்டு பெண்கள் பல பேருடன் இருந்து குழந்தை பெற்ற வரலாறை நீங்கள் மறுக்க கூடாது” என்று கோஷம் போட்டார்கள். காலம் காலமாக கவுண்டர் சமூகத்தில் இப்படி திருவிழாவில், சென்று குழந்தை பெற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது என்று கூசாமல் சொன்னார்கள். அடிப்படை அற உணர்வு சிறிதும் அற்ற இந்த தறுதலைகள் தாங்களே விளக்கு பிடித்து பார்த்தது போல தங்கள் பிரச்சார ஊடகங்களில் தங்கள் சொந்த மண்ணின் மக்களை கேவலப்படுத்தினர். திருச்செங்கோட்டிற்குப் பிறந்தவனே என்று புதிய வசைகளை பரப்பி விட்டார்கள். வக்கிரம் பிடித்த மார்க்ஸிஸ்ட்கள், தீராவிட தறுதலைகளின் கட்டற்ற பாலியல் சுதந்திரத்திற்கான கற்பனை விழைவை திருச்செங்கோட்டு மக்கள் மீதும், தேர்திருவிழாவின் மீதும் ஏற்றி பிரச்சாரம் செய்தார்கள். சீன அடிவருடி மஞ்சள் பத்திரிக்கையான தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் எரிகிற வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பதாக அவதூறுகளையும், ஆபாசங்களையும், திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களையும் தொடர்ந்து பரப்பியது. அந்த நாவலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகம் இந்த கருத்து வேசைத்தனத்தை தன் லாப வெறிக்காக ஊதி பெரிதாக்கி குளிர் காய்ந்தது. டைம்ஸ் நவ், பிபிசி, நியு யார்க் டைம்ஸ் வரை இந்த கேடு கெட்ட கேவலத்தை விற்பனைப் பண்டமாக்கி, திருச்செங்கோட்டு மக்களை கேடு கெட்டவர்கள், காட்டு மிராண்டிகள் என்று கூசாமல் சித்தரித்தார்கள் ஊடக வியாபாரிகள்.
கருத்து சுதந்திரத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் அயோக்கியர்களின் லட்சணங்களை பாருங்கள்.
மாற்றுக் கருத்து கொள்ள வாய்ப்பிருப்பவர்களை எல்லாம் கொலை செய்த ஸ்டாலின், லெனின், மாவோ, போல்பாட் வழி வந்த களவாணி கொலைகார மாவோயிஸ்ட்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள் – கருத்து சுதந்திரத்திற்காக உயிரை கொடுப்பார்களாம் !
பிரான்ஸ் நாட்டில் சார்லி ஹெப்டோ பத்திரிகையில் கார்ட்டூன் வரைந்ததற்காக 17 எழுத்தாளர்களை , பத்திரிக்கையாளர்களை கொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்துக்களுக்கு பாடம் நடத்துகிறார்கள் !
இனவெறி பிடித்த ஈவேரா என்று ஆதாரபூர்வமாக விமர்சனத்தை வைத்த்தற்காகவே வன்முறையில் இறங்கிய, தீராவிட கும்பல்கள், அழகிரிக்கு செல்வாக்கில்லை என்று சொன்னதற்காக 3 பத்திரிக்கையாளர்களை உயிரோடு எரித்த தீராவிட தறுதலைகள், கருத்து சுதந்திரம் பற்றி வெட்கமின்றி வகுப்பெடுக்கின்றன !
ஆனால் இத்தனை சதி வலைகளையும் அறுத்து வீசி, தங்களுக்குள் பகைமை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளின் சதியை நீர்த்து போகச்செய்யும் படியா ஒரு அமைதியான முயற்சியை துவங்கி இருக்கிறார்கள் திருச்செங்கோட்டு மக்கள். “ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற இயக்கத்தினைத் தொடங்கி இருக்கிறார்கள்.
thiruchengode_ardhanareeswarar“ஊர் கூடி தேர் இழுப்போம்” இயக்கம்
இந்த இயக்கத்தின் மூலமாக திருச்செங்கோட்டின் தேர் திருவிழாவின் 96 மண்டகப்படி அறக்கட்டளை உள்ள சமூகங்களையும் மிக பிரமாண்டமாக ஒருங்கிணைத்து இந்த ஆண்டு முதல் திருச்செங்கோட்டு தேர் திருவிழாவை உலகே திரும்பி பார்க்கும் ஒரு சமூக ஒருங்கிணைப்பு, ஒற்றுமை விழாவாக நடத்தலாம் என்று ஊர் கூடி பேசி முடிவு எடுத்திருக்கிறார்கள். 96 மண்டகப்படி அறக்கட்டளை தாரர்களையும் தொடர்பு கொண்டு அவர்கள் சமுகத்திலிருந்து அனைவரையும், அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை வரவைப்பது, இழந்த பெருமையை மீட்டெடுப்பது, நம்மை காக்கும் அம்மைஅப்பனுக்கு நம் நன்றியை முறையாக செலுத்துவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் ஊர் மக்கள் ஒவ்வொருவரையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு களம் இறங்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் தேர்த்திருவிழாவை சமூக ஒன்றினைவு நிகழ்வாக்கவும், ஒற்றுமையை மீட்டெடுக்கவும் தான் ஏற்படுத்தினார்கள். ஊர் கூடி தேர் இழுக்கும் பொழுது மகத்தான ஒரு நிகழ்வில் இணையும் மனிதப் புள்ளியாகவும், பல உயிர்கள் இணைந்த ஒரே உயிராகவும் திகழும் வண்ணம் ஏற்பாடும் செய்திருந்தார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு நடுவில் குந்தகம் ஏற்பட்டிருந்தது. அதை இனி துடைத்தெறிய, ஊரின் அனைத்து குடிகளும் தங்களால் இயன்றதை செய்து இந்த சமூகத்தை ஒன்றிணைத்து ஒற்றை சக்தியாக தங்களை மீள் கட்டமைத்து கொள்கிறார்கள். இந்த முறை அவர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு சரடாக திருச்செங்கோட்டு தேர் திருவிழா இருக்க போகிறது. மக்களின் உடல்களும், மனங்களும் ஒன்றாக சங்கமித்து இந்த பாரத வர்ஷமே திரும்பி பார்க்க வைக்கும் மகத்தான மானுட முயற்சியை செய்ய இருக்கிறார்கள்.
14 நாள் தேர் திருவிழாவிலும் அனைத்து சமூக மக்களும் ஒன்றிணைந்து பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தின் பழமையையும் பெருமையும் அங்கீகரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த சக்தியாக உருமாற முடிவு செய்து முயற்சி செய்கிறார்கள். இந்த முறை 1 லட்சம் பத்திரிக்கைகள் அடித்து, பிருங்கி முனிவரின் பெயராலும், இந்த ஊருக்கு அருள் தரும் கண்ணகி அன்னையின் பெயராலும், மாதொருபாகனின் அருள் பெற அன்போடு அழைக்க போகிறார்கள். அத்தோடு திருவிழாவில் கொங்கு பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க இருக்கிறார்கள். இந்த மண்ணின் மாண்பையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அதன் அழகியலோடு நவீன உலகிற்கு காட்ட இருக்கிறார்கள். தங்களுக்குள் இருக்கும் பிறப்பு, சமூக ஏற்றத் தாழ்வுகள், பொருளாதார காரணிகள் அனைத்து புறத்தளைகளையும் உதறிவிட்டு அனைவரும் திருச்செங்கோட்டு ஈசனின் மக்களாக, செங்கோட்டையன் பாகத்தாளாக தங்களையே கண்டடைந்து ஒரு மகத்தான சரித்திரம் படைக்க இருக்கிறார்கள்.
thiruchengode-chariot
கொங்கு சமூகங்களின் பாரம்பரிய குல குருக்களையும் இந்த விழாவிற்கு வரவழைக்க இருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்து தங்கள் அனைவரையும் மாதொருபாகனின் அறச்செல்வர்களாகவும், அறசெல்விகளாகவும் உலகிற்கு அறிவுறுத்த இருக்கிறார்கள். இவ்வளவு திரளான அனைத்து சமூக மக்களும் தங்களுக்கிடையில் மீண்டும் நம் பழைய பாசத்தையும் நேசத்தையும் மீட்டெடுத்து ஒரு புதிய விளக்கை தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் ஏற்றுகிறார்கள்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இந்த மகத்தான மானுட முயற்சி வெற்றி அடைய நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அனைவரும் நம் ஊர் தேர்திருவிழாக்களையும் விமர்சையாக கொண்டாடி நம் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தி நிலை பெறச்செய்வோம்.
மானுட உள்ளங்களின் ஒருங்கிணைவு என்பது வரலாறுகளை நிகழ்த்த செய்வது. சதிச்செயல்களாலும், அவதூறுகளாலும் திருச்செங்கோட்டு சகோதரிகளையும், தேர்திருவிழாவையும் அவதூறு செய்த முற்போக்கு, தீராவிட, கம்யூனிச, இஸ்லாமிய , கிறிஸ்த்தவ அமைப்புகளின் சதி மோசடிகளிலிருந்து அப்பாவி திருச்செங்கோட்டு மக்களை வரலாறு விடுதலை செய்யும். உண்மையை உலகம் உணர்ந்தே தீரும். உமையொருபாகன் இந்த கயவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க பிரார்த்திப்போம்.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !



परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।






0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

One thought on “மாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்ப ோம்”

  1. நாம் ஒற்றுமையுடன் இணைந்து இந்த தேர் திருவிழாவை மிகப் பெரும் வெற்றி அடைய செய்வோம். களங்கம் கற்பித்தவர்கள் தலை குனிய செய்வோம். திருவிழா செய்திகள் இத்தளத்தில் இடம்பெறும் என நம்புகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s