தாலிபான் செய்த கொலைகளுக்கு மதம்,அதன் கடவ ுள் பொறுப்பாக ஏற்க முடியாதது போல் ஏன் இந்து மதத்தை நினைபதில்லை இந்த போலி மதசார்பின்மைய ினர் .?????


ஒரு தினமலர் வாசகரின் குமுறல்

Rajamanimaaran.S – madurai,இந்தியா
17-டிச-201413:26:17 IST Report Abuse

Rajamanimaaran.Sபயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட பிஞ்சு குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய நாம் கடவுளிடம் பிரார்த்திப்போம். இந்த வாசகர் கடிதங்களில் முஸ்லிம் நண்பர்கள், இந்த தாலிபான்களின் காட்டுமிராண்டி செயலுக்கு இஸ்லாமை குறைகூற வேண்டாம் என வேண்டுகிறார்கள்.உண்மை. எந்த மதமும் கொலை செய்வதை ஆதரிப்பதில்லை. ஆனால் இதை நம் நாட்டின் மத சார்பின்மையினர் என கூறிகொள்ளும் கட்சிகள் கண்டிக்கும் விதத்தை நினைத்து பார்கிறேன்.வருத்தமாக தான் உள்ளது. தினமலர் வாசகர்களே யோசித்து பாருங்கள் இந்த கொடூர செயலை அமெரிக்க விமானங்கள் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா செய்திருந்தால் அல்லது இஸ்ரேல் நாடு செய்திருந்தால்,இந்த கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இதனை எப்படி எதிர்த்திருப்பார்கள் என்று. சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் அரசு மூன்று பாலஸ்தினியரர்களை கொன்றதற்கு இந்திய பாராளும் மன்றத்தை முடக்கி வைத்தனர். இஸ்ரேல் உடனான உறவை இந்திய நாடு துண்டிக்க வேண்டும் என முழங்கினார்கள், இந்த போலி மதசார்பின்மைக்காரர்கள். ஆனால் இன்று முஸ்லிம் குழந்தைகளை கொன்றது இஸ்ரேலும் அல்ல ,அமெரிக்காவும் அல்ல. அதனால் இதை கண்டுக்கவே இல்லை .இந்த சம்பவத்தால் இஸ்லாம் மதத்தை,கடவுளை யாரும் குறை சொல்ல முடியாது . ஆனால் இந்த அளவு கோல் இந்து மதத்துக்கு பொருந்தவே பொருந்தாது . சேது சமுத்திர திட்டத்தை குறை கூற , கருணாநிதி ” ராமர் எந்த காலேஜ் சென்று படித்து பட்டம் பெற்றார் " என கிண்டல் செய்தார். பாவம் சேது சமுத்திர திட்டத்துக்கும் ஸ்ரீ ராமருக்கும் என்ன சம்பந்தம் ? அவர் ஒன்றும் தடை கோரவில்லை .பிஜேபி செய்தால் அவர்களை கண்டியுங்கள் .பாவம் இந்து கடவுள்கள் என்ன பாவம செய்தார்கள் . கருணாநிதி இந்து கடவுள்களை வழிபடுபவர்களை திருடர்கள் என்றார் .அதனை கூட எதிர்கொள்ள முடியாத மிகவும் பரிதாப நிலையில் தான் இந்து மதம் உள்ளது . பக்ரித் பண்டிகைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்க வில்லை ஆகையால் முஸ்லிம்கள் அடுத்த 15 வருடங்களுக்கு பிஜேபிக்கு வோட்டு போட வேண்டாம் என பிரசாரம் எழுந்தது – அதனை வரவேற்றனர் இந்த போலி மதசார்பின்மை கட்சிகள்.ஆனால் கருணாநிதி இது வரை இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொன்னதில்லை . ஒரு இந்து இதனை ஏன் என கேட்டாலும் போதும் உடனே இந்து கடவுள்களை மிக வக்கிரமாக இழிவு படுத்துவார்கள் . போன வாரம் ஒரு மத்திய மந்திரி டெல்லி தேர்தல் பிரசாரத்தில் ராமரை மைய படுத்தி சில தவறான கருத்துக்கள் சொன்னார் . அதை பிரதமர் மோடி கண்டித்தார் மேலும் அந்த மந்திரி நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் .ஆனால் நடந்தது என்ன ? போன வாரம் நான் மதுரை பெரியார் பஸ் நிலையம் சென்ற போது நான் அங்கு ஒட்டி இருந்த போஸ்டர்கள் என்னை அருவருக்க வைத்தது – அதில் " ராமனின் தந்தை தசரதனா ? குதிரையா " – என்று இருந்தது . இதனை சிறு துண்டு பிரசுரங்கள் ஆக மக்களிடம் வற்புறுத்தி விநியோகம் செய்து கொண்டிருந்தனர் சிலர். யோசித்து பாருங்கள் அந்த மத்திய மந்திரி சொன்னதுக்கு ராமரின் பிறப்பை சந்தேக படுவோம் என இழிவாக சொல்ல வருவது ஏன்?
தாலிபான் செய்த கொலைகளுக்கு மதம்,அதன் கடவுள் பொறுப்பாக ஏற்க முடியாதது போல் ஏன் இந்து மதத்தை நினைபதில்லை இந்த போலி மதசார்பின்மையினர் .

http://www.dinamalar.com/news_detail.asp?id=1139674

__._,_.___