சகோதரிகளே உங்களுக்கான தலையணை மந்திரங்கள ்-16 !!


சகோதரிகளே உங்களுக்கான

தலையணை மந்திரங்கள்-16 !!

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது.

சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது!

சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான்.

நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!

எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!

1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும்.

தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.

ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.

நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.

2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள்.
எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை.

இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்!

கணவனின் கருத்தையும் கேளுங்கள்.

இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது
வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.

3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள்.

வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம்

புகழ் அற்றவராக இருக்கலாம்.

ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்
(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க.
ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)

4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும்.

ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர்.

வெற்றிபெற விடுங்கள்.

அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள்.

நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள்.

கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும்.

இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.

5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம்.

ஒருவர் போல் மற்றவர் இல்லை.

உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த
அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!

6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள்.

விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள்.

இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை
விழிக்க அனுமதிக்காதீர்கள்.

நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன் அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.

8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்.

கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.

9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம்.

அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள்.

கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.

10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார்.

பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும்.

ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள்.

நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.

11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள்.

எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள்.

இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள்.

அப்புறம் என்ன?

கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?

12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள்.

”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து
போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.

13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும்.

அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும்.

ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம்.

துப்புறவு மட்டும் செய்யுங்கள்.

எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை
ஓய 2 நாள் ஆகும்.

14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள்.

இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும்.

குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும்
நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.

15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்..

தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும்.

நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.

தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.

உங்களை நீங்கள் காதலியுங்கள்.

உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

16.கடைசியாக மிக முக்கியமானது. கணவன்தான் படுக்கை
அறையில் விசயத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று பெண்கள் அமைதியாக இருப்பீர்கள்.

இது மிகவும் தவறு.

ஈகோ உடைக்கப்பட வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

இங்கு கௌரவம் பார்ப்பதில் அர்த்தமில்லை.

இங்கு கட்டுடைப்பது நீங்களாகவே இருந்துவிட்டுப் போங்களேன்.

ஆரம்பித்தபின் நீ தான் ஆரம்பித்தாய் என்று யாரும் குற்றம் சொல்லப்போவதில்லை. தாண்டுங்கள் கூச்சத்தை!!!

….परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

ஆஸ்துமா – பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிற து? அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீர ஞ்சன், சென்னை


ஆஸ்துமா – பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?

அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை

ஒரு சிறிய மெல்லிய குழாயை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதன் வழியாக காற்றை ஊதுங்கள்.

இப்போது காற்று சீரான வேகத்துடன் செல்லும். அதே குழாயை ஒரு இடத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு காற்றை ஊதிப் பாருங்கள்.

காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, காற்று வேகத்துடனும் சத்தமாகவும் வெளியேறும்.

குழாயில் காற்று தடையில்லாமல் போக வேண்டுமானால்,
அதில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

அதேபோல் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் ஏற்பட்டுள்ள தடை (ஆஸ்துமா) எதனால் ஏற்பட்டது?

நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளால்.

முதலில் இவற்றை வெளியேற்ற வேண்டும்.

ஒவ்வொரு முறை உடலானது இவற்றை வெளியேற்ற முயலும் போது (சளி பிடிக்கும்போது) மருந்துகளினால் நீங்கள் அவற்றை நிறுத்தும் போது, அந்தக் கழிவுகள் காய்ந்து நரையீரலிலேயே படிந்து விடுகின்றன.

சளி பிடிக்கும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீங்கள் செய்யும் போதும் இந்தக் காய்ந்த சளிக் கழிவுகள் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் படிந்து, அதன் பாதையில் தடையை ஏற்படுத்துகின்றன.

காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, மூச்சு விடுவதில் சிரமம், இரைப்பு, சத்தம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சொல்ல முடியாத வேதனையை நீங்கள் அனுபவிப்பது இதனால் தான்.

ஆஸ்துமா நோயாளிகள் மூச்சிரைக்கும் போது, பஃப் அடித்தால் என்ன நடக்கிறது?

பஃப் அடித்ததும் மூச்சிரைப்பு கட்டுப்படுகிறது.

அது அப்போதைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.

நீங்கள் ஒவ்வொரு முறை பஃப் அடிக்கும் போதும் கழிவுகள் சேர்ந்து வீங்கிப் போன, காற்று புக முடியாத நுரையீரலின் நுண்ணிய குழாயை விரித்துப் பிடிக்கும் வேலையைச் செய்கின்றன, இந்த பஃப்-இல் இருக்கும் மருந்துகள்.

ஒவ்வொரு நாளும் இந்த நுண்ணிய குழாய்களை விரித்துப் பிடிப்பது நிரந்தரத் தீர்வா!

அல்லது

அந்த நுண்ணிய குழாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, ஆஸ்துமாவை முழுவதும் குணமாக்கி, ஆரோக்கியத்தைத் தருவது நிரந்தரமான தீர்வா என்பதை நீங்களே முடிவு வெய்யுங்கள்….

கழிவுகளை நீக்காமல் எந்த லோகத்திலிருந்து மருந்து கொண்டுவந்து சாப்பிட்டாலும் தேர் ஈஸ் நோ யூஸ். நித்ய கண்டம் பூரண ஆயுள்தான்….

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நாட்பட்டு சேர்ந்து வெளியேற முடியாத கழிவுகளை வெளியேற்றுவதும், தாகம் எடுத்தால் தண்ணீர், பசி எடுத்தால்தான் உணவு என்ற பழக்கம்தான் உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.

நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடுமே ஆகும்.

உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியத்தின் கதவுகளை திறக்க இது ஒன்றே போதுமே!

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியாपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

தொலைந்துபோன இண்டிகா… நொந்துபோன பன்னீர்! தமிழ், ஓவியம்: கண்ணா புதிதாக வாங்கிய காரில் க ீறல் விழுந்தாலே சிலர் துடிதுடித்துப் போவார ்கள். கார் வாங்கிய இரண்டே நாளில் காணாமல் போன ால்?


தொலைந்துபோன இண்டிகா… நொந்துபோன பன்னீர்!
தமிழ், ஓவியம்: கண்ணா
புதிதாக வாங்கிய காரில் கீறல் விழுந்தாலே சிலர் துடிதுடித்துப் போவார்கள். கார் வாங்கிய இரண்டே நாளில் காணாமல் போனால்?

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் டாடா இண்டிகா டீசல் கார், டெலிவரி எடுத்த இரண்டாவது நாளே காணாமல் போய்விட்டது. காணாமல் போய் ஒரு மாதத்துக்கு மேலாகியும் கார் கிடைக்கவில்லை.

”சாலிகிராமத்தில் தனலட்சுமி டிராவல்ஸ்னு ஒரு கம்பெனி வெச்சிருக்கேன். டாடா இண்டிகா டீசல் காரை, செப்டம்பர் மாசம் அம்பத்தூரில் டெலிவரி எடுத்தேன். பூஜை போட்ட அடுத்த நிமிஷமே முதல் சவாரி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு. ‘சகுனம் சூப்பரா இருக்கே’னு சந்தோஷமா என் டிரைவர் அருணாச்சலத்தை அனுப்பினேன். இவர், எங்கிட்ட நாலு வருஷமா வேலை செய்றார்.

‘அண்ணே, காஞ்சிபுரம் ட்ரிப் முடிச்சிட்டேன். வண்டியை வீட்டுக்கு எடுத்துட்டுப் போகட்டுமா?’னு போன் பண்ணவர், திரும்பவும் காலையில போன் பண்ணினார். ‘அண்ணே, வண்டியைக் காணோம்ணே’னு அவர் சொன்னதும் எனக்கு பக்குனு தூக்கி வாரிப்போட்டுச்சு. ‘என்னப்பா சொல்றே… புது வண்டிப்பா… முதல் சவாரிதாம்ப்பா முடிஞ்சிருக்கு. 200 கிலோ மீட்டர்கூட முழுசா ஓடலையே?’ன்னு சத்தம் போட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட விசாரிச்சப்போ, ‘சார், நைட் ரெண்டு மணிக்கெல்லாம் உங்க காரைப் பார்த்தேனே!’னு ஒருத்தர் சொன்னார். ‘மூணு மணி இருக்கும் சார்… உங்க கார் மூவ் ஆகிட்டிருந்துச்சு. சரி; நீங்கதான் எடுக்கிறீங்களோனு நினைச்சேன்’னு இன்னொருத்தர் சொன்னார்.

உடனே போலீஸ் ஸ்டேஷன்ல போய் சொன்னேன். ‘கம்ப்ளெய்ன்ட் எழுதிக் குடுப்பா’னு சொன்னாங்க. ரைட்டர் அம்மாகிட்ட, நடந்த எல்லாத்தையும் எழுதிக் கொடுத்தேன். ‘ஏம்ப்பா, வண்டி வாங்கினா ஒழுங்கா வெச்சுக்கத் தெரியாதா?’னு சத்தம் போட்டு, ‘நாங்களும் முடிஞ்சவரைக்கும் தேடுறோம்; நீங்களும் தேடுங்க’னு சொல்லி திமிஸி கொடுத்து அனுப்பிச்சிட்டாங்க. நான் என் நண்பர்கள், டிரைவர்கள் எல்லாம் மூணு டீமா பிரிஞ்சு காரைத் தேட ஆரம்பிச்சோம். ராணிப்பேட்டை, வேலூர், வாலாஜா டோல்னு ஒரு டீம்; சித்தூர், குண்டூர், வாராங்கல்னு ஆந்திரா பக்கம் ஒரு டீம்; பெங்களூர் பக்கம் ஒரு டீம்னு நாங்க தேடாத இடம் இல்லை. ‘இது வரைக்கும் மூணு காருக்கும் டீசலுக்கும் மட்டுமே ஆயிரக்கணக்குல செலவழிச்சுட்டேன். கொஞ்சம் கண்டுபிடிச்சுக் குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்’னு அஞ்சு நாள் கழிச்சு, திரும்பவும் போலீஸ் ஸ்டேஷன் போனேன். ‘தம்பி, நாங்களும் தேடிக்கிட்டுத்தான்பா இருக்கோம். கிடைச்சா சொல்றோம். வேணும்னா, எங்க பி.சியைக் கூப்பிட்டுப் போய் நீங்களே தேடுங்க’னு சொன்னாங்க. ஏற்கெனவே எங்க டீமுக்கே சாப்பாடு, டீசல், டோல்னு ஆயிரக்கணக்குல செலவழிச்சுட்டிருக்கேன். இதுல போலீஸ்னா அவங்களுக்கும் சேர்த்து செலவழிக்கணுமேன்னு, ‘பரவாயில்ல சார், நீங்க கிடைக்கும்போது சொல்லுங்க!’னு வந்துட்டேன்.

திரும்பத் திரும்ப ஸ்டேஷன் போகவும் அசிங்கமா இருக்கு. ‘வேணும்னா 100 நாள் கழிச்சு லெட்டர் தர்றோம்… இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பண்ணிக்கோ’னு சொல்றாங்க ஸ்டேஷன்ல. இன்ஷூரன்ஸ் தொகைன்னா, கண்டிப்பா முழுத் தொகையும் வராது. அப்படியே க்ளெய்ம் கெடைச்சாலும், போலீஸ் ஸ்டேஷன்ல லெட்டர் எப்போ தர்றது, எனக்கு எப்போ க்ளெய்ம் கிடைக்கிறது? இதுல இன்னொரு கொடுமை, இல்லாத காருக்காக பேங்க்ல லோன் வாங்கின தவணையையும் கட்டிக்கிட்டிருக்கேன்.

எப்படிப் பார்த்தாலும் செம நஷ்டம். என்ன பண்றதுனே தெரியலை சார். என் கார் தொலைஞ்சுபோய் இன்னையோட ரெண்டு மாசமாச்சு. என் கார் எப்படி இருக்கோ, என்ன ஆச்சோ? இன்னும் ரிப்பன்கூட கட் பண்ணலை சார். என் நிலைமை யாருக்கும் வர வேண்டாம்; தயவுசெஞ்சு எல்லோரும் உங்க காரைப் பத்திரமா பார்த்துக்குங்க!” என்று ரொம்பவும் நொந்து போய்ச் சொன்னார் பன்னீர் செல்வம்.

கார் மறக்காமல் லாக் செய்யப்பட்டிருந்தது; ஸ்டீயரிங் வீலும் லாக் ஆகியிருந்தது என்று டிரைவர் ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தாலும், இவற்றையும் மீறி கார் எப்படி திருடு போயிருக்கும்? தொலைந்துபோன இண்டிகா காரைத் தேடும் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் பேசினோம்.

”கார் திருடர்கள் ஒவ்வொருவரும் ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். முதலாவது, கார் கண்ணாடியைச் சேதப்படுத்தி உள்ளே சென்று, இன்ஜினை ஆன் செய்வது; இரண்டாவது, கார் கதவின் கைப்பிடிகளை உடைத்துவிட்டு, உள்ளே இருக்கும் ஸ்க்ரூவை லேசாகத் தட்டினால் கதவு திறந்துவிடுவதாக, சென்ற முறை எங்களிடம் மாட்டிய திருடன் ஒருவன் சொன்னான். இன்னொரு சிறந்த வழி, கை நிறைய டூப்ளிகேட் சாவிகளை வைத்து, எது செட் ஆகிறதோ அதை வைத்தும் திருடுகிறார்கள். முக்கியமாக, டெக்னாலஜியை அதிகமாகப் பயன்படுத்தித்தான் காரைத் திருடுகிறார்கள். ஏனென்றால், கீலெஸ் என்ட்ரி கொண்ட கார்களும் இப்போது திருடு போவது அதிகரித்திருக்கிறது. இப்படி திருடிய கார்களை வைத்து செம்மரக் கட்டைகளைக் கடத்துகிறார்கள். போலீஸில் பிடிபட்டாலும் கவலை இல்லை; காரை விட்டு விட்டு ஓடிவிடலாம். எனவே, கார் தொலைந்ததும் கம்ப்ளெய்ன்ட் செய்ய மறக்காதீர்கள். முக்கியமாக, இன்ஜின் இம்மொபைலைஸர்கள் கொண்ட காரையோ அல்லது ஜிபிஎஸ் பொருத்திய கார்களையோ வாங்கினால், கார் திருட்டைக் கண்டுபிடிக்க பேருதவியாக இருக்கும்!” என்றார் இன்ஸ்பெக்டர்.

Timeline Photos

தொலைந்துபோன இண்டிகா… நொந்துபோன பன்னீர்! http://goo.gl/lGMGE5 புதிதாக வாங்கிய காரில் கீறல் விழுந்த…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்! பட்டமங்க லம் ஜோதிடம்


பட்டமங்கலம் ஜோதிடம்
அர்த்தமுள்ள திருமண மந்திரங்கள்!

இந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களலில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா? எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.

அடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவுகிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக!’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே! இதோ உங்கள் ஆசனம்! உங்களுக்கு என் இனிய வரவேற்பு!’’

பின் கன்யாதானம்! பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்…’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்!’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே! அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும்! அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்!’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’ என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’ என்று மும்முறை உறுதி கூறுகிறார்.

மணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக!’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே! என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை!’’

இதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே! நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக! உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.

மணமகளின் பாதம் தொட்டு, மெட்டி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக! என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல்! என்னுடன் நட்பாக இருப்பாயாக! இன்சொல் ததும்பும் பெண்ணே, வா… செல்வமும் நன்மக்களும் பெறுவோம்!’’

அதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும்! தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும்! இந்திரனே! இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக! இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக! சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக! ஓ, மணமகளே! உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக!’’’

மணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக! உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக! அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக! ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே! உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று! வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று!’’

பெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக! உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்!’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக!’’

பிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே! வாயுவே! ஆதித்தனே! பிரஜாபதியே! உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க! உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

வாழி நலம்!परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்! ம.மா ரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி, தி.கௌதீ ஸ்


கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!
ம.மாரிமுத்து, படங்கள்: வீ.சக்தி அருணகிரி, தி.கௌதீஸ்

இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற கவலை இல்லாமல், வயிற்றை நிரப்புவது என்றாகிவிட்டது. இது மிக மிகத் தவறு. எந்த நோயும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்த நம் முன்னோர்களின் முக்கிய உணவே பாரம்பரிய தானியங்களில் செய்த கஞ்சியும் கூழும்தான். அது எல்லாம் நோயாளிகளுக்கு என்று ஒதுக்கிவிட்டு ஜங்க் ஃபுட் தேடிப்போவது நாகரிகமாகத் தெரியலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்காது.
நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும் கூழும் உதவி செய்யும் என்கிறார் தேனி, காமயகவுண்டன்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கே.சிராஜுதீன்.
சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும். அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.
குடல்புண் மற்றும் உணவுக்குழாயில்் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள்வைக்க உதவும். கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.
இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள் (chronic renal disease), கால் வீக்கம், முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை கைகொடுக்கும்.
பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்- டி1 நிறைந்ததுள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் (angular cheilitis) குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படு்ம். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
கேழ்வரகு நார்ச்சத்து நிறைந்த உணவு. இதில் அமினோ அமிலங்கள், லிசித்தின் மற்றும் மெத்யோனைன் போன்றவை அடங்கியுள்ளன.
கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு அடைவதால் ஏற்படும் பெருவயிறு நோய் இருப்பவர்களுக்கு கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின்சி மற்றும் இரும்புச் சத்து இருப்பதால், ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், குடல் புற்றுநோயினைத் தவிர்க்கவும் உதவுகிறது.
கேழ்வரகு பாதாம் கஞ்சியைக் குடிப்பதால், சதைகளுக்கு ஊட்டம் கிடைக்கும். வைரல் காய்ச்சலில் குணமடைந்தவர்களுக்கு, மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைக் குறைக்க, கேழ்வரகு பாதாம் கஞ்சி பயன்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் (primary complex) காசநோயினைக் கட்டுப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மருத்துவர் சிராஜுதீன் பகிர்ந்துகொண்ட உணவுமுறையை டாக்டர் விகடன் வாசகர்களுக்காக செய்து காட்டியிருக்கிறார் ஆப்பிள் மில்லட் உணவகத்தின் செஃப் சுப்ரமணியன்.
கேழ்வரகுக் கூழ்
தேவையானவை: கேழ்வரகு 200 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர் (அ) காய்ச்சிய பால் 3 டம்ளர், சின்ன வெங்காயம் 6, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சை மிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகினை நீரில் நன்றாக ஊறவைத்து, மெல்லியத் துணியில் கட்டி, முளைக் கட்டவும். முளை விட்டதும், கடாயில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைக்கவும். இதில், கெட்டியாக இருக்கும் அளவுக்கு நீர் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறத்தில் வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். கடைசியில் மோர் (அ) பால் சேர்த்து இறக்கவும்.
கேழ்வரகு பாதாம் கஞ்சி
தேவையானவை: கேழ்வரகு 200 கிராம், பாதாம் பருப்பு 50 கிராம், தண்ணீர் 4 டம்ளர், மோர் 3 டம்ளர், சின்ன வெங்காயம் 6, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சை மிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு, மல்லித்தழை தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகினை நீரில் ஊறவைத்து, மெல்லிய துணியில் முளை கட்டவும். இதைக் கடாயில் வறுத்து, மிக்ஸியில் அரைத்துக் கெட்டியாக இருக்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்க்கவும். பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்துச் சேர்க்கவும். இதை நன்றாகக் கொதிக்கவைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். மோர் சேர்த்து இறக்கவும்.
சிறுதானியக் கஞ்சி
தேவையானவை: சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா 50 கிராம், மோர் (அ) காய்ச்சிய பால் 3 டம்ளர், தண்ணீர் 4 டம்ளர், சின்ன வெங்காயம் 6 முதல் 8, சீரகம் ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை தேவையான அளவு, பச்சைமிளகாய் 3, கடுகு ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு தேவையான அளவு.

செய்முறை: சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுக்க வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப் பொடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உரித்த சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கடுகு,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். பிறகு மோர் (அ) பால் சேர்க்கவும். இதேபோல், சிறுதானியங்களைத் தனித்தனியாக கஞ்சி தயாரித்துப் பருகலாம்

Timeline Photos

கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்! http://goo.gl/PjEo0W இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்ற…परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?


சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்!

சர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக
கட்டுரைகள் படித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆயினும் சர்க்கரை நோய் பற்றி எப்போதும் சந்தேகம் ……

• ஏன் சர்க்கரை நோய் வருகிறது?

• என் பெற்றோருக்கு நீரிழிவு நோய் உள்ளது..

எனக்கு வருமா?என்ற கேள்விகளைப் பலரும் எழுப்புகின்றனர்.

இதற்கு நாம் அறிவியல்அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

இக்கட்டுரை இந்த நோய் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும், இந்நோய் பாதிக்கப்பட்டோருக்கும்,
நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்போர்
குடும்பத்தினருக்கும்நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கு மிகவும் விரிவாக அறிவியல் விளக்கங்கள் எழுதாமல் முடிந்த அளவு எளிமையாக உள்ளது.

நீரிழிவு நோயைப் பொதுவாக இரண்டு வகைப்படுத்தலாம்.

1.முதல்வகை நீரிழிவு நோய்

2.இரண்டாம் வகை நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் வரக்காரணங்கள்.

நீரிழிவு நோய் வர நிறையக் காரணங்கள் உள்ளன.

• மரபு வழி- அம்மாவுக்கு நீரிழிவு இருந்தால் 2- 3% பிள்ளைகளுக்குவரலாம்.

அப்பாவுக்கு இருந்தால் 3% க்கு சற்று அதிகமாக வரலாம்.

தாய்தந்தை இருவருக்கும் இருந்தால் நீரிழிவு வரும் வாய்ப்புக்கள் இன்னும்அதிகம்.

• உணவுக்குறைபாடு- குறைந்த புரத உணவு, நார்ச்சத்துக் குறைவானஉணவு

• உடல் எடை, கொழுப்பு அதிகம்

• உடலுழைப்பற்ற வேலை

• மன அழுத்தம்

• மருந்துகளால் – வேறு நோய்களுக்குக் கொடுக்கும் சிலமருந்துகள் நீரிழிவு நோயைத் தூண்டுபவை.

• கணையத்தில் கிருமித் தொற்று.

• இரத்த அழுத்தம்

• இரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல்

• புகை பிடித்தல்- புகைக்கும் பழக்கம் உள்ளோருக்கு நிரிழிவு நோய் வரும்வாய்ப்புக்கள் அதிகம்.

அவர்களுக்கு கண் கோளாறும், மூட்டுத்தேய்வும்ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகள் அதிகம் புகைத்தால் வாழ்நாள் குறையும்.

முதல் வகை நீரிழிவு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்களிடையே பலஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன.

அவற்றைத்தெரிந்துகொண்டாலே நோய் பற்றி ஓரளவு தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

முதல் வகை நீரிழிவு ( Type 1 Diabetes Mellitus)

இன்சுலின் உடலில் உற்பத்தியாகாது.

நோய் வருவதைத் தடுக்க முடியாது.

அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ
வராமல் தடுக்க முடியாது.

கணையத்தில் பீட்டா செல்கள் இருக்காது.

நீரிழிவு நோயாளிகளில் 15% பேர் இந்த வகையினர்.

சிறு வயதிலேயே ஆரம்பித்து விடும்.(குழந்தைகளிலும்!)

நோய்க்குறிகளும், விளைவுகளும் கடுமையாக இருக்கும்.

குழந்தை பலகீனமாகவும், உடல் எடை குறைவாகவும் ஆகிவிடும்.

அதிக தாகம், அதிகமாக சிறுநீர் கழித்தல், பசிக்குறைவு,உமட்டல், வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும்.

இன்சுலின் ஊசி அவசியம்,

தினமும் இருமுறை அல்லது அதற்குமேல் தேவைப்படும்.

ஊசிக்கேற்றவாறு உணவு முறைப்படுத்தி உண்ணவேண்டும்.

பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

• இரண்டாம் வகை நீரிழிவு(Type 2 Diabetes Mellitus)

• இன்சுலின் உடலில் உற்பத்தியாகும்.

• நோய் வருவதைத் தடுக்கலாம்.

•அதிக உடற்பயிற்சியாலோ, உணவுக்கட்டுப்பாட்டாலோ
வராமல் தடுக்கலாம்.

• கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்.

• 85% பேர் இந்த வகையினர்!

• நடு வயதில் ஆரம்பிக்கும்.

• இரத்த அழுத்தம், அதிக உடல் எடை ஆகியவற்றால் வரலாம்.
நோயாளிகளில் 55% பேர் உடல் எடை அதிகமுள்ளவர்கள்.

• .நோய்க்குறிகள்: கண் பார்வை மங்குதல், ஆறாத புண், தோல் அரிப்பு, அதிக தாகம், வாய் வறட்சி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் வலி.

• உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரைகள் ஆகியவற்றால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

• இதிலும் பின் விளைகளான சிறுநீரக பாதிப்பு, கண்பார்வைக் கோளாறு, இதயநோய், பக்கவாதம், காலில் ஆறாத புண் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

இதைப்படிக்கும் என் அன்பு நண்பர்கள், மற்றவர்களுடன் பகிரவும்परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பெண்களிடம் பேசுவது எப்படி என்பது ஒரு கலை.


காதலி/மனைவியிடம் சொல்லக்கூடாதவை- 6-!!

அன்பின் வலை ஆண் மக்களே!

பெண்களிடம் பேசுவது எப்படி என்பது ஒரு கலை.

அதிலும் எதையாவது பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

என்ன விசயங்கள் பேசலாம்,எவற்றைப்பேசக்கூடாது என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

1.பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம்.

பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம்.

ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது.

அப்புறம் அவங்க அதையெல்லாம் வச்சு
1000 கேள்வி கேப்பாங்க பிரதர்!! மண்டை காஞ்சு போவீங்க.

2.பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள் நண்ப்ர்களே.

அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்!

புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க.

ஏன்னா எப்ப உங்க மனைவி சி.பி.ஐ ஆ மாறுவாங்கன்னு தெரியாது.

3.நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது.

“என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க!!” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க!

உஜாரூ மாமே!!

வாயத்தொற்க்கக்கூடாது…

அதுவும் நமக்கு கம்பெனி கொடுக்கும் ”குடி”நண்பர்களைப் பற்றி
பேச்சே கூடாது!!

4.உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும்.

பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள்.

தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க…எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை.

ஆரம்பத்திலிருந்து இதைக்கடைப்பிடித்தால் நீங்கள்தான் உங்கள் மனைவியின் ராஜா..

துணிந்து தாக்குங்க மச்சி!!

5.உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள்.

அதைத்தான் விரும்புவார்கள்..

ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை.

சிலநேரங்களில் உங்கள் கைச்செலவு, சாப்பாடு, பெட்ரோல் எல்லாமே பெற்றோர் தயவில்தான் ஓடும்.

ஆனால் காதலியிடம் இதையெல்லாம் வாய் திறக்கக் கூடாது.

6.கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது.

சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம்.

ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்!!!

புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள்.

உண்மைதான்!!

ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும்.

பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!!

…..परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE