கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்.”


கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும்.

பொய்யை சொன்ன ததிபாண்டனும்."

"கிழக்கு தாம்பரத்தில் மிக அழகாக தத்துவங்களோடு
திரு உ.வே.அனந்தபத்மநாபாச்சாரியார்,ஆஸ்திக சபா சார்பில்
கிருஷ்ண லீலை உபன்யாஸத்தில்-ஒரு பகுதி.(13-08-2014)

ஸ்ரீகிருஷ்ணர், ”குல குருவான துரோணரை வீழ்த்தவில்லையென்றால் பாண்டவர்களுக்கு தோல்வி ஏற்படுவது நிச்சயம். துரோணாசாரியாரை அழிக்க ஒரே வழிதான் உள்ளது. அவரின் மகனான அஸ்வத்தாமா இறந்துவிட்டதாக ஒரு பொய் சொன்னால், அதுவும் தர்மர் சொன்னால், துரோணர் அதை நம்பி, புத்திர சோகத்தால் சில நிமிடங்களாவது செயலற்றுப் போவார்; போர் புரிவதை நிறுத்திவிடுவார். அப்போது சமயம் பார்த்து அவரை வீழ்த்திவிடலாம்” என்று ஆலோசனை கூறினார்.

ஆனால் தர்மர் இந்தக் குறுக்கு வழியை ஏற்கவில்லை. அந்தச் சமயத்தில் தர்மரின் தம்பி பீமசேனன், ஒரு யுக்தி செய்தான்; ‘அஸ்வத்தாமா’ என்ற பெயருடைய ஒரு யானையை வீழ்த்தினான். உடனே கிருஷ்ண பகவான் தர்மரை பார்த்து, ”அஸ்வத்தாமா அதஹ: குஞ்சர” என்று உரக்கச் சொல்லச் சொன்னார். அதாவது, ‘அஸ்வத்தாமா என்ற யானை இறந்துவிட்டது’ என்பது இதன் பொருள். தர்மராஜனும் அவ்வாறே உண்மையைக் கூறியபோது, ‘குஞ்சர’ என்ற வார்த்தையை (‘குஞ்சரம்’ என்றால் யானை) தன் சங்கை முழக்கி அடக்கிவிட்டார் கண்ணன். தர்மரின் வாக்கியம், துரோணரின் காதில், ‘அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்’ என்கிற ரீதியில் கேட்டது. உடனே அவர் புத்திர சோகத்தினால் தன் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட, அச்சமயம் பாண்டவர்கள் அவரை வீழ்த்தினர்.

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள் www.maalaima lar.com


ஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. ‘எனக்கு எடை கூடிடுச்சு…

எப்படிக் குறைக்கிறதுன்னு தெரியலை’ என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது.

‘ஜிம்’மில் பணம் கட்டி சில நாட்கள் ஆர்வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மறந்தே விடுகிறார்கள்.

சிலரோ விளம்பரங்களை நம்பி, ‘கஷ்டமில்லாமல்’ உடலைக் குறைக்க எண்ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடுகிறார்கள். ஆனால், செயற்கை மருந்துப் பொருட்களின்றி, இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றிய விவரங்கள் இவை…

தர்பூசணி :

தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக, பயண வேளைகளின்போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்காது.

பப்பாளி :

இதில் கொழுப்பு, கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால், உணவுக் கட்டுப்பாட்டின்போது பப்பாளியைச் சேர்த்துக்கொண்டால், உடல் எடை குறைவதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும்.

லிச்சி :

நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி, மிகவும் இன்சுவையான பழம். இந்தப் பழமும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

பிளம்ஸ் :

பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும்.

மாம்பழம் :

பலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழம் இது

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்

http://www.maalaimalar.comपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

காடகம் – வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய ்த பலன்:


காடகம் – வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய்த பலன்:சக்தியும், மகத்துவமும் வாய்ந்த இந்த காடகத்தை பற்றி ஒரு வார்த்தை.தைத்ரீய யஜுர் பிராஹ்மண காடகம் என்றும் அழைக்கப்படும் காடகத்தில் மொத்தம் மூன்று ப்ரச்நங்கள் இருக்கின்றன. மொத்தமாக சேர்த்து பார்த்தால் கிட்டத்தட்ட 167 பஞ்சாதிகள் ஆகும்.பல பெரியோர்களின் அபிப்ராயப்படி காடகத்தை பாராயணம் செய்வதே ஒரு மகத்தான உபாஸனை ஆகும்.ஆம், காடக மந்த்ரங்களை பாராயணம் செய்வதே உபாஸனை ஆகிறது.அது மட்டுமல்ல.காடகத்தை நம்பிக்கை, ச்ரத்தையுடன் பாராயணம் செய்வதால் வேதத்தை சம்பூர்ணமாக பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என பெரியோர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். மனு ஸ்முருதியிலும் இதற்கு ஆதாரம் கிடைக்கின்றது.காடகத்தில் ஒரு விசேஷ உபநிஷத் அடங்கி இருப்பதனாலும், மேலும் இது ஒரு தனி ஸாகையாக இருப்பதனாலும் இதை ஆபத்கால தர்மமாக அத்யயனம் செய்தவர் வேத ஸாகை ஒன்றை முழுவதையும் அத்யயனம் செய்ததாக சொல்லப்படுவதுண்டு.இதை குறிப்பிடுவதின் தாத்பர்யம் என்னவென்றால் காடகம் அவ்வளவு சிறப்புடைய வேத பகுதி என்பதே.’காடகம்’ கற்றுத் தர புது வகுப்புக்கள்:ஒரு சிலர் கேட்டுகொண்டதற்கிணங்க யஜுர்வேதத்தின் அங்கமான ’காடகம்’ பகுதியை கற்றுதர புது வகுப்புக்கள் விரைவில் சென்னை மேற்கு மாம்பலத்தில் துவங்கவிருக்கின்றது.தகுதி:ஏற்கனவே சூக்தாதிகள் பாடமாகியிருக்க வேண்டும்.மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது வியாழன், வெள்ளி நாட்களில், நடைபெறும் ‘க்ளாஸ்’க்கு’ ‘ரெகுலராக’ வரமுடியுமானால் தொடர்பு கொள்ளலாம்.தொடர்பு கொள்ளவேண்டிய நபர்:ஸ்ரீ விஸ்வநாதன் அவர்கள் : 9840318675

परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE