என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பத ால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?”


என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?”

என்று யோசிக்கிறீர்களா… வெயிட்…

உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள்.

ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது.

அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.

காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது.

கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள்.

ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட்.

அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள்.

உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு,

செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது.

உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள்.

ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர்.

ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள்.

பழைய போனை மறந்தும் விட்டார்கள்.

ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன.

செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) .

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது.

அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.

அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள்.

பின்னர் Delete செய்துவிடுகிறார்கள்.

ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள்.

இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன.

இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.

இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள்.

காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது.

அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.

கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும்.

அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது.

அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள்.

பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

pls share

என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம். அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர். அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) . மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது. இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார். ”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும். அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார். இதைத் தவிர்க்க என்ன செய்வது? முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள். அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை! ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன. தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…! pls shareपरोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள்


vidhai2virutcham-விதை2விருட்சம்

உண்மையான ஆண்மகனுக்கு இருக்க‍ வேண்டிய அஷ்ட (8) குணங்கள்

ஆண்மையுடனும், அழகாகவும் இருக் கும் ஆண்களைத் தான் உண்மையான ஆண்பிள்ளை என்று நாம் சொல்லு வோமா? இல்லை. தன்னுடைய வாழ் நாளில் பின்பற்றும் சில குறிப்பிட்ட குணங்களால் தான் உண்மையான ஆண்மகன் என்பவன் உருவாக்கப்படு கிறான். அவன் வெளிப்புறத் தோற்றத் தை மட்டும் கொண்டு உருவாக்கப்படு வதில்லை, அவனுக்குள் இருக்கும் மனிதனைக் கொண்டு உருவாக்கப்படு கிறான். எனவே, உண்மையான ஆண் மகன்களிடம் இருக்க வேண்டிய அந்த குணங்களைப் பற்றி தெரி ந்து கொள்வதில் உங்களுக்கு

View original post 399 more words

சாமிக்கு அர்ச்சனையை வீட்டில் அமர்ந்தபடி யே பண்ணலாம்!


சாமிக்கு அர்ச்சனையை வீட்டில் அமர்ந்தபடியே பண்ணலாம்!

இப்போதெல்லாம் டிவிக்களில் நேரடி ஒளிபரப்புக்கு பஞ்சமே இல்லை. கிரிக்கெட் தொடங்கி ஆண்மைக் குறைவு வரை விளக்கம் சொல்லி அதையும் நேயர்களிடம் போனில் பேசி அப்டேட் மேட்டராக டெலிகாஸ்டாவது சாதாரணமாகி விட்டது.அந்த ‘லைவ் கான்செப்ட்’ ஆன்மிகத்தையும் விட்டு வைக்கவில்லை. இன்ராக்டிவ் டி.வி முதன் முறையாக புதுமையான ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அந்த நிகழ்ச்சிக்கு பெயர் ஐ பிரார்த்தனை. தினமும் காலை 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு புகழ்பெற்ற கோயிலை காட்டி அதன் அருமை பெருமைகளை சொல்லிக்கொண்டிருப்பார்கள். அதன் தல வரலாறு பற்றி சொல்வார்கள். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்கள். அந்த கோவிலில் உள்ள சாமிக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது அதன் அடியில் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி தங்கள் பெயர், ராசி, நட்சத்திரத்தை சொன்னால். ஒரு அர்ச்சகர் தோன்றி உங்கள், பெயர், ராசி, நட்சதிரத்தை சொல்லி அர்ச்சனை செய்வார். அது அப்படியே நேரடியாக ஒளிபரப்பாகும். நீங்கள் உங்கள் பெயரில் அர்ச்சனை நடப்பதை வீட்டில் இருந்தபடியே டி.வி.திரையில் பார்த்து சாமியை கும்பிட்டுக் கொள்ளலாம்.

இதுப் பற்றி “அர்ச்சனைக்கு தினமும் ஒரு கோயில் விசேஷமானது இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கோயிலுக்கு போவது இயலாத காரியம். இந்த நிகழ்ச்சி மூலம் கோயிலுக்கு போக முடியாத ர்கள் தங்கள் இஷ்டதெய்வத்துக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளலாம்” என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். நிகழ்ச்சி புதுமையாக இருக்கிறது. ஹும்/ இது கொஞ்சம் பாப்புலராகி விட்டால் அப்படியே காப்பி அடித்து இங்குள்ள சகல சேனல்காரர்களும் அர்ச்சனையை தொடங்கி விடுவார்களே!.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எளிய மருத்துவ குறிப்புகள்:-


வீட்டுலேயே இருக்கு எளிய மருத்துவ குறிப்புகள்:-

உடல் உஷ்ணம் அடைந்தால்:

உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள்.

இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது.

வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும்.

தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து தேவையற்ற சூடு நீங்கி விடும்.

பெண்கள் செவ்வாய் (ம) வெள்ளியும், ஆண்கள் புதன் (ம) சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வரவும்.

எண்ணெய் தேய்த்துக் குளித்தபின், இஞ்சி கஷாயம் (அ) சீரககஷாயம் (அ) சுக்குப் பொடியை வெல்லமோ, நெய்யோ கலந்து சாப்பிடவும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் இதை கடைப்பிடித்தல் மிகவும் முக்கியம்.

இம்முறையினால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு வெளியேறி, நல்ல ஆரோக்கியம் இயற்கையாக கிடைக்கும்.

ரத்தத்தை சுத்தம் செய்ய:

ரத்தம் சுத்தம் செய்வதற்குக் குங்குமப்பூ 5, கொஞ்சம் குல்கந்தை எடுத்து பொடித்து தேனுடன் கலந்து சாப்பிடவும்.

இது நல்ல சக்தியைக் கொடுக்கும்.

இதயம் வலுவடைய:

தினமும் இரவில் பாலுடன் சிறிதளவு கடுக்காய் பொடியைக் கலந்து குடிக்கவும்.

இது எல்லாவிதமான இதய நோயையும் தடுத்து நிறுத்தும்.

மாரடைப்பும் வராமல் தடுக்கும்.

இதயம் வலுவடையும்.

நல்ல தூக்கம் வேண்டுமா?:

காய்ச்சிய பாலுடன் சிறிது கசகசாப் பொடியைக் கலந்து தூங்கச் செல்வதற்கு முன் குடிக்கவும்.

இது நல்ல தூக்கத்தையும், சுகாதாரமான உடல்நலத்தையும் கொடுக்கும்.

கசகசா பாயசமும் செய்து சாப்பிடலாம்.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த:

சிவப்புக் கரும்பின் சாறு 10 அவுன்சுடன் 1 அவுன்சு தேனை கலந்து ஆஸ்துமா ஆரம்பித்தவுடனேயே குடிக்கவும்.

ஒரு வாரத்திற்குத் தினமும் இரண்டு முறை குடித்து வரவும்.

சுத்தம் செய்த தூதுவளைக் கீரையின் பூக்களை எடுத்து பாலுடன் கலந்து கொதிக்க வைத்து, படுக்கப்போவதற்கு முன் குடிக்கவும்परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்ன ு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன ்”


பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே

சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.

பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம்போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்கஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான்அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின்மீண்டும் வித்வானிடம் காட்டினார். இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான்அது மறந்துபோய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்கஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்று கதறினார்.

அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கணும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்தபின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். "வித்யாகர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுது கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?

ராவணன் சிவபெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.

எதிரில் நாரதர் வந்தார்.

என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?

நான் சிவபெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!

அட அசடே!அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!

என்ன சொல்லறீங்க?வேலை செய்யாமலும் இருக்குமான்னா?

எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு.உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?

ஆமா. சரி,இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!

கைலாசத்தை ஒன்பது தலை, 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம். பார்வதி திடுக்கிட்டுப் போய் சிவனை கட்டிண்டாளாம்!சிவன் சிரிச்சாராம்.

பார்வதி கோபிச்சுக்கொண்டு,ஓய் உமக்குஸ்த்ரீயின் குணம் எப்படி தெரிய போறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?

(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)

மலை கொஞ்சம்அசைஞ்சதும் பெருமான கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.

ராவணன் செய்வதுஅறியாமல் திகைச்சு போனான்.

நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.

நாரதரே! தப்பிக்க ஏதாவது வழிசொல்லும்.

அட உனக்குத்தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.

நான்தான் மாட்டிக் கொண்டேனே?

பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு. வீணை இல்லையே?

இதோ நான்தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.

ராவணனும் ஸாமகானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப் படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.

அது சரி,இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???

வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.
இதில் ராவணனின் ஸாமகானம் வந்தபோது அவருக்கு அந்தவரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையைவாங்கி வாசித்ததுஅதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின்இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

"யாருக்குத்தெரிய போறதுன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்" என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.

பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும். பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர். பெரியவா வழக்கம்போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள். வித்வான் வாசிக்கஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்புறம் நான்அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன? வீணையில் ஸ்ருதி கூட்டி பின்மீண்டும் வித்வானிடம் காட்டினார். இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான்அது மறந்துபோய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு. சரியா இருக்கு! பின் பெரியவா வீணை வாசிக்கஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்று கதறினார். அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கணும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார். வாசித்து முடித்தபின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். "வித்யாகர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுது கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை. என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு? ராவணன் சிவபெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான். எதிரில் நாரதர் வந்தார். என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்? நான் சிவபெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்! அட அசடே!அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க! என்ன சொல்லறீங்க?வேலை செய்யாமலும் இருக்குமான்னா? எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு.உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா? ஆமா. சரி,இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்! கைலாசத்தை ஒன்பது தலை, 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம். பார்வதி திடுக்கிட்டுப் போய் சிவனை கட்டிண்டாளாம்!சிவன் சிரிச்சாராம். பார்வதி கோபிச்சுக்கொண்டு,ஓய் உமக்குஸ்த்ரீயின் குணம் எப்படி தெரிய போறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ? (இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!) மலை கொஞ்சம்அசைஞ்சதும் பெருமான கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன. ராவணன் செய்வதுஅறியாமல் திகைச்சு போனான். நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார். நாரதரே! தப்பிக்க ஏதாவது வழிசொல்லும். அட உனக்குத்தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார். நான்தான் மாட்டிக் கொண்டேனே? பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு. வீணை இல்லையே? இதோ நான்தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார். ராவணனும் ஸாமகானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப் படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார். அது சரி,இந்தக்கதை இங்கே ஏன் வந்தது??? வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது. இதில் ராவணனின் ஸாமகானம் வந்தபோது அவருக்கு அந்தவரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார். பெரியவா வீணையைவாங்கி வாசித்ததுஅதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின்இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்? "யாருக்குத்தெரிய போறதுன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்" என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE