எலுமிச்சை: சத்துப்பட்டியல் :-


எலுமிச்சை: சத்துப்பட்டியல் :-

வடகிழக்கு இந்தியாவை தாயகமாகக் கொண்டது எலுமிச்சை. தற்போது உலகம் முழுவதும் அதிக அளவு பயன்படுத்தப்படும் கனிகளில் ஒன்றாக உள்ளது. சாறு மற்றும் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…

* எலுமிச்சை குறைந்த ஆற்றல் வழங்கும் கனியாகும். 100 கிராம் எலுமிச்சையில் 29 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது.

* பூரிதமாகாத கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் எலுமிச்சையில் கிடையாது. எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் நிறைந்துள்ளது. ரத்தத்தில் சர்க்க ரையின் அளவை அதிகரிக்காதது இதன் சிறப்பு.

* ‘சிட்ரஸ் அமிலம்’ நிறைந்தது எலுமிச்சை. இதன் பழச்சாற்றில் 8 சதவீதம் அளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. இது நோய் எதிர்ப்புத் தன்மையை வழங்கும். ஜீரணத்திற்கு உதவும். சிறுநீரக கற்களை கரைப்பதிலும் செயலாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

* எலுமிச்சையில் அஸ்கார்பிக் அமிலமும் (வைட்டமின்-சி) மிகுதியாக உள்ளது. திரவ நிலையில் இருக்கும் சிறந்த நோய் எதிர்ப்பொருள் இதுவாகும். வைட்டமின்-சி, ஸ்கர்வி நோயைத் தடுக்கும்.

* துணை அமிலங்களான ஹெஸ்பெர்டின், நாரின்ஜின், நாரின்ஜெனின் போன்றவையும் எலுமிச்சையில் காணப்படுகிறது. இவற்றில் நாரின்ஜெனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கும். தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும்.

* ‘வைட்டமின் ஏ’, எலுமிச்சையில் சிறிதளவு உள்ளது. ஆல்பா பீட்டா கரோட்டின், பீட்டா கிரிப்டோசாந்தின், ஸி-சாந்தின், லுட்டின் போன்றவையும் எலுமிச்சையில் உள்ளது. ‘வைட்டமின் ஏ’, சருமத்திற்கும், பார்வைக்கும் நன்மை பயக்கும். மற்றவை நோய் எதிர்ப்பொருட்களாகும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோயிலிருந்து காக்கும்.

* பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், போலேட் போன்ற ‘பி- காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களும் எலுமிச்சையில் உள்ளது. இவை உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும்.

* இவை தவிர இரும்பு, தாமிரம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் கணிசமான அளவில் உள்ளன. பொட்டாசியம் தாது இதயத் துடிப்பை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.

உண்ணும் முறை………. எலுமிச்சையை துண்டுகளாக்கி சாலட்டில் சேர்த்து சுவைக்கலாம். எலுமிச்சை ஜூஸ் புத்துணர்ச்சி அளிக்கும். இனிப்பு மற்றும் உப்பின் சுவையில் பருகி மகிழலாம். உடனடி புத்துணர்ச்சிக்கு ‘எலுமிச்சை டீ’ செய்து குடிக்கலாம்.

எலுமிச்சை ஊறுகாயின் சுவை அலாதியானது. நீண்டகாலம் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாதம் மதிய சித்ரான்னங்களில் முக்கிய இடம் பிடிக்கிறது. பல்வேறு உணவுத் தயாரிப்பில் சுவை சேர்ப்பதற்காக எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

எளிய இயற்கை வைத்தியம் :-


எளிய இயற்கை வைத்தியம் :-

1. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

2. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருக்காது.

3. முள்ளங்கிக் கிழங்கின் சாறோடு மருதாணி வேரை இடித்து சேகரித்த சாற்றையும் சேர்த்து துளிகளாக காதில் விட்டுவர, குணம் தெரியும்.

4. வாழை மரத்துக் கிழங்கை இடித்து எடுத்து சாற்றை சற்று சூடாக்கி துளிகளாக காதில்விட்டால் காது வலிக்கு நல்ல பலனைத் தரும்.

5. தும்பைப்பூ, சுக்கு, காயம் இவற்றை எடுத்து நைத்து கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி காதில் சில துளிகள் விட்டால் குணமாகும்.

6. மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி இளம் சூடாக இருக்கும்போது சில துளிகள் காதில்விட வலி குறையும்.

7. சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகிய சரக்குகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி, அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் அகலும்.

8. தேவதாரு, கோஷ்டம், சிற்றாமல்லி, முன்னை, பேராமல்லி முதலியவற்றை தனித்தனியாக இடித்து நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி, ஆறவைத்து ஒவ்வொரு தைலத்திலும் ஒவ்வொரு துளி கலந்து காதிலே விட்டு பஞ்சடைத்து வந்தால், காதில் ஏற்படும் வலியுடன் ஒழுக்கு இருந்தால் குணமாகும்.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"
” When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ”

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE