மகா கணபதி மூல மந்திரங்கள் :


மகா கணபதி மூல மந்திரங்கள் :

1. ஏகாக்ஷர கணபதி: 
மூலமந்திரம்
: ஓம் கம் கணபதயே நம:

2. மகாகணபதி : 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
வசமானய ஸ்வாஹா 

3. மோகன கணபதி : 

ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய
க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே
வரவரத ஸர்வஜன மே வசமானய ஸ்வாஹா

4. லக்ஷ்மி கணபதி : 

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !

வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வசமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:

5. ருணஹர கணபதி : 

ஓம் கணேசாய ருணம் சிந்தி வரேண்யம் ஹும் பட்

6. மகாவித்யா கணபதி : 

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம்
கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத
ஸகலஹ்ரீம் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

7. ஹரித்ரா கணபதி 

ஓம் ஹும் க்லௌம் ஹரித்ரா கணபதயே
வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!


கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்று இந்தியர்களுக்கு தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும் வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை. வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும் பகல் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம். இதனால் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.

வரலாறு:

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல்நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்ரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்ரிக்கர்கள் கம்போ என்ற ஒரு பிரபல சூப் தயாரிக்கையில் சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். வெண்டைக்காயை பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்ரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். ஓக்ரா என்ற இன்னொரு பெயரும் உண்டு. இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும் நீளமாகவும் நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.

வெகுநாட்கள் வரை இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே யாரும் பயன்படுத்தவில்லை. அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியிலேயே முற்ற விட்டதால் அதை பயன்படுத்திய ஒருசிலரும் முற்றிய வெண்டைக்காயின் ருசி பிடிக்காமல் அதை வெறுத்தனர்.

வகைகள்:

இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு.

விசேஷ குணம்:

வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது.

வாங்குவது எப்படி?:

இளசாக இருக்கும் போதே பறித்துவிட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும் வகையை சேர்ந்தது. சீக்கிரமே மரம் போல் முற்றி விடும். வாங்கியவுடன் சமைக்க வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். காம்புக்கு அருகில் ஓட்டை இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும். ஓட்டை இருந்தால் புழு இருக்கும்.

பாதுகாப்பு:

ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் கழுவாமல், லூஸாக பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி ட்ரேயில் வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது துளி கூட ஈரம் இருக்கக் கூடாது. ஈரம் இருந்தால் வெண்டைக்காய் அழுகி கொசகொசத்து பூசணம் பூத்துவிடும். சமைப்பதற்கு முன்தான் அலம்ப வேண்டும். சில வகை வெண்டைக்காயில் மெல்லிய பூனைமுடி போல இருக்கும். நன்றாக தேய்த்துக் கழுவி பேப்பர் டவலில் துடைத்துவிட்டு நறுக்கவும். நறுக்கி தண்ணீரில் போடக்கூடாது. அதிலிருக்கும் ஒருவித சளி போன்ற கொழ கொழப்பான திரவம் வெளியேறி சமையலே கெட்டு விடும்.

சமைக்கும் போது கவனிக்க:

இன்று வெண்டைக்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சூப், ஊறுகாய், குழம்பு என்று வெண்டைக்காயை வைத்து செய்யப்படும் உணவு வகைகளின் பட்டியல் மிகப் பெரியது. வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொறித்து வடகமாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காயின் கொண்டைப்பகுதியை வெட்டி தோசை மாவு அரைக்கும்போது சேர்த்தால் தோசை மிருதுவாக வரும்.

வெண்டைக்காயை துண்டாக வெட்டி நறுக்கும் போது அதிலிருக்கும் கொழ கொழப்பு மொத்தையாக்கி சரியாக வதங்காது. அதனால் கொழகொழப்பு நீங்க எலுமிச்சை சாறு, அல்லது தயிரை சிறிதளவு விட்டு வதக்கலாம்.

மிக மிக பொடியாக வெட்டி நறுக்கினாலும் கொழ கொழப்பு அவ்வளவாக இருக்காது. வெண்டைக்காயை தக்காளி, வெங்காயம், சோளம், மீன், உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சமைக்கும்போது அவை மிகவும் ருசியாக இருக்கும்.

மற்ற காய்கறிகளோடு சேர்த்து சமைக்கும் போது வெண்டைக்காயை அதன் கொழகொழப்பு வராமல் தனியாக வதக்கி கடைசியில் சேர்க்க வேண்டும். இரும்பு, அலுமினிய பாத்திரங்களில் சமைத்தால் கறுத்துவிடும். தக்காளியின் புளிப்புத் தன்மை வெண்டைக்காயின் கொழகொழப்பை முறியடிக்கும்.

வெளிநாட்டில் வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றோடு சேர்த்து ஸாலட்டாகத்தான் சாப்பிடுவார்கள். தனியாக சமைத்து சாப்பிடுவதில்லை. வங்காளத்தில் முற்றிய வெண்டையை உறித்து கொட்டையை சாப்பிடுவார்கள்.

இளசான வெண்டைக்காயை துண்டாக்கி முட்டையில் தோய்த்து ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து சாப்பிடுவது அமெரிக்காவில் பிரபலம். முற்றிய காயை பேப்பர் செய்யவும் கயிறு செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

உணவுச் சத்து:

பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ஒரு கப் சமைத்த வெண்டைக்காயில் இருக்கும் உணவுச் சத்துகளின் அளவு:

கலோரி 25, நார்ச்சத்து 2 கிராம், புரோட்டின் 1.52 கிராம், கார்போஹைட்ரேட் 5.76 கிராம், விட்டமின் ஏ 460 மிஹி, விட்டமின் சி 13.04 மில்லி கிராம், ஃபாலிக் ஆசிட் 36.5 மைக்ரோ கிராம், கால்சியம் 50.4 மில்லி கிராம், இரும்புச் சத்து 0.4 மில்லி கிராம், பொட்டாசியம் 256.6 மில்லி கிராம், மெக்னீசியம் 46 மில்லி கிராம்.

வெண்டைக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் இளம் பெண்களுக்கு ஆப்பிள் பழம் போல அழகிய கன்னங்கள் உண்டாகும். மேலும், புஷ்டியான முகத்துடன் பளபளவென்று மின்னுவார்கள்.

வெண்டைக்காய் வேரை இடித்துப் பொடியாக்கி அதை இரவு உணவிற்குப் பின் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 10 கிராம் பொடியை 10 கிராம் அளவுள்ள நெய் மற்றும் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்குத் தாது பலம் ஏற்படும்.

வெண்டைக்காயில் ஏ, பி மற்றும் சி ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. குடல் புண்ணால் ஏற்படும் வயிற்று வலிக்கு வெண்டைக்காய் ஒரு சிறந்த மருந்து. பண்டைய காலத்தில் லேசான காயம், நீர்க்கட்டு, பரு போன்ற பிரச்சினைகளுக்கு வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து மருந்தாகப் பயன்படுத்தினர்.

வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வெண்டைக்காய்க்கு உண்டு. சீசனில் விலை குறைவாக இருக்கும்போது நிறைய வெண்டைக்காயை வாங்கி, காய வைத்து தேவைப்படும்போது சூப் தயாரித்துக் குடித்து மகிழலாம். வீட்டிலேயே சிறிய தோட்டம் அமைத்து இயற்கை முறையில் வெண்டைக்காயைப் பயிரிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும். இத்தனை மகிமை வாய்ந்த வெண்டைக்காயை அளவோடு சாப்பிட்டு வந்தால் வளமாக வாழலாம்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

எல்லோருமே உணரவேண்டிய உண்மை என்னவென்றால்


வணிகன் ஒருவன் பெரும் பணம் சேர்த்தான். ஒருநாள் எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது கிட்டதட்ட எட்டு லட்சம் பொன் தன்னிடம் இருந்தது அவனுக்குத் தெரிந்தது.

இதை எதில் முதலீடு செய்தால் ஓரிரண்டு வருடங்களில் அதை இரண்டு மடங்காக்க முடியும் என்று திட்டமிட்டு எழுதுவதற்காக ஓலையையும், தூரிகையையும் எடுத்தான். சுரீரென்று அவனுக்கு நடுமார்பு வலித்தது. அப்படியே பின்னுக்குச் சாய்ந்தான். அவன் கண்ணுக்கு எதிரே மரண தேவதை தோன்றி,

“புறப்படு என்னு‌டன்” என்று அழைப்பு விடுத்தது…

அம்மனிதன் கெஞ்சினான். அழுது முறையிட்டான். தேவதை சற்றும் மனம் இளகவில்லை. “கொஞ்ச காலம் வாழ அருள் செய்” என்று வேண்டிக் கொண்டான். அது அசைந்து கொடுக்கவில்லை.

“ஒரு நாலு நாளாவது அவகாசம் கொடு. என் சொத்தில் பாதி தருகிறேன்..!” என்று பேரம் பேசிப் பார்த்தான்.

அப்போதும் அது நகரவில்லை…..

“ஒருநாள் – ஒரே ஒருநாள் அவகாசம் கொடு” என்று அழுதான் அப்படியும் அது அசையவில்லை.

“எனது ‌எல்லாச் சொத்துக்களையும் தருகிறேன். ஒரு பகல் அவகாசம் கொடு. வீட்டில் என் பந்துக்கள் யாருமில்லை.”

அப்போதும் அது மசியவில்லை. “இதோபார். உன் சொத்துக்கள் எதுவுமே அங்கே பயன்படாது. உன் உறவுகளைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. உனக்கு இரண்டே இரண்டு விநாடிகள் அவகாசம் தருவேன் அவ்வளவுதான்.” என்றது மரணதேவதை கண்டிப்புடன்.

தன் வியாபாரத்தின் கொள்முதல், விற்பனை, வரவு, செலவு, லாபக்கணக்கு இவற்றைப்பற்றிப் பற்றி எழுதுவதற்காகத் தனது ஓலையை எடுத்தவன் அதில் அவகாசமாக இப்படி எழுதினான்….

“இதைப்படிக்கும் எல்லோருமே உணரவேண்டிய உண்மை என்னவென்றால் பொருள் சேர்ப்பதில் உங்களது வாழ்நாளை வீணடித்துவிடாதீர்கள். எட்டு லட்சம் பொன் இருந்தும் என்னால் ஒரு நாழிகையைக்கூட அதன் மூலம் வாங்க முடியவில்லை” என்று எழுதி முடித்தார்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

பிரியாணி–பிரியாணியின் கதை


நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை உங்களுக்கு தெரியுமா …???

பேரரசர் அக்பர் ஒரு உணவு பிரியர் … அவருக்கு எப்பொழுதும் உணவு சுவையாக இருக்க வேண்டும் 

உணவு சுவையாக இல்லையெனில் சமையல் காரர்களை ரொம்பவும் கடிந்து கொள்வார் ….!!!

அக்பருடைய தொந்தரவு தாங்க முடியாமல் அரண்மனை சமையல் காரன், ஒருநாள் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து அரண்மனையை விட்டு ஓடிவிட முடிவு செய்தான் 

அரண்மனையை விட்டு கிளம்பும் நேரத்தில், அக்பர் மீது இருந்த கோபத்தில் … அரண்மனை சமையல் கூடத்தில் இருந்த அரிசி, நெய், முந்திரி பருப்பு ஏலக்காய், இலவங்கம், மற்றும் எல்லா காய் கறிகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணியையும் ஊத்தி அடுப்பை மூட்டி விட்டு கிளம்ப தயாரானான் 

அப்பொழுதும் அவன் கோபம் தீரவில்லை அதனால் 
ஒரு பெரிய தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன்மேல் நெருப்பு சாம்பலை அள்ளி கொட்டி வைத்து விட்டு அரண்மனையை விட்டே ஓடி போய் விட்டான் …

வேட்டைக்கு சென்ற அக்பர் திரும்பி வந்து பார்க்கையில் சமையல் காரன் ஓடிப் போனது தெரியவந்தது ….

வேட்டைக்கு சென்று திரும்பி வந்த பசியில் ஏதாவது சாப்பிட வேண்டுமே என்ற நினைப்பில் சமையலறையை சுற்றிவந்த அக்பருக்கு, ஓடிப் போன சமையல்காரன் செய்து வைத்து விட்டுப் போன நெருப்பு சாம்பலுடன் கூடிய பெரிய பாத்திரம் தெரிந்தது. 

நல்ல பசியில் இருந்த அக்பர் பாத்திரத்தின் மேல் இருந்த நெருப்பு சாம்பலை நீக்கிவிட்டு தட்டை திறந்து பார்க்கையில் நல்ல கம கமக்கும் வாசனை யுடன் கூடிய அரிசி உணவு நன்கு வெந்து தம் கட்டப் பட்ட நிலையில் உண்ணுவதற்கு சரியான பக்குவத்தில் இருந்தது. 

அக்பர் அந்த உணவை உண்டு விட்டு, அதன் சுவை யில் மெய் மறந்து போனார். 

சமையல் காரனை….இன்னுமா திரும்பி வரவில்லை ? இன்னுமா திரும்பி வரவில்லை ? என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டார் உருதில் "பிர் ஆயா னி"…… "பிர் ஆயா னி" என்பதாக…. அதுவே மருவி அந்த உணவின் பெயர் பிரியாணி ஆகி விட்டது.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

கருப்பட்டி ஆண்களுக்கும் பெண்களுக்கும் எப்படி எல்லாம் பயன் படுகிறது .!!


கருப்பட்டி ஆண்களுக்கும் பெண்களுக்கும் எப்படி எல்லாம் பயன் படுகிறது .!!

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணி

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்:- *


மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்:- * 


ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும். * முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். * உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். * கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

by: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

இந்திய அரசு கடைபிடிக்கும் புதிய காலனிய தாராளமயக் கொள்கைகளே ஊழலுக்கு அடிப்படை


இந்திய அரசு கடைபிடிக்கும் புதிய காலனிய தாராளமயக் கொள்கைகளே ஊழலுக்கு அடிப்படை

1947-ல் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றியமைக்கப்பட்ட காலந்தொட்டே இந்தியாவில் ஊழல் நடந்துக்கொண்டுதான் வருகிறது. அப்போதிருந்தே ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும் அரசு இயந்திரத்தை தம் வசப்படுத்திஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடி ஊழலில் ஈடுப்பட்டே வந்துள்ளனர். எனினும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு கடைபிடித்து வரும் புதிய காலனிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தான் நாட்டில் இன்று வரலாறு காணாத ஊழல் நடைபெறுவதற்குக் காரணமாக உள்ளது. அத்துடன் அமெரிக்க – இந்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்திய நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றியமைத்து வருகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிலும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

94-ஆம் ஆண்டுமுதல் ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனியாதிக்க அமைப்புகளின் ஆணைகளுக்கு அடிப்பணிந்து இந்திய அரசு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருகிறது. பல்வேறு ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்தவும், இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், மலிவான மனித உழைப்பையும், கொள்ளையிட இக்கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு போட்டிப் போடுகின்றனர். தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க அவர்கள் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெருமளவில் இலஞ்சம் கொடுக்கின்றனர். 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் ரூ.1,76,000 கோடி; காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரூ.70,000 கோடி; நிலக்கரி பேர ஊழலில் மட்டுமே ரூ.26 லட்சம் கோடி (இன்னமும் விசாரிக்கவில்லை); கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகை இயற்கை எரிவாயு ஊழல் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல்; சுரங்கத் தொழில்களில் குறிப்பாக இரும்பு, எஃகு வெட்டி எடுப்பதில் பல லட்சம் கோடிகள் என ஊழலின் அளவும், எல்லையும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகளும், ஸ்வான் – டெலினார், டொக்கோம்மோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வெளிநாட்டு முதலாளிகளும் ராசா கனிமொழி, கருணாநிதி மற்றும் சிதம்பரம் போன்ற அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து லாபம் அடைந்தது போல; கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் எண்ணெய் எரிவாயுவை கொள்ளையடிப்பதற்கு முகேஷ் அம்பானி, சோனியா-மன்மோகன் கும்பலுக்கு இலஞ்சம் கொடுத்ததுபோல; கர்நாடகாவில் ரெட்டி சகோதர்கள், ஒடிசாவில் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பா.ஜ.க மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து பல இலட்சம் கோடிகள் மதிப்புள்ள இரும்புத் தாதுவை சூறையாடுவதுபோல இலஞ்ச ஊழல்கள் மூலம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் இந்திய நாட்டின் இயற்கைவளங்கள், கனிம வளங்கள் போன்றவைகளை மலிவான விலையில் கொள்ளையடிக்கும், மனித உழைப்பை குறைந்த கூலியில் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ ஊழல்களே இந்த ஊழல்கள் அனைத்தும்.

மேற்கண்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு ராசா, கனிமொழி, கல்மாடி போன்ற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களின் மேலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட மாபெரும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக திகழுகின்ற டாட்டா, பிர்லா, அம்பானி, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், டொகோமோ, டெலினார் மற்றும் போஸ்கோ போன்ற பன்னாட்டு முதலாளிகளும் கைது செய்யப்படவில்லை. அவர்களைக் குற்றவாளிகளாகக் கூட அன்னா அசாரே கும்பலோ, அரசாங்கமோ கருதவில்லை. இவர்கள் பார்வையில் இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் மட்டுமே குற்றவாளிகள். இலஞ்சம் கொடுக்கின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அவர்களை மாற்றுவதால் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக, இத்தகைய சட்டங்கள் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு அடிப்பணிய மறுக்கும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மிரட்டி பணிய வைக்கவே பயன்படும். இவ்வாறு அன்னா அசாரே கும்பலின் வலிமையான ஜன்லோக்பால் சட்டம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் ஆதிக்கம் செய்வதற்கான ஒரு கருவியாகவே பயன்படும்.

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari