Colours of the creator


Color Blocking by The Master Himself

The colors that only God can do!

The beauty of God’s creation

Look at yourself in the mirror and see the masterpiece He created

cleardot.gif


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

Sri Dharma Saastha Dasfakam


Prayers on Sri Dharma Sastha – Sri Ayyappa

Loka Veeram Mahaa Poojyam Sarva Rakshakaam Vibhum
Paarvathee Hr.uthayaanandham Saasthaaram Pranamaam Yaham

VipraPoojyam Visva vanthyam Vishnu Sambho Priyam Sutham
Kshipra prasaadha Niradham Saasthaaram Pranamaam Yaham

Maththamaadhanga gamanam kaarunyaamr.utha Pooritham
Sarva Vignaharam Dhe’vam Saasthaaram Pranamaam Yaham

Asmath kulesvaram dhevam Asmath Chathru Vinasanam
Asmath Ishta pradhaadharam Saasthaaram Pranamaam

Paandyesa Vamsa thilakam ke’rale’ Ke’li Vigraham
Aartha Dhraana Param Dhe’vam Saasthaaram Pranamaam Yaham

Thr.yambaga Puraadheesam Ghanaadheepa Samanvidham
Gajaarooda maham Vandhe’ Saasthaaram Pranamaam Yaham

Siva Veerya Samuthbootham Srinivaasa Thanoothbhavam
Sikivaahaanujam Vandhe’ Saasthaaram Pranamaam Yaham

Yasya Dhanvandhareer Maathaa Pithaa Dhe’vo Mahe’svarah:
Tham Saasthara maham Vandhe’ Mahaa Rogha Nivaaranam

Boothanaadha Sadhaanandha Sarvabootha dhayaabara
0Raksha Raksha Mahaabaaho Saasthre’ Thupyam Namonamah:

Aasyaama Komala Visaaladhanum Vichithram –
Varsovasaana Marunothpala Vaamahastham
Uththungarathna Makudam Kudilaagra ke’sam –
Saasthaaram Ishtavaradham Saranam Prabathye’


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

செல்போன் பயன்பாடு பற்றிய “விழிப்புணர்வு”


செல்போன் பயன்பாடு பற்றிய "விழிப்புணர்வு".

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும்.

குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.

இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது.

தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம்.

ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.

1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும்.

ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.

2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.

3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம்.

குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம்.

கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.

5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது.

ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.

7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும்.

ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.

8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும்.

வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.

9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள்.

ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.

11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம்.

இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.

12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும்.

கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம்.

உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள்.

இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

How to make Sukku Malli Coffee (Dry Ginger Coffee)…..Ideal coffee for winter.


How to make Sukku Malli Coffee (Dry Ginger Coffee)…..Ideal coffee for winter..

Ingredients:
Coriander Seeds – 150 gms
Dry Ginger (Sukku) – 50 gms
Black Peppercorns – 10 gms
Thippili – 10 gms
Chitirathai – 10 gms, crushed
Sathaguppai – 10 gms
Palm Sugar as required

Method:
1. Dry roast all the ingredients except palm sugar.
2. Cool and grind them together to a fine powder.
3. Transfer to a clean, airtight container.
4. Add 2 tsp of the powder to a glass of water.
5. Add sugar and gently boil.
6. Remove and strain into a serving glass.
7. Serve at once.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

Almonds best for reducing hunger pangs without piling on the pounds


Almonds best for reducing hunger pangs without piling on the pounds
Snacking has become nearly universal behavior in the United States, with an estimated 97 percent of Americans consuming at least one snack per day

A new study has found that people who eat 1.5 ounces of dry-roasted, lightly salted almonds every day experience reduced hunger and improved dietary vitamin E and monounsaturated ("good") fat intake without increasing body weight.
Snacking has become nearly universal behavior in the United States, with an estimated 97 percent of Americans consuming at least one snack per day.
In light of increasing snacking frequency and snack size among US adults, combined with continued increases in obesity rates and widespread nutrient shortfalls, it becomes increasingly important to identify snacks that pose little risk for weight gain while providing health benefits.
Snacking reportedly increases risk for weight gain, but this broad generalization may mask different responses to select foods.
The newly published randomized, controlled clinical study, led by researchers at Purdue University, investigated the effects of almond snacking on weight and appetite.
"This research suggests that almonds may be a good snack option, especially for those concerned about weight," Richard Mattes, PhD, MPH, RD, distinguished professor of nutrition science at Purdue University and the study’s principal investigator, said.
"In this study, participants compensated for the additional calories provided by the almonds so daily energy intake did not rise and reported reduced hunger levels and desire to eat at subsequent meals, particularly when almonds were consumed as a snack," he said.
The findings are published the European Journal of Clinical Nutrition.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

திராட்சை சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்ப டும் நன்மைகள் :-


திராட்சை சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் :-

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை என்ற இரண்டு நிறங்களில் உள்ளன. அவற்றில் எதில் அதிக நன்மை உள்ளது என்று பலர் குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் எந்த திராட்சையை சாப்பிட்டாலும், அதில் உள்ள நன்மைகள் ஒன்றே. அதிலும் திராட்சையில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் கே, சி, பி1, பி6 போன்றவையும், மாங்கனீசு மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி திராட்சையில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், பலவகையான பைட்டோ நியூட்ரியன்ட்களும் நிறைந்துள்ளதால், அவை உடலும் நினைக்க முடியாத அளவில் நன்மையை தருகின்றன. குழந்தைகளுக்கு திராட்சை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதன் நிறம் குழந்தைகளை ஈர்ப்பதாலேயே. மேலும் திராட்சையை பலவாறு சாப்பிடலாம். அதில் ஜூஸ், ஜாம், ஜெல்லி, ஒயின், வினிகர் போன்றவை.

1) ஆரோக்கியமான இதயம்:-

இதயத்தைப் பற்றி கவலை கொள்பவர்களாக இருந்தால், உடனே அந்த கவலையை விடுங்கள். ஏனெனில் ஒரு டம்ளர் ஒயினை சாப்பிடும் போது எடுத்துக் கொண்டால், இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

2) மலச்சிக்கல் :-

திராட்சையின் நன்மைகளில் ஒன்று தான், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்வது. ஆம், இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட், செல்லுலோஸ் மற்றும் சர்க்கரை, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்தால், குணமாகிவிடும்.

3) நீரிழிவு :-

திராட்சையில் குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டு வர, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கும்.

4) நோய் எதிர்ப்பு சக்தி :-

திராட்சையில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளுள் ஒன்றான க்யூயர்சிடின் இருப்பதால், அவை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடலில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

5) புற்றுநோய் :-

திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சியை தடுக்கும் பொருள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் நாள்பட்ட காயங்களை சரிசெய்யவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களையும் அழித்துவிடும். மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகளான அந்தோசியனின்கள் மற்றும் புரோஅந்தோசியனின்கள், புற்றுநோய் மேலும் பெரிதாவதைத் தடுக்கும்.

6) ஒற்றை தலைவலி:-

நன்கு கனிந்த திராட்சையால் செய்யப்பட்ட ஜூஸ் சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலியைத் தடுக்கலாம். அதிலும் இது நாள்பட்ட வலியாக இருந்தால், தினமும் காலையில் தண்ணீர் சேர்க்காத திராட்சை ஜூஸ் குடித்து வர குணமாகும்.

7) ஆரோக்கியமான மூளை :-

திராட்சையில் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இது நரம்பியல்-சிதைவு வளர்ச்சி நோய் ஏற்படுவதையும் தடுக்கும் திறனுடையது.

8) எடை குறைவு :-

திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரால், உடல் எடை குறைய உதவியாக உள்ளது. மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும், ரெஸ்வெராட்ரால் கொழுப்புக்கள் தங்குவதை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம்.

9) இளமை தோற்றம்:-

திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ளும். மேலும் திராட்சை ஜூஸை தினமும் சாப்பிட்டு வந்தால், முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"

கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்”


கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"

பெரியவா இட்டுக் கட்டின கதை. [ரா.கணபதி எழுதியது]

(இன்று காலை 06-30க்கு விஜய் டி.வி.யில் உ.வே.கருணாகராச்சார்யார்
பெரியவா சொன்னதை சிரிக்க,சிரிக்க சொன்னார்.அதன் விளைவு
இந்த மறுபதிவு.)

"தென் திருப்பேரை–ன்னு தென்பாண்டி நாட்டில ஒரு உசந்த
திவ்ய தேசம், "திவ்ய தேசம்"னா என்னன்னா,தேவாரம் இருக்கிற
சிவ க்ஷேத்ரங்களைப் "பாடல் பெற்ற ஸ்தலம்"-கிறாப்பல,
திவ்ய ப்ரபந்தம் இருக்கிற பெருமாள் க்ஷேத்ரங்களுக்கு
"திவ்ய தேசம்"னு பேர். அப்படி 108 இருக்கிறதுல, பாண்டிய
தேசத்துல 18 இருக்கு.அதுல ஒண்ணு திருப்பேரை.அங்கே
பெருமாளுக்கு ஸம்ஸ்கிருதத்துல மகர பூஷனர்-னு பேர்.
மகர குண்டலம் போட்டுண்டு இருக்கிறவர்னு அர்த்தம்.
மகரம் என்கிற ஜாதியைச் சேர்ந்த மத்ஸ்யம் [மீன்] சுருட்டிண்டு
இருக்காப்பல அந்தக் குண்டலத்தோட "ஷேப்" இருக்குமானதால்
அப்படிப் பேர். மகரபூஷணப் பெருமாளைத் தமிழ்ல
மகரநெடுங்குழைக் காதர்னும்,சுருக்கிக் "குழைக் காதர்"னு
மாத்திரமும் சொல்லுவா.

ரொம்ப நாள் முன்னாடி நம்ப மடத்து ஆதரவுல "ஆர்ய தர்மம்"னு
ஒரு மாஸப் பத்திரிகை வந்துண்டிருந்தது.அதுல
குழைக்காதையங்கார்னு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆர்டிகிள்
எழுதறதுண்டு. அவரைக் காதர் ஐயங்கார்,காதர் ஐயங்கார்னே
சொல்லுவோம்!"

"அந்த மாதிரி ஒரு குழைக்காதர், பிரிட்டிஷ் ராஜாங்கத்துல
குமாஸ்தாவா உத்யோகம் பண்ணிக்கிண்டிருந்தவர்,வெள்ளைக்கார
துரைகிட்ட கோகுலாஷ்டமிக்கு லீவ் அப்ளை பண்ணியிருந்தார்.
கொகுலாஷ்டமிக்கு ‘பப்ளிக் ஹாலிடே’ உண்டுதான். ஆனா,
க்ருஷ்ண ஜயந்தின்னு ஸ்மார்த்தாள் அஷ்டமி திதியை வெச்சு
கோகுலாஷ்டமின்னும், வைஷ்ணவாள் ரோஹிணி நக்ஷத்ரத்தை
வெச்சு ஸ்ரீஜயந்தின்னும் பண்றதுனால திதி ஒரு நாள்லயும்,
நக்ஷத்ரம் வேற நாள்லயும் வரது ஸகஜம். அப்படி ரெண்டு க்ருஷ்ண
ஜயந்தி வந்தாலும், கவர்மென்ட் ஹாலிடே என்னமோ
கோகுலாஷ்டமிக்குத்தான் விட்டிண்டிருந்தா. அதுலதான்,
ஸ்ரீஜயந்தி வேற நாளில் வந்த ஒரு வருஷம். அந்தக்
குழைக்காதர் ஐயங்கார், ஒரே பண்டிகைக்கு இரண்டு பேரைக் காட்டி
துரையைக் குழப்ப வேண்டாம்னு நெனச்சு, "எங்க ஸப்-ஸெக்டுக்கு
இப்பத்தான் கோகுலாஷ்டமி.அதனால் லீவு தரணும்"னு
அப்ளிகேஷன் போட்டார்.

"திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன்னும்,தரங்கம்பாடியை
ட்ரான்க்யுபார்னும் புரிஞ்சுண்டவாதானே அந்த துரைமார்கள்!
மூணே எழுத்து, ஸிம்பிள் ‘மதுரை’யை தக்ஷிணத்துல ‘மெஜுரா’வாகவும்
வடக்கே ‘மட்ரா’வாகவும் புரிஞ்சுண்டவாளாச்சே! அதனால் அந்த துரை
என்ன பண்ணினார்ன்னா, "குழைக்காதர்"ங்கிறதை, ‘குலாம் காதர்’னு
நெனச்சுண்டுட்டான்!. ‘குலாம் காதர்’ [என்பது] துருக்காள் நெறயவே
வெச்சுக்கற பேரானதால அவன் காதுக்கு ஃபெமிலியரா இருந்தது.
ஹிண்டு-முஸ்லீம் பேர் வித்யாஸம் பார்க்கத் தெரியாம ஸ்ரீவைஷ்ணவரை
குலாம் காதராக்கிட்டான்!

தன்னோட டைப்பிஸ்ட்கிட்ட "குலாம் காதர்னு" ஒரு க்ளார்க்
கோகுலாஷ்டமிக்கு லீவ் கேட்டிருக்கார்,ஸாங்க்ஷ்ன் பண்ணியாச்சுன்னு
தெரிவிச்சுடு"ன்னான்.

"அந்த டைப்பிஸ்ட் ஹிந்து. "இதென்னடா கூத்து?"ன்னு அவர்
அப்ளிகேஷனைப் பார்த்தார். அவருக்கு ஒரே வேடிக்கையாயிடுத்து.
வேடிக்கையை எல்லார்கிட்டயும் சொல்லி ‘ஷேர்" பண்ணிக்கிண்டார்.

அதுலேர்ந்து தான் ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து
முடிச்சுப் போட்டா "கொகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு
வசனமாவே சொல்றதா ஆச்சு.

"இந்தக் கதை…நானே கட்டினதுதான். எழுத்தாளர்கள்
என்ன ‘மார்க்’ போடுவாளோ?"

email_open_log_pic.php?mid=8f374f0G5af31bdb4bc2G82c9e35G96


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif
) hari krishnamurthy K. HARIHARAN)"